Wednesday, April 29, 2009

(பரிசல்காரன் எழுதிய ) அவியல் 29 ஏப்ரல் 2009

இந்த அவியல் நான் எழுதியதுதான் எனவும் நான் என்பது பரிசல்காரன் ஆகிய என்னைத்தான் குறிக்கும் என்பதையும், என்னை என நான் குறிப்பிடுவது கிருஷ்ணகுமார் ஆகிய...

சரி விடுங்க... கற்பூரம் அடிச்சு சத்தியமா பண்ண முடியும்? நம்புங்கப்பா...

*************************************

ரெண்டு வாரம் முன்னாடி படிச்ச ஒரு நியூஸ். த்ரிஷா நடிச்ச டப்பிங் படம் ஒண்ணு ‘பட்டுக்கோட்டை அழகிரி’ என்கிற பெயரில் வெளிவருவதாக வந்த அறிவிப்பை அடுத்து, பலர் அந்தப் பெயர் நிஜமான பட்டுக்கோட்டை அழகிரியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகக் கருதியதால் பெயரை மாற்றிவிட்டார்களாம். புதிய பெயரைக் கேள்விப்பட்டதும் என் ரத்தம் கொதித்தது.. இந்தப் பெயர் நிஜமாகவே நம்ம நண்பர் அப்துல்லாவைக் குறிக்கிறதே என்று. உடனே இதுகுறித்து பதிவுலக நண்பர்களிடம் கலந்தாலோசித்து வழக்கு தொடர நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

படத்தின் புதிய பெயர்: புதுக்கோட்டை அழகன்.

*************************************************

ஜெயா டி.வி-யில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் வி.பி.எல். (வெட்டிப் பேச்சு லீக்) வயிற்று வலிக்கு காரணியாய் இருக்கிறது. பாஸ்கி, நீலுவை விட நீலுவுக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் (பேரென்னப்பா?) நபர் ரகளை தருகிறார். ஆங்கிலம் என்று அவர் பேசுவதும், நீலு டென்ஷனாவதும் நிஜம் போலவே இருக்கிறது. ஆனால் நீலுவின் முகம் காட்டும் கடுமை நடிப்பல்ல என்று சொல்கிறது.

இரண்டு நாள் முன் தனிமனித ஒழுக்கம் குறித்த விவாதம் நடந்தது அதில். நீலு ஒரு சம்பவம் சொன்னார். அவர் பல வருடங்களுக்கு முன் ப்ரான்ஸ் சென்றிருந்த போது அவர் நண்பர் காரோட்டிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவு. சாலையில் யாருமே இல்லை. இருந்தும் ரெட் சிக்னலுக்கு நின்று சென்றாராம் நண்பர்.

இதைக் கேட்ட நாணா (சரியா இவர் பெயர்? பாஸ்கிக்கு வலதுபுறம் இருப்பவர்) ‘இது பரவால்ல நான் ரஷ்யா போயிருந்தேன். நானும் ஃப்ரெண்டும் நடந்து போய்ட்டு இருந்தோம். ரோட்ல யாருமே இல்ல. ஆனாலும் ரெட் சிக்னல் பார்த்து ஃப்ரெண்ட் நின்னு போனான்’ என்றார்.

உடனே நம்ம இங்க்லீஷ்காரர் சொன்னார்.

“இது பரவால்ல. நான் செக்கோஸ்லோவாக்கியா போய்ட்டிருந்தேன். ஃப்ளைட்ல. கீழ ரெட் சிக்னல் விழுந்தது. ரோட்ல தானே ரெட் சிக்னல்னு அலட்சியப்படுத்தாம பைலட் நடு வானத்துல அந்தரத்துல ஃப்ளைட்டை நிறுத்தினாரு”

அரை மணிநேரத்துக்கு இடைவிடாமல் சிரித்தேன்!

**********************************************

தமிழ் விளம்பரங்களில் பிரபலங்களின் டப்பிங் குரல் தருவது யார் யார் என்று ஏன் எந்த ஜனரஞ்சகப் பத்திரிகைளும் எழுதுவதில்லை? சச்சின், அமிதாப், ஷாருக் எல்லாரும் தமிழில் பேசினால் எப்படிப் பேசுவார்களோ அதே மாடுலேஷன், குரலில் பேசுவது பாராட்டுக்குரியதல்லவா?

