Tuesday, March 17, 2009
வழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க!!
சமீபத்தில் எனக்கும், வேறொரு பிரபலத்துக்கும் (அப்ப நீ என்ன பிரபலமா-ன்னெல்லாம் கேட்கப்படாது!) வந்த ஒரு மின்னஞ்சலில் பின்னூட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
‘என்ன சார் நீங்களும் சரி.. உங்க நண்பர் குழாமும் சரி எப்பப் பார்த்தாலும் எங்க பார்த்தாலும் ‘ஆஹா, ஓஹோ, சூப்பர், கலக்கல், அருமை சகா’ என்பது போன்ற பின்னூட்டங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். சில சமயங்களில் இது எங்களுக்கு சலிப்பைத் தருகிறது’ என்றிருந்தார் அந்தச் சகோதரி.
முதலில் அவருக்கு என் மற்றும் நண்பர்கள் சார்பாக ஒரு மிகப்பெரிய சபாஷையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மனதில் பட்டதை, பட்டென்று கேட்டமைக்கு சபாஷும், எங்கள் நலனில் அக்கறையோடு உரிமையாக விமர்சித்தமைக்கு நன்றியும்.
பின்னூட்டங்கள் என்பது ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு விமர்சனம். விமர்சனம் என்பதை விடவும்.. அது ஊக்கம் தரும் ஒரு கருத்துரை என்பதே சரி. (உளர்றேன்ல?)
வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் என்கிற ஒரு மிக முக்கியமான மேட்டர் (வேறென்ன.. பணம்தான்) வலைப்பதிவாளர்களுக்குக் கிட்டாது. என்னதான் AD SENSE போட்டாலும்.. பதிவு எழுதும் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு வலைப்பதிவாளருக்கு அதிக பட்ச சந்தோஷத்தைத் தருவது.. இந்தப் பின்னூட்டங்கள்தான்.
சமீபத்தில் நண்பர் செல்வேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இதைச் சொன்னார். இண்டர்நெட் உபயோகம், மின்சாரம், பதிவு எழுத வேண்டி பார்க்கிற சினிமா, படிக்கிற புத்தகங்கள், குறிப்புகளுக்காக நண்பர்களை அழைத்துப் பேச ஆகும் அலைபேசிச் செலவு, பயணம் என்று வலைப்பதிவாளர்களுக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் குறைந்த பட்சம் மாதம் ஐநூறாவது தொடும்.
வேறொரு நண்பர் சொன்னார்.. ‘என்னை ஃபாலோ செய்கிற ஒவ்வொருவரும்
ஆளுக்கு மாசம் அம்பது ரூபா குடுத்தாலே எனக்கு மாசம் அஞ்சாயிரத்துக்கு மேல வருமானம் வரும்’ என்று. ‘ஏண்டா.. ஒரே நாள்ல ஃபாலோயர் லிஸ்ட் ஜீரோவைக் காமிக்கும். பர்வால்லியா?’ என்று வடிவேலு ஸ்டைலில் கேட்டதும் ஃபோன் ‘டொக்’!
ஆக.. எந்தப் பிரதிபலனும் பாராமல் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எழுதும் பதிவர்களை வெறும் குறைகளை மட்டுமே சொல்லிச் சொல்லி அவர்களை டிஸ்கரேஜ் செய்து ஒதுக்குவானேன்?
சரி... வலைப்பதிவாளர்கள் வேறு எதற்கு எழுதுகிறார்கள்?
நிச்சயமாக ஒரு அங்கீகாரத்திற்குத்தான்.
தினமும் அல்லது அடிக்கடி எழுதுவதால் நிச்சயமாக நமது எழுத்து மேம்படுகிறது.
வலைப்பதிவு ஆரம்பித்து முதல் சில பதிவுகள் போட்டு நிமிடத்திற்கொரு முறை ‘ஏதாவது கமெண்ட் வந்திருக்கா’ என்று பார்க்காத மனிதர் யார்? ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.
அந்தச் சகோதரி சொன்னது போல ‘ஆஹா.. ஓஹோ..’ பின்னூட்டங்கள் பற்றி ஏற்கனவே ஆதிமூலகிருஷ்ணன் (அதாங்க... சரி.. சரி.. ஒத்துக்கறேன்.. EX தாமிரான்னு உங்களுக்குத் தெரியும்..) ‘அட்லீஸ்ட் நமக்குள்ளயாவது இந்த மாதிரி போடாம உண்மையா எழுதிக்குவோமே’ என்றிருக்கிறார். ‘அப்ப நாங்க சூப்பர்னு சொல்றது என்ன பொய்யா?’ என்று கேட்டு.. கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
‘நிறைகளைப் பிறரிடம் சொல்லுங்கள்.. குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்’ என்பதற்கேற்ப எல்லாரும் பார்க்கும் பின்னூட்டங்களில் நிறைகளைச் சொன்னாலும்.. தனிப்பட்ட முறையில் அலைபேசி, மின்னஞ்சல் அனுப்பி குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டுதானிருக்கிறோம். சில சமயங்களில் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறோம்.
வெறும் குறைகளை மட்டுமே சொல்லுவதால்... ‘ஓஹோ.. இவனுக்கும் அவனுக்கும் ஆகல போல’ என்ற பிம்பம் உருவாகும் அபாயமும் இருக்கிறது!
