Thursday, March 19, 2009

வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!

நேற்றைக்கு எங்கள் நிறுவனத்தில் ஒரு விழா. ஆண்டுவிழா மாதிரி என்று கூறலாம். நிறுவனத்திலேயே பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களில் திறமை உள்ளவர்கள் பாடல், ஆடல், மிமிக்ரி, நாடகம் என்று நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கினேன். ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். (சரி..சரி.. உணர்ச்சி வசப்படக்கூடாது. எல்லாம் இருக்கறதுதான்!!!)

இது சம்பந்தமான ரிஹர்சல், விழா அமைப்புகள் என்று ஒருவாரம் பிஸி. (என்னமோ ஒருவாரமா எழுதறதே படு மொக்கையா இருக்கே. பிஸி போல? - என்று கண்டு கொண்ட நண்பர்கள்.. வாழ்க வாழ்க!!)

நேற்று மாலை 4 மணி முதல் இரவு பத்து வரை நடந்த அந்த நிகழ்ச்சிகளை மேடையில் தொகுத்து வழங்குவது முதல், பல பணிகள் இருந்ததால் 12 மணி முதலே நான் இணையம் பக்கம் வரவில்லை. ஐந்து மணியளவில் அலைபேசியையும் அணைத்துவிட்டேன்.

பத்துமணிக்கு அலைபேசியை உயிர்ப்பித்தபோது... நர்சிம் மற்றும் அனுஜன்யா, ஜ்யோவ்ராம் போன்ற இணையில்லா இணையக் கவிஞர்களிடமிருந்தும் மிஸ்டு கால், மெசேஜ்கள் பதிவாகி இருந்தது.

நர்சிம்மை அழைத்தபோதுதான் விவரம் சொன்னார்...

நண்பர் ரவிஷங்கரது பதிவில் அவர் எழுதிய கவிதை குறித்து காட்டமான பின்னூட்டம் ஒன்று என் பெயரில் பதிவாகி இருப்பதாகச் சொன்னார். ‘நான் அவன் இல்லை’ என்றேன். அப்போதே லைனில் வந்த முரளிகண்ணன் உடனே ஒரு பதிவை எனக்காகப் போட்டு எல்லாருக்கும் விளக்கினார். ‘இது ஹேக்கிங் ஆக இருக்கக்கூடும்’ என்ற பயம் எல்லாருக்கும் இருந்தது. நான் அப்போது நெட் பக்கம் போக வழியிருக்கவில்லை. வீடு செல்ல எப்படியும் ஒரு மணிநேரம் ஆகிவிடும். ஏற்கனவே ஹேக்கிங்-கால் பாதிக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லாவும் ஒரு பதிவைப் போட்டு எல்லார்க்கும் தெரிவித்தார்.

அதற்குப் பின் வீட்டிற்கு வந்து பார்த்தால்.. நல்லவேளையாக ஹேக்கிங் எல்லாம் இல்லை.

ஓபன் ஐ.டி-டில் என் பெயரில் என் யூ.ஆர்.எல்லைப்பயன்படுத்தி ஒரு பின்னூட்டம் அவ்வளவே...!

ரவிஷங்கரது பதிவில் என் பெயரில் வந்த பின்னூட்டத்தில் என் ப்ரொஃபைல் படம் இல்லை. அந்தப் பெயரை க்ளிக் செய்தால் என் வலைப்பூவுக்குத்தான் செல்கிறது. என் ப்ரொஃபைலுக்குச் செல்லவில்லை. அதை விளக்கி அவருக்கும் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டேன். (இது தெரியாம மனுஷன் அனுஜன்யா-வை மட்டும் பாராட்டினீங்களே’ன்னு பதில் போட்டு.. அந்த யூத்து பாவம் ‘யோவ்.. உங்க சண்டைக்கு ஏன்யா என் கவிதையைக் குறை சொல்றீங்க?’ன்னு ஒரே அழுகாச்சி! ‘பொறு..பொறு.. உங்களுக்கு கவிதைலதான் பதில் சொல்லணும்’னு வேற மிரட்டீட்டுப் போய்ட்டாரு!)


