Thursday, March 19, 2009

இறைவன் அமைவதெல்லாம்....


வீடு மாற்றியாயிற்று. எல்லாப் பொருட்களும் வைக்கப்பட அதனதன் இடங்கள் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. டைனிங் டேபிள் இந்த திசையில், புத்தக அலமாரி இந்த மூலையில், குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்கள் இங்கே இப்படி வைக்கப்படுவேண்டுமென எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக மனைவியே இருக்கிறார்.

கடைசியில் சாமி படங்களை வைப்பது குறித்த விவாதம் நடந்தது.

“அந்த முருகன் படத்தை இங்க மாட்டுங்க”

“இல்லப்பா.. அந்த பஞ்சமுக விநாயகர் படம் இங்க வெச்சா கரெக்டா இருக்கும்ல. அப்பறம் வலது பக்கம் உன்னோட முருகன் படம்.. இடது பக்கம் கிருஷ்ணர் படமும் வெச்சுக்கலாம்”

“சொன்னாக் கேளுங்களேன்... அவ்ளோ பெரிய படத்தை மாட்டினா இந்த முருகன் படம் கண்ணுலயே படாத மாதிரி போயிடும்”

“இல்லப்பா.. இந்த பஞ்சமுக விநாயகர் படத்தை எவ்ளோ பாடுபட்டு பிடிச்சேன்னு ஒனக்குத் தெரியும்லப்பா...”

“அதுனாலதான் சொல்றேன். நீங்க பாட்டுக்கு அவ்ளோ பெரிய படத்தை இங்க வெச்சு... பொண்ணுங்க அத இதப் பண்ணி ஏதாவது ஆச்சுன்னா.. உங்களுக்கும் மூட் அவுட் ஆயிடும்.. எனக்கு அதவிட மூட் அவுட் ஆகும்”

“சரிப்பா.. நீ எப்படிச் சொல்றியோ.. அப்படிப் பண்ணிக்கலாம்”

**********************

“இதென்னங்க சட்டைல இத்தனை பேப்பர்.. அட்டை... கசகசன்னு. உங்க புள்ளைங்க கூட பரவால்ல போல”

“என்னது.. காமி.. இது பில்லும்மா.. ஆஃபீஸ்ல வவுச்சர் போடணும். இது நீ சுடிதார் வாங்கின கடையோட விசிட்டிங் கார்டு. நீதான் வெச்சிருக்கச் சொல்லி குடுத்த. இது... தேவையில்லை கிழிச்சுடலாம்”

“இதென்ன நாலஞ்சு சாமி படம் பாக்கெட்ல வெச்சிருக்க?”

“இது ரமேஷ் சபரிமலை போய்ட்டு வந்தப்ப குடுத்தான். இந்த க்ருஷ்ணர் பாரேன். முகத்துல எவ்ளோ குழந்தைத்தனம் தெரியுது. சூப்பரா வரைஞ்சிருக்காங்க. அதான் வெச்சிருக்கேன்”

“சாமி படத்தை பாக்கெட்ல வெச்சிருந்தா கிண்டல் பண்ணுவீங்க... இதென்ன புதுப் பழக்கம். சட்டை போட்டா பாக்கெட் அப்படி உப்பிட்டு பெரிசா தெரியுது. வேணாம். எடுத்துடறேன்.”

“ப்ளீஸ்ப்பா.. பின்னாடி காலண்டரெல்லாம் இருக்கு பாரேன்”

“ஏன்.. உங்க செல்ஃபோன்ல கூட இருக்கு காலண்டர்..”

“இது பாக்கெட்ல இல்லைன்னா அவன் பார்த்தா கோவிச்சுக்குவான்ப்பா”

“அவன்-னா? கிருஷ்ணனா.. ரமேஷா?”

"ரமேஷ்ப்பா"

“நெஜம்மா ரமேஷ் குடுத்தாரா.. இல்ல வேற யாராவது குடுத்தாங்களா...?”

“ஐயையோ... சாமீ.. வேண்டாம்ப்பா.. படத்தை எடுத்துடு. எதுக்கு வம்பு...”

****************************************

"சனிக்கிழமை எங்க எம்.டி. பாம்பே போறாங்க.. ரொம்ப நாளா எங்கயாவது கோயிலுக்குக் கூட்டீட்டுப் போங்கன்னு சொல்லீட்டு இருக்கில்ல?”

“ஐ! அதிசயமா இருக்கு. ஃப்ரெண்ட்ஸ் கூட ஊரைச் சுத்தணும்னு சொல்லாம பொறுப்பா வந்து சொல்றீங்க..?”