சினிமாத்துறையில் ப்ரிவ்யூவுக்கு சென்று படம் பார்க்கும் அனைவரும் படம் பற்றிய கருத்தை இப்படிச் சொல்லுவார்கள்...
‘இண்டர்வெல் வரை நல்ல ஸ்பீடுசார் படம்’ (இண்டர்வெல்லுக்கு அப்பறம் ஒக்கார முடியல’)
‘பாட்டு ஓக்கே’ (பெரிசா சொல்லிக்க ஒண்ணுமில்ல)
‘ஹீரோவுக்கு இது நாலாவது படம்ல சார்?’ (மொத மூணு படத்துலயே அவன் சொதப்பீட்டான். எப்படிடா அவனைப் போட்ட?)
‘காமெடி ட்ராக் படத்தைக் கொண்டுபோகுது சார்’ (அதால நீ தப்பிச்ச)
இப்படி.. சொல்ல வேண்டியதை வேறு முறையில் சொல்லிப் புரியவைத்து விடுவார்கள். அதேபோல பல பதிவர்களுக்கும் பின்னூட்டத்தைப் பார்த்தே.. ‘இவர் சொல்றது இதுதான். கொஞ்சம் பாலிஷா சொல்லியிருக்காரு’ என்று புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு சில நண்பர்கள் வெறும் ஸ்மைலி போட்டால் ‘என்னங்க. பிடிக்கலியா? வெறும் ஸ்மைலியோட போய்ட்டீங்க’ என்று கேட்கிறார்கள். (இந்தப் பதிவுக்கு எத்தனை ஸ்மைலி வரப்போகுதோ!) சமீபமாக தோழி ஸ்ரீமதி எப்பப் பார்த்தாலும் வெறும் ஸ்மைலிதான் போட்டுப் போகிறார்!
எனக்கு ‘இந்தப் பதிவு பிடிக்கவில்லை’ என்று பின்னூட்டமிட்டு அதற்கான விளக்கத்தை மெயிலில் அனுப்பிய நண்பர்களும் உண்டு. அந்த உரிமையை நான் எல்லாருக்கும் வழங்கியிருக்கிறேன். அதேபோல நல்லா இல்லாததை நல்லா இல்லை என்று சொல்லக்கூடிய உரிமையை எனக்கும் எல்லாரும் வழங்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்!
முடிவா என்னதாண்டா சொல்ல வர்ற?
பின்னூட்டப் பெட்டியை நிரப்பி ஒரு வலைப்பதிவாளரை வாழ வையுங்கள். நிஜ விமர்சனத்தை அவர்கள் ஏற்கும் வண்ணம் - நட்பான முறையில் - எடுத்துச் சொல்லுங்கள்.
அவர்கள் எழுத்து மேம்பட்டால் அவரை விடவும் மகிழ்வது நீங்கள்தான்.
அதேபோல.. வெறும் ஆஹா ஓஹோ-வினால் ஒருவர் புகழடைய முடியும், நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷ் தான்.
நீங்கள் என்னதான் சோறூட்டி, பீரூட்டி, பாராட்டினாலும் அவரிடம் சரக்கிருந்தால் அவர் எழுதி எழுதி மேல்செல்வார். இல்லாவிட்டால் கூப்பிட்டு கூப்பிட்டு ‘ஏன் எனக்குப் பின்னூட்டம் போடல’ என்று மிரட்டி வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
இந்தப் பதிவு எழுத காரணமாயிருந்த வழுக்கை டப்பா வசந்துக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
Subscribe to:
Post Comments (Atom)
59 comments:
அது யார் க்ருஷ்ணா வழுக்கை டப்பா வசந்த்?
ஒரே கன்ஃப்யூசனா கீது தல... புரிஞ்சா மாதிரியும் கீது.. புரியாத மாதிரியும் கீது...
ஒரு வகைல பாத்தா நீ சொல்றது கரிக்கிட்டு தானோ?
பரிசல்.. ஒரு மேட்டரை மிக அற்புதமாக எழுத்தில் வடித்தற்காக
ஆஹா, ஓஹோ, கலக்கல்.. அருமை.. சபாஷ்..
வடவ வ மறக்க மாட்டீங்களாய்யா..
ஆமா.. யாரு அந்த இன்னொரு பிரபலம்???
சிறப்பு
எழுத எதுவுமில்லைன்னா கொஞ்ச ரெஸ்ட் எடுத்துக்கொங்க சகா.. :))
// முரளிகண்ணன் said...
சிறப்பு
//
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா தல?
//வலைப்பதிவு ஆரம்பித்து முதல் சில பதிவுகள் போட்டு நிமிடத்திற்கொரு முறை ‘ஏதாவது கமெண்ட் வந்திருக்கா’ என்று பார்க்காத மனிதர் யார்? ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.//
உண்மை! நானும் அப்படித்தான் இருந்தேன்!
பின்னூட்டம் வேண்டாம்...மின்னஞ்சலே அனுப்பிவிடுகிறேன்
:-)))
:)
எல்லாஞ்சரிதான், கொஞ்ச நாளா இதே மேரி பதிவா வந்துனுகீதே, இன்னா மேட்டரு!
