Thursday, April 30, 2009

ஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப்....

இது எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு கடிதம்.

பயப்படாதீங்க.. வழக்கமான கடிதம் அல்ல.

உண்மையா என்று தெரியவில்லை... ஜேப்பியார் என்றொரு ப்ரொஃபசர் இருந்தாராம். அவர் ஆங்கிலத்தில் கொல்வதை... ச்சே.. சொல்வதையெல்லாம் தொகுத்து அவரது மாணவர்கள் புத்தகமே வெளியிட்டிருக்கிறார்களாம். அதிலிருந்து சில பகுதிகள்..


****************************

# க்ரவுண்டில்....

“All of you stand in a straight circle”

“There is no wind in the balloon.”

“The girl with the mirror please comes her front” (கண்ணாடி போட்ட பொண்ண முன்னாடி வரச்சொல்றாராம்!)

***************************

# ஒரு பையன்கிட்ட ரொம்பக் கோவமா....:

“I talk , he talk , why you middle middle talk?”

**************************

# மாணவர்களை தண்டிக்கும்போது..:

“You , rotate the ground four times...” (க்ரவுண்ட நாலு தடவை சுத்தச் சொல்றாரு!)

“You , go and understand the tree...”

“You three of you stand together separately.”

“Why are you late - say YES or NO ......”

***************************

# ட்ரஸ் கோடுல தலைவர் ரொம்ப ஸ்டிரிக்டாம். அது சம்பந்தமா பேசும்போது...


“Every body should wear dress to college
Boys no proplum
Girls are pig proplum . (pig=big)
Girls should wear only slawar no nitee.
Girls should not wear T shirt , U shirt , V shirt.. but if you want to wear .... remove it when inside the campus and put it out side the campus”

***************************

க்ளாஸ் (CLASS!)ல அவரோட சில Class பேச்சுகள்...

“Open the doors of the window. Let the atmosphere come in.”

“Open the doors of the window. Let the Air Force come in.”

“Cut an apple into two halves - I will take the bigger half.”

“Shhh...Quiet , boys...the principal JUST PASSED AWAY in the corridor”

“You , meet me behind the class. (Meaning AFTER the class..)”

"Both of u three get out of the class."

“Close the doors of the windows please. I have winter in my nose today.”

“Take Copper Wire of any metal especially of Silver..... Take 5 cm wire of any length....”

****************************

சார் ஒரு விழாவுக்கு லேட்டா வர்றாரு.... நேரா மேடைக்குப் போய் மைக்ல பேசறாரு...

“Sorry.. I am late , because on the way my car hit 2 muttons (Meaning goats).


**********************

ஒரு காலேஜ்ல புதுசா சேர்ந்த மாணவர்கள்கிட்ட...

"This college strict, u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, I the happy, tomorrow u marry I the enjoy"


"No ragging this college. Anybody rag we arrest the police "


*******************

# அவரது ஆகச் சிறந்த பேச்சு....

சார் ஒரு சினிமாக்கு போயிருக்காரு.. மனைவி கூட. அங்க இவரோட ஸ்டூடண்டைப் பார்த்துட்டாரு. அவன் இவரைப் பாக்கல. அடுத்த நாள் க்ளாஸ்ல...

"Yesterday I saw you WITH MY WIFE at the Cinema Theater".


முடியல!
.

114 comments:

சந்துரு said...

Jeppiar was not professor.. He is the owner of lot of engineering college and president of self financing college association...

பரிசல்காரன் said...

ஐயா சாமி சந்துரு..

அவர எனக்குத் தெரியுமுங்க... தானா வீட்டுக்கு ஆட்டோ அனுப்பச் சொல்வீங்க போலிருக்கே...

கண்ணா.. said...

ஹீ ஸ்பீக் வெரி குட்டு....ஓய் ஓர்ர்ரி யூ...

AvizhdamDesigns said...

சார்,
இப்ப அவர் இருக்காரா, இல்ல செத்துட்டாரா..?

கயல்விழி நடனம் said...

inneram auto vanthu irukkanume unga veetukku..varaliya??? :P

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே மேலே உள்ளதில் 3 சம்பவத்திற்கு நான் நேரடி சாட்சி. நான் அங்க தான் படிச்சேன் :)

எம்.எம்.அப்துல்லா said...

//“I talk , he talk , why you middle middle talk?”

//

இது தப்புண்ணே...அவர் சொன்னது
why you basket basket talking?
(கூட கூட பேசுறானாம்)

எம்.எம்.அப்துல்லா said...

இன்னைக்கு வேற ஏதோ போஸ்ட் போடுறதா சொன்ன ஞாபகம் எனக்கு :)

தராசு said...

அது எப்படிங்க உங்களுக்கு மாத்திரம் இந்தமாதிரியான் கடிதங்களா வருது.

இதுக்கு அப்துல்லா அண்ணன் சாட்சியாமே

Venkatesh Kumaravel said...

//உண்மையா என்று தெரியவில்லை... //
சார்...நக்கல் தலைக்கு மேலே ஏறிப்போச்சு.. ஆனாலும் இதுல பாதி புனைவுங்க... ஆனாலும் அந்தாளு இப்புடித்தான் பேசுவாப்ல... அன்னைக்கு கல்லூரி முதல் நாள் (2007) பேசுனது நீங்க குறிப்பிட்டிருக்கீங்க..
//"This college strict, u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, I the happy, tomorrow u marry I the enjoy"


"No ragging this college. Anybody rag we arrest the police "//

மீதியெல்லாம் பேமஸ் எஸ்.எம்.எஸ், ஈ-மெயில், அவ்ளோதான்.

AvizhdamDesigns said...

எம்.எம்.அப்துல்லா அண்ணே..,

அவரு அட்ரஸ் கெடைக்குமாண்ணே..?

வால்பையன் said...

//Girls should not wear T shirt , U shirt , V shirt.. but if you want to wear .... remove it when inside the campus and put it out side the campus”//

அந்த காலேஜ் எங்கேங்க இருக்கு!

எப்பாடுபட்டாவது ஒரு சீட்டு வாங்கிடுறேன்!

புருனோ Bruno said...

இந்த ஆங்கில வாசகங்களை சொன்னதாக கூறப்படுவது இன்று பல பொறியியல் கல்லூரிகளையும் (சத்யபாமா, ஜோசப், பனிமலர்) , ஒரு நிகர் நிலை பல்கலைகழகத்தையும் (சத்யபாமா) நடத்திக்கொண்டிருக்கும் http://www.sathyabamauniv.ac.in/ திரு ஜேப்பியார் தான்

தமிழ் வழி கல்வியில் படித்து, வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறிய ஒருவர் பேசும் ஆங்கிலத்தை கேலி செய்ய வேண்டுமா :( :(

அவர் கல்லூரி கல்வி பெற்றவரா என்று தெரியவில்லை

இன்று ஆங்கில வழி பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து ஆங்கில வழியிலேயே பொறியியலோ மருத்துவமோ படித்து விட்டு ஒரு விடுப்பு விண்ணப்பத்தையும் ஒரு தொடர்வண்டி முன்பதிவு பாரத்தையும் ஒழுங்காக நிரப்பத்தெரியாத பலருடன் ஒப்பிடுகையில் இவர் ஒன்றும் கேலிக்குரியவர் இல்லை என்பது என் கருத்து

என்.இனியவன் said...

இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த போது நடந்த சம்பவம்.
road இற்கு மேலாக போன wire ஒன்றை, அதனூடாக சென்ற bus ஒன்று அறுத்து விட்டது.
சில நிமிடங்களில் ஒரே பதட்டம்.
அருகில் இருந்த வீட்டை சேர்ந்தவர்கள் அனைவரையும்
wire அறுந்த இடத்துக்குவரச்சொல்லி விசாரணை.
(ராணுவ வாகனம் போகும் போது கண்ணிவெடி வைக்கபடுவதால் அவர்களுக்கு சந்தேகம்)

அவர்களுக்கு தமிழ் தெரியாததால், ஆங்கில ஆசிரியர் ஒருவர்
காரணத்தை விளக்கினார்.
அவர்களோ "why wire cut"என்று கேட்கிறார்களே தவிர ஆசிரியர் சொன்னது விளங்கவில்லை.
கடைசியில் ஒருவர் என்று சொன்னார்.
"Bus go. wire cut"

problem solved

புருனோ Bruno said...

ஆங்கில வார்த்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர அந்த அர்த்தத்தை கவனித்தீர்களா

//Girls should wear only slawar no nitee.
Girls should not wear T shirt , U shirt , V shirt.. but if you want to wear .... remove it when inside the campus and put it out side the campus”//

மாணவிகள் கல்லூரிக்கு சல்வார் தான் அணிந்து வர வேண்டும். டி சட்டை போன்றவற்றை அணிய வேண்டுமென்றால் கல்லூரிக்கு வெளியில் அணிந்து கொள்ளுங்கள் என்பதில் என்ன தவறு என்று நினைக்கிறீர்கள்

//"This college strict, u the worry no .... U get good marks, I the happy, tomorrow u get good job, I the happy, tomorrow u marry I the enjoy"//

//"No ragging this college. Anybody rag we arrest the police "//
பகடிவதையால் இன்று மாணவர்களின் உயிர் பலியாகும் நிலையில் (அண்மையில் இமாச்சல பிரதேசத்தில்), பல மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் துணிந்து தனது கல்லூரியில் பகடிவதைக்கு எதிரான நிலையை எடுத்தமைக்கு பாராட்டலாமே

புருனோ Bruno said...

இறுதியாக, தமிழ் வழி கல்வியில் படித்து, வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறிய ஒருவரின் தவறான ஆங்கிலத்தை கேலி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை :(

புருனோ Bruno said...

இந்த படத்தில் ஒன்பதாவது பெயரை பாருங்கள்

முதல் பெயரையும் பார்க்கவும் !!

பரிசல்காரன் said...

யெஸ்ஸூ கண்ணா யெஸ்ஸூ

மீனவன்..

ஸாரி. நோ கமெண்ட்ஸ்.

@ கயல்விழி நடனம்

புரூனோ சார் அனுப்பறாராம்..

@ எம்.எம்.அப்துல்லா

அத சொல்ல இது சரியான நேரமில்ல. நாளைக்கு லீவுன்னு நிறையபேர் இன்னைகே லீவு போட்டு நாலு நாள் டூர் போறதா உளவுத்துறை தகவல் சொல்லுது. அதுனால திங்கள்ல அடிச்சு விளையாடலாம். (மெய்னா எனக்கு சி டி கிடைச்சா, ஸ்டில்லோட போட ஆசை அப்துல்!)

@ தராசு

ஆமாங்க..

@ வெங்கிராஜா

வெறும் நகைச்சுவைங்க. இதப்போய் பி ஹெச்டி பண்றாப்ல ஆராய்ஞ்சுட்டு...

@ வால்பையன்

சீட்டுன்னா? நெடில்தானே? (சிட்டு இல்லையே?)

☀நான் ஆதவன்☀ said...

//புருனோ Bruno said...

இறுதியாக, தமிழ் வழி கல்வியில் படித்து, வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறிய ஒருவரின் தவறான ஆங்கிலத்தை கேலி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை :(//

அப்ப ஆங்கில வழி கல்வியில் படிச்சுட்டு ,வாழ்க்கையில் முன்னேறி பெரிய பெரிய கம்பெனியில(சாப்ட்வேர் மட்டும் இல்லப்பா) பேசுற கேவலமான தமிழையும் கிண்டல் பண்ணவேண்டாம்ங்கிறீங்க??

பரிசல்காரன் said...

டாக்டர் புரூனோ சார்..

சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

நான் ரொம்ப ரசிச்சு சிரிச்ச ஒண்ணை எடுத்துப் போட்டா, இப்படியா தெளியத் தெளிய அடிப்பீங்க?

நான் பேரை மாத்திப் போட்டிருக்கணும். தப்புதான். மன்னிச்சுடுங்க.

இப்படி நகைச்சுவைகளை அலசி ஆராய்ஞ்சுகிட்டு இருந்தா, ஒண்ணுமே எழுதமுடியாதே தலைவா?

உங்க எந்தக் கருத்தோடயும் (தமிழ் வழி கல்வியில் படித்து, வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறிய ஒருவரின் தவறான ஆங்கிலத்தை கேலி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை) எனக்கு சம்மதமே என்பதை என்னை உணர்ந்த நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

வர வர எதை எழுதவும் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்போல இருக்கிறது.

ப்ளீஸ் சார் கூல்.

உங்கள் மனதையோ, வேறு யார் மனதையுமோ புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.

(பி.கு: அந்தப் படம்... பொக்கிஷம்!)

புருனோ Bruno said...

//அப்ப ஆங்கில வழி கல்வியில் படிச்சுட்டு ,வாழ்க்கையில் முன்னேறி பெரிய பெரிய கம்பெனியில(சாப்ட்வேர் மட்டும் இல்லப்பா) பேசுற கேவலமான தமிழையும் கிண்டல் பண்ணவேண்டாம்ங்கிறீங்க??//

ஆங்கில வழி கல்வியில் படிச்சுட்டு ,வாழ்க்கையில் முன்னேறி பெரிய பெரிய கம்பெனியில(சாப்ட்வேர் மட்டும் இல்லப்பா) சீன மொழியை தாய்மொழியாக கொண்டவரோ, பிரெஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்டவரோ, ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டவரோ, பஞ்சாபி மொழியை தாய்மொழியாக கொண்டவரோ பேசுற கேவலமான தமிழையும் கிண்டல் பண்ணவேண்டாம்

தாய்மொழியை ஒழுங்கில்லாமல் பேசுவது வேறு

அந்நிய மொழியை - அதுவும் முறையாக கற்காத வேறு மொழியை - தவறுடன் பேசுவது வேறு

என்பது என் கருத்து

புரிகிறதா

பரிசல்காரன் said...

