Tuesday, April 21, 2009

கார்க்கியின் அவியலும் பரிசலின் காக்டெய்லும்

நல்லவங்க எல்லாருக்கும் வணக்கம்.

தலைப்பை பார்த்த உடனே புரிஞ்சு தலை சொறிஞ்சிகிட்டு அசடு வழிஞ்சுகிட்டு இருக்கற உங்க எல்லார்கிட்டயும் பெரிசா ஸாரி கேட்டுக்கறோம். (றோம்? நானும் கார்க்கியும்தான்!)

கொஞ்சம் பழங்கதைகள் பேசுவோமா?

சார்லி சாப்ளின் ஒரு தடவை கார்ல போய்கிட்டிருக்கறப்போ மாறுவேடப் போட்டின்னு கேள்விப்பட்டு ஒரு அரங்கத்துக்கு உள்ள புகுந்தாராம். சார்லி சாப்ளின் மாதிரி யார் சிறப்பா வேடமிட்டு வர்றாங்க’ என்பதற்கான மாறுவேடப் போட்டி. இவரு போய் கலந்துகிட்டாராம். இவருக்கு மூணாவது பரிசுதான் கிடைச்சுதாம்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு கவியரங்கத்துல போய்க் கலந்துகிட்டப்போ ‘டக்’னு இவருகூட உட்கார்ந்திருந்த மற்றொரு கவிஞர்கிட்ட இவர் எழுதிட்டு போன கவிதைச் சீட்டைக் குடுத்துட்டு அந்தக் கவிஞரோடதை இவர் வாங்கிகிட்டாராம். மேடைல இவருக்கு கன்னாபின்னான்னு கைதட்டலாம். அவர் கவிதைக்கு அவ்வளவா வரவேற்பில்லையாம்!

சரி... புரிஞ்சுடுச்சுதானே என்ன சொல்ல வர்றேன்னு..

இப்படி வெறுமனே ப்ளாக் எழுதிட்டு இருந்தாலும் எப்படி வரலாறுல இடம்பிடிக்கறதுன்னு பாத்ரூம்ல உட்கார்ந்து சிந்திச்சிகிட்டிருந்தப்போ கணநேரத்தில் தோன்றிய யோசனைதான் அது. உடனே (வெளில வந்துதாங்க..) கார்க்கியை அழைத்தேன்.

“சகா.. நாம எழுதற மேட்டர் நல்லா இருந்தாலும் இல்லைன்னாலும் பாராட்டுவாங்களா?”

“அப்படி இல்ல சகா” – இது கார்க்கி “நல்லா இல்லைன்னா நம்ம வட்டாரத்துல சுட்டிக் காட்டுவாங்க”

“சரி... ஒரு தடவை சுஜாதா சொன்னார். அட்டையைக் கிழித்துவிட்டால் எல்லா பத்திரிகையும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு. அது மாதிரி நாம என்ன எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கா?” – இது நான்.
இதுக்கு நாயகன் கமல் பதில்தான் கார்க்கியிடமிருந்து வந்த்து. “தெரியலயேப்பா..”

“சரி.. சோதிச்சு பார்த்துடுவோமா?”

“எப்படி?”

“அடுத்தவார காக்டெயிலை என் மெயிலுக்கு அனுப்பு. நான் அவியலை உன் மெயிலுக்கு அனுப்பறேன். நீ காக்டெய்ல்ல என் அவியலைப் போடு. நான் அவியல்ல உன் காக்டெய்ல் மேட்டர்களைப் போடறேன். கண்டுபிடிக்கறாங்களான்னு பார்ப்போம்”

“ஒகே டன்”

கார்க்கி ஒப்புக்கொள்ள எக்சேஞ்ச் ஆஃபரில் ஆபரேஷன் அவியல் ஆரம்பமானது. அதன்படி ஞாயிறு இரவு அவர் எனக்கனுப்ப, நான் அவருக்கனுப்ப..


நேற்று நீங்கள் காக்டெயிலில் படித்தது என் அவியல். இங்கே அவியலில் படித்தது அவரது காக்டெய்ல்! (சரி.. சரி.. அசடு வழிஞ்சது போதும்...)


பஸ்ஸின் பின்னால் விளம்பரம், பிரபுவின் நடிப்பு, ஞானக்கூத்தன் கவிதை, ரயில்வே ஸ்டேஷன் ரசனை, ஐ.பி.எல்லின் மாஸ், குருவியார் கேள்விகள் – எல்லாம் என் படைப்பு.

