Wednesday, February 11, 2009

காதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில டிப்ஸ்!


கலாச்சாரத்தைக் காப்பாத்த சில அமைப்புகள் ஜரூரா கெளம்பீட்டாங்கப்பா. காதலர் தினத்தன்னிக்கு ஜோடியா சுத்தற காதலர்களுக்கு இவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்.

முருகன்-வள்ளி ஆரம்பிச்சு பல இந்துக் கடவுள்களும், இலக்கிய இதிகாசங்களும் கொண்டாடின காதல் இவங்களுக்கு இப்படி வெளையாட்டாப் போச்சு. பாவம் அவங்களே பயந்து பயந்து காதலிச்சிட்டிருக்காங்க... உங்க வீரத்தை அவங்ககிட்டயா காட்டணும்? இதுக்கு பதிலா பொது இடத்துல சிகரெட் பிடிக்கறவங்க, குப்பை போடறவங்க இவங்களைப் பாத்தா தண்டிப்போம்னு கெளம்பினாக் கூட ஒரு அர்த்தம் இருக்கு!

கர்நாடகாவில் ராமசேனா அமைப்பு அறிவித்ததும், கோவையிலும் சில இந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று தனிமையில் ஜோடியாக சுற்றும் (அதெப்படிடா தனிமைல, ஜோடியா சுத்த முடியும்ன்னு கேட்கப் படாது!) காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போகிறார்களாம்.

சரி... இவங்களை எப்படி சமாளிக்க?

***********

வீட்டில் சம்மதமும் வாங்கி எளிமையாக திருமணம் நடக்க வேண்டும்.. அதே சமயம் ஊரில் எல்லாருக்கும் தெரியப்படுத்தவும் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அமைப்பினர் சுற்றும் இடங்களுக்கு ஜோடி ஜோடியாகப் போய் நின்று கொண்டு, தங்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் 25, 30 பேரை அங்கங்கே ஒளிந்திருக்கச் சொல்லலாம். அமைப்பினர் வந்து திருமணத்தை நடாத்தி (இப்படித்தான் சொல்லணும்க!) கொடுத்ததும் எல்லாரும் ஓடி வந்து கைகுலுக்கிப் பாராட்டி பரிசளித்துவிட்டுப் போகச் செய்யலாம்! அவங்க மூஞ்சில ஈ ஆடாது!

*********************

இந்த அமைப்பினரின் வீட்டில் இருக்கும், காதலித்து அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர், இளைஞிகள் அன்றைக்கு தைரியமாக ஜோடியாகச் சுற்றலாம். அப்ரூவல் வித் இம்மீடியட் ஆக்‌ஷன்!

************************

அறுபதாம், எண்பதாம் கல்யாண நாள் கொண்டாடும் ஜோடிகள் இவர்களுக்கு முன் நின்று கொண்டு கல்யாணம் நடத்தி வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாம். நாங்களும் ஜோடிகள் தானே என்று

*********************************

வெறும் மஞ்சச் சரடு தாலியைக் குடுத்தா கட்ட மாட்டேன். ஒரு கிராம் தங்கமாவது இருக்கணும்னு ரகளை பண்ணணும் பையன். அப்படி, ஒரு கிராமோட குடுத்தா, கட்டீட்டு அதே மாதிரி ஊர்ல ஒரு எட்டு இடத்துல போய் ஒரு பவுனைத் தேத்திடுங்க.. அப்படியே பக்கத்து ஊருக்குப் போயி.. அங்க ஒரு எட்டு எடம்.... அப்படியே...

*********************

பொண்ணு பார்த்து ரிஜக்ட் ஆன பசங்களுக்கும், பசங்க வேணாம்னு சொன்ன பொண்ணுங்களுக்கும் இது பம்பர் சான்ஸ். ஓரளவு உங்களுக்கு ஏத்த மாதிரி பொண்ணு/பையன்கிட்ட அவங்க வர்ற நேரம் பார்த்து டபக்ன்னு போய் ஒக்கார்ந்துக்கோங்க. மத்தத அவங்க பார்த்துப்பாங்க!

