Wednesday, March 11, 2009

புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!






1) நிச்சயமாக திரும்பிவரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்பவரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் புத்தகத்தை இரவல் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.

3) ‘எந்தப் புத்தகத்தையுமே இரண்டொரு நாளில் படித்து விடுவேன். குடுங்க. படிச்சுட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த சுஜாதா புக்கை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘புக்கை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் இரவல் கொடுத்த புத்தகத்தை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய புத்தகத்தில் ஏதாவது அடிக்கோடிடுவது, கிறுக்குவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.




7) உண்மையாகவே அந்தப் புத்தகத்தை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) இரவல் குடுத்து திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்குப் புத்தகம் கொடுத்தால் அந்தப் புத்தகம், அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) இரவல் வாங்கினால் உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல புத்தகம் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல புத்தகத்தை இரவலாகக் கொடுப்பதால் அந்த நல்ல புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு கிடைக்கும் ராயல்டிக்கு நாம் தடையாக இருக்கிறோம்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!

42 comments:

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்ட்டூ

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா கேபிள் சங்கர் அண்ணனை முந்தியாச்சு :)

மேவி... said...

"டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்! "

எல்லாத்தையும் சொல்லிட்டு ......
இப்படி டிஸ்கி போட்டால்....
எப்படி ????

மேவி... said...

i me th 4th

மேவி... said...

"எம்.எம்.அப்துல்லா said...
ஹையா கேபிள் சங்கர் அண்ணனை முந்தியாச்சு :)"

naanum thaan tholare

Gajen said...

ஹாஹாஹா...நெறைய புத்தககங்கள 'தொலைச்சிருக்கீங்க' போல?

வெட்டிப்பயல் said...

நாளைக்கு தமிழ்மணத்துல எத்தனை சங்கடங்கள் வர போகுதோ :)

கோவி.கண்ணன் said...

அடுத்த எதிர்பதிவுக்கு சுழி போட்டாச்சா ?
:)

யார் முந்துறாங்கன்னு பார்கனும் !

கார்கி, சஞ்செய், தமிரா கமான் கமான் !

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ச்ச் இத்தனை சங்கடங்களா?? நல்ல வேளைன்னா எங்க வீட்டுக்கு பக்கத்தில் தமிழர்கள் [குறிப்பாக பதிவர்கள் ]யாருமே இல்லை :P

Cable சங்கர் said...

எல்லா விஷயமும் உண்மையே.. பரிசல்.. நான் இதனால் புத்தகம் கொடுப்பதை தவிர்த்து விடுகிறென். எனக்கு அதே போல் டிவிடி கொடுப்பதற்கும் இதே பிரச்சனை.

கொஞ்சம் அசந்துட்டேன்.. அதுக்குள்ள.. முந்திகிட்டாங்க..

Unknown said...

//2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது//

இந்த ஒரு விஷயத்துக்காகவே கொடுக்கறதில்ல... ஆனா வாங்கறதுண்டு.. ;)))))))

ச.முத்துவேல் said...

இரவல் வாங்கியப் புண்ணியவான்கள், மேலும் இரவல் தந்து நல்லபெயர், புண்ணியம் வாங்கிக்கொள்கிறார்கள்.புத்தகத்தின் சொந்தக்காரர் இதனால் பல நண்பர்களைத் தேடிக்கண்டடைகிறார் .

நம்ம புக்ஸை பொலிவோடு, லேசாப் பிரிச்சுப் படிப்போம். ஒரு சுத்துப் போய்வந்ததுன்னா, கந்தல்தான்.

சேம் ப்ளட்..கொஞ்சமா.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

12 ஆவது சங்கடம்..

நாம் பரிசல்கிட்ட வாங்குன புத்தகம் 1.5 வருஷம் ஆச்சே,இன்னும் கொடுக்கலையே,ஒரு வேளை நம்மளக் காச்சுறதுக்குத்தான் இந்தப் பதிவு போட்டுருக்காறோ என்று இரவலர்கள் பரிசலை தவறாக நினைத்துக் கொள்ளப் போகும் சாத்தியங்கள்...

