Monday, April 6, 2009

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்ப்பா....

டிசம்பர்-ல நடந்தது இது…

ஏதோ ஒரு அவியலில் வாரணம் ஆயிரம் படம் பற்றி எழுதியிருந்தபோது, திருப்பூர் தியேட்டர் பெயர்களைச் சொல்லி 'எங்கே பார்த்தீங்க' என்று பின்னூட்டம் போட்டிருந்தார் நாடோடி இலக்கியன். மனுஷன் திருப்பூர்லதான் இருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. பதிவர்ன்னு ஒருத்தர் சிக்கினா விட்டுடுவோமா நாம? உடனே மெய்ல் பண்ணச் சொல்லி, வெயிலான், சாமிநாதன் (ஈரவெங்காயம்) எல்லார்கிட்டயும் கலந்துபேசி, டிசம்பர் 3ம் தேதி நைட் ஒரு சந்திப்பைப் போட்டோம்! (அத ஏண்டா இப்ப எழுதறன்னு கேட்டா... பொறுமையா படிங்க – தெரியும்.)

இரவு உணவு விடுதில ரெண்டு பீர், ரெண்டு ஒயினோட காத்திருந்தோம். (ஒரு முக்கியமான விஷயம்.. வந்தவங்கள்ல ஒருத்தர் ஒரு பீரும், ஒயினும் மிக்ஸ் பண்ணி சாப்ட்டார், இன்னொருத்தர் ஒரு ஒயின் மட்டும், மூணாமவர் ஒரு பீர் மட்டும். ஒருத்தர் ஒண்ணுமே சாப்பிடல. நான் என் வீட்ல நான்தான் ஒண்ணுமே சாப்பிடாதவன்-னு சொல்லிகிட்டமாதிரி மத்தவங்களும் நான்தான் அந்த நாலாவது ஆள்னு சொல்லிக்கங்கப்பா. அதுக்காகத்தான் இதைச் சொல்றேன்..)

வந்தார் நாடோடி இலக்கியன்.
நாடோடி இலக்கியன்

(எங்க மூஞ்சியை எத்தனை தடவைதான் பார்ப்பீங்க.. அதுனால CROP செய்யப்பட்டது)

நல்ல உயரம். தீர்க்கமான பார்வை. சரி.. சரி.. சிறுகதை மாதிரி வருது. நேரா விஷயத்துக்கு வருவோம்..

கொரியாவில் மென்பொறியாளராய் பணிபுரிந்து இப்போது இந்தியா வந்திருக்கிறார். (செந்தழல் ரவி.. உங்களுக்குத் தெரியுமா இவரை?) சென்னைல இருந்து திருப்பூர் வர்றப்ப ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் நடந்திருக்கு.

அதை முதலில் சொல்ல?

சரி... கெட்ட விஷயம்:- ட்ரெய்ன்ல வர்றப்ப இவர் பையை வெச்சுட்டு கதவோரம் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கார். அந்த நேரத்துல இவர் பைல இருந்த எல்லா சர்ட்டிஃபிகேட்ஸும் அடங்கின ஃபைலை எவனோ அடிச்சுட்டுப் போய்ட்டான். 10-வதிலிருந்து, கடைசியா வேலை செஞ்ச கம்பெனில குடுத்த சர்டிஃபிகெட்ஸ் வரைக்கும் எல்லாம் போச்சாம். கஷ்டமா இருந்தது. புகார் குடுத்திருக்கார்.

நல்ல விஷயம்: எடுத்துட்டுப் போனவன் லேப்டாப்பை விட்டுட்டுப் போய்ட்டான். ப்ச்.. அதகூட இன்னொண்ணு வாங்கிக்கலாம். இனி இவர் அலைஞ்சு, டூப்ளிகேட் சர்டிஃபிகேட் வாங்கறதுக்குள்ள ரெண்டு, மூணு மாசம் ஓடிடும்!!!!

(இதை எழுதிய நாளில் கிடைக்காத அந்த சான்றிதழ்கள்... இந்தப் பதிவை பதிவேற்றும் இன்றைய தினம் பாடுபட்டு டூப்ளிகேட் சான்றிதழ்கள் வாங்கிவிட்டார்)


சந்திப்பில பல சுவாரஸ்யமான விஷயங்கள் அலசப்பட்டன.