பாவம் இந்தக் கலைஞர்கள்.. 100% பெர்ஃபக்‌ஷன் குடுத்தும் மீடியாக்களில் அடிபடாமல் ஒரு பாராட்டு கூட இல்லாமல் உழைப்பது வேதனைதான்.

எல்லார்க்கும் என் சார்பில் பூச்செண்டுகள்!

***********************************

எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழிய நண்பன். இரண்டு மாதம் முன்பு திருமணம் நடந்தது. சமீபமாக அவனுடன் வெளியில் செல்லும் போது பர்சை ஒன்றுக்கு பலமுறை திறந்து பார்த்துக் கொள்வதைக் கவனித்தேன்.

‘தம்பி... என்னத அப்படி அடிக்கடி பார்த்துக்கற?” நேரடியாகவே கேட்டேன்..

பர்சைத் திறந்து அதை எடுத்தான். 10000, மற்றும் 1000 ருபையா (இந்தோனேஷியன் கரன்ஸி) நோட்டுகள்.

“கல்யாணத்து வந்த எங்க சொந்தக்காரர் குடுத்தார் சார். இந்தியன் ருபீஸா மாத்தற வரைக்கும் பத்திரமா வெச்சுக்கணும்ல சார். எவ்வளவு சார் வரும் ரூபாய்ல?” என்று கேட்டார்.

“பார்த்து சொல்றேன்” என்று அலுவலகம் வந்து xe.com பார்த்தேன்.

11000 இந்தோனேஷியா ருபையா = 50.78 இந்தியன் ரூபாய்கள் என்று வந்தது.

வெறும் அம்பது ரூபாய் 78 காசு!

சொன்னேன்.

“அடுத்த லீவுக்கு அந்தாளு வரட்டும் சார்” என்றான்.

“அப்படியெல்லாம் சொல்லாதப்பா” என்றதுக்கு சொன்னான்.


“கம்மியா இருக்கேன்னெல்லாம் சங்கடமில்ல சார். இரண்டு மூணு நாளா ‘பத்திரமா வெச்சிருக்கயா.. பத்திரமா வெச்சிருக்கயா’ன்னு கேட்டுட்டே இருந்தார் சார். இதுக்காக நூத்தம்பது ரூபா செலவு பண்ணி ஜிப் வெச்ச பர்செல்லாம் வாங்கினேன் சார்” என்றான்.

பாவமாய் இருந்தது!

*************************
இன்றைக்கு தனது புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தும் அண்ணாச்சி வடகரை வேலனது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும் தழைத்தோங்க வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்!

*******************

இனி...

கவிதை – ம்ம்ம்ம்.. சரி வேணாம் சில ஜோக்ஸ்...

நாய் வளர்த்துட்டிருந்த ஒருத்தர் அது குட்டியே போடலன்னு நண்பர்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணினாராம். நண்பர் சொன்னாராம்..

“நாயைத் தூக்கி காலி பாத்திரத்துல வெச்சுட்டு காலைல திறந்து பாரு”ன்னாராம் நண்பர்.

இவர் அதே மாதிரி பண்ணி, காலைல பார்த்தா பாத்திரத்துக்கு உள்ளே ஏகப்பட்ட நாய்கள்!

எப்படி?

‘எம்ட்டி வெசல்ஸ் மேக் மோர் நாய்ஸ்!’ (EMPTY VESSELS MAKES MORE NOISE)

************

ஊர்ல ஒரு சொந்தக்காரர் வீட்ல மரணம். அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷன்ல போய் டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போனான் அவன்.

ரிசர்வேஷன் அதிகாரி கேட்டார்: “’பர்த்’ தா?”

இவன் சொன்னான்:

“இல்ல சார். டெத்”

***************
மூணாவது.. ஹலோ.. ஹலோ.. சரி விடுங்க சொல்லல...

.

62 comments:

Anonymous said...

ஏதோ சாடையும், வாடையும் வருதே?

ILA (a) இளா said...

:))

மேவி... said...

:-()

:-)(

:-)

கோபிநாத் said...

தல

நம்பிட்டேன்..(வேற வழி)

அப்புறம் ஒரு கவிதையாச்சும் போடுங்கள்..பீலிஸ்.

