Tuesday, March 31, 2009

சைக்கோ - PSYCHO







1960ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.

அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.

ஒரு வெள்ளிக்கிழைமையின் மதிய உணவு இடைவேளையில் காதலன் சாமை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள் காதலி மரியான் (JANET LEIGH). திருமணத்தைத் தள்ளிப்போடும் காதலனுடனான சிறுவிவாதத்திற்குப் பிறகு அவள் தனது அலுவலகத்திற்குப் போகிறாள்.

புதியதாக ஒரு சொத்து வாங்க 40000 டாலர்களை மொத்தமாக ஒரு செல்வந்தர் கொடுக்க.. அதை வாங்கியவள் ‘வங்கியில் அதை டெபாசிட் செய்திவிட்டு அப்படியே வீட்டுக்குப் போகிறேன்’ என்று பாஸிடம் அனுமதி பெற்றுச் செல்கிறாள். அங்கேதான் படமும், அவள் வாழ்க்கையும் திசை மாறுகிறது.

ஏதோ ஒரு முடிவுடன் தனது அறைக்குச் சென்று ஆடைகளை ஒரு சூட்கேஸில் பேக் செய்து காரில் கிளம்புகிறாள் அவள். ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு வந்து, காரை விற்று வேறு கார் மாற்றி… நார்மென் பேட்ஸ் (ANTONY PERKINS) என்பவருக்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்குகிறாள். 12 அறைகளைக் கொண்ட அந்த விடுதியில் யாருமில்லை.

அந்த இரவில் உணவு கிடைப்பது அரிதென, நார்மென் பேட்ஸ் அவரது வீட்டில் டின்னருக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிச் செல்கிறார். அங்கே நார்மென் பேட்ஸுக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் நடப்பதை கேட்கிறாள் மரியான். சற்று நேரத்தில் நார்மென் பேட்ஸ் விடுதிக்கே உணவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.

அதன் பிறகு குளிக்கச் செல்கிறாள் மரியான் . அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. திடீரென வந்த யாராலோ குரூரமாகக் குத்திக் கொலை செய்யப் படுகிறாள்.




காலையில் வந்து பார்த்த நர்மென் பேட்ஸுக்கு அதிர்ச்சி. அவசர அவசரமாக எல்லா ரத்தக் கறைகளையும் துடைத்து விடுதியை சுத்தப்படுத்தி காரையும், இறந்த மரியானையும் ஒரு புதைகுழியில் தள்ளிவிட்டு எப்போதும் போல விடுதிக்கு வந்துவிடுகிறார்.

அங்கே மரியானைக் காணாத அவளது தங்கை லைலா (VERA MILES), மரியானின் காதலன் சாமிடம் அவள் போயிருக்கக்கூடும் என்று நினைத்து அவனைத் தேடிப் போகிறாள். அவள் காதலனுக்கும் ஒரு விபரமும் தெரியவில்லை. இடையில் ரூ.40000த்தை
தொலைத்த முதலாளி அனுப்பி வரும் ப்ரைவேட் டிடக்டீவ் ஆர்பகாஸ்ட் என்பவரும் தேடுதல் வேட்டையில் இறங்கி.. நார்மன் பேட்ஸின் விடுதிக்கு சென்று.. அவர் மீது சந்தேகம் கொண்டு – பேட்ஸின் வீட்டிற்கு செல்ல.. யாராலோ குத்திக் கொலை செய்யப் படுகிறார். பேட்ஸின் வீட்டிற்கு செல்லும் முன் லைலாவிற்கு தொலைபேசிய டிடக்டீவ் பேட்ஸின் வீட்டில் பேட்ஸின் வயதான தாயை மரியான் சந்தித்திருக்கக் கூடும் அங்கேதான் ஏதேனும் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்.




கடைசியாக இதற்கெல்லாம் என்ன காரணம் என அறிய சாம், லைலா இருவரும் செல்கின்றனர். பேட்ஸின் விடுதியில் அறை எடுத்துத் தங்கி.. பேட்ஸிடம் சாம் பேச்சுக் கொடுத்த வண்ணம் இருக்க.. பேட்ஸின் வீட்டிற்கு சென்று அந்த வயதான தாயாரைப் பார்க்க லைலா போகிறாள்..

அங்கே....

வயதான தாயென்று யாருமே இல்லை.