ரொம்ப கொழப்பத்துல இருக்கே போல இருக்கு. கிருஷ்ணன் ( சாமி) சொல்லிருகர் கடமையை செய் பலனை எதிர்பாராதே .. நீ பாட்டுக்கு எழுது, பின்னுட்டம் தான வரும்.
சொல்லவந்தத கரெக்ட்டா சொல்லிருக்கீங்க... :) ஆனா, இந்த பதிவுல எனக்கு ஆப்புன்னு சொல்லவே இல்லையே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :))
//வெயிலான் said...
அது யார் க்ருஷ்ணா வழுக்கை டப்பா வசந்த்?
//
நம்ம "அண்ணே" வ கேளுங்க வெயிலான்..
//ஒவ்வொரு வலைப்பதிவாளர்களுக்கும் நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.
//
அது என்னவோ உண்மை தாங்க...ஆனா சில பேர் பின்னூட்டங்களுக்கு பதில் கூட எழுத மாட்டேங்குறாங்களே !!!
ஆனா என்ன தான் எழுதினாலும் ஒரு சிலருக்கு பின்னூட்டமே வரதில்லை. என்ன செய்ய? அதுக்கும் கொஞ்சம் டிப்ஸ் தாங்களேன்
//அதேபோல.. வெறும் ஆஹா ஓஹோ-வினால் ஒருவர் புகழடைய முடியும், நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷ் தான்.
//
தேவையில்லாமல் எங்கள் தானைத் தலைவனை வம்பிழுக்கும் பரிசலை வன்மையாகக் கண்டித்து வெளிநடப்பு செய்கின்றேன்.
:)
என்னாது இன்னிக்கு ஆ.மூ.கி யும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி? பேசி வெச்சுக்கிட்டு போட்டிங்களா? (ஆஹா... இப்பிடி கூட சிண்டு முடியலாம் போல இருக்கே!!)
:)))
நீங்கள் பதிவில் சொல்லியிருக்கும் போக்கு சில வகைகளில் உண்மையாயிருக்கிறது.
உங்கள் நண்பர்கள் குழுமம் ஒன்றை மிகச் சுலபமாக பதிவுலகில் புழங்கும் எவரும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.குழுத்ததில் எவர் என்ன எழுதினாலும் மற்றவர் போய் ஆகா,ஓகோ என்ற வகைகளில் பின்னூட்டங்கள் இடுவது வாடிக்கையாக இருப்பதும் வெளிப்படையாக-அதாவது ஆப்வியஸ் ஆக-இருக்கிறது.
இந்த மனப்போக்கு நண்பர்களுக்குள் மகிழ்ச்சி அளித்தாலும் அவ்வளவாக ஒன்றும் சரக்கற்ற பதிவுகளும் தமிழ்மணத்தில் நீண்ட நேரம் நிலைக்கும் தன்மை ஏற்படுகிறது.
இதனால் உங்கள் குழுமத்தில் இல்லாத,தனிப் பதிவர்களின்,அவர்கள் நல்ல பதிவு என்று நம்பும் பதிவுகளும் கவனம் பெறாமல் போய் விடும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே சிலராக இருந்தாலும்,சொல்லும் அந்த விமர்சனத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
நான் கூட பதிவர் நர்சிம் எழுதிய ஒரு பதிவில் அளித்த பின்னூட்டம் குழும நண்பர்களிடமிருந்து பலத்த கண்டனங்களைப் பெற்றது,நர்சிம்மே அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட போதும் !
இது போன்ற போக்கு குழுமம் தவிர்த்த மற்றவர்கள் குழமப் பதிவுகளைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளிச் செல்லும் என்பதை மறுக்க இயலாது.
இரண்டாவது பின்னூட்டங்கள் எப்போதும் ஒருவழிப் பாதையல்ல.உங்கள் பதிவைப் பார்த்து கருத்து சொல்ல ஒருவர் நேரம் ஒதுக்கும் போது,அவர் என்ன எழுதி இருக்கிறார் என்ற பார்க்கவாவது நேரம் ஒதுக்குவதுதான் யாரும் எதிர்பார்ப்பது.அதுவும் இல்லாவிட்டாலும் அளித்த கருத்துக்கு மதிப்பளித்து நன்றி அல்லது ஓரிரு வார்த்தைகள் சொல்ல முடியாத அளவுக்கு தலைக்கனமும் சில பதிவர்களிடம் காணப்படுகிறது.
இந்தப் வித நிலைகள் பின்னூட்ட வேகத்தையும்,சாரமான பின்னூட்டங்களையும் இழக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்.
ஒரு முக்கியக் குறிப்பு:திருவாளர் வ.ட.வ.க்கும் எனக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை,யாரும் பொங்க வேண்டாம்.
// சமீபத்தில் நண்பர் செல்வேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது இதைச் சொன்னார். இண்டர்நெட் உபயோகம், மின்சாரம், பதிவு எழுத வேண்டி பார்க்கிற சினிமா, படிக்கிற புத்தகங்கள், குறிப்புகளுக்காக நண்பர்களை அழைத்துப் பேச ஆகும் அலைபேசிச் செலவு, பயணம் என்று வலைப்பதிவாளர்களுக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் குறைந்த பட்சம் மாதம் ஐநூறாவது தொடும்.//
அது இந்தியாவில் இருந்தால் 500 ஐ தொடும். வெளி நாடென்றால் 5000 ஆகும்.