ஆனா...

படு சுவாரஸ்யமா போச்சுங்க நேத்து!

7 மணிக்கு அப்லோடு பண்ணீட்டு அலுவலகம் வந்து பார்த்தா எனக்கு 21 கமெண்ட். கார்க்கிக்கு வெறும் அஞ்சு கமெண்ட்.

பதினோரு மணிக்கு கார்க்கிகிட்டேர்ந்து ஃபோன்..

“சகா ஒரு ஹேப்பி நியூஸ்”

“என்னப்பா?”

“உங்க அவியல் சூடான இடுகைக்கு போட்ட ரெண்டே மணி நேரத்துல வந்துடுச்சு”

“காக்டெய்ல்?”

“ம்ஹூம்” - இதச் சொல்லும்போது அவ்ளோ சந்தோஷம் அவருக்கு.

நானும் பார்க்கறேன்.. பார்க்கறேன்.. யாராவது என் ஸ்டைலை வெச்சு கண்டுபிடிச்சு (அப்படின்னு ஒண்ணு இருந்தாத்தானே???) காக்டெய்ல்ல ஏதாவது கமெண்ட் போடுவாங்கன்னு பார்த்தா ம்ஹூம்..

கார்க்கி வேணும்னே அஜீத் மேட்டரை மிக்ஸ் பண்ணியிருந்தார். நானும் பின்னூட்டங்கள்ல சிற்சில க்ளூ குடுத்திருந்தேன். அப்படியும் யாரும் கண்டுபிடிக்கல.

இதுல நர்சிம் கூப்ட்டு பேசும்போது வேற “காக்டெய்ல் படிச்சீங்களா”ன்னு கேட்டேன். “அருமையா எழுதிருக்கான் பார்த்தீங்கள்ல.. எழுத்துல ஒரு மெச்சூரிட்டி வந்துடுச்சு. ஆஹா.. ஒஹோ” ன்னு ஒரே புகழ்ச்சி. உடனே கார்க்கிக்கு கான்ஃப்ரென்ஸ் போட்டு அவனையும் கேட்க வெச்சு, நர்சிம் சந்தேகப்பட்டப்போ (யோவ்.. என்ன..ஏதோ உள்குத்து போல இருக்கு.. இன்னைக்கு நான் மாட்டினேனா) சமாளிச்சு...

கார்க்கி நேத்து பெங்களூர்ல இருந்த்தால ப்ளாக் பக்கம் வரமுடியல. அவியலுக்கு (அதாவது கார்க்கியோட படைப்புகளுக்கு) வந்த கமெண்ட் எதுவும் பார்க்க முடியல. அவருக்கு (அதாவது என் படைப்புகளுக்கு) வந்த கமெண்ட்ஸ்-ஐ மெய்ல் மூலமா பார்த்துகிட்டிருந்தாராம்! அவருக்கும் அப்பப்போ எனக்கு வந்த கமெண்ட்ஸையெல்லாம் சொல்லி...

இன்னொண்ணும் தோணிச்சு...

எழுத்துல இன்னும் எவ்ளோ தூரம் போகவேண்டியிருக்குன்னு. நம்ம எழுத்தை தனித்து அடையாளம் காண்கிறாற்போல எழுதுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன? (சீரியஸா யோசிக்கறேனோ? சரி.. விடுங்க!)

வழக்கமாவே இருந்தா அதுல என்ன சுவாரஸ்யம்க? அப்பப்போ இப்படி சின்னச் சின்ன குறும்புகள் செஞ்சு லைவ்லியா வாழறதுதான் எனக்கு இஷ்டம்.

அந்த வகையில இந்தத் திட்ட்த்துக்கு ஒப்புக்கொண்ட கார்க்கிக்கு நன்றியும்,

ஏமாத்தீட்டியேன்னு கோவிச்சுகிட்டீங்கன்னா ஸாரியும்,

‘ஏய்ய்ய்.. யூ’ன்னு செல்லமா குத்து விட ஆசைப்படறவங்களுக்கு என் தோள்களும்...

63 comments:

ILA (a) இளா said...

சரிங்க, இந்தப் பதிவை யாரு எழுதினது?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது கூட நீங்க எழுதியதா? இல்ல சபையில யாரவது எழுதி கொடுத்து வாங்கிட்டு வந்ததா?