அப்படியானால் கொலை செய்ததெல்லாம்...?

அந்த வயதான தாய்தான். எப்படி?

படம் பாருங்கள்!

1960ல் வெளியான கருப்பு வெள்ளைப் படம். ச்சான்ஸே இல்லை. அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை (ஜோசப் ஸ்டெஃபானோ. ராபர்ட் BLOCHன் நாவலைத் தழுவி). நார்மென் பேட்ஸாக நடித்த ஆண்டனி பெர்கின்ஸ்-சின் நடிப்பு பிரமாதம். அதுவும் இறுதிக் காட்சியில் அவர் கண்களில் தெரியும் அமானுஷ்யம்... இன்னும் பயமுறுத்துகிறது!

அருமையான கேமரா கோணங்கள் (ஜான் ரஸல்) படம் ஆரம்பிக்கும்போதே அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகர் முழுவதும் பறவை போல பறந்து சாம்-மரியான் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஒரு ஜன்னலின் லேசாக திறந்திருக்கும் ஸ்க்ரீனின் கீழ்ப்பகுதியில்தான் உள்ளே போகிறது காமிரா. ங்கொய்யால 1960ல ஒரு மனுஷன் இப்படி சிந்திச்சிருக்கான் பாருடா என்று பிரமிக்கத் தோன்றுகிறது.

அதெபோல மரியானைப் பின்தொடரும் போலீஸ் கார் பாதை மாறுவதைப் பார்த்து அவள் முகம் நிம்மதி அடைவதை நமக்கு உணர்த்த காரோட்டும் அவள் முகத்தை நமக்கு காட்டி, அவள் பின்னால் தெரியும் காரின் பின்கண்ணாடியில் போலீஸ் கார் வேறு பாதைக்கு மாறுவதையும் நமக்கு காட்டி, இவள் அதை ரிவர்வ்யூ மிர்ரரில் பார்ப்பதையும் நமக்குக் காட்டி.... மூன்று கோணங்களில் எடுக்க வேண்டிய காட்சியை ஒரே கோணத்தில் அடக்கி.... ப்பா!

அதேபோல ஷவரை குளிப்பவரது கோணத்தில் எடுத்திருப்பது.. டிடக்டீவ் மாடிப்படி ஏறுகையில் கீழிருந்து மேல் இல்லாமல் மாடி ஏறும் அவர் காலில் முட்டிக்கு நேராக கேமராவைக் காண்பித்திருப்பது என்று காமிரா.. பல இடங்களில் சபாஷ் வாங்குகிறது.

அடுத்து முக்கியமானது – இசை: பெர்னார்ட் ஹெர்மான். துல்லியமான இசை. எங்கெங்கே மௌனம், எங்கெங்கே இசை என்பதை மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்.

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்சாக்! என்ன ஒரு டைரக்‌ஷன். இரண்டாவது முறை பார்க்கும்போது மரியானின் முக பாவங்களிலேயே அவள் ஒரு முடிவுடன் இருக்கிறாள் என்பதை உணர்த்தியிருப்பார்.

மரியான் காரில் செல்லச் செல்ல அங்கே அவளது அலுவலகத்தில் அவள் குறித்து எடுக்கப் படும் நடவடிக்கைகளை பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பார். மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!

அவளது உடலை காருடன் புதைகுழியில் தள்ளியதோடு இல்லாமல், கார் உள்ளே செல்லச் செல்ல நார்மென் பேட்ஸ்சின் முக பாவங்களில் அவரது உணர்வைக் காட்டியிருப்பார்.


இறுதியாக நார்மென் பேட்ஸின் தாயார் குறித்தும், நார்மென் பேட்ஸ் குறித்தும் சைக்கியாட்ரிஸ்ட் பேசும் வசனங்கள் அத்தனை ஷார்ப்.

அதேபோல அந்த விசாரணை முடிந்து, நார்மென் பேட்ஸ் குளிருக்குப் போர்வை கேட்க... கொடுத்ததும், தேங்க்ஸ்’ என்கிறார்.. அவரது தாயார் குரலில்! என்ன ஒரு டைரக்டரய்யா இவர்!

இதுவரைக்கும் இந்த ஒரு படத்தில் பாதிப்பில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வந்தாயிற்று என்கின்றனர் உலக சினிமா ஆர்வலர்கள்.

