Friday, March 13, 2009
எதிரிகளைக் காதலிக்கிறேன்!
என் மூளையின் ஞாபக அடுக்குகளில் விரல்களால் துழாவி, தோன்றியவரை எழுதுகிறேன் கீழ்க்கண்ட சம்பவத்தை. சாரம் உண்மைதான். விவரிப்பில் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கக்கூடும்! என் நண்பன் ஒருவேளை இதைப் படித்து.. ‘இப்படி இல்லையே’ என்று நினைப்பானாயின் அவனிடம் ஒரு மானசீக மன்னிப்பு!
நான் இரண்டாவதோ, மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் பென்சில் தகராறு. வெறும் அரைவிரல் நீளம் உள்ள பென்சிலை வைத்துக் கொண்டிருந்த நான், அவனிடம் உள்ள புதிய பென்சிலைக் கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் அடாவடியாகக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். அவன் தரவில்லை. பிடுங்க முற்பட்டேன். எப்படி எனத் தெரியவில்லை, கவனம் சிதறிய ஒரு கணப்பொழுதில் அவனது பென்சிலின் கூர் முனை என் தொடையில் வந்திறங்கியது. பதிலுக்கு நானும் குத்தியதாக ஞாபகம். இன்றும் என் வலது தொடையில் இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.
‘அழுதேன், புரண்டேன்.. ஐயோ எனக் கதறினேன்’ என்ற விவரிப்புகளெல்லாம் தேவையற்றது! ஆனால் அந்தச் சம்பவத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.
‘அந்த வயசுல உனக்கு அப்படியெல்லாம் தோணுமாடா?’
அப்போது அல்ல. அதற்குப் பின் அந்தச் சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம்.. இன்றுவரை.
அந்த நண்பனிடம் நான் ‘டேய்... கொஞ்சம் பென்சில் குடுடா.. எழுதீட்டுத் தர்றேன்’ என்று கேட்டு அந்தப் பென்சில் ஆசையைத் தணித்துக் கொண்டிருக்கலாம். அதைச் செய்யாமல் அவனிடமிருந்து பிடுங்க முற்பட்டிருக்கக் கூடாது.
கேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது.
ஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு?
எந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள்? ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்? இல்லையே...
அன்றிலிருந்து பல நாட்களுக்கு, ஏன்.. பல வருடங்களுக்கு அவன் என்னிடம் சரியாகப் பேசவில்லை. ‘ச்சே.. ஒரு சின்னப் பென்சில் ஆசையால் ஒரு நல்ல நட்பை இழந்தோமே’ என்று நான் என்னையே கேவலமாக நினைத்துக் கொள்வதுண்டு.
அதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.
அந்த நண்பன் என்னை விட வசதியானவன். தினமும் முழு பென்சில் கொண்டுவர அவனால் முடியும். என்னால் முடியாது என்ற இயலாமைதான் அன்று என்னைக் கோவப்படத் தூண்டியது. ‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.
இன்றைக்கும் பலரோடு எனக்கு சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. ’நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்பது போல அந்த ஒரு சம்பவம் எனக்குத் தந்த பாடத்தால்... பேசாமலே போய்விடுவேன். தவறு என்மீதாயினும், என் மீது இல்லாவிட்டாலும்.
நானொன்றும் கடவுள் அல்லவே.. மனிதனாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். இடையிடையே மிருகங்களுக்கு, மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்!
சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் வந்ததன் சாராம்சம் இது. ஹாலிவுட்டில் 70-80 களில் பிரபல நகைச்சுவை நடிகரான ஜார்ஜ் கார்லின் (சமீபத்தில் காலமானார்) சொன்னவை...
நமது வாழ்வின் முரண் என்னவென்றால்...
நாம் குறைவாகச் சம்பாதிக்கிறோம்.. நிறைய செலவழிக்கிறோம்.
பெரிய வீட்டில் வசிக்கிறோம். சின்ன குடும்பம்தான் இருக்கிறது.
