Tuesday, April 28, 2009

வாங்கிமுடிக்காத ஒன்று!

கடனின் அசல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது..
வட்டி அதிலிருந்து வந்து கறுப்புப் பணமாய் சேர்கிறது.


இந்த வாசகத்தைப் படித்துவிட்டு என்னை அழைக்கிறாய்.

‘எத்தனை கொடூரமானவன் நீ..?’

தொடர உன்னிடம் வார்த்தைகளில்லை. என்னிடமும் பதிலாகத் தர ஏதுமில்லை. நாம் பேசி எத்தனை மாதங்களிருக்கும்.. ஸாரி, வருடங்களிருக்கும்? இல்லை. யுகங்களாகிவிட்டன தோழா. நன் குடுத்த கடனை நீ திருப்பிக் கொடுக்காமல் ஆளனுப்பி வெறும் வட்டி வாங்கி வட்டி வாங்கியே நான் பணக்காரனானது உனக்கு வயிற்றெரிச்சலைத் தந்திருக்காலாம். அது வேறு உலகம், வேறு காலம். அங்கிருந்தது நீயல்ல.. அவன் இறந்து போய்விட்டான்.

கடன்காரன் என்பது வேறு. நண்பன் என்பது வேறு. நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் கடன்காரர்களிடெமெல்லாம் பாக்கெட்டை, பர்சை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது. இவன் இன்னும் எத்தனை வங்கிகளில் பணம் வைத்திருப்பான் என்று அது கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது. பணம் தீராத பசி. யாரையும் உண்ண அது எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆனால் என்னுள் தோன்றிய நாள் முதல் உன்னைத்தின்று வளர்ந்தது கடன்.. வேறு வழியின்றி அசல் கிடக்காமல் வட்டியைத் தின்றே பெருத்துவிட்டது. அது ஆயிற்று எத்தனையோ வருடங்கள். உறவிருப்பதாய் எண்ணினால் அந்த வட்டியின் சதவிகிதத்தைக் கூட்டலாம்



காரணங்களா? அதன் தேவையென்ன இப்போது? விந்தையானது இந்த வாழ்க்கை.! பணத்தையெல்லாம் தனியார் வங்கிகளும், க்ரெடிட் கார்டு காரர்களுமே அடித்துச் செல்கின்றன. இந்த வாசகம் எப்படி உன்னில் என்னை நினைவூட்டியது? உன்னுடன் வரவு செலவு செய்துகொண்டிருந்த போது கடன் ஒரு தளிராகத்தான் இருந்தது.

வட்டிகள் பல வகைப்படலாம். கடனின் ஐ.பிநோட்டீஸாகவும் அது இருக்கிறது, அரஸ்ட் வாரண்டின் விலங்காகவும் அது இருக்கிறது. அப்போது ஐ.பி.நோட்டீஸை மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். கடனை ஒழுங்காகக் கட்டி வட்டியை நீ குறைத்திருக்கவேண்டும். ஆனால் உனக்கு கடன் கொடுத்தபோது கொல்லப்பட்டபோது நான் வட்டி வாங்கியே உன்னைக்கொன்றேன். அசல் தனித்துவிடப்பட்டது. மனது பணப்பேய் பிடித்து தனித்தே திரண்டு வளர்ந்திருக்கும் இப்போது உனது அழைப்பு.. கண்ணியமா? அப்படியென்றால்.? நான் உன் பாங்க் பாலன்ஸ் பார்த்தே பேசுவேன்..

“ரெடிகேஷ், இல்லைன்னா செக்கா?"

*
Photo Courtesy: www.myspace.com

*************************

(மக்கள்ஸ்... இது ஒண்ணும் புரியலன்னா ஆதிமூலகிருஷ்ணனோட இந்தப் பதிவப் படிங்க..)

ஆதி.. ஸாரி!


.

32 comments:

லோகு said...

என்ன ஒரு வில்லத்தனம்??

லோகு said...

me tha first..and Second

Mahesh said...

வர வர ஆதிக்கு ரசிகர்கள் அதிகமாயிட்டாங்க...

அங்க ச்சின்னப்பையன் உச்சத்தைத் தொட்டேன்னு கூரையைத் தொடராரு... இங்க பரிசலுக்கு பணத்தின் மேல் காதல்... நடக்கட்டும் நடக்கட்டும்....

anujanya said...

