Monday, March 2, 2009

தூக்கம் உன் கண்களை...
“எந்தப் பழக்கமும் பழகப் பழகப் பழகிவிடும். விடிகாலையில் எழுவதைத் தவிர”

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் ரெகுலராக டைரி எழுதிக் கொண்டிருந்த காலத்தில் என் ஒரு வருடத்து டைரியின் முகப்புப் பக்கத்து வாசகம் இது.

இன்னைக்கு வரைக்கும் இந்த அதிகாலை எழுவது வெறும் கனவாவே தொடருது எனக்கு. (எப்படிப் பொருந்துது பாருங்க இந்த வாசகம்!)

நடுவுல கொஞ்ச நாள் காலைல அஞ்சு அஞ்சரைக்கு எழுந்து புக்ஸ் படிப்பேன். திடீர்னு அது ஆறரைக்கு ஷிஃப்ட் ஆகும். மறுபடி ஏழு, ஏழரைன்னு வந்து நிக்குது இப்போ.

இத மட்டும் தொடர்ந்து செய்ய முடிஞ்சா நிறைய நேரம் மிச்சமாகும், ஆனா முடிய மாட்டீங்குது!

எங்க அலுவலக நண்பர்கள் கூட இதப் பத்தி பேச்சு வந்தது. ‘எனக்கும் அப்படித்தான்’ன்னு சில பேர் சொல்ல, எல்லாருமா ஒரு ஷட்டில் டீம் ரெடி பண்ணி, காலைல ஆறு மணிக்கு மீட் பண்றதுன்னு முடிவாச்சு.

நான் இருக்கற ஏரியாலேர்ந்து அங்க போக நாலு கிலோ மீட்டர். அஞ்சரைக்கு கிளம்புவேன். பனி மூட்டம். ஐபாட்ல இளையராஜா சாங்ஸ். அதுவும் கண்டிப்பா ‘காலைத்தென்றல் பாடிவரும்’ & ‘புத்தம் புதுக் காலை’ ரெண்டு பாட்டும் நிச்சயமா இருக்கும். மெதுவா பைக்கை ஓட்டிகிட்டு ரெண்டு பக்கமும் வயல் வெளிகள் இருக்கற ஏரியாவுல இந்தப் பாட்டுகளைக் கேட்கறப்போ ‘சொர்க்கம் மண்ணில்தான்’னு தோணும்.

எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. திடீர்னு ஒருத்தர் ஆறு-ங்கறது ஆறரைக்கு வெச்சுக்கலாம்னாரு. அங்கதான் ஏழரை ஆரம்பிச்சது. அப்படியே ஒருத்தர் ஒருத்தரா ஜகா வாங்க, ஷட்டில்ல சிங்கிள்ஸ் ஆடலாம்.. ஆனா சிங்கிளா ஆட முடியாதில்ல.. அது ட்ராப் ஆச்சு.

அப்புறம் ஃபேக்டரிக்குள்ளயே நாலைஞ்சு பசங்க ‘சார்.. வாலிபால் விளையாடலாமா சார்’ன்னு கெளப்பினாங்க. எனக்கு ஓக்கே’ன்னேன். கொஞ்ச நாள் அதுவும் விளையாடினோம். அப்பறம் ஃபேக்டரில பிஸி ஆரம்பிச்சப்போ, நைட் வொர்க் வெச்சு, அதிகாலைல அவங்க வர்றதுக்கு ஆப்பு வந்துடுச்சு!

பேசாம வீட்டிலயே எக்ஸர்சைஸ் பண்ணலாம்னு ஒருநாள் நேரத்துல எழுந்து ஆரம்பிச்சேன். மொத நாளே கழுத்துல சுளுக்கு வந்து, நேரா நிக்கறவனப் பார்க்க இடதுபக்கம் திரும்பி நின்னு பார்க்க வேண்டிய நிலைமை வந்துச்சு.