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க பரிசல்காரன். நான் டிவி பார்ப்பதில்லை. அதனால ஜெயா டிவி ப்ரோக்ராம் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. நீலு, கிரேஸி மோகன் நாடகங்களில் நடிப்பவர் தானே?
**********
டப்பிங் தருபவர்களுக்கு விருது இதுவரை தந்ததாக நினைவிலில்லை. அல்லது தரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். டப்பிங் உம் கிட்டத்தட்ட பிண்ணனி பாடலைப் போன்ற ஒரு வேலைதான்.. சரிவிடுங்க... திரைக்கு மறைவில் இருந்து சாதனை செய்யும் கலைஞர்கள் எத்தனையோ பேரில் அவர்களும் இருந்துட்டு போகட்டும்.
**********
வடகரை வேலன் அவர்களது வீட்டு கிரகபிரவேஷ வாழ்த்துகள்.
**********
நல்லவேளை நீங்க கவிதை போடல.
**********
இரண்டு சிரிப்புகளும் அருமை!! :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“கம்மியா இருக்கேன்னெல்லாம் சங்கடமில்ல சார். இரண்டு மூணு நாளா ‘பத்திரமா வெச்சிருக்கயா.. பத்திரமா வெச்சிருக்கயா’ன்னு கேட்டுட்டே இருந்தார் சார். இதுக்காக நூத்தம்பது ரூபா செலவு பண்ணி ஜிப் வெச்ச பர்செல்லாம் வாங்கினேன் சார்” என்றான்.//



பத்திரம் சார்...,

Thamiz Priyan said...

நான் கூட உங்களுக்கு தர 10,000 ஈரான் ரூபாய் வச்சு இருக்கேன்.. அடுத்த தடவை வரும் போது தருகிறேன்.. பத்திரமா வச்சுக்கங்க.. ;-))

Cable சங்கர் said...

அவியல் வழக்கம் போல சுவை..

எம்.எம்.அப்துல்லா said...

//புதிய பெயரைக் கேள்விப்பட்டதும் என் ரத்தம் கொதித்தது.. இந்தப் பெயர் நிஜமாகவே நம்ம நண்பர் அப்துல்லாவைக் குறிக்கிறதே என்று. உடனே இதுகுறித்து பதிவுலக நண்பர்களிடம் கலந்தாலோசித்து வழக்கு தொடர நினைத்துக் கொண்டிருக்கிறேன் //


சரி..சரி., இன்னைக்கி நாந்தான் ஊறுகாயா? ரைட்டு..ரைட்டு.

ஆ.சுதா said...

கண்டிப்பா 'புதுக்கோட்டை அழகன்'னுக்கு வழிக்கு ச்சி..ச்சி வழிக்கிட்டு வழக்குப்போடுங்க, ஆனா சாட்சி சொல்லலாம் எங்கள கூபிட்டக் கூடாது ஆமா!!

==================================

|அரை மணிநேரத்துக்கு இடைவிடாமல் சிரித்தேன்!|

படிச்ச நானே ஐஞ்சி நிமிசம் சிரிச்சேன்
பார்த்த நீங்க சிரிச்சிருப்பீங்கதான்.

சரியான காமடிங்க,

==================================

|பாவம் இந்தக் கலைஞர்கள்.. 100% பெர்ஃபக்‌ஷன் குடுத்தும் மீடியாக்களில் அடிபடாமல் ஒரு பாராட்டு கூட இல்லாமல் உழைப்பது வேதனைதான்.|

வேதனைதான்...!
திரைமறைவில் அவர்களுக்கு பாராட்டுக் கொடுத்து இருக்கலாம்னு,
ஆறுதல் கொள்வோம்.

==================================

உங்கள ஊழிய நண்பர் நிகழ்வு.
அய்யோ... சிரிப்ப அடக்க முடியலங்க, பாவம் அவர் நூத்தம்பது ரூபா ஜிப்பல்லாம் வாங்கியிருக்கார்.

===================================

|அண்ணாச்சி வடகரை வேலனது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும் தழைத்தோங்க வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்!|

நானும் சொல்லிக் கொள்கிறேன்.

===================================

|கவிதை – ம்ம்ம்ம்.. சரி வேணாம் சில ஜோக்ஸ்...|

இரண்டு ஜோக்கும் நால்லாருக்குங்க...
(அந்த கவிதையே போட்டிருக்கலாம் இன்னும் கொஞ்சம் சிரிச்சிருப்போம்)

==================================
காலையில்லே நல்லா சிரிக்க வைச்சிட்டீங்க பரிசல்.
நன்றி. பதிவு தூள்!

