Monday, March 9, 2009

கிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு!


அந்தப் பதிவர் தன்னோட பேரை மாத்தற முயற்சில இருக்காராம். அவரோட பேருல ஏற்கனவே ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கறதால, அந்த பேர்ல எழுதினா பத்திரிகைகள்ல வர்றதுக்கும், தான் பிரபலமாகறதுக்கும், பின்னாடி கட்சி ஆரம்பிச்சு முதல்வராகறதுக்கும் இடைஞ்சல் வரலாம்கறதாலதான் இந்த முடிவாம்.

தன்னோட நெருங்கிய நண்பர்களுக்கு மெயிலனுப்பி, பேர் சொல்லுங்கப்பா ன்னு கேட்டுட்டு இருக்காராம்.

பேர் கேட்கும் பிள்ளை!

***************************

அந்த மகிழுந்துப் பதிவரை கரையேத்தறவர் திட்டம் போட்டு, கூட்டு சேர்ந்து கலாய்ச்சதுல ரொம்ப ப்பீலிங்க்ல இருக்காராம். ஸ்டிக்கர் பதிவர்கிட்ட ஃபோன் போட்டு ‘ரெண்டு மூணு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பிச்சுட்டாங்க பாஸ்’ன்னு புலம்பறாராம்.

நட்சத்திரம் தெரியுதுபார் மேலே!

****************************

ஸ்டிக்கர் பதிவர் குறித்த ஒரு கிசுகிசு. அவரோட நெருங்கிய நண்பருக்கு ஒரு புத்தக செட்டை அனுப்பறதா வாக்கு குடுத்திருந்தாராம். ‘நாக்கு தவறினாலும் வாக்கு தவறாதவராச்சே இவரு’ன்னு அந்த நண்பரும் காத்திருந்தாராம். கடைசில காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடற நிலைமைக்கு ஆளானப்பறம்.. ஸ்டிக்கர் பதிவர் ‘இங்க வந்து வாங்கிக்கங்க. இல்லீன்னா இல்லை’ன்னு சென்னைக்குக் கூப்பிடறாராம். நண்பர் நாள் பார்த்துட்டிருக்கறதா கேள்வி.

எல்லாரும் கேளீர்!

****************************

இந்த வாரம் மகிழுந்துப் பதிவர் இருக்கற இடத்துல போன வாரம் இருந்த பெரியாரூர் பதிவர் ஒரு தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியிருந்தார் இல்லையா? ‘இதுவரைக்கும் இப்படி யாருக்குமே பதிவு போட்டு சொன்னதில்லயே’ன்னு ஆச்சர்யப்பட்டு கேட்டப்போ ‘இல்ல நண்பா... நன்றி சொல்லி பதிவு போட்டேனில்லையா.. அதுல அவரு பேரு விட்டுப் போச்சு. என் மேல கோவமான்னு சாட்ல கூப்ட்டு திட்டினாரு. அதான் பிராயச்சித்தமாதான் அந்தப் பதிவைப் போட்டேன்’ன்னார். அவர் மேலும் சொன்னது..

‘உங்க ஊர்க்காரர் ரெண்டு பேரை மிஸ் பண்ணீட்டேன். அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. அதுவும் பெரியார் ஊர்க்காரனான நான், பெரியார் அடிக்கடி சொல்ற வார்த்தைப் பதிவரை குறிப்பிட மறந்ததுதான் பெரிய வருத்தம்’ன்னார்.

‘அவர் ஏன் அவ்ளோ ஸ்பெஷல்’ன்னு கேட்டேன்.

“உங்க ஊருக்கு வந்திருப்போ 1500 ரூபாய்க்கு ப்ளாக் லேபிள் ஃபுல் வாங்கிக் குடுத்தது அவருதாங்க” என்றார்.

நல்லாயிருங்கப்பூ!

********************************

தோழர் ஒருத்தர் எழுதறது கொறஞ்சுடுச்சேன்னு கூப்ட்டு கேட்டேன். ஆணி அதிகம்னார். ‘இருந்தாலும் வாரத்துக்கு ஒண்ணாவது எழுதப்பா’ன்னு திட்டினேன். உடனே போனவாரம் ரெண்டு பதிவு போட்டுட்டார்.