*************************


ஜோடியா உட்கார்ந்து பேசிகிட்டிருக்கணும். அவங்க பக்கம் வந்ததும் கடுமையா ஜோடிகளுக்குள்ள சண்டை போட்டுக்கணும். மறுபடி அவங்க குழம்பி அந்தப் பக்கம் போனப்பறம் பேசணும்.. இப்படியே கடுப்படிக்கணும்...

*************************************

ஜோடியா இருக்கறப்போ வந்து தாலி கட்டுன்னு சொன்னா “மாங்கல்ய தாரண மந்திரத்தை யாரு ஓதுவாங்க?’ ன்னு கேட்டு முழுசா எல்லா மந்திரத்தையும் சொல்லச் சொல்லணும். சொல்லலீன்னா விடாம சொல்லு சொல்லுன்னு ராவடி பண்ணனும்.

**************************

என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க..) இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து "ஹை! அப்பா அம்மா கல்யாணத்தப் பார்த்துட்டேனே"ன்னு கைதட்டி குதிச்சு கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையையும் தீர்த்த மாதிரி ஆச்சு!

****************************

உங்க ஐடியாக்களையும் பின்னூட்டத்துல போட்டுத் தாக்குங்க..

52 comments:

Cable Sankar said...

//என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க..) இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து "ஹை! அப்பா அம்மா கல்யாணத்தப் பார்த்துட்டேனே"ன்னு கைதட்டி குதிச்சு கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையையும் தீர்த்த மாதிரி ஆச்சு!//

இந்த ஐடியா சூப்பர் பரிசல்.

நட்புடன் ஜமால் said...

ஆஹா டிப்ஸா

Sathia said...

இங்க பாருங்க அவருக்கு பிங்க ஜட்டி அனுப்பப்போறாங்களாம் அன்னிக்கு. பதிலுக்கு அவர் புடவை கொடுக்கறேன்னு இருக்காரு. நமக்கு நல்லா பொழுது போவது :-))

வெண்பூ said...

செம நக்கல் பரிசல்.. கடைசி ஐடியா சூப்பரோ சூப்பர்...

முரளிகண்ணன் said...

கலக்கல் டிப்ஸ்

கோவி.கண்ணன் said...

:)

அப்படி இப்படி இருந்தோம்...எங்களுக்கு ஏற்கனவே தனித்தனியாக திருமணம் ஆகிவிட்டது...இப்ப இவங்க ஒரு தடவை கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க....எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுங்கன்னு எதாவது (கள்ள) ஜோடி கலாச்சார காவலர்கள் மீது கேஸ் போடப் போகுது !

Bleachingpowder said...

//இதுக்கு பதிலா பொது இடத்துல சிகரெட் பிடிக்கறவங்க, குப்பை போடறவங்க இவங்களைப் பாத்தா தண்டிப்போம்னு கெளம்பினாக் கூட ஒரு அர்த்தம் இருக்கு! //

வாவ் இது சூப்பர் ஐடியா... பெரிய விசியத்தை அப்படியே போகிற போக்கில் ரொம்ப சாதாரணமா சொல்லிட்டீங்க.

அதிஷா said...

மிக நல்ல பதிவு நண்பரே..

அதிலும் கடைசி ஐடியா அருமை..

தராசு said...

அங்கேயே "மேரேஜ் சர்டிபிகேட்" குடுக்கச் சொல்லி அழிச்சாட்டியம் பண்ண வேண்டும்.

தாலி கட்டியவுடன், "அண்ணே, ராமர் சேனை அண்ணே, எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே" னு கால்ல வுழுந்துட்டு, மொய்பணம் குடுக்காம விடமாட்டேன்னு தொந்தரவு செய்யணும்.

மங்களூர் சிவா said...

:))

பாபு said...

ராமர் சேனை இன்று செய்யும் இந்த செயல்கள எல்லாம் நமது காவல் துறையினரால் காலம் காலமாக செய்யபடுவதுதானே.
காதலர்களை பொது இடத்தில் இருந்து விரட்டுவதும்,அவர்கள் வீட்டு தொலைபேசி எண்களை வாங்கி அவர்களுக்கு போன் செய்து சொல்வதும்,இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவலர்கள் மிகவும் அநாகரீகமான முறையில் ,இதுபோன்ற ஜோடிகளிடம் நடந்து கொள்வதை நானே நேரில் சில முறை பார்த்திருக்கிறேன்.
பெண் காவலர்கள் இதுபோன்று பூங்காவுக்கு வரும் ஜோடிகளை அடித்து விரட்டுவதை ஒரு முறை தொலைகாட்சியில் கூட காண்பித்தார்கள்.