“ஹி.. ஹி... அதிருக்கட்டும். எந்தக் கோவிலுக்குப் போலாம்? உனக்குத்தான் முருகன் பிடிக்குமே.... திருச்செந்தூர் போலாமா?”

“முருகன் பிடிக்கும்தான். ஆனா திருச்செந்தூர் வேண்டாம். நெக்ஸ்ட் டைம் போலாம்”

“என்னப்பா.. நீ ஓகே சொல்லுவன்னு ட்ராவல் ப்ளானெல்லாம் போட்டுட்டேன். இப்ப திடீர்னு இப்படிச் சொல்ற?”

“யாரைக் கேட்டு ட்ராவல் ப்ளான் போட்டீங்க? நீங்க ஏன் திருச்செந்தூர்னு சொல்றீங்கன்னு தெரியாதா எனக்கு? அங்க போய் கடலைப் பார்த்து ரசிச்சுட்டு ஒக்காருவீங்க... கோவில்ல சாமி கும்பிடக் கும்பிட ‘போலாம்.. போலாம்னு நச்சுவீங்க...”

“ஏன் சுசீந்திரம் கோவில்ல அப்படிப் பண்ண மாட்டேனா?”

“அந்தக் கோவிலைப் பத்தி சுவாரஸ்யமான ஐதீகக் கதையெல்லாம் இருக்காம். போன மாசம் நம்ம வீட்டுக்காரக்கா போய்ட்டு வந்தாங்கள்ல.. அப்போ ஒரு கைடு எல்லாத்தையும் ரொம்ப அருமையா சொன்னாராம். அந்த கைடோட பேரு, ஃபோன் நம்பர்லாம் வாங்கி வெச்சிருக்கேன். சுசீந்திரம்தான் போறோம். என்ன ஓகே தான?”

“ஓகே.. ஓகே...”

34 comments:

மேவி... said...

1st

லோகு said...

இறைவன் அமைவதெல்லாம் மனைவி கொடுத்த வரம்..

என்ன ஒரு கண்டு பிடிப்பு..அருமைங்க சூப்பரா இருக்கு.. எப்படி நிறைய சம்பவங்கள கோர்த்து எழுதறிங்க..

☼ வெயிலான் said...

நான் சபரிமலை போகலை.
படமும் கொடுக்கலை.
:)
- ரமேஷ்

மேவி... said...

இவ்வளவு பெரிய கதை எழுதறதுக்கு பதிலா .......

கல்யாணம்யான பின் கணவன் மனைவிடம் total surrender ன்னு சொல்லி இருக்கலாம் .........

பரவில்லை கதை நல்ல இருக்கு ......

எப்படி சின்ன சின்ன நம்பிக்கை விட்டு கூடுது....
வாழ்கிறார்கள் என்று அருமையா சொல்லி இருக்கீங்க

மேவி... said...

"வெயிலான் said...
நான் சபரிமலை போகலை.
படமும் கொடுக்கலை.
:)
- ரமேஷ்"


yen rasa intha kola veri

கார்த்திகைப் பாண்டியன் said...

தலைப்பே அருமை பரிசல்.. இந்த பதிவின் படி நீங்க சுசீந்தரம் போறது உண்மைன்னா.. அருமையான கோயில்.. தாணுமாலையன் உருவான கதையே சுவாரசியம்.. என்ஜாய்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)நல்ல ஐடியா ..இது எல்லாத்தையும் கோர்த்தது..


\\நான் சபரிமலை போகலை.
படமும் கொடுக்கலை.
:)
- ரமேஷ்//

:))

narsim said...

//“ஓகே.. ஓகே...”//

இதுக்கு இன்னொரு ஓசையும் இருக்கு தல.. பூம் பூம்..

நையாண்டி நைனா said...

/*இதுக்கு இன்னொரு ஓசையும் இருக்கு தல.. பூம் பூம்..*/

ஒ... இது சங்க தமிழோ .......

நர்சிம்மே சொல்லிட்டார் அப்படின்னா சங்க காலத்திலே இப்படிதான் சொல்லி இருப்பாங்க.....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

Present Sir.

விக்னேஷ்வரி said...

இதுல என்னவர் புத்திசாலி.
எப்போவுமே அவர் ப்ளானுக்கு எதிரா ஒரு பிளானை என்கிட்டே சொல்லி, நான் வேண்டாம்னு சொன்னதும், அவர் பிளானே கடைசில ஓகே ஆக வச்சிடுவார்.
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க பரிசல்.

சிவக்குமரன் said...

///விக்னேஷ்வரி said..இதுல என்னவர் புத்திசாலி.
எப்போவுமே அவர் ப்ளானுக்கு எதிரா ஒரு பிளானை என்கிட்டே சொல்லி, நான் வேண்டாம்னு சொன்னதும், அவர் பிளானே கடைசில ஓகே ஆக வச்சிடுவார்.
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க பரிசல்.//////
இதுதாங்க சரியான வழி, இத விட்டுட்டு...........

