Friday, February 27, 2009

பெயரில் என்ன இருக்கிறது?


பெயரில் என்ன இருக்கிறது?

ஷேக்ஸ்பியர் தொடங்கி நீலபத்மநாபன் வரை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள். ஆமாம்.. பெயரில் என்ன இருக்கிறது...?

யோசித்துப் பார்த்தால் ஒன்றுமில்லைதான். ஆனால் ஒரு பெயரை வைக்க, நமக்குத் தெரிந்தவர்கள் ‘என் பையனுக்கு/பொண்ணுக்கு ஒரு நல்ல பேர் சொல்லுங்க சார்’ எனும்போது அப்படி நினைக்க முடிகிறதா?

நியூமராலஜி கந்தாயங்களை விடுங்கள். ‘நாம வைக்கற பேரு நல்லாயிருக்கணும், பெரிசானா சம்பந்தப்பட்டவங்க நம்மளைத் திட்டக்கூடாது’ என்று எப்படியெல்லாம் யோசிக்கிறோம்!

நான் என் முதல் மகளுக்குப் பெயர் வைக்க மிகவும் யோசித்தேன். யாரிடமாவது ‘ஐடியா சொல்லுங்க’ என்று கேட்டால் ‘மொத லெட்டர் என்ன?’ என்று கடுப்பேற்றினார்கள். அப்போது நான் வைரமுத்துவின் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருந்த நேரம். ‘சிகரங்களை நோக்கி’ படித்துக் கொண்டிருந்தேன். ‘ஓவியா’ என்ற அதில்வரும் கதாபாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு அந்தப் பெயரை வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

நண்பர் ஒருவரது கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் ‘மச்சான்’ என்றழைக்கும் எனது நண்பர் ஒருவர்தான் மீரா என்ற பெயரைச் சொல்ல.. உடனே மிகப் பிடித்துப்போய், சைக்கிளை அவசர அவசரமாக மிதித்து, நகராட்சி அலுவலகம்போய், அந்தப் பெயரை பர்த் சர்ட்டிஃபிகேட்டில் பதிவுசெய்து, பிறகுதான் உமாவிடமே அந்தப் பெயரைச் சொன்னேன்! இரண்டாவது மகளுக்குப் பெயர் வைக்கும்போது வழக்கமான எல்லாப் பெற்றோர்கள் போலவே (ரைமிங் முக்கியம்..!) மீராவுக்கு ரைமிங்காக மேகா என்று சட்டென்று வைத்துவிட்டோம்!

அதேபோல கதைகள் எழுத ஆரம்பித்தபோது என் சொந்தப் பெயரிலேதான் எழுதினேன். கவிதைக்கு வேறொரு புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது ‘சட்’டென்று அம்மா, அப்பா பெயர்களின் (அனந்தலட்சுமி-பாலசுப்ரமணியன்) முதல் பகுதிகளை இணைத்து ‘அனந்த்பாலா’ என்று வைத்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகப் பிடித்த ஒரு பெயர்.

அதேபோல எழுத்தாளர் சுஜாதா (இன்றைக்கு அவரை நினைக்காமல் இருக்க முடியுமா!) கணையாழியின் கடைசி பக்கங்களில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் எழுதி, அவரே சுஜாதா என்ற பெயரின் ஸ்ரீரங்கம் எஸ்.ஆரை வம்புக்கிழுத்ததெல்லாம் படித்து, நாமளும் ரெண்டு மூணு புனைப்பெயர் வெச்சுகிட்டா என்ன’ என்று நினைத்து ஒரு சில கதைகளை ‘சத்ரியன்’ என்ற பெயரில் அனுப்பினேன்!

இதைவிடக் கூத்து என்னவென்றால்... விவேக்-ரூபலா, பரத்-சுசீலா, நரேன்-வைஜயந்தி, போல நாளைக்கு நாம ஃபேமஸ் எழுத்தாளராகும்போது நம்ம டிடக்டீவ்க்கு என்ன பேர் வைக்க என்று விட்டத்தைப் பார்த்து யோசித்து, யோசித்து அஷோக்ராஜா என்ற பெயரையும் வைத்து ஒரு நாவல் ஐந்தாறு அத்தியாயங்கள் எழுதினேன். நல்லவேளை தமிழர்கள் தப்பித்தார்கள்!

