Wednesday, April 1, 2009

சுவாரஸ்யமாக ஏப்ரல் ஃபூல் ஆக்க 10 வழிகள்!

10) மேனேஜருக்கு/பாஸுக்கு ஃபோன் பண்ணி இன்னைக்கு லீவு வேணும்னு கேளுங்க. குடுக்கலைன்னா அடம்பிடிங்க. ஆனா கரெக்ட் டைமுக்கு ஆஃபீஸுக்குப் போயிடுங்க. (நீங்க மேனேஜராவோ, பாஸாவோ இருந்தா உங்க கீழ வேலை செய்யறவங்ககிட்ட இந்த விளையாட்டை விளையாடாதீங்க. வரலைன்னுட்டு போனா பல அதிர்ச்சிகள் உங்களுக்குக் காத்திருக்கும்!)

7) ‘இன்னைக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு. லஞ்சுக்கு வரமாட்டேன். ஒண்ணும் சமைக்க வேண்டாம்'னு மனைவிகிட்ட சொல்லிடுங்க. (பெரும்பாலான வீடுகள்ல கணவன் சாப்பிட வரலைங்கறப்ப வீட்ல ஒண்ணுமே செய்ய மாட்டாங்க. சிம்பிளா சாப்பாடு, ரசம்னு முடிச்சிருப்பாங்க) சாப்பிடற டைமுக்கு கொஞ்சம் முன்னாடி அவங்களுக்குப் பிடிச்ச ஏதாவது (பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்..) வாங்கீட்டுப் போய் சர்ப்ரைஸ்+ஏப்ரல் ஃபூல் ஆக்கி.. அவங்க சாப்பிட வெச்சிருக்கறத நீங்க சாப்பிடுங்க.

4) கடன் வாங்கின தொகையை உங்க நண்பனுக்கு ‘டக்'னு போய்க் குடுங்க. (குடுக்கவே மாட்டீங்க-ன்னு நெனைச்சிருப்பான்.)

6) மகனோ, மகளோ ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கற விளையாட்டுப் பொருளை வாங்கீட்டுப் போய்க் குடுங்க. 'ஒண்ணும் இருக்காது. ஏப்ரல் ஃபூலா இருக்கும்'னு கமெண்ட் பண்ணீட்டே திறப்பாங்க. (கவர்ல ஏப்ரல் ஃபூல்-னே எழுதலாம்)

3) ரொம்ப நாள் போகாத உங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு அல்லது சின்ன மனஸ்தாபம் இருக்கற ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஏப்ரல் ஒண்ணாம்தேதி காலைலயே போய் நில்லுங்க. அவன் செல்லுக்கு கூப்ட்டு கதவைத் திறக்கச் சொல்லுங்க.

1) பஸ்ல ரெண்டு பேர் போகறப்போ உங்க ஃப்ரெண்டை டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க. உங்ககிட்ட கண்டக்டர் டிக்கெட் கேட்டா ‘ஸ்டாஃப்' இல்லைன்னா ‘பாஸ் இருக்கு'ன்னு சொல்லுங்க. ரொம்ப நோண்டிக் கேட்டப்பறம் டிக்கெட் வாங்கினதச் சொல்லுங்க.

5) செல்லுல பாலன்ஸ் இல்லாத உங்க ஃப்ரெண்டைக் கூப்ட்டு டேய் இன்னைக்கு ஏர்செல்/ஏர்டெல் (அவரோட சர்வீஸ் ப்ரொவைடர்..) சார்பா 50 ரூபா டாக்டைம் ஃப்ரீன்னு சொல்லுங்க. நம்பமாட்டான். கொஞ்ச நேரத்துல நீங்க 50 ரூபாய்க்கு அவனுக்கு ரீசார்ஜ் பண்ணீடுங்க. அவனுக்கு ஒரு சந்தோஷம்.. அவன் இதே மாதிரி நாலஞ்சு பேருக்கு கூப்ட்டு சொன்னா... அதுனால நாலஞ்சு பேரு ஃபூலானா உங்களுக்கும் சந்தோஷம்.

