Monday, December 1, 2008

தனிமை-கொலை-தற்கொலை

நீங்கள் அலுவலத்தில் பிஸியாக பலபேருக்கு பதில் சொல்வதற்கு இடையிலோ, வீட்டில் மனைவி, குழந்தைகள் சூழ இருக்கும்போதோ, பிரயாணத்தின் கூட்டத்திலோ இந்தக் கதையைப் படிக்கிறீர்களா?

ப்ளீஸ்.. வேண்டாம். மூடிவிடுங்கள். உங்களுக்கென்று நமீதாவோ, நயன்தாராவோ வேறெந்தப் பக்கத்திலாவது காத்திருக்கக்கூடும். அங்கே செல்லுங்கள். இது வேறு மாதிரி கதை. இதைப் படிக்க நீங்கள் தனிமையாய் இருக்க வேண்டும். மெல்லிய இசை ஒலிக்கும் இரவு உசிதம். வீட்டில் மனைவி, குழந்தைகள் இன்றி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்தக் கதையைப் படிக்கலாம். வெறும், டிரைவர், கண்டக்டர் மட்டுமே இருக்கும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்தும் படிக்கலாம். யாருமற்ற இரயில் பயணத்தில் படிக்கலாம். காரணம், தனிமையை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் என்றால் இந்தக் கதையை எழுதுபவனல்ல. அவன் நண்பர்களால் சூழப்பட்டவன். அவனுக்குக் குடும்பம் இருக்கிறது. இந்தக் கதையை எழுதவே லாயக்கில்லாதவன் அவன். அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என் வலி. தனிமையின் வலி. அவனை மறந்துவிடுங்கள். நான் என்றால் நான். விக்னேஷ்.

பதினைந்து வயதில் தந்தையை இழந்தவன். பதினாறு வயதில் அன்னை, அண்ணனை விட்டு சென்னை வந்தவன். அவர்களோடு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒரே ஒருமுறை ஊருக்குச் சென்று அன்னையைப் பார்த்தேன். அவளை சிதையில் படுக்கவைத்திருந்தபோது.

கடந்த பத்து வருடங்களில் நண்பனாய் எனக்கிருந்தவன் அமுதன் மட்டும்தான். என் சந்தோஷம், துக்கம், சிரிப்பு, கண்ணீர் எல்லாவற்றையும் நான் பகிர்ந்துகொள்வது அமுதனிடம் மட்டும்தான். எந்த சஸ்பென்சுக்கும் இடமில்லாமல் இப்போதே சொல்லிவிடுகிறேன். நான் அமுதனைக் கொல்லப் போகிறேன். அதுதான் கதை.

ஐயையோ கொலையா.. அதுவும் பத்து வருட நண்பனையா என்று அட்வைஸ் சொல்லப் போகிறீர்களா? வேண்டாம். அந்த நேரத்தில் உருப்படியாக வேறெதாவது செய்யுங்கள். காரணம் நான் தீரயோசித்துத்தான் இந்த முடிவெடுத்தேன்.

அவனுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கக் காரணம்-மிருதுளா.

மிருதுளா. என் இரண்டுவருட நண்பி. அடிக்கோடிடும் வசதி இல்லை. ஆனாலும் அடிக்கோடிட்டுப் படியுங்கள்.. நண்பி. ஏதோ ஒரு பழைய புத்தகக் கடையில் நானும், அவளும் கல்யாண்ஜியின் ஒரே கவிதைத் தொகுப்பைத் தேடி, கிடைக்காமல் நட்பாகி, பிறகு எனக்குக் கிடைத்தபோது, அவளைத் தொடர்பு கொண்டு..

ப்ச்.. விடுங்கள். பழைய கதையெல்லாம் சொல்லி போரடிக்கிறேன். இப்போது மிருதுளாவைப் பார்ப்போம்.

தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? அதுவே சடாரென்று ஒரு நொடியில் மலர்வது எப்படி இருக்கும்?