@ இனியவன்

ஜோக்கோ ஜோக்கு!

@ நான் ஆதவன்

பாருங்க டாக்டர் சார்... இப்போ எல்லாரும் உங்க பின்னூட்டத்தைப் பிடிச்சு என்னை வாரு வாருன்னு வார ஆரம்பிக்கறாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்...

☀நான் ஆதவன்☀ said...

//அந்நிய மொழியை - அதுவும் முறையாக கற்காத வேறு மொழியை - தவறுடன் பேசுவது வேறு //

புரியுது டாக்டர்

பரிசல்காரன் said...

ஐயையோ.. டாக்டர் சார்... அதுக்குள்ளா அவருக்கு பதிலும் போட்டுட்டீங்களா..

என்னா ஸ்பீடு சார்...

வண்டி வேற ரூட்ல போகுது...

யாராவது காப்பாத்துங்களேன்..

☀நான் ஆதவன்☀ said...

//வர வர எதை எழுதவும் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்போல இருக்கிறது.//

பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்

☀நான் ஆதவன்☀ said...

//Blogger பரிசல்காரன் said...

என்னா ஸ்பீடு சார்...

வண்டி வேற ரூட்ல போகுது...

யாராவது காப்பாத்துங்களேன்..//

கூல் டவுன் கூல் டவுன் பரிசல்

பரிசல்காரன் said...

நர்சிம்..

அப்படி கமெண்ட் போடாதீங்க.. நான் ஆணிய வாதியெல்லாம் இல்ல..

narsim said...

//Girls are pig proplum . (pig=big)//

பரிசல் ஒரு ஆணியவாதி!!!

☀நான் ஆதவன்☀ said...

டாக்டர் சார்..

அவர் தவறாக பேசுவதை கண்டு யாரும் சிரிக்கவில்லை...அது அர்த்தம் மாறுபடும் போது தான் சிரிப்பு வருகிறது.

இதுக்கு சிரிக்கமுடியலன்னா கஷ்டம் தான் டாக்டர்

புருனோ Bruno said...

//நான் பேரை மாத்திப் போட்டிருக்கணும். தப்புதான். மன்னிச்சுடுங்க.//

பரிசல், நீங்கள் பெயர் போடாமல் விட்டிருக்கலாம்

//இப்படி நகைச்சுவைகளை அலசி ஆராய்ஞ்சுகிட்டு இருந்தா, ஒண்ணுமே எழுதமுடியாதே தலைவா?//

இல்லை பரிசல்
நகைச்சுவை என்பது பொது பதம்

இதை பேசியவர் ஒரு தமிழர் என்ற போது ஆங்கிலம் தெரியாதது தவறு, ஒழுங்காக ஆங்கிலம் பேசத்தெரியாதது கேவலம் என்ற ஒரு தவறான கட்டமைப்பின் அடிப்படையில் தான் இந்த தொகுப்பு நகைச்சுவை என்ற பகுப்பின் கீழ் வருகிறது அல்லவா.

அதை சுட்டிக்காட்டத்தான் நான் முயன்றேன்.

மற்றப்படி ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலோ ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலோ கூறப்பட்டது என்று இருந்தால் இதை நகைச்சுவையாக கருதலாம்

என்னை விட வாசிப்பனுபவமும் அனுபவமும் ஞானமும் அதிகமுள்ள நீங்கள் நான் கூறுவதை (சரியாக கூறவில்லை என்ற போதும்) எளிதாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

வால்பையன் said...

i agree the docter say

வால்பையன் said...

JPR is speak goodder english!

don't kiddings JPR

narsim said...

// எம்.எம்.அப்துல்லா said...
//“I talk , he talk , why you middle middle talk?”

//

இது தப்புண்ணே...அவர் சொன்னது
why you basket basket talking?
(கூட கூட பேசுறானாம்)
//

பொங்கல் அன்னிக்கே வெடி விடுவாரு அப்துல்லாண்ணே.. தீபாவளி கிடைச்சா சும்மாவா இருப்பாரு?

வால்பையன் said...

i am the JPR's big fan

not rolling fan

standunder!

பரிசல்காரன் said...

//என்னை விட வாசிப்பனுபவமும் அனுபவமும் ஞானமும் அதிகமுள்ள நீங்கள் நான் கூறுவதை (சரியாக கூறவில்லை என்ற போதும்) எளிதாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்//

புரூனோ சார்..

ஏன் இந்தக் கொலவெறி? நீங்க டாக்டர்.. நான் காலேஜையே பாக்காதவன்..

நீங்க எந்த விஷயத்துல இறங்கினாலும் அடிஆழம்வரை போய் பல தகவல்களோட புகுந்து விளையாடறவர். என்னைப் போய் பந்தாடறீங்களே..

விட்டுடுங்க...

நீங்க விருப்பப்பட்டா இந்தப் பதிவை நீக்கவும் தயார்!!!

வால்பையன் said...

JPR firing the pongal

makeing pongal for diwali

வால்பையன் said...

//ஏன் இந்தக் கொலவெறி? நீங்க டாக்டர்.. நான் காலேஜையே பாக்காதவன்..//

you don't see collage,

come erode, i and u see the collage

புருனோ Bruno said...

//டாக்டர் சார்..

அவர் தவறாக பேசுவதை கண்டு யாரும் சிரிக்கவில்லை...அது அர்த்தம் மாறுபடும் போது தான் சிரிப்பு வருகிறது.

இதுக்கு சிரிக்கமுடியலன்னா கஷ்டம் தான் டாக்டர்//

சார்லி சாப்ளின் வழுக்கி விழுவதை பார்த்து சிரிப்பதற்கும், கண்பார்வை தெரியாத ஒருவர் வழுக்கி விழுவதை பார்த்து சிரிப்பதற்கும் வேறுபாடு இருப்பதாகவே நான் கருதுகிறேன்

இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இதற்கு மேலும் விளக்க எனக்கு அறிவு இல்லை

பரிசல்காரன் said...

கடைசில..

இந்தப் பதிவோட தலைப்ப நான் நெசமாலுமே சொல்லிக் கத்தறா மாதிரி ஆகிப்போச்சே...

என்.இனியவன் said...

//தமிழ் வழி கல்வியில் படித்து, வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறிய ஒருவரின் தவறான ஆங்கிலத்தை கேலி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை :(//
உண்மை தான். ஆங்கில மொழியில் படித்திருந்தால் எல்லோரையும் விட அழகாகவே பேசுவார் போல தான் இருக்கு.
தாய் மொழி தெரியவில்லை என்றால் தான் கவலைப்பட வேண்டும்.

பரிசலும் கேலிசெய்வதற்காக பதிவு போட்டிருக்கமாட்டார் என்பது எல்லோருக்கும்
தெரியும்.
நானும் முதலில் போட்ட பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன்.

வால்பையன் said...

