Sunday, March 8, 2009

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!

1869ல் பிரிட்டிஷ் அமைச்சர் ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் பார்லிமெண்டில் பெண்கள் ஓட்டளிக்க உரிமை கோரி ஒரு மனுவைச் சமர்ப்பித்தார். 1893 செப்டம்பர் 19ல் முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையைத் தந்த நாடு... நியூசிலாந்து.

1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹகெனில் நடைபெற்றது. ஜெர்மனியின் 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி'யின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையைத் தெரிவித்தார். பெண்கள் தங்கள் உரிமை கோர சர்வதேச முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஒருமனதார வரவேற்றனர்.

தொடர்ந்த ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. (ஆம்.. மார்ச் 19.. எட்டு அல்ல!)

ஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் துவங்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகள் எழுதின. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.

1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி.. எட்டுத் திக்கும் பரவியது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து.. இன்றளவும் மார்ச் எட்டு, சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

*****************************

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் ஸதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்து நின்றாடுவோம்.

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரி னுமிந்தப் பெண்மை யினிதடா !!!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

“போற்றி தாய்” என்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

“போற்றி தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
“போற்றி தாய்” என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

- மகாகவி பாரதி.



சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்!

43 comments:

Thamira said...

வழிமொழிகிறேன். வாழ்த்துகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்டூ

:)

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் யாருய்யா மீ த ஃபர்ஷ்டூ போடயிலேயே குறுக்க வர்றது???

Senthuran said...

title eluthupilai parunka sir

எம்.எம்.அப்துல்லா said...

தமிரா அண்ணே பெண்களை மதிக்கிறதுல நான் தா ஃபர்ஷ்ட்டூ சொல்லலாம்னு பார்த்தேன் நீங்க முந்திட்டீங்களே!!!!!!!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மகளிர் தின வாழ்த்துகள்!

Thamira said...

அண்ணே பெண்களை மதிக்கிறதுல நான் தா ஃபர்ஷ்ட்டூ சொல்லலாம்னு பார்த்தேன் நீங்க முந்திட்டீங்களே!///

அதெப்படி தேவைப்படும் இடங்களில் கரெக்டா இருப்பான் இவன்.. ஹிஹி..

எம்.எம்.அப்துல்லா said...

தாமிரா அண்ணே பெண்கள் பற்றிய பதிவில “கும்மி” இல்லாட்டி எப்படி???

ஸ்டார்ட் பண்ணுவோமா???

Thamira said...

தாமிரா அண்ணே பெண்கள் பற்றிய பதிவில “கும்மி” இல்லாட்டி எப்படி?//

(யோவ்.. இன்னா காலையிலேயே.. பல்லு தேய்ச்சாச்சா?)

நிச்சயமாய்..!

அது இந்த தீராத தளைகளை அவர்கள் வெல்வதாய் ஆகும் ஆனந்தக்கும்மியாக இருக்கட்டும்..

எம்.எம்.அப்துல்லா said...

நம்ம கும்மி எப்பவும் ஆனந்தக்கும்மிதானே!!!!

Thamira said...

நம்ம கும்மி எப்பவும் ஆனந்தக்கும்மிதானே!// பதில் சொல்லமுடியாத படிக்கு ஸ்டேட்மெண்ட் விட்டா எப்படி கும்முறதாம்..

Thamira said...

நான் வேணா.. பெண்களுக்கு எதிரா ரெண்டு கருத்துச்சொல்லவா? எனக்கு அந்தப்பழக்கமே கிடையாது.. இருந்தாலும் டிரை பண்ணவா? கும்மியடிக்க வசதியா இருக்கும்.!

எம்.எம்.அப்துல்லா said...

//நான் வேணா.. பெண்களுக்கு எதிரா ரெண்டு கருத்துச்சொல்லவா? //

பரவாயில்லை...இன்னைக்கு நல்ல மூடுல இருக்கீங்க போல... ரெண்டு மட்டும் சொல்றேங்குறீங்க!!!

எம்.எம்.அப்துல்லா said...

ஏண்ணே அடுத்த நாடாளுமன்ற தேர்தல்லயாவது அவங்களுக்கு இட ஒதுக்கீடு வருமா???

நம்பளே ரவுடியா இருந்தா எப்படி??? அவங்களும் பாவம்ல :)

Thamira said...

அவுங்க ரொம்ப ரொம்ப தங்கமானவங்க.. மணியானவங்க..

எம்.எம்.அப்துல்லா said...

//அவுங்க ரொம்ப ரொம்ப தங்கமானவங்க.. மணியானவங்க..

//


அதான பார்த்தேன்,,, என்னடா இன்னும் தாமிராகிடேந்து தங்கமணிங்குற வார்த்தைய இன்னும் காணோமேன்னு..

எம்.எம்.அப்துல்லா said...

உங்க சொத்துல பாதிய அண்ணி பேர்ல எழுதி வச்சுட்டீங்களாண்ணே???

Thamira said...

நம்பளே ரவுடியா இருந்தா எப்படி??? அவங்களும் பாவம்ல :)// இதுதாங்க.. உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான செயல்ங்க.. நாம் பட்ட துன்பம் அவுங்களும் படட்டும் நினைக்குறது..

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள நம்ப முடியாது. சம உரிமை தர்றேன்னு அண்ணி சொத்துல பாதிய எழுதி வாங்கிருப்பீங்க. :))

Thamira said...