நிகழ்காலத்தில்... said...

\\உடனே இதுகுறித்து பதிவுலக நண்பர்களிடம் கலந்தாலோசித்து வழக்கு தொடர நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\\


//புதிய பெயரைக் கேள்விப்பட்டதும் என் ரத்தம் கொதித்தது.. இந்தப் பெயர் நிஜமாகவே நம்ம நண்பர் அப்துல்லாவைக் குறிக்கிறதே என்று. உடனே இதுகுறித்து பதிவுலக நண்பர்களிடம் கலந்தாலோசித்து வழக்கு தொடர நினைத்துக் கொண்டிருக்கிறேன் //


சரி..சரி., இன்னைக்கி நாந்தான் ஊறுகாயா? ரைட்டு..ரைட்டு.

பரிசல், எப்ப எங்கே வருவது?
நினத்ததை உடனே செயல்படுத்தலாம்.
எனக்கும் ரத்தம் கொதிக்கிறது

Mahesh said...

சாமி... நீங்க கவிதையே போடுங்க... ஜோக்"கடி" தாங்கல....

உங்க நண்பர் கிட்ட சொல்லுங்க அவருக்கு 50.78ங்கறது நல்ல ரேட்டு. கொஞ்ச நாள் முன்னால 1 யூ.எஸ் டாலருக்கு 13500 இந்தோ ருபையாவா இருந்தது. மறுபடி இறங்கறதுக்குள்ள மாத்திக்கலாம்.

அப்துல்லா அண்ணனுக்கு பெருமைதானே !! புதுக்கோட்டை அழகன், திரிசா... இன்னும் வேறென்ன வேணுமாம் அவருக்கு??!! :)))))

கார்க்கிபவா said...

கவிதைக்கு பதிலா ஜோக்குன்னா அனுஜன்யா கவிதைய போட்டிருக்கலாமில்ல சகா?

அப்புற அந்த ஜோக். யார ஏமாத்தறீங்க? உள்ள நாய் இருந்தா அது எப்படி எம்ப்ட்டி வெஸல் ஆகும்????????????

தராசு said...

//படத்தின் புதிய பெயர்: புதுக்கோட்டை அழகன்.//

எங்க அண்ணனுக்கு அருமையான பெயர்.
//@கார்க்கி said
//அப்புற அந்த ஜோக். யார ஏமாத்தறீங்க? உள்ள நாய் இருந்தா அது எப்படி எம்ப்ட்டி வெஸல் ஆகும்????????????////

நாய வெக்கறதுக்கு முன்னால அது எம்ப்டி தான?

கைப்புள்ள said...

இதற்கு முந்தைய அவியல் தொகுப்புகளை எல்லாம் படிக்கனும் போலிருக்கே? நெறைய மிஸ் செஞ்சிட்டேன் போலிருக்கு.

சன் டிவி சூப்பர் 10 பாணியில சொல்லனும்னா...பரிசலின் அவியல்...

சுவை.

கடைக்குட்டி said...

வி.பி.எல். சமீப நாட்களில் ஐ.பி.ல் மேட்சுகளையும் ஒத்திவைத்துவிட்டு நான் ரசிக்கும் ஒன்று..

அதுவும் நீலுவுக்கு வலப்புறம் இருப்பவர் பேசுவாரே பார்க்கலாம்.. யப்பா..
(பாஸ்கி: thr s saying in english
அவர் : நான் சொல்லுறேன் ..
பாஸ்கி : இல்ல.. நான் சொல்றது உண்மையான இங்கிலீஷ்... )

கடைக்குட்டி said...

நீங்க எழுதுற பதிவெல்லாம் படிச்சா. . ஏதோ நீங்களே கூட இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க்... நேர்ல பேசுற மாதிரியே இருக்குங்க..

வாழ்த்துக்கள்.. :-)

Test said...

ஜோக்ஸ்ஐ விட "இந்தோனேஷியா ருபையா" தான் சூப்பர் ஏன்னா இது ஒரிஜினல் :-)

கார்க்கிபவா said...

//நாய வெக்கறதுக்கு முன்னால அது எம்ப்டி தான?/

என்ன தல? நாய் வச்சதுக்கப்புறம் தானே அது குட்டி போடுது? அப்போ அது எம்ப்ட்டி வெசல் இல்லைதானே..

