Monday, March 16, 2009

அவியல் உருவான கதை

‘ஐயையோ.... கொசுவத்திச் சுருளோட வந்துட்டாண்டா’ன்னு திட்டப் போறீங்க இன்னைக்கு. சரி... மேட்டருக்கு வர்றேன்!

நான் பதிவெழுத வந்த புதுசுல (வந்த புதுசுலயா? இப்பவும் புதுசுதாண்டா நீ? இன்னும் ஒரு வயசு கூட ஆகல ஒனக்கு!) எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதற பதிவுகள தல பாலபாரதியோட விடுபட்டவை-ல பார்த்தேன். அவ்ளோ புடிச்சிருந்தது. (எவ்ளோ?)

சரி... நாமளும் இதுமாதிரி ட்ரை பண்ணலாம்னு யோசிச்சு ஒருநாள் பீரிரவில் 'ஒரு குடிகாரனின் பதிவுகள்' என்றொரு பதிவு எழுதினேன். மேட்டர் ஓக்கே.. ஆனால் தலைப்பு அவ்வளவா பிடிக்கல. ஒரு நாள் கழித்து மீண்டும் இதே கலந்து கட்டின மேட்டர்களை ‘நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்’ங்கற தலைப்புல எழுதினேன். (எனக்கு ரொம்பப் பிடிச்ச தலைப்பு இது) அது பயங்கர பிரபலமாகி ‘நீங்கள் இந்தத் தலைப்புல தொடர்ந்து எழுதவேண்டும்’ என்று எனக்கு எண்ணிலடங்கா மின்னஞ்சல்களும், அலைபேசிகளும்......... வரவே இல்லை.

தன் முயற்சியில் சிறிதும் தளராத விக்கிரமாதித்யனாய்... இரண்டு நாள் கழித்து மே-28ல் அவியல் என்ற தலைப்பில் எழுதினேன். அப்போது நண்பர் அம்பி-தான் எனக்கு தொடர்ந்து பின்னூட்டுவார். இந்த அவியலுக்கு லக்கிலுக்-கின் முதல் கமெண்ட் வந்து ஊக்கப்படுத்தியது. சரி... இது எல்லாருக்கும் பிடிக்கும் என்று எங்கோ ஒரு பட்சி சொல்ல... அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

அதன்பின்...

அவியல்-2
அவியல்-3
அவியல்-4
அவியல்-5

என்று அடுத்தடுத்த நாள் அவியலாகப் போட்டுத் தாக்கினேன்.

அதன்பின்.. இந்த தலைப்பு செட்டானாலும் ஏனோ.. (ஏன் என்று இப்போது யோசித்தாலும் ஞாபகம் வரவில்லை!) முன்குறிப்புகள் என்ற பெயரில் ஒரு சில பதிவுகள் எழுதினேன். இந்த முதல் முன்குறிப்புகளுக்குத்தான் பிரபல கவிஞர், யூத் அனுஜன்யா-வின் பின்னூட்டம் எனக்கு முதன்முதலில் கிடைத்தது என்பதை இங்கே பதிவு செய்கிறேன்! இந்த ‘முன்குறிப்புகள்’ தலைப்பும் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஆனால் என்ன காரணத்திலோ இதையும் தொடராமல் மறுபடியும் அவியல் என்ற தலைப்பிலேயே தொடர்ந்து எழுதினேன்.

ஒரு வாசகி ‘தேதி போட்டு அவியல் எழுதுங்க.. நான் மொதல்லயே எழுதினது-ன்னு நினைச்சு இத மிஸ் பண்ண இருந்தேன்’ என்று கேட்டிருந்தார். ‘அட’ என்று காலர் இல்லாத பனியனைத் தூக்கி விட்டுக் கொண்ட நான்.. அன்று முதல் அவியலுக்கு தேதி போட்டு எழுதினேன்.