கூப்ட்டு நன்றி சொன்னேன். அவர் சொன்னார்....

“நீங்க சொன்னா கேப்பேங்க.. ஏன்னா அதுதான் முதலாளி விசுவாசம்”

அடப்பாவி.. அப்போ நீ டொமய்ன் வாங்க க்ரடிட் கார்டுல நான் கட்டின பணத்தைத் திருப்பித்தரப் போறதில்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

********************************

எல்லார் வீட்டுக்கும் படம் காமிச்சிட்டிருக்கற அந்தப் பதிவர் ஒரு என்.ஆர்.ஐ-யை கரெக்ட் பண்ணி வெச்சிருக்காராம். ‘இங்க வா, அங்க வான்னு அலைகழிச்சு கதை கேட்கறாங்க.. ஆனா இன்னும் கன்ஃபர்ம் ஆனபாடில்லை’ன்னு புலம்பறாராம். கூடிய சீக்கிரம் கன்ஃபர்ம் ஆகி நானும் டைரக்ட் பண்ணீடுவேன்’ன்னு நம்பிக்கையோட சொன்னார். வாழ்த்துச் சொல்லீடுவோம்.

நான்தான் மொத விமர்சனம் போடுவேன்!

************************

அடிக்கடி எழுதாம விடுபட்டு, விடுபட்டுப் போற அந்த பதிவுலக தல, அடிக்கடி எழுதலீன்னாலும் பதிவுலகத்தோட தொடர்பிலயேதான் இருக்காராம். சமீபத்துல வலையுலக திரைஞானியைச் சந்தித்த அவர் ‘புனைவுகள் எழுதறப்போ பத்திரிகைகளுக்கு அனுப்பி, வரலீன்னா அப்பறமா வலையில போடுங்க’ என்கிற மிக உயர்வானதொரு அறிவுரையைத் தந்தாராம்.

‘ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க அவர் அப்படிச் சொன்னது. என்னோட புனைவுகள் அந்த அளவுக்கு தகுதியான்னு பயமா இருக்கறதால அனுப்பத் தயக்கமா இருக்கு’ என்கிறார் திரைஞானி தன்னடக்கத்துடன்.

ட்ரை பண்ணுங்க ஜி!

*****************************

அந்த பதிவுலக நண்பர்கள் வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறதாம். வரிசையாக அவர்களைச் சார்ந்தவர்கள் லாங்க்வேஜ்ஸ்மெல் முகப்பில் இருக்கப் போகிறார்கள் என்ற மகிழ்ச்சியாம். இந்த வாரம் மகிழுந்துப் பதிவரைத் தொடர்ந்து அடுத்தவாரம் அந்த இடத்தை ஆக்ரமிக்கப் போகிறவர்...

என்னது... ஒருத்தரைப் பத்தி ரெண்டு கிசுகிசு வேண்டாமா?

சரி..சரி...

*

42 comments:

Cable சங்கர் said...

//பேர் கேட்கும் பிள்ளை!//
யாருங்க அது..?
//மகிழுந்துப் பதிவரை //
கார்கீ??
//எல்லாரும் கேளீர்!//
நர்சிம் - பரிசல்
/./நல்லாயிருங்கப்பூ!//
கார்கி- வெண்பூ
//“நீங்க சொன்னா கேப்பேங்க.. ஏன்னா அதுதான் முதலாளி விசுவாசம்”//
அதிஷா..

//நான்தான் மொத விமர்சனம் போடுவேன்!//
அவரு விமர்சனம் எழுதறதையே நிறுத்திட போறாராம்.

//திரைஞானியைச்//
வாழ்த்துக்கள் முரளி

//லாங்க்வேஜ்ஸ்மெல்//

மொழி வாசனை..??

RRSLM said...

gossip பொலந்து கட்றிங்க!.....இங்கயும் பாலிடிக்ஸ் உண்டு போலிருக்கு!!! மன்னிக்கவும் நான் ப்ளோக்குக்கு புதுசு, இது கொஞ்சம் வித்யசமமான தனி உலகமாக தான் இருக்கு. Intresting! I like it. உங்க எழுத்துக்கு கொஞ்சம் அடிக்கட் ஆயிட்டான் :)

மேவி... said...

