Saturday, March 7, 2009

யாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)*****
வாஆஆஆஆஆஆஆவ்!


எத்தனை நாளாச்சு இப்படி ஒரு கலக்கலான திகில் படம் பார்த்து!

*****

மாதவனின் கர்ப்பவதி மனைவி ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 24 மணிநேரமாகியும் டாக்டர்கள் திட்டவட்டமாக ஒன்றும் கூறாமல் இருக்க, மாதவனின் குடும்பமே அவள் பிழைப்பாளா, கர்ப்பம் கலைந்திருக்குமோ என்று கலங்கி நிற்க.. மாதவன் மணி பார்க்கிறார்.

மதியம் ஒன்று.

‘யாவரும் நலம்’ என்ற சீரியல் போடப்படும் நேரம். அவசர அவசரமாக அந்த சீரியல் பார்க்க வீட்டிற்கு காரில் பறக்கிறார் மாதவன்.

மனைவி ஐ.சி.யு-வில். கணவன் சீரியல் பார்க்க ஒடுகிறானா... நம்பமுடிகிறதா?

ஆம். அந்த சீரியலைப் பார்த்து, தன் மனைவி பிழைப்பாளா மாட்டாளா என அறிந்து கொள்கிறார்.

நம்பமுடிகிறதா?

நமது வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்ட தொலைக்காட்சியில் உங்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் அச்சு அசலாக – ஆள் மட்டும் வேறாக – ஒளிபரப்பட்டால் எப்படி இருக்கும்?

அதுதான் நடக்கிறது மாதவனுக்கு.

அண்ணன், அண்ணி, அவரது குழந்தைகள், தனது மனைவி, தங்கை, அம்மா- என அழகான குடும்பம். புதியதாக கடனில் வாங்கிய ஃப்ளாட்டில் குடிபோகிறார்கள். ஃப்ளாட் நம்பர் 13 B. லிஃப்ட் மாதவன் போகும்போது மட்டும் வேலை செய்வதில்லை. பூஜையறை சுவற்றில் ஆணி அடித்து சாமி படம் மாட்டமுடியவில்லை. செல்ஃபோனில் தனது படத்தை எடுத்தால் கோணல்மாணலாக வருகிறது. இதையெல்லாம் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்வுகளாகத்தான் எடுத்துக் கொள்கிறார் மாதவன்.

குடிபோன அன்றே மதியம் ஒரு மணிக்கு (அதாவது டிஜிட்டல் கடிகாரம் 13 எனக்காட்டும்போது!), சீரியல் பார்க்க அம்மா, மாதவன் மனைவி, அண்ணி உட்கார சேனல் 13ல் நிற்கிறது. வேறு சேனலை மாற்ற முடியவில்லை. சரி என்று பார்க்க, யாவரும் நலம் என்ற சீரியல் ஒரு குடும்பம் புதிய வீட்டிற்க்கு வருவதில் ஆரம்பமாகிறது.

மாதவன் ஒரு நாள் அந்த சீரியலைப் பார்க்க நேர்கையில், இவர் வீட்டில் நடந்த சம்பவங்களே அதில் காட்டப்படுவதை கவனிக்கிறார். அந்த நாளில் சீரியலில் அண்ணனாக வரும் கதாபாத்திரம் தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்.

வீட்டிற்கு வரும் மாதவனின் அண்ணன் அதே போல தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்ல திகிலடிக்கிறது மாதவனுக்கு.

தொடர்ந்து பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் கண்ணில்லாதவரின் நாய் தன் வீட்டு வாசலுக்குள் வராமல் குரைத்துக் கொண்டே இருக்க.. சந்தேகமடைந்த மாதவன் வீட்டு வாசலுக்கு வெளியே நின்று தனது செல்லில் தன்னையே படம் பிடிக்கிறார். நன்றாக இருக்கிறது. அரையடி பின்னே வந்து வீட்டிற்குள் நின்று படம் பிடிக்கிறார். கோணல் மாணலாகிறது. வீட்டிற்குள் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார் மாதவன்.