இரவு எத்தனை மணிக்குத் தூங்கறன்னு கேட்டா.. அது கணக்கு வழக்கில்லாம, அடங்காம இருக்கு. ஒரு நாள் 10, 11, 12,1ன்னு அது இஷ்டத்துக்கு போகுது. மொதல்ல எத்தனை மணிக்கு தூங்கினாலும் ஆறு மணிக்கு எழுந்த கிருஷ்ணாக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல. ஆனா இரவு எழுதறதுங்கறது எனக்குப் பிடிச்ச ஒரு விஷயம். வீட்ல திட்டுவாங்க. ‘யூ நோ யுவன் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமானெல்லாம் நைட்பேர்ட்ஸ். அதுவும் ஏ.ஆர்.ரகுமான் நைட்லதான் ரொம்ப பிஸியா கம்போஸ் பண்ணுவாராம்'ன்னு உமாகிட்ட சொல்லுவேன்.

'அவரு அப்படி வொர்க் பண்ணி ஆஸ்கார் வாங்கீட்டார். நீங்க அட்லீஸ்ட் ஒரு செகண்ட் ஹேண்ட் காராவது வாங்குங்க. அப்புறம் பேசுங்க'ங்கறாங்க. எதாவது சொல்லமுடியுமா?


என் சின்னப் பொண்ணு மேகா, அலாரம் அடிச்சா அடுத்த நிமிஷம் எழுந்து ப்ரஷ் பண்ணப் போயிடறா. நான் என்னடான்னா அலாரம் அடிச்சா, அடுத்த நிமிஷம் அரக்கப் பரக்க எழுந்து கம்ப்யூட்டர் டேபிள், தலகாணின்னு எல்லாத்தையும் தேடி அந்த அலாரத்தை ஸ்டாப் பண்ணீட்டு தொடர்ந்து தூங்கறேன். காலைல எனக்கு எதிரி அந்த அலாரம்தான்! ஏன் இப்படி ஆய்ட்ட கிருஷ்ணா!?!

இத்தனை நாள் இல்லாத சங்கடம் இப்ப ஏண்டா ஒனக்கு-ன்னு நீங்க கேட்கலாம். பதிவெழுத எதையாவது ட்ராஃப்ட் பண்ணி வெச்சுட்டு காலைல ஏர்லி மார்னிங் ஏழரைக்கு எழுந்து, எட்டு டூ எட்டரை வலைல போடுவேன். மார்ச் ஒண்ணாந்தேதியிலேர்ந்து மின்வெட்டு நேரம் 8 டூ 10ன்னு மாத்தீட்டாங்க. (மொதல்ல 12 டூ 2 இருந்தது.. இந்த இருந்ததுன்னு அடிக்கறப்போ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருண்டதுன்னு வந்தது. அதுவும் சரிதானே!)

பாருங்க.. இந்த வலையுலகத்துக்கு வந்த சோதனைன்னு நான் நெனைச்சுட்டேன்.

‘ஏன் இன்னைக்கு உங்க ப்ளாக்ல ஒண்ணும் அப்டேட் பண்ணல’ன்னு கேட்டு வந்த ஆயிரக்கணக்கான மெயில்களுக்கு இதுதான் பதில்!

காலைல நேரத்துல எழுந்திருக்க ஏதாவது ஐடியா சொல்லுங்க.. ப்ளீஸ்.

உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!

42 comments:

தாரணி பிரியா said...

ஹை இந்த பதிவுக்கு நான் சீக்கிரம் வந்துட்டேன் :)

தாரணி பிரியா said...

பிடிச்ச புக்கை பாதி படிச்சுட்டு மீதியை காலையில படிக்கலாமுன்னு வெச்சுடுங்க. காலையில அலாரம் இல்லாமயே எழுந்துக்கலாம்.

உங்க பொண்ணுங்க கூட சேர்ந்து ஷட்டில் ஆடுங்களேன்.


//காலைல ஏர்லி மார்னிங் ஏழரைக்கு எழுந்து,//

குடுத்து வெச்சவருங்க. நானெல்லாம் ஏழரை மணிக்கு ஏழரை பிடிச்ச மாதிரி அவசரமா ஆபிஸ் கிளம்பிகிட்டு இருக்கேன் :).