வலைப்பதிவு ஆரம்பித்தபோது, இந்தக் குழப்பமெல்லாம் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். (நானெல்லாம் எப்படி வலைப்பதிவு ஆரம்பிச்சேன்னு இல்ல!) அதாவது ப்ளாக்கரின் உள்ளே புகுந்து அது பெயர் கேட்டபோது, அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் இந்த பரிசல்காரன் என்ற பெயரை நானாக செலக்ட் செய்து அடித்துவிட்டேன். (இந்தப் பெயர்க்காரணம் கேட்பவர்களுக்கு.. இதோ இந்தப் பதிவில் பதிலிருக்கிறது!) மிகவும் யோசித்து செய்யும் எதையும் விடவும், டக்கென்று வந்துவிழுகிற சில, நல்லவண்ணம் க்ளிக் ஆகும் என்பதற்கு இந்தப் பெயரே உதாரணம்.

சென்றவாரம் கிழக்கு பதிப்பக முதன்மை உதவி ஆசிரியர்களில் ஒருவரும், பதிவருமான ச.நா.கண்ணன் திருமணத்துக்குப் போக முடிவெடுத்து காலை ஆறரை மணிக்கு நண்பர் வெயிலானின் அலுவலக வாசலில் பைக்கை நிறுத்த.. அங்கிருந்த வாட்ச்மேன் பெரியவர் “யாருங்க நீங்க?” என்றார். “இல்லீங்க வெயிலான் சாருக்காக வெய்ட் பண்றேன்” எனக்கூற அவருக்குப் புரியவில்லை. எனக்கு அவசரத்தில் வெயிலானின் நிஜப்பெயரே ஞாபகத்துக்கு வரவில்லை. யோசித்து ‘உங்க மேனேஜர் ரமேஷ்’ என்றபோதும் அவர் யோசனையாகவே தலையசைத்தார். பிறகு வெயிலானிடம் இதுபற்றிச் சொன்னபோது ‘ஸ்ரீகாந்த்னு சொன்னாத்தான் தெரியும்” என்றார்.

திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் பொருளாளரான ஈரவெங்காயம் சாமிநாதன் பெயரை எனது அலைபேசியில் ஈரவெங்காயம் என்று சேமித்து வைத்திருந்து, அவர் அழைப்பு வரும்போதெல்லாம் ஒரு புன்னகையோடுதான் எடுக்கிறேன். (ஈரவெங்காயம் காலிங்...) நேற்று சந்தித்தபோது தன் வலைப்பெயரை மாற்றப் போவதாகச் சொன்னார். மாற்றாதீர்கள்.. நாங்கள் உங்கள் பெயரைச் சுருக்கி.. ஈ.வெ.சா (ஈர வெங்காயம் சாமிநாதன்!) என்று கூப்பிடுக் கொண்டிருக்கிறோம்.. அது நல்லாயிருக்கு!

வடகரை வேலன் அண்ணாச்சியை அழைத்து ‘வேலனா.. நாங்க ஐ.சி.ஐ.சி.ஐ-லேர்ந்து பேசறோம்’ என்று நாமக்கல் சிபி கலாய்த்தபோது அவர் சொன்னாராம்.. ‘என்னை வேலன்னு பதிவர்களைத் தவிர யாரும் கூப்பிடமாட்டாங்க.. ஏன்னா என் பேரு ராஜேந்திரன்’ என்றாராம். (அடுத்ததாக கலாய்க்கறவங்க நோட் பண்ணிக்கங்கப்பா!) அதைவிடவும் நாங்களெல்லாம் ‘அண்ணாச்சி... அண்ணாச்சி’ என்றழைப்பதில்தான் அவர் இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும். அவரது ஜிமெயில் ப்ரொஃபைலில் அவரே மாற்றிவிட்டாரே... அண்ணாச்சி என்று!

ஈரோட்டுத் தொழிலதிபர் நந்து... ‘நிலா ஃபாதர்தானே நீங்க’ என்று பலரும் கேட்கும்போதெல்லாம் எத்தனை அகமகிழ்வார் என்பதை ஒரு மகளின் தந்தையாய் என்னாலும் உணரமுடிகிறது.