திருவிளையாடல் ல இதெல்லாம் சகஜம்.......

ராமலக்ஷ்மி said...

அடடா:)? அப்போ நேற்று மணத்தது அவியல் இல்லையா? காக்டெயில் வாசமா:))? ஹிஹி.. காக்டெயில் நமக்கு பழக்கமில்லையா அதான் கண்டுபுடிக்க முடியலையாக்கும்:)))! சரி இப்போ போய் அந்த காக்டெயிலை...சாரி அவியலை ருசித்து விட்டு வருகிறேன்:)!

நல்ல சர்வே:)!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எம்பெருமான் இறையானாரும்

தமிழ்வேலும் கட்டிக் காத்த தமிழ்சங்கத்தில் மாறுவேடப் போட்டியா...............

நிகழ்காலத்தில்... said...

\\சரிங்க, இந்தப் பதிவை யாரு எழுதினது?\\

இதேதான் நானும் கேட்கிறேன்!!!

சிவக்குமரன் said...

எத எழுதினாலும் படிக்கிறோம்கிற் ---------தானே? இருந்தாலும் இந்த மாதிரி யோசிக்கிறதே நல்ல படைப்புகள் வர்றதுக்கான அறிகுறிங்கறதால போனா போவுதுன்னு -------

கோவி.கண்ணன் said...

கிளம்பிட்டாய்ங்க............

வால்காரனும், பரிசல்பையனும் எப்போதும் வரும் ?
:)

சின்னப் பையன் said...

ஆஹா... இப்படி வேறே நடக்குதா??? 'அங்கே'யிருந்தாலும் எனக்கு இந்த மாதிரி யோசனை வரமாட்டேங்குதே????

அ.மு.செய்யது said...

//ILA said...
சரிங்க, இந்தப் பதிவை யாரு எழுதினது?
//

குட் கொஸ்டின்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வா இருக்கே.....

என்.இனியவன் said...

// கோவி.கண்ணன் said...

வால்காரனும், பரிசல்பையனும் எப்போதும் வரும் ? //

இதையெல்லாம் நாம உடன கண்டுபிடிச்சுடுவமாக்கும்.
எப்படியும் வால்பையன் பதிவு முழுவதும் தண்ணியை (சரக்கு) கலந்து தெளித்திருப்பார்.
அது என்ன எண்ணெய் என்பதற்கு பதிலாக அது என்ன சரக்கு என கேட்டிருப்பார்? ஹி ஹி

வால்பையன் ரொம்ப சாரி.

Mahesh said...

அவியலோ காக்டெய்லோ அதனதன் வகையில் இரண்டுமே அருமையாகத்தான் இருந்தன.

இப்பொது நான் சொன்னால் வேறுமாதிரியாக இருக்கலாம். அவியலைப் படித்தபோது வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் காக்டெய்ல் கார்க்கி ஸ்டைலில் இல்லை என்று மட்டும் தெரிந்தது. ஆனால் "என்ன கார்க்கி உங்க ஸ்டைல் இல்லயே?"ன்னு பின்னூட்டம் போட்டு நான் எதாவது அரசியலைக் கிளப்பி விடுவேனோங்கற பயத்துலயே பின்னூட்டம் போடலை.

அறிவிலி said...

:-)))))))

இதுதான் ரொம்ப சேஃப் ஆன பின்னூட்டம் போல இருக்கு.
(எல்லா விதத்துலயும்)

anujanya said...

ஹா ஹா ஹா

ரொம்பவே ரசித்தேன் பரிசல் சாரி கார்க்கி இல்ல இல்ல ஆதி? நர்சிம்? குசும்பன்? வால்பையன்? இல்ல நானேவா? புலம்ப வெச்சுட்டானுங்களே :((

அனுஜன்யா

கோபிநாத் said...

அவ்வ்வ்வ்...போன பதிவுல கவிதை எல்லாம் வேற இருந்தது!!??

நல்ல விளையாட்டு தான்..ஆமா இந்த பதிவு யாரு எழுதியது!??

;)

தராசு said...

இப்பிடி வேற கிளம்பிட்டாங்கையா!!!!!

Truth said...

அட கொய்யாப் பயலுகளா!!!

கார்க்கிபவா said...