உங்க சொத்துல பாதிய அண்ணி பேர்ல எழுதி வச்சுட்டீங்களாண்ணே???//

அப்பிடின்னா என்னுதுண்ணே.?

எம்.எம்.அப்துல்லா said...

//இதுதாங்க.. உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான செயல்ங்க.. நாம் பட்ட துன்பம் அவுங்களும் படட்டும் நினைக்குறது..
//

தென்றல் அக்கா, ராமலெஷ்மி அக்கா, ஷைலஜா அக்கா மற்றும் எல்லா அக்காகள்கிடயும் எனக்கு ஐ வாங்கி தர்றதுன்னு பிளான் பண்ணிடீங்க போல. நடத்துங்க...நடத்துங்க...

Thamira said...

அண்ணி சொத்துல பாதிய எழுதி வாங்கிருப்பீங்க. :))// ஆமா.. கரெக்டா சொன்னீங்க.. ரமா கொண்டு வந்த ரெண்டு சூட்கேஸ்ல ஒண்ணு அவங்களுக்கு, இன்னொண்ணு எனக்குதான்.

எம்.எம்.அப்துல்லா said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

என் சொத்தே என் தங்ஸ்தான்

(அப்பாடா...மத்தியானம் பிரியாணி கரெக்ட் பண்ணியாச்சு)

:)

எம்.எம்.அப்துல்லா said...

மீ த 25 :))

எம்.எம்.அப்துல்லா said...

மீ த 25 :))

Thamira said...

(அப்பாடா...மத்தியானம் பிரியாணி கரெக்ட் பண்ணியாச்சு)//

காத்து வாங்கிகிட்டு ஒக்காந்திருக்கேன்.. மத்தியானம் ஊட்டுக்கு வந்திரவா?

எம்.எம்.அப்துல்லா said...

//எனக்கு ஐ வாங்கி //


ஸ்பெல்லிங் மிஸ்டேக்..சாரி.. “ஐ” என்னும் இடத்தில் ”அடி” ந்னு மாத்திக்கங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//காத்து வாங்கிகிட்டு ஒக்காந்திருக்கேன்.. மத்தியானம் ஊட்டுக்கு வந்திரவா //

என்னாதிது....சின்னப்புள்ளதனமா கேள்வி கேட்டுகிட்டு!!!!!

Thamira said...

மீ த 25 :))// அடப்பாவிகளா? திரும்பவும் நான் ஒரு பேக்குங்கிறத நிரூபிச்சுட்டீங்களே? நா இந்த கும்மியில 25ஐ மறந்துட்டேன். நீங்க இவ்ளோ நேரம் என்ன போட்டு வாங்குனது இதுக்குதானா? அவ்வ்வ்வ்வ்.. வட போச்சே.!

எம்.எம்.அப்துல்லா said...

வலை உலக அக்கா, தங்கச்சி அத்தனை பேருக்கும் மனம்கனிந்த மகளிர் தின வாழ்த்துகள்.

தமிராண்னே கிளம்புவோமா???

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க இவ்ளோ நேரம் என்ன போட்டு வாங்குனது இதுக்குதானா? அவ்வ்வ்வ்வ்.. வட போச்சே.!
//

ஹி...ஹி...ஹி... இப்பவாவது புருஞ்சுச்சே. :))

Thamira said...

சரி, மறுக்கா வாழ்த்து சொல்லீட்டு பொழப்பப் பார்ப்போமா? (அதான் பல்லு வெளக்குறது..)

எம்.எம்.அப்துல்லா said...

பை..பை..

Mahesh said...

ஜூப்பர் டாபிகல் பதிவு....

Mahesh said...

அங்க அவனவன் கடை காத்தாடுது... இங்க வந்து கும்மியப் போடுறாங்க... போய் புள்ள குட்டிய படிக்க வைங்க.. போங்க.. போங்க..

அறிவிலி said...

ஹ்ம்ம்ம்... ந்ம்ம வூட்ல நிதமும் மகளிர் தினம்தான். எப்பயாவது ஊருக்கு போனங்கன்னா நம்ம தினம்

கணினி தேசம் said...

வழிமொழிகிறேன். வாழ்த்துகிறேன்.

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு பதிவு!

பரிசல்காரன் said...

// Senthuran said...

title eluthupilai parunka sir//

தலைப்புல தவறில்ல தோழர்.

அது கவிதைத் தமிழ்ங்க. இப்படித்தான் எழுதணும்!

(வாழ்கவென்று - அப்படீன்னு வரணுமேன்னு நெனைச்சு சொல்றீங்கன்னு நெனைக்கறேன். )

@ தாமிரா & அப்துல்லா

ம்ம். என்னடா லீவன்னைக்கு 39 கமெண்டுன்னு பார்த்தா.. உங்க வேலதானா அது?

selventhiran said...

அன்பின் பரிசல், முதலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளித்தது 'அயர்லாந்து' எனப் படித்ததாக ஞாபகம். சரிபார்த்துக்கொள்ளவும்.

narsim said...

வாழ்த்துக்கள்..

@ அப்துல்லா & தாமிரா.. அடுத்த வாரத்துக்கு ஒத்திகை மாதிரி தெரியுதே..

வால்பையன் said...

//எம்.எம்.அப்துல்லா said...

தமிரா அண்ணே பெண்களை மதிக்கிறதுல நான் தா ஃபர்ஷ்ட்டூ சொல்லலாம்னு பார்த்தேன் நீங்க முந்திட்டீங்களே!!!!!!!!!!//

தலை எவ்வழியோ!
வாலும் அவ்வழி!