Thursday, February 26, 2009

ப்ளாக்கராக ஆய பயனென் கொல்….

அது அந்த ஊரின் மிகப் பெரியதொரு க்ளப். உறுப்பினர்களும், பெரிய பணக்காரர்களுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த க்ளப்பில் கேரம் போட்டி நடைபெற்று முடிந்ததை நானறிந்தேன். கேரம் விளையாட்டில் எனக்கிருக்கும் ஆர்வம் காரணமாகவும், சில பல விதிமுறைகளை அறியும் பொருட்டும் அந்த ஊரின் கேரம் க்ளப் செகரெட்டரி யாரெனவும், அவரது எண்ணை அறியவும் அங்கே சென்றேன்.

ரொம்ப ஃபார்மலா இருக்குல்ல எழுத்து.. சரி.. விடுங்க.. ஃபார்மல்லேர்ந்து, நார்மலுக்கு வரேன்.

உள்ள போய் நேரா இருக்கற நாற்காலில இருந்த ஒருத்தர்கிட்ட “இங்க கேரம் டோர்னமெண்ட் நடந்ததுன்னு கேள்விப்பட்டேன். எனக்கு..”

“யாருப்பா அது? என்ன வேணும்?” – நான் தொடருமுன் வலது பக்கத்திலிருந்து ஒரு குரல். தடித்த குரல்.

திரும்பிப் பார்த்தேன். பெரிய மேஜையும், சுழல் நாற்காலியுமாய் இருந்த வெள்ளைச் சட்டை மனிதனொருவர் என்னை அழைக்க... “அவர்தான் மேனேஜர். அவர்கிட்ட கேளுங்க” என்றார் முதலாமவர்.

சரின்னு அவர்கிட்ட போனேன்.

“சார். எங்க கம்பெனில கேரம் டோர்னமெண்ட் வைக்கலாம்னு இருக்கோம். அதுக்கு சில ரூல்ஸ் பத்தின விளக்கம் தேவைப்படுது. உங்க க்ளப்ல கேரம் டோர்னமெண்ட் நடந்ததுல்ல? இந்த ஊர் கேரம் க்ளப் ப்ரசிடெண்ட், செகரெட்டரி நம்பர் எதாவது..”

“மொதல்ல உன் பேரென்னன்னு சொல்லுப்பா”

“கிருஷ்ணகுமார்ங்க”

“கிருஷ்ணகுமார்னா? என்னமோ பில்கிளிண்டன் மாதிரி சொல்ற? எங்கிருந்து வர்ற தம்பி?”

“என் பேர் கே.பி.கிருஷ்ணகுமார்ங்க” இந்த முறை இனிஷியலோடு சொன்னேன். “எங்க கம்பெனி பேரு.. “ தொடருமுன் அவரே இடை மறித்தார்...

“கே.பி.கிருஷ்ணகுமாரா? இருங்க ஒரு நிமிஷம்” என்றவர் மேஜைப் பேப்பர்களை அலசி அந்த வார இதழை எடுத்தார். குமுதம். அதன் அட்டைப் படத்தைப் பார்த்ததுமே நான் நிமிர்ந்தேன்

“நீங்க வலைப்பூ எதாவது எழுதறீங்களா?” என்றவர் அந்தக் குமுதத்தை புரட்டினார்.

“ஆமாங்க. நீங்க தேடறது என்னைப் பத்தித்தான்” என்று குமுதத்தில் அந்தப் பக்கத்தை அவருக்கு எடுத்துக் கொடுத்தேன். டாப் டென் வலைப்பூக்கள் என்று என் வலைப்பூ 6வதாக எழுதப் பட்டிருந்தது அதில். அதில் திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமாரின் வலைப்பூ என்று ஸ்பெசிபிக்காக குறிப்பிட்டிருந்ததே அவரது கவனத்தைக் கவர்வதற்குக் காரணம்.

அதற்குப் பிறகு அவர் எனக்குத் தனி நாற்காலி கொணரச் செய்ததும், நானும் அவரும் பேசிக் கொண்ட விஷயங்களும் இந்தப் பதிவிற்கு அநாவசியம்!