//அவியலைப் படித்தபோது வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் காக்டெய்ல் கார்க்கி ஸ்டைலில் இல்லை என்று மட்டும் தெரிந்தது. ஆனால் "என்ன கார்க்கி உங்க ஸ்டைல் இல்லயே?"//

ஆஹா..பரிசல் கவனிச்சிங்களா? எனக்கு ஸ்டைல் இருக்காம்.. மஹேஷ் சாருக்கு ஒரு ப்ளூ சட்டை பார்சல்..

பரிசல்காரன் said...

@ ILA

தல.. இது முழுக்க முழுக்க என் படைப்பு என உறுதி கூறுகிறேன்!

@ SUREஷ்

ஹா...ஹா..ஹா... (யாருங்க அது M.பெருமான்? யாராவது மூத்த பதிவரா?)

@ ராமலக்‌ஷ்மி

மேடம்... அங்கயும் அப்ப எனக்கு கமெண்ட் உறுதில்ல?

@ அறிவே தெய்வம்

நாந்தாங்க.. நாந்தாங்க.. நாந்தாங்க..

@ இரா.சிவக்குமரன்

உங்க பின்னூட்டத்துல இருக்கற __________ வலிக்குது. இதெல்லாம் ஒரு ஜாலிக்குதான். அதே சமயம் எங்களை சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளவும்தான். அதான் ஏமாந்திருந்தா சாரி கேட்டுட்டேன்ல? அப்பறம் என்ன __________???

:---))))))) ஓகே.. லீவிட்!

@ கோவி.ஜி

ஆஹா.. இது சூப்பரா இருக்கே.. பரிசல்கண்ணன், கோவிக்காரன் ஆரம்பிக்கலாமா?

@ ச்சின்னப்பையன்

‘அங்கே’ - எங்கே நண்பா?

@ அ.மு.செய்யது

எத்தினிவாட்டிதான் சொல்றது.. நாந்தாங்க... டி.பி.கஜேந்திரன் மாதிரி புலம்ப விட்டுட்டீங்களே.. (நான் நிக்கறேன்.. நிக்கறேன்.. நிக்கறேன்..)

@ ஆ.ஞானசேகரன்

நன்றிங்க..!

@ என்.இனியவன்

இதுக்கெல்லாம் வால்பையன் தப்பா எல்லாம் நினைக்க மாட்டாருங்க.. நல்ல மனுஷன்!

அதே சமயம் அப்படி எழுதறதா இருந்தா வேற மாதிரிதானே எழுதுவார்??

BTW நல்ல கமெண்ட் நண்பா...

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல்காரன் said...

@ மகேஷ்

//இப்பொது நான் சொன்னால் வேறுமாதிரியாக இருக்கலாம். அவியலைப் படித்தபோது வித்தியாசம் தெரியவில்லை//

எதுமாதிரியும் என்னால் எழுதமுடியும்னு பாராட்டினதுக்கு நன்றிங்க.. உங்களுக்கு ஒரு டெனிம் ஜீன்ஸ் பார்சல்! (கீழ கார்க்கி ப்ளூ சர்ட் குடுத்துருக்கார். மேட்ச்சிங்கா இருக்கட்டுமே...)

@ அறிவிலி

அப்படின்னு வெறும் ஸ்மைலியோட போயிடாதீங்க தல... பாவம் நாங்க..

@ அனுஜன்யா

//ரொம்பவே ரசித்தேன் பரிசல் சாரி கார்க்கி இல்ல இல்ல ஆதி? நர்சிம்? குசும்பன்? வால்பையன்? இல்ல நானேவா? புலம்ப வெச்சுட்டானுங்களே :((//

கன்னா பின்னான்னு சிரிச்சேங்க.. த பெஸ்ட் கமெண்ட் ஃபார் திஸ் பதிவு!!!

@ கோபிநாத்

அதெல்லாம் தூண்டில் கவிதை!

@ தராசு

ஹி..ஹி..

@ TRUTH

//அடக் கொய்யாப் பயலுகளா//

இந்த கூப்பாடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..

:-)))))

@ கார்க்கி

அவியலைப் படித்தபோது வித்தியாசம் தெரியவில்லை. காக்டெய்ல் கார்க்கி ஸ்டைல் இல்லைன்னா என்ன அர்த்தம்? நீ ஒரே மாதிரியே எழுதற... வெரைட்டி இல்லைன்னு அர்த்தம்! அது தெரியாம ப்ளூ ஷர்ட், வெள்ளை வேட்டியெல்லாம் குடுத்துகிட்டு....