2) அடிக்கடி உங்களுக்கு பைக் இரவல் தர்ற ஃப்ரெண்டோட பைக்கை வாங்கீட்டு போய் நீட்டா வாட்டர் சர்வீஸ் பண்ணிக் கொண்டு வந்து வெச்சுடுங்க. அப்பறம் அவன்கிட்ட சாவியைக் குடுக்கறப்போ ‘சாரிடா... லைட்டா ஒரு வண்டில இடிச்சதுல லெஃப்ட் இண்டிகேட்டர் போயிடுச்சு. ரெடி பண்ணிக்க. எவ்ளோ ஆனாலும் தந்துடறேன்’னு சொல்லிடுங்க. ரொம்ப எரிச்சலோட போறவனுக்கு சந்தோஷ ஏப்ரல் ஃபூலா இருக்கட்டும்.

8) இவன் நல்லா எழுதுவான்-னு நம்ம்ம்ம்ம்பி வர்றவங்கள இப்படி மொக்கையா எழுதி கழுத்தறுங்க. (’அதத்தான் டெய்லி பண்றீயே’ என்ற கமெண்ட் கார்க்கி ரிசர்வ் பண்ணி வெச்சுட்டதால வேறமாதிரி என்னைக் கிண்டலடிக்க ட்ரை பண்ணுங்க..)

30 comments:

கார்க்கிபவா said...

/’அதத்தான் டெய்லி பண்றீயே’ என்ற கமெண்ட் கார்க்கி ரிசர்வ் பண்ணி வெச்சுட்டதால வேறமாதிரி என்னைக் கிண்டலடிக்க ட்ரை பண்ணுங்க..)//

அப்பாடி.. நான் அத சொல்லலாமில்ல..

/ இவன் நல்லா எழுதுவான்-னு நம்ம்ம்ம்ம்பி வர்றவங்கள இப்படி மொக்கையா எழுதி கழுத்தறுங்க//

இவன் மொக்கையாத்தான் எழுதுவான்னு தெரிஞ்சுதான் என் கடைக்கு வர்றாங்க. நான் எப்படி நல்லா எழுதி ஃபூல் ஆக்கறது? பொழச்சு போறாங்க. இதுக்கு ஆசைப்பட்டு எல்லாம் ஒழுங்க எழுத நான் என்ன முட்டாளா?

மேவி... said...

సూపర్ ఆహ్ ఎలుతి ఇరుక్కింగా ...
అతు ఎప్పడి సూపర్ ఐడియా ఎల్లం వారుతూ ఉంగలుక్కు ......



comment entral tamilyil mattum thaan poda venduma.....
ithuyum oru technic thaan...
valthukkal

Raju said...

\\செல்லுல பாலன்ஸ் இல்லாத உங்க ஃப்ரெண்டைக் கூப்ட்டு டேய் இன்னைக்கு ஏர்செல்/ஏர்டெல் (அவரோட சர்வீஸ் ப்ரொவைடர்..) சார்பா 50 ரூபா டாக்டைம் ஃப்ரீன்னு சொல்லுங்க. நம்பமாட்டான். கொஞ்ச நேரத்துல நீங்க 50 ரூபாய்க்கு அவனுக்கு ரீசார்ஜ் பண்ணீடுங்க. அவனுக்கு ஒரு சந்தோஷம்.. அவன் இதே மாதிரி நாலஞ்சு பேருக்கு கூப்ட்டு சொன்னா... அதுனால நாலஞ்சு பேரு ஃபூலானா உங்களுக்கும் சந்தோஷம்.\\
இதுதான் டாப்பு கிரிஷ்ணா அண்ணே....

narsim said...

உங்கள ‘பத்துக்காரன்னு’கூப்பிடப்போறாங்க பரிசல்காரன்.

7வது பாயிண்ட்ல நானும் வாங்காகி இருக்கேன்.