என்ன மாதிரி பின்னூட்டம் மட்டும் அதிகம் போடுபவர்களுக்கு, பதிவர்கள் பதில் போடணும். அப்பத்தான் அடுத்த பின்னூட்டம் போடுவதற்கு சந்தோஷமா இருக்கும்.
// பின்னூட்டப் பெட்டியை நிரப்பி ஒரு வலைப்பதிவாளரை வாழ வையுங்கள். //
இதை ஒரு கடைமையாகவே நான் பண்ணிகிட்டு இருக்கேங்க..
@ all
ஐயையோ.. எங்களுக்கு குழுமமெல்லாம் இல்லீங்க... சாமீ!
எல்லாப் பின்னூட்டத்துக்கும் நன்றி சொல்லணும்தான். அதுக்குத்தான் நான் அடிக்கடி ரமேஷ் வைத்யாவோட வரிகளைத் துணைக்குக் கூப்பிடறேன்..
‘இவையெதுவும் இல்லாமலும் ஒரு மனசு அறியாதா தன்னைப் போல் இன்னொன்றை’
(இதையே நீங்க பின்னூட்டத்துக்கும் சொல்லலாம்!!!!!:-))
//வலைப்பதிவு ஆரம்பித்து முதல் சில பதிவுகள் போட்டு நிமிடத்திற்கொரு முறை ‘ஏதாவது கமெண்ட் வந்திருக்கா’ என்று பார்க்காத மனிதர் யார்?//
சரி தான் தல, அதே மாதிரி கொஞ்சம் பிரபலம் ஆன உடன், வந்த பின்னூட்டங்களுக்கு தனியா பதில் எழுதாவிட்டாலும் பரவாயில்லை, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றீன்னு ஒரு வரி கூட எழுத மாட்டேங்குறாங்களே அது ஏங்க?
\\நிச்சயமாக முதல் கமெண்ட் என்பது காதலியின் முதல் முத்தத்துக்குச் சமமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு பூரிப்படையச் செய்யும் பின்னூட்டங்கள்.//
அப்டின்னா எனக்கு முதல் முத்தம் கொடுத்தது நீங்கதான் தல...
நன்றி...
ப்ளீசிங் / செய்யது / வாசகன் :- பின்னூட்டம் போடறது உங்களோட கருத்த தெரிவிக்க. உங்களுக்கு பிடிச்சி இருந்தா / நேரம் இருந்தா சூப்பர்ன்னு சொல்ல போறீங்க இல்லாட்டி (நேரம் அதிகம் இருந்தா) விமர்சிக்க போறீங்க. இதுல எதுக்கு நன்றி எதிர்பார்க்கணும் ? ஒரு அளவுக்கு மேல HITS வரும்போது ப்ளாக் எழுதறவங்களுக்கு பின்னூட்டம் பாக்கற INTEREST போய்டும் (கம்மி ஆயிடும்). முதல இருந்த அதே ஆர்வம் இருக்காது. அப்படி இருக்கும்போது ஒவ்வொரு பின்னோட்டத்துக்கும் பதில் சொல்லமாட்டங்க. இதுல என்ன தப்பு இருக்கு ?
பரிசல் - சூப்பர் பதிவு.
எனக்கு இந்த பின்னூட்டம் எழுதறதுல ரொம்ப பிடிச்சவரு நரசிம் தான். யாராவது ஏதாவது PROVOCATIVE'AA எழுதி இருந்தாலும் "சூப்பர்" ன்னு தான் வந்து சொல்லுவாரு !!
Unkal eluthil oruvitha neyrmai irukirathu yar manumum kayampadamal irukavendum endra akaraium irukirathu athai thodarrnthu kadai pediyunkal valthukal
வாசகன் சொல்லிய 'குழும' அமைப்பு இருப்பதுபோல் தெரிவது வாஸ்தவம்தான். ஆயினும், ஒரு குழும அமைப்பு செயல்படுவதுபோல், 'ரூம் போட்டு, யோசித்து' யாரும் பின்னூட்டம் போடுவதில்லை. You only go to a place you are comfortable with.
அப்படிப் பார்த்தால், பதிவுலகம் முழுதும் பின்னூட்டங்களில் ஒரு குழும மனப்பான்மை தெரியும். இதிலொன்றும் தவறில்லை. நம்மை அறியாமலே ஒரு ஒத்த அலைவரிசை நபர்களுடன் பயணிப்பதுதான் அது.
இந்தக் குழுவில் சிலர் (பரிசல், கார்க்கி, நர்சிம், தாமிரா சாரி ஆதிமூலக்கிருஷ்ணன்) பிரபலமாக இருப்பதால் இந்தக் குழுமம் பிரதானமாகத் தெரிகிறது. இவர்களின் பிரபலமே இந்தக் குழும மனப்பான்மை நடவடிக்கைகளால்தான் என்பது இவர்களின் திறமையைக் கொச்சைப்படுத்துவது போல் ஆகும்.
