Tuesday, February 24, 2009

டுபாக்கூர் நியூஸ் பேப்பர்: என் ஆட்சியில் ஆஸ்கார் – கலைஞர் கடிதம்

சென்னை: 24 பிப்ரவரி 2009
 
ஏ.ஆர். ரகுமான் நேற்று ஆஸ்கார் விருது வாங்கியது அறிந்ததே. அவர் இரண்டு ஆஸ்கார் வாங்கியதும் அறிந்ததே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் அறிந்ததே. இரண்டு ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர் என்பதும் அறிந்ததே. அவர் ஒரு தமிழர் என்பதும் அறிந்ததே. அதற்கு நமது முதல்வர் கலைஞர் பொருணாநிதி அவர்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவார் என்பது மட்டும் அறியாததே. மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கு அவரச அவரசமாக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு:
 
“சில ஆண்டுகளுக்கு முன்… அம்மையாரின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருந்த காலமது.  கடற்கரையில் அமர்ந்தவாறு அம்மையாரின் அராஜக அரசியலை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ ஒரு மகிழ்வுந்தில் இருந்து வந்த ஒரு பாடல் என்னையும், பேராசியரையும் ஊக்கமளித்து, உற்சாகமூட்டியது. தம்பி இரசினிகாந்து நடித்த திரைப்படம் ஒன்றில் இடம்பெற்ற அந்தப் பாடலை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் புல்லரிக்கும். மருத்துவமனையில் மருத்துவர்கள் உடல் புல்லரிப்பது உங்களுக்கு நல்லதல்ல என்று சொல்லிவிட்டதால் அந்தப் பாடலை நினைக்க மாட்டேன் என்று எள்ளி நகையாடுகிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். என் தமிழனின் பாடலை நினைத்து புல்லரித்தாலும், பாடலைப் பாடி பல் வலித்தாலும் என் தமிழனுக்காக அதை பொறுத்துக் கொள்வேன் என்பதை இந்த நாடறியும்.
 
அந்தக் கடற்கரை நிகழ்வில் அந்தப் பாடல் எந்தப் படமென்று பேராசிரியரிடம் விசாரித்தேன். அவர் ரத்தக் கண்ணீருக்குப் பிறகு தமிழ்ப்படங்கள் பார்க்கவில்லையாதலால் வேறு வழியின்றி மதுரை தந்த சொத்து, மக்களின் முத்து பழகிரியிடம் அந்தப் பாடலின் இசையமைப்பாளர் யாரென்று விசாரிக்கக் கூறினேன். ஏழு ஆட்டோக்களில் ஆட்களை சென்னை அனுப்பி, மூன்று பஸ்களைக் கொளுத்தி, அந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்று கண்டறிந்து சொன்னார். அப்போதே பழகிரியிடம் சொன்னேன். ‘இந்தத் தம்பி தமிழகத்துக்கு ஒரு நாள் ஆஸ்கார் வாங்கித்தருவானடா’ என்று. அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை என்பதை நீ மறந்துவிடக்கூடாது உடன்பிறப்பே.
 
இதோ.. இன்றைக்கு தமிழகம் முழுவதும் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த பொன்னான ஆட்சியிலே, மருத்துவமனையில் அமர்ந்தவாறும், படுத்தவாறும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த கடினமான தருணத்திலும், கடிதம் எழுதாதீர்கள் என்று மருத்துவர்கள் கட்டளையிட்ட போதும் அதையெல்லாம் புறந்தள்ளி ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைக்காவிட்டால் தமிழகத்தில் என்ன நடக்கும் என்பதையும், என் உடன்பிறப்புகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட ஒருபோதும் தயங்கமாட்டார்கள் என்பதையும் விளக்கி ஒராக் பொபாமாவுக்கு ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினேன். அதைப் படித்த பொபாமா உடனே என்னை தொடர்பு கொண்டு ஆவன செய்வதாக அறிவித்ததை சில தீய சக்திகள் இருட்டடிப்புச் செய்ததை நீ அறியமாட்டாய்.
 