பரிசல்காரன் said...

@ நான் ஆதவன்

ரொம்ப கோவம் போல இருக்கு???

Ramesh said...

போங்கையா நீங்களும் உங்க விளையாட்டும். ;-)

முதலிலே மக்களை மொக்கை போட்டு, வோட்டு போட சொல்லுங்க.

குசும்பன் said...

//சரி... ஒரு தடவை சுஜாதா சொன்னார். அட்டையைக் கிழித்துவிட்டால் எல்லா பத்திரிகையும் ஒரே மாதிரிதான் இருக்கும்னு.//

கொக்கோக முனிவர் என்ன சொல்லியிருக்கிறார்ன்னா... சரிவிடுங்க சொல்லி என்ன ஆவபோவுது?

நல்லாயிருந்தா சரி!:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நானே நானா, யாரோ தானா?

Thamira said...

இருந்தாலும் கண்ண‌தாசன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

சொல்லிவைத்து இது யாருடையது என கண்டு பிடிக்கச்சொல்லியிருந்தால் சரியாக பிடித்திருப்போம் என்றே நினைக்கிறேன். மேலும் நீங்க இருவருமே வழக்கமான ஸ்டைலில் எழுதாமல் கொஞ்சம் அடக்கியே வாசித்திருப்பது போட்டியே வைக்காவிட்டாலும் போட்டியை டஃப்பாக்கிவிட்டது.

இப்ப சொன்னதுக்கப்புறம் வித்தியாசம் உணரமுடிகிறது. நல்ல ஃபன்.!

sriraj_sabre said...

என்ன ஒரு கள்ள தனம் !!!!

உண்மைய சொல்லனும்னா அவியல்(உண்மையான காக்டெய்ல்) சூட இல்லைனாலும் சுவை இருந்துச்சு !!!
காக்டெய்ல்(உண்மையான அவியல்) சுடு இருந்தாலும் சுவை கொஞ்சம் கொறச்சல் தான்...

narsim said...

இவெங்க கிட்ட இருந்து மொபைல பிடிங்கிட்டா எல்லாம் சரியாப் போகும்..

கார்க்கிபவா said...

yaaro enakku president award vaangi tharenu sonnaangale.. vaangki kodunga sagaa..

பரிசல்காரன் said...

@ Ramesh

//முதலிலே மக்களை மொக்கை போட்டு//

இப்ப மட்டும் என்ன.. மொக்கைதானே போடறோம்?

@ ஸ்ரீமதி

இதற்கும் அதே சிரிப்புதானா தோழி?

@ குசும்பன்

எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க குசும்பா..

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

நீங்களேதான் குருவே!

@ ஆதி

//இருந்தாலும் கண்ண‌தாசன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.//

பதிவுலக இதெல்லாம் சாதாரணமப்பா!! நீங்க ‘இயக்குனர்’ன்னு போட்டுக்கலியா? :-))))))))))) எப்படீஈஈஈஈ???

@ தமிழ்விரும்பி

//உண்மைய சொல்லனும்னா அவியல்(உண்மையான காக்டெய்ல்) சூட இல்லைனாலும் சுவை இருந்துச்சு !!!
காக்டெய்ல்(உண்மையான அவியல்) சுடு இருந்தாலும் சுவை கொஞ்சம் கொறச்சல் தான்...//

ஒத்துக்கறேன். நீங்க நல்ல வாசகர்ங்க!

@ நர்சிம்

//narsim said...

இவெங்க கிட்ட இருந்து மொபைல பிடிங்கிட்டா எல்லாம் சரியாப் போகும்..//

ஹி..ஹி..ஹி..

@ கார்க்கி

எழுத்தாளர் தமயந்திக்கு இந்த பின்னூட்டம் ஃபார்வேர்ட் செய்யப்படுகிறது!

மேவி... said...

சார்லஸ் டிக்கென்ஸ் கதையை டேன் பிரவுன் எழுதின எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு நேத்து அவியல்

மேவி... said...

reply avasiyam

Bleachingpowder said...

சாருவை பத்தியும் இன்னும் சிலரை பத்தியும் என்னோட ப்ளாக்குல எழுதினது நீங்கதான்கிற உன்மையை எப்போ சொல்ல போறீங்க தல

selventhiran said...