என்னமோ போங்க.. பரிசல் வாசகர்கல் எல்லாம் இப்படித்தான் இருக்காங்க

Karthikeyan G said...

//“நாயைத் தூக்கி காலி பாத்திரத்துல வெச்சுட்டு காலைல திறந்து பாரு”ன்னாராம் நண்பர்.

இவர் அதே மாதிரி பண்ணி, காலைல பார்த்தா பாத்திரத்துக்கு உள்ளே ஏகப்பட்ட நாய்கள்!//

ஒரே நைட்ல, ஒரே நாயா.. உண்மையாகவே சாதனைதான் :)

anujanya said...

கடி ஜோக்க இவ்வளவு சீரியசா ஆராய்ச்சி செய்யும் கார்க்கி, இலக்கியத் தரம் வாய்ந்த கவிதைகளில் காமெடி காண்பது என்பது ஒன்றும் விசித்திரம் இல்லை. மேலும் வாழ்நாளில் அங்கிகாரம் கிடைக்கப்பெற்ற கவிஞர்கள் வெகு சிலரே. அதனால 'வலிக்குது' என்று மட்டும் சொல்லிக்கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொல்கிறேன் :(((((((((((((((

வந்தது வந்துட்டோம். அவியல் 'நன்னா' இருக்குன்னும் ஷொல்லிக்கறேன்.

அனுஜன்யா

narsim said...

அந்த டப்பிங் மேட்டர் டச்சிங், பரிசல் டச்சிங்.

வால்பையன் said...

//‘எம்ட்டி வெசல்ஸ் மேக் மோர் நாய்ஸ்!//

முடியல
கழுத்து அறுந்து பாதியா தொங்குது!

ஸ்வாமி ஓம்கார் said...

அந்த மூன்றாவது ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிச்சேன் :)

Truth said...

ஹ்ம்ம்... இந்த முறை உப்பு கொஞ்சம் கம்மி பரிசல்! :-(

ஜெகதீசன் said...

:))

கார்க்கிபவா said...

//கடி ஜோக்க இவ்வளவு சீரியசா ஆராய்ச்சி செய்யும் கார்க்கி, இலக்கியத் தரம் வாய்ந்த கவிதைகளில் காமெடி காண்பது என்பது ஒன்றும் விசித்திரம் இல்லை. //

ஒரு தடவ மொக்கை மெயிலில் லாஜிக்கா கடிடா என்று சபை சிரிக்க வைத்துவிட்டார் பரிசல்.. அதுக்கு பழி வாங்கவே இது :))))

//மேலும் வாழ்நாளில் அங்கிகாரம் கிடைக்கப்பெற்ற கவிஞர்கள் வெகு சிலரே.//
கவிஞர்களுக்கு இனிப்பு கொடுக்கலாம். காரம் கொடுக்கலாமா அஎன்று விட்டிருப்பார்கள் தல..

//அதனால 'வலிக்குது' என்று மட்டும் சொல்லிக்கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொல்கிறேன் :(((((((((((((((//

பரிசலின் அவியல படித்தா? இப்படியெல்லாம் அவர கிண்டல் பண்னாதீங்க தல.. அவரு ரொம்ம்ம்ம்ம்ப பாவம்ம்ம்...(குஷி மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும். மும்தாஜ் என்றவுடன் குஷியாவாதீங்க..)

selventhiran said...

பரிசல், ஃபுல் பார்ம்ல இருக்கீங்க...

பரிசல்காரன் said...

@ புகழினி

புரியல் என்ன சொல்றீங்கன்னு?

நன்றி

இளா, மேவீ, கோபிநாத் (கவிதைதானே? ,சைடுல என் பேரு இருக்குல்ல? அதே ஒரு கவிதைதான்)

@ ஆதவா

அதே நீலுதான்.

ஒவ்வொரு பத்திக்கும் தனித்தனி விமர்சனம் தந்ததமைக்கு அன்னபூர்ணாவில் ஒரு காபி வாங்கித் தர்றேன். எப்ப சந்திக்கலாம்? (ஒரே ஊர்ல இருந்துட்டு இணையம் மூலம் மட்டுமே பேசிக்கிட்டிருக்கோம்,. வருத்தமா இருக்கு!)