இவன் விமர்சனம் இந்த மாதிரி இருக்காது என்றுணர்ந்த நண்பர்களுக்கு நான் என்ன சொல்வேன்? என்னை அழைத்து பாதுகாப்புக்குச் சில வழிமுறைகளை கான்ஃப்ரென்ஸில் சொன்ன, என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் நர்சிம், அப்துல்லா, ஆதி, அனுஜன்யா, வடகரைவேலன், வெயிலான், ரவிஷங்கருக்கு மின்னஞ்சலனுப்பி என் நிலை விளக்கிய அதிஷா, ஜ்யோவ்ராம், உண்மைத்தமிழன், வால்பையன், கும்க்கி, கார்க்கி...

நான் அப்படி என்ன செஞ்சிருக்கேன் உங்களுக்குன்னு தெரியல...

இனி நானே யாரையாவது திட்டத் தோன்றினால் கூட.. திட்ட முடியாமல் ஆக்கிவிட்டது இந்த நிகழ்வு!

இந்த இடத்தில் மறுபடி ஒன்றைச் சொல்ல வேண்டும்...

யாருடைய எழுத்தாவது பிடிக்கவில்லை.. நன்றாக இல்லை என்றால் நேரடியாக சொல்லக்கூடிய ஆண்மை எனக்கிருக்கிறது. அதே சமயம் எல்லாருமே நமக்குப் பிடித்த வண்ணம் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். நானெழுதுவது மட்டும் எல்லாருக்கும் பிடித்திருக்கிறதா என்ன?

எந்தச் சூழலிலும் அனானியாக கேவலமானதொரு கமெண்டை நான் போட்டதில்லை. போடமாட்டேன்.

என்னிடம் உரிமையோடு கருத்துக் கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வருந்துவார்களோ என்று யோசிக்காமல் அவர்களிடம் சொல்லிவிடுவதுண்டு. ரொம்ப காட்டமாக இருந்தால்... எஸ்ஸெம்மிஸில் அல்லது மெயிலில். (இதோ இதை எழுத எழுத ஸ்ரீ ‘ஒரு கதை எழுதியிருக்கேன்’னு பயமுறுத்துறாங்க.. போய்ப் படிக்கணும்!!!) மற்றபடி மனம்வருந்தும்படி சொல்லி எனக்குப் பழக்கமில்லை. (இதுக்கு ‘நீ ரொம்ப நல்லவண்டா’ என்று பின்னூட்டமிட தடை விதிக்கப்படுகிறது!)

ஐயா.. கம்ப்யூட்டர் அறிவு நெறைஞ்ச புண்ணியவான்களே... உங்க அறிவை இதுக்கா பயன்படுத்துவீங்க? ‘ஒரு பதிவோட தலைப்பை ரெண்டு மூணு கலர்ல எழுதணும்னா.. முடியுமா?’ன்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். இன்னும் என்னென்னவோ நாட்டுக்கு பண்ண வேண்டிய வேலைகள் உங்களால ஏராளமிருக்கு. கம்ப்யூட்டர் அறிவும் பதிவுலக அனுபவமும் வெச்சுட்டு pkp.in என்ன பண்ணிகிட்டு இருக்காருன்னு பாருங்க... அதுல கால்வாசியாவது பண்ணுங்க.

அதையெல்லாம் விட்டுட்டு ஒரு அப்பாவியைப் போய் சீண்டறீங்களேப்பா... பதிவெழுத வந்தது குத்தமாய்யா? என்னை மாதிரி பச்சப்புள்ளதான் உங்களுக்குக் கிடைச்சானா?

எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை!!!

(அந்த ப்ராக்கெட்ல சிவப்புல இருக்கறது இங்க ஆஃபீஸ்ல ஒருத்தரைப் பார்த்து சொன்னதுங்க.. தப்பா நெனைக்காதீங்க.... ஹி..ஹி..

61 comments:

நாமக்கல் சிபி said...

நிங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தங்கள் எழுத்துப் பணி சிறக்க வேண்டும்
வாழ்த்துகிறோம்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

. said...
This comment has been removed by the author.
உண்மைத்தமிழன் said...

ஐய்..!

புலம்பல் நல்லாயிருக்கு.. இதை இப்படியே கன்ட்டினியூ பண்ணு பரிசலு..!

நாங்க மட்டும்தான் பொலம்பனுமாக்கும்..! துணைக்கு ஆள் வேணாம்..!

அறிவிலி said...