பரிசல்காரன் said...

//பிடிச்ச புக்கை பாதி படிச்சுட்டு மீதியை காலையில படிக்கலாமுன்னு வெச்சுடுங்க. காலையில அலாரம் இல்லாமயே எழுந்துக்கலாம்.//

பல சமயம் அதனாலதான் அதிகமா தூக்கம் வருது!!

உங்க பொண்ணுங்க கூட சேர்ந்து ஷட்டில் ஆடுங்களேன். //

ம்ம்ம்.. ட்ரை பண்ணலாம். படிக்கற பொண்ணுங்கள இப்படி விளையாடக் கூப்பிடறீங்க?ன்னு உமா திட்டினா உங்களை கைகாட்டிவிடுவேன்.. பரவால்லியா?

தாரணி பிரியா said...

பிடிச்ச புக் படிச்சா எப்படிங்க தூக்கம் வரும் எனக்கு புரியலையே தயவுசெய்து விளங்குகளேன் :)

படிப்புக்கு பிரச்சினை இல்லாம விளையாட கூப்பிடுங்களேன். காலையில 5.00 டூ 6.00 இது போல :). விளையாட்டும் முக்கியம்தானே

Vidhya Chandrasekaran said...

ஒரு நாலஞ்சு அலாரம் வைச்சு ட்ரை பண்ணிப்பாருங்களேன்:)

பரிசல்காரன் said...

பிடிச்ச புக்கை சீக்கிரம் முடிக்கக் கூடாதுன்னு தோணுமில்ல.. அதான்,,

.
.

.
அப்படீன்னு சப்பைக்கட்டு கட்டினாலும்.. அந்த ‘பிடிச்ச' வார்த்தைய நான் கவனிக்கல ப்ரியா ஸாரி!!

Anonymous said...

எனக்கு காலை 6 மணிக்கு மேலே தூக்கம் வர மாட்டேங்குது. என்ன செய்யலாம்?

கணினி தேசம் said...

நீங்க பரவாயில்லை, நான் இங்க தினமும் காலை 4:30 மணிக்கு எழுந்து 5:20 க்கு அலுவலகம் பஸ் பிடிக்கணும்.

பெஸ்ட் சாய்ஸ் !
தங்கமணிகிட்ட சொல்லி ஆறு மணிக்கு மேல தூங்கினா எப்படியாவது எழுப்பிவிடச் சொல்லிடுங்க. முகத்துல ஒரு சொம்பு தண்ணி ஊத்தினாலும் பரவாயில்லைனு சொல்லுங்க. மிச்சத்த அவங்க பார்த்துப்பாங்க.

Unknown said...

///பெஸ்ட் சாய்ஸ் !
தங்கமணிகிட்ட சொல்லி ஆறு மணிக்கு மேல தூங்கினா எப்படியாவது எழுப்பிவிடச் சொல்லிடுங்க. முகத்துல ஒரு சொம்பு தண்ணி ஊத்தினாலும் பரவாயில்லைனு சொல்லுங்க. மிச்சத்த அவங்க பார்த்துப்பாங்க.////

Ithu nalla idea va irukku try panni paarunga..... pin vilaivugalukku company poruppalla

ஸ்வாமி ஓம்கார் said...

ஆறு மணிக்கு நீங்க எழுந்திரிக்க நான் ஒரு ஐடியா சொல்லவா ? :)

5:58 க்கு என்னை எழுப்பி விடுங்க. அப்போ தினமும் உங்களை நான் ஆறு மணிக்கு எழுப்பி விடறேன். :)

எல்லாரும் பின்னூட்டம் போட்டவுடனே இதுக்கு எளிய வழியை சொல்லறேன். அதுவரைக்கும் சஸ்பென்ஸ்ம்:)

pudugaithendral said...

early to bed early to rise இதுதான் எங்க வீட்டில் எழுதப்படாத சட்டம்.

கார்க்கிபவா said...