இடையிடையே அந்த சீரியல் சம்பவங்கள் அதனதன் படியே தனது குடும்பத்தில் நடக்க.. சீரியல் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு போகிறார். அங்கே குஷ்பு வேறொரு ஜாக்பாட் டைப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். மணி 1. சந்தேகமடைந்த மாதவன் அருகிலுள்ள ஷோரூம் ஒன்றிக்கு சென்று அந்தக் குறிப்பிட்ட சேனலைப் போட அது ‘யாவரும் நலம்’ என்ற பெயரில் குஷ்பு நடத்தும் நிகழ்ச்சிதான். சீரியல் அல்ல. மாதவனின் வீட்டில் மட்டும்தான் அது சீரியலாகத் தெரிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை தனது போலீஸ் நண்பன் துணையுடன் துப்பறிகிறார். அந்த சீரியலில் தனது குடும்பமே கொல்லப்பட்டதாய்க் காண்பிக்கப்படுவதை அறிந்த மாதவன்.. அது நடக்காமல் காப்பாற்றினாரா என்பதை வெள்ளித்திரையில் நிச்சயமாகக் காண்க.

மாதவனுக்கு அசத்தலான வேடம். ஹீரோ என்ற எந்த கிரீடமுமில்லாமல் ஒரு குடும்ப வேடத்தை கன கச்சிதமாகச் செய்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தனது வீட்டை அமானுஷ்யம் ஆட்டிப்படைக்கிறது என அறியும்போது முகபாவங்களில் அதிர்ச்சியைக் காண்பிப்பதிலாகட்டும், சீரியலில் தனது குடும்பமே சுத்தியலால் அடிக்கப்பட்டு கொலையாவதை அறிந்த அவர், க்ளைமாக்ஸ் பார்க்கும்போது அந்தக் கொலைகாரன் அவர்தான் என்பதை சீரியலில் பார்த்து, தன்னால் தன் குடும்பத்திற்கு நேரும் ஆபத்தைத் தவிர்க்கப் போராடுவதிலாகட்டும்.. மாதவன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வேறு எல்லா கேரக்டர்களும் அவரவர்கள் பணியை அற்புதமாக எந்த மிகையுமில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சீரியல் விஷயத்தைச் கேட்ட மாதவனின் போலீஸ் நண்பன் சிரிக்கிறார். மாதவன் அவரை நம்ப வைக்க மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சீரியலில் தம்பி கதாபாத்திரம் அவனது போலீஸ் நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாய் காண்பிகிறார்கள். அடுத்த சீன் அந்த போலீஸ் நண்பன் மனைவிக்கு ஏதோ ஆபத்து நிகழ்வதாய்க் காண்பிக்கப்பட, மாதவன் நண்பனை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக அவன் வீட்டிற்கு செல்ல... அங்கே கேஸ் அடுப்பு லீக் ஆகி வீடுமுழுவதும் வாசனை!

போலீஸ் நண்பன் மாதவனிடம் சொல்கிறார்: “டேய் அந்த சீரியல்ல போலீஸ் கேரக்டருக்கு என்ன ஆகுதுன்னு டெய்லி கேட்டு சொல்டா. அந்த கேரக்டர் வர்ற நேரம் காய் நறுக்கப் போகவேண்டாம்னு சொல்டா” என்பது கலகல.


இசை – சங்கர் எஷான் லாய். திகிலாகத்தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அளவுக்கதிகமான இரைச்சல். ஒளிப்பதிவு படத்தின் திகிலூட்டலுக்கு நல்ல உறுதுணை புரிந்திருக்கிறது. அதுவும் 1977களில் நடக்கும் ஃப்ளாஷ்பாக் சீன்களில் காமிரா..விளையாடியிருக்கிறது. (பி.சி.ஸ்ரீராம்க! சும்மாவா!!)

நான் உமா, மீரா மேகாவோடு போனேன். குழந்தைகள் பயந்து பயந்து விழுகிறார்கள். க்ளைமாக்ஸில் உமாவும் கண்ணைமூடி, காதைமூடி உட்கார்ந்து விட்டார். குழந்தைகளை அழைத்துப் போகாவிட்டாலும், மனைவியை அழைத்துப் போங்கள். நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)


ஒரே நேரத்தில் ஹிந்தியில் 13B, என்ற பெயரிலும், தமிழில் யாவரும் நலம் என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் விக்ரம்.கே.குமார். இப்படி ஒரு கதையை 90% லாஜிக்கோடு கொண்டு சென்றது இயக்குனரின் பலம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்... கைகுடுங்க விக்ரம் என்று சொல்ல வைக்கிறது. ஆவி, அமானுஷ்யங்கள் குறித்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் எந்தக் குறையும் இல்லை.

