Friday, April 3, 2009

அவியல் – 03 ஏப்ரல் 2009
எழுத்தாளர் ச.நா. கண்ணன் (கிழக்கு பதிப்பகம்) திருமணத்திற்குச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது.

நான், நண்பர்கள் வெயிலான், ஈரவெங்காயம் ஆகியோருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் எழுதிக் கொண்டிருந்த ஒருத்தர் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்தது போல இருந்தது. ‘இவர்தானே எழுத்தாளர் ..............., கிழக்கு பதிப்பகத்துல அந்த புத்தகம் கூட எழுதினாரே என்று நான் கேட்க வெயிலான் மையமாகத் தலையசைத்தார். அவரோ இன்னொருவரோடு பேசிக் கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சினிடையே ‘கிழக்கு.. கிழக்கு’ என்ற வார்த்தை பலமுறை கேட்டது.

அவர் என்னைப் பார்த்து ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று சைகையாகக் கேட்க..

‘பரிசல்காரன்’ என்றேன்.

‘ஓ!’ என்று சிரித்தார்.

சாப்பிட்டு முடிந்து கைகழுவிய பிறகு அவரைத் தேடிப் போய்.. ‘நீங்க..’ என்று இழுத்தோம்..

‘நந்தகுமார்’ என்றார்.

‘என்ன புத்தகம் எழுதிருக்கீங்க..’

‘புத்தகமா? நானா’ என்றார். நாங்கள் ஒருமாதிரி டரியலாகி ‘நீங்க எழுத்தாளரில்லையா’ என்றோம்.

‘இல்லையே..’

‘அப்ப கிழக்கு.. கிழக்குன்னு எதுவோ பேசிட்டிருந்தீங்களே..’

‘என்கூட இருக்கறவர் அவர் வீட்டு முகவரி சொல்லிட்டிருந்தார். கிழக்காலயா.. மேக்காலயான்னு பேசிகிட்டிருந்தோம்’

‘அப்ப கிழக்கு பதிப்பகம் பத்தி பேசலியா?’

இதற்கு அவர் கேட்ட கேள்விதான் மண்டபத்திலிருந்து தலைதெறிக்க எங்களை ஓடவைத்தது.

‘பதிப்பகமா.. அப்படீன்னா..?’

*********************************

வட இந்திய முதலாளி என்பதால் இந்தி ஓரளவு கற்றுக் கொண்டாயிற்று. அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை.. ‘பக்கா’

‘பக்காவா பண்ணி முடிச்சுடு’

‘அஞ்சு மணிக்குதானே... பக்காவா வந்துடறேன்’ என்று சர்வசாதாரணமாக அதைப் பயன்படுத்துகிறோம்.

இன்றைக்குத்தான் அகராதியைப் புரட்டும்போது பார்த்தேன். பக்கா ஒரு பக்கா ஆங்கிலச் சொல்!

Pucka – முதல்தரமான, உறுதியான, நிரந்தரமான (First Class, Permanent,

என்றிருக்கிறது.

இல்லை.. அது இந்திதானா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...

**************************

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.

‘ஓகே.. டீல்!’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.

அடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே!

இதேதான் மூன்றாவது நாளும்.

நான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது?’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.

ஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்!

**********************************

ஆதிமூலகிருஷ்ணன் பத்தின மேட்டர் இல்லாம அவியலா?

நம்ம ஆதிக்கு அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் வேற ஊர்லேர்ந்து கூப்பிடறாரு.

‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!

******************************

ஃபாலோயர்கள் பற்றி.... (ஆரம்பிச்சுட்டாண்டா...) 250 ஃபாலோயர் வந்துட்டாங்க பரிசல்’ என்று நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அப்போதுதான் பார்த்தேன். 251 எட்டியிருந்தது.

நேற்றைக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை. 247லிருந்து 4 பேர் புதிதாக சேர்ந்து 251 ஆகிவிட்டிருக்கிறது! நான் எழுதும் நாட்களில் ஒன்றிரண்டு பேர் சேர்கிறார்கள். எழுதாத நாட்களில் கொத்துக் கொத்தாக 4,5 என்று சேர்கிறார்கள். இதனால் அறியப்படும் நீதி யாதெனில்...

வேண்டாம். விடுங்க.

அதேபோல எனக்குப் புரியாத ஒன்று இந்த ட்விட்டர். அதை என் தளத்திலிருந்தே எடுத்து விட்டேன். அதில் நான் ஆக்டீவாகவும் இல்லை. ஆனாலும் வாரத்துக்கு 4 பேர் என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்வதாக மின்னஞ்சல்கள் வருகிறது.

விசித்திரம்தான்!