//2 டூ 2 இருந்தது.. இந்த இருந்ததுன்னு அடிக்கறப்போ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருண்டதுன்னு வந்தது. அதுவும் சரிதானே//

பகல்ல எப்படி சகா இருண்டு போகும்?

இனிமேல தினமும் காலைல ஆறு மணிக்கு நான் ஃபோன் செஞ்சு அவியலுக்கு மேட்டர் சொல்லவா?

ஆனா ஒரு கண்டிஷன்..

கிகிகி.. அதே பழைய சரக்குதான்

5.55க்கு என்னை நீங்க எழுப்பனும்

கே.என்.சிவராமன் said...

பரிசல்,

எதற்காக அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்? விழிப்பு வரும்போது எழுந்திருக்கலாமே? எப்போதும் 'விழித்திரு' என்று 'பெரியவர்கள்' சொன்னது உறக்கத்தையா? அறிவையா?
அதே பெரியவர்கள்தானே ஆழ்ந்த உறக்கம் உடலுக்கும், மனதுக்கும் நல்லது என்றார்கள்?

பதிவு எழுதத்தான் அதிகாலை விழிப்பு என்றால், அப்படியொரு பதிவு தேவையா? :)

என்றாலும் இப்படியொரு பதிவுக்கு அப்படியொரு விஷயம் தேவைப்படுவதால் அப்படியான விஷயத்துக்கு இப்படியான பின்னூட்டம் தீர்வாகாது :)

விஷயம் இல்லாமலும் விஷயத்துடன் பதிவு எழுதுவதை பார்க்கும்போது சந்தோஷமாகவும், பொறாமையாகவும் இருக்கிறது.

இனி நானும் அதிகாலையில் விழிக்கப் போவதில்லை :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ரமேஷ் வைத்யா said...

நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கலாமே...

மாதவராஜ் said...

//நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கலாமே...//
கமெண்ட் எழுதுவதற்குள் முந்திக்கொண்டார் ரமேஷ் வைத்யா....
சரி. வழிமொழிகிறேன்.

Prabhu said...

தூக்கத்தைப் பற்றிப் பேசினா கூட எவ்ளோ விஷயம் இருக்கு! தொடர்ந்து நாலு அஞ்சு நாள் சீக்கிரமா தூங்குங்க, அடுத்து முயற்சி பண்ணினா எழ முடியும். ஆனா உங்கள பாத்தா நிஜமா சீக்கிரமா எழணும்னு நினைக்கிறவர் மாதிரி இல்ல.

Mahesh said...

/ஏன் இன்னைக்கு உங்க ப்ளாக்ல ஒண்ணும் அப்டேட் பண்ணல’ன்னு கேட்டு வந்த ஆயிரக்கணக்கான மெயில்களுக்கு இதுதான் பதில்!
//

நிஜம்மாவா? :))))))))))))

SK said...

புதுகை தென்றல் அக்கா சொன்னதை தான் வழி மொழிவேன்.

ரமேஷ் வைத்யா சொன்னது மெடிக்கல் ஐடியா :)

நான் தேவையான நாட்கள்'ல செய்யறது, இத்தன மணிக்கு என்திரிக்கனும்னு எனக்கே பத்து தடவை சொல்லிட்டு, அதை மட்டுமே மனசுல நெனைச்சிட்டு படுப்பேன் .. நிச்சயமா எந்திரிப்பேன்..

ஆனா அது தினம் வொர்க் அவுட் ஆகுறது இல்லை :) :)

நல்ல ஐடியா தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க :)

Cable சங்கர் said...

//நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கலாமே...//

நானெல்லாம் பரிசல் டிரை பண்ண எல்லாத்தையும் செஞ்சி பாத்துட்டேன். ரமேஷ் வைதயா சொன்னதையும் செஞ்சி பாத்துட்டேன். என்ன கரெக்டா முழிப்பு வந்து போயிட்டு திரும்ப தூங்க போயிடறேன்.

Truth said...