நிறைய வசதிகள் இருந்தாலும், குறைவான நேரமே இருக்கிறது. நிறைய படித்திருக்கிறோம்.. ஆனால் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். நிறைய அறிவிருக்கிறது.. ஆனால் தவறான முடிவை எடுக்கிறோம். நிறைய வழிகாட்டும் நண்பர்களைப் பெற்றிருக்கிறோம்.. ஆனால் அதைவிட அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். நிறைய மருந்துகள்.. அதைவிட அதிகமான உடல்நலக்குறைவுகள்..
நிறைய குடிக்கிறோம், நிறைய புகைபிடிக்கிறோம், நிறைய வேலை செய்கிறோம், வேகமாக வாகனம் செலுத்துகிறோம். குறைவாக சிரிக்கிறோம், தாமதமாக உறங்கச் செல்கிறோம்.. தாமதமாக எழுகிறோம். நிறைய உணவுகள்.. செரிமானம்தான் ஆவதில்லை!
நிறைய எழுதுகிறோம். குறைவாகக் கற்றுக் கொள்கிறோம். ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம்.
மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.
-இப்படியே போகிறது அந்த மின்னஞ்சல்.
முடிவு?
அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.
‘நீ என்னைப் பத்தி நல்லது சொன்னாத்தான் உன்னை எனக்குப் பிடிக்கும்’ என்பது அன்பல்லவே. ஆகவேதான் நான் எதிரிகளையும் காதலிக்கிறேன்!
எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.
கொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால்! என் மீது கோபமெனும், இயலாமை எனும் சேற்றை எவரும் வீசி, அதனால் நான் தூண்டப்பட்டு முட்டாள்தனமாய் அப்படி வீசியவரை எதிரியாக நினைப்பேனாயின்.. எனக்குள் இருந்த அன்பை நான்அழித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம். அப்போது எனக்கு எதிரி நான்தானேயன்றி வேறெவருமல்ல.
ஆகவே....
ஐ லவ் யூ மை எனிமீஸ்!
Subscribe to:
Post Comments (Atom)
62 comments:
தலைப்புக்கே!
ம்ம்ம் அருமை தல
\\எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால்\\
மகிழ்ந்-தேன்
ஹைய்யோ... ஹைய்யோ...
:)
சுவாரஸ்யமான தலைப்பு... நேர்மையான உள்ளடக்கம்...
அருமையான பதிவு !!
//மிகப் பெரிய மனிதர்கள்.. மிகச் சின்ன புத்திகள்.//
இந்த வரிகள் நல்லா சொல்லி இருக்காரு அவரு..
ம்.... சுத்தி வளைச்சு பென்சில் சீவியிருக்கீங்க.
ஜார்ஜ் காலின் சொன்னது ரொம்ப நல்லாருந்தது. ஆமா! அப்படி ஒருத்தர் இருந்தாரா?
'எனக்கிருந்த அன்பு, வெறுப்பு என்கிற இரண்டு ஆப்ஷன்களில் நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்'. சமீபத்திய பொன்மொழி.
பதிவு படித்தபிறகு போடும் பின்னூட்டம்:
GOOD.
//இடையிடையே மிருகங்களுக்கு, மிருக பாஷையில் பேச முற்படும்போதெல்லாம் ‘டேய்.. நீ மனுஷண்டா... மறந்துடாத’ என்று என்னை வழிகாட்டும் நண்பர்கள் இருப்பதால் தப்பிக்கிறேன்!//
nice:-)
எல்லாவற்றையும் நேசம் நிரம்பிய ஒரு புன்னகையோடு கடக்கும் மனிதர்களைப் பார்க்கையில் பொறாமையாய் இருக்கும். அன்பே நிரம்பி வழிக இவ்வுலகம்
//கொஞ்சம் கர்வதோடு சொல்வதானால் எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை//
உங்கள் செருக்கு எனக்கு பிடிச்சிருக்கு
:)
யாருக்கோ உள்குத்துன்னு நினைக்கிறேன்... ;)
மிக நல்லதொரு பதிவு.
அன்பு தான் அனைத்திற்குமே ஆதாரம்.
வாழ்த்துக்கள்.
///////கேட்டதுகூட அன்பாகக் கேட்டிருக்கலாம். ஆணையிடும்படிக் கேட்டிருக்கக் கூடாது.