*******************************

தேவதச்சனின் கடைசி டினோசர் (கவிதைத் தொகுப்பு) படித்துக் கொண்டிருக்கிறேன். (உயிர்மை – ரூ.85)

சாம்பிளுக்கு ஒன்று.

எனக்கு

எனக்கு
ஏழுகழுதை வயசாகியும்
கண்ணாடியை நான்
பார்த்ததில்லை. ஒவ்வொரு
முறையும்
எதிரில் நிற்கையில்
என் முகரக்கட்டைதான் தெரிகிறது.
கண்ணாடியைக் காணோம்.
உடைத்தும் பார்த்தேன்
உடைந்த ஒவ்வொரு
துண்டிலும் ஒரு
உடையாத கண்ணாடி.
லேசான வெட்கம் எனக்கு.
பார்க்க முடியாத
கண்ணாடியைத்தான்
பார்க்க முடிகிறது.


கவிதையைப் படித்து விட்டீர்களா..

இப்போது சொல்லுங்கள்.. எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?


.

44 comments:

Cable Sankar said...

அவியல் நல்லாருக்கு

ஒரு வாரம் எழுதாம இருந்தா நிறைய பாலோயர்ஸ் வருவாஙக் போலருக்கே..?

VIKNESHWARAN said...

:) கண்ணாடி முன்னாடி பார்க்கனுமா பின்னாடி பார்க்கனுமா?

தமிழ் பிரியன் said...

சுவாரஸ்யம் குறைவா இருக்குங்க பரிசல்!

அறிவிலி said...

ஆங்கிலத்தில் நிறையவே வேற்று மொழி சொற்கள் உண்டு.அந்த மொழி வளர்வதற்கும் பலராலும் உலகளாவிய(universal)மொழியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணமே.பக்கா மட்டுமில்லை மேலும் பல வார்த்தைகள் உண்டு.

உதாரணம் - Avatar, Guru, Pundit

தமிழிலிருந்தும் பல வார்த்தைகள் உண்டு. catamaran (கட்டுமரம்) இதற்கு ஒரு உதாரணம்.

தமிழிலும் இதை செய்யாலாம்..
Earth Hour க்கு தமிழில் என்ன என்று என் பதிவில் கேட்டேன்.யாரும் எட்டி பார்ப்பதில்லை என்பதால் பதில் சொல்லவில்லை.

Vinitha said...

//ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே! //

Standing legal illaiyaa? ;-)

எம்.எம்.அப்துல்லா said...

அய்யோ!!! ச.நா.கண்ணனும் அவர் துணைவியாரும் அப்பிடியே அச்சு அசலா அபிஷேக்பச்சன் ஐய்ஸ்வர்யாராய் மாதிரியே இருக்காங்க!!

:))

ஸ்ரீமதி said...

//இப்போது சொல்லுங்கள்.. எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?//

இல்ல.. நான் அழகா இருக்கறத மட்டும் தான் பார்ப்பேன்... ;)))

தராசு said...

அதெல்லாம் சரி,

நண்பரின் கல்யாணத்திற்கு சென்றிருந்தேன் என்று சொன்னால் போதாத, அந்த ஃபோட்டோ அவசியமா....

T.V.Radhakrishnan said...

நல்ல சுவை

பரிசல்காரன் said...

@ அப்துல்லா

நீங்களாவது பரவால்ல.. கீழ பாருங்க தராசு அது நெஜமாவே கல்யாணத்துல எடுத்த ச.நா. கண்ணன் ஃபோட்டோன்னு நெனைச்சு ஃபீலிங்ஸ் விட்டிருக்காரு.


அன்பர்களே..

அந்த ஃபோட்டோ அபிஷேக்/ஐஸ் தான். அதை இங்கே போடக் காரணம்... கூகுள் இமேஜில் AVIYAL என்று டைப்பினால் முதல் பக்கத்தில் இவங்க ஃபோட்டோ வந்தது. அப்படியே போட்டுட்டேன்!!!! ஹி..ஹி..

கடைக்குட்டி said...

// அதேபோல் எனக்குப் புரியாத ஒன்று இந்த ட்விட்டர் //


இந்த மாதிரி பிளாக் உலகுல எனக்கு புரியாத விஷயம் நெறய இருக்குதுங்கோ!!!அதபத்தி ஒர்

கடைக்குட்டி said...

//அதேபோல எனக்குப் புரியாத ஒன்று இந்த ட்விட்டர்//

இந்த மாதிரி பிளாக் உலகுல எனக்கு உரியாத விஷயம் நெறய இருக்குதுங்கோ!! அத பத்தி ஒரு தனி பதிவே போடலாம்னு இருக்கேன்...

MayVee said...

:-))

கார்க்கி said...