குசும்பன் said...

நண்பர் ஒருவர் என்ன எவ்வளோ நேரம் வேண்டும் என்றாலும் படிங்க, எப்ப வேண்டும் என்றாலும் வந்து படிங்க ஆனா இந்த என் ரூம் குள்ளேயே உட்காந்து படிங்க, வெளியில எடுத்து போகாதீங்க என்று சொல்லுவார்:)))

☼ வெயிலான் said...

ஆமா! புதுசா எதுவும் புத்தகம் வாங்கியிருக்கீங்களா?

அப்துல்லா அண்ணன் கூட புத்தகம் அனுப்பிச்சாராம். உங்க கிட்ட வாங்கிக்க சொன்னார்.

அப்புறம் நீங்க இரவல் வாங்கின புத்தகமெல்லாம் எப்ப திரும்ப தரப் போறீங்க ;)

கார்க்கிபவா said...

களத்துல் இறங்கலாமா சகா?

தமிழ் உதயன் said...

நல்லவேளை

நான் ஒரு புத்தகம் கூட இன்னும் உங்களிடம் (இரவல்) வாங்கவில்லை...

நன்றி

தமிழ் உதயன்

வால்பையன் said...

//புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!//


பத்திலிருந்து பதினொன்னுக்கு மாறியாச்சா?

Mahesh said...

அடாடா... இப்பத்தான் தெரியுது என் புத்தக அலமாரிக்குள்ள இம்புட்டு புத்தகம் எப்பிடி சேந்துதுன்னு... இனிமே இரவல் வாங்கினா யார்கிட்ட இருந்து வாங்கினோம்னாவது குறிச்சு வெச்சுக்கணும் :)))))))))

வால்பையன் said...

எதிர்பதிவு நான் எழுதிட்டேன்!
வேற யாரும் எழுதிராதிங்கப்பூ!

karishna said...

ரொம்ப சரி !! என் அம்மா கூட அவங்க கிழித்து கிழித்து சேர்த்து வைத்திருக்கும் சமையல் குறிப்பா யார்க் கேட்டாலும் தர மாட்டார்கள்

-தங்கள் blog-இன் புதிய வாசகி & ரசிகை

Ramesh said...

Once during 1980's in Kolkatta I got a fiction, from a library, with a five rupees note stuck in it (worth Rs 160 now). May be the person, forgot using it as a book mark! 25 paise was the weeks reading charge.

The book is Sons & Lovers by DH Lawrence.

ராஜ நடராஜன் said...

நானெல்லாம் ஓசி கிராக்கிதானுங்க.இடம் தூரமாப் போயிடுச்சே:)

வால்பையன் said...

http://valpaiyan.blogspot.com/2009/03/blog-post_355.html

Thamira said...

சில பேரின் மீது இருந்த கொலவெறி மீண்டும் தலை தூக்கியது இந்தப்பதிவால்..

Ungalranga said...

நான் கூட சிபிக்கு ஒரு புத்தகம் கொடுத்தேன்..
மனுசன் என்னென்ன பண்ணி வெச்சிருக்காரோ...
அவ்வ்வ்வ் :((

(பி.கு)அந்த புத்தகத்தை அவரோட வீட்டில்தான் சுட்டேன்.அவங்க அம்மா பர்மிஷனோட.. ஹிஹி..

selventhiran said...

"கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்புவதில்லை" - சுரதா

ambi said...

பதிவு கெடக்கட்டும் krishna, போட்டோ எல்லாம் தூள் கிளப்புது, ஆக அடுத்த வாரம் வீட்ல தீவாளியா? :)) (கிசுகிசு மாதிரி இருக்கோ?)

புருனோ Bruno said...

அனுபவப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

//டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!//

இதை ”ஸ்டிக்கர்” அடித்து ஒட்டலாமே :) :) :)

Mahesh said...

அவ்வ்வ்.... முடியல.... நானும் ஒரு எதிர்பதிவு போட்டுட்டேன் !!