இது உங்களுகு மட்டுமில்லாமல் பலருக்கும் நடக்கிறது.

என் பதிவில் இதேபோல் ஒருவர் பின்னூட்டத்தில் மிரட்டியிருந்தார். அதை க்ளிக் செய்தால் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு செல்கிறது.
நல்ல வேளை ஒவர் ரியாக்ட் செய்யவில்லை.

narsim said...

ம்.

நையாண்டி நைனா said...

அண்ணா.. இதெற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.
இதெல்லாம் பொது வாழ்கையிலே சாதாரணம்.

அது மாதிரி செய்வது பொது கழிப்பறையில் வீரம் காட்டும் விவேகியின் செயல்.

Thamiz Priyan said...

:))))

எம்.எம்.அப்துல்லா said...

நாங்க மட்டும்தான் பொலம்பனுமாக்கும்..! துணைக்கு ஆள் வேணாம்..! //

ஹா...ஹா..ஹா... உ.தமிழன் அண்ணே 1 வருஷம் முன்னாடி நீங்க பட்டபாடு எனக்கு அப்ப கஷ்டமா இருந்துச்சு....இப்ப சிரிப்பா இருக்கு

:)

Anonymous said...

விடுங்க இதுக்கு போய் இப்படி அழுவனுமா??

நம்மாலே ஒருத்தன் புகழ் அடையறநேனு சந்தோஷ படுங்க. ( அவனுக்கு இது ஒரு விளம்பரம் ......)

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..)//

பரிசல் பதிவர்மேல் கோபம்..என்னும் பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது

Unknown said...

நீங்க ரொம்ப நல்லவரு


அப்படின்னு பின்னூட்டம் போடமாட்டேன் ;)))

Mahesh said...

பதிவுலகுல இதெல்லாம் சாதாரணம்ங்கற நிலைமை மோசமான ஒன்று.

அனானியாவோ, அடுத்தவன் ஐடிலயோ போடறதுன்னு முடிவு பண்ணி 'எப்பிடியாவது' போடறவங்கள என்ன சொல்லித் திட்டினாலும் திருந்த மாட்டாங்க. நாமதான் முடிஞ்ச வரை உஷாரா இருந்துக்கணும் போல.

ராமலக்ஷ்மி said...

என் பதிவிலும் இது ஒருமுறை நடந்திருக்கிறது. இதே போல க்ளிக் செய்கையில் ப்ரொஃபைலுக்குப் போகாமல் பதிவுக்கு செல்லும் வகையில். பின்னூட்டத்தை தவறாக எடுக்கவும் நேர்ந்தது. அப்போது இதே போல பதிவுலக நண்பர்கள் அனுஜன்யா, ஜீவ்ஸ் போன்றோர் விளக்கிய பின்னரே புரிந்து கொண்டேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

பின்னூட்ட பெட்டியில் ஓப்பன் ஐடி வைத்தால் இப்படித்தான்.

அனேக வலைபதிவாளர்கள் ”பெயரில்லா, ஓப்பன்” வைத்திருப்பதால் (என்னையும் சேர்த்து) இந்த தவறு நேருகிறது.


புதிய கணினியில் நமது வெற்றிவார்த்தையை (அத்தாங்க pass word ;) ) பயன்படுத்தாமல் இருந்தால் ஹேக் செய்ய வழி இல்லை.


//ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..//

வலையுலக இளையதளபதீ......

உங்களுக்காக நாங்க இருக்கோம் :)

Kathir said...

//வலையுலக இளையதளபதீ......//

நல்ல பேரு....

:))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹேக்கிங் அப்படின்னா என்னங்க பிரதர்? எங்களுக்கெல்லாம் கம்ப்யூட்டரைப் பத்தி ஒன்னும் தெரியாது.(30வயதில் கம்யூட்டரை முதன்முதலா தொட்ட ஆட்கள் நாங்கள்) நாங்கெல்லாம் இந்தப்ப் பிரச்சனை வராம எப்படித்தடுப்பது? என்பதைப் பற்றி சற்று விபரமாக பதிவிடுங்களேன். அல்லது எங்கு கிடைக்கும் என்ற சுட்டியாவது கொடுங்களேன்.

Raju said...

விடுங்க தல..
பொது வழ்க்கையில‌ இதெல்லம் சாதரணமப்பா..