மிருதுளாவின் சிரிப்பைப் பாருங்கள். அப்படித்தான் இருக்கும்.

வெல்வெட்டைத் தொடும் உணர்வு அவளை ஸ்பரிசிக்கையில் இருக்கும். இரண்டு ஆரஞ்சுச் சுளைகளைப் பக்கவாட்டில் பார்த்தால் அவள் உதடுகள். அவள் பார்வை...

ஐயையோ.. இதையெல்லாம் சொல்வதால் அவளை என் காதலியாய் கற்பனை செய்யாதீர்கள். எங்களுடையது வெறும் நட்பாகத்தான் இருக்கிறது. ஸாரி.. இருந்தது. இறந்தகாலம். காரணம் – அமுதன்.

அவளுக்கும், எனக்குமான நட்பு உங்களால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாதது. எதுபற்றியும் அவளிடம் விவாதிக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ நான் தயங்கியதில்லை. அவளும். முன்பு நானிருந்த ஒரு வாடகை வீட்டின், ஓனர் மகளின் வயதுக்கு மீறீய வளர்ச்சி உட்பட எதையும் அவளிடம் மறைத்ததில்லை. அவளும் தன்னை வேறு கண்ணோடு பார்க்கும் சக நண்பர்களின் மனமாறுதல் உட்பட எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வாள். அதை வேறு எவரிடமும் நான் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கையில். நானும் அதைக் காப்பாற்றிவந்தேன். அதனால்தான் அவள் என்னோடு அதே நட்பாக இருக்கிறாள்.. ச்சே.. இருந்தாள்.

அவளுக்கு என்மீதோ, எனக்கு அவள்மீதோ காதல் என்ற உணர்வோ, காமமோ எழவில்லை. அப்படி உணர்ந்தால் தயக்கமின்றி சொல்லலாம் என்பதே எங்கள் உடன்பாடு. ஆனால்.. ம்ஹூம்.

பழைய பேச்சிலர் அறையிலிருந்து, இப்போதிருக்கும் தனி அறைக்கு நான் குடிவந்தபோது, ஒரு மழையிரவில் அவள் வந்து என் வீட்டில் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஈர உடையுடன் இருந்தபோதும், காமம் வரவில்லை. ‘உனக்கு ஒண்ணுமே தோணலியாடா’ என்று தலைகோதிவிட்டு அவள் வெளியேறியது நேற்று போல நினைவிலிருக்கிறது.

என் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கென்றே படைத்து அனுப்பப்பட்டவள் அவள். அப்படி இருந்த எங்களைப் பிரித்தது அவன்தான்.. அமுதன்.

மிருதுளா என்ற பெண், அதுவும் பேரழகி எனக்கு தோழியாய் வாய்த்தது என் பாக்கியம். யாருமற்ற எனக்குத்தான் தெரியும் தோழமையின் சுகம். அது பெண்ணாய் அமைந்துவிட்டால் எவ்வளவு சுகம்? அதை அவள் தந்தாள். சிலசமயங்களில் நான் யாருமற்றவன் என உணர்கையில் அவள் தோளில் சாய்ந்து அழுதிருக்கிறேன். ‘அழுடா.. அடுத்தவங்க பார்க்கறாங்கன்னு அடக்காதே. அழு’ என்று தலைகோதிவிடுவாள்.

அப்படிப்பட்டவளின் அழகை, ஒரு பீரடித்திருந்த இரவில் சிலாகித்துவிட்டேன் அமுதனிடம். அவள் ரோஸ் உதடுகளின் அழகு, அவள் வழ வழ இடை, அவள் நடை.. இன்னும் என்னென்னவோ.. எனக்குள்ளிருந்த ஆண்மிருகம் விழித்து என்னென்னவோ உளறியதை அடுத்த ஓரிரு நாளில் போட்டுக் கொடுத்துவிட்டான் அமுதன். என் தோழியிடம்.