***********************

அடிக்கடி என் பதிவில் எங்கள் எம்.டி, எங்கள் எம்.டி என்று குறிப்பிடும் எங்கள் எம்.டி.க்கு (மேடம்) நானொரு ப்ளாக்கர் என்பது தெரியாது.

கடந்த வாரத்தில் ஒருநாள் எங்கள் அலுவலகத்திற்கு எங்கள் எம்.டி-யின் நண்பர் ஒருவரிடம் எங்கள் மேடம் “நான் கடவுள் பார்த்தாச்சா?” என்று கேட்க.. அவர் உடனே சொன்னார்...

“இன்னும் பார்க்கல. ஆனா கிருஷ்ணா எழுதின ரிவ்யூ படிச்சதுமே உடனே பார்க்கணும்னு தோணிச்சு. அருமையா எழுதியிருந்தார்” என்றார்.. என்னை அருகிலேயே வைத்துக் கொண்டு.

உடனே எம்.டி.. “கிருஷ்ணா எழுதின ரிவ்யூவா? என்ன சொல்றீங்க?” என்று கேட்க நான் வலைப்பதிவு எழுதுவதை ஏற்கனவே அறிந்திருந்த அவரும் “என்ன மேடம் உங்களுக்குத் தெரியாதா? அவரு ஃபேமஸ் ப்ளாக்கர்” என்று என் பிரஸ்தாபங்களை எடுத்து விட... “என்னப்பா எப்பவுமே என்கூடவே இருக்க. சொல்லவேல்ல? எங்க உன் பேஜை ஓப்பன் பண்ணிக் காமி” என்றார்.

காண்பித்தேன். தமிழ் படிக்கத் தெரியாததால் “என்னப்பா இங்லீஷ்ல இல்லியே.. நானெப்படிப் படிக்க?” என்றார். மிகவும் சந்தோஷப்பட்டார். அலுவலகத்தில் இருந்த சீனியர்கள் சிலரிடம் பகிர்ந்துகொண்டார்.

பிறகு தனியாக என்னை அழைத்தார்.

“என்னோட பழைய லேப்டாப் ஒண்ணு இருக்கு. நாளைக்கு கொண்டுவரேன். அத வெச்சுக்க. எங்கியாவது போகும்போது ஒனக்கு ஈஸியா இருக்கும்ல?” என்றார். அதே மாதிரி கொண்டுவந்து கொடுத்தார். இதோ.. அதில்தான் அடித்துக் கொண்டிருக்கிறேன் இந்தப் பதிவை!

*********************

டிஸ்கி: எனக்குக் கிடைத்திருக்கும் எண்ணிலடங்கா நண்பர்களுக்கு முன் மேலே குறிப்பிட்ட இரண்டுமே மிக மிகச் சாதாரணப் பயன்கள்தான்..!

50 comments:

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள்:)

Vidhya Chandrasekaran said...

ஹையா மீ த பர்ஸ்ட்:)

Vidhya Chandrasekaran said...

கேரம் போட்டி நடத்தினீங்களா இல்லையா? அப்படியே விதிமுறைகளை ஒரு பதிவாஅ போட்டா நல்லாருக்குமே:)

சின்னப் பையன் said...

முதல்தடவையா முதல் பத்து கமெண்டுக்குள்ளே நானும்...

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள்!!!

குசும்பன் said...

உங்க நண்பர்தான் என்று சொல்லி அப்படியே எனக்கும் ஒரு லேப் டாப் அண்ணே!!!

(இங்கே ஆபிஸில் பிளாக்கர் என்று தெரிஞ்சா? கொடுத்து இருக்கும் லேப்டாப்பையும் புடுங்கிடுவானுங்க:)))

Cable சங்கர் said...