மேவி... said...

"என்னிடம் உரிமையோடு கருத்துக் கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் அவர்கள் வருந்துவார்களோ என்று யோசிக்காமல் அவர்களிடம் சொல்லிவிடுவதுண்டு"

ada appadiya.....
appadinna...
en blog parkkam vanthu en kavithaiyai paditha pin unga pinnottam podunga boss.......

மேவி... said...

:-))

Anonymous said...

//வலையுலக இளையதளபதீ//

தளபதி ஓக்கே அதென்னா தளப'தீ'

ஓ அதிக ஹிட்ஸ் வாங்கி, அதிக பாலோவர்ஸோட அடுத்தவங்கள வயிறெரிய வைக்கிறதாலயா?

பரிசல்காரன் said...

ஐயா.. புண்ணியவான்களே.. என்ன கொடுமைங்க இது?

இந்த போஸ்டுல மூணாவது கமெண்ட் (டிலீட்டட் எனக் காண்பிக்கப் பட்டது) நான் போடவில்லை. ஆனால் பரிசல்காரன் என்ற பெயரில் வந்துள்ளது. பதிவின் தலைப்பைக் க்ளிக் செய்து கமெண்டைப் பார்க்கும்போது என் பெயரோடு வருகிறது...

ஐயையோ... கொல்றாங்களே - ன்னு கத்தத் தோணுது....

லதானந்த் said...

எனக்கும் ஒரு முறை இது போல நடந்திருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பரிசலாரே,
ஏன் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மாற்றக்கூடாது?
அதை முதலில் செய்துவிட்டால் குழம்ப வேண்டியதில்லை.

பரிசல்காரன் said...

@ ஜோதிபாரதி

மாற்றிவிட்டேனே நேற்றே..

ஆமா மேல லதானந்த் பேர்ல கமெண்ட் போட்டது அவர்தானா?

அங்கிள் நீங்கதானா... நீங்கதானா.. நீங்கதானா..

லதானந்த் said...

நாந்தான். நானேதான். நானேதான். நானேதான். நானேதான். அன்பு பரவட்டும்!

அன்பே சிவம்! போன்ல வேணா கஃபர்ம் ப்ண்ணிரட்டுமா? அன்பு வாழ்க!

Thamiz Priyan said...

///பரிசல்காரன் said...

ஐயா.. புண்ணியவான்களே.. என்ன கொடுமைங்க இது?

இந்த போஸ்டுல மூணாவது கமெண்ட் (டிலீட்டட் எனக் காண்பிக்கப் பட்டது) நான் போடவில்லை. ஆனால் பரிசல்காரன் என்ற பெயரில் வந்துள்ளது. பதிவின் தலைப்பைக் க்ளிக் செய்து கமெண்டைப் பார்க்கும்போது என் பெயரோடு வருகிறது...

ஐயையோ... கொல்றாங்களே - ன்னு கத்தத் தோணுது....///

என்ன கொடும இதெல்லாம்... :))

ங்கொய்யா..!! said...

அனேக வலைபதிவாளர்கள் ”பெயரில்லா, ஓப்பன்” வைத்திருப்பதால் (என்னையும் சேர்த்து) இந்த தவறு நேருகிறது.
//


:)

ங்கொய்யா..!! said...

அனேக வலைபதிவாளர்கள் ”பெயரில்லா, ஓப்பன்” வைத்திருப்பதால் (என்னையும் சேர்த்து) இந்த தவறு நேருகிறது.
//


:)
:::)))||


:::))))

Unknown said...

பரிசல்காரன்,

இது நியாமா?(பயப்பாடதீங்க).
எல்லாம் குழப்பங்களும் முற்றுப்புள்ளி வைக்க
1.என்னுடைய பதிவில் பதில் போட்டேன்.
2.இரண்டு பேர் பின்னூட்டத்தையும் அழித்தேன்.
3.அப்துல்லா/வெயிலான்/செந்தழல் ரவி/மு.கண்ணன் பதில் போட்டேன்
4.அதிஷாவிடம்(email) தெரிவித்தேன்
5.அனுஜனயா கூட வந்து கேட்டு விட்டு போய் விட்டார்.
6.உங்கள் ”இறைவன் அமைவெ” பதிவிலும் பின்னூட்டம் இட்டேன்.
7.முரளி கண்ணனும் நன்றி தெரிவித்து விட்டார்.