SK said...

கும்முங்க

அடிச்சு ஆட ஆரம்பிச்சுடாங்க :)

இதுக்கு தான் நான் புக் படிக்கறதே இல்லை :) :)

SK said...

முசிக் ஆரம்பம் ஆகியாச்சு போல :)

Prabhu said...

நல்லா யோசிச்சு போட்டிருக்கீங்க. ஆனா இந்த நம்பர் கேள்வி சரக்கு வந்தா மட்டும் எல்லாரும் சூடு ஆறுறதுக்குள்ள எதிர் பதிவு போட்டுடுறாங்களே!

கார்மேகராஜா said...

எல்லாம் சரி தலைவா! என்கிட்ட வாங்கின ‘எட்டு புள்ளீ கோலங்கள்’ புத்தகத்தை எப்ப திருப்பி தருவீங்க?

(சும்மா)

அ.மு.செய்யது said...

ஆஹா...கொடியசைச்சி ஆரம்பிச்சி வைச்சீட்டீங்க...

தொட‌ர்ப‌திவுக‌ளின் ஆதார‌ப் புள்ளி !!!

anujanya said...

இதோ பாரு கிருஷ்ணா, நானா கேட்கவில்லை. நம்ம பொது நண்பர், எதோ என் வாசிப்பறிவை விரிவாகலாம்னு பார்த்தா..... தனியா பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்திற்கு பொதுவில் ஒரு பதிவா? நல்லா இருப்பா..:)))

அனுஜன்யா

"கருவெளி" said...

ஏகப்பட்ட அனுபவம் போல...
இன்னும் இருபது சங்கடங்களை சலிக்காமல் சொல்லுவீங்க போல..

"நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்குப் புத்தகம் கொடுத்தால் அந்தப் புத்தகம், அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது."

பெர்னாட்ஷா இருந்தா உங்களை நேரில் பார்த்து பாராட்ட நினைப்பார்...

Ungalranga said...

தலைவா.. உங்க ஸ்டைலியே.. ஒரு பதிவு...

http://ungalranga.blogspot.com/2009/03/blog-post_11.html

பாத்துட்டு கும்முங்க.. நன்றி..
உங்க பதிவு அருமை அதான் கடத்திட்டேன்..
சாரி.. மன்னிக்கவும்...

narsim said...

//டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்! //

ஹுக்கும்!


//
செல்வேந்திரன் said...
"கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்புவதில்லை" - சுரதா
//

கலக்கல். ‘சொல்’வேந்திரன்

//

// புருனோ Bruno said...

இதை ”ஸ்டிக்கர்” அடித்து ஒட்டலாமே :) :) :)

//

நான் ஒன்னும் வாங்கலையே டாக்டர்..புரியலையே..

யாத்ரா said...

//9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்குப் புத்தகம் கொடுத்தால் அந்தப் புத்தகம், அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.//

15 வருட நட்பு
சுமார் 700 ரூபாய் பெறுமானமுள்ள,,,
பணத்தை விடுங்க, ஆதவனோட மொத்த சிறுகதைத் தொகுப்பு,
இழப்பு தான்,
எப்பவாவது அந்த புத்தகங்களை பார்க்கும் போது என் நினைப்பு அல்லது கோபமாவது வரலாம் அவனுக்கு

cheena (சீனா) said...

இவ்வளவு சங்கடங்கள் இருக்கா புத்தகம் இரவல் கொடுப்பதுலே - அது சரி - இதுக்கெல்லாம் எதிர் பதிவு வேற - மகேசு - அருணு - ரங்கன் - எப்ப்பா - காத்துக்கிட்டு இருக்காங்க - நல்லாருக்குப்பா

நையாண்டி நைனா said...

என்னோட சார்பாவும் ஒரு பதிவு போட்டுட்டேன்....

தலைப்பு: "பதினாறு வயது பையனாக இருப்பதனால், வரும் பதினோரு சங்கடங்கள்!"

போய் பாருங்க: http://naiyaandinaina.blogspot.com/2009/03/1.html