அவள் அழகைப் பற்றி, ஏற்கனவே அவளிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். ‘போதும்டா ராஸ்கல். எனக்கு நீ புருஷனா வரப் போறதேயில்ல. அதுனால அளவுக்கு மீறி வர்ணிக்காத’ என்பாள். இப்போது அதே வரிகளை, அமுதனிடமிருந்து கேட்டதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மற்றொருவனிடம் தன்னைப் பற்றி இப்படிப் பேசுவதை எந்தப் பெண்தான் தாங்கிக் கொள்வாள்? கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விலகி.. இப்போது சந்திப்பதே இல்லை.

அமுதன் போட்டுக் கொடுத்ததால்தான் அவள் விலகினாள் என்பதே எனக்குப் போனவாரம்தான் தெரியும். அமுதனே ஒரு பீரிரவில் உளறிவிட்டான். ‘டேய்.. நாந்தாண்டா உன்னைப் பத்தி அவகிட்ட சொல்லி பிரிச்சேன்.. இப்ப என்னாங்கற’ என்று அவன் சொன்னது அடுத்தநாள்தான் உறைத்தது. அந்த ஒரு சம்பவத்தால் மட்டும் அவள் பிரிந்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஏதேதோ சொல்லி அவளை என்னிடமிருந்து பிரித்திருக்கிறான். ஒரு மாதமாக அவள் சிநேகமான புன்னகையோ, கையசைப்போகூட இல்லாமல் போகிறாள். ம்ஹூம்... பெண்கள்.. பெண்கள்..!

அவன் சொன்னபோது, ஒன்றும் செய்யும் மனநிலையில் இல்லை. போனவாரம் தோன்றி, அந்த வேகத்தில் ஒரு கத்தியெல்லாம் வாங்கி வைத்து... அப்புறம் விட்டுவிட்டேன். ஆனால் அந்த வன்மம் ஒரு வாரமாக வளர்ந்து, இதோ கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேலாக மழையில் வெளியே போகாமல், யாருடனும் பேசாமல் பித்துப் பிடித்து இருக்கும்போது – அமுதனைக் கொலைசெய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இதைவிட்டால், வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. அவன் அறையில் தனியாகத்தான் இருப்பான். மழைபெய்து ஊரே வெள்ளக்காடாக இருக்கிறது. முடிந்தால் அவன் மூக்கைப் பொத்தி, தலையணையால் அழுத்தி மூச்சை நிறுத்திவிட்டு வெளியே தண்ணீரில் குட்டையில் போட்டுவிடலாம். இல்லையா.. கத்தியால் ஒரே குத்து. இந்த தண்ணிர் வடிந்து, அவனை எடுப்பதற்கு ஒரு வாரமாகிவிடும். அப்படியே என்னைக் கண்டுபிடித்தாலும் கவலையில்லை. ஜெயிலுக்குப் போகத் தயார். இல்லை... அவனைக் கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேனா.. தெரியவில்லை. இப்போதைக்கு அவனைக் கொல்லவேண்டும்.. அவ்வளவுதான்.கத்தி.. கத்தி.. ஓ! இங்கே இருக்கிறது. எவ்வளவு சுலபமாகக் கிடைக்கிறது..

‘சும்மா.. ஒரு டிராமாக்கு அண்ணே..’

‘நீ ட்ராமாக்கு வாங்கு. நெசமாவே போட்டுத் தள்ள வாங்கு. எனக்கின்னாபா? துட்டக் குடு’

நல்ல நீளம். முனைக்கருகில் சுருள்.. சுருளாய்...

‘நெசமாவே போட்டுத் தள்றீன்னா.. இப்படிப் புடிச்சு, ஒரே சொருவு.. வெளில எடுக்கறப்ப அவன் கொடலை நீ பார்க்கலாம்’


வெளியே மழை வெறும் சாரலாக மாறிவிட்டிருந்தது. எந்த நேரத்திலும் மறுபடி பிடித்துக் கொள்ளும். இடுப்பளவு தண்ணீரில் சிலர் தெரிந்தனர். ஏதோ கட்சிக்காரர்களின் உதவியோடு, படகில் ஏறி அமுதன் இருக்கும் அறை நோக்கி சென்றேன்.