உடன்பிறப்பே.. ரகுமான் ஆஸ்கார்க் வாங்க அவர் பாடிய பாட்டை விடவும், நான் பட்டபாடு என்னவென்பதை யாரறியாவிடினும் நீ அறியமாட்டாய் என்பதை நான் அறிவேன். ஆகவேதான் இந்த அவசரக் கடிதத்தை உனக்கு எழுத நேர்ந்தது. உடனே இளைஞர் பாசறை சார்பாகவும், கழக உடன்பிறப்புகள் சார்பாகவும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பல்வேறு விழா எடுத்து ‘ஏண்டா ஆஸ்கார் வாங்கினோம்’ என்று அவரை நினைக்கவைக்க.. இன்றே உறுதியெடு. இல்லையேல் உயிரைவிடு’
 
-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
 
ஆஸ்கார் வாங்கியது என்னால்.. முதல்வர் பதவி விலகட்டும் – பயலலிதா அறிக்கை

கொ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெ.பயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

’ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது குடும்ப சொத்தை மேலும் பெருக்கவும் அவர் செய்யும் நாடகங்களில் ஒன்றாக ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைக்க தான்தான் காரணம் என்று குள்ளநரித்தனமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பொருணாநிதி.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், சட்டசபையிலும் எனது கொ.தி.மு.க  உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எனது உத்தரவின் பேரில் பங்கேற்று பாதியில் திரும்பி வந்த கழக உறுப்பினர்கள் சொன்ன தகவலின் படி, அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் காற்றில் பறக்க விட்டு. ஏ.ஆர்.ரகுமானுக்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுத்ததை விடுத்து ஏதேதோ பிதற்றியிருக்கிறார் பொருணாநிதி.

 
காவல்துறை முதல்வரின் ஏவல்துறையானதும், சட்ட வல்லுனர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என்று பலரும் இந்த மைனாரிட்டி அரசின் முதல்வராக உள்ள பொருணாநிதியின் ஆட்சியில் வன்முறை வெறியாட்டம் போடுவதையும், ஆஸ்கார் நேரடி ஒளிபரப்பின் நடுநடுவே சேனல் மாற்றி மாற்றி  மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.
 

ரத்தத்தின் ரத்தங்களே… ஏ.ஆர்.ரகுமான் 1992ல்தான் தனது முதல் படத்துக்கு இசையமைத்தார் என்பதையும், அப்போதைய நிரந்தர முதல்வர் உங்கள் அன்புச் சகோதரி, பொனமனச் செல்வி, புரட்சித் தலைவியாகிய நான்தான் என்பதையும் நீங்கள் மறந்துவிட்டாலும் மக்களுக்கு எடுத்துச் சொல்வது உங்கள் கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. அங்ஙனம் மறந்துவிட்டால் இந்த குள்ளநரிக் கூட்டமும், அவர் தூண்டிவிடுகிற காவல்துறையும் மக்களிடம் தவறான தகவலைச் சொல்லி ஏமாற்றும் என்பதை பலமுறை இந்தத் தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அப்போது இயக்குனர்  பாலச்சந்தர்  என்னிடம் எட்டுமுறை அப்பாய்ண்மெண்ட் வாங்கி, ஒம்பதாவது முறை என்னைச் சந்தித்து தானொரு படம் தயாரிக்க விரும்புவதாகவும், அதற்கு மணிரத்னத்தை இயக்குனராக்க விரும்புவதாகவும் அறிவித்தார். பலத்த யோசனைக்குப் பிறகு அதை ஒத்துக் கொண்டேன் நான். தமிழக அரசு அவரது திரைப்படத்திற்கு ஆவன செய்யும் என்றும் உறுதி அளித்தேன். மணிரத்னமும் ஒன்பது முறை என்னைச் சந்திக்க முயற்சித்து, ஒன்பதாவது முறையே என்னைச் சந்தித்து அந்தப் படத்திற்கு ரோஜா என்று பெயரிட விரும்புவதாகக் கூறினார். உடனே செல்வமணியைத் தொடர்பு கொண்டு அவரை சமாதானப் படுத்தி, அந்தப் பெயர் வைக்க அனுமதி அளித்தேன். கூட்டணி தர்மத்தை மீறக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நேரு குடும்பத்திலிருந்தும் அனுமதி வாங்கிக் கொடுத்தவள் உங்கள் சகோதரி, பொன்மனச் செல்வி, புரட்சித் தலைவி என்பதை இங்கே நினைவூட்டுகிறேன்.