ஆனால்.. அந்த வயசில் அது எங்கே புரிகிறது நமக்கு?////////
இப்ப மட்டும் யார் சார் அன்பா கேட்கிறார்கள் ?எல்லோரும் பிச்சை போடுடா என்ற தொனியில் தான் கேட்கிறார்கள்
////////அதனால்தான் முடிந்தவரை.. எதற்காகவும் நட்பை இழக்க மிகவும் பயப்படுகிறேன்.//////
இந்த வரிகள் நல்லவரிகள் .இந்த எண்ணம் எனக்கும் உண்டு .
பரிசல்,
//ஐ லவ் யூ மை எனிமீஸ்!//
உலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.
அந்தவகையில் யூ லவ் யுவர் எனிமீஸ்?
:)
ஐ லவ் யூ கிருஷ்ணா செல்லம் :)
//ஐ லவ் யூ//
repeateyyyyy
///ம்.... சுத்தி வளைச்சு பென்சில் சீவியிருக்கீங்க.
ஜார்ஜ் காலின் சொன்னது ரொம்ப நல்லாருந்தது. ஆமா! அப்படி ஒருத்தர் இருந்தாரா///சாமீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......இந்த பதிவ படிச்சதும் எனக்கு தோணினது இதுதான்...யாரு யாரோடி உன்னோட......
தரமான பதிவு..
எனக்கும் இது குறித்த ஒரு வாழ்க்கைப்பாடமுண்டு. (அண்ணா சொன்னதா? வேறு யாருமா? தெரியவில்லை).. "யார் உன்னிடம் கோபத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் நீ தோற்றுப்போகிறாய். யாரிடமும் தோற்க நீ விரும்புகிறாயா?"
இதைப்பொறுத்தவரை பலமுறை நான் தோற்றிருக்கிறேன். ஆனால் பலமுறை கோபம் ஏற்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த வரிகள் நினைவில் வந்து என்னைக் காக்கிறது. தப்பினாலும் கோபப்பட்டபின் சில நிமிடங்களில் நினைவுக்கு வந்து ஏளனச்சிரிப்பு சிரிக்கவும் தவறுவதில்லை.
நாந்தான் முதல்லயா? 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்...
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு SMS
* நண்பனையும் நேசி..பகைவனையும் நேசி.
நண்பன் வெற்றிக்கு துணையாக இருப்பான்.பகைவன் வெற்றிக்குக் காரணமாக இருப்பான் *
இதுக்கு என்ன சொல்றீங்க....?ம்
நீங்க ரொம்ப நல்லவருங்கோ...
//அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.//
நிஜமோ..நிஜம்!!
//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.
//
தற்காலத்தில் இப்படி இருப்பவர்களை "இவன் ரொம்ப..... நல்லவன்டா"னு சொல்லும்.
(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ!! )
//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.
//
தற்காலத்தில் இப்படி இருப்பவர்களை "இவன் ரொம்ப..... நல்லவன்டா"னு சொல்லும்.
(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ!! )
நல்ல பதிவு கே.கே. This too shall pass.
அனுஜன்யா
//எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை.
//
தற்காலத்தில் இப்படி இருப்பவர்களை "இவன் ரொம்ப..... நல்லவன்டா"னு சொல்லும்.
(இதற்கு உள்குத்து உண்டுங்கோ.. ங்கோ..ங்கோ..ங்கோ!! )
தலைப்புல இருக்க மேட்டர உள்ள விளக்கிருந்தது.. அதுக்கு கொடுத்த ஒரு நிகழ்ச்சி... அதுக்கு மேல எந்த ஒரு விஷயமும் இந்த மேட்டருக்கு வெயிட் குடுக்க முடியாது.
Super.. :))
//அன்பைச் செலுத்துவதுதான். அன்பு ஒரு வட்டத்துக்குள் அடங்காதது. இவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும். இவர்மீதுதான் அன்பு செலுத்த முடியாது என்ற எந்த வரைமுறையும் அன்புக்குக் கிடையாது.//
நெகிழ வைத்த பதிவு பரிசல்.
The holy bible also mentioned these lines. I really LOVE YOU my friend for your thought.
இயேசு அவர்களுக்கு சொன்னது என்னவென்றால்:
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
Such a different post today.