பரிசல் பிராண்டு பத்து..

கிரி said...

நல்லா இருக்கு வழிகள் (ஒரு சிலது :-D)

மேவி... said...

நாங்க எல்லாம் நண்பனுக்கு 10000 ரூபாய் தந்து விட்டு .... திரும்ப கேட்பேன் என்று ஏப்ரல் பூல் பண்ணுவேன் ....
(கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும் திரும்ப வராது என்பது வேற விஷயம் )

வால்பையன் said...

இதுக்கு பேரு முட்டாளாக்குறதில்லை!
நமக்கு நாமே சூன்யம் வச்சிகிறது!
இல்லைன்னா இன்ப அதிர்ச்சி தர்றது!

அறிவிலி said...

"அதத்தான் டெய்லி பண்றீங்களே"

அதென்ன பதிவுல முன்பதிவு....

Mahesh said...

எதாவது மொக்கையா இருக்கும்னு வந்து பாத்தா ரொம்ப ஸ்வாரஸ்யமா எழுதி ஏப்ரல் ஃபூல் ஆக்கிட்டீங்க. நன்றி...

Mahesh said...

அட... கமெண்ட்ஸை மாடரேட் பண்ணி மறுபடி ஃபூல்... அவ்வ்வ்வ்.... முடியல....

கோவி.கண்ணன் said...

இன்னிக்காவது 'நீ சமைச்ச சாப்பாடு நல்லா இருக்குன்னு' மனைவிகிட்டே சொல்லுங்க ன்னு சேர்த்திருக்கலாம் :)

ராஜ நடராஜன் said...

வந்துட்டாகய்யா ஐடியா சொல்லிகிட்டு!மொத கிரியச் சொல்லணும். ஏப்ரல் 1 நெனப்பில்லாம தெரியாம அவர் பதிவுக்குப் போயிட்டு இன்னைக்கு பதிவுகள் படிப்பதில்லைங்கிற விரதம் கலைஞ்சு போச்சு.இனி முழம் போனா என்ன? ஐடியா தேறுதான்னு பார்க்க வேண்டியதுதான்.

அறிவிலி said...

//அறிவிலி
1 April, 2009 1:38 PM "அதத்தான் டெய்லி பண்றீங்களே"

அதென்ன பதிவுல முன்பதிவு....//

sorry, i did not mean it... just for a joke...

Venkatesh subramanian said...

இதுக்கு பேரு முட்டாளாக்குறதில்லை!
நமக்கு நாமே சூன்யம் வச்சிகிறது!
இல்லைன்னா இன்ப அதிர்ச்சி தர்றது!
-ரிப்பிட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Truth said...

//1) பஸ்ல ரெண்டு பேர் போகறப்போ உங்க ஃப்ரெண்டை டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க. உங்ககிட்ட கண்டக்டர் டிக்கெட் கேட்டா ‘ஸ்டாஃப்' இல்லைன்னா ‘பாஸ் இருக்கு'ன்னு சொல்லுங்க. ரொம்ப நோண்டிக் கேட்டப்பறம் டிக்கெட் வாங்கினதச் சொல்லுங்க.

டின் கட்டுவாங்கன்னு தோனுது :-)

Shiva said...

ஒன்று இரண்டை தவிர மற்ற எல்லா வழிகளும் புதுமை மற்றும் இனிமை. நல்ல வழிகளில் ஏமாற்றி சந்தோசம் தரும் உங்களது முயற்சி பாரடிற்குரியாது. வாழ்த்துக்கள்.

லோகு said...

//கடன் வாங்கின தொகையை உங்க நண்பனுக்கு ‘டக்'னு போய்க் குடுங்க. //

இது எங்கள முட்டாள் ஆக்கற Idea மாதிரி இருக்கே..

ILA (a) இளா said...