//நீங்க விருப்பப்பட்டா இந்தப் பதிவை நீக்கவும் தயார்!!!//

ஒரு பெரிய எழுத்தாலர் சொன்னாராம்!
நான் கொலைகாரன், கொள்ளைகாரன் கூட இருந்து விடுவேன் ஆனால் சென்ஸ் ஆஃப் ஹியூமர் இல்லாத ஒரு ஆளுடன் பத்து நிமிடம் இருக்க முடியாதென்று!


want i know
what problem here
may i come sir!

புருனோ Bruno said...

//want i know
what problem here
may i come sir!//

வருக தலைவரே

//ஒரு பெரிய எழுத்தாலர் சொன்னாராம்!
நான் கொலைகாரன், கொள்ளைகாரன் கூட இருந்து விடுவேன் ஆனால் சென்ஸ் ஆஃப் ஹியூமர் இல்லாத ஒரு ஆளுடன் பத்து நிமிடம் இருக்க முடியாதென்று!//

சார்லி சாப்ளின் வழுக்கி விழுவதை பார்த்து சிரிப்பதற்கும், கண்பார்வை தெரியாத ஒருவர் வழுக்கி விழுவதை பார்த்து சிரிப்பதற்கும் வேறுபாடு இருப்பதாகவே நான் கருதுகிறேன்

இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இதற்கு மேலும் விளக்க எனக்கு அறிவு இல்லை

☀நான் ஆதவன்☀ said...

//
இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இதற்கு மேலும் விளக்க எனக்கு அறிவு இல்லை//

மன்னிக்கவும் டாக்டர். தங்களை சங்கடத்தில் ஆழ்த்திய என் பின்னூட்டங்களை நீக்கவும் தயார். சிரிப்பு வந்த பொழுது அடக்காமல் சிரித்ததை பின்னூட்டத்தின் வாயிலாக தெரியப்படுத்தினேன்.

அது அதிகம் படித்திராத, வாசிப்பனுபவம் இல்லாத இந்த சிறுவனின் தவறு தான்.

மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்

வால்பையன் said...

சார்லி சாப்ளின் போல நடிக்க நடந்த போட்டியில் சாப்பிளினுக்கே இரண்டாம் பரிசாம்!

JPR நினைத்திருந்தால் தமிழிலேயே பேசியிருக்கலாம்!

இப்படியெல்லாம் நாம் பதிவிட்டு சந்தோசமடைய தானே அவரே அப்படி பேசினார்!

Sanjai Gandhi said...

அட போங்க மாம்ஸ்.. இதெல்லாம் நெம்ப பழசு.. இதுக்கெல்லாம் கும்ம முடியாது.

பனிமலர்னு அவருக்கு ஒரு காலேஜி இருக்கு. அதுல கம்ப்யூட்டர்னு ஒரு துறை இருக்கு. அதுக்கு ஒரு துறைத் தலைவர் இருக்காங்க. அந்த அம்மணி ஒரு நாள் வகுப்பறைல ..

“ கய்ஸ், பென் ட்ரைவ்ல இருக்கிற விடியோவை கம்ப்யூட்டருக்கு காப்பி பண்ணா க்வாலிட்டி குறைஞ்சிடுமா?”

இது கற்பனை அல்ல.. சமீபத்தில் நடந்த உண்மை. :))

வால்பையன் said...

any body is there?

anybody any body

சின்ன கேப்பு எம்புட்டு அர்த்தம்!

கீறிங்களா?

Sanjai Gandhi said...

//Jeppiar was not professor.. He is the owner of lot of engineering college and president of self financing college association...//

எம்ஜிஆரோட வள்ளல் தனத்தால வாழ்ந்துக் கொண்டிருக்கும் சில ”ஏழைகளில் ஒரு ஏழை.”

வால்பையன் said...

me help coming man

worry don't

வால்பையன் said...

who put the 50

வால்பையன் said...

i put the 50

www.narsim.in said...

நல்லா வச்சய்யா தலைப்ப, இப்ப ஹெல்ப் தேவைப்படும் போல இருக்கே போற போக்கப் பார்த்தா?

☀நான் ஆதவன்☀ said...

me ther to u vallu. i coming...

☀நான் ஆதவன்☀ said...

//பனிமலர்னு அவருக்கு ஒரு காலேஜி இருக்கு.//

ஒன்னுமட்டுமா இருக்கு???

நாடோடி இலக்கியன் said...

யூடீயூப்பில் தேடிபாருங்கள் இது சம்பந்தமாக சித்தரிக்கப் பட்ட பல வீடியோ காட்ச்சிகள் கிடைக்கும்.நாலைந்து வருடம் முன்பே படித்த ஜோக் என்றாலும் மீண்டும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

Sanjai Gandhi said...

////பனிமலர்னு அவருக்கு ஒரு காலேஜி இருக்கு.//

ஒன்னுமட்டுமா இருக்கு??? //

:))

ஏகப் பட்டது இருக்கு. அதுல இதுவும் ஒன்னு. :)

இர்ரு விடற மாதிரி நான் இம்மு விட்டுட்டேன். :)

Vidya Poshak said...

ஹிஹிஹி ஆகா மாட்னான்டா இன்னைக்கு ஒருத்தன்.
இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கரது

Mahesh said...

பரிசல்.... டாக்டர் சொன்ன மாதிரி பேரை விட்டுட்டு எழுதியிருக்கலாம்... மத்தபடி 10 வ்அருஷம் முன்னால வந்த ஜுனூன் தமிழ், நடுவுல வந்த தமிழ் டப் பண்ணின இங்லீஷ் படங்கள்ல நம்மாளுக அடிச்ச கூத்தை விட இது பரவால்ல.

காலேஜ் கட்டி குடுத்து அத பிரபலமாக்கி பல மாணவர்கள் (அப்துல்லா உள்பட) வாழ்க்கைல முன்னேற்றம் ஏற்படுத்தின காரணத்துக்காகவே அவரை விட்டுடலாம்.

☀நான் ஆதவன்☀ said...

//காலேஜ் கட்டி குடுத்து அத பிரபலமாக்கி பல மாணவர்கள் (அப்துல்லா உள்பட) வாழ்க்கைல முன்னேற்றம் ஏற்படுத்தின காரணத்துக்காகவே அவரை விட்டுடலாம்.//

இது பாயிண்ட்டு

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.பரிசல்,

மதியத்திற்கு பிறகு ஒரு பதிவு அதில் 50 பின்னூட்டமா என பதறி வந்தேன்.

நானும் புரூனோவை வழிமொழிகிறேன். :)
அப்துல்லாவின் குசும்பை வன்மையாக கண்டிக்கிறேன். :)

திரு வெங்கி சொல்லுகிறார்..
//இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கரது//

இதில் என்ன செலவு செய்தீர்கள் என சொன்னால் அதைவிட எளியவழியில் சூன்யம் வைக்கும் ஆளை அனுப்பி வைக்கிறேன். :)

வெண்பூ said...

நகைச்சுவையான விசயம் என்பதால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை டாக்டர் மன்னிக்கவும்.