இதே போன்றதொரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. ரெண்டு மாசத்துக்கு முன் ஒரு தயாரிப்பாளரை சந்திக்க போயிருந்த போது, கதையை கேட்டுவிட்டு நிறைய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ப்ளாக்குகளை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது நான் இப்போது ப்ளாக் எழுதுபவர்களை பத்திரிக்கையுலகம் கவனிக்கிறது. என்றேன். அதற்கு அவர்.. லக்கிலுக், அதிஷா, ஜ்யோவரம்சுந்தர், கேபிள்சங்கர், வினவு, பரிசல் போன்றவர்களை பற்றி பேசினார். அவர் ரெகுலராய் இவர்களது பதிவை படிப்பதாய் சொன்னார். நான் தான் கேபிள் சஙக்ர் என்றதும் அவர் அடைந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை, அவர் சொன்ன ப்ளாகர்களையெல்லாம் பார்த்திருக்கிறீர்களா? பேசியிருக்கிறீர்களா? என்றெல்லாம் குதூகலித்தார். என்னுடய் கதைகள் அத்தனையும் ஒன்றுவிடாமல் சொன்னார். கதை கேட்டு பிடித்தது என்று சொன்னவர், கண்டிப்பாய் விரைவில் அடுத்த கட்ட படம் விஷயமாய் பேசும் என்றிருக்கிறார்.

பரிசல்காரன் said...

//லக்கிலுக், அதிஷா, ஜ்யோவரம்சுந்தர், கேபிள்சங்கர், வினவு, பரிசல் போன்றவர்களை பற்றி பேசினார்.//

அட்ரஸ் ப்ளீஸ்!

//கதை கேட்டு பிடித்தது என்று சொன்னவர், கண்டிப்பாய் விரைவில் அடுத்த கட்ட படம் விஷயமாய் பேசும் என்றிருக்கிறார்.//

ஐ! அட்ரா சக்கை!! வாழ்த்துகள் சங்கர்!

கார்க்கிபவா said...

இன்னொரு அவியலான்னு பார்த்தேன். இது வேற போலிருக்கு

சீமாச்சு.. said...

பரிசல்,
நல்லா எழுதறீங்க. உங்களை அவசியம் சந்திக்கணும். அநேகமாக ஜூலை மாசம் இந்தியா வருவேன். கோவை ட்ரிப் நிச்சயம் இருக்கும். அப்போ சந்திக்க முயற்சிக்கிறேன்..

உங்கள் அவியல் ரொம்ப ரசிச்சிப் படிப்பேன். கடைசியில் வரும் கவிதையை கவனமாக கவனிப்பேன்.

இதமாகத்தான் கை குலுக்கினான்
ஆனாலும் வலித்தது
காதலியின் கண்வன்

நீங்கள் அறிமுகப்படுத்திய ஹைக்கூதான். இன்னும் மறக்க முடியலை

கிரி said...

//எனக்குக் கிடைத்திருக்கும் எண்ணிலடங்கா நண்பர்களுக்கு முன் மேலே குறிப்பிட்ட இரண்டுமே மிக மிகச் சாதாரணப் பயன்கள்தான்..!//

கே கே இப்படி சொல்லி அப்புறம் லேப்டாப்பை பிடிங்கிட போறாங்க ஹி ஹி ஹி

சும்மா டமாசு :-))))

கோவி.கண்ணன் said...

பிரபலம் ஆகிவருகிறீர்கள் ! வாழ்த்துகள் !

எம்.எம்.அப்துல்லா said...

//காண்பித்தேன். தமிழ் படிக்கத் தெரியாததால் “என்னப்பா இங்லீஷ்ல இல்லியே.. நானெப்படிப் படிக்க?” என்றார். மிகவும் சந்தோஷப்பட்டார்//

எப்படி சந்தோஷப்பட்டார்....நல்லவேளை தமிழ் தெரியலன்னா?

:))))

தமிழ் said...

அப்புறம் பார்க்கிறது சிரமம் என்பதால்
இப்பொழுதே
வாழ்த்துகள் சொல்லிக் கொள்கின்றேனுங்க

:))))))))))))))))

ஸ்வாமி ஓம்கார் said...

எனக்கும் பிரபலமான பரிசலை தெரியும் என சொல்லுவதில் பெருமையடைகிறேன்.