அந்தச் சந்திப்பின்போதுதான் புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப் போவதாக மணிரத்னம் அவர்கள் என்னை அனுமதி கேட்டார். தமிழக நலனுக்காக அதை அனுமதிக்கும் வேளையில், அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பொருணாநிதி சட்டத்தை மதிக்காமல் அதற்கு எவ்வளவு இடையூறு செய்தார் என்பதை செலக்டீவ் அம்னீஷியா வந்தவர் போல தனக்குச் சாதகமாக மறந்துவிட்டார்.

கட்டுப்பாடின்றி காட்டுதர்பார் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்க இந்த மைனாரிட்டி தி.மு.க அரசு தயாரா என்பதைக் கேட்கும் இந்த வேளையிலே ஏ.ஆர்.ரகுமானின் வெற்றிக்கு அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துச் சொல்ல நானும் என் கழகக் கண்மணிகளும் மறக்கவில்லை என்பதை தமிழக மக்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.’ –

இவ்வாறு அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

37 comments:

நையாண்டி நைனா said...

இந்த பேப்பர்க்கு ஆண்டு சந்தா எவ்வளவு?

நையாண்டி நைனா said...

ஹை... ஹை நான்தான் பஸ்டு, நான்தான் பஸ்டு...

கார்க்கிபவா said...

ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..

முரளிகண்ணன் said...

அருமை

குசும்பன் said...

சூப்பரு:)))

இந்த பதிவை எழுதியவரை கண்டுபிடிக்க 70வது ஆட்டோ வருகிறதாம்:)))

அபி அப்பா said...

எனக்கு இந்த பதிவு பிடிக்க வில்லை!

Anonymous said...

பரிசல்,

நீங்க லேட்டு. ஆஸ்கருக்கு காங்கிரஸ்தான் காரணம்னு ஏற்கனவே அறிக்கை வந்தாச்சு. இங்க பாருங்க.

SUBBU said...

சூப்பரு:)))

இந்த பதிவை எழுதியவரை கண்டுபிடிக்க 9வது ஆட்டோ வருகிறதாம்:)))

Bleachingpowder said...

//வடகரை வேலன் said...
பரிசல்,

நீங்க லேட்டு. ஆஸ்கருக்கு காங்கிரஸ்தான் காரணம்னு ஏற்கனவே அறிக்கை வந்தாச்சு. இங்க பாருங்க.
//

ஆமாங்க அவங்க ஐம்பது வருசத்துக்கே மேலா நாட்டை ஆண்டதுனால தானே அந்த சேரிகளும், பிச்சைகாரர்கள் வாழ்க்கையும் அப்படியே இருக்கு. அதை வைத்து தானே டேனி தத்ருபாமாக slumdog படத்தை எடுத்தார். அதனால காங்கிரஸ் சொன்னது சரிதான். எல்லா புகழும் காங்கிரஸுக்கே

Indian said...

//ரகுமான் ஆஸ்-கார்க் வாங்க அவர் பாடிய பாட்டை //

Intentional?

Unknown said...