மாதவன் தனது வீட்டின் கதை என்று உணர்ந்தை அவர் குடும்பம் உணராதது ஏன்? சீரியலை தனது உறவினரோடு பகிர்ந்து கொள்ளும் சரண்யாவுக்கு மற்ற வீடுகளில் இந்த சீரியல் இல்லை என்பது தெரியாமல் போனது எப்படி, அது ஏன் லிஃப்ட், செல்ஃபோன் தொந்தரவுகள் மாதவனுக்கு மட்டும்? – போன்ற லாஜிக் ஓட்டைகளை தாராளமாக மன்னித்து படத்தைப் பார்த்து பயந்து நடுங்கி வரலாம்.

யாவரும் நலம் – யாவரும் பார்க்க.

34 comments:

Mahesh said...

சூடான விமர்சனம்... சூடான பின்னூட்டம்...

//நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)//

என்னா வில்லத்தனம் !!

பாண்டியன் புதல்வி said...

மொத்த கதயையும் சொல்லீட்டீங்க...த்ரில் இருக்குமா?

பரிசல்காரன் said...

//பாண்டியன் புதல்வி said...

மொத்த கதயையும் சொல்லீட்டீங்க...த்ரில் இருக்குமா?//

இல்லல்ல.. படத்துல சஸ்பென்ஸ்லாம் இல்ல. இதெல்லாம் ஏன் நடக்குதுங்கறது நல்ல ஸ்க்ரீன்ப்ளேல சொல்லியிருக்கார். அந்த ஸ்டோரி நான் சொல்லவேல்ல.

அதே மாதிரி அந்த க்ளைமாக்ஸ்...ப்பா.. சூப்பர்ப்!

மேவி... said...

முக்கியமா .....
அந்த டிவி சீரியல் டைட்டில் சாங் நல்ல இருக்கு...
அதை சொல்ல மறந்துடிங்களே ....
நேற்று தான் நானும் இந்த படத்தை பாத்தேன் தோழரே.....
அருமையான படைப்பு.......
இந்த மாதிரி பேய் கதையை நான் தமிழ் படங்களில் பார்த்ததில்லை....

படம் முழுக்க சலிக்காமல் பார்க்க முடிந்தது ரொம்ப நாள் கழித்து....

உண்மைத்தமிழன் said...

இது ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தின் காப்பி என்று நினைக்கிறேன்.

இந்தக் கதையை நான் முன்பே விமர்சனமாக வாசித்திருக்கிறேன்.

பரவாயில்லை.. நல்ல விதமாக எழுதியிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் பார்க்க வேண்டியதுதான்.. பார்த்துவிடுகிறேன்...

நிஜமா நல்லவன் said...

பதிவை படிக்காம படம் பார்க்கனும்னு நினைச்சேன்....படிச்சிட்டேன்...கொஞ்சம் சுவாரஸ்யம் குறைஞ்சிடும்...:)

நாமக்கல் சிபி said...

//நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)//

என்னா வில்லத்தனம் !!

ஆவி அம்மணி said...

ஐ நம்ம படமா! பார்த்துட வேண்டியதுதான்!

Cable சங்கர் said...

நல்ல விமர்சனம் பரிசல்.. ஆனா என்ன கொஞ்சம் சீன்களை சொல்லாம இருந்திருக்கலாம்ன்னு தோணுது.. ஏன்னா இந்தமாதிரியான படங்களுக்கு பலமே.. எதிர்பாராமல் வரும் காட்சிக்ள் தான்.

///நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)// //

அப்ப கண்டிப்பா உடனடியா வீட்டோட ஒரு முறை பார்த்துட வேண்டியதுதான்.

இரா. சுந்தரேஸ்வரன் said...

Rosemary's baby-ன்னு ஒரு படம்... உங்களுக்குப் பிடிக்கலாம்.

சரவணகுமரன் said...

எதிர்ப்பார்ப்ப கூட்டி விட்டீங்க!

வால்பையன் said...

இது ஒரு ஆங்கில படத்தின் கதை தளுவல்.

அந்த கதை ஒரு ஹோட்டல் அறையில் நடக்கும். இங்கே வீடு.

அங்கே திரில் மற்றும் கொடுரகொலைகள் நடக்கும்.