அதே நேரம், முதல் முறை இந்த மெயிலை படித்த பொழுது சிரித்து அடங்கியவுடன் நான் ஆச்சர்யப்பட்ட விசயம், ஓரளவுக்குத்தான் ஆங்கிலம் தெரியும் என்றாலும், அவர் அதை கூச்சப்படாமல் பேச முயற்சி செய்த அவரது தன்னம்பிக்கை. புதிதாக ஒரு மொழி கற்க முயன்றவர்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்.

Sanjai Gandhi said...

//அதே நேரம், முதல் முறை இந்த மெயிலை படித்த பொழுது சிரித்து அடங்கியவுடன் நான் ஆச்சர்யப்பட்ட விசயம், ஓரளவுக்குத்தான் ஆங்கிலம் தெரியும் என்றாலும், அவர் அதை கூச்சப்படாமல் பேச முயற்சி செய்த அவரது தன்னம்பிக்கை. புதிதாக ஒரு மொழி கற்க முயன்றவர்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன். //

வெண்பூ கிட்ட ரொம்ப புடிச்ச விஷயமே இது தான். சபாஷ் தல.

தீப்பெட்டி said...

பதிவு என்னவோ கொஞ்சம் பழைய காமெடிதான்.
ஆனா பின்னூட்டந்தான் பாஸ்...செம காமெடி...கலக்கிடீங்க போங்க..

சென்ஷி said...

//இதில் என்ன செலவு செய்தீர்கள் என சொன்னால் அதைவிட எளியவழியில் சூன்யம் வைக்கும் ஆளை அனுப்பி வைக்கிறேன். :)//

ஆஹா.. கலவர பூமியில கூட கரெக்டா மார்க்கெட்டிங் வேலை நடக்குதே :))

லக்கிலுக் said...

ரொம்ப பழைய ஈமெயில் இது :-)

உங்களுக்கு ’பதிவோமேனியா’ வந்துவிட்டதா என்ன? :-)

சென்ஷி said...

நர்சிம் கமெண்டுக்கு ஒரு நிமிசம் முன்னாடியே பரிசல் கமெண்டு வுட்டுருக்காரே. சம்திங்க் ராங்க்

எம்.எம்.அப்துல்லா said...

டாக்டர் மற்றும் ஸ்வாமி இருவரும் என்னை மன்னிக்க வேண்டும்.அவரைக் கேலி செய்யும் நோக்கம் எனக்கில்லை. அறியா கல்லூரிப் பருவத்தில் இருந்த மனநிலை இந்தப் பதிவைப் படிக்கும் மீது மீண்டும் எனக்கு வந்து நிலைமாறி விட்டேன். நானும் தமிழ் வழியில் பயின்று கல்லூரியில்தான் ஆங்கல வழியில் பயின்றேன். மீண்டும் மன்னிக்க வேண்டுகின்றேன்.

☼ வெயிலான் said...

மருத்துவர் புருனோ, ஸ்வாமி ஓம்கார், வெண்பூ கருத்துக்கள் மிகச்சரியானவை.

மிகச்சரியாக ஆங்கிலம் பேசுபவர் எவருமில்லை.

ஜேப்பியார் ஆங்கிலம் தெரியாவிட்டாலும், கல்லூரி கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்ற முனைப்புள்ளவர்.

அவர் பேசும் தப்புந்தவறுமான ஆங்கிலத்தை மேற்கோள் காட்டி மாணவர்கள் உருவாக்கியது தான் நீங்கள் பதிந்துள்ள நகைச்சுவை.

படிப்பறிவு குறைவாய் இருந்தாலும், மிகச்சிறந்த நிர்வாகி. ஒன்றல்ல பல பொறியியல் கல்லூரிகளை சென்னையில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

பல மேலாண்மை வகுப்புகளில், சிறந்த நிர்வாக திறமைக்காகவும், வெற்றிக்காகவும், எடுத்துக்காட்டாக ஜேப்பியாரின் ஒரு சில செயல்களை கூறக்கேட்டிருக்கிறேன்.

உங்களிடம் பேசும் போது கூட ஒரு சில விசயங்கள் கூறியிருக்கிறேன். எ.கா - பேருந்து நிறுத்தம்.

அப்துல்லாண்ணே நான் சொன்னதெல்லாம் சரி தானா?

☼ வெயிலான் said...

// இறுதியாக, தமிழ் வழி கல்வியில் படித்து, வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறிய ஒருவரின் தவறான ஆங்கிலத்தை கேலி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை :( //

எனக்கும் தான் :(

Thamira said...

சென்ஷி
30 April, 2009 7:50 PM நர்சிம் கமெண்டுக்கு ஒரு நிமிசம் முன்னாடியே பரிசல் கமெண்டு வுட்டுருக்காரே. சம்திங்க் ராங்க்
//

நானும் கேக்குணும்னு நெனச்சேன்.. ஏதோ சதிவேலை நடக்குது..

யாத்ரா said...

ஐயையோ, இன்னும் சிரிப்பை அடக்க முடியலங்க, விழுந்து விழுந்து சிரிச்சேன், சிரிச்சிகிட்டிருக்கேன், நெனச்சி நெனச்சி சிரிக்கறேன். என்னால தாங்க முடியல, அம்மா வயிறு வலிக்குது,,,,,,,,

Thamira said...

டாக்டரின் கருத்துகள் சரியே ஆயினும், இது மிகவும் பழகிவிட்ட ஒன்று. அப்படிப்பார்த்தால் திரை நகைச்சுவைக்காட்சிகள் ஒன்றையுமே நாம் ரசிக்க இயலாது.

(பெயரை மட்டும் மாற்றியிருக்கலாம்)

நானும் சிரித்தேன்..

பெருசு said...

பரிசலு

என்னாச்சு, திடீர்ன்னு இப்டி ஒரு
உப்புமா பதிவு.

இருக்கட்டும்.

இன்னிக்கு மே ஒன்று.

எங்கியும் எஸ் ஆகாம,

"குலுங்கியது திருப்பூர்"தலைப்பா வெச்சு, முடிஞ்சா முதலாளி/தொழிலாளி பத்தி, பத்தி பிரிச்சு பத்தி பத்தியா எழுதுங்களேன்.

பரிசல்காரன் said...

@ என்.இனியவன்

//பரிசலும் கேலிசெய்வதற்காக பதிவு போட்டிருக்கமாட்டார் என்பது எல்லோருக்கும்
தெரியும்.//

கண்கள் பனித்தது. இதயம் இனித்தது. புரிந்துணர்வுக்கு சல்யூட் இனியவா!

@வால்பையன்

ஆபத்துல வந்து உதவின உன்னை மறக்கமாட்டேன் நண்பா. (நீங்க சொல்ற மாதிரியே மீ கமிங் ஈரோடு டுமாரோ. ஐ கம் டு திண்டல். ஐ சீ காலேஜ்)

@ சஞ்சய் காந்தி

போ மாப்ள. கவுத்ட்துட்டியே..

@ நாடோடி இலக்கியன்

நன்றிங்க!