புருனோ Bruno said...

ஹா ஹா ஹா

ரங்கன் said...

அம்புட்டு டிப்ஸும் அருமை....

கடைசி டிப் கொடுமையான அருமை...

K.S.Nagarajan said...

கலக்கல் தல...

மணிகண்டன் said...

நல்ல மிளகாய் பொடி வச்சிக்கிட்டு லவ் பண்ண வேண்டியது தான். வந்தா கண்ணுல கொட்டிட்டு ஓடிடனும். (ஆனா சண்டை வராம லவ் பண்ணனும்..இல்லாட்டி விளைவுகள் விபரீதம்.)

அனுஜன்யா said...

1. இரண்டு ஆண்கள் 'தனியே ஒன்றாக' அமர்ந்துகொண்டு, இவர்கள் எதிரில் மோதிரம் போட்டுக்கொள்ள வேண்டும். கலாசாரக் காவலர்கள் 'இந்தக் கல்யாணமும்' செய்து வைப்பார்களா என்று பார்க்கலாம்.

2. காதலர்கள் அருகில் இவர்கள் வந்தவுடன் என்னைபோன்றவர்கள் எழுதும் நொந்துபோன காதல் கவிதைகளை உச்சஸ்தாயில் பாட வேண்டும்.

3. கடைசி நிமிடத்தில் பெண் 'எனக்கு உங்களைத்தான் பிடிச்சிருக்கு; திருமணம் பண்ணிக்கலாமா' என்று கலாசார ஆசாமிகளில் ஒருவரைக் கேட்க வேண்டும் (கூடிய வரையில் இளைஞரைப் பார்த்து கேட்க வேண்டும்; சற்று வயதானவர் என்றால் 'சரி' என்று சொல்லும் அபாயமும் இருக்கிறது :) )

4. அவர்கள் அருகில் வந்ததும், ஆண் போர்வையைக் களைந்து, (கோமண, விபூதி உடல் இத்யாதிகளுடன்) திடீரென்று சிராசனம் செய்ய வேண்டும். 'அகோரி' என்று அஞ்சி ஓடி விடுவார்கள்.

அனுஜன்யா

Truth said...
This comment has been removed by the author.
Truth said...

ஐடியா சொல்ற அளவுக்கு தெரில, ஆனா இப்போ உங்கள பாத்தா, கொஞ்சம் ஓவர் விவகாரமான ஆளு மாதிரி தெரியுது. :-)

சரி, இந்த வெட்டி சேனாக்கள் காதலர் தினத்தன்று மட்டும் தான் இந்த மாதிரியான சலுகைகள அள்ளித் தருவாங்களா இல்ல, எல்லா நாளுமா? எல்லா நாளும் இருந்தா நல்லாயிருக்குமே. இத எப்படி அவங்க கிட்ட சொல்றது? feed back பாக்ஸ் எங்கயாச்சும் இருக்கா?

அசோசியேட் said...

""""அவர்கள் அருகில் வந்ததும், ஆண் போர்வையைக் களைந்து, (கோமண, விபூதி உடல் இத்யாதிகளுடன்) திடீரென்று சிராசனம் செய்ய வேண்டும். 'அகோரி' என்று அஞ்சி ஓடி விடுவார்கள். """" ?????அட இது நல்ல ஐடியாவா இருக்கே !

மாதவராஜ் said...

ரசித்து ரசித்து படித்தேன்.
சீரியஸான் விஷயத்தை, இப்படியும் பார்க்கலாமோ?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) நல்லா இருக்கு எல்லா ஐடியாவும்..
ஆனா ரிஜக்ட் ஆனவங்களுக்கு குடுத்த ஐடியா மட்டும் கொஞ்சம் திகிலா இருக்கு.. :)

வித்யா said...

கடைசி ஐடியா ROTFL வகை.
இதெல்லாம் தனி மனித விருப்பு வெறுப்பு என்பதை இந்த பாழாய் போன அமைப்புகள் எப்போது புரிந்துகொள்ளப்போகின்றனவோ.