ஹ ஹ, நானும் உங்க க்ளப்புல ஒரு மெம்பர் தான்னு நினைக்கிறேன். ஒரு காலத்துல காலை 5 மணிக்குத் தூங்கினாக் கூட ஷார்ப்பா காலை 6 மணிக்கு அலாரம் வெக்காம எழுந்திருவேன். இப்போ எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு, என்ன பண்ணலாம்னு தெரியாம இருந்த எனக்கு ஒரு நல்ல ஐடியா வந்திச்சு, அதாவது இரவு என்ன தலை போற விஷயமா இருந்தாலும் 10 மணிக்கு மேல முழிக்கக் கூடாதுன்னு தான். அப்படி ஒரு ரெண்டு வாரம் முயற்சி பண்ணினேன். உண்மையாவே நல்லா இருந்திச்சு. அதென்ன 'இருந்திச்சு' (past tense-ல), அதான் சொன்னேனே, ரெண்டு வாரம் தான்னு.

தொடர்ந்து இப்படியே இருக்க எனக்கும் தெரியலெ

ச.முத்துவேல் said...

உருப்படியான ஒரு யோசனை பாஸ்!
அலார்மை பாத்ரூம்ல வச்சுருங்க,(அதாவது எழுந்துதான் அணைக்கணூம்ன்ற மாதிரி தூரத்தில வையுங்க.)முயற்சி பண்ணிப் பாத்துட்டு வொர்க் அவுட் ஆச்சுன்னா சொல்லுங்க. எனக்குத் தேவைப்படுது.

Thamira said...

மொதல்ல எத்தனை மணிக்கு தூங்கினாலும் ஆறு மணிக்கு எழுந்த கிருஷ்ணாக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல.//

இந்த ஒரு வரியைத்தவிர பிளட்டுன்னா பிளட்டு சேம் பிளட்டு..! இந்த வரியும் ஏன்னா.. நான் எந்த காலத்திலேயுமே சீக்கிரம் எழுந்ததில்லை.. பெட்ரூம் சுவரில் பெரிதாக 'காலையில் சீக்கிரம் எழாதவன் உருப்பட்டதா சரித்திரமே இல்லை'ன்னு எழுதி வைத்தும் பார்த்தாச்சு.! காலையில் அதைப்பார்க்கும் போது இப்ப 'உருப்பட்டு' என்ன ஆவப்போகுதுன்னு நினைச்சுட்டு திரும்பவும் தூங்கிடுவேன்.

இந்தப்பதிவுடன் கொஞ்சம் தொடர்புடைய என் பதிவு..http://thamira-pulampalkal.blogspot.com/2008/10/blog-post_5615.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. திடீர்னு ஒருத்தர் ஆறு-ங்கறது ஆறரைக்கு வெச்சுக்கலாம்னாரு. அங்கதான் ஏழரை ஆரம்பிச்சது.//

பரிசல் டச் !!!!

நிஜமா நல்லவன் said...

காலைல எழுந்திரிக்க ஐடியா தானே....ரொம்ப சிம்பிள்...அண்ணி கிட்ட சொல்லி ஒரு குடம் பச்ச தண்ணி கொண்டு வந்து உங்க முகத்தில் ஊற்ற சொல்லுங்க....தூக்கம் காணாம போய்டும்....:)

நிஜமா நல்லவன் said...

/“எந்தப் பழக்கமும் பழகப் பழகப் பழகிவிடும். விடிகாலையில் எழுவதைத் தவிர”/


பரிசல் அண்ணே....எழுத்துபிழை இருக்கு....உங்க டைரில இப்படி இருந்திருக்கும்....


''எந்தப் பழக்கமும் பழகப் பழகப் பழகிவிடும். விடிகாலையில் எழுவதைத் தவிர்''

நிஜமா நல்லவன் said...

/‘காலைத்தென்றல் பாடிவரும்’ & ‘புத்தம் புதுக் காலை’ /


மிக அருமையான பாடல்கள்....!

பரிசல்காரன் said...