கத்தி இடுப்பில் உறுத்திக் கொண்டே இருந்தது.

அமுதனின் அறையை நெருங்கியபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தான். அறைக் கதவை பலமுறை பலமாகத் தட்டியபிறகுதான் வந்து திறந்தான் அமுதன்.

குடித்திருக்கிறானா? அழுதிருக்கிறானா... கண்கள் சிவந்து, முகமெல்லாம் வீங்கிப் போய்..

“வா.. வாடா விக்கி.. என்ன திடீர்னு?”

“ஒண்ணுமில்ல..” – பழகியவனைக் கொலை செய்வதில் உள்ள சிக்கல் இதுதான். வந்தோமா, போட்டுத் தள்ளினோமா என்று போக முடியாது. பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஐயையோ.. என்ன இது.. ஏதோ ப்ரொஃபஷனல் கில்லர் பாணியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டேனே..

கட்டிலுக்கருகில் இருந்த ஸ்டூலில், பிராந்தி பாட்டிலும், டம்ளரும் இருந்தது. ஊற்றிவைக்கப்பட்ட அதை குடித்தால் அவனை ஒரே குத்தில் முடித்துவிடும் தெம்பு வந்துவிடும்.

நேராக கட்டிலில் அமர்ந்து அதை எடுக்கப் போனபோது, தடுத்தான்.

“வேணாம். குடிக்காத”

“ஏன்?”

“ப்ச்.. வேணாம்னா விடேன்”

“ஏண்டா? நீ குடிச்ச டம்ளர்ல நான் குடிச்சதில்லையா?”

“அதுல விஷம் கலந்திருக்குடா” என்றவன் அடுத்தநிமிடம் ‘ஓ’வெனக் அழ ஆரம்பித்துவிட்டான்.

“நான் குடிச்ச டம்ளர்ல நீ குடிச்சதெல்லாம் மூணு வருஷத்துக்கு முந்திடா. இப்போ எங்க என்கூட வர்ற? எப்பப் பாரு மிருதுளா.. மிருதுளா.. டேய்.. ஒனக்காவது எங்கயோ அண்ணன்னு ஒருத்தன் உயிரோட இருக்கான். எனக்கு பத்துவருஷமா எல்லாமே நீதாண்டா. ஆனா ரெண்டு, மூணுவருஷமா என்கூட நீ மனசு விட்டுப் பேசிருக்கியா? நீ கூட இருக்கேன்னு, மேன்ஷனைக் காலி பண்ணி இங்கே வந்தோம். இங்க இருந்தா அவ வர சங்கடப்படறான்னு ரூமையும் மாத்தீட்ட. தனியா இருக்கறதோட கஷ்டம் தெரியுமாடா ஒனக்கு? எவ்ளோ ராத்திரி நான் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா? அப்படியே ஒன்கூட இருந்தாலும் பாதி நேரம் அவளைப் பத்திதான் பேச்சு. அதுனாலதான் அவளை வெட்டிவிட்டேன். அப்படியும் என்கிட்ட முந்திமாதிரி பேச மாட்டீங்கற. இந்த ரெண்டு, மூணு நாளா மழையில வெளியில எங்கயும் போகமுடியாம பேசறதுக்கும் ஆளில்லாம இந்த ரூம்ல அடைஞ்சிருக்கேன். அதான் முடிவு பண்ணி மழை விட்ட கேப்புல போய் வாங்கிட்டு வந்து, குடிச்சு சாகலாம்ன்னு முடிவு பண்ணினேன். என்னால முடியலடா. நான் சாகறேன். விட்டுடு”

அமுதனை அறைய கையை ஓங்கிய நான், ஏதோ வேகத்தில் என்னையே பலமாக மாறி மாறி அறைந்து கொள்ள.. ஏனென்று புரியாமல் தடுக்கப் பாய்ந்தான் அவன்.