என்னை பத்தி கிசு கிசு வரவில்லையே......
அப்ப நான் இன்னும் பிரபலம் அகவில்லையோ???????
ஹி ஹி ஹி

எம்.எம்.அப்துல்லா said...

//நான்தான் மொத விமர்சனம் போடுவேன்!

//

நீங்க போடுற அந்த பதிவுக்கு நாந்தான் மொத எதிர்பதிவு போடுவேன்
:)

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

படத்தை பார்த்ததும் ஏதோ பிட்டு கதைனு நினைச்சேன்...

Cable சங்கர் said...

//நீங்க போடுற அந்த பதிவுக்கு நாந்தான் மொத எதிர்பதிவு போடுவேன்
:)//

அண்ணன் வாழ்க..

எம்.எம்.அப்துல்லா said...

//இங்கயும் பாலிடிக்ஸ் உண்டு போலிருக்கு!!! //

அதெல்லாம் ஒன்றும் இல்லை ரா அண்ணே. கல்லூரிக் காலத்தில் நண்பர்கள் ஒருவருகொருவர் கலாய்த்துக் கொள்வோம் இல்லையா?? அது போலத்தான் இங்கே நாங்களும் :)

anujanya said...

பேர் கேட்கும் பிள்ளை எனக்குத் தெரியும் என்று உங்களுக்கும் தெரியும்.

மகிழுந்துப் பதிவர் - அப்சல்யூட் யூத்

ஸ்டிக்கர் பதிவர் - C.K.?

அவர் நண்பர் - K.K.?

பெரியாரூர்ப் பதிவர் - பெரியவரின் சீடர்

black label கொடுத்த புண்ணியவான் - வெட் ஆனியன்

தோழர் - வெள்ளி பிறந்தநாள் கொண்டாடியவர்

படம் காண்பிப்பவர் - உண்மைத் தமிழன் நண்பர்

பதிவுலகத் தல - தனியா சொல்லாட்டா 'விடுபட்டவை' ஆகிடுமோ?

திரைஞானி - collision impact பற்றி ஆராய்ச்சி செய்பவர்

லாங்க்வேஜ்ஸ்மெல் - பெருந்திரட்டி

இந்த வாரம் - அப்சல்யூட் யூத்

அடுத்த வாரம் - C.K.?

ஆத்தா? நா பாஸாயிட்டேனா?

அனுஜன்யா

gayathri said...

எம்.எம்.அப்துல்லா
9 March, 2009 8:45 AM
//இங்கயும் பாலிடிக்ஸ் உண்டு போலிருக்கு!!! //

அதெல்லாம் ஒன்றும் இல்லை ரா அண்ணே. கல்லூரிக் காலத்தில் நண்பர்கள் ஒருவருகொருவர் கலாய்த்துக் கொள்வோம் இல்லையா?? அது போலத்தான் இங்கே நாங்களும் :)

IPPAIELLAM SONNA NEENGA INNUM UTHUNU NANGA NAMBIDUVOMVA.

வெட்டிப்பயல் said...

முரளி கண்ணனோட கதைகள் நிச்சயமா பத்திரிக்கைகள்ல வரும். அந்த அளவுக்கு க்வாலிட்டி இருக்கு.

narsim said...

அடி பின்னிட்டீங்களே கரையேத்து பார்ட்டி.. கலக்கல்..

Unknown said...

:))

எம்.எம்.அப்துல்லா said...

//IPPAIELLAM SONNA NEENGA INNUM UTHUNU NANGA NAMBIDUVOMVA.//

தாயி எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோம், இமேஜை மட்டும் டேமேஜ் பண்ணிடாதீங்க :))

குசும்பன் said...

தல பதிவு சூப்பர், படம் சூப்பரோ சூப்பர், கிசு கிசு சொல்ற மாதிரி இல்லீயே படம்! :)))

குசும்பன் said...

எம்.எம்.அப்துல்லா said...
கல்லூரிக் காலத்தில் நண்பர்கள் ஒருவருகொருவர் கலாய்த்துக் கொள்வோம் இல்லையா?? அது போலத்தான் இங்கே நாங்களும் :)//

யூத்து? இருக்கட்டும் இருக்கட்டும்!

RR said...