ஆனால், தனியே சொல்லிக்கொள்ளும் குறைகளை பொதுவிலும் அவ்வபோதாவது சொன்னால் குழுமத்தின் credibility வெளிப்படும். அந்த அளவில் வாசகனின் கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன்.
ஆனால் வாசகன் சார் (சார் தானே, இல்லை என்றால், பெயரை வாசகி என்று மாற்றி விடுங்கள் :) ), உங்களுக்கு இன்னொரு பின்னூட்டம் வருகிறது. Beware !
அனுஜன்யா
நீங்கள் சொன்ன மாதிரியான மெயில் எனக்கும் வந்திருந்தது. நான் அவருக்கு மெயில் எழுத டிராப்ட் செய்து வைத்திருந்தேன் நீங்கள் பதிவாகவே போட்டுவிட்டீர்கள்.. நிஜமாவே இந்த பதிவு நல்லாருக்கு. சுப்பர்ன்னு சொல்லலாமா...கூடாதா..?
என்ன கஷ்டம்ய்யா.. நல்லாருக்கறத நல்லாருக்குன்னு கூட சொல்ல முடியல..
//நான் கூட பதிவர் நர்சிம் எழுதிய ஒரு பதிவில் அளித்த பின்னூட்டம் குழும நண்பர்களிடமிருந்து பலத்த கண்டனங்களைப் பெற்றது,நர்சிம்மே அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட போதும் !
இது போன்ற போக்கு குழுமம் தவிர்த்த மற்றவர்கள் குழமப் பதிவுகளைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளிச் செல்லும் என்பதை மறுக்க இயலாது.//
நீங்கள் நர்சிம் எழுதிய 'கவிதையை'யும் நான் எழுதிய 'பத்தியை'யும் பற்றிச் சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு எதிர் கருத்து சொன்னால் அது 'பலத்த கண்டனமா'? என்ன சார் நியாயம் இது? ஒரு கதையோ, கவிதையோ எழுதுபவர் உங்கள் கருத்துகளை (அது 'below the belt' or 'in bad taste' criticism ஆக இருந்தாலும்) sporting ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இன்னொருவர் உங்கள் பின்னூட்டக் கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால் அது 'பலத்த கண்டனம்' என்று முத்திரை குத்தப் படுவது நியாயமா? அதை ஏன் உங்களால் சரியான முறையில் எடுத்தக்கொள்ள முடியவில்லை? If you expect the blogger or one of the persons writing the feedback to be sporting and not very sensitive, it is natural that the same qualities are exhibited by you as well.
எனக்குத் தெரிந்த வரை உங்களை யாரும் தரக் குறைவாகவோ, 'நீ யாரு கேட்க' என்ற தொனியிலோ பேசவில்லை. வேலன் கூட உங்களிடம் மிகத் தரமான முறையில் தார்க்கம் செய்து, முடிவில் 'விவாதங்கள் மிகவும் பயனாக இருந்தது' என்றே சொன்னதாக ஞாபகம்.
உங்கள் யாருக்கும் தெரியாத உபரித் தகவல் - உங்க விமர்சனத்திற்குப் பிறகு நான் கவிதை எழுத (சிரிக்காதீங்கப்பா) முற்படும்போது உங்கள் வரிகள் நினைவுக்கு வருது. எழுதிய வரிகளை பத்தியாகச் சேர்த்துப் பார்த்து, அப்பவும் ஒரு அர்த்தமும் வரவில்லை என்று தெரிந்த பின்பே அது கவிதை என்று முத்திரை குத்துகிறேன். இதுக்கு மேல உங்களுக்கு மரியாதை கொடுக்க முடியுமா சார்?
அளவில்லாத அழுகையுடன்
அனுஜன்யா
***
அளவில்லாத அழுகையுடன்
***
யூத், நீங்க அழலாமா ?
(உள்மனசு :- எனக்கு புரிஞ்ச கவிதைக்கு சிறுகதைன்னு லேபில் கொடுத்தீங்க தான, உங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் !)
//அளவில்லாத அழுகையுடன்
அனுஜன்//
வாசகன் சார். இளைஞர்களை அழ வைப்பது பாவம்..
நல்ல வேலை நீங்க அனுஜன்யாவைத்தானே அழ வச்சிருக்கீங்க..
//அளவில்லாத அழுகையுடன்
அனுஜன்//
வாசகன் சார். இளைஞர்களை அழ வைப்பது பாவம்..
நல்ல வேலை நீங்க அனுஜன்யாவைத்தானே அழ வச்சிருக்கீங்க
மிக நேர்த்தியான பதிவு பரிசல்..
ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒன்று அல்லது ஒன்றரைமணி நேரம் எனில் 10 பதிவுகள் படிக்கலாம். பிறகு நம் பதிவை வேறு பார்க்கவேண்டும். துவக்கத்தில் சீனியர் பதிவர்கள் நம் தளத்திற்கு வராமலிருந்ததற்கு காரணம் இப்போதுதான் விளங்குகிறது. ஒரு சில மாதங்களில் சலித்தெடுத்து நமக்குப் பிடித்த பிளாக்குகளை கண்டு கொண்டு ஃபாலோ செய்துகொள்கிறோம். அவர்களை வாசிக்கவே நேரம் சரியாக இருப்பதால் புதியவர்களை வாசிக்க முயற்சிப்பதில்லை.. நேரமுமில்லை.