எப்பாடு பட்டாவது தேடிப்பிடித்துப் பாருங்கள்...

சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!

41 comments:

மேவி... said...

naanum antha padathin dvd vaithu irukkiren ....
arumai yana padam....
avarin pira padagal birds pontrayai arumaiyana padaippugal...


avarin pada dvd anaithaiyum naan vaithu irukkiren

Vidhya Chandrasekaran said...

சிறு வயதில் பயந்துகொண்டே பார்த்த படம். அப்புறம் ஒவ்வொரு முறை பார்த்தபோதும் வித்தியாசாமான அனுபவத்தை தருகிறது. ஒவ்வொரு கொலை நிகழும்போதும் பிண்ணனிசை இதயத்துடிப்பை அட்திகரிக்கும்:)

ILA (a) இளா said...

Timing, rhyming.

ஆ.சுதா said...

இப்படத்தை செலியன் அவர்களின்
அறிமுகத்தில் ஏற்கனவே பார்த்துவிட்டேன் அவள் அந்த விடுதிக்கி சென்ற பின் நாம் இருக்கையின் நுனியில்தான் இருப்போம் அற்புதமா 'திரில்லர்'
படம்

Anonymous said...

ன்னா, நான்தான் முதல் ஆள் போல இருக்கு. இந்த படத்தேயும், EVIL DEATH படத்தையும் பார்த்து காச்சல் வந்த கல்லுரி நாட்கள் மறக்காது. ஆவ்வ்வ்வ். மறுபடியும் பாக்கணுமா?

Unknown said...

பரிசல், அழகாக எழுதி இறுதியில் "படம் பாருங்கள்!" என்று வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது அருமை. உலக சினிமா வரலாறில் ஒரு மிகச்சிறந்த திரைப்படம் "சைக்கோ" என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், "சைக்கோ" என்கிற அழகான வார்த்தையின் உண்மையான பொருளை முற்றிலும் மாறுபடுத்தி உலகில் நீங்காமல் நிலைக்கச் செய்த ஒரு மிகப் பெரும் தவறு ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கை தான் சாரும்.

Cable சங்கர் said...

வெல்கம் டு த வேர்ல்ட் மூவீஸ்..

Thamiz Priyan said...

///சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!///
கமெண்ட் சூப்பர்!

Busy said...

Great Article, with old movie............

முரளிகண்ணன் said...

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க

Unknown said...

நல்ல விமர்சனம்.. கொஞ்சம் பயமாவும்..

anujanya said...

படம் பார்த்திராதவர்களுக்கு நல்ல அறிமுகம். பார்த்தவர்களுக்கு ? மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று தோன்றும் பதிவு. Nice write up K.K.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

அப்படியே அந்த கொலை நிகழும் காட்சி.. கருப்பு வெள்ளைதான்.. ரத்தமாக கூட தெரியாது. ஆனால் அந்த பின்னணி இசை.. மிரட்டும்..

என் லேப்டாப்பில் ஹிட்ச்காக் பட பல உண்டு.. இதுவும் birdsம் மாஸ்டர் பீஸ்

Athisha said...

\\
ங்கொய்யால 1960ல ஒரு மனுஷன் இப்படி சிந்திச்சிருக்கான் பாருடா என்று பிரமிக்கத் தோன்றுகிறது.
\\\

பரிசல் அந்தாளு 1940களின் கடைசிலேயே இதே மாதிரி சிந்திக்க ஆரம்பிச்சிட்டாரு.

முடிஞ்சா அவரோட vertigo அப்புறம் ரோப் முக்கியமா BIRDS பாருங்க, ரொம்ப நல்ல படம்.

நிறைய Spoilers இருக்கறமாதிரி இருக்கு விமர்சனத்தில.

மற்றபடி கலக்கல் தல!

குசும்பன் said...

// ங்கொய்யால 1960ல ஒரு மனுஷன் இப்படி சிந்திச்சிருக்கான் பாருடா என்று பிரமிக்கத் தோன்றுகிறது.//

இப்படி ஒரு உலகத்திரைபடத்தை விமர்சனம் செய்யும் போது இதுபோல் வசனங்களை தவிர்களாம்!

பலமுறை பார்த்தபடம்!

narsim said...

//அந்த வயதான தாய்தான். எப்படி?