(புகைப்படங்கள்-நன்றி:

http://stillintheworld.blogspot.com/2008/02/blog-post_20.html)

www.terminally-incoherent.com)

81 comments:

Anonymous said...

இந்தக்கதைக்கும் அதிஷாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா.

Well written :)

பிரகாஷ் said...

nallaa irukku :)

Natty said...

wow... கலக்கல் கதை...... கலந்திருக்கும் மனித மனத்தின் தனி தன்மை... தெய்வமே... எங்கேயோ போயிட்டீங்க...

Natty said...

ஹையா.. மீ த ஃபோர்த்து..... நாலுல மூணு கழிச்சா ஒன்னு....அது என்னோட லக்கி நம்பர் ;)

Natty said...

தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெதுவாக அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? அதுவே சடாரென்று ஒரு நொடியில் மலர்வது எப்படி இருக்கும்?
//

பெண்மைக்கு ஆண்மையும், ஆண்மைக்கு பெண்மையும் இருப்பதால்தான் புலமையும், இலக்கியமும், மொழியும் மறையாமல் இருக்கிறது போலும் ;)

Cable சங்கர் said...

நைஸ்.. கலக்கல் நடை.. ஆனால் முடிவு எதிர்பார்த்தது தான்.

Natty said...

அது என்ன படத்துல பென்குயின் கொலை செய்வது போல... இதில் உள்ள பின் நவீனத்துவத்தை விளக்கினால், பின்னால் வரும் சந்ததியினர் இது இது இப்படி இப்படின்னு புரிஞ்சுக்குவாங்க....

Natty said...

தனிமை-கொலை-தற்கொலை (சிறப்புச் சிறுகதை)
//

இந்திய வலைப்பதிவுகளிலேயே, முதல் முறையாக, கணிணிக்கு வந்து சில நிமிடங்களேயான புத்தம் புதிய பதிவு , இன்று உங்களுடைய மனம் கவர்ந்த பரிசல்காரன் வலைப்பதிவில்....

படிக்கத்தவறாதீர்கள்....

டன்ட்டோயிங்க......

பரிசல்காரன் said...

@ சின்ன அம்மணி

என்னங்க... மொத கமெண்ட்லயே ஆப்பு வெச்சுட்டீங்க? :-)))))

@ பிரகாஷ்

நன்றி

@ கேபிள் சங்கர்

எந்தக் கதையோட முடிவுதான் தெரியாம இருக்கு நமக்கு? மொதல்லயே சஸ்பென்ஸெல்லாம் இல்லைன்னுட்டேன்ல?

@ Natty

என்ன தலைவா.. இன்னைக்கு நாந்தான் போணியா? போட்டுத் தாளிக்கறீங்க? :-))))

//ஹையா.. மீ த ஃபோர்த்து..... நாலுல மூணு கழிச்சா ஒன்னு....அது என்னோட லக்கி நம்பர் ;)//

இதெல்லாம் ஓவர்ண்ணா..

//இந்திய வலைப்பதிவுகளிலேயே, முதல் முறையாக, கணிணிக்கு வந்து சில நிமிடங்களேயான புத்தம் புதிய பதிவு , இன்று உங்களுடைய மனம் கவர்ந்த பரிசல்காரன் வலைப்பதிவில்....

படிக்கத்தவறாதீர்கள்....

டன்ட்டோயிங்க......//

நல்லா கொடுக்கறாய்ங்கண்ணா வெளம்பரம்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களுக்கென்று நமீதாவோ, நயன்தாராவோ வேறெந்தப் பக்கத்திலாவது காத்திருக்கக்கூடும்.பஸ்ஸில.....?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்தக் கதையைப் படிக்கலாம்.ஓ.கே....ஒ.கே....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அவனுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கக் காரணம்-மிருதுளா.ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

பரிசல்காரன் said...

//SUREஷ் said...