Vinitha said...

பஞ்சமுக விநாயகர் படத்தை ஸ்கேன் பண்ணி போடுங்க!

Mahesh said...

சாமிதான் தகராறுன்னா சாமி படமே தகராறா?

Thamiz Priyan said...

:))

Thamiz Priyan said...

சுசீந்திரம் போனால் திருச்செந்தூரும் சென்று வரலாம்.. அங்கிருந்து பக்கம் தானே..:)
(இதைச் சொல்லி ஏதும் அடி வாங்கினால் சங்கம் பொறுப்பல்ல)

Mahesh said...

பரிசல்... உங்களுக்கு நம்ம கடைல ஒரு வேலை போட்டு குடுத்துருக்கேன். வந்து அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கோங்க :))

Unknown said...

ஓகே ஓகே-ன்னு கடைசில வழியுரதுக்கு முன்னாடியே எங்க போலாம்ன்னு கேட்கறது.. ;))நல்லா இருந்தது..

(சிறுகதைன்னு சொன்னா அடிக்க மாட்டோம்.. அதை விட அனுபவம்ன்னு சொல்லிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்குமேன்னு நினைப்போம்...)

Thamira said...

Mahesh
19 March, 2009 3:46 PM பரிசல்... உங்களுக்கு நம்ம கடைல ஒரு வேலை போட்டு குடுத்துருக்கேன். வந்து அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கோங்க :))
//

கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க.. ஆபத்து காத்திருக்குது..

சின்னப் பையன் said...

:-)))))))))

Venkatesh subramanian said...

Unkal சுசீந்தரம் payanam intha anubavathai polave sirapaka amaya valthukal vera enatha solaaa

வால்பையன் said...

கார்க்கி மொக்கையெல்லாம் இந்த பதிவுக்கு முன்னால பிட்சை வாங்கனும்!

ILA (a) இளா said...

ஒரு நல்ல கணவனுக்கு அடையாளம்'னுல தலைப்பு வெச்சிருக்கனும்

Mahesh said...

///தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்
19 March, 2009 4:08 PM
Mahesh
19 March, 2009 3:46 PM பரிசல்... உங்களுக்கு நம்ம கடைல ஒரு வேலை போட்டு குடுத்துருக்கேன். வந்து அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கோங்க :))

கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க.. ஆபத்து காத்திருக்குது..
///

ஆபத்தெல்லாம் ஒண்ணும் இல்லீங்க... ஒரு பத்தடி ஆழம் குழி வெட்டி வெச்சுருக்கு... அவ்வளவுதான்... அதுக்குப் போய்.... :))

Unknown said...

நன்றி பரிசல்.அது “அனானி” பின்னூட்டம் பற்றியது. என் பதிவில்
பதில் போட்டு விட்டேன்.

cheena (சீனா) said...

உண்மை உண்மை - இறைவன் அமைவதெல்லாம் மனைவி கொடுக்கும் வரந்தான்

நல்லாவே இருக்கு

புருனோ Bruno said...

//“நெஜம்மா ரமேஷ் குடுத்தாரா.. இல்ல வேற யாராவது குடுத்தாங்களா...?”

“ஐயையோ... சாமீ.. வேண்டாம்ப்பா.. படத்தை எடுத்துடு. எதுக்கு வம்பு...”
//

வீட்டுக்கு வீடு வாசப்படி !!!

புருனோ Bruno said...

//இதுக்கு இன்னொரு ஓசையும் இருக்கு தல.. பூம் பூம்..//

நச்

புருனோ Bruno said...

//சுசீந்திரம் போனால் திருச்செந்தூரும் சென்று வரலாம்.. அங்கிருந்து பக்கம் தானே..:)
(இதைச் சொல்லி ஏதும் அடி வாங்கினால் சங்கம் பொறுப்பல்ல)//

நல்ல யோசனை. திருச்செந்தூர் சென்று வர கூடுதலாக 150 கிலோ மீட்டர் தான் ஆகும் என்று நினைக்கிறேன்

Sundar சுந்தர் said...

:)

ny said...

guided by vikatan...ingu vizhunthen.
thanguven!!

பட்டாம்பூச்சி said...

ஓகே.. ஓகே... :)

pudugaithendral said...

ஒரு நல்ல கணவனுக்கு அடையாளம்'னுல தலைப்பு வெச்சிருக்கனும்//

:))))))))))

விவேகானந்தன் said...

எப்படிங்க இப்படியெல்லாம்