ஆள் மாறாட்டமா பண்றீங்க?! இனிமே இப்படி நடந்திச்சி கவிதை எழுதிடுவேன். ஜாக்கிரதை!

பரிசல்காரன் said...

@ MayVee
//MayVee said...

சார்லஸ் டிக்கென்ஸ் கதையை டேன் பிரவுன் எழுதின எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு நேத்து அவியல்//

ரெண்டு பேரைப் பத்தியும் தெரிஞ்சவங்க விளக்கினா பரவால்ல.


//reply avasiyam//

டெய்லி சொல்றேனே நண்பரே? எதுனா ஸ்பெஷல் உள்குத்து இருக்கா இதுல?

@ Bleachingpowder said...

சாருவை பத்தியும் இன்னும் சிலரை பத்தியும் என்னோட ப்ளாக்குல எழுதினது நீங்கதான்கிற உன்மையை எப்போ சொல்ல போறீங்க தல//

ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வர்றீங்க.. இப்படியா போட்டுத்தாக்கறது.. (எப்படியோ என் பதிவுக்கு நேத்து கமெண்ட் போட வெச்சுட்ட்டோம்ல!)

பை த வே..

சாரு பத்தியும் மற்ற உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைப் பத்தியும் பட் படார்னு ஃப்ராங்க்கா (தேங்காய உடைச்ச மாதிரின்னு சொல்லுவாங்க) எழுதற உங்க ஆண்மைக்கு நான் ரசிகன்!

@ செல்வேந்திரன்

உங்கள கவிதை எழுத வைக்கணும்மா இன்னும் பல தடவை பண்ணலாமே...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இதென்ன கலாட்டா? ஆனா கண்டு பிடிக்க முடியலைதான்.

Kumky said...

எல்லாம் சரி..என்னோட பின்னூட்டம் சரிதானே...முந்தைய பதிவில்.

பரிசல்காரன் said...

மிக்க நன்றி ஸ்ரீதர்.

@ கும்க்கி

நீங்க எதுக்கு உள்குத்துன்னு சொலலாம இப்படி பொத்தாம் பொதுவா கேட்டா எப்படீ சார்?

ஒரு வேளை நெசமாலுமே நீங்க கண்டுபிடிச்சிருந்தீங்கன்னா...

ஒரு ப்ளூ சட்டை பார்சேஏஏஏல்ல்ல்ல்ல்ல்.....

Kumky said...

கூரியர் பையன எதிர்ப்பார்த்து....

Kumky said...

பதிவை பார்த்து அல்ல..உங்கள் பின்னூட்டத்தை பார்த்துத்தான்..ஒரு சந்தேகம்.

Kumky said...

வழக்கம்போல அவசரப்பட்டு ஏதும் சொல்லவேண்டாமென இருந்துவிட்டேன்.

மணிகண்டன் said...

சார்லி சாப்ளின், கண்ணதாசன் உதாரணம் எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? :)-

நீங்க ரெண்டுபேரும் ஒரே ஸ்டைல்ல எழுதறவங்க தான ! மக்களுக்கு ரொம்ப எளிதா புரியற மாதிரி ! அதுனால தான் கஷ்டம்.

இதுவே ஜ்யோவ்ராம் சுந்தர் இல்லாட்டி அனுஜன்யாவோட மிக்ஸ் பண்ணி இருந்தா கண்டுபிடிச்சி இருக்கலாம் இல்லாட்டி அட்லீஸ்ட் ஏன் நடை மாறி இருக்குன்னு கேள்வியாவது வந்து இருக்கும் !

பரிசல்காரன் said...

//கும்க்கி said...

பதிவை பார்த்து அல்ல..உங்கள் பின்னூட்டத்தை பார்த்துத்தான்..ஒரு சந்தேகம்.//

பாராட்டுகள் பாஸ்!

@ மணிகண்டன் said...

சார்லி சாப்ளின், கண்ணதாசன் உதாரணம் எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? :)-//

நாளைக்கு உலகம் எங்களப் பத்தியும் இபப்டி பேசத்தான் போகுது. நீங்க பாக்கத்தான்.. ச்சே.. கேக்கத்தான் போறீங்க..