உங்களிடமிருந்து ஏன் ஒரு feed back க்கும் இல்லை. இதை என் வலையில்
எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன்.

ரொம்ப பயந்ததில் மறந்து போய் விட்டதா?

(இது என் பின்னூட்டம்தான்)

அன்புடன்
நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஜெயலலிதா, நமீதான்னு ரெண்டு கமெண்ட் இருக்கு பிளாக்கர் ப்ரொஃபைலோட. ஜெ.வைக் கிளிக் செய்தாலும் நமீதா பிரொஃபைலுக்குத்தான் போகுது, நமீதாவைக் கிளிக் செய்தாலும் நமீதா ப்ரொஃபைலுக்குத்தான் போகுது.

என்ன டிகால்டி வேலை இது...

ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா... கண்ணக் கட்டுதே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பரிசல், கமெண்ட் மாடரேஷன் வச்சுக்கறதுதான் நல்லதுன்னு தோணுது. தேவையில்லாத பின்னூட்டங்கள் வந்தா ரிஜக்ட் செஞ்சுடலாம்...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை!!!>>

இந்த களைபரத்திலயும் கலக்கறீங்கய்யா...

நல்லாயிருங்க..

அப்புறம் இதெல்லாம் பாத்து ரொம்ப ஒர்ரி பண்ணக்காதீங்க...

டோண்டு ராகவன்னு ஒருத்தர் இருக்காரு,அவர கொஞ்சம் கதை கேட்டீங்கன்னா இத விட பயங்கர மேட்டரெல்லாம் சொல்வாரு..

இது மாதிரி நிறைய பேருக்கு அப்பப்ப நடக்குறதுண்டு.பதிவு எழுத வந்திட்டீங்கல்ல.உறுதி கொண்ட நெஞ்சினாய் வா,வா,வா ன்னுதான் இந்த மாதிரி ஆட்கள் வரவேற்பாங்க.

மேல சவுண்ட் விட்ட மாதிரி சவுண்ட் விடவும் கத்து வச்சுக்கணும் !!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\களேபரத்திலயும் கலக்கிறீங்கய்யா..///
வழிமொழிகிறேன்..

லோகு said...

இப்படியெல்லாம் நடக்குமா???

Anonymous said...

thank god..its u anna :)

ங்கொய்யா..!! said...

ஜெயலலிதா, நமீதான்னு ரெண்டு கமெண்ட் இருக்கு பிளாக்கர் ப்ரொஃபைலோட. ஜெ.வைக் கிளிக் செய்தாலும் நமீதா பிரொஃபைலுக்குத்தான் போகுது, நமீதாவைக் கிளிக் செய்தாலும் நமீதா ப்ரொஃபைலுக்குத்தான் போகுது.

என்ன டிகால்டி வேலை இது...

ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா... கண்ணக் கட்டுதே.

//


just for fun :)

don't worry :)

ங்கொய்யா..!! said...

ஜெ.வைக் கிளிக் செய்தாலும் நமீதா பிரொஃபைலுக்குத்தான் போகுது, நமீதாவைக் கிளிக் செய்தாலும் நமீதா ப்ரொஃபைலுக்குத்தான் போகுது.
//


இதுக்கு தான் தலைப்பு தப்பாட்டம்

புரியுதா.. :)


மத்தபடி பின்னுட்டம் நேர்மையா இருக்கும் :)(கொஞ்சம் அரசியல் நெடியோட)


(சத்தியமா பதிவர் பெயரில் போடமாட்டேன்)

anujanya said...

சுந்தர்,

உங்களுக்கே அதீதமாகப் படவில்லை? ஜெயலலிதா, நமிதா என்றால் உடனே போய் பார்க்கிறீர்கள்; இதுவே பெயர் சிவாஜி கணேசன், சுந்தர் C (சீ சுந்தர் இல்லை) என்றிருந்தால் செய்வீர்களா? உண்மையிலேயே இதுதான் 'தப்பாட்டம்'.

அனுஜன்யா

Sanjai Gandhi said...