சாமிநாதன் கேட்டார்.. ‘உங்களுக்கு முதன்முதலில் பின்னூட்டம் போட்டது யாரு'ன்னு.

எனக்கு 'அம்பி'-ன்னேன். ஆனா வந்து பாக்கறப்ப தெரியுது. எனக்கு முதல் பின்னூட்டம் வந்தது என் நண்பன் ஜெய்சக்திவேல்-கிட்டேர்ந்து. மூணாவது போஸ்ட்டுக்கு. ஆனா அம்பி ஏன் ஞாபகம் இருக்குன்னா, முதல் போஸ்ட்டுக்கு முதல் கமெண்ட் அவர்தான். லேட்டா பத்து நாள் கழிச்சு போட்டிருக்கார்!!

சாமிநாதனுக்கு.... லதானந்த்.

வெயிலான் - தங்கமாங்கனி.

நாடோடி இலக்கியன் - ஏதோ NICE BLOG என்ற பெயரில் யாரோ பின்னூட்டியதாகச் சொன்னார்.

(பேச்சுசிட்டில் (பேச்சுவாக்கில் அல்ல)

காதலோடு காத்திருந்தேன் நீ வருவாய் என
வந்தவுடன் கேட்டாய் ‘உன் வருவாய் என்ன?'


என்ற அவரது கவுஜயை ஞாபகப் படுத்தி டரியலாக்கினார்.)

**********************

சரி.. இப்போ கரண்ட் மேட்டருக்கு வருவோம்... நமக்கெல்லாம் பின்னூட்டம் என்பது மிக முக்கியமாக ஒரு ஊக்கம்.

ஆனால் பின்னூட்டம் என்றால் பிடரியில் கால்பட ஓடுமளவு ஆக்கினார் கணேஷ் என்கிற புண்ணியவான். அவியலில் வால்பையன் வேறு, ஒரு கேள்வி கேட்டு எல்லாப் பின்னூட்டத்தைப் போலவே இதையும் பார்க்காமல் போவீர்களா’ என்று கேட்டிருக்கிறார்.

ஐயா.. பின்னூட்டத்துக்கு எல்லாம் பதிலளிக்காவிட்டால் பார்க்காமலே ரிலீஸ் செய்கிறேன் என்று அர்த்தமா?

எத்தனையோ முறை சொல்லியாயிற்று. அலுவலகத்தில் எனக்கு இணையம் பக்கம் போக அவ்வப்போதுதான் முடியும். அந்த நேரத்தில் பிறரது பதிவுகளை மேய்வேன். கணேஷ் வைத்த ஆப்பால் இப்போது மாடரேஷன் வேறு போட்டுத் தொலைக்கவேண்டியிருப்பதால், அதை ரிலீஸ் செய்வதில் நேரம் போகிறது. (ஐயா கணேஷா.. ‘அஞ்சாதே. ஒண்ணும் பண்ணமாட்டேன்’ன்னு அபயக்கரம் நீட்டக்கூடாதா?)

கணேஷா.. நீங்கள் செய்ததால் என்னென்ன கஷ்டம் தெரியுமா?

எனக்கு பதிவெழுத ஆகும் நேரத்தை விட அதை சிந்திக்கத்தான் நேரம் அதிகமாகும். மனதில் சிந்தனை ஓடி ஒரு வடிவத்துக்கு வந்துவிட்டால் 20 நிமிடங்களில் பதிவு ரெடி. இப்போது அந்த சிந்தனைகளில் பெரும்பகுதியை ‘யார் யார் பின்னூட்டம் போட்டு வெய்ட் பண்றாங்களோ.. பாவம். போய் ரிலீஸ் பண்ணணுமே’ என்ற கவலை அரித்துத் தொலைக்கிறது!

வால்பையன்.... என்னைப் புரிந்து கொள்வீர்களா? ஒரு நாளைக்கு 1000 பேர் படிக்கிறார்கள்.. சரி வேண்டாம் 500 பேர் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், 50 பேரின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை விட பின்னூட்டம் போடாமல் படிக்கும் 450 பேருக்காக அடுத்த நாளின் பதிவுக்காக உழைப்பதுதானே ஒரு பதிவனாய் என் கடமை?