@ வெங்கி

காப்பாத்த வாய்யான்னா.. வந்து திட்டீட்டு போறீங்க..?

@ மகேஷ்

சரியாச் சொன்னீங்க..

பரிசல்காரன் said...

@ ஸ்வாமி ஓம்கார்

நன்றி ஸ்வாமிஜி..

@ வெண்பூ

//ஓரளவுக்குத்தான் ஆங்கிலம் தெரியும் என்றாலும், அவர் அதை கூச்சப்படாமல் பேச முயற்சி செய்த அவரது தன்னம்பிக்கை.//

சல்யூட்டு வெண்பூ!

@ தீப்பெட்டி

பின்னூட்டத்துல காமெடியா? யோவ்.. அடிமேல அடின்னு போட்டு நம்மள பிரிச்சு மேயறாங்க.. உங்களுக்கு காமெடியா தெரியுதா? இருங்க.. உங்க பதிவுல வந்து பேசிக்கறேன்! :-)

// லக்கிலுக் said...

ரொம்ப பழைய ஈமெயில் இது :-)

உங்களுக்கு ’பதிவோமேனியா’ வந்துவிட்டதா என்ன? :-)//

அதுனாலென்ன தல? உங்கள மாதிரி விஐபி ப்ளாக்கர வந்து பின்னூட்ட வெச்சுடுச்சே?

அப்பறம். இந்த மெயில் எனக்கு இன்னைக்குதான் மொத மொதலா வந்துச்சு.

பதிவோமேனியா - எஸ்!

@ சென்ஷி

//சென்ஷி said...

நர்சிம் கமெண்டுக்கு ஒரு நிமிசம் முன்னாடியே பரிசல் கமெண்டு வுட்டுருக்காரே. சம்திங்க் //

க்ரேட்டு. நீருதான் கவனிச்சிருக்கீரு! கண்டுபிடிங்க பார்க்கலாம்.. எப்படீன்னு?

//எம்.எம்.அப்துல்லா said...

டாக்டர் மற்றும் ஸ்வாமி இருவரும் என்னை மன்னிக்க வேண்டும்.அவரைக் கேலி செய்யும் நோக்கம் எனக்கில்லை. அறியா கல்லூரிப் பருவத்தில் இருந்த மனநிலை இந்தப் பதிவைப் படிக்கும் மீது மீண்டும் எனக்கு வந்து நிலைமாறி விட்டேன். நானும் தமிழ் வழியில் பயின்று கல்லூரியில்தான் ஆங்கல வழியில் பயின்றேன். மீண்டும் மன்னிக்க வேண்டுகின்றேன்//

உங்களத் தெரியும்ணே எங்களுக்கு. டோண்ட் வர்ரி!

பிரபாகர் said...

Mudiayala...

One of my collegue speaks English like this... I doubt he may be his student....

Prabhagar...

பரிசல்காரன் said...

@ வெயிலான்

நன்றி நண்பா. நானும் யார் மனதையும் புண்படுத்த பதிவிடுபவனல்ல என உணர்வீர்கள் என நம்புகிறேன்.

@ ஆதி

சென்ஷிக்கு சொன்னதுதான்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!

@yathra said...

ஐயையோ, இன்னும் சிரிப்பை அடக்க முடியலங்க, விழுந்து விழுந்து சிரிச்சேன், சிரிச்சிகிட்டிருக்கேன், நெனச்சி நெனச்சி சிரிக்கறேன். என்னால தாங்க முடியல, அம்மா வயிறு வலிக்குது, /

இந்தப் பதிவின் நோக்கமே அது மட்டும்தான். உங்களுக்கு என் அன்பு!
(ஆமா நீங்க சூப்பர்ஸ்டார் பேரனா?)

@ மீண்டும் நன்றி ஆதி. புரிதலுக்கு!

@ பெருசு

அதுக்குதான் பெருசு நீங்க இருக்கீங்களே!! நம்மள ஆள விடுங்கப்பா...

பரிசல்காரன் said...

@ பிரபாகர்

மிக்க நன்றி நண்பா...

Unknown said...

பேசாமே jpr language நு தனிய ஒரு language கொண்டு வந்திரலாம் போல, வால்பையன் இப்பவே அதில எக்ஸ்பெர்ட் ஆயிட்டார் போல,

கோபிநாத் said...

நானும் சிரிச்சிட்டேன் தல..

நானும் இந்த மாதிரி சில நேரங்களில் பேசியது உண்டு. ;)

கோபிநாத் said...

\\க்ரேட்டு. நீருதான் கவனிச்சிருக்கீரு! கண்டுபிடிங்க பார்க்கலாம்.. எப்படீன்னு?
\\

chattingல பேசிக்கிட்டு இருந்திங்களா!!??

Prabhu said...

இந்த ஜேப்பியார் காலேஜ் வச்சிருக்காரே அவரா?

கல்கி said...

I too agree with Doctor....

We Indians are making fun on people who speaks English with mistakes...

But the real English people are not like us. And they are encouraging us to improve.

When i was working under the American Managers, they encouraged our entire Indian team and they used to say like "AFTER ALL ENGLISH IS NOT YOUR MOTHER TONGUE"

P.S:Title pathutu Parisal annanuku eatho pirachananu oodi vantha, pathiva pathu konjam tension ayeduchu.... :-)

MADURAI NETBIRD said...

hai hai hai guys
what u think about it
ya aya ya ya ay yess yess no nono no.oha right i can talk english, speak english...........


by bye madurai nanpan

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்க்கையில அடிபட்டு, கஷ்டப்பட்டு முன்னேறியவரா... :) :) :)

சாராயம் காய்ச்சி வித்தவருங்க அவரு.

அப்புறம், மக்கள்ஸ் படிச்சு முன்னேறட்டும்னு காலேஜ் கட்டல; தன் பையை ரொப்பத்தான்.

அதனால, ஜேப்பியார புனிதப் படுத்தும் வேலைகளை நான் ஆட்சேபிக்கிறேன்.

SK said...

சந்துரு புண்ணியத்துல இந்நேரம் திருப்பூருக்கு லாரியே வந்திருக்கும்........... பரிசல அள்ளிட்டு போக...............
அய்யா சந்துரு பெரிய சங்கா ஊதிடியப்பா .............

Kathir said...

ஹாஹாஹா

Kathir said...

நான் சிரிச்சது பதிவப் படிச்சுத்தான்.....

Kathir said...

பின்னூட்டங்களைப் படிச்சு இல்லங்கோவ்வ்வ்வ்

Kathir said...

100 அடிக்கலாமா...

Kathir said...

நேற்று படிக்காம மிஸ் பண்ணிட்டனே....

Kathir said...

//பரிசல் ஒரு ஆணியவாதி!!!//

அப்டின்னா என்னங்க....
ஆபிஸ்ல நிறைய ஆணி பிடுங்குவாரா.....

Kathir said...

//நான் காலேஜையே பாக்காதவன்..//

//you don't see collage,

come erode, i and u see the collage//

கிகிகி.....