செலவழிச்சு முட்டாளாக்கனுமான்னுதான் கேள்வியே? அவிங்க பிரியாணி நமக்கு ரசஞ்சோறு.. நல்லாத்தான் வெக்கறாங்கப்பா ரசத்த

நாதஸ் said...

ஒன்பது வழி தான் இருக்கு. ஒன்னு காணோம் ? :P

பரிசல்காரன் said...

//nathas said...

ஒன்பது வழி தான் இருக்கு. ஒன்னு காணோம் ? ://


ப்பா... காலைலேர்ந்து யாரும் இதக் கேக்கலியேன்னு நெனைச்சேன்.

சிக்கீட்டீங்க!

ஏப்ரல் ஃபூல்!

Suresh said...

:-) ha ha

நிகழ்காலத்தில்... said...

ஏப்ரல் பூல் அன்று எல்லோரையும்
சந்தோஷப் படுத்ததானே வழி சொல்லி
இருக்கிறீங்க

வாழ்த்துக்கள்..

Venkatesh subramanian said...

//nathas said...

ஒன்பது வழி தான் இருக்கு. ஒன்னு காணோம் ? ://


ப்பா... காலைலேர்ந்து யாரும் இதக் கேக்கலியேன்னு நெனைச்சேன்.

சிக்கீட்டீங்க!

ஏப்ரல் ஃபூல்!
கடைசியில் இது தான் ரகசியமா கிளிஞ்ஜது போ

Thamira said...

சீரியஸா ஒண்ணு சொல்றேன்.. முதல் முதலா ஒரு விஷயத்தை (பொடி வைக்கும்) கண்டுபிடித்தேன்.. படிக்கும்போதே.! நல்லவேளையாக அதை யாரும் சொல்லலைன்னு பாத்தா கடைசியா நாதாஸ் சொல்லி பாராட்டை வாங்கிக்கிட்டு போயிட்டார்.

அப்புறம், உங்களுக்கு பத்து பட்டம் கொடுத்த நர்சிம்தான் உண்மையில் ஏப்ரல் ஃபூல்.!

கார்க்கிபவா said...

///nathas said...

ஒன்பது வழி தான் இருக்கு. ஒன்னு காணோம் ? ://


ப்பா... காலைலேர்ந்து யாரும் இதக் கேக்கலியேன்னு நெனைச்சேன்.

சிக்கீட்டீங்க!

ஏப்ரல் ஃபூல்//

இப்ப திருப்தியா சகா? ஆண்டவா... என் நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பற்று..

நாங்களும் சூப்பர் ஸ்டார் ஆவோமில்ல.. :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதுல இருக்கிற சில சர்ப்ரைஸ் எல்லாம் எப்பவும் செய்யலாம் நல்லதும் கூட..
இதை மெனக்கெட்டு ஒருத்தர் கணக்கு செய்து பாத்திருக்காரா.. பாவம் தான்..

Unknown said...

// சுவாரஸ்யமாக ஏப்ரல் ஃபூல் ஆக்க 10 வழிகள்! //


வாங்கோ பரிசல் தம்பி.......!! எந்த மாதிரி மொக்கைய போட்டிருக்கீங்கன்னு பாக்கலாம் ......!!!!

Unknown said...

// 10) மேனேஜருக்கு/பாஸுக்கு ஃபோன் பண்ணி இன்னைக்கு லீவு வேணும்னு கேளுங்க. குடுக்கலைன்னா அடம்பிடிங்க. ஆனா கரெக்ட் டைமுக்கு ஆஃபீஸுக்குப் போயிடுங்க. (நீங்க மேனேஜராவோ, பாஸாவோ இருந்தா உங்க கீழ வேலை செய்யறவங்ககிட்ட இந்த விளையாட்டை விளையாடாதீங்க. வரலைன்னுட்டு போனா பல அதிர்ச்சிகள் உங்களுக்குக் காத்திருக்கும்!) //



லீவு சொல்லீட்டு ஆபீஸ் போனா..... எங்க பாஸ் தொரத்தி.... தொரத்தி ..... கடுச்சுவெப்பாறு !!! அதுக்கு பொட்டாட்ட ஊட்டுலையே இருந்துகிட்டு ..... ஊட்டு பக்கத்துல ஏதாவது இலுச்ச்சவாயன் கெடச்சா ஏப்பரல்பூல் பண்ணிக்கிட்டு மொக்கைய போட்டுக்கிட்டு இருக்கலாமுங்கோ தம்பி......!!!