நானென்ன வேண்டுமென்றா ‘உனக்கென்ன நான் பதில் சொல்வது’ மனோபாவத்தோடு இருக்கிறேன் நண்பா? இதோ.. இப்போதுகூட உங்கள் ஒரு பின்னூட்டத்துக்கு பின்னூட்டத்தில் இல்லாமல் பதிவிலேயே பதில் சொல்லியிருக்கிறேன்!

ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி எவ்வளவு சூப்பரோ சூப்பர் வாலு.. நீங்க கேட்டது என்ன?

டுவிட்டர் என்பது என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு பதிவு போட முடியுமா?

இல்லை மற்ற பின்னூட்டங்களை போலவே இதையும் கண்டுக்கா போயிருவிங்களா?


இதுதான். நானே ட்விட்டர்ன்னா என்னான்னு தெரியல்-ங்கறேன். அதை கட் பேஸ்ட் பண்ணி நீங்களே போட்டிருக்கீங்க... அப்பறம் என்கிட்டபோய் அதப்பத்தி விளக்கப் பதிவு போடுங்க-ங்கறீங்க. அதுவும் என் பதிவோட பின்னூட்டத்திலேயே டெக்னிகலி ஸ்ட்ராங் சர்வேசன் சார் பதிவும் போட்டு, லிங்கும் கொடுத்திருக்கறதப் பார்க்காமயே!

ஓகே.


பின்னூட்டம், பதிவு எழுதுதல் இதெல்லாம் போக ‘ப்ளாக்ல எழுதி என்னத்தைக் கிழிச்ச’ என்ற நியாயமான கேள்வி கேட்பவர்களுக்காக அச்சு இதழில் எழுதிக் காட்டவேண்டிய கடமை வேறு துரத்துகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். 15 நாட்களுக்கு முன் என்னில் உருவான ஒரு நல்ல கரு.. இதுவரை பத்து வரிகள் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. நேரம்.. நேரம்.. நேரம்..

கணேஷ்...

இதெல்லாம் எனது/எங்களது கஷ்டங்கள்.

உங்களுக்கென்ன.. நாம ஒரு நாலஞ்சு பேருக்கு பாடம் புகட்டீட்டோம்கற ரேஞ்சுக்கு எல்லாரும் மாடரேஷன் போட்டதை ரசிச்சுப் பாராட்டீட்டு இருக்கீங்க!

உங்க ரசனை, திறமைகளை வேற பக்கம் திருப்பக் கூடாதா?

ஓகே.. இனிமேலும் இத வளர்க்க மாட்டீங்கன்னு நம்பறேன்.

இதையெல்லாம் சொல்வதால் உங்களுக்குக் கோபம் வரலாம். ஆனாலும்

முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான்; எட்டிப் பழுத்து
ஆயினும் ஆமோ அறை

என்ற நன்னெறி போல.. கோபத்திலும் எங்களுக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன்.


.

28 comments:

Cable சங்கர் said...

எங்கயோ ஆரம்பிச்சி எங்கயோ போயிட்டாப்புல தெரியுது..

கணினி தேசம் said...

// நான்தான் ஒண்ணுமே சாப்பிடாதவன்-னு சொல்லிகிட்டமாதிரி //
நம்பிட்டோம்.பரிசல், இடுகை முழுக்க ஒரே புலம்பலா இருக்கே!

யாருப்பா அது கணேஷு?

Thamiz Priyan said...

காப்பாத்துப்பா கணேஷா!

VIKNESHWARAN ADAKKALAM said...

அடடா....

குடுகுடுப்பை said...

இந்த போட்டோவுல உள்ளவரை பார்த்த மாதிரியே இருக்கு

Anonymous said...

வேற யார் எல்லாம் திருப்பூரில் இருக்காங்க? கோவை யும் சேர்த்தி சொல்லுங்க.

Unknown said...

:))அவரோட உண்மையான பெயரே நாடோடி இலக்கியனா??

சென்ஷி said...

:-))

ஆமா. டிவிட்டர்ன்னா என்னாங்க..?!

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களை புரிந்துக் கொள்ள இது ஒரு நல்ல பதிவு

பொன்.பாரதிராஜா said...

அவனுங்களே திருந்தினாத்தான் ஆச்சு பாஸ்.

Venkatesh subramanian said...