Kathir said...

//அட போங்க மாம்ஸ்.. இதெல்லாம் நெம்ப பழசு.. இதுக்கெல்லாம் கும்ம முடியாது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

Kathir said...

//“ கய்ஸ், பென் ட்ரைவ்ல இருக்கிற விடியோவை கம்ப்யூட்டருக்கு காப்பி பண்ணா க்வாலிட்டி குறைஞ்சிடுமா?”//

பென்னோ இல்ல பெண்னோ எல்லாமே பிரச்சனைதாங்க...
பேசாம ஆன்(ண்) டிரைவ் இருந்தா டிரை பண்ண சொல்லுங்க....

Kathir said...

//உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி//

நான் இப்போ வெட்டியாத்தான் இருக்கேன்....

no peelings

Sanjai Gandhi said...

99

Sanjai Gandhi said...

100

Kathir said...

//என்னாச்சு, திடீர்ன்னு இப்டி ஒரு
உப்புமா பதிவு.
//

அலோ இங்க அவியல் மட்டும் தான்...
உப்புமா லாம் கிடையாது.....


:)))))

Sanjai Gandhi said...

கதிர் வர்ட்டா?

Kathir said...

வட போச்சே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Kathir said...

அலோ சஞ்சய் அங்கிள்ள்ள்ள்ள்ள்ள்,

இப்படி பன்னிடிங்களே........

Pathy said...

பொதுவா நான் பின்னூட்டம் எல்லாம் படிக்கறது இல்லங்க, Parisal, You made my day

Indian said...

//அந்த அம்மணி ஒரு நாள் வகுப்பறைல ..

“ கய்ஸ், பென் ட்ரைவ்ல இருக்கிற விடியோவை கம்ப்யூட்டருக்கு காப்பி பண்ணா க்வாலிட்டி குறைஞ்சிடுமா?”//

I'm curious to know what made her to think like that.

Kumky said...

என்னுடைய விலை மதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுகிறேன்.
ஜேப்பியார் ஒன்றும் புனிதர் அல்ல.
ஆங்கிலத்தில் பேச அல்லது பேச வைக்க எத்தனையோ வழிகளும் வாய்ப்புகளும் உள்ள நிலையில்,வெறுமனே தன்னம்பிக்கையை அதுவும் தனது கல்லூரி மாணவர்களிடத்தில் காட்டி காமெடியனாக வேண்டுமா?
இதற்க்கு தொடர்ந்து ஆதரவு பின்னூட்டங்கள் வேறா?
சீரியஸான பதிவுக்கும் ஏற்க்கெனவே பலரால் ரசிக்கப்பட்ட காமெடியை பதிவாக்கியதற்க்கும் ஏன் இந்த கேள்விக்கணைகள்..?
இதற்க்கு மன்னிப்பு வேறு தேவையா?
என்னதான் நடக்கிறது இங்கு?
அப்படி பார்த்தால் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்க முடியுமே.

வெண்பூ said...

//
ஆங்கிலத்தில் பேச அல்லது பேச வைக்க எத்தனையோ வழிகளும் வாய்ப்புகளும் உள்ள நிலையில்,வெறுமனே தன்னம்பிக்கையை அதுவும் தனது கல்லூரி மாணவர்களிடத்தில் காட்டி காமெடியனாக வேண்டுமா?
//

இந்த விசயத்தில் கண்டிப்பாக நான் வேறுபடுகிறேன் கும்க்கி.. அவருக்கு தன் கல்லூரியைத் தவிர வேறு எங்கு பேசி தன் ஆங்கில அறிவை பெருக்கிக் கொள்ள முடியும்?

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பேச கூச்சப்பட்டு தான் நினைப்பதையும் சொல்ல முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் நிலைமைகள் ஒவ்வொரு ஐடி கம்பெனியிலும் நீங்கள் பார்க்க முடியும். அந்த விசயத்தில் நிஜமாக நான் அவரை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்.

மணிகண்டன் said...

***
இந்த விசயத்தில் கண்டிப்பாக நான் வேறுபடுகிறேன் கும்க்கி
***

நான் கூட வேறுபடறேன். என்ன வேறுபடறேன்னு இன்னும் முடிவு பண்ணல. முடிவு பண்ணிட்டு வந்து சொல்றேன்.

மணிகண்டன் said...

வெண்பூ, நான் ஆங்கில வழி கல்வி பயின்றவன். முதல்முறையாக கிண்டியில் இருந்த Ford அலுவுலகத்திற்கு ஒரு நேர்முக தேர்விற்கு சென்றிருந்தேன். (project trainee ஆவதற்கு). என்னைய interview பண்ணியவர் நான் பேசிய ஆங்கிலத்தை கேட்டுவிட்டு என்னிடம் இரண்டே நிமிடத்தில் தமிழில் பேச ஆரம்பித்தார். கடைசியில் வேலை ஏன் கொடுக்கமுடியாது என்று உனக்கே தெரியும்ன்னு சொல்லி அனுப்பினார். அதே ford VP ஆக இருப்பவர் தமிழ் வழி கல்வி பயின்றவர்ன்னு ப்ளாக்ல எழுதி இருக்கார். அதுனால, மொழியை கற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சி ஆங்கில வழி / தமிழ் வழி கல்வி குறித்தது அல்ல. நீங்கள் செலவிடும் நேரம், முயற்சி மற்றும் தைரியத்தை பொறுத்தது. நாம் எதிர்கொள்ளும் கிண்டலை எடுத்துக்கொளும் விதத்திலே தான் நமது முன்னேற்றமும் அமையும். இந்த ஜாலியான பதிவுல இந்த பின்னூட்டம் போடணுமான்னு காலையிலேந்து யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இனிமே யாரும் வரமாட்டாங்கன்னு இப்ப எழுதிட்டேன்.

அறிவிலி said...

@ மணிகண்டன்
//இந்த ஜாலியான பதிவுல இந்த பின்னூட்டம் போடணுமான்னு காலையிலேந்து யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இனிமே யாரும் வரமாட்டாங்கன்னு இப்ப எழுதிட்டேன்.//

நான் வருவேனே.

ஜேப்பியார் நிச்சயம் ஒரு புனிதர் கிடையாது. பழைய சாராய வியாபரி, மற்றும் இன்றைய கல்வி வியாபாரி.

அவருடைய கல்லூரிகளில் இத்தகைய (பென் ட்ரைவ்) ஆசிரியர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. தன்னுடைய கல்லூரிகளில் முந்தாநேத்து வரை படித்து வேறு வேலை கிடைக்காதாவர்கள்தான் இது போன்ற கல்லூரிகளில் ஆசிரியர்கள்.

மணிகண்டன் சொல்வது போல் அவரவர் முயற்சியை பொறுத்தே மொழி புலமை அமைகிறது.

பிறப்பிலிருந்தே ஆங்கிலம் படிக்கும் சில சிங்கப்பூரர்களின் ஆங்கிலம் கேட்க கொடுமையாக இருக்கும்.

joe vimal said...