This is too much. பாவம், ஆதி எவ்வளவு கஷ்டப்பட்டு சிந்தித்து பதிவு போட்டாரு? சும்மா எதிர்ப் பதிவா? :)))))

அமுதா said...

:-)))

கடைக்குட்டி said...

வலையரசியலா ??? நல்லா இருக்கு தல.. நம்ம கட பக்கமும் வாங்க தல...

Athisha said...

பாஸ் எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி பதிவு போட்டு...

ஹிஹி..

இராகவன் நைஜிரியா said...

// லோகு said...
என்ன ஒரு வில்லத்தனம்?? //

ரிப்பீட்டு...................

எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்காரு ஆதி, இப்படி பண்ணிட்டீங்களே..

சிவக்குமரன் said...

///நன் குடுத்த கடனை நீ திருப்பிக் கொடுக்காமல் ஆளனுப்பி வெறும் வட்டி வாங்கி வட்டி வாங்கியே நான் பணக்காரனானது உனக்கு வயிற்றெரிச்சலைத் தந்திருக்காலாம்.///

என்னதான் சொல்ல வரீங்க?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:-)

Kathir said...

என்னண்ணே இந்த தடவை நீங்க முந்திகிட்டீங்க போல.....

அடுத்து யாருப்பா.....

:)))))))

கார்க்கிபவா said...

/ஆதி எவ்வளவு கஷ்டப்பட்டு சிந்தித்து பதிவு போட்டாரு//

ஹிஹிஹி..உங்க நுண்ணரசியல நான் நோட் பண்ணிட்டேன் தல..

பரிசல்காரன் said...

நன்றி லோகு

நன்றி மகேஷ்

@ அனுஜன்யா

//எவ்வளவு கஷ்டப்பட்டு சிந்தித்து பதிவு போட்டாரு? சும்மா எதிர்ப் பதிவா? :)))))//

சும்மா இல்ல. வேற ஒரு டீலிங் நடந்துட்டு இருக்கு!

@ நன்றி அமுதா

@ கடைக்குட்டி

உங்க கடைக்கு வந்து மொய் எழுதீட்டேன். ஓகே?

@ அதிஷா

வாய்யா.. நல்லா எழுதறப்ப எல்லாம் வராத.. திட்டறதுக்கு மட்டும் முந்திக்க... கூ கெ கு!

@ இராகவன் நைஜீரியா

என்னங்க ஆளாளுக்கு கஷ்டப்பட்டாரு, கஷ்டப்பட்டாருங்கறீஙக்? நாங்க என்ன ஈஸியாவா எழுதறோம்.

:-)))

@ சிவக்குமரன்

ஒண்ணியுமில்ல நைனா..

@ அமிர்தவர்ஷனி

நன்றிம்மா

@ கதிர்

ஹி..ஹி..

@ கார்க்கி

ஏன்ப்பா? ஏன்.....

தீப்பெட்டி said...

///மக்கள்ஸ்... இது ஒண்ணும் புரியலன்னா ஆதிமூலகிருஷ்ணனோட இந்தப் பதிவப் படிங்க..///

உங்க இந்த பதிவுல இந்த ஒரு வரி தான் பிரமாதமா இருக்கு...

கலக்குங்க..(அப்படீன்னா மொக்கை பதிவு போடும் போது இப்படி ஒரு நல்ல பதிவுக்கு லின்க் கொடுங்கனு அர்த்தம்)

இராகவன் நைஜிரியா said...

//@ இராகவன் நைஜீரியா

என்னங்க ஆளாளுக்கு கஷ்டப்பட்டாரு, கஷ்டப்பட்டாருங்கறீஙக்? நாங்க என்ன ஈஸியாவா எழுதறோம்.

:-)))//

அண்ணே ... கோச்சுக்காதீங்க... சும்மா எல்லாம் ஒரு லுல்லுலாயிக்குதான்...

உங்களைப் போயி அப்படி சொல்லுவேனா...

www.narsim.in said...

ஓ இந்தப் பதிவோட மூலம் ஆதிகிட்ட இருந்தா?

Cable சங்கர் said...

ஏன் இந்த கொலைவெறி..?

ஆதவா said...

அட போங்கப்பா!!! ரொம்ப சீரியஸா படிச்சேன்!!!

பீர் | Peer said...

ஆதி இதப்பாத்தா பேதி ஆகிடுவாரே...

ஆ.சுதா said...