இந்த வட்டம் பதிவுல புலம்பல் ஜாஸ்தி போல இங்க இப்ப இருக்குற நிலைமையில் நேரம் தான் பிரச்சனை. இப்ப இருக்குற நிலைமையில் பொதுவா எல்லாத்துகுமே வேலை பெண்டு கலருது எனக்கு ஒரு சின்ன அக்ஸிடண்ட் அதனால விட்ல உட்கார்ந்து படிச்சி பின்னூட்டம் எல்லாம் போடுறேன். இல்லைனா படிக்கவே நேரம் கிடைகிறது கச்டம். உங்க பதிவுல ரொம்ப சந்தோசமான விசயம் இது தான் (இதை எழுதிய நாளில் கிடைக்காத அந்த சான்றிதழ்கள்... இந்தப் பதிவை பதிவேற்றும் இன்றைய தினம் பாடுபட்டு டூப்ளிகேட் சான்றிதழ்கள் வாங்கிவிட்டார்)

கார்க்கிபவா said...

/இதையெல்லாம் சொல்வதால் உங்களுக்குக் கோபம் வரலாம். ஆனாலும்//

இதுக்கு வந்துச்சோ இல்லையோ

//முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான்; எட்டிப் பழுத்து//

இதுக்கு நிச்சய்மா கோவப்படுவாரு கனேஷ் சாரு..(அட அவ்ரு இல்லைங்க)
ஆயினும் ஆமோ அறை

narsim said...

பரிசல்.. எத்தன?

Kumky said...

வாலுக்கும்.,கணேஷ்க்கும் தொடர்ச்சியா பதில சொன்னதுல கொஞ்சம் பரிசல் பாணி மிஸ்ஸிங்.
சின்ன சின்ன விஷயங்களை சீரியஸா எடுத்துக்காதீங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும், உணர்ச்சிவசப்படறீங்க.

கார்க்கிபவா said...

/சின்ன சின்ன விஷயங்களை சீரியஸா எடுத்துக்காதீங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும், உணர்ச்சிவசப்படறீங்க//

னீங்க அப்படி சொன்னதே சின்ன விஷயம்தான்னு சீரியசா எடுத்துக்காம விட்டாரோ என்னவோ?

Mahesh said...

பதிவுக்கு "புலம்பல்கள் (ஆதிமூல கிருஷ்ணன் மன்னிக்க)"ன்னு பேர் வெச்சுருக்கலாம். :)))))))

லக்கிலுக் said...

மறுபடியும் ஏதாவது உள்காயமா தோழர்? :-)

அறிவிலி said...

படிக்க வேண்டியவர் படிச்சாரா?
மட்டுறுத்தல் இருக்கறதுனால உங்களுக்குதான் தெரியும்.

குசும்பன் said...

வர உங்க பதிவுக்கு பின்னூட்டம் நான் போடுவது குறைவதற்கு காரணம் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாததுதான்:(

இது பற்றி நான் தனியாக பேசுவோம்!

Thamira said...

ஒரு நாளைக்கு 1000 பேர் படிக்கிறார்கள்.. சரி வேண்டாம் 500 பேர் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால்//

என்னாங்கடா இது போங்கு ஆட்டமா இருக்குது. குசும்பன் வேற 3000 பேர்னு வயித்தெரிச்சலை கொட்டினாரு அன்னிக்கு. நானெல்லாம் பதிவு போட்டாலே 150 பேர்தான் வர்றாங்க.. அதிலயும் போனா போவுதேனு நம்ப செட்டு மட்டும்தான் பின்னூட்டம் போடுறாய்ங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

Thamira said...

அன்பு பரிசல்,

விளம்பரம் வைத்த அனைவருமே (நான் உட்பட) அதை எடுத்துவிட்ட நிலையில், இன்னும் பெயர் மாற்ற விளம்பரத்தை எடுக்காமலிருக்கும் உங்கள் அன்புக்கு நன்றி எப்படிச் சொல்வது.?

உண்மைத்தமிழன் said...

ஆள் யாரென்று தெரியாமல் அவர் நோக்கம் பற்றி நாம் பேசி நம் நேரத்தை வீணாக்க வேண்டாம் பரிசலு..

இவர் மாதிரி நான்கைந்து சைக்கோக்கள் வலையுலகில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பொறுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை..!

கார்க்கிபவா said...