ச.முத்துவேல்

தூரமா வைக்கணும்னுதான் நான் சிஸ்டம் டேபிள்ல, ஹால்ல டி.விமேலன்னு வெச்சேன். காலைல அலாரம் ஆஃப் பண்ண நான் படற டென்ஷனைப் பார்த்து ’முடிஞ்சா எழுந்திருங்க. இப்படி தூரமா வெச்சு நீங்க படற டென்ஷனைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு’ன்னு உமா சொல்லீட்டதால அதும் பயனளிக்கல.

ரெண்டு, மூணு அலாரம்...

ம்ம்.. அதும் நடைமுறைல இருக்கு. என் வீட்ல இருக்கற மூணு செல்லுல + டி.வி.ல ப்ரோக்ராம் செட் பண்ணிட்டு படுத்தாலும், நோ இம்ப்ரூவ்மெண்ட்.

ஆனா ஆஸ்திரேலியால மேட்ச் நடந்து காலைல 5 மணிக்கு ஸ்டார்ட் ஆனா மட்டும் நோ அலாரம்.. பட்.. இம்மீடியட் வேக் அப்!

Sure said...

Pl Try as SK said. Keep your mindset as "I have to wake up early in the morning. Or Ask sister Uma to pour water on you by exactly 5.50 am daily

Anonymous said...

'காலையில் சீக்கிரம் எழாதவன் உருப்பட்டதா சரித்திரமே இல்லை'ன்னு எழுதி வைத்தும் பார்த்தாச்சு.! காலையில் அதைப்பார்க்கும் போது இப்ப 'உருப்பட்டு' என்ன ஆவப்போகுதுன்னு நினைச்சுட்டு திரும்பவும் தூங்கிடுவேன்.
:):)

அதிக சுகம் அதிகாலையில் எழுதல்...
அதைவிட சுகம் அப்படியே கிடத்தல்

பட்டாம்பூச்சி said...

//ஷட்டில்ல சிங்கிள்ஸ் ஆடலாம்.. ஆனா சிங்கிளா ஆட முடியாதில்ல.. //

அட அட அட ....என்ன தத்துவம் என்ன தத்துவம் புல்லரிக்குது போங்க .

பட்டாம்பூச்சி said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள் பரிசல் அண்ணே :)))

தமிழன்-கறுப்பி... said...

நம்பரை குடுங்க நான் ஒவ்வொரு நாளும் காலைலை கூப்பிடுறேன்...!

Anonymous said...

எனக்கும் இதே பிரச்சனை இருந்துதுங்க...

அப்படி கஷ்டப்பட்டுட்டு இருந்தப்பதான் என் நண்பன் என்னைப் பாத்து கேட்டான்,
அந்த அர்த்த ராத்திரில எந்திரிச்சு என்னத்தை சாதிக்கப் போறன்னு?

அதுக்கப்புறம் நான் அதுக்கு முயற்சி பண்றதில்லை!!!!

வால்பையன் said...

தூக்கம் அது பெரிய ஏக்கம் எனக்கு!
இன்சோம்னியா வந்த பிறகு தூக்கம் என்னுடன் கண்ணாம்மூச்சி விளையாடுகிறது.

Vijay said...