உங்களுக்கென்று நமீதாவோ, நயன்தாராவோ வேறெந்தப் பக்கத்திலாவது காத்திருக்கக்கூடும்.பஸ்ஸில.....?//

பக்கம் = Page/வலைப்பக்கம்.

வெளக்கமெல்லாம் கொடுக்கவேண்டியதாயிருக்குப்பா...

அவ்வ்வ்வ்வ்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அமுதன் போட்டுக் கொடுத்ததால்தான் அவள் விலகினாள் என்பதே எனக்குப் போனவாரம்தான் தெரியும்.
ரைட் ரைட் ரைட்..........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

‘நீ ட்ராமாக்கு வாங்கு. நெசமாவே போட்டுத் தள்ள வாங்கு. எனக்கின்னாபா? துட்டக் குடு’நேரங்கெட்ட நேரத்தில் என்ன பாஸ் இது?

SUREஷ்(பழனியிலிருந்து) said...
This comment has been removed by a blog administrator.
SUREஷ்(பழனியிலிருந்து) said...
This comment has been removed by a blog administrator.
SUREஷ்(பழனியிலிருந்து) said...

அமுதனை அறைய கையை ஓங்கிய நான், ஏதோ வேகத்தில் என்னையே பலமாக மாறி மாறி அறைந்து கொள்ள.. ஏனென்று புரியாமல் தடுக்கப் பாய்ந்தான் அவன்.


ஐ.........................

SUREஷ்(பழனியிலிருந்து) said...
This comment has been removed by a blog administrator.
SUREஷ்(பழனியிலிருந்து) said...
This comment has been removed by a blog administrator.
ஜெகதீசன் said...

:))

பரிசல்காரன் said...

@ சுரேsh

உங்க ஒரே கமெண்ட் அஞ்சாறு தடவை வந்துடுச்சு. அதான் டிலீட்டினேன்..

@ ஜெகதீசன்

:-(

விஜய் ஆனந்த் said...

:-)))...

சூப்பரு!!!

அந்த சிறுகதைப்போட்டிக்கு ரெடி ஆகுறீங்களா!!! நீங்கதானே நடுவர்...ஸோ நீங்க போட்டியிலல்லாம் கலந்துக்கப்படாது!!!

நம்ம மிருதுளாவ ஹீரோயின் கணக்கா வர்ணிச்சிட்டு, கடைசீல வில்லி (நண்பர்களுக்கு நடுவுல)மாதிரி ஆக்கிட்டீங்களே...உங்க பேச்சு கா...

Athisha said...

போயா கூறு கெட்ட குப்பா...!!

நட்புடன் ஜமால் said...

\\நான் என்றால் இந்தக் கதையை எழுதுபவனல்ல. அவன் நண்பர்களால் சூழப்பட்டவன். அவனுக்குக் குடும்பம் இருக்கிறது. இந்தக் கதையை எழுதவே லாயக்கில்லாதவன் அவன். அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என் வலி. தனிமையின் வலி. அவனை மறந்துவிடுங்கள். நான் என்றால் நான். விக்னேஷ்.\\

அருமையான எழுத்து நடை.
என்னைப்போன்ற புதியோர் கற்றுக்கொள்ளவேண்டிய உத்தி.

நட்புடன் ஜமால் said...

\\தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெதுவாக அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்?
அதுவே சடாரென்று ஒரு நொடியில் மலர்வது எப்படி இருக்கும்?\\

பூப்பூக்கும் ஓசை
அதைக்கேட்க்கத்தான் ஆசை

இதை ஞாபகப்படுத்தின தங்கள் வரிகள்

அருமை பரிசலாரே.

அத்திரி said...

//இந்தக்கதைக்கும் அதிஷாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா.//


ரிப்பீட்டேய்

அருமையான் நடை, நல்லாயிருக்கு

anujanya said...

கலக்கல் ஸ்டைல் கே.கே. குருவின் சாயல்.

//பழகியவனைக் கொலை செய்வதில் உள்ள சிக்கல் இதுதான். வந்தோமா, போட்டுத் தள்ளினோமா என்று போக முடியாது. பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.//

இது!