/விளம்பரம் வைத்த அனைவருமே (நான் உட்பட) அதை எடுத்துவிட்ட நிலையில், இன்னும் பெயர் மாற்ற விளம்பரத்தை எடுக்காமலிருக்கும் உங்கள் அன்புக்கு நன்றி எப்படிச் சொல்வது.?//

அது அன்பில்ல சகா.. சோம்பேறித்தனம்.. இந்த மாத அப்திவர் கூட பல மாசமா இருக்கார்,..

ஆவ்வ்.. அந்த மாசமா இருக்கிறதில்ல..

ரவி said...

நாடோடி இலக்கியனை தெரியாது....அறிமுகத்துக்கு நன்றி...

நாடோடியாரே, அன் யாங் க ச யோ..

என்ன கனேஷ்ல ஆரம்பிச்சு வால்பையன்ல வந்து நிக்குது ?

:)))))))))

☼ வெயிலான் said...

//விளம்பரம் வைத்த அனைவருமே (நான் உட்பட) அதை எடுத்துவிட்ட நிலையில், இன்னும் பெயர் மாற்ற விளம்பரத்தை எடுக்காமலிருக்கும் உங்கள் அன்புக்கு நன்றி எப்படிச் சொல்வது.?//

எப்படி விளம்பரத்தை எடுக்கிறதுனு தெரியல அவருக்கு. அதான் மேட்டரு :)

narsim said...

//செந்தழல் ரவி
7 April, 2009 12:24 PM
நாடோடி இலக்கியனை தெரியாது....அறிமுகத்துக்கு நன்றி...

நாடோடியாரே, அன் யாங் க ச யோ..

என்ன கனேஷ்ல ஆரம்பிச்சு வால்பையன்ல வந்து நிக்குது ?
//

தழல், தல தளதள

Raju said...

\\அன்பு பரிசல்,
விளம்பரம் வைத்த அனைவருமே (நான் உட்பட) அதை எடுத்துவிட்ட நிலையில், இன்னும் பெயர் மாற்ற விளம்பரத்தை எடுக்காமலிருக்கும் உங்கள் அன்புக்கு நன்றி எப்படிச் சொல்வது.?\\

நீங்களே இப்படி பீல் பண்ணுனா. செல்வேந்திரன் எப்படி பீல் பண்ணனும்...?!?
அவர்.."இந்த மாத பதிவர்" அப்டின்ற தலைப்புல எந்த மாதத்துலேர்ந்து தொங்கிகிட்டு இருக்காப்ல..

அன்பு கிருஷ்ணா அவர்களே,
தயவு செஞ்சு செல்வேந்திரனோட தலைப்பை "எனக்கு பிடிச்ச பதிவர்" அப்டின்னாவது மாத்துங்க!
அதிக பிரசங்கித்தனத்துக்கு மன்னிக்கவும்...

தேவன் மாயம் said...

சரி... கெட்ட விஷயம்:- ட்ரெய்ன்ல வர்றப்ப இவர் பையை வெச்சுட்டு கதவோரம் போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கார். அந்த நேரத்துல இவர் பைல இருந்த எல்லா சர்ட்டிஃபிகேட்ஸும் அடங்கின ஃபைலை எவனோ அடிச்சுட்டுப் போய்ட்டான். 10-வதிலிருந்து, கடைசியா வேலை செஞ்ச கம்பெனில குடுத்த சர்டிஃபிகெட்ஸ் வரைக்கும் எல்லாம் போச்சாம். கஷ்டமா இருந்தது. புகார் குடுத்திருக்கார்.

நல்ல விஷயம்: எடுத்துட்டுப் போனவன் லேப்டாப்பை விட்டுட்டுப் போய்ட்டான். ப்ச்.. அதகூட இன்னொண்ணு வாங்கிக்கலாம். இனி இவர் அலைஞ்சு, டூப்ளிகேட் சர்டிஃபிகேட் வாங்கறதுக்குள்ள ரெண்டு, மூணு மாசம் ஓடிடும்!!!!

(இதை எழுதிய நாளில் கிடைக்காத அந்த சான்றிதழ்கள்... இந்தப் பதிவை பதிவேற்றும் இன்றைய தினம் பாடுபட்டு டூப்ளிகேட் சான்றிதழ்கள் வாங்கிவிட்டார்)
///
பரவாயில்லை!! டூப்ளிகேட் கிடைத்தது!!