இதுக்கு நான் வச்சிருக்க வழி மூணு அலாரம். முதலாவது அலாரம் ரொம்ப மைல்ட். ஒரு புல்லாங்குழல் இசை. அதும் லேசான வால்யூம்ல ஆரம்பிச்சி கொஞ்ச கொஞ்சமா ஏறும். இதுல தூக்கம் லேசா கலஞ்சிடும். ஆனா தலைவலி எல்லாம் இருக்காது. ஆனா எழுந்துக்குவோம்ன்னு சொல்ல முடியாது. அடுத்தது லேசான பாடல் “காலை தென்றல்” ரேஞ்சில இருக்கற அலாரம். அதும் ஜஸ்ட் ரெண்டே நிமிஷ இடைவெளியில. இது தூக்கத்தை நல்லா கலச்சிடும். ஆனா படுக்கையை விட்டு எழுந்துக்க மாட்டோம் இன்னமும். இப்போதான் இருக்கு கிளைமாக்ஸ். ரெண்டாவது அலாரம் முடிஞ்சி எழுந்துட்டா சரி. இல்ல…….. நம்ப வில்லன் அலாரம் அடிக்கும்…அதும் அதுமேல இருக்க ரெண்டு ரெக்கை மாதிரி அமைப்பு பறந்து போயிடும். அத எடுத்து அதுல பிக்ஸ் பண்ணாதான் இனிமே அலாரம் நிக்கும். ஹா…ஹா…ஹா….அத செய்யறத்துக்குள்ள தூக்கம் பணால்தான். இனி தூங்க முடியாது. கொஞ்சம் டென்ஷனாகூட ஆகிடும். ஆனா அடுத்த ரெண்டே நிமிஷத்துல டிவி லைவ் ஆயிடும். அதும் “கௌசல்யா ராம பூர்வா, ஸந்த்யா பிரவர்த்ததே” அவ்ளோதான் டென்ஷன் குறைஞ்சி நாள் விடிஞ்சாச்சி. மேச்சிமம் நாளு வில்லன் அலாரம் அடிக்கறத்துக்கு முன்னமே எழுந்துடுவேன். யாரு ஓடி ஓடி ரெக்கை பொருக்கறது பின்ன…..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

சீரியஸ் ஐடியா..

இரவு உணவு கால் வயிறு சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள்.
மேலும் ஒன்பது மணிக்கு முன் உணவு அருந்தவும்.

பத்து மணிக்கு மேல் ஹோட்டலில் பன்னீர் பட்டர் மசாலா சப்பிட்டால் காலை பதினோரு மணிக்கு தான் முழிப்புவரும் :)

நமது சக்தி, ஜீரணத்திற்கு அதிகமாக செலவாகும் என்பதால் காலை எழுந்திருக்க சக்தி கிடைப்பதில்லை.

எனது ஐடியாவும் பலரது ஐடியாவும் உதவவில்லை என்றால் Mr.Been பார்க்கவும். அதில் அவர் சுலபமான வழி சொல்லுவார் :)

selventhiran said...

ரமேஷ் வைத்யாவின் யோசனை உடனடி பலன் கொடுக்க வல்லது. ஆனால் குடி தண்ணீராக இருக்க வேண்டும் :)

புருனோ Bruno said...

//early to bed early to rise இதுதான் எங்க வீட்டில் எழுதப்படாத சட்டம்.//

Animal studies suggest that being a morning person or an evening person may be built into our genes, like having red hair or blue eyes. This may explain why those of us who are early-to-bed, early-to-rise types, or late-to-bed, late-to-rise types, find it so hard to change our behavior.

மேலும் படிக்க http://www.nasw.org/users/llamberg/larkowl.htm

iniyavan said...

பரிசல்,

நான் 15 வருசமா கலை 5 மணிக்கு எழுந்து வாக்கிங் போயிட்டு, அப்புறம் யோகாவும் செய்யரேன். ஆனா, இரவு 10.30 தூங்கிடுவேன்.

முடியும்னு நினைச்சா, எல்லாமே முடியும்.

iniyavan said...

பரிசல்,

நான் 15 வருடமாக காலை 5 மணிக்கே எழுந்து வாக்கிங் போகிறேன், பிறகு 30 நிமிசம் யோகா செய்கிறேன். ஆனால், இரவு 10.30 க்கு தூங்கிவிடுவேன். எதுவுமே முடியும் என்றால், முடியும் நண்பரே.

குசும்பன் said...

//காலைல நேரத்துல எழுந்திருக்க ஏதாவது ஐடியா சொல்லுங்க.. ப்ளீஸ்.

உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!//

மூனு நாளைக்கு முன்னாடி செஞ்ச சிக்கன் பிரியாணியை நைட் மூக்க மூடிக்கிட்டு சாப்பிடுங்க, காலையில்
தானா அலராம் அடிச்சு எழுந்துவிடுவீங்க!

குசும்பன் said...

//ரமேஷ் வைத்யா said...
நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுக்கலாமே...//

எந்த தண்ணீ என்று தெளிவாக சொல்லவும்!