தல. வொய் ப்ளட்.. ஹ்ம்ம்.. சேம் ப்ளட்.. :))

என் பேர்லையும் இப்டி நடக்குது.. நான் எப்டி கும்மு அடிப்பேன்னு தெரிஞ்ச குசும்பனையே குழப்பி இருக்காங்க. மக்கள் இந்த கண்ட கண்ட ஆப்ஷனை எல்லாம் எடுத்தாங்கன்னா புண்ணியமாப் போகும்.

//ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல.//
அடிங்க.. :))

*இயற்கை ராஜி* said...

ப‌ரிச‌ல்கார‌ன் கிற‌ பேர்ல‌ என் ப‌திவுக்கும் ஒரு பின்னூட்ட‌ம் வ‌ந்திருக்கு.அதை நான் பாக்க‌ முன்னாடியே " இந்த‌ பின்னூட்ட‌ம் நான் போட‌லை" ன்னு விள‌க்கம் கொடுத்த‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி ப‌ரிச‌ல்கார‌ரே:-)

Venkatesh subramanian said...

>>எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை!!!>>

இந்த களைபரத்திலயும் கலக்கறீங்கய்யா...
வழிமொழிகிறேன்..(MUDIYALA)

நிகழ்காலத்தில்... said...

\\ஜ்யோவ்ராம் சுந்தர்
20 March, 2009 2:41 PM

பரிசல், கமெண்ட் மாடரேஷன் வச்சுக்கறதுதான் நல்லதுன்னு தோணுது. தேவையில்லாத பின்னூட்டங்கள் வந்தா ரிஜக்ட் செஞ்சுடலாம்...\\

இதையே நானும் வலியுறுத்துகிறேன்.

நாதஸ் said...

//(இதுக்கு ‘நீ ரொம்ப நல்லவண்டா’ என்று பின்னூட்டமிட தடை விதிக்கப்படுகிறது!)
//

:) :) :)

Kavi said...

இப்படி வேற நடக்குதா?!!!

Unknown said...

பரிசல் சார்,

கே. ரவிஷங்கர் பதிவில் அதர் ஆப்ஷனில் உங்கள் பெயரில் யாரோ போட்டிருந்திருக்கிறார்கள். அவருக்கு sitemeter-இல் IP தெரியவில்லையா?

ஆனால், உங்கள் இந்தப் பதிவில் போட்டிருப்பது 'போலி பரிசல்'. பரிசெல்காரன் என்ற பதிவு உங்கள் பெயர்போலவே தொடங்கப் பட்டிருக்கிறது:-(

பிரபலம் ஆகிட்டீங்க. வாழ்த்துகள்:-)

வீணாபோனவன் said...

எல்லாமே ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிட்டிருக்கு...

-வீணாபோனவன்.

பரிசல்காரன் said...

//உங்களிடமிருந்து ஏன் ஒரு feed back க்கும் இல்லை. இதை என் வலையில்
எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன்.

ரொம்ப பயந்ததில் மறந்து போய் விட்டதா?
//

ஐயா... நான் நேத்து உங்களுக்குத்தான் பெரியதொரு பின்னூட்டம் முதலில் போட்டேன்.

உங்கள் அப்ரூவலுக்கு காத்திருந்ததே?

என்ன கொடுமைங்க இது???

பரிசல்காரன் said...

@ RAVISHANKAR

ஏங்க... உங்க ப்ளாக்ல என் பதிலை அப்ரூவ் பண்ணி அது வந்திருக்கே? அப்புறம் எதுக்கு .

//உங்களிடமிருந்து ஏன் ஒரு feed back க்கும் இல்லை. இதை என் வலையில்
எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன்.
//

இப்படி கேட்டிருக்கீங்க?

பிதாமகன்ல லைலா சொல்றதுதான் ஞாபகம் வருது...!

Unknown said...

பதிலுக்கு நன்றி பரிசல்காரன்,

நான் கேட்கும் feed back பிரச்னை சுபமாக முடிந்த பின்.நீங்கள் போட்டது முன்.

ஓகே பரிசல்காரன்.எல்லாம் இனிதாக முடிந்தது.தொடர வேண்டாம்.
எல்லாவ்ற்றையும் மறப்போம்.

எல்லா பின்னூட்டமும் இறைவனுக்கே!

gayathri said...

பரிசல்காரன்
20 March, 2009 1:13 PM
ஐயா.. புண்ணியவான்களே.. என்ன கொடுமைங்க இது?