//ஐயையோ.. என்ன இது.. ஏதோ ப்ரொஃபஷனல் கில்லர் பாணியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டேனே..// இந்த வரிகள் இல்லாமல் இருந்தாலே எல்லாருக்கும் அதுதான் தோணும்.

Good one K.K. ஆமாம், இதுல அதிஷா விக்னேஷா? அமுதனா? :))

அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ விஜய் ஆனந்த்

அட! நிங்க கமெண்டெல்லாம் போடறீங்களே..

//அந்த சிறுகதைப்போட்டிக்கு ரெடி ஆகுறீங்களா!!! //

அதெல்லாம் இல்ல நண்பா. ரொம்ப நாளாச்சு இணையத்துல கதை எழுதி.. ஒண்ணு எழுதலாமேன்னுதான்...

//அதிஷா said...

போயா கூறு கெட்ட குப்பா...!!//

யோவ்.. இதுக்கு என்னய்யா அர்த்தம்? நல்லாருக்கா.. நல்லாயில்லையா? இப்படிச் சொல்லீட்டுப் போனா வரலாற்றைப் படிக்கறவங்களுக்குப் புரியுமா? வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!

பரிசல்காரன் said...

@ அதிரை ஜமால்

//அருமையான எழுத்து நடை.
என்னைப்போன்ற புதியோர் கற்றுக்கொள்ளவேண்டிய உத்தி.//

நன்றி நண்பா.

@ அத்திரி

நன்றி

பரிசல்காரன் said...

// அனுஜன்யா said...

கலக்கல் ஸ்டைல் கே.கே. குருவின் சாயல்.//

இல்லாமலிருக்குமா சார்? இத்தனைக்கும் ரெண்டு மூணு வாரமாக எனது வலைப்பூவில் ஒரு கதை எழுதவேண்டும் என்று தோன்றியதிலிருந்து, சுஜாதா புத்தகங்களைத் தொடுவதே இல்லை. சாயல் வந்துவிடுமோ என்று.. அப்படியும்.....

சார்...

//கத்தி.. கத்தி.. ஓ! இங்கே இருக்கிறது. எவ்வளவு சுலபமாகக் கிடைக்கிறது..

‘சும்மா.. ஒரு டிராமாக்கு அண்ணே..’

‘நீ ட்ராமாக்கு வாங்கு. நெசமாவே போட்டுத் தள்ள வாங்கு. எனக்கின்னாபா? துட்டக் குடு’

நல்ல நீளம். முனைக்கருகில் சுருள்.. சுருளாய்...

‘நெசமாவே போட்டுத் தள்றீன்னா.. இப்படிப் புடிச்சு, ஒரே சொருவு.. வெளில எடுக்கறப்ப அவன் கொடலை நீ பார்க்கலாம்’//

இந்த வரிகள் இடைச் சொருகலாய் சிலர் நினைக்கிறார்கள்.

--நேரங்கெட்ட நேரத்தில் என்ன பாஸ் இது?--

இப்படி... தலயைப் புரிந்தவர்களுக்கு இந்த நடை புரியும்... இல்லையா?//பழகியவனைக் கொலை செய்வதில் உள்ள சிக்கல் இதுதான். வந்தோமா, போட்டுத் தள்ளினோமா என்று போக முடியாது. பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.//

இது!

//

நன்றி

//ஐயையோ.. என்ன இது.. ஏதோ ப்ரொஃபஷனல் கில்லர் பாணியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டேனே..//

இந்த வரிகள் இல்லாமல் இருந்தாலே எல்லாருக்கும் அதுதான் தோணும்.//

சரிதான். இந்த வரிகள் படித்துப் பார்க்கும்போது சேர்த்தது. அதெப்படி முன்னபின்ன கொலைசெய்யாதவன் இப்ப்டி நினைக்கிறான்’ என்று யாராவது கேட்பார்களே என்று சேர்த்தது!