நன்றி சுரேஷ்

@ தமிழ்பிரியன்

குடுங்க. இது பிரபல பதிவர் தமிழ்பிரியன் குடுத்ததுன்னு ஏலம் விட்டு சம்பாதிப்பேனே..

பரிசல்காரன் said...

நன்றி கேபிள் சங்கர்

@ அப்துல்லா

வாழ்த்துகள் நண்பா. காதலொரு பள்ளிக்கூடம் நண்பா.. அதில் வாத்தியாரு யாருமில்ல நண்பா..!

ஆ.முத்துராமலிங்கம்'

பதிவை விடப் பெரிய பின்னூட்டம் போட்டதற்கு உங்களுக்கு என் அன்பை பரிசாக அளிக்கிறேன்! (அது யாருக்கு வேணும்- ங்கறீங்களா?)

@ அறிவே தெய்வம்

வாங்க வாங்க..

@ மகேஷ்

//அப்துல்லா அண்ணனுக்கு பெருமைதானே !! புதுக்கோட்டை அழகன், திரிசா... இன்னும் வேறென்ன வேணுமாம் அவருக்கு??!!//

அத தனியா சொல்றேன்...

@ கார்க்கி

சகா.. அனுஜன்யாவின் கவிதையைப் புரிந்து கொள்ளவும், கடி ஜோக்குகளை ரசிக்கவும்..

நீ வளரணும் தம்பி!

@ தராசு

கார்க்கிக்கு மெனக்கெட்டு பதிலெல்லாம் சொல்றீங்களே? பாவம்க நீங்க..

@ கைப்புள்ள

ரொம்ப நாளா வராம இருந்தா இப்படித்தான் நண்பா ஆகும்!

@ கடைக்குட்டி

//அதுவும் நீலுவுக்கு வலப்புறம் இருப்பவர் பேசுவாரே பார்க்கலாம்.. யப்பா..//

இடப்புறம். வலப்புறம் பாஸ்கி.

//நீங்க எழுதுற பதிவெல்லாம் படிச்சா. . ஏதோ நீங்களே கூட இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க்... நேர்ல பேசுற மாதிரியே இருக்குங்க..//

அழுவாச்சி அழுவாச்சியா வருதுங்க..

@ லோகன்

ஆமா.. எழுதின பிறகு நானும் அதத்தான் நெனைச்சேன்.

@ கார்த்திகேயன் ஜி

நன்றி.

@ அனுஜன்யா

கார்க்கிய மன்னிச்சுடலாம் கவிஞரே. (கோவம் மாறலியா இன்னும்? ப்ரொஃபைல் போட்டோ மாறல?)

@

லோகு said...

நல்லா இருக்குங்க..

SK said...

அவியல் அருமை பரிசல். :)

Ariv said...

"Empty Vessel Makes more noice"..ஜோக் அருமை.. இதை என்னோட நண்பருக்கு அனுபினேன்.. அவர் பதிலுக்கு... "...More noice" okay.. what about, Milk noice, Thayir(curd) noice, ghee noice... பதில் சொல்ல முடியாமல் ஒரு Smiley-ya போட்டு சமாளிச்சேன்....

தமயந்தி said...

rombavuum mamasu soorvutriruntha neraam unga aavial padithen krishna.. manasu lesagi uthatil pinmuruval vanthathil... anga thaan nikkuringa krishna neenga..(chair ethum ilaya)

தமயந்தி said...

rombavuum mamasu soorvutriruntha neraam unga aavial padithen krishna.. manasu lesagi uthatil pinmuruval vanthathil... anga thaan nikkuringa krishna neenga..(chair ethum ilaya)

MSK / Saravana said...

அவியல் சுவையா இருக்கு.. கலக்கல்ண்ணே..

SK said...

// @ அப்துல்லா

வாழ்த்துகள் நண்பா. காதலொரு பள்ளிக்கூடம் நண்பா.. அதில் வாத்தியாரு யாருமில்ல நண்பா..! //

அருமை பரிசல் :) :) :)

போன பதில்ல சொல்ல மறந்த்துட்டேன்.

கார்க்கிபவா said...

//@ கார்க்கி

சகா.. அனுஜன்யாவின் கவிதையைப் புரிந்து கொள்ளவும், கடி ஜோக்குகளை ரசிக்கவும்..

நீ வளரணும் தம்பி!