//அதெல்லாம் ஒன்றும் இல்லை ரா அண்ணே. கல்லூரிக் காலத்தில் நண்பர்கள் ஒருவருகொருவர் கலாய்த்துக் கொள்வோம் இல்லையா?? அது போலத்தான் இங்கே நாங்களும் :)//
மகிழ்ச்சி அப்துல்லா சார். கடைசியா உங்கள போட்டு வாங்கராங்க போல இருக்கே?
அரோக்கியமான கலாயித்தலாகதான் இருக்கு. நன்று.

☼ வெயிலான் said...

புரியுது ஆனா புரியல............
தெரியுது ஆனா தெரியல.........
அப்புறமா போன் பண்ணி கேட்டுக்கறேன்.

கும்மாச்சி said...

Oh ingey ivvalavu vishayam irukka

முரளிகண்ணன் said...

வெட்டிப்பயல் மிக்க மகிழ்ச்சி



பரிசல், அசத்தல் கிசுகிசுக்கள்

KARTHIK said...

// பெரியாரூர்ப் பதிவர் - பெரியவரின் சீடர் //

இன்னோரு தடவ அப்படி சொல்லாதிங்க
தல.போனவருசம் மால போட்கிட்டு தண்ணி அடிக்காமா இருந்தாரு நெத்தீல பட்டையும் கழுத்துல கொட்டையுமா இருந்தாரு.அதுல ஒரு சந்தோசமான விசையம் என்னான்னா
ரண்டுவேளையும் குளிச்சாரு.

KARTHIK said...

// அப்போ நீ டொமய்ன் வாங்க க்ரடிட் கார்டுல நான் கட்டின பணத்தைத் திருப்பித்தரப் போறதில்லையா?//

முதலாலி முதலாலி என்னையும் வேலைக்கு வெச்சுகிட்டு ஒரு டோமைன் வாங்க்கொடுங்க மொதலாலி.

எப்போ வேலைக்கு வரனும் மொதலாலி (-:

Mahesh said...

கிசு கிசு பதிவா...

கிச்சு கிச்சு பதிவா?

அ.மு.செய்யது said...

உங்க கோட டிகோட் பண்ணி கண்டு பிடிக்கறது செம்ம இண்ட்ரஸ்டிங்கா இருக்குங்க..

அறிவிலி said...

புதுசாச்சா, நெறைய புரியல. இன்னும் ஒரு ஆறு மாசம் கழிச்சு படிசசா புரியலாம். யாராவது விளக்க உரை போட்டா லிங்க் கொடுங்கப்பா..

Kumky said...

1) தனி மடல் என்பதால்..உலோகங்களை காட்டவியலாது.
2) அது வந்து க்கி & த்திக்....கார்.
3)சென்னையின் தற்போதைய நல்லி செட்டியார் என பெயரெடுத்த கம்பர் & கமெண்ட்டில் கடேசி.
4)பரினாம வளர்ச்சியில மனிதனுக்கு விடுபட்டு போனதும் & வெட் ஆனியனும்.
5)சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அதிரடி பதிவர்.
6)இது தான் சுலபம்...மொத கமெண்ட்.
7)சொன்னவர் ஆவியோட வேலை பாக்குற கவி.கேட்டவர் வலையுலக சினிமா என்சைக்ளோபீடியா மு.க.
8)இது அக்ரிகேட்டர் தமிழ் வாசனை.
அடுத்து கம்பரா..?

ஓரளவிற்க்கு சரியா பரிசல்..?

Kumky said...

கார்த்திக் said...

// அப்போ நீ டொமய்ன் வாங்க க்ரடிட் கார்டுல நான் கட்டின பணத்தைத் திருப்பித்தரப் போறதில்லையா?//

முதலாலி முதலாலி என்னையும் வேலைக்கு வெச்சுகிட்டு ஒரு டோமைன் வாங்க்கொடுங்க மொதலாலி.

எப்போ வேலைக்கு வரனும் மொதலாலி (-:

இவ்ளோ தமிழ் கொலையா..?

காட்டாபிசர் கூட ஒரு வருடத்துக்கு காட்டுகுள்ற அலைய உட்டுபோடுவோம்...சாக்கிரத.

அக்னி பார்வை said...