////ஐ லவ் யூ மை எனிமீஸ்!//
//உலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.- பைத்தியக்காரன்//
நீங்கள் சொன்னதும், பைத்தியக்காரன் சொல்லியிருப்பதும் பிடித்தது.
ஜார்ஜ் காலின் யூட்யூபில் பாத்திருக்கீங்களா? என் கட்சி ஆளு...நல்லா இருக்கும்!
என் கருத்துகளை நீங்கள் உங்கள் பாணியில் எழுதியிள்ளீர்கள் அம்ப்புட்டு தான்!
ஒரு பென்சில் மேட்டருல இவ்வளவு கத்துக்கிட்டீங்கன்னா..! உங்கக்கிட்டக் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.
கடைசியாக எழுதியிருந்தவை எல்லாம் பிரமாதம். மனுஷ்யபுத்ரன் கவிதை ஒன்றுஇதுபோல்..
படித்திருக்கீறீர்கள்தானே.
//உலகிலேயே மிகப் பெரிய வன்முறை அன்பும், காதலும்தான்.- பைத்தியக்காரன்//
பின்நவீனத்துவவாதிகள ப்ளாக் உலகத்த விட்டு அன்பாலையோ, காதலாலையோ தான் விரட்டமுடியும் போல. முயற்சி பண்ணி பாக்கணும்.
ஐ லவ் யூ பைத்தியக்காரன்
அனைவர்க்கும் நன்றி....
அது ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு!!!
படிக்க துவங்கியதிலிருந்து நிறைவு செய்யும் வரை... என் உள்ளமெங்கும் உங்களுக்கான வாழ்த்துக்களும் ஒலித்தவண்ணமே இருந்தன...
அனைவரும் நண்பர்கள் என்பதால்... எதிரி என்ற வார்த்தையை ஒரு ஈர்ப்புக்காக பயன்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறேன்...
"நான் விரும்பி, மகிழ்ந்து, ரசித்து, உயிரையும் கொடுக்க தயாரய் இருந்த ஒன்று, சில நாழிகைகளிலேயே எனக்கு ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது." இவ்வாறிருக்க... எதிரி என்று வெளியில் எவருமில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கான ஒரு அருமையான அனுபவ பகிர்வு... தொடரட்டும் உங்கள் பயணம்...
சிறு பரிசு...
http://karuveli.blogspot.com/2008/08/blog-post.html
பரிசலானந்தாய நமஹ! :)
1,50,000 வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
‘முடியாது’ என்ற உண்மையை விடவும்.. ‘தேவையில்லை’ என்ற உண்மையை நான் உணர்ந்திருந்தால் அந்தக் கணத்தை நான் சுலபமாகக் கடந்திருக்கக் கூடும்.
Super.
சிலரது பெருந்தன்மையை நம்மால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை...காரணம் நாம் அது போல் நடந்து கொள்வதில்லை என்பதால்...
Nan mikavum mosamana oru mana nilaiyil irukumbothu unka pathivai padithen mika sariyana varthaikal sathiyamaka padithu muditha vudan unachivasathil aluthuviten serithu neram because nan iruntha mana nilai apadi kadantha 3 natkalaka vetil oru problem athil irunthu enai meetka uthaviya unkal pathiviku mikavum nandri parisalaruku yen mana purvanamana valthukal unkalin inthavari enai mika mika kavarnthathu \\எனக்கு எதிரியாகும் தகுதி இன்னும் எவருக்கும் இல்லை.. காரணம் என் அன்பைச் சோதித்து அதை அழிக்க எவனாலும் முடியாதென்பதால்\\
:)
//இதன் லேசான அடையாளத்தைக் காணலாம்.//
எப்படி நம்புவது... படம் பிடிச்சி போடுங்க...
intha ulakathil anpal sathikka mudiyathathu ethuvum illai
unga pathivu rompa azaka iruku pa
After your post, yesterday full i'm very much critises about my love for others.
Thanks..!
Anyway, again i tell you,
" you are such a different person"
I love you..!
(me also try to love my enemies)
\\ஐ லவ் யூ மை எனிமீஸ்\\
உங்களால் விரும்பப்படுன்கின்ற ஒருவர் எப்படி உங்களுக்கு எதிரி ஆக முடியும். (If u start to love ur enemies after that there is no enemy for u).