@ தராசு

கார்க்கிக்கு மெனக்கெட்டு பதிலெல்லாம் சொல்றீங்களே? பாவம்க நீங்க..//

எனக்கு பதில் சொல்லிட்டு அடுத்த வரியிலே தராசுக்கு இபப்டி சொல்றீங்கலே? நீங்க என்ன பாமகவா?

Venkatesh Kumaravel said...

//அவியல் வழக்கம் போல சுவை..//
இன்னா தலைவா? சன் டி.வி-ல கோட்டு போட்டு கால் மேல காலை போட்டுகிட்டு விமர்சனம் பண்ற கணக்கா சொல்லிட்ட!

////‘எம்ட்டி வெசல்ஸ் மேக் மோர் நாய்ஸ்!//

முடியல
கழுத்து அறுந்து பாதியா தொங்குது!//
ரிப்பீட்டேய்!

புருனோ Bruno said...

//ஊர்ல ஒரு சொந்தக்காரர் வீட்ல மரணம். அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷன்ல போய் டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போனான் அவன்.

ரிசர்வேஷன் அதிகாரி கேட்டார்: “’பர்த்’ தா?”//

அவர் முன்பதிவு பாரத்தில் எழுதவில்லையா :) :) :)

- அஎயோமஎச

(அறை எடுத்து யோசித்து மறுமொழி எழுதுபவர் சங்கம்)

Athisha said...

வடகரை வேலன் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் வீட்டில் அனைவரும் நலமா நண்பரே!

பரிசல்காரன் said...

@ narsim

நன்றி பாஸு!

@ வால்பையன்

கலக்கல் கமெண்ட் தோழர்!

@ ஸ்வாமி ஓம்கார், ட்ரூத், ஜெகதீசன்

நன்றி.. நன்றி நன்றி

@ செல்வேந்திரன்

நன்றி (உங்க பேர் மாற்றம் பிடிக்கலைங்க..)

@ லோகு, எஸ்கே, அறிவ் (சரியா?)

நன்றி. அறிவ், இப்படியெல்லாமா சோதிக்கறது? அவ்வ்வ்வ்

@ சரவணகுமார் - மிக நன்றி

@ தமயந்தி

மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது உங்க மறுமொழி.

@ கார்க்கி

//எனக்கு பதில் சொல்லிட்டு அடுத்த வரியிலே தராசுக்கு இபப்டி சொல்றீங்கலே? நீங்க என்ன பாமகவா?//

இன்னும் வளரணும் தம்பி. என் வலைல நான் பதில் சொல்றதுக்கும், அவரு வந்து பதில் சொலறதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு சகா!!!!

@ வெங்கிராஜா

டேங்ஸூ

@ புரூனோ

சங்கப்பேரு சூப்பருங்க...!

@ அதிஷா

நலம். நலமே

Kumky said...

ஆஹா... தகவலுக்கு நன்றி.ரொம்ப நாள் ஆசையான இந்தோனேஷியா டூர் போட்டுற வேண்டியதுதான்.அப்படியே ஒரு 10000 ரூபாய டாலரா மாத்திக்கிட்டு ஜிம்பாவே யும் எட்டி பார்த்துற வேண்டியதுதான்.

Kumky said...

பின்னனி மாடுலேஷனில் நம்ம நிழல்கள் ரவி ஒரு எக்ஸ்பர்ட்.

Kumky said...

டி வி யா?

Kumky said...

வாசகர்கல்...?

Kumky said...

வழக்கம்போல...பதிவ ஆராய்வதைவிட பின்னூட்ட ஆராய்ச்சி நல்லாருக்கு பரிசல்....

தீப்பெட்டி said...

மணமான அவியல் பாஸ்...
கலக்கல்......

sriram said...

சூப்பர் அவியல் படைத்த பரிசளுக்கு 1 Million ஜிம்பாப்வே $ பரிசு வழங்கப்படுகிறது.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

பரிசல்காரன் said...

@ கும்க்கி

மிகவும் மிகவும் நன்றிண்ணே..

@ தீப்பெட்டி

நன்றி

@ ஸ்ரீராம்

நேர்ல வந்து வாங்கிககறேன். போய்வர டிக்கெட் புக் பண்ணுங்க!

Sanjai Gandhi said...

//சரி விடுங்க சொல்லல...//

பின்னங்கால் பிடறியில அடிக்க நாங்க தான் ஓடிட்டு இருக்கோம். நீக்க தான் மாமா எங்களை விடனும். :)

எல்லாமே நல்லா இருக்கு. :)

Thamira said...