படம் பாருங்கள்//

சஸ்பென்ஸ ஏத்திவிட்டுட்டு படத்தோட டிஸ்டிபியூட்டர் மாதிரி படம் பாருங்கள்னு சொல்லிட்டீங்களே..

விமரிசையான வரிகள்

ரமேஷ் வைத்யா said...

//மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!//

நல்ல விமர்சனம். 4 ஆச்சர்யக் குறி தேவையில்லை.

ரமேஷ் வைத்யா said...

//மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!//

நல்ல விமர்சனம். 4 ஆச்சர்யக் குறி தேவையில்லை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்தப் படத்தை என்னுடைய வலைத்தளத்தில் ஏற்றி வைத்திருக்கிறேன். பதிவிறிக்கிப் பார்க்க விரும்புவோர் ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு எழுதலாம்.

Mahesh said...

Welcome to world cinema !! செழியன் புத்தகத்தை படிச்சு முடிச்சுட்டீங்களா?

Venkatesh Kumaravel said...

என்ன இருந்தாலும் அவரது 'வெர்ட்டிகோ' திரைப்படம் போல வராது!
அற்புதமான கதாபாத்திரப் படைப்பு, ஒளிப்பதிவு, கேமிரா கோணங்கள், இசை, கதை சொல்லும் உத்தி, நடிப்பு, செட்... அத்தனையிலும் சிகரம் தொட்ட படம்!

வால்பையன் said...

இவரோட birds கூட நல்லாயிருக்கும்

Senthil said...

I saw this movie way back in 1979. But cdnt understand that time.
Now I can refresh by reading yr excellent review.
Going to see again.Thanks

Senthil

Suresh said...

சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!

ha ha nanum innam parkala unga review padicha peragu parkalam yendru irukaen nanbare.. seri enga blog pakkan kupita kovichikkitu vara matingaringa nanba

ஷண்முகப்ரியன் said...

எனக்கு,இல்லை,உலகத்தில் படம் பார்த்த எல்லோருக்கும் பிடித்த படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனததைப் படித்த போது மீண்டும் அதே பழைய ரசனையான நினைவுகள்.ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கு அஞ்சலி.
படத்தைப் பார்த்து பின்னர் ரொம்ப வருடங்கள் கழித்து Robert Bloch எழுதிய அந்த ஒரிஜினல் நாவலைப் படித்தேன்.நாவலைப் படித்த பின்தான் ஹிட்ச்காகின் திறமையும்,பெருமையும் இன்னும் புரிந்தது..
நினைவுகளைத் தூண்டும் பகிர்வுக்கு நன்றி சார்.

ஷண்முகப்ரியன் said...

எனக்கு,இல்லை,உலகத்தில் படம் பார்த்த எல்லோருக்கும் பிடித்த படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனததைப் படித்த போது மீண்டும் அதே பழைய ரசனையான நினைவுகள்.ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கு அஞ்சலி.
படத்தைப் பார்த்து பின்னர் ரொம்ப வருடங்கள் கழித்து Robert Bloch எழுதிய அந்த ஒரிஜினல் நாவலைப் படித்தேன்.நாவலைப் படித்த பின்தான் ஹிட்ச்காகின் திறமையும்,பெருமையும் இன்னும் புரிந்தது..
நினைவுகளைத் தூண்டும் பகிர்வுக்கு நன்றி சார்.

Venkatesh subramanian said...

இந்த படத்தை ஏன் கலரில் எடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டார்கள் அப்பொழுது அவர் இந்த படத்தில் ரத்தம் நிறைய்ய இருக்கிறது சிகப்பு எப்பொழுதும் பார்பவர்களை disturb அக்கிவிடும் எனவே தான் நான் black and whiteல் எடுக்கிறேன் என்று சொன்னார் இந்த பட பாதிப்பில் வந்தது தான் பாலுமகேந்திராவின் மூடுபனி உண்மையில் super thiller

Venkatesh subramanian said...

இந்த படத்தை ஏன் கலரில் எடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டார்கள் அப்பொழுது அவர் இந்த படத்தில் ரத்தம் நிறைய்ய இருக்கிறது சிகப்பு எப்பொழுதும் பார்பவர்களை disturb அக்கிவிடும் எனவே தான் நான் black and whiteல் எடுக்கிறேன் என்று சொன்னார் இந்த பட பாதிப்பில் வந்தது தான் பாலுமகேந்திராவின் மூடுபனி உண்மையில் super thiller

சின்னப் பையன் said...