இங்கே இப்படின்னு தெரியல.

தமிழ் படம்னாலே எனக்கு கொட்டாவி தான் வருது.

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கிபவா said...

யாவரும் நலம்.

ஆனா என் டங்குவாரு மட்டும் பிஞ்சிட்டு தொஙுது..

ஃபோன்ல விளக்கம் சொன்னத கேட்டுட்டு அம்மா என்னடான்னு பயந்து போய் கேட்கறாங்க..

உங்க ப்டமும் சூப்பர் ஹிட்டுதாங்க

narsim said...

பரிசல்.. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனதிற்கு நன்றி.. பார்த்துவிட்டு வருகிறேன்.

முரளிகண்ணன் said...

உங்கள் விமர்சனம் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான் என்று மனதுக்கு சொல்கிறது பரிசல்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்ம தலைஎழுத்து நண்பா.. யாரால மாத்த முடியும்? நேத்திக்கு நான் கிளம்பினது யாவரும் நலம் பார்க்க.. பெருந்துறையில் படம் வெளியாகவில்லை.. ஈரோட்டுக்கு போக சோம்பேறி பட்டுக்கிட்டு..வேற வழி இல்லாம.. 1977 பார்த்தேன்.. அதாவது சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிட்டேன்.. பரவா இல்ல.. நீங்களாவது நல்ல படம் பார்த்தீங்களே.. கண்டிப்பா இந்த படத்த பாரத்துடனும் நண்பா..

கவிதா | Kavitha said...

//நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். //

:) உங்கள தினம் தினம் பார்த்து பயம்னா என்னானே அவங்களுக்கு எல்லாம் தெரியாம போயிருக்கும்..

:)

தேடுதல் said...

நல்ல திரில்லர் பார்த்து நாளாச்சு. படம் பார்த்தேன்..சும்மா சொல்லக்கூடாது நல்லா பண்ணியிருக்காங்க. இப்ப வர்ர படங்கள பார்த்து வெருத்து போயிருக்கிறவர்களுக்கு இது ஒரு நல்ல தீனி. அதுவும் தமிழில் இந்த மாதிரியான ஒருஜினல் திரில்லர் பார்த்து யுகமாயிடுச்சி.

@வால்பையன்
///இது ஒரு ஆங்கில படத்தின் கதை தளுவல்.

அந்த கதை ஒரு ஹோட்டல் அறையில் நடக்கும். இங்கே வீடு.

அங்கே திரில் மற்றும் கொடுரகொலைகள் நடக்கும்.

இங்கே இப்படின்னு தெரியல.

தமிழ் படம்னாலே எனக்கு கொட்டாவி தான் வருது.////

அந்த படத்திற்க்கும் இதுக்கும் சம்பந்தமேயில்ல...அது "Trapped" என்று ஆங்கிலத்தில் வந்தது. அது ஒரு குப்பை. கடைசியில் சப்பென்று முடியும். இந்த படத்தின் plot வேறு.

///தமிழ் படம்னாலே எனக்கு கொட்டாவி தான் வருது.////

தமிழ் படம்ன என்ன ஒரு இழக்காரம்...மொதல்ல போயி பாத்துட்டு சொல்லுங்க.

சுரேகா.. said...

//சூடான விமர்சனம்...//
//உங்கள் விமர்சனம் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தான் என்று மனதுக்கு சொல்கிறது பரிசல்.//

ரிப்பீட்டேய்....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

திரைப் படங்கள் பார்க்கும் வழக்கமில்லை எனக்கு.ஆனாலும் உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது.கண்டிப்பாக பார்க்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

Ok...

Gajen said...

//இப்ப வர்ர படங்கள பார்த்து வெருத்து போயிருக்கிறவர்களுக்கு இது ஒரு நல்ல தீனி//

அப்ப படத்த எப்பிடியும் பாத்துர வேண்டியது தான்.

தர்ஷன் said...

ஏன் இந்த கொலை வெறி இப்படியா முழு கதையையும் சொல்லுவாங்க

சந்தனமுல்லை said...

////நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். //

:) உங்கள தினம் தினம் பார்த்து பயம்னா என்னானே அவங்களுக்கு எல்லாம் தெரியாம போயிருக்கும்..
//

LOL!

selventhiran said...

விமர்சனமே பயப்படுத்துகிறது. ஸ்கிப் பண்ணிடலாமான்னு பாக்குறேன்.