திரு கேபிள் சங்கர் போல என்னிடமும் சிலர் சொன்னார்கள்.

அனைத்து பிர”பல” பிளாகர்களுக்கு
வாழ்த்துக்கள்.

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் பரிசல்...

நீங்க இன்னும் பெரிய லெவல்ல வருவீங்க :)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்.

☼ வெயிலான் said...

பரிசல்,

நீங்கள் ப்ளாக் எழுதுற விசயம் கம்பெனியெல்லாம் தெரிஞ்சு, எல்லோரும் ப்ளாக்கை படித்து கொண்டிருப்பதால், இணைய இணைப்பை துண்டிக்கப்பட்டு விட்டதாக கேள்விப்பட்டேன்.

உண்மையா?

அப்புறம் இன்னொரு விசயம் மறந்திட்டீங்கனு நினைக்கிறேன் - பூங்கா சாலை சம்பவம்.

மேவி... said...

congrats dude

Mahesh said...

பரிசல்காரன் கூடிய சீக்கிரமே விமானக்காரனாக வாழ்த்துகள் !!

ஷாஜி said...

வாழ்த்துக்கள்:)
வாழ்த்துக்கள்:)
வாழ்த்துக்கள்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

Mahesh said...

//எங்கிருந்து வர்ற தம்பி?//

நீங்க யூத்துதான்... ஒத்துகிடறோம்... :))

www.narsim.in said...

அப்துல்லாண்ணே கமெண்ட்ட மட்டும் பப்ளிஸ் ஆகாதமாதிரி யாராவது ஒரு சாஃப்ட்வேர் ரெடி பண்ணுங்கப்பா.. மனுசன் கொல குத்து குத்துறாரு..

பரிசல்.. தலைப்பு கலக்கல்..

SurveySan said...

//ப்ளாக்கராக ஆய பயனென் கொல்…."//

எல்லாரும் தொடர் வண்டி ஓட்ட அருமையான தலைப்பு.
ஸ்டார்ட் மீஜிக், கூடிய விரைவில் ;)

அமுதா said...

வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

பரிசல்! நல்ல எம்டியா இருக்காங்க! இங்க நாங்க பிளாக்கர்ன்னு தெரிஞ்சா குசும்பன் சொல்வது போல லேப்டாப்பை பிடுங்கினா கூட பரவாயில்லை. வேலையை புடுங்கிடுவானுங்க. இப்ப தெரியுதா எத்தனை சிரமப்பட்டு தமிழை அடுத்த கட்டத்துக்கு தள்ளிகிட்டு போறோம்ன்னு:-))

வாழ்த்துக்கள்!

அத்திரி said...

வாழ்த்துக்கள் பரிசல்

வால்பையன் said...

பிரபலமாயிட்டாலே இது தான் பெரிய தொல்லை இல்லையா பரிசல்!

Truth said...

பரிசல்,
கலக்கிட்டீங்க, வாழ்த்துக்கள்

pudugaithendral said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//அடிக்கடி என் பதிவில் எங்கள் எம்.டி, எங்கள் எம்.டி என்று குறிப்பிடும் எங்கள் எம்.டி.க்கு (மேடம்) நானொரு ப்ளாக்கர் என்பது தெரியாது.//

அது சரி!


வாழ்த்துகள் திரு கிருஷ்ணா!

பட்டாம்பூச்சி said...

கலக்கலுங்க பரிசலாரே..!!! பதிவு நல்லா இருக்கு.
உங்க MD இவ்வ்வ்வளவு நல்லவங்களா இருக்காங்களே??!!???குடுத்து வச்சவருங்க நீங்க.

@கேபிள் சங்கர்: வாழ்த்துக்கள் நணபரே!!!!!

சரவணகுமரன் said...

ரொம்ப சந்தோசமா இருக்கு...

பாலராஜன்கீதா said...