நிறைய தடவை இந்த படத்தை பாத்திருந்தாலும் இவ்ளோ அழகா விளக்கறதுக்கு உங்கள மாதிரி ஒருத்தரு வந்தாதாண்ணே நல்லாயிருக்கு...

ராஜ நடராஜன் said...

தலைப்பைப் பார்த்து வந்ததுக்கு நல்லவேளை ஏமாற்றவில்லை.நானும் இந்த மாதிரிப் படங்களை கலெக்சனாக்கிடனும்ன்னு தேடு தேடுன்னு தேடினா வில்லும் லொல்லும்தான் கண்ணுல மாட்டுது.

இனி பதிவப் பார்த்துட்டு....

ராஜ நடராஜன் said...

விமர்சனக் கோணம் நன்றாக இருக்கிறது.

Venkatesh subramanian said...

இந்த படம் வந்த சில வருடங்களுக்கு இந்த படத்தை பார்த்த பெண்கள் அனைவரும் குளிக்க பாத்ரும் போகவே பயந்தார்களாம் அப்படி ஒரு பாதிப்பை இந்த படம் எற்படுத்தியது ஹிட்ச்காக்கின் master piece இந்த படம்

உண்மைத்தமிழன் said...

ரெண்டுங்கெட்டான் வயதில் பார்த்தது.. திக்.. திக்.. என்று இருந்தது.. பய உணர்ச்சி மட்டுமே இருந்ததே ஒழிய.. கதை புரியவில்லை.

பின்பு ஒரு காலக்கட்டத்தில் படத்தைப் பார்த்து ரசித்தேன்.. ரசித்தேன்.. ரசித்தேன்..

மிரட்டல்தான்.. கலை ஒரு மொழி என்பதற்கு இது போன்ற உலக சினிமாக்களே சாட்சி..!

பட்டாம்பூச்சி said...

Birds படமும் நன்றாக இருக்கும்.
நீங்களும் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா :)?

Thamira said...

ஏற்கனவே பார்த்த படம்தான், சிறப்பான விமர்சனம். படம் இப்போது ரிலீஸாகியிருக்கவில்லை ஆதலால் கிளைமாக்ஸையும் சொல்லிவிட்டால் பார்க்காதவர்களுக்கு திருப்தியாக இருக்கும்.

அப்புறம் குசும்பனின் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்டு.!

ஊர்சுற்றி said...

தேடிப்புடிச்சி இந்த படத்தை சில மாதங்களுக்கு முன்னே பார்த்தேனுங்க.
எந்த அதட்டலும் இல்லாம ஒரு பிரம்மாண்ட த்ரில்லர் இது.

ஆளவந்தான் said...

இது தான் ”பாத் டப்” கொலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.

அருமையா எழுதி இருக்கீங்க ஒரு அருமையான படம் பற்றி

ஆளவந்தான் said...

//
Venkatesh subramanian said...

இந்த படம் வந்த சில வருடங்களுக்கு இந்த படத்தை பார்த்த பெண்கள் அனைவரும் குளிக்க பாத்ரும் போகவே பயந்தார்களாம் அப்படி ஒரு பாதிப்பை இந்த படம் எற்படுத்தியது ஹிட்ச்காக்கின் master piece இந்த படம்
//
TRUE.. This is what i was trying to say :)

Suresh said...

நிங்க என்னோட பதிவு படித்து ஒரு உக்கம் கொடுப்பிங்க என்று சொல்லி சொல்லி எனக்கு முச்சு தான் வாங்குது

வாங்க அண்ணே :-) சக்கரை கடைக்கு

உங்கள மாதிரி மக்கள் தான் எனக்கு inspiration

Suresh said...

இன்றைக்கு எனக்கு ரொம்ப சந்தோசம்
காரண்ம் நிங்க தான் தலைவா !

:-) ஏப்ரல் ஒன்னு அதுவும என்னை முட்டாள் ஆக்காம ரொம்ப சந்தோச படுத்திடிங்க :-)

நன்றி அண்ணா


உங்களை எல்லாம் மறக்க முடியுமா

சரவணகுமரன் said...

//ரூ.40000//

???