//நான் அழகா இருக்கறத மட்டும் தான் பார்ப்பேன்... ;))//

அபப்டியா எந்த கண்ணாடின்னு சொன்னா நாங்களும் பார்ப்போமில்ல..

சகா, எங்க விட்டு கண்ணாடி பார்க்கும் போது எனக்கு கண்ணாடி மட்டும் தன தெரியும். அதிலே ரசமெல்லாம் போயாச்சு..(அடுத்து தயிரான்னு யார்வாது கேட்டீங்க, ரைமிங்கா பேசிடுவேன் ஆமா சொல்லிபுட்டேன்)

தராசு said...

அய்யய்யோ நான் அந்த ஃபோட்டோனு சொன்னது அபிஷேக், ஐஸ்வர்யா ஃபோட்டோவத்தான்,

எல்லாரும் கேளுங்க, நான் சொன்னது "அந்த" போட்டொவத்தான்,
நான் சொன்னது "அந்த" போட்டோ,,,,,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கிரி said...

//தமிழ் பிரியன் said...
சுவாரஸ்யம் குறைவா இருக்குங்க பரிசல்!//

ஆமாம்

narsim said...

//‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!//

அவியலில் முந்திரி.

narsim said...

//Cable Sankar said...
அவியல் நல்லாருக்கு

ஒரு வாரம் எழுதாம இருந்தா நிறைய பாலோயர்ஸ் வருவாஙக் போலருக்கே..?
//

ஒக்காந்து யோசிப்பாங்களோ இல்ல அதுவா வருதாய்யா? கலக்கல்

SurveySan said...

aandavan, azhagai alavillaama thandhuttaan, adhanaala, kannaadi paakkumbodhu, en moonji thavirthu vera onnum theriyaadhu ;)

Venkatesh subramanian said...

அன்பர்களே..

அந்த ஃபோட்டோ அபிஷேக்/ஐஸ் தான். அதை இங்கே போடக் காரணம்... கூகுள் இமேஜில் AVIYAL என்று டைப்பினால் முதல் பக்கத்தில் இவங்க ஃபோட்டோ வந்தது. அப்படியே போட்டுட்டேன்!!!! ஹி..ஹி..

ங்கொய்யாஆஆஆஆஆல!!!!!!!!!!!!
அவியலவிட இந்த பதில் தான் உண்மையில் சூப்பர்

Venkatesh subramanian said...

அன்பர்களே..

அந்த ஃபோட்டோ அபிஷேக்/ஐஸ் தான். அதை இங்கே போடக் காரணம்... கூகுள் இமேஜில் AVIYAL என்று டைப்பினால் முதல் பக்கத்தில் இவங்க ஃபோட்டோ வந்தது. அப்படியே போட்டுட்டேன்!!!! ஹி..ஹி..

ங்கொய்யாஆஆஆஆஆல!!!!!!!!!!!!
அவியலவிட இந்த பதில் தான் உண்மையில் சூப்பர்

வல்லிசிம்ஹன் said...

இது போல பின் நவீனத்துவமா பதிவு போட்டீங்கன்னா எங்களுக்கு புரியறதில்லை:)
பதிப்பகமா அப்படீன்னா??//
:)))))
சூப்பர்.

செல்வேந்திரன் said...

ஆதி!
அதி அற்புதம்.

SurveySan said...

twitter பாடம், சுடச் சுட
http://surveysan.blogspot.com/2009/04/twitter-google.html

பரிசல்காரன் said...

/ Venkatesh subramanian said...

அன்பர்களே..//

ஸ்வாமி வெங்கடேஷ் அவர்களே.. என் எல்லாப் பதிவுக்கும் ஒரே பின்னூட்டத்தை இரண்டிரண்டி முறை நீங்கள் இடுவதன் தாத்பர்யம் யாதோ?

கணினி தேசம் said...

:))

Venkatesh subramanian said...

இடையூருக்கு மன்னைக்கவும் இனிமேல் நடக்காமல் பார்த்துகொள்கிறேன் - சுட்டிகாட்டியதற்கு நன்றி

Venkatesh subramanian said...

இடையூருக்கு மன்னிக்கவும் இனிமேல் நடக்காமல் பார்த்துகொள்கிறேன் - சுட்டிகாட்டியதற்கு நன்றி

Mahesh said...

//‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!//

ஆதி இமேஜை டேமேஜ் பண்ணிட்டீங்களே... (அப்பாடா... சிண்டு முடிஞ்சாச்சு... இன்னிக்கு நாள் நல்லா இருக்கும் :)))))))))

மணிகண்டன் said...

அவியல் நல்லா இருக்கு பரிசல். இத்தன "பக்கா" தமிழ் வார்த்தைதான்னு நம்பிக்கிட்டு இருந்தேன். உங்க பதிவ பாத்தவுடன தெளிவு வந்துச்சு.