// நீங்க ரெண்டுபேரும் ஒரே ஸ்டைல்ல எழுதறவங்க தான ! மக்களுக்கு ரொம்ப எளிதா புரியற மாதிரி ! அதுனால தான் கஷ்டம்.//

யாரு சொன்னாங்க? கூடிய சீக்கிரம் ஒரே மேட்டரை கார்க்கி/நர்சிம்/அதிஷா மாதிரி மாத்தி மாத்தி நான் எழுதி ஒரு பதிவு போடறேன் பாருங்க நண்பா!

//இதுவே ஜ்யோவ்ராம் சுந்தர் இல்லாட்டி அனுஜன்யாவோட மிக்ஸ் பண்ணி இருந்தா கண்டுபிடிச்சி இருக்கலாம் இல்லாட்டி அட்லீஸ்ட் ஏன் நடை மாறி இருக்குன்னு கேள்வியாவது வந்து இருக்கும் !//

அனுஜன்யா சார்.. ச்சேச்சே.. இதுக்கெல்லாம் அழலாமா? விடுங்க.. விடுங்க..

மணிகண்டன் said...

****
யாரு சொன்னாங்க? கூடிய சீக்கிரம் ஒரே மேட்டரை கார்க்கி/நர்சிம்/அதிஷா மாதிரி மாத்தி மாத்தி நான் எழுதி ஒரு பதிவு போடறேன் பாருங்க நண்பா!
*****

கவலையே படாதீங்க. நீங்க இது மாதிரி எல்லாம் எழுதாட்டியும் , ஒவ்வொரு பதிவுக்கும் வந்து இது நர்சிமா ? அதிஷாவா ? லக்கி லுக்கா ? கார்க்கியான்னு கேள்வி கேட்டு, இந்த மாதிரி நினைப்பு கூட வராம பாத்துக்கறோம் !

ஆனாலும் கார்க்கி எழுதின அவியல்ல உங்க ஸ்டைல் முயற்சி பண்ணி எழுதி இருக்காரோ ? IPL மேட்டர் தவிர !

Sanjai Gandhi said...

கோவைக்கு அடுத்த விசிட் எப்போ மாம்ஸ்?

பரிசல்காரன் said...

@ மணிகண்டன்

//கவலையே படாதீங்க. நீங்க இது மாதிரி எல்லாம் எழுதாட்டியும் , ஒவ்வொரு பதிவுக்கும் வந்து இது நர்சிமா ? அதிஷாவா ? லக்கி லுக்கா ? கார்க்கியான்னு கேள்வி கேட்டு, இந்த மாதிரி நினைப்பு கூட வராம பாத்துக்கறோம் !//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

@ சஞ்சய்

மாப்பி.. எதுக்கு இந்தக் கேள்வி? ஒதைக்கவா?

Kumky said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

கோவைக்கு அடுத்த விசிட் எப்போ மாம்ஸ்?

எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.
அவசரப்பட வேண்டாம்.ஆட்களையும் பொருளையும் பத்திரப்படுத்தி வைக்கவும்.

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஐடியா சூப்பர்!!!

Kathir said...

ஹை 50

தமிழன்-கறுப்பி... said...

நான் காக்டெயில் படிக்கல படிச்சிருந்தா கண்டு பிடிச்சிருப்பேன்...

Kathir said...

மாத்தி போடப்போறோம் ன்னு தெரிஞ்சதுனால நீங்க அவர் ஸ்டைல் லயும், அவர் உங்க ஸ்டைல் லயும் எழுதினதுனால எங்களால கண்டு பிடிக்க முடியலையோ ?

(எனக்கு மண் ஒட்டலை ல்ல???)

:))

Kathir said...

//கொக்கோக முனிவர் என்ன சொல்லியிருக்கிறார்ன்னா..//

;))

வெட்டிப்பயல் said...

//யாரு சொன்னாங்க? கூடிய சீக்கிரம் ஒரே மேட்டரை கார்க்கி/நர்சிம்/அதிஷா மாதிரி மாத்தி மாத்தி நான் எழுதி ஒரு பதிவு போடறேன் பாருங்க நண்பா!//

Appadiye Lucky, ilavasa kothanar, Boston Bala, Dr. Bruno styleyum try pannunga. kadaisiya mudinja Kusumban style. Ithu nalla variety kodukum :-)

ஒரு காசு said...

நா அப்பவே நெனைச்சேன் ;)

பரிசல்காரன் said...