குழு மனப்பான்மையோடு இயங்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.. ஏனிந்த வாதம் வருகிறது? பாராட்டுப்பின்னூட்டங்கள், நேர் சந்திப்புகள், அடிக்கடி தரப்படும் இணைப்புகள் இந்த மூன்று காரணங்கள்தான். இணைப்புகள் ரசனையை பரப்பும் விதமாகத்தான் இருக்கிரது என நான் கொள்கிறேன். நேர் சந்திப்புகள் பதிவர் என்பதை மீறியும் ஒரு நல்ல நட்பு உருவாகவும், வாழ்க்கையில் ஒரு புதிய உறவுகளை ஏர்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்பை வழங்குகின்றன.. எத்தனை பேரை, எத்தனை தடவைகள் சந்தித்தாலும் ஒத்த ரசனை உள்ளவர்களே நட்பாகிறார்கள்.
பாராட்டுப்பின்னூட்டங்களுக்கு பெரும்பாலும் நியாயம் இருப்பதாகவே படுகிறது. இருப்பினும் இன்னும் கொஞ்சம் கடும் விமர்சனப்பார்வை ஏற்படுத்திக்கொள்வது ஸோகால்ட் குழுவுக்கு நல்லது.. மெயிலிலும், போனிலும் விமர்சித்தாலும் வெளிப்படையாக பின்னூட்டத்திலும் நியாயமான முறையில் அது விரைவில் ஏற்படும் என்று நினைக்கிறேன்.
குழுவிற்கு வெளியே நேரம் கிடைக்கையில் முயலும் போது.. ஒரு சோறு கான்செப்ட்தான்.. பெரும்பாலும் எதிர்பார்க்கும் ரசனையான அனுபவம் கிடைப்பதில்லை. மேலும் சீனியர் பலரும் பின்னூட்டம்தான் இடுவதில்லை எனினும் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பது பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டுதான் இருக்கிறது. தரமான, சுவாரசியமான, புதுமையான, ரசனையான பதிவுகளுக்கு வெற்றி நிச்சயம்.
ஆமா.. யாரிந்த வசந்த்.?
இணைப்புகள் ரசனையை பரப்பும் விதமாகத்தான் இருக்கிரது என நான் கொள்கிறேன். நேர் சந்திப்புகள் பதிவர் என்பதை மீறியும் ஒரு நல்ல நட்பு உருவாகவும், வாழ்க்கையில் ஒரு புதிய உறவுகளை ஏர்படுத்திக் கொள்வதற்குமான வாய்ப்பை //
'பின்னூட்டம்தானே.. 'ஸ்பெல் செக்' தேவையில்லை என்று நினைத்துக்கொண்டு அவசரமாக போடுவதை தவிர்க்கவேண்டும்' என யாராவது என்னை மண்டையிலேயே குட்டுங்கள்.. மேற்கண்ட வரிகளில் இரண்டு தவறுகள்.. இனி திருத்திக் கொள்கிறேன்.
சூப்ப்ர் பதிவு.
(அதெல்லாம் முடியாது, நல்ல பதிவுக்கு நான் இப்படித்தான் போடுவேன்.)
விவாதம் நல்லா போகுதுபோலயே..
பின்னூட்டம் வ்ந்ததா ன்னு பார்க்கறாப்பலயே.. நான் வந்த புதிதில் ( இப்பவும் தான்) பின்னூட்டம் போட்டமே அதுக்கு அவங்க என்ன பதில் போட்டிருப்பாங்கன்னும் ஒரு ஆர்வம் இருந்தது.
யாரு அந்த வசந்த்? மிஸ்டர் எக்ஸ் மாதிரி எதாச்சும் புனைப்பெயரோ..
// பின்னூட்டப் பெட்டியை நிரப்பி ஒரு வலைப்பதிவாளரை வாழ வையுங்கள். //
இதை ஒரு கடைமையாகவே நான் பண்ணிகிட்டு இருக்கேங்க..
I won't stop doing that.
//சரி... வலைப்பதிவாளர்கள் வேறு எதற்கு எழுதுகிறார்கள்?//
அங்கீகரகமாவது கிங்கீகரகமாவது! எழுதறது பிடிச்சிருக்கு.
நல்லாதானே இருக்கு. நீங்க ஒரு சிண்டிகேட் ஃபார்ம் பண்ணி பின்னூட்டமெல்லாம் போட்டு ஓட்டிகிறீங்க, சூப்பர்னு சொல்லிக்கிறீங்க, ஏன் இப்படி என கேட்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் சபை நாகரிகம் கருதி கேட்கவில்லை. இப்போ கேக்குறேன், என்னயும் அந்த சிண்டிகேட்ல சேர்த்துக் கொள்ளுங்கள். சும்மா, ஹா.. ஹா..:-) (:-)
(:-)
நீங்க சொன்னதெல்லாம் யோசிச்சிருக்கேன். நூற்றுக்கும் மேற்ப்பட்ட தொடர்பவர்கள் இருக்கும் போது பிரபலங்கள் எல்லோருக்கும் பின்னூட்டமிடுவது கடினம். அதே நேரம் நாம் அதைப் படித்தோம் என்பதை உணர்த்த 'உள்ளேன் ஐயா' எனக் கூறிவிட இயலாது. எனவே நாம் நன்று என எளிமையாக ஒரு பதிவை வெளியிட்டு தெரிவிக்கிறோம். தவறுகளை வண்மையாக கூறுவது அமெச்சூராக எழுதுபவர்களான பதிவர்களுக்கு, அதுவும் புது பதிவர்களுக்கு மிகப் பெரிய discouragement.(பன்மையில் எழுதிருப்பதைக் கண்டு நீ ப்ரபலமா என்பது போன்ற கேள்விகள் கூடாது).