நான் மிகவும் மதிக்கும் பதிவர்களில் ஒருவரான எழுத்தாளர் பைத்தியக்காரனை அழைத்து நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தேன்.. ‘எப்படி இப்படியொரு பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்க நினைத்தேன். அல்லது ‘எப்படி எல்லாருக்கும் பொதுவானவொரு பெயரை நீங்கள் மட்டும் வைக்கலாம்’ என்றும் கேட்டிருக்கவேண்டும்! அவர் என்னோடு நெருங்கிய நண்பராய்ப் பேசிக் கொண்டிருந்ததில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கவே நேரம் சரியாய் இருந்தது. ‘நான் சாதாரணமானவன்தாங்க பரிசல்.. நேர்ல பார்த்தா தோள்ல கைபோட்டு பேசுவேன்’ என்றார். என் தோளில் விழுவது உங்கள் கைக்கு சாதாரணமாக இருக்கலாம். என் தோளுக்கு எவ்வளவு பெரிய விஷயமது!

ச.நா.கண்ணன் திருமணத்தில் எழுத்தாளர்கள் பா.ராகவன், மருதன், முத்துக்குமார் ஆகியோரைச் சந்தித்து கிருஷ்ணகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்ததாக ‘பரிசல்காரன்’ என்று சொன்னபோது ‘ஓ! அது நீங்கதானா’ என்று அவர்கள் சொன்னபோதும், குலுக்கிய கையை இன்னும் அழுத்தமாய்ப் பிடித்தபோதும் மிக மகிழ்வாய் இருந்தது.

பெயரில் என்னவோ இருக்கிறது!

40 comments:

பாலராஜன்கீதா said...

ரோஜாப்பூவை எந்தப் பெயரில் வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கொள்ளுங்கள்
:-)

ஜீவா said...

நிச்சயமாக பெயரில் ஒரு மந்திரம் உள்ளதோ ,, நண்பர் பரிசல் என் வலைப்பக்கத்திற்கும் கொஞ்சம் வாருங்களேன்

Cable சங்கர் said...

நிச்சயமா பரிசல் பெயரில் என்னவோ இருக்கிறது தான்

கேபிள் சங்கர்

Ramesh said...

What does பரிசல்காரன் mean in your way? (Dont give me the பரிசல் owner type answer) :))

கோவி.கண்ணன் said...

நல்ல பதிவு !

இநத பெயர் பிரச்சனையில் நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்

பரிசல்காரன் said...

@ Ramesh

பதிவில் ஒரிடத்தில் லிங்க் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. அங்கே இருக்கு காரணம்!

anujanya said...

வழக்கம் போல சுவாரஸ்யம். கலக்கல் கே.கே. (இந்தப் பெயரும் உங்களுக்குத் தான்).

அனுஜன்யா

கார்க்கிபவா said...

:)

நாமக்கல் சிபி said...

//கிருஷ்ணகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்ததாக ‘பரிசல்காரன்’ என்று சொன்னபோது ‘ஓ! அது நீங்கதானா’ என்று அவர்கள் சொன்னபோதும், குலுக்கிய கையை இன்னும் அழுத்தமாய்ப் பிடித்தபோதும் மிக மகிழ்வாய் இருந்தது.

பெயரில் என்னவோ இருக்கிறது!//

ஆமாங்க! பெயரில் எழுத்துக்கள் இருக்கின்றன!

:)

ஸ்வாமி ஓம்கார் said...

:)
ஜின்ஜினகாலஜி ஒரு காரணமா இருக்குமோ?

narsim said...

//ஆகியோரைச் சந்தித்து கிருஷ்ணகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்ததாக ‘பரிசல்காரன்’ என்று சொன்னபோது ‘ஓ! அது நீங்கதானா’ என்று அவர்கள் சொன்னபோதும், குலுக்கிய கையை இன்னும் அழுத்தமாய்ப் பிடித்தபோதும் மிக மகிழ்வாய் இருந்தது.//

“நல்லாச்சொல்லி இருக்கீங்க தல”

சென்ஷி said...

//பாலராஜன்கீதா said...
ரோஜாப்பூவை எந்தப் பெயரில் வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கொள்ளுங்கள்
:-)
//

ரிப்பீட்டே :-)

ப்ரியா கதிரவன் said...

ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு.
கண்ணன் திருமணத்தை குறிப்பிட்டு இருப்பதை படித்ததில் மகிழ்ந்தேன்.

//அதேபோல எழுத்தாளர் சுஜாதா (இன்றைக்கு அவரை நினைக்காமல் இருக்க முடியுமா!)//
ம்ம்
:-(

அகநாழிகை said...

'பரிசல்' மிகவும் அருமையான பதிவு.
புனை பெயர் என்பதே நம் பெயர் மீதான அடையாளத்தை விட்டு புதிய oru பெயரின் மூலம் நம்மை அடையாளப்படுத்தி கொள்வதுதான். ஒவ்வொரு பெயருக்கும் கண்டிப்பாக காரணம் இருக்கும்.. அது அசல் பெயராக இருந்தாலும், புனை பெயராக இருந்தாலும்... ஒன்பதாவது படிக்கும் போது வாசுதேவன் என்று இன்னொருவர் இருந்ததால் என் அப்பாவின் பெயரான பொன்னுசாமி என்பதில் உள்ள பொன். என்பதை இணைத்து 'பொன்.வாசுதேவன்' என்ற பெயரில் எழுதி வந்தேன். கணையாழியில் வெளியான என் முதல் கவிதை 'மொழி' அந்த பெயரில் வந்தது.பிறகு இன்று வரை அதே பெயர்தான் நிரந்தரமாகிவிட்டது. பிறகு பத்திரிகை துவங்க எண்ணி அதற்கான பெயர்தான் 'அகநாழிகை' (தாயின் கருவில் இருக்கும் குழந்தை பிரசவிப்பதற்கு முன்பான இறுதி நாட்களை குறிக்கும் சொல்) அதை எனது அனைத்து நிகழ்சிகளையும் நடத்த அமைப்பின் பெயராக முதலில் வைத்துகொண்டேன். பின்னர் அந்த பெயரே வலைப்பக்கத்துக்கும் என்றாகிவிட்டது.
புனை பெயர் வைத்திருக்கும் அனைவருமே தங்கள் பெயர் காரணத்தை விளக்கி ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

Mahesh said...

அவ்வ்வ்வ்... அப்ப என் பேரைக் கேட்டா ஜஸ்ட் முறைச்சுட்டுப் போயிடுவாங்களா? இல்ல முதுகுல டின் கட்டுவாங்களா?

புருனோ Bruno said...

இதே தலைப்பில் நானும் ஒரு இடுகை எழுதியுள்ளேன்

* 06. கல்லூரி வாழ்க்கை - பெயரில் என்ன இருக்கு

☼ வெயிலான் said...

// எழுத்தாளர்கள் பா.ராகவன், மருதன், முத்துக்குமார் //

முத்துக்குமார் அல்ல. முத்துராமன் என்பதே சரி.

ஷண்முகப்ரியன் said...

'நியூமராலஜி கந்தாயங்களை விடுங்கள்.'
கந்தாயம்ங்கறீங்களே..நம்ம கோயமுத்தூர்க்காரங்களைத் தவிர மத்த நண்பர்களுக்குப் புரியுமா,பரிசல்?

நாமக்கல் சிபி said...

//கந்தாயம்ங்கறீங்களே..நம்ம கோயமுத்தூர்க்காரங்களைத் தவிர மத்த நண்பர்களுக்குப் புரியுமா,பரிசல்?//

ஏன் புரியாமா,

"தூங்குற மணியக்காரரை எழுப்பினா பழைய கந்தாயம் என்னாச்சுன்னாராம்" என்று ஒரு சொலவடை உண்டே!

Vaandu said...

Tirupur la aaru than illa.... 'Parisalkaran' neengalavathu irukeengala nu santhosa pattukuroam...
Anyway, nice post Parisal...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பெயரில் என்ன இருக்கிறது?
அல்லது
பெயரில் என்னதான் இல்லை?
இப்படியாக, இப்படியாக...

Ramesh said...

`பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.

அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!

Prabhu said...

பெயரில் ஒரு மந்திரம் இரு(ஈர்)க்கவே செய்கிறது...

வால்பையன் said...