// 7) ‘இன்னைக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு. லஞ்சுக்கு வரமாட்டேன். ஒண்ணும் சமைக்க வேண்டாம்'னு மனைவிகிட்ட சொல்லிடுங்க. (பெரும்பாலான வீடுகள்ல கணவன் சாப்பிட வரலைங்கறப்ப வீட்ல ஒண்ணுமே செய்ய மாட்டாங்க. சிம்பிளா சாப்பாடு, ரசம்னு முடிச்சிருப்பாங்க) சாப்பிடற டைமுக்கு கொஞ்சம் முன்னாடி அவங்களுக்குப் பிடிச்ச ஏதாவது (பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்..) வாங்கீட்டுப் போய் சர்ப்ரைஸ்+ஏப்ரல் ஃபூல் ஆக்கி.. அவங்க சாப்பிட வெச்சிருக்கறத நீங்க சாப்பிடுங்க. //


எதுக்குங்கோ தம்பி பிரியாணி, ப்ரைடு ரைசு எதுக்குங்கோ தம்பி.....??

கம்மங்க்கூழும்... கடுச்சுக்க ரெண்டு மொலவாயும் வாங்கீட்டு குடுத்துட்டு ஏப்ரல் பூல்ன்னு சொல்லுங்கோ.... ஊட்டுல செம மரியாததான் உங்குளுக்கு......!!




// 4) கடன் வாங்கின தொகையை உங்க நண்பனுக்கு ‘டக்'னு போய்க் குடுங்க... (குடுக்கவே மாட்டீங்க-ன்னு நெனைச்சிருப்பான்.) //


டக்குனு எப்புடிங்க பணம் குடுக்குறது........ ( டக்குனு வாயில மியூசிக் தான் போடணும்..) .

ஒரு சேஞ்சுக்கு பணமெல்லாம் குடக்கமுடியாது சொலீட்டு ..... ஏப்ரல்பூல்ன்னு சொல்லிபாருங்கோ ....!! அப்பறம் பணம் குடுத்தவரோட ரி-ஏக்சன் எப்புடி இருக்குதுன்னு பாருங்கோ தம்பி....!! நெம்ப சூப்பரா இருக்கும்.....!!!!



// 6) மகனோ, மகளோ ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கற விளையாட்டுப் பொருளை வாங்கீட்டுப் போய்க் குடுங்க. 'ஒண்ணும் இருக்காது. ஏப்ரல் ஃபூலா இருக்கும்'னு கமெண்ட் பண்ணீட்டே திறப்பாங்க. (கவர்ல ஏப்ரல் ஃபூல்-னே எழுதலாம்) //


கான்சப்ட் நெம்ப நால்லாதானுங்கோ தம்பி இருக்குது.....!! பட் டீலிங்தான் ஒதைக்குது ....!!




// 3) ரொம்ப நாள் போகாத உங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு அல்லது சின்ன மனஸ்தாபம் இருக்கற ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஏப்ரல் ஒண்ணாம்தேதி காலைலயே போய் நில்லுங்க. அவன் செல்லுக்கு கூப்ட்டு கதவைத் திறக்கச் சொல்லுங்க. //


ஆமா...!!! நின்னுகிட்டு கூபுட்டிங்கனா.....!!! அப்புடியே அவன் ஓடோடி வந்து ..... நண்பனே....!! நண்பனே...!! அப்புடீன்னு கட்டிபுடிப்பானு நெனச்சீங்களா....!!!!


நெம்ப தப்பு....!!! நெம்ப தப்புங்கோ தம்பி.....!!!