ஒரே பின்னூட்டம் ரெண்டு தடவ போட்டாலே கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டீங்களா ? இதுக்கு எல்லாம் பதில் சொல்ல வருவாரு !

வால்பையன் said...

//இன்றைக்குத்தான் அகராதியைப் புரட்டும்போது பார்த்தேன். பக்கா ஒரு பக்கா ஆங்கிலச் சொல்!//

ஆங்கிலத்திலேயே பல சொற்கள் இங்கிருந்து ஓடி ஓட்டி கொண்டவை தானே!

அது சமஸ்கிருதமாக இருக்கலாம்

வால்பையன் said...

//‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’//

ஆமாங்க நான் கூட சனி ஞாயிறு “பெருங்குடி”யில தான் இருப்பேன்.

வால்பையன் said...

அதேபோல எனக்குப் புரியாத ஒன்று இந்த ட்விட்டர். அதை என் தளத்திலிருந்தே எடுத்து விட்டேன். அதில் நான் ஆக்டீவாகவும் இல்லை. ஆனாலும் வாரத்துக்கு 4 பேர் என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்வதாக மின்னஞ்சல்கள் வருகிறது.//

டுவிட்டர் என்பது என்ன அதை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு பதிவு போட முடியுமா?

இல்லை மற்ற பின்னூட்டங்களை போலவே இதையும் கண்டுக்கா போயிருவிங்களா?

வால்பையன் said...

//எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?//

சலூன் கடையில் பார்க்கலாம்!

எதிரில் இருக்கும் கண்ணாடியில், பின்னாடி இருக்கும் கண்ணாடி வழியாக முன்னாடி இருக்கும் கண்ணாடியை!

புரியுதா?

நையாண்டி நைனா said...

/*ஆனாலும் வாரத்துக்கு 4 பேர் என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்வதாக மின்னஞ்சல்கள் வருகிறது.*/

நல்லா பார்த்தீங்களா? ஸ்கூட்டரில் என்று இருந்திருக்கப்போவுது.

Ganesh said...

வணக்கம் தல!

Mahesh said...

pucka - பெர்ஷியன்ல இருந்து உருதுல இருந்து ஹிந்தில இருந்து வந்தது. பிரிட்டிஷ்காரங்க இந்தியாவுக்கு வந்ததால இங்கிலீஷுக்கு போயிருக்கலாம்.

த்ரிதண்டம் trident ஆன மாதிரி !!

அனுஜன்யா said...

நர்சிம்,

முதலில் பெரிய வாழ்த்துகள். தல என்ன பண்ணப் போகிறாறோ என்ற பயம் முதலில் இருந்தது. பிரமாதமாக எழுதி இருக்கிறீர்கள். சில unbelievable, immortal வரிகள். இறப்பு/பிறப்பு, அலைபேசி/நிகழ் காலம்/இறந்த காலம் .. எனக்கு மிக நெருக்கமாக இருக்கு நர்சிம்.

இவை எல்லாவற்றையும் விட ஒரு பாசாங்கு இல்லை எழுத்தில். அது மிக முக்கியம். இப்ப என்ன சொல்றீங்க பை.காரன்?

அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

என்னையும் நர்சிம்மையும் ஒன்றாகவே பாவிக்கும் உங்கள் பண்பை மெச்சுகிறேன்!

Suresh said...

சுப்பர் காலையிலே 4 மணிக்கு எழுந்து ஒரு விமர்சணம் எழுதி போட்டேன் .. பார்த்து சொல்லுங்கள்

கும்க்கி said...

அவியல் நல்ல ருசி.

அனுஜன்யா பின்னூட்டம் குழப்புகிறது.(தனி ஆவர்த்தனம் பொது ஆவர்த்தனமாகிவிட்டது போல)

ஆதி உங்க பாஷயில......ஜூப்பர்.

நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது கண்ணாடி தன்னை காண்பிக்கவில்லை.

நிலாவும் அம்மாவும் said...

256

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆதிமூலகிருஷ்ணன் பத்தின மேட்டர் இல்லாம அவியலா?
//

யோவ் என்ன இது அநியாயம்?
எல்லா அவியலிலும் என்னைப்பற்றிய சேதி இருப்பதைப்போல மாயத்தோற்றம் உண்டாக்குவதை கண்டிக்கிறேன்.

லவ்டேல் மேடி said...

அய்யய்யோ.....!!!! அய்யய்யோ.....!!!! அய்யய்யோ.....!!!!


மொக்க தாங்க முடியலையே.......!!! ஓடுங்க ......!! ஓடுங்க.....!!!ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!!!!!