பிறிதொரு நாளில் பதிவரும் நண்பருமான நாடோடி இலக்கியன் இதே அவியல் என்ற தலைப்பில் மிக்ஸிங் மேட்டர்களைப் பதிவாக எழுதியிருந்தார். அதெப்படி என் தலைப்பை அவர் வைக்கலாம் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட நினைத்த நான்.. செலவுக்கும், அடிதடிக்கும் பயந்து.. அவருக்குப் போய் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வந்தேன். அந்த ‘அவியல்’ என்ற தலைப்பை நானென்ன ரிஜிஸ்டரா செய்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலபல மாதங்களுக்கு முன் நாடோடி இலக்கியன் திருப்பூர் வந்திருந்தபோது இதுபற்றிக் கேட்டபோது ‘இல்லைங்க பரிசல்.. உங்க ‘அவியல்’ ஃபேமஸில்லையா.. அதான் அதே தலைப்புல எழுதி கூட்டத்தை கொஞ்சம் நம்ம பக்கம் திருப்பலாம்னுதான்’ என்றார். அப்போதுதான் ‘அட.. நாமளும் ரௌடிதான்.. ஜீப்ல ஏறிட்டோம்போல’ என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு முன்னரே லக்கிலுக் கூட்டாஞ்சோறு என்ற பெயரில் எழுதியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதுபற்றி வலையுலகத் திரைஞானி முரளிகண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது மூத்த பதிவர் பினாத்தல் சுரேஷ் இதே போல கலந்து கட்டி அடிக்கும் மேட்டர்களை பொதுவான தலைப்பு வைக்காவிட்டாலும் ‘உப்புமா’ என்ற லேபிளில் கலக்கலாக எழுதிவந்ததாகக் குறிப்பிட்டார்.

நானெழுதும் காலகட்டத்தில் (!?!) அண்ணாச்சி வடகரைவேலன் கதம்பம் என்ற பெயரிலும், மகேஷ் ‘கிச்சடி’ என்ற பெயரிலும் எழுத ஆரம்பித்தார்கள். நான் ஒருநாள் சனிக்கிழமை விஜய் டி.வி-யில் காஃபி வித் அனு-வில் சரோஜா பட டீம் கலாய்த்ததைப் பதிவு செய்ய நினைத்த நான்.. அதே போன்ற தலைப்பு வரவேண்டி ‘காக்டெய்ல் வித் க்ருஷ்ணா’ என்று ஒரு பதிவு எழுதினேன். அதை எழுதின உடனே வால்பையனை அழைத்து ‘இந்த காக்டெய்ல் தலைப்பை நீங்க புடிச்சுக்கோங்க’ என்று சொல்ல ‘அதேதான் நானும் நெனைச்சேன்’ என்றார் அவர். ஆனால் எலிஜபிள் பேச்சிலரான கார்க்கிதான் ‘காக்டெய்ல்’ தலைப்பை கெட்டியாகப் பிடித்து.. ‘கலக்கி’ வருகிறார்!


இதேபோன்று எழுதிவரும் வேறுசில பதிவர்களும்.. தலைப்புகளும்...

வெண்பூ – துணுக்ஸ் (பேரு வெச்சியே.. சோறு வெச்சியா என்பது போல இந்த மனுஷன் எழுதவே மாட்டீங்கறாரு!)
ச்சின்னப்பையன் - நொறுக்ஸ்
கேபிள் சங்கர் - கொத்து பரோட்டா
ஸ்வாமி ஓம்கார் - பழைய பஞ்சாங்கம்
அதிஷா – எதிர் வீட்டு ஜன்னல்
பழமைபேசி – பல்லையம்
உண்மைத்தமிழன் – இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்
டி.வி.ராதாகிருஷ்ணன் – தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்

என்று எல்லாரும் எழுதிவருகிறார்கள். சரி... நான் இந்தத் தலைப்பு வைக்க பாடுபட்ட மாதிரி வேறு யாரும் பாடுபடக்கூடாது என்று நல்ல எண்ணத்தில் நைட் பூராவும் யோசித்ததில் நம்ம நண்பர்களுக்காக சில தலைப்புகள்

முரளிகண்ணன் – மிக்ஸிங்
நர்சிம் – நர்சிம்மாயணம்
அப்துல்லா - தம்பியின் டைரிக்குறிப்புகள்
ஆதிமூலகிருஷ்ணன் (EX. தாமிரா!) – என்ன பேரு வைக்க?
அனுஜன்யா – நிலாமுற்றம் (கவிதையான தலைப்புல்ல?)
ஜ்யோவ்ராம் சுந்தர் – முன்னும் பின்னும்

சரி.... இதே மாதிரி சினிமா ஸ்டார்கள் வலைப்பதிவுகள் ஆரம்பிச்சு.. அவங்களுக்கு இந்த மாதிரி கலந்து கட்டி எழுதற பதிவுகளுக்கு தலைப்பு வேணும்னா என்ன தலைப்பு வைப்பாங்க-ங்கறத சகா – கார்க்கி, அடுத்த காக்டெய்ல்-ல சொல்லுவாரு!