இந்த போஸ்டுல மூணாவது கமெண்ட் (டிலீட்டட் எனக் காண்பிக்கப் பட்டது) நான் போடவில்லை. ஆனால் பரிசல்காரன் என்ற பெயரில் வந்துள்ளது. பதிவின் தலைப்பைக் க்ளிக் செய்து கமெண்டைப் பார்க்கும்போது என் பெயரோடு வருகிறது...

ஐயையோ... கொல்றாங்களே - ன்னு கத்தத் தோணுது....


enna kodumai anna eaan ungaluku mattum ipapdi nadakkuthu

Unknown said...

அதுதான ......... யாருப்பா அது .......????

iniyavan said...

அன்பு நண்பருக்கு,

முதன் முதலில் உங்கள் எழுத்துக்களை கடந்த வெள்ளிக்கிழமை தான் படிக்க ஆரம்பித்தேன். அருமையான நடை. நான் திருச்சி லால்குடியை சேர்ந்தவன், 12 வருடமாக மலேசியா வாழ்க்கை. பெரிய வேலை கார்ணமாக என் எழுத்து கனவு கனவாகவே இருந்தது. இப்பொழுது உங்களால், நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்துள்ளேன். நேரம் கிடைத்தால் எழுதுவேன்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி.

பரிசல்காரன் said...

//எல்லா பின்னூட்டமும் இறைவனுக்கே!//

அருமைங்க ரவி!!!

Prabhu said...

இப்போ ஹாக் லாம் பண்றாங்களா? ப்ளாக்ல ஹாக் பண்ணி என்ன பிரயோஜனம். உங்கள மாதிரி பிரபலமானவங்க பேர யூஸ் பண்ணி டயம் பாஸ் பண்றாங்களோ?

என்ன மாதிரி புது ஆட்கள யாரும் அட்டாக் பண்ண மாட்டங்கல்ல. படிக்கிற நாலும் பேரும் ஓடிற போறாங்க!

Unknown said...

பரிசல்,

இவ்வளவு கலாட்டாவுக்கு காரணமான் அந்த கவிதையப் படிச்சு ஒரு நேர்மையான பின்னூட்டம் போட்டீங்கன்னா “பழைய பின்னூட்ட தோஷம்” போயிடும்னு கேரள நம்பூதிரி
சொன்னாரு, சோழி போட்டு பிரஷ்னம் பார்த்ததுல.

லக்கிலுக் said...

haa. haaa... இவ்ளோ கலாட்டா நடந்திருக்கா? உங்களுக்காவது பரவாயில்லை. போலி பின்னூட்டம் தான் போட்டிருக்காங்க. இப்போ தான் ஒரு பதிவை படிச்சேன். அண்ணன் உண்மைத்தமிழன் பேருல யாரோ ஒரு அன்பர் போலியாவே ஒரு பதிவரிடம் பேசியிருக்காராம்.. டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட் :-)

வால்பையன் said...

//ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன்//

எல்லோரும் திரும்பவும் வேலைக்கு வந்துட்டாங்களா?

வால்பையன் said...

//இனி நானே யாரையாவது திட்டத் தோன்றினால் கூட.. திட்ட முடியாமல் ஆக்கிவிட்டது இந்த நிகழ்வு!//

இது தான் வசதி
கூல போய் திட்டிட்டு
”நான் அவன் இல்லைன்னு” ஜகா வாங்கிகிலாம்

வால்பையன் said...

//எந்தச் சூழலிலும் அனானியாக கேவலமானதொரு கமெண்டை நான் போட்டதில்லை. போடமாட்டேன்.//

இதே மாதிரி நானும் ஒருக்கா புலம்பினேன்!
இல்ல
புலம்ப விட்டாங்க!

வால்பையன் said...

//எது நடந்தாலும்.. என்னை விட்டு விலகாத.. என்னைக் கைவிடாத நீங்கள் (இந்த டயலாக் கேமராவைப் பார்த்து சொல்லப்படுகிறது....) இருக்கும்வரை....( ஏய்... சைலன்ஸ்.. எழுதிகிட்டிருக்கோம்ல..) எனக்கென்ன கவலை!!!//

டாக்டரு பாவம்யா
விடுங்க!