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))

Anonymous said...

பரிசல் இன்னும் ரெண்டு மூனு வருசம் ஆச்சுன்னா, இது அப்படியே டெவெலப் ஆகி, திருமணம், சீர் செனத்தி, நகை நட்டு, இருக்க வீடு, பாத்திரம் என ஆச்சுன்னா நல்லா இருக்கும்.

செலவு இல்லாம என்னோட 25வது வருடத் திருமணத்த நடத்திக்கிடலாம்னு ஒரு நப்பாசை. ஹி ஹி.

ஸ்ரீமதி said...

:))))))))))))

SK said...

:) :) பாக்கலாம் யார் ஜெயிக்கிறான்னு :) :)

அண்ணே, நலமா.

சரவணகுமரன் said...

:-))

SurveySan said...

:)
nammaladhu inge
http://surveysan.blogspot.com/2009/02/valentines-day.html

சொல்லரசன் said...

//காதலர் தினத்தன்னிக்கு ஜோடியா சுத்தற காதலர்களுக்கு இவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்.//

அன்றைக்கு துடுப்பை எடுத்துட்டு கொங்குநகர் பக்கம் வந்தராதிங்கோ

வல்லிசிம்ஹன் said...

இப்படி இல்ல சமாளிக்கணும்:)
அருமை அருமை.
கடைசி ஐடியா மகா சூப்பர்.

narsim said...

பரிசல்... சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆனது.. ஒரு ஹாட்டான மேட்டரை இவ்வளவு சிறப்பாக கையாண்டு, எது நியாயம் என்பதையும் உணர வைத்தது உங்கள் எழுத்து..

எது எடுத்தாலும் அரசியல்.. அவர்களை இப்படித்தான் கோமாளியாக்க வேண்டும்..

நல்லா இருந்துச்சு பரிசல்..

enRenRum-anbudan.BALA said...

நெஜமாவே கலக்கல் ஐடியாக்கள், பரிசல்காரரே, பாராட்டுக்கள் :-)

enRenRum-anbudan.BALA said...

நெஜமாவே கலக்கல் ஐடியாக்கள், பரிசல்காரரே, பாராட்டுக்கள் :-)

ராஜேஷ், திருச்சி said...

Mr Parisal, dont compare the love of god with this love.

nowadays the definition of love is , i love you on first day. and in a week, travel towards ECR road ..
in one more week, book a room in oen of the guest house on ECR... or sometimes in bushes on the way..

tat is how the love is going on today..

and that group is only now taking advantange of valantines day to quest their body thirst..

ராஜேஷ், திருச்சி said...

//மிகவும் அநாகரீகமான முறையில் ,இதுபோன்ற ஜோடிகளிடம் நடந்து கொள்வதை நானே நேரில் சில முறை பார்த்திருக்கிறேன்.
பெண் காவலர்கள் இதுபோன்று பூங்காவுக்கு வரும் ஜோடிகளை அடித்து விரட்டுவதை ஒரு முறை //

பாபு,

அதே போல காதலர்கள் பூங்காவின் இருளில் அமர்ந்து , அவளின் அங்கங்களை அவன் மேய்வதை பார்த்திருப்பீர்களே...??

தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஈ சீ ஆர் ரோட்டி ஒரு புதர் உள்ளே சென்று 1 மனி நேரம் ஏதோ விவாதித்துவிட்டு வந்து... நல்ல பையன் / பொன்னு போல வீட்டுக்கு வந்து ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லும் காதலர்களை பார்த்திருப்பீங்களே..

பீச் படகு மறைவில், அவள் கை அவன் ---- பிடித்திருப்பதை பார்த்திருப்பீங்களே..

காதலர்களை காவல்துறை இப்படி செய்வதில்லை.. காதல் என்ற பெயரில் காம கூத்து அடிக்கும் (பொது இடத்தில்) காதலர்களை தான் எச்சரித்து அனுப்புகிறார்கள்.. மிரட்டுகிறார்கள்.

Arun said...

INTHA AMAIPUGALUIKKELLAM ARIVE ILLAINGALA SIR, VERA VELAI ILLA
INTHA LUSU PASANGALUIKKU

வேத்தியன் said...