அப்போ அப்போ வரும் பின்னூட்டமே என் எழுத்துக்கு ஊட்டச்சத்து டானிக்காக அமைகிறது. ஆனால் அது மிக அதிகமாகப் போகும் போது உங்களால் எல்லாவற்றுக்கும் பதிலனுப்ப முடியாது போவது மிக இயல்பு.
இவ்வாறு நான் ஆதி, பரிசலின் கருத்துக்களை வழிமொழிவதுடன், தீவிர விமர்சனம் இல்லையென்றாலும், சிறு யோசனைகளை (அ) கருத்துக்களைத் (suggestions) தெரிவிக்கலாம் என்ற எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.
suggestion க்கு எந்த தமிழ் வார்த்தை சரியா இருக்கும்.
Pirabalamnave Problem thaan :)
:-)
I am glad to have found your blog (I think I found it thru’ Vikatan). I did my schooling in Udumalpet , and am residing in USA for the past 15 years. So whenever you refer to any local places in the blog, it brings me back my nostalgia moments. Thank you for that, and I am proud to see a great blogger from my home town! I am a fan for your elegant and casual writing. Keep up the good work!
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
:-0
kalakkal padivu...super ah irukku
:-0
//நீங்கள் என்னதான் சோறூட்டி, பீரூட்டி, பாராட்டினாலும் அவரிடம் சரக்கிருந்தால் அவர் எழுதி எழுதி மேல்செல்வார். இல்லாவிட்டால் கூப்பிட்டு கூப்பிட்டு ‘ஏன் எனக்குப் பின்னூட்டம் போடல’ என்று மிரட்டி வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!//
:-)) வாஸ்தவமான பேச்சு!
பதிவா இது கருமம் கருமம்(இப்போ அந்த சகோதரி என்ன சொல்லுவாங்க)
ஆஹா ஓஹோ பேஸ் பேஸ்... பதிவு ரொம்ப நன்னா இருக்கு...
//பதிவு எழுத வேண்டி பார்க்கிற சினிமா, படிக்கிற புத்தகங்கள், குறிப்புகளுக்காக நண்பர்களை அழைத்துப் பேச ஆகும் அலைபேசிச் செலவு, பயணம் என்று வலைப்பதிவாளர்களுக்கு ஆகும் செலவு என்று பார்த்தால் குறைந்த பட்சம் மாதம் ஐநூறாவது தொடும்.//
பதிவு எழுத இவ்வாறன முயற்சிகளும் உண்டோ?
அப்போ மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடத்த வாரா வாரம் ஆகும் செலவினை குறிப்பிடவில்லையே..?
48 ::))
49 ::))
மீ த 50....
அப்பாடி வந்த வேலை இனிதே முடிந்தது....
>>இன்னொருவர் உங்கள் பின்னூட்டக் கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்றால் அது 'பலத்த கண்டனம்' என்று முத்திரை குத்தப் படுவது நியாயமா? அதை ஏன் உங்களால் சரியான முறையில் எடுத்தக்கொள்ள முடியவில்லை? If you expect the blogger or one of the persons writing the feedback to be sporting and not very sensitive, it is natural that the same qualities are exhibited by you as well.>>
அடடா,கண்டனம் என்ற சொற் பிரயோகம் தவறாக இருக்கலாம்;அதனால் நான் மனம் வருந்தினேன் என்றோ,என் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களை என்னால் சீரணிக்க இயலாது என்றோ அர்த்தமல்ல..நானும் என்னுடைய பின்னூட்டத்திலோ அல்லது வாதப் பிரதிவாதங்களிலோ எங்கும் எதிர்மறையான பதில்களை வைத்ததாக நினைவில்லை.
பொதுவாக மரபு நேசனான எனக்கு அழகிய சில புதுக்கவிதைகளும் மிகப்பிடிக்கும்;ஒருவேளை நான் அந்தக் கவிதையால் கவரப்படாததால் அந்தப் பின்னூட்டம் அமைந்திருக்கலாம்.
ஆனால் என்னுடைய பின்னூட்டத்திற்கு நர்சிம் பதில் அளித்ததை விட நீங்கள்,வேலன் மற்றும் நண்பர்களே பதிலளித்ததாக நினைவு..
இங்கு அது எடுத்துக் காட்டப்பட்டது குழும நிலையை சொல்லவேயொழிய நான் வருந்தினேன் என்று சொல்ல அல்ல.
>>எனக்குத் தெரிந்த வரை உங்களை யாரும் தரக் குறைவாகவோ, 'நீ யாரு கேட்க' என்ற தொனியிலோ பேசவில்லை. வேலன் கூட உங்களிடம் மிகத் தரமான முறையில் தார்க்கம் செய்து, முடிவில் 'விவாதங்கள் மிகவும் பயனாக இருந்தது' என்றே சொன்னதாக ஞாபகம்.>>
நானும் அப்படிச் சொல்ல வில்லையே ஐயா?????!!