அழகனுக்கும், அண்ணாச்சிக்கும் வாழ்த்துகள்.! இந்தோ கரன்ஸி அட்டகாசம், ஜோக்ஸ்தான் ரொம்ப கடியாயிருச்சி.!

சிவக்குமரன் said...

///ஜெயா டி.வி-யில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் வி.பி.எல். (வெட்டிப் பேச்சு லீக்) ///

இது kalaigner டிவிலங்க

நாடோடி இலக்கியன் said...

//ஜெயா டி.வி-யில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் வி.பி.எல். (வெட்டிப் பேச்சு லீக்)//
கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு.பாஸ்கியை பார்த்தவுடன் ஜெயா என்று நினைத்துவிட்டீர்கள் போலும்.
இந்த அவியலில் பின்னணி குரலகர்கள் பற்றிய கருத்து சுவை.

மங்களூர் சிவா said...

வழக்கம்போல நல்லாருக்கு பரிசல்.

சின்னப் பையன் said...

:-))))))))))))

ஜோதி கார்த்திக் said...

// பாவம் இந்தக் கலைஞர்கள்.. 100% பெர்ஃபக்‌ஷன் குடுத்தும் மீடியாக்களில் அடிபடாமல் ஒரு பாராட்டு கூட இல்லாமல் உழைப்பது வேதனைதான். //
plz see today "Chennai Times" Suplemetry with Times of India ( 30.04.2009) there is a article about dupping artists

பரிசல்காரன் said...

நன்றி சஞ்சய்காந்தி,

ஆதிமூலகிருஷ்ணன்

இரா.சிவகுமரன், நாடோடி இலக்கியன் (ஹி..ஹி..கலைஞர் டி வி தான். பாஸ்கின்னதும் தப்பா மைண்ட்ல செட்டாய்டுச்சு. தினமும் பார்த்தாலும் வீட்டிலயும் இதே பிரச்னைதான்.பத்து மணியானா ஜெயா டி வி வை-ம்பேன் நான். வி பி எல் தானே அது கலைஞர்ல-ம்பாங்க வீட்ல!)

@ நன்றி மங்களூர் சிவா, ச்சின்னப்பையன்

@சமுதாய துப்புரவாளன்

அப்படியா? மகிழ்ச்சி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அவியல்ல கடி எல்லாம் அருமை.வேலனுக்கு வாழ்த்துக்கள்

Ariv said...

என்னுடைய பின்னூட்டத்திற்கு பதில் கூறியதருக்கு மிக்க நன்றி..
அப்புறம், என்னுடைய பெயர் அறிவழகன்... இத்தன நாள் ஆங்கிலத்திலே எழுதிய நான் இன்று தான் (உங்கள் பதிலில்) அதன் தமிழ் வார்த்தையை பார்த்தேன்... ஷப்பா... கொடுமையாக உள்ளது...
எனிவே மிக்க நன்றி....

கடைக்குட்டி said...

//ஜெயா டி.வி-யில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் வி.பி.எல். (வெட்டிப் பேச்சு லீக்) வயிற்று வலிக்கு காரணியாய் இருக்கிறது//

எங்கூர்ல கலைஞர் டி.விலதான் வருது... தல கொஞ்சம் check பண்ணுங்க...
(ஒரு ஒரு தடவையும் எங்கடைக்கி நானே வந்துதான் உங்கள கூட்டிட்டு போனுமா ??? ஒரு surprise தாங்களேன்...)

விக்னேஷ்வரி said...

பாவம் அப்துல்லா அண்ணே.

அரை மணிநேரத்துக்கு இடைவிடாமல் சிரித்தேன்! //

சாரி பரிசல், எனக்கு சிரிப்பு வரல. :(

எல்லார்க்கும் என் சார்பில் பூச்செண்டுகள்! //

என் சார்பிலும்.

பாவமாய் இருந்தது //

ரொம்பப் பாவம் தான்.

‘எம்ட்டி வெசல்ஸ் மேக் மோர் நாய்ஸ்!’ (EMPTY VESSELS MAKES MORE NOISE) //

:((((((((((

மூணாவது.. ஹலோ.. ஹலோ.. சரி விடுங்க சொல்லல...//

நாங்க தப்பிச்சோம். ;)