.

27 comments:

anujanya said...

ஏற்கெனவே கவிதை என்றால் காற்று வாங்குமிடம் என்பது எல்லோரும் அறிந்ததே. இதுக்கும் கவிதையான தலைப்பு வெச்சா...

மீதி எல்லா பேரும் அட்டகாசம். அதுவும் அப்துலின் தலைப்பு :)
ஜ்யோவ்ராமின் தலைப்பும் :)

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

நம்ம கேபிள் சங்கர் கொத்து புரோட்டா போடுறார்.

அதற்க்கு முன்னால் உருபுடாதது நாராயனன் அவர்களும் கொத்து புரோட்டா என்னும் பெயரில் சில பதிவுகள் எழுதினார். ஆனால் அவர் அதை தொடராமல் வேறு தளங்களுக்கு சென்று விட்டார்.

பதிவர் மோகன் தாஸ் அவர்களும் இதைப் போல ஆரம்பித்து ஆனால் தொடராமல் விட்டு விட்டார்கள்.

குசும்பன் said...

//பிரபல கவிஞர், யூத் அனுஜன்யா//

பொட்டி வந்துச்சா இல்லையா?:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆயிரம் இருந்தாலும் அவை அவியலுக்கு ஈடாகுமா...
அவியல்தான் எனக்கு தேங்காய்...போடும் தைரியம் தந்தது

Mahesh said...

அப்பிடியா சங்கதி? அதா 'மூத்த' படிவர்களா இருக்கீங்க...

நானெல்லாம் இந்த அளவுக்கு யோசிக்கவே இல்லயே... ம்ம்கும்.. யோசிச்சிருந்தா மட்டும்????

narsim said...

சுந்தர்ஜிக்கு தந்த தலைப்பு டாப்..

அவியல் சுவையா இருக்க இவ்வளவு பதம் பார்த்து இருக்கீங்க.. குட் குக்..

சிவக்குமரன் said...

..!!!!

anujanya said...

@ குசும்பன்

////பிரபல கவிஞர், யூத் அனுஜன்யா//

பொட்டி வந்துச்சா இல்லையா?:)))//


உனக்கு ஆட்டோ வருது கிர்ர்ர்ர்

அனுஜன்யா

ஸ்வாமி ஓம்கார் said...

அவியலுக்கு வரலாறு சொல்லறேனு ஒரு நாள் பதிவை தேத்தியாச்சு போல?


உங்க வலையுலக வரலாற்றில் எனக்கும் ஒரு இடம் கொடுத்ததுக்கு நன்றிங்க :)

ஆண்ட்ரு சுபாசு said...

உங்களால எனக்கு ஒரு தலைப்பு கிடைத்து விட்டது ..எங்கே பதியனும் என்று சொன்னால் பதிந்துவிடுவேன்...."வெங்காய வடை"

Anonymous said...

இந்த அவியலில் நம்ம ஊரு கம்பெனி கத கொஞ்சம் எழுதலாமில்ல ... அதே ஒரு வருஷ அவியல் தரும்.

கார்க்கிபவா said...

மெட்டுக்குப் பாட்டு எழுதனுமா? முயற்சி செஞ்சிடுவோம்..

நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள் - எனக்கு ரொம்ப பிடிச தலைப்பு.. அத சொல்லித்தானே நான் மொத காக்டெய்ல கலக்க ஆரம்பிச்சேன்.

இந்த பேர்ல ஒரு விசேஷன் என்னன்னா, மொக்கையா எழுதினாக் கூட கார்க்கி காக்டெய்ல் கலக்கனாருன்னுதான் சொல்றாங்க.. :))

Cable சங்கர் said...

என்னது எனக்கு முன்னாடியே கொத்து பரோட்டா போட்ருக்காங்களா..? ஆஆ.. அதெல்லாம் ஒத்துக்க மாட்டேன். அது என்னுது..தான்.

என்னையும் லிஸ்ட்ல சேத்ததுக்கு நன்றி பரிசல்.

அ.மு.செய்யது said...