>>உங்கள் யாருக்கும் தெரியாத உபரித் தகவல் - உங்க விமர்சனத்திற்குப் பிறகு நான் கவிதை எழுத (சிரிக்காதீங்கப்பா) முற்படும்போது உங்கள் வரிகள் நினைவுக்கு வருது. எழுதிய வரிகளை பத்தியாகச் சேர்த்துப் பார்த்து, அப்பவும் ஒரு அர்த்தமும் வரவில்லை என்று தெரிந்த பின்பே அது கவிதை என்று முத்திரை குத்துகிறேன். இதுக்கு மேல உங்களுக்கு மரியாதை கொடுக்க முடியுமா சார்?>>
நான் மரியாதையெல்லாம் கேட்கவில்லை நண்பரே..ஒருவேளை பதில் சொல்வதே இந்த ஆளுக்கு வேஸ்ட் என்று நினைத்து விட்டீர்களோ????
>>அளவில்லாத அழுகையுடன் >>
அடடா,இதுக்கெல்லாமா அழுவாங்க..
இரு வருடங்குளுக்கு முன்னர் என்னுடைய நட்சத்திர வாரத்திலேயே ஒரு பிரபல,பிரபல பதிவர் எழுதிய எகத்தாளமான பின்னூட்டத்திற்கு மிக நாகரிகமாக,தனிநபரைத் தாக்காமல் ஆனால் அதை சமயம் சரியான பதில் கொடுத்த போது,அந்த நாதாரி நண்பர் அனானியாக வந்து கீழ்த்தரமான குடும்பத்தை இழுத்து வசவி விட்டுப் போயிருந்தார்...அதையெல்லாம் பார்த்து விட்டும்தானே பதிவுலகில் இயங்குகிறோம்..இப்படி சிறிய விதயங்களுக்கெல்லாம் அழலாமா..
கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்கள்..
...இப்போது பரிசல் நொந்து நூலாகப் போகிறார்,தொடர்பில்லாத தொடர் பின்னூட்டங்களால் !
//...இப்போது பரிசல் நொந்து நூலாகப் போகிறார்,தொடர்பில்லாத தொடர் பின்னூட்டங்களால் !//
சத்தியமாக இல்ல வாசகரே.. நல்லதொரு விவாதம், கொச்சையில்லாமல் ஜெண்டிலாக நடப்பதைக் கண்டு மிக அக மகிழ்கிறேன்.
அனுஜன்யா.. நன்றி!!
//ஒரு அளவுக்கு மேல HITS வரும்போது ப்ளாக் எழுதறவங்களுக்கு பின்னூட்டம் பாக்கற INTEREST போய்டும் (கம்மி ஆயிடும்)//
அப்படியா மணிகண்டன் :)
நாளைக்கே பரிசல் (ஒரு எடுத்துக்காட்டுக்கு தான் சொல்றேன்) ஒரு பதிவு போட்டு யாரும் பின்னூட்டம் போடலைனா அதுக்கு அடுத்த பதிவு போட எவ்வளவு யோசிப்பாருனு கேட்டு பாருங்க :)
பதில் சொல்றதுல ஆர்வம் குறையுமே ஒழிய பின்னூட்டம் பாக்கற ஆர்வம் குறையாது.
எவ்வளவு ஹிட்ஸ் வாங்கினாலும் இங்க பதிவர்கள் பின்னூட்டத்தை எதிர்பார்ப்பாங்க பாஸ் :)
Personally அவர் பின்னூட்டத்துக்கு பதில் சொல்ற நேரத்துல ஒரு பதிவு போட்டா எனக்கு சந்தோஷம் :)
வெறும் குறைகளை மட்டுமே சொல்லுவதால்... ‘ஓஹோ.. இவனுக்கும் அவனுக்கும் ஆகல போல’ என்ற பிம்பம் உருவாகும் அபாயமும் இருக்கிறது! //
மிகச்சரியாக சொன்னீர்கள்.
பதிவு சுமாரா இருக்கு.
நாங்க நேர்மையான கமெண்டுதாங்க போடுவோம் :)
யார் அது வழுக்கை டப்பா வசந்த்?
பரிசல் - குமுதம் டாப் டென் பிறகு உங்களை படிக்கச் ஆரம்பிதேன்.
ஸ்ரீ ரெங்கம் பயணம் ரசித்தேன். இரவல் புத்தகம் அதையும் ரசித்தேன். இன்னும் பல
ஆனா இது ரொம்ப சுமார், தலைப்பு பார்ததும் தலை எதோ பின்னிருப்பார் என்ற என் எதிர்பார்ப்பு எள்ளி நகைக்கிறது. ஒரே சுய புலம்பல்.
தப்ப நினைக்காதிங்க
படுக்காளி
நீங்க சொல்றது சரியா தான் இருக்கும் வெட்டிப்பயல்.
அனுபவமே இல்லாத விசயத்த இப்படி இருக்கும்ன்னு எழுதினேன் நான். தப்பா இருக்கலாம்.
Post a Comment