@ கும்க்கி

சஞ்சய் அந்த ஐடியாவுல இல்லீன்னாலும் சொல்லிக் குடுப்பீங்க போல...

@ விஜய் ஆனந்த்

ரெண்டு வார்த்தை பேசினதுக்கு நன்றிங்க (ஏன் இப்பல்லாம் கூப்பிடறதில்ல?)

@ கதிர்

50 போட்டதை 90 போட்டு கொண்டாடுவமா?

@ தமிழன் கறுப்பி

ஒத்துக்கறேன்.. இப்போ படிங்க..

@ வெட்டிப்பயல்

//Appadiye Lucky, ilavasa kothanar, Boston Bala, Dr. Bruno styleyum try pannunga. kadaisiya mudinja Kusumban style. Ithu nalla variety kodukum :-//

தல.. அதுக்கு என்னைவிட பெஸ்ட் சீனியரான நீங்கதான் தல.

@ ஒரு காசு said...

நா அப்பவே நெனைச்சேன் ;)//

இதப்பார்றா.. என்னான்னு நெனைச்சீங்க?

வால்பையன் said...

அன்னைக்கு விடுமுறை என்பதால் நான் மிஸ் பண்ணிட்டேன்!

(தப்பிச்சிடோம்ல)

Unknown said...

Ayya parisalkarare,

nan ippatha blog arampichu etho thathaka pithakanu nadanthu ulla vanthu partha, etho tirupur kararachenu oor pasathoda unga bloga etti patha, ammadi ippadi ellam kooda mokka poda mudiyumanu yositchu thala ellam sutha arampichuruchu,

But, anyway unga ella blog um padichu mudikarathukkulla enaku sirichu siruchu vayithu valiye vanthiruchu, inime nanum unga jothila iykiyamgidalamnu mudivu panniten, intha nangalum varlomla, valpayanai romba ketatha sollunga, tirupurla ippadi ellam aluga irukkangapa, mudiyala........

வால்பையன் said...

//valpayanai romba ketatha sollunga, //

ரொம்ப நன்றிங்க!
நல்லவேளை தமிங்கிலீஷில் பின்னூட்டம் போட்டிங்க!

பரிசல்காரன் said...

@ வால்பையன்

விடுமுறைன்னா நீங்க எங்க இருப்பீங்கன்னு தெரியும்ல!

@ jai

மேடம்...,

வலையுலகுக்கு வரவேற்புகள்.

திருப்பூர்ல எங்க? ஒரு மின்னஞ்சல் போடலாமே... திருப்பூர்ல பெரிய வலைப்பதிவாளர்கள் பேரவையே இருக்கு. வேலன்ல ஒரு லஞ்ச் மீட்டிங் அரேஞ்ச் பண்ணலாமா???

Sanjai Gandhi said...

//வேலன்ல ஒரு லஞ்ச் மீட்டிங் அரேஞ்ச் பண்ணலாமா??? //

யோவ் மாமா.. நானெல்லாம் எவ்ளோ நாள் திருப்பூர் வந்திருக்கிறேன். எபோவாச்சும் ’மாப்ள லன்ச் கூட்டிட்டு போறேன் வாடா’ன்னு சொல்லி இருக்கிங்களா? :((

பரிசல்காரன் said...

@ சஞ்சய்காந்தி

மாப்பி... அவங்க ப்ளாக்ல நான் போட்டிருக்கற கமெண்டைப் பாரும்யா.. செக்/க்ரடிட் கார்டு யார் கொண்டுவரணும்னு. நீயும் அப்படி வந்தீயானா வேலன்ல POOL BUFFET சாப்பிடலாம்! (வந்தா வீட்டைத்தாண்டி 10 கிலோமீட்டர் போய்ட்டு கூப்பறது.. இதுல வியாக்யானம் வேற..)

Sanjai Gandhi said...

http://www.google.co.in/search?rlz=1C1GGLS_enIN322IN322&sourceid=chrome&ie=UTF-8&q=பரிசல்காரன்

உங்களுக்கும் கூகிளுக்கும் என்ன தொடர்பு?

பட்டாம்பூச்சி said...

ஆனா கூட ரெண்டுமே நல்லாத்தான் இருந்துச்சு.

அளவில்லா அசடுவழிதலுடன்,
பட்டாம்பூச்சி :)