// 1) பஸ்ல ரெண்டு பேர் போகறப்போ உங்க ஃப்ரெண்டை டிக்கெட் எடுக்கச் சொல்லுங்க. உங்ககிட்ட கண்டக்டர் டிக்கெட் கேட்டா ‘ஸ்டாஃப்' இல்லைன்னா ‘பாஸ் இருக்கு'ன்னு சொல்லுங்க. ரொம்ப நோண்டிக் கேட்டப்பறம் டிக்கெட் வாங்கினதச் சொல்லுங்க. //


ஆஹா .....!!! நெம்ப சூப்பெர் இடியாங்கோ தம்பி.....!!! இப்புடியெல்லாம் சொன்னா கண்டைக்டார் பல்ல காட்டிட்டு மண்டைய சொரிவாறு நெனச்சீங்களா......!! சான்ஸ் இல்ல......!!! குமிய வெச்சு பஸ்சுல இருஜ்க்குரவிங்க எல்லாத்தையும் கூப்புட்டு கும்மியடுச்சுருவாறு............!!



// 5) செல்லுல பாலன்ஸ் இல்லாத உங்க ஃப்ரெண்டைக் கூப்ட்டு டேய் இன்னைக்கு ஏர்செல்/ஏர்டெல் (அவரோட சர்வீஸ் ப்ரொவைடர்..) சார்பா 50 ரூபா டாக்டைம் ஃப்ரீன்னு சொல்லுங்க. நம்பமாட்டான். கொஞ்ச நேரத்துல நீங்க 50 ரூபாய்க்கு அவனுக்கு ரீசார்ஜ் பண்ணீடுங்க. அவனுக்கு ஒரு சந்தோஷம்.. அவன் இதே மாதிரி நாலஞ்சு பேருக்கு கூப்ட்டு சொன்னா... அதுனால நாலஞ்சு பேரு ஃபூலானா உங்களுக்கும் சந்தோஷம். //


// 2) அடிக்கடி உங்களுக்கு பைக் இரவல் தர்ற ஃப்ரெண்டோட பைக்கை வாங்கீட்டு போய் நீட்டா வாட்டர் சர்வீஸ் பண்ணிக் கொண்டு வந்து வெச்சுடுங்க. அப்பறம் அவன்கிட்ட சாவியைக் குடுக்கறப்போ ‘சாரிடா... லைட்டா ஒரு வண்டில இடிச்சதுல லெஃப்ட் இண்டிகேட்டர் போயிடுச்சு. ரெடி பண்ணிக்க. எவ்ளோ ஆனாலும் தந்துடறேன்’னு சொல்லிடுங்க. ரொம்ப எரிச்சலோட போறவனுக்கு சந்தோஷ ஏப்ரல் ஃபூலா இருக்கட்டும். //

ஏந்தம்பி....??? உங்குகிட்ட பணம் நெறியா இருந்தா சொல்லுங்கோ.......!! ஈரோட்டுல ஒரு கெட்-டூ-கெதர் போட்டுக்கலாமுங்கோவ்..........!!!!!!



// 8) இவன் நல்லா எழுதுவான்-னு நம்ம்ம்ம்ம்பி வர்றவங்கள இப்படி மொக்கையா எழுதி கழுத்தறுங்க. (’அதத்தான் டெய்லி பண்றீயே’ என்ற கமெண்ட் கார்க்கி ரிசர்வ் பண்ணி வெச்சுட்டதால வேறமாதிரி என்னைக் கிண்டலடிக்க ட்ரை பண்ணுங்க..) //


ஏதோ என்னால முடுஞ்சளவுக்கு ட்ரை பண்நீருகேனுங்கோ தம்பி.......!!!!

மொக்கை பதிவு ------------- க்கு -------------- மொக்கை பின்னூட்டம்.........!!!!!!!

நாதஸ் said...

:)

sri said...

Very funny - Rasichu Padichen :P

Sri