//நர்சிம் – நர்சிம்மாயணம்
அப்துல்லா - தம்பியின் டைரிக்குறிப்புகள்
ஆதிமூலகிருஷ்ணன் (EX. தாமிரா!) – என்ன பேரு வைக்க?
அனுஜன்யா – நிலாமுற்றம் (கவிதையான தலைப்புல்ல?)//

:-)))))))))))))))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//'ஒரு குடிகாரனின் பதிவுகள்' என்றொரு பதிவு எழுதினேன். மேட்டர் ஓக்கே.. ஆனால் தலைப்பு அவ்வளவா பிடிக்கல. ஒரு நாள் கழித்து மீண்டும் இதே கலந்து கட்டின மேட்டர்களை ‘நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்’ங்கற தலைப்புல எழுதினேன். ///






ஆஹா........'

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

யப்பா புண்ணியவான்களே... உடனே பொரியல் உருவான கதை, கூட்டு உருவான கதை அப்படின்னுல்லாம் எதிர் பதிவு போட்டுறாதீங்கப்பு :)

Kumky said...

பிரபல கவிஞர், யூத் அனுஜன்யா-வின் பின்னூட்டம்.
யூத்துதான்..யூத்துதான்.
(துபாய்கே ஆட்டோ அனுப்பற அளவு ஆகிப்போச்சே..)

Kumky said...

எழுதப்படாத நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள்” இது ஆதவன் தீட்சன்யாவின் சிறு கதை தலைப்பு.

Kumky said...

முரளிகண்ணன் – மிக்ஸிங்
நர்சிம் – நர்சிம்மாயணம்
அப்துல்லா - தம்பியின் டைரிக்குறிப்புகள்

இது ஜூப்பர்.

Kumky said...

ஆதிமூலகிருஷ்ணன் (EX. தாமிரா!) – என்ன பேரு வைக்க?

பாவங்க...அவரு..ரொம்ப குழப்பிட்டமோன்னு தோணுச்சி சொந்த பெயர் வைத்தப்புறம்.

Thamira said...

ஜ்யோவ்ராம் : யப்பா புண்ணியவான்களே... உடனே பொரியல் உருவான கதை, கூட்டு உருவான கதை அப்படின்னுல்லாம் எதிர் பதிவு போட்டுறாதீங்கப்பு :)
//

ROTFL..

அப்புறம் சாதாரண விஷயங்கள் எப்படி இவ்வளவு சுவாரசியமான பதிவாக மாறிவிடுகிறது பரிசல் உங்கள் எழுத்துகளில்.. அழகான விருந்து.

அப்புறம் எனக்கு அவியல் போடுவதற்கு விஷயங்கள் சிக்குவதில்லை. அதுபோன்ற விஷயங்களையும் எப்படியாவது ஜோடித்து முழு பதிவாக்கிவிடுகிறேன். இருப்பினும் எப்போதாவது தேவைப்படுகிறதுதான்.. போன வாரம் ஒரு பேர் கண்டுபிடித்துள்ளேனே.. 'த்ரீ இன் ஒன்'.. எப்படி? நல்லாயில்லைன்னு சொன்னீங்க.. பிச்சுப்புடுவேன்.!

Thamira said...

ஹையா.. மீ த 25.!

கும்க்கி :பாவங்க...அவரு..ரொம்ப குழப்பிட்டமோன்னு தோணுச்சி சொந்த பெயர் வைத்தப்புறம்.// அப்படி ஒண்ணும் படுத்தலையே நீங்க.. பரவாலேது.!

Deepa said...

//வெண்பூ – துணுக்ஸ் (பேரு வெச்சியே.. சோறு வெச்சியா என்பது போல இந்த மனுஷன் எழுதவே மாட்டீங்கறாரு!)//

:-)))))

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா - தம்பியின் டைரிக்குறிப்புகள்
//

அண்ணா இந்தப் பெயரில் இனி வாராவாரம் ஒரு பதிவு உண்டு

(ஆமா நீ எழுதிட்டுதான் அடுத்த வேலை பார்ப்ப)

:)

பரிசல்காரன் said...

//போன வாரம் ஒரு பேர் கண்டுபிடித்துள்ளேனே.. 'த்ரீ இன் ஒன்'.. எப்படி? //

நல்லாயிருக்கு.

(போதுமா?)

@ அப்துல்லா

அதெப்படிங்க.. நான் நெனைக்கறத நீங்களே எழுதிடறீங்க?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

present sir.

வால்பையன் said...

//வெண்பூ – துணுக்ஸ் (பேரு வெச்சியே.. சோறு வெச்சியா என்பது போல இந்த மனுஷன் எழுதவே மாட்டீங்கறாரு!)///

ஆமா தல!
போன் பண்ணியே கேட்டுபுட்டேன்.
எதேதோ காரணம் சொல்றாரு!