Superb thamira,
this adds one more fan to you? it's me
wish you bright future
//Superb thamira,
this adds one more fan to you? it's me
wish you bright future//
அடக் கொடுமையே...
தாமிரா என் ஃப்ரெண்டுங்க..
நான் பரிசல்காரன்!!
//
தாமிரா என் ஃப்ரெண்டுங்க..
//
தாமிராவா? யாருங்க அது? எனக்கு ஆதிமூலகிருஷ்ணனைத்தான் தெரியும்....
@ வெண்பூ
////
தாமிரா என் ஃப்ரெண்டுங்க..
//
தாமிராவா? யாருங்க அது? எனக்கு ஆதிமூலகிருஷ்ணனைத்தான் தெரியும்....//
கொஞ்சம் அசந்தா லெக் ஸ்பின்ல அவுட்டாக்கீடறாங்கப்பா...
//எந்தப் பென்சிலில் எழுதப்பட்டாலும், எழுத்தில் உள்ள தரத்திற்குத்தான் மதிப்பெண்களே தவிர... எழுதுபொருளுக்கா மதிப்பெண்கள்? ‘அவன் அரைப் பென்சிலில் எழுதினான்.. இவன் முழுப்பென்சிலில் எழுதினான்’ என்பதா அங்கே எடுத்துக் கொள்ளப்படும்? இல்லையே...//
அருமை!
புறஜோடனைகளில் அல்ல; அக வெளிப்பாடே தீர்மானிக்கிறது தரத்தை.
எனது பால்ய பருவ பள்ளி வாழ்க்கையை நினைவுறுத்தியது..
அதைப் பற்றி எழுத தூண்டும் பதிவு.. அழகான நடை.. சொல்ல வந்த கருத்து மிக அருமை..
"எதிரிகள் வாழ்க..!" என்று நானும் ஒரு கவிதை சில நாட்கள் முன்பு எழுதினேன்..
உங்கள் பதிவு படித்து மனதில் பள்ளிப் பருவத்து சில்லென்ற நினைவுகள் படபடத்தது..
தொடருங்கள்.. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
alway engage good relationship with your enemy one day he will change his heart. If you go away from him, it shows that you loose and he won.
தெரிஞ்சவங்க தெரியாதவங்க யாரும் மேட்டருக்கே வரலையே..
சரி.தேவையானவிங்கிலவுங்குக்கு புரிஞ்சா சரிதேன்.னெம்ப எதுக்கு கொழப்பிகிட்டு..
ஜார்ஜ் காலினா ஆ ஆ ஆ?
நோண்டி எடுத்து போட்ட நினைவு செதில் நல்லா இருக்குது .
நேரம் இருந்தா இதை படிங்க http://padukali.blogspot.com/2008/12/blog-post_04.html
படுக்காளி
///கும்க்கி சொன்னது - தெரிஞ்சவங்க தெரியாதவங்க யாரும் மேட்டருக்கே வரலையே..
சரி.தேவையானவிங்கிலவுங்குக்கு புரிஞ்சா சரிதேன்.னெம்ப எதுக்கு கொழப்பிகிட்டு..
ஜார்ஜ் காலினா ஆ ஆ ஆ?//////சாமீ, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......இந்த பதிவ படிச்சதும் எனக்கு தோணினது இதுதான்...யாரு யாரோடி உன்னோட......////நாங்கதான் போட்டுட்டமில்ல
// ஒருத்தர் மீது அன்பைச் செலுத்த அதிக நேரம் யோசிக்கிறோம். ஆனால் வெறுக்க..? ஒரு கணத்தில் வெறுக்கிறோம். //
இந்தப் பதிவை படிக்கும் பொழுது, " வாழ்க்கை எனக்கு வாழ கற்றுக்கொடுக்கவில்லை " என்ற வரிகள் நினைவிற்கு வருகிறது...
உங்கள் பதிவு கற்றுக்கொடுக்கும் எனக்கு...
தொடரட்டும்...
பிரபு ஜெ
என்ன அருமையான எழுத்து.
உங்கள எப்படி பாரட்டரதுனே தெரியல போங்க.
super, the picture too.
Post a Comment