//வெறும் மஞ்சச் சரடு தாலியைக் குடுத்தா கட்ட மாட்டேன். ஒரு கிராம் தங்கமாவது இருக்கணும்னு ரகளை பண்ணணும் பையன்.//

பாவமுங்க அவங்க...
விட்டுடுங்க பிழைச்சுப் போகட்டும்...

Nagarajan said...

Thala super....

வால்பையன் said...

//என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க..) இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து "ஹை! அப்பா அம்மா கல்யாணத்தப் பார்த்துட்டேனே"ன்னு கைதட்டி குதிச்சு கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையையும் தீர்த்த மாதிரி ஆச்சு!//

இது தான் இருக்குறதுலயே பெஸ்ட்,
உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.

Pattaampoochi said...

அலுவலகத்தில் இதை படிச்சுட்டு சிரிக்கவும் முடியாம சிரிப்பை அடக்கவும் முடியாம நான் பட்ட கஷ்டம் அந்த ராம் சேனாவுக்கே வெளிச்சம் போங்க.
எல்லா ஐடியாவும் சூப்பர்.

@அனுஜன்யா:
உங்களோட பின்னூட்டமும் பரிசலாரின் பதிவை போன்றே மிக அருமை.

தாமிரா said...

இதுக்கு பதிலா பொது இடத்துல சிகரெட் பிடிக்கறவங்க, குப்பை போடறவங்க இவங்களைப் பாத்தா தண்டிப்போம்னு கெளம்பினாக் கூட ஒரு அர்த்தம் இருக்கு! // இது உருப்படியான ஐடியா.! இப்படியெல்லாம் பண்ணினாத்தான் நாடு வெளங்கிருமே..!


அப்புறம் எந்த ஐடியாவை விடுறதுன்னு தெரியலை.. அத்தனையும் அட்டகாசம்.. ROTFL..

ரசித்துச்சிரித்தேன்..

அதோடு அனுஜன்யாவின் கவிதைகள் வாசிக்கிற ஐடியாவும் அழகு..

குசும்பன் said...

//என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு .../

மிக மிக ரசித்தேன்:)) கல கல கல கலன்னு சிரிச்சேன்:)

தாமிரா said...

தல இதுக்கு யூத்புல்லில் லிங்க் போட்டுருக்காங்க.. அங்க இரண்டு நாளா பூரா நம்ப செட்டுதான்.!

தாமிரா said...

தல இதுக்கு யூத்புல்லில் லிங்க் போட்டுருக்காங்க.. அங்க இரண்டு நாளா பூரா நம்ப செட்டுதான்.!

மின்னல் said...

ஆக மொத்தம் அடங்க மாட்டீங்க. ம்ம்ம்ம்ம்

தமிழன்-கறுப்பி... said...

:))

Sundar said...

LOL!

ஜோசப் பால்ராஜ் said...

பரிசல் அண்ணா,

உங்க யோசனையெல்லாம் மிக அருமை.
நானும் நேத்து ஒரு பதிவு போட்ருக்கேன்
http://www.maraneri.com/2009/02/blog-post_12.html

படிச்சுட்டு சொல்லுங்க.

munna said...

PUDAVAI ANUPPURAAVAMLAA...ELEI JATTI KODULEI UNAKKU PUDAVAI KIDAIKUTHAAMLE...NNU KIRAAMATHULEE DIALOQUE KODI KATTI PARAKKUTHU...HA HA -- SENAA KKAL PANDRA KOOTHUNAALE INDIAN OVVORUTHTHANUM ROMBA JAALIYAA IRUKKAAN.......by SINNA PAYYAN

வெட்டிப்பயல் said...

இந்த பதிவு ஜூனியர் விகடன்ல வந்திருக்கு...

வாழ்த்துகள்!!!

இதெல்லாம் நமக்கு ஜகஜம் தானேனு சொல்லிடாதீங்க :)

Bee'morgan said...

ஹைய்யோ.. பரிசல்.. செம நக்கல்ஸ்.. தாங்கல.. :) :) ஜீ.விக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்..
இட்லி வடையிலயும் பதிவு வந்திருக்கு.. அதுக்கும்.. :)

விக்னேஷ்வரி said...

ம், நல்ல ஐடியாஸ்.