////திரைஞானியைச்//
வாழ்த்துக்கள் முரளி
//

அப்பா! நான் கொடுத்த பட்டம் வீனா போகல....

சுப்பரு பரிசல்

Thamira said...

இந்த மாதிரி விஷயங்களை கேப்சர் பண்றதுல நான் ஏன் இவ்ளோ வீக்கா இருக்குறேன்.. சை.! ஒருத்தரயும் தெர்ல.. ஒருத்தரத் தவிர..

Thamira said...

நம்பாளுங்க எடுத்துக்குடுத்த பிறகுதான் கொஞ்சம் புரியுது.

வால்பையன் said...

முதலில் இருப்பவர் என்னால் தங்கமாக்கப்பட்டவர்.

பெயர் மாற்ற சொன்னது நமது
”வைத்யா”ர்

வால்பையன் said...

அது யாரு ஸ்டிக்கர் பதிவர்?

வால்பையன் said...

நர்சிம்மா ஸ்டிக்கர் பதிவர்?
ஏன் அந்த பெயர்?

வால்பையன் said...

அடுத்து என்ன சொல்ல வர்றிங்கண்ணே தெரியல!
தாவூ தீருது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//என்னது... ஒருத்தரைப் பத்தி ரெண்டு கிசுகிசு வேண்டாமா?//

அடுத்தும் நமது நட்பு கூட்டத்தில் ஒருவர் தானா?

கணினி தேசம் said...

பரிசல், காதைக் கொண்டாங்க...
"... ...! .... ... ... ... ... ...!!"

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
என்னது ஒண்ணும் கேக்கலையா?
.
.
.
.
.
.
"பதிவு அருமை! பதிவர்களைப் பற்றி கிசு கிசு போட்டு கலக்கிட்டீங்க.!!"

கணினி தேசம் said...

வால்பையன் said...

அடுத்து என்ன சொல்ல வர்றிங்கண்ணே தெரியல!
தாவூ தீருது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

//‘அவர் ஏன் அவ்ளோ ஸ்பெஷல்’ன்னு கேட்டேன்.

“உங்க ஊருக்கு வந்திருப்போ 1500 ரூபாய்க்கு ப்ளாக் லேபிள் ஃபுல் வாங்கிக் குடுத்தது அவருதாங்க” என்றார்.//

நிஜமா?
எங்களையெல்லாம் கூப்பிடவே இல்லையே !!

Saminathan said...

நம்மளப் பத்தியெல்லாம் கிசு கிசு வருது....சிரிப்ப அடக்க முடியலைங்...

இருந்தாலும் நம்மளையெல்லாம் ஒரு பதிவரா மதிச்சு கிசு கிசு எழுதுனதால
ஒரு க்ராண்ட் பார்ட்டி குடுத்துற வேண்டியதுதான்....

யாரு திருப்பூர் வறீங்களோ...அவங்களுக்கு 18 வருஷ புட்டி ஒண்ணு காத்திட்டு இருக்கு...

வால்பையன் said...

//ஒரு க்ராண்ட் பார்ட்டி குடுத்துற வேண்டியதுதான்....

யாரு திருப்பூர் வறீங்களோ...அவங்களுக்கு 18 வருஷ புட்டி ஒண்ணு காத்திட்டு இருக்கு...//

அழைப்பு பழைய மட்டும் தானா!
இல்லை என்னை போன்ற புதியவர்களுக்கும் உண்டா?

புருனோ Bruno said...

ஹி ஹி ஹி :) :) :)

Anonymous said...

:)

கிசு கிசு என்பது என் கண்ணிற்கு கிகி கிகி ன்னு தெரியுது :P


இருந்தாலும் கார்க்கி பாவம்..

cheena (சீனா) said...

திருப்பூருக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணச் சொல்லிட்டேன் -

Kumky said...

ஈர வெங்காயம் said...

ஒரு க்ராண்ட் பார்ட்டி குடுத்துற வேண்டியதுதான்....

யாரு திருப்பூர் வறீங்களோ...அவங்களுக்கு 18 வருஷ புட்டி ஒண்ணு காத்திட்டு இருக்கு...

ஆஜர்..ஆஜர்...ஆஜர்.
நேரம் இடம் தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொல்லப்படுகிறது.