Prabhu said...

நல்லா இருக்கு. ஆனா கொஞ்சம் சீன்கள மறைச்சிருக்கலாம் நீங்க. கொஞ்சம் ஜாஸ்தியா சொன்ன மாதிரி தெரியுது. சஸ்பென்ஸ் உடையுதுல சார்.

Guru said...

I think the english movie is 'Vacancy'.. Sorry If I'm Wrong and sorry for English too..

☼ வெயிலான் said...

தமிழில் அதி அற்புதமான திகில் படம். விமர்சனத்தில் காட்சிகள் விவரிப்பை தவிர்த்திருக்கலாம்.

கார்க்கிட்ட ஏதோ சித்து விளையாட்டு காண்பிச்சிருப்பீங்க போல!

Sundar சுந்தர் said...

>>நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)<<

:)

ராமய்யா... said...

விசில் போன்ற மொக்கை திகில் (எனச் சொல்லப்பட்ட) படங்களை பார்த்திருக்கிறோம்.. ஆனால் உண்மையான திகில் என்றால் என்ன என்பதை இந்த படத்திலும், நம் தலை விஜய டி ஆர் வேட்டி எப்போது அவிழும் என்ற காட்சி உடைய வீராசாமி படத்திலும் தான் உணர்ந்தேன்..(என்ன பண்ண சார்.. தலைவர் அவ்வளோ பாதிசிட்டார் )

Shiva said...

உங்க விமர்சனம் பார்த்து என்னோட நண்பன் படம் பார்க்க கூப்பிட்டான். படம் நல்லா இருந்தது. மேலே சொன்ன Vacancy படத்துக்கும் 1408 படத்துக்கும் இதுக்கும் பெரிசா சம்பந்தம் இல்ல. ஆனா கண்டிப்பா இந்த படம் ஆங்கிலபட தழுவல் தான்.


மாதவன் நல்லா நடித்துருக்கிறார். முகபாவங்களும் பதட்டமும் பிரமாதம். படத்தின் முதலில் வரும் பாடல் காட்சியையும் சில க்ல்யாமர் காட்சிகளியும் நீக்கினாலே இது யூ படம் ஆகிடும். திறமையான திரைக்கதை நேர்த்தியான காமெரா பதிவு. திகில் தான். 13ஆம் எண் தான் உதைக்கிறது. ஆங்கில படத்தின் சாயல் தெரிகிறது. நெறய காட்சிகள் சபாஷ் சொல்ல வைக்கிறது. கடைசி காட்சி தான் படத்தின் மொத்தமாக உள்ளது. ஐந்து மதிப்பெண்ணுக்கு 4 கொடுக்கலாம்.

Goofs: பரிசால்கரன் அண்ணன் சொன்னதும் ஆங்கில நாளிதழ் வாங்கி படிக்கும் போது தமிழில் தொலைக்காட்சி தொடர் பட்டியல் இருப்பது லாஜிக் இடிக்கிறது.Similarity between Villain and Madhavan's brother and the mentally challanged person confuses very much.


மொத்தத்தில் படம் அருமை.
நன்றி,
குஹன்.

குடுகுடுப்பை said...

எங்க வீட்டில ரெண்டு பயந்தாங்கொள்ளிங்க(மனைவி+மகள்) ரெண்டு பேருக்கும் பயந்து நான் இந்தப்படத்த பாக்கமுடியாது

SRK said...

200 பேர் அமரக்கூடிய திரையரங்குல நான் மட்டும் தனியா அமர்ந்து இந்தப் படத்தை பார்த்தேங்க, இப்பத்தான், ஒரு மணி நேரம் முன்னாடி. சில 'லாஜிக்' குறைபாடுகள தவிர்த்துட்டுப் பார்த்தா, இது ஒரு நல்ல படந்தாங்க. கண்டிப்பா பாக்கலாம்.

poonguzhali said...

விமர்சனம் ஆரம்பத்தில் அருமை. ஆனா முழு கதையை எழுதி படத்தோட சுவாரசியம் குறைசிடீங்க. அது எப்படி எல்லாரும் இப்படித்தான் நாம் பார்க்கும் பொது உள்ள interest/suspense அடுத்தவங்களுக்கு தேவை இல்லைன்னு நினைக்குறாங்க. நானும் அப்படிதான்.