//என்னோட பழைய லேப்டாப் ஒண்ணு இருக்கு. நாளைக்கு கொண்டுவரேன். அத வெச்சுக்க. எங்கியாவது போகும்போது ஒனக்கு ஈஸியா இருக்கும்ல?” என்றார். அதே மாதிரி கொண்டுவந்து கொடுத்தார்//
அலுவலகப்பணிகள் வீட்டுப்பணிகளாக மாற்றம் அடையுமா ?
:-)))

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்:)

நந்து f/o நிலா said...

கூடிய சீக்கிரம் நான் சொன்ன போன் கால் வந்துடும் போல தெரியுதே கிருஷ்ணா?

Admin said...

வாழ்த்துக்கள்!!! :-)
http://vetticorp.blogspot.com/

Truth said...

//நந்து f/o நிலா said...
கூடிய சீக்கிரம் நான் சொன்ன போன் கால் வந்துடும் போல தெரியுதே கிருஷ்ணா?

அது என்ன போன் கால்ன்னு சொல்லுங்களேன். :-)

Deepa said...

வாழ்த்துக்க‌ள்!

பரிசல்காரன் said...

@ ட்ரூத்

இப்படியே போனா ஒருநாளைக்கு கலைஞர் உங்களுக்கு ஃபோன் பண்ணுவாரு போல’ன்னு ரொம்ப நாள் முன்னாடி சொன்னார் நந்து. (எங்க ரெண்டு நாள் முன்னாடி பதிவப் பார்த்து அது நடந்துடும்னு நெனைச்சேன்!!!)

Vijayashankar said...

//முன் மேலே குறிப்பிட்ட இரண்டுமே மிக மிகச் சாதாரணப் பயன்கள்தான்..!//

ha ha

வாழ்த்துகள் திரு கிருஷ்ணா!

ILA (a) இளா said...

நண்பா! அலுவலகத்துல இந்த மாதிரி சலுகை கிடைக்கிறது ஆச்சர்யம், குடுத்து வெச்சிருக்கீங்க. ஆனா என்ன மாதிரி ஆன்சைட் அனாதைகளுக்கு பதிவுலக நண்பர்கள்தான் உறவு/நட்பு/பந்தம் எல்லாமே. இங்கே தமிழ்ங்கிற ஒரு ஆயுதம் பெரிசு.

பரிசல்காரன் said...

//என்ன மாதிரி ஆன்சைட் அனாதைகளுக்கு//

:-(((((((

நாங்க இருக்கோமே இளா? எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுத்தற வார்த்தைப் பிரயோகம்....

Prabhu said...

என் மாதிரி புது பதிவர்கள புல்லரிக்க வைக்குது உங்க மேட்டர். பதிவுகள் எழுதுன லேப்டாப் இலவசமா? நல்லா இருக்கே!!!! உங்க முதலாளி 'அம்மா' முதல்வரை விட நல்லா இலவசம் தருவாங்க போலயே!!

Prabhu said...

கேபிள் சங்கர்...... கலக்குறீங்களே... புது படமா.... ஆவலா இருக்கேன்....

Prabhu said...

பரிசல்காரன் அவர்களே,நான் உங்களது அனுமதி இன்றி உங்களது 'பின்நவீனத்துவ பித்தனானேன்' ல் இருந்து ஓரிரு வரிகளை பயன்படுத்தி உள்ளேன். அதை அறிவிப்பது எனது கடமை என்பதால் அறிவிக்கிறேன்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள், உங்களுக்கு அலுவலகத்திலே மடிக்கனணி கொடுக்காங்க, என் வீட்டுல மடிகனணியை ஒளிச்சி வச்சிடுறாங்க

Sure said...

Congrats.Ini nirya Yathirparkkalam

Thamira said...

மீ த 50.!

நீங்க சொல்றதெல்லாம் ஒங்கள மாதிரி பேமஸானவுங்களுக்கு மட்டும்தான்.. நானெல்லாம். பிளாக் எழுதுறேன், எழுதுறேன்னு திரும்ப திரும்ப சொன்னாலும் அதுக்கென்ன இப்போங்கிற மாதிரி பார்க்குறாய்ங்க..