//இல்லீங்க வெயிலான் சாருக்காக வெய்ட் பண்றேன்//

//உங்க மேனேஜர் ரமேஷ்’ என்றபோதும் //

//‘ஸ்ரீகாந்த்னு சொன்னாத்தான் தெரியும்” என்றார்.//

திருப்பூர்வாசிகளுக்கே தாவூ தீருதுன்னா, நாங்கெல்லாம் திருப்பூர் வந்தா என்னா ஆகும்

வால்பையன் said...

என்னை கூட வால்பையன்னு கூப்பிட்டா தான் குஜாலா இருக்கு!

Mahesh said...

வாழ்த்துகள் பரிசல் !! உங்கள் இரண்டு பதிவுகள் தமிழ்மணம் விருதுகளில் !!

எல்லா சிகரங்களையும் தொட வாழ்த்துகள் !!

பாண்டியன் புதல்வி said...

பரிசல்,
நீங்க blog ஆரம்பிச்சப்ப இருந்து உங்கள பின் தொடர்கிறேன். பின்னூட்டம் இட்டது இல்லை. உங்க பெயர் காரணம் பதிவு வந்த பிறகு உங்க மேல மதிப்புக் கூடிப் போச்சு. அதில் இருந்து தினம் உங்க பதிவைப் படிக்காமல் இருந்ததில்லை. இப்போ நீங்க பிரபலம் ஆகி வருவது எனக்கு ஆச்சரியம் இல்லை. ஏனா, உங்க எழுத்து நடை பக்கத்து வீட்டு நண்பன்கிட்ட பேசுறதுப்போல இருக்கும். முந்தைய பதிவில் formal-ல ஆரம்பிச்சிங்க பாருங்க, என்னாடா இது பரிசல் பிரபலம் ஆனவுடன் style'ல மாத்திட்டாரானு நினைக்கும் போதே normalக்கு வந்தீங்கப் பாருங்க...அது தான் உங்க பலம். அப்புறம் பிற மனிதர் பால் நீங்க காட்டும் அக்கறை...அது எப்படி எனக்கு தெரியுமாவா? அக்கறை இல்லனா ஆழ்ந்து கவனித்து ஒவ்வோருத்தரைப் பற்றியும் எழுத முடியாதில்லையா? உங்க நட்பு கிடைக்கப் பெற்றவங்க நிச்சயம் கலகலப்பானவங்களா இருப்பாங்க.....என்னையும் ஆட்டத்தில சேர்த்தீப்பீங்களா?
(அப்பா இவ்ளோப் பெரிய பின்னூட்டமிடுது இது தான் முதல் தடவை).

selventhiran said...

திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் பொருளாளரான ஈரவெங்காயம் சாமிநாதன் // ஹா... ஹா... பரிசல் அண்ணே, ரசித்துச் சிரித்தேன் ('ச்' உண்டுமா?!)

உண்மைத்தமிழன் said...

பெயரில் என்ன இருக்கு..?! கொஞ்சம் ஈர்ப்பு இருக்கும் முதலில்..!

"கந்தாயம்" என்றால் என்ன..?

அருஞ்சொற்பொருள் விளக்கவும்..

சிவக்குமரன் said...

////திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் பொருளாளரான ஈரவெங்காயம் சாமிநாதன் // உண்மை..உண்மை..உண்மை..
//"கந்தாயம்" என்றால் என்ன..?//

அருஞ்சொற்பொருள் விளக்கவும்..?

Raju said...

\\நான் மிகவும் மதிக்கும் பதிவர்களில் ஒருவரான எழுத்தாளர் பைத்தியக்காரனை அழைத்து நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தேன்.. ‘எப்படி இப்படியொரு பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்க நினைத்தேன். அல்லது ‘எப்படி எல்லாருக்கும் பொதுவானவொரு பெயரை நீங்கள் மட்டும் வைக்கலாம்’ என்றும் கேட்டிருக்கவேண்டும்!\\

ரசித்தேன்...

ரமேஷ் வைத்யா said...

பெயரில் என்னென்னவோ இருக்கிறது. ஒரு மலையாள நாவலின் முதல் வாக்கியம்:

வாசுதேவனின் மகன் முகம்மது குட்டி 'அப்பா' என்று அழைத்தபடியே ஓடிவந்தான்.

raasu said...

மிகவும் நல்ல பதிவு பரிசல் சார்..


நம்மில் பலருக்கு பொதுவாக பல பெயர்கள் இருக்கும்.