நானும் ஏதோ கவிதையா கதை எழுதியிருக்கீங்க போலன்னு நினைச்சேன்.... கீழ உள்ளத விட்டட்டு மேல உள்ளத மட்டும் படிச்சிக்கலாம்!!!

வால்பையன் said...

//பணம் தீராத பசி. யாரையும் உண்ண அது எப்போதும் தயாராகவே இருக்கிறது.//

இது ஒண்ணுதான் புரியிற மாதிரி இருக்கு,
மத்ததெல்லாம் பாக்கும் போது எதோ பின்நவினத்துவ பதிவர் ப்ளாக்குள நுழைஞ்சா மாதிரி ஒரு பீலிங்க்!

என்னை மாதிரி அப்பாவி வாசகர்களும் இருக்குறாங்கன்னு மனசுல வச்சிகிட்டு எழுதுங்க தோழரே!

வால்பையன் said...

இது எதிர்பதிவா!

எப்பா எதிர்பதிவெல்லாம் மொக்கையா எழுதுனும் இப்படி எழுதினா எதிர்பதிவுக்கே கோபம் வந்துரும்!

பரிசல்காரன் said...

நன்றி தீப்பெட்டி

@ இராகவன் நைஜீரியா

என்ன தல இது? ச்சும்மா லுலுலாயிக்கு கமெண்டினேன்.. எனக்கு கோவமா? ச்சேச்சே! அப்படியெல்லாம் இல்லங்க..

@ நர்சிம்

ஆமா. ஆதி மூலம்கிட்டேர்ந்து இந்த கிருஷ்ணா வாங்கின பதிவு இது.

@ கேபிள் சங்கர்

ஹி..ஹி...

@ ஆதவா

பாவங்க நீங்க..

@ ச்சில்-பீர்

ஆதி... பேதி -- ம்ம்ம்ம்!

@ ஆ.மு.ரா

அப்படியா.. அப்ப மேல உள்ளது நல்லாருக்குங்கறீங்களா?

(ஆமா நீங்க சொல்றது பரிசல்காரன் - ரசிப்போர் விழி தேடி” -ங்கறதயா?)

@ வால்பையன்

பதிவ முழுசா படிங்க.. அப்பறமா பின்னூட்டங்க தல.. பாருங்க அசடு வழியுது...

வசந்த் ஆதிமூலம் said...

பரிசல், திரும்பவும் நீங்க பேய் , பிசாசுன்னு ஏதாவது ட்ரை பண்ணலாமே..

கோபிநாத் said...

படிச்சிட்டேன் தல ;-)

பரிசல்காரன் said...

@ வசந்த் ஆதிமூலம்

அதான் சொன்னேனே, உங்களப் பத்தி ஒரு கத எழுதறேன்னு.. கவலப் படாதீங்க.... :-)))))

@ கோபிநாத்

ரொம்ப வலியோ? ஸாரிங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

நீங்க எத்தனை பேர்கிட்ட வாங்கியிருக்கீங்க கடனில்லை வட்டி....

ஆக மொத்தத்தில ஆதி வட்டியும் முதலுமா கொடுக்க போறார்ன்னு நினைக்கிறேன்,,,,,உங்களுக்கு

வாழ்த்துக்கள்,,,,,,,,,,

Thamira said...

அய்யய்யோ.. முக்கியமான இந்தப்பதிவுக்கு சிரித்ததோட போயிட்டேனா..? ஆபிஸ்ல வேல செய்ய சொல்றானுங்கப்பா.. யாவாரம் முடிஞ்சப்பிறகு என்னத்தைச்சொல்ல.?

நன்றி.!!

மங்களூர் சிவா said...

பதிவு ரொம்ப நல்லா இருக்கு.

(பதிவு புரியலைனா இப்பிடித்தான் கமெண்ட்டனுமாம்)

மங்களூர் சிவா said...

/
வசந்த் ஆதிமூலம் said...

பரிசல், திரும்பவும் நீங்க பேய் , பிசாசுன்னு ஏதாவது ட்ரை பண்ணலாமே..
/

ஆமாப்பா!
மண்டை காயுது!!
:))))

ஊர்சுற்றி said...

அருமையாக - நகலெடுத்திருக்கிறீர்கள். நகைச்சுவையாக. :))))

Media 1st said...

ஏன் இந்த கொலைவெறி..?
பதிவு ரொம்ப நல்லா இருக்கு.