எப்பிடியோ “ தல தப்பிச்சது தம்புரான் புண்ணியம்னு” இங்கன ஒரு பழமொழி உண்டு.
கொஞ்ச நாளைக்கு இ தமிழர்., தமிழக தமிழர்., அப்பாலிக்கா பொலீஸ் தமிழர் & வக்கீல் தமிழர் , உடன் பிறப்பு தமிழர்.,மரம் வெட்டி நட்ட தமிழர், எதிரணிக்கு தாவிய சிகப்பு தமிழர்., மத்திய ஆலமரக்கிளை கா தமிழர்.,காலில் விழுந்து கிடக்கும் தமிழர்.,எல்லா தீவிரவாதிகளையும் துவம்சம் செய்த தமிழர்., மதுர எரி தமிழர் என்று எல்லா தமிழர் தலைவலிகளிலிருந்தும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா...(கொஞ்ச நாளைக்குத்தான்)

விமல் said...

தலைப்பில் இருக்கும் டுபாக்கூர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டால்..இந்த அறிக்கை உண்மையாக பத்திரிக்கைகளில் வந்தாலும் ஆச்சர்யப் படுவதிற்க்கில்லை..:-)

CA Venkatesh Krishnan said...

எனக்கு இந்த பதிவு பிடிக்க வில்லை!

வால்பையன் said...

ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு!

பரிசல்காரன் said...

@ அபி அப்பா & இளைய பல்லவன்

ஏன்?

@ வடகரை வேலன்

எப்படீண்ணா இவ்ளோ இன்ஃபர்மேடீவா இருக்கீங்க?

Cable சங்கர் said...

//உடன்பிறப்பே.. ரகுமான் ஆஸ்கார்க் வாங்க அவர் பாடிய பாட்டை விடவும், நான் பட்டபாடு என்னவென்பதை யாரறியாவிடினும் நீ அறியமாட்டாய் என்பதை நான் அறிவேன். ஆகவேதான் இந்த அவசரக் கடிதத்தை உனக்கு எழுத நேர்ந்தது. உடனே இளைஞர் பாசறை சார்பாகவும், கழக உடன்பிறப்புகள் சார்பாகவும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பல்வேறு விழா எடுத்து ‘ஏண்டா ஆஸ்கார் வாங்கினோம்’ என்று அவரை நினைக்கவைக்க.. இன்றே உறுதியெடு. இல்லையேல் உயிரைவிடு’//

சூப்பர்.. சூப்பர்.. பரிசல்..

அ.மு.செய்யது said...

வெகுவாக ரசித்தேன்...

நல்ல ஃப்ளோங்க...

ரெண்டு மூணுதபா படிச்சாலும் சலிக்கவே மாட்டேங்குது.


ஆமா..இந்த விசயம் அவருக்கு தெரியுமா ??

Unknown said...

அண்ணே... பாத்துனே கலைஞர் ஆட்சில தேசிய பாதுகாப்பு சட்டம் இருக்கு. அடோல்ப் அம்மையார் ஆட்சில "பொடா இருக்கு.
அடோல்ப் அம்மையார் ஆட்சில வைகோ பட்ட பாடு தெரியாத உங்களுக்கு ...
இப்ப சோனியா ஆட்சில சீமான் படுறது நினைவில்லையா ....

காவல் துறை வேறா சொல்லறதை எல்லாம் செய்யும் , ட்ரைனிங் எடுத்த அல்சய்சன் மாதிரி திரியுது ....

வழக்கறினர்கள், நீதிபதிகளே அடி வாங்குறாங்க.

( அடிச்சிட்டு அரவணைப்பார் கலைஞர் .. அது வேற ஆனா அடி விழும் முதல்ல ...

மதுரை தேசத்து ராஜா ஞாபகம் வருதா இல்லையா ... தலை தப்பாது பாத்து ...

தா . கிருஷ்ணன் ஞாபகம் இருக்க உங்களுக்கு ...

சாட்சி இருக்காது , கேஸ் இருக்காது .... இன்சூரன்ஸ் பண்ணிடிங்கள இல்லையா

கணினி தேசம் said...

கலக்கல் !