நான் இதுவரை உங்களுக்கு பின்னூட்டம் இட்டதில்லை அனால் இந்த பதிவு என்ன பிநூடமிட செய்கிறது .ஜேப்பியார் ஒன்றும் புனிதர் இல்லை என்று சிலர் சொல்கின்றனர் இந்த உலகில் எவருமே புனிதர் இல்லை தான் .அவர் நினைதிரிந்தால் எதானயோ தொழில் செய்திருக்கலாம் அனால் அவர் கல்வி தொழில் செய்கிறார் அவர் இல்லை என்றல் இதனை IT வலுன்னர்கள் தமிழகத்தில் இருப்பார்கள ? .ஆங்கில வழி கல்வி பயில்கின்ற எதனை பேர் நேர் முக தேர்வில் ஆங்கிலத்தில் பெசுகினர் தெளிவாக ??.அப்படி இருகைஈல் அந்த கால 10 அம வகுப்பு படித்தவர் இப்படி பேசுவதில் குற்றம் இல்லை .எந்த மேடை ஆனாலும் அவர் தன்னம்பிக்கையுடன் பேசுவது ஒரு சிறந்த எடுதுகட்டே .

சென்ற வருட offer letter வழங்கும் விழாவில் அவர் பேசியது "மாணவர்களே நீங்கள் இந்த it நிறுவனங்களை நம்பாதீர்கள் உங்கள் துறை சார்ந்த வேலை வாய்புகளை தேடுங்கள் மற்றும் மேற் படிப்புகளை தொடருங்கள் " அந்த மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் மிக பெரிய IT நிறுவங்களின் மேலாளர்கள் இந்த தைரியமும் ,தன் நம்பிகையும் யாருக்கு இருக்கிறது ?இப்போது அவர் கூறிய அனைத்தும் உன்ன்மைஆகிவிடது .அவர் நினைத்திருந்தால் கலைஞர் போல் அரசியலயோ இல்லை ஊடக துறை ஆரம்பித்து மக்களை கொள்ளை அடிதிர்கலம் அனால் என்றும் குறியாத கல்வி தொழிலை அவர் செய்கிறார் ஆனாலும் அவரை தூற்ற ஒரு கூட்டம் இருக்கிறது இன்றும் .

இவன் என் இதை எல்லாம் சொல்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம் நானும் ஜேப்பியார் நிறுவனத்தில் பயீன்றவன் தான் எங்கள் ஜேப்பியார் இ மற்றவர்கள் தூற்றுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்


பரிசல் என் மீது கோபம் கொள்ள வேண்டம் நான் சிலருக்கு பதில் சொல்லவே இந்த பின்னூட்டம் .

Sanjai Gandhi said...

அம்மாடியோவ்...ஒரே விஷயத்துக்கு எத்தனை விதமான சிந்தனைகள், கருத்துகள். இந்தியா இன்னும் சிதறாமல் ஜனநாயக பாதையை விட்டு விலகாமல் இவ்ளோ பெரிய ஜனநாயக நாடாக இருக்கக் காரணம் தேடுவோர் இங்கிருக்கும் பின்னூட்டங்களைப் படித்தாலே போதும். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை ஒரு சிந்தனை.. க்ரேட் மக்கா.. :)

Kumky said...

வெண்பூ said...

//

இந்த விசயத்தில் கண்டிப்பாக நான் வேறுபடுகிறேன் கும்க்கி.. அவருக்கு தன் கல்லூரியைத் தவிர வேறு எங்கு பேசி தன் ஆங்கில அறிவை பெருக்கிக் கொள்ள முடியும்?

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பேச கூச்சப்பட்டு தான் நினைப்பதையும் சொல்ல முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் நிலைமைகள் ஒவ்வொரு ஐடி கம்பெனியிலும் நீங்கள் பார்க்க முடியும். அந்த விசயத்தில் நிஜமாக நான் அவரை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்.//

நான் சொல்ல வந்தது: வட இந்தியா செல்லும் தமிழக தலைவர்களாகட்டும், அடிப்படை கல்வி அறிவோடு நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்களாகட்டும், திறமையினடிப்படையில் வாழ்வில் உயர்ந்த தொழிலதிர்களாகட்டும், எல்லோரும் தமது தாய்மொழி அறிவை மட்டுமா கொண்டு எல்லாவிடத்திலும் உரையாடுகிறார்கள்?

சூநிலைக்குத்தக்க தமக்கென தனியாக ஆங்கில ஆசிரியர்களை நியமித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஆங்கிலம் பேசுமளவிற்க்கு தேர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.இதற்க்கு ஆர்வம் என்பதைவிட சூழ்நிலையின் தேவைதான் காரணம்.
இவ்வளவு பெரிய கல்வித்தந்தைக்கு தன்னம்பிக்கை உடன் சூழ்நிலையை உணர்ந்து தமது ஆங்கில அறிவை தனிப்பட்ட ஆசிரியர்களை வைத்து ஓரிரு மாதங்களுக்குள் வளர்த்து பேச்சுத்திறனை அதிகரித்திருக்கலாம்.

அதனை விடுத்து ஏன் மாணவர்களிடம் சோதித்து தனது இமேஜை குறைத்துக்கொள்ள வேண்டும்.யாராக இருப்பினும் இவ்வாறு பேசுகையில் நகைச்சுவையாக தோன்றுமே தவிர, இவர் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு(என்ன கஷ்டம் என ஜ்யோவ்ராம் சொல்லிவிட்டார்) முன்னேறியவர்,அதனால் எப்படி பேசினாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென சாதாரணமாக யாருக்குமே தோன்றாது..அதிலும் மாணவர்களா?

இது கிடக்கட்டும். ஆங்கில அறிவும் பேச்சுத்திறனும் ஒருமுறை கற்றுக்கொள்வதனாலோ அல்லது ஒரு முறை பேசிப்பழகுவதனாலோ ஒட்டிக்கொள்ளாது என்பது உண்மை.என்னதான் ஆங்கில வழிக் கல்வி முறையில் படித்திருந்தாலுமே தொடர்ந்து ஆங்கிலம் புழங்கக்கூடிய சூழ்நிலையில் இருந்தாலேதான் அது கைவரப்பெற்றிருக்கும்.அல்லாது தொடர்ந்து நீங்கள் பேச அல்லது எழுத வாய்ப்பில்லாத போது ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்துவிடும்.
மொழி மீது இந்தளவு நாட்டம் அல்லது அவசியமிருப்பின் அதனை தொடர்ந்து படித்தோ, பேச்சு வழக்கிலோ வைத்திருப்பின் மட்டுமே சாத்தியம்...தாய்மொழி தவிர.

பட்டாம்பூச்சி said...

:)

விக்னேஷ்வரி said...

வடிவேலு இங்கிலீஷ் மாதிரி இருக்கு. தொண்டை வலிக்க சிரிச்சேன்.

நாடோடிப் பையன் said...

நல்ல பதிவு.Very scary that we might have instructors like this.