சிறு வயதில் செல்லப்பெயர்
பள்ளியில் ஊர் கூடி சூட்டிய பெயர்
பால்யத்தில் பட்டப்பெயர்
படைப்பாளிக்கு புனைப்பெயர்
அலுவலகத்தில் முதற்பெயர் (இனிஷியல்)
அடையாளத்திற்கு காரணப்பெயர்..

இன்னும் பல பெயர்கள்..

என்னைப் பொறுத்தவரை நம்முடைய
ஒவ்வொரு பெயரும்
ஒவ்வொரு பரிணாமம்

அந்தந்த பெயர் சொல்லி நம்மை
அழைக்கும்போது
நாம் அந்தந்த சூழலுக்கு மாறி விடுவோம்.

ஒரு நபருக்கு, என்னுடைய அனைத்து பெயர்களும்
தெரியுமா என்றால், சந்தேகமே.

என் நண்பர்களுக்கு தெரியாது..காரணம் ஒவ்வொரு
வட்டத்திலும் வேறு வேறு பெயர்..

அதேபோல் வீட்டிலும் யாருக்கும் தெரியாது..

மொத்தத்தில்
ஒரு பெயரில் அழைத்தால்
அது செவியில் நுழைந்து
மூளையில் ஆயிரத்தை எழுப்புகிறது

(மொக்கை ஓவரோ ? )

பரிசல்காரன் said...

@ ரமேஷ் வைத்யா
//
வாசுதேவனின் மகன் முகம்மது குட்டி 'அப்பா' என்று அழைத்தபடியே ஓடிவந்தான்.//

இப்படி வந்திருக்கணுமோ..

முகம்மது குட்டி ‘அப்பா’ என்றழைத்தபடியே ஓடிவந்தான் வாசுதேவனை நோக்கி...

@ raasu

ஆமாங்க!!! :-)))

தமிழன்-கறுப்பி... said...

பரிசல் இந்தப்பதிவக்கு ஒரு பின்னூட்டம் எழுதி கிட்டத்தட்ட பதினொரு முறை முயற்சித்தும் போட முடியாமல் சதி செய்து விட்டது இணைய இணைப்பு.

அதை இப்ப சொல்லிக்கறேன்...

எனக்குள்ளும் பெயர்கள் சம்பந்தமாய் ஒரு விசயம் நெடு நாட்களாய் இருக்கிறது அனால் அது வலையேறுவதற்கான தருணம் இன்னமும் வரவில்லை போல அதுதான் இன்னமும் வெளியில் வராமலிருக்கிறது...

இமைசோரான் said...

பரிசல், நாள் பூரா உக்காந்து பயங்கரமா யோசித்து, இன்னைக்குத்தான் ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன்.....பரிசல். பெயரில் என்னமோ இல்ல, எல்லாமே இருக்கிறது என்பது என் எண்ணம்.

ச.முத்துவேல் said...

தமிழ்த் திரையுலகில் உங்களுக்கு மூர்த்தி,சிங்காரம், செல்வராஜ்,விஜயா..இவர்களைத் தெரியுமா?
வெண்ணிற ஆடை மூர்த்தி, கல்லாப்பொட்டி சிங்காரம்,
இடிச்சபுளி செலவராஜ்,
கே.ஆர்.விஜயா...
பெயரில் என்னவோஇருக்கிறது.
சுந்தர்ஜி ! அழகா ஒரு கவிதை,விக்கிரமாதித்யன் பாணியில.

வெண்பூ said...

கண்டிப்பா எதுவோ இருக்கு பரிசல்.. பாருங்களேன், பதிவர்கள்கிட்ட பேசும்போது பெரும்பாலும் அவங்க புனைப்பெயர்லதான் அழைக்கிறேன், பலபேரோட நிஜப்பெயரே தெரியாது.. என்னவோ இருக்குதான்..

Thamira said...

பெயரில் என்னவோ இருக்கிறது!// அப்பிடீங்கிறீங்க.. அவ்வ்வ்.. என் பெயர் கூடிய விரைவில் பீஸ் ஆகிவிடுமோன்னு பயமாயிருக்குது..

மங்களூர் சிவா said...

கண்டிப்பாக பெயரில் ஒரு தனித்துவம் இருக்கிறது.