அரசியல்வாதிகளின் அறிக்கைகள் நிறைய படிப்பீங்களோ?

பரிசல்காரன் said...

என்னப்பா எல்லாரும் இப்படி பயமுறுத்தறீங்க....

Unknown said...

அட போங்கப்பா..
உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?

கோவி.கண்ணன் said...

//இதோ.. இன்றைக்கு தமிழகம் முழுவதும் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த பொன்னான ஆட்சியிலே, மருத்துவமனையில் அமர்ந்தவாறும்,//

பாலாறும் தேனாறும் ஓடினால் ஈ, கொசு தொல்லை தாங்கமுடியாது, அதனால் தான் அவர் மருத்துவ மனையில் ஓய்வெடுக்கிறார் போலும்

cheena (சீனா) said...

இருவரின் அறிக்கையுமே அருமை அருமை. நல்வாழ்த்துகள் பரிசல்

M.Rishan Shareef said...

ஹா ஹா ஹா
மிகவும் அருமை :D

ILA (a) இளா said...

வீட்டுக்கு ஆட்டோ இல்லே லாரியே வரும். கலைஞரும், ஜெ.ஜெயலலிதாவும் இந்தப் பதிவ படிக்கிற மாதிரி இருந்தா எழுதுவீங்களா?

Sampath said...

பரிசல்,
உங்களோட இந்த போஸ்ட் யூத் விகடன்ல வந்திருக்கு .. கங்கிராட்ஸ் ...
http://youthful.vikatan.com/youth/index.asp

Saminathan said...

ஹலோ ப்ரதர்,

இப்போ தான் எனக்கு போன் வந்தது...
உங்க அட்ரஸ் கேட்டாங்க..
கொடுத்திட்டேன்...

லாரி வந்துச்சா..???

( சாரி...உங்க பதிவை லேட்டாதான் பார்த்தேன்..)

லோயர் said...

நல்ல எழுதிரீங்கன்னே ... பார்த்து.. உங்க போருனாநிதி ஏதாவது பானிட [போறார்

ஆ.ஞானசேகரன் said...

ஏதுக்கும் அக்கம் பக்கம் பார்த்து போங்க சார்...

CA Venkatesh Krishnan said...

"இந்தப் பதிவு அபியப்பாவுக்கும் இளையபல்லவனுக்கும் ஏன் பிடிக்கவில்லை"ன்னு ஒரு பதிவு போடுங்க. அதுல வந்து பதில் சொல்றேன்.

(அபி அப்பா என்ன சொல்றார்னு பாக்கலாம்)

பலசரக்கு said...

என்ன கொடுமை பரிசல்காரன் இது?!!!

Truth said...

ஹ ஹ ஹ

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஐயகோ!
கண்கள் பனிக்கின்றன!!
தமிழர்களின் வாழ்வுதனை இச்சூது கவ்வும்,
எப்போதும் இச்சூதே வெல்லும்,
மக்களுக்கு அம்மேயும், ஐயாவும் போடும் நாமம் வாழ்க!
ஜெய் கிந்த்!

அத்திரி said...

முடிஞ்ச வரைக்கும் பிரிச்சி மேஞ்சிட்டீங்க.......... வூட்டுக்கு ஆட்டோ வராம பாத்துக்குங்க....

பட்டாம்பூச்சி said...

தைரியம் கொஞ்சம் ஜாஸ்தியாங்ணா உங்களுக்கு?
:))

R.Gopi said...

சர்த்தான் வுடுப்பா, ஏதோ, கொஞ்ச நாளா தல பொயப்பு ஏதோ ஓடுது. அத்தையும் கெடுத்துடுவ போல கீதே.

அவரே உளியின் ஓசைக்கு ஏதாவது அவார்ட் கெடைக்குமான்னு பாக்கறாரு.....

Thamira said...

இப்படியொரு விஷயத்தை எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து.. ரசிக்கமுடியவில்லை.. ஸாரி பரிசல்!