/ Good one K.K. ஆமாம், இதுல அதிஷா விக்னேஷா? அமுதனா? :))//

அதிஷா... எங்கிருந்தாலும் வந்து பதில் சொல்லவும்.

பரிசல்காரன் said...

//நீங்கள் அலுவலத்தில் பிஸியாக பலபேருக்கு பதில் சொல்வதற்கு இடையிலோ, வீட்டில் மனைவி, குழந்தைகள் சூழ இருக்கும்போதோ, பிரயாணத்தின் கூட்டத்திலோ இந்தக் கதையைப் படிக்கிறீர்களா?

ப்ளீஸ்.. வேண்டாம். மூடிவிடுங்கள். //


சார்.. இந்தவரியை எழுதியிருக்கறதால ஆஃபீஸ்ல இருந்துட்டு படிக்கலன்னு கூப்ட்டு சொல்றாரு முரளி கண்ணன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

ரமேஷ் வைத்யா said...

ம்ம்ம்ம்....... போட்டா இப்பிடிப் போடணும்.

சென்ஷி said...

:))

நல்லாருக்குங்க கதை..

(கோச்சுக்காதீங்க அண்ணே! வேலை ரொம்ப அதிகம். தமிழ்மணம் வந்து ரொம்ப நாள் ஆச்சு.. புதுப்பதிவு எல்லாம் ரீடர்ல படிக்கறதோட சரி.. அதான் கமெண்டு போட முடியல.. வருத்தப்பட கூடாது ஓக்க்கே )

சென்ஷி said...

//Natty said...
ஹையா.. மீ த ஃபோர்த்து..... நாலுல மூணு கழிச்சா ஒன்னு....அது என்னோட லக்கி நம்பர் ;)
//

ROTFL :)))

சென்ஷி said...

//பரிசல்காரன் said...
//நீங்கள் அலுவலத்தில் பிஸியாக பலபேருக்கு பதில் சொல்வதற்கு இடையிலோ, வீட்டில் மனைவி, குழந்தைகள் சூழ இருக்கும்போதோ, பிரயாணத்தின் கூட்டத்திலோ இந்தக் கதையைப் படிக்கிறீர்களா?

ப்ளீஸ்.. வேண்டாம். மூடிவிடுங்கள். //


சார்.. இந்தவரியை எழுதியிருக்கறதால ஆஃபீஸ்ல இருந்துட்டு படிக்கலன்னு கூப்ட்டு சொல்றாரு முரளி கண்ணன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//

ஹா.. ஹா..ஹா

உண்மைய சொல்லனும்னா உங்க பதிவ படிக்கறத விட சில கமெண்டுதான் எனக்கு அதிக சுவாரசியமா இருக்குது :)))

ARV Loshan said...

நட்பு-காதல் இரண்டுமே போதை தான்,வெறி உருவாக்குபவை தான் என்று உருவகப் படுத்தியுள்ளீர்கள்.. வேகமான நடை.. மிருதுலாவைத் தான் பாதியிலேயே அப்புறப் படுத்திவிட்டீர்கள்.. படமாவது போட்டிருக்கலாம்.. ;)

அது சரி உங்க வலைத் தளத்தை எப்படிங்க மெழுகுவர்த்தி வெளிச்த்திலயோ,பஸ்ல பயணம் செய்யும் போதோ படிக்கிறது?

//மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்தக் கதையைப் படிக்கலாம். வெறும், டிரைவர், கண்டக்டர் மட்டுமே இருக்கும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்தும் படிக்கலாம். யாருமற்ற இரயில் பயணத்தில் படிக்கலாம்.//


எங்கேயாவது சஞ்சிகைக்கு எழுதினதோ????

;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருந்தது.. முரளிகண்ணன் சொல்றமாதிரி நானும் படிக்கிற்தா வேணாமான்னு யோசிச்சேன் :) .. அப்பறம் வேற படிக்காமப்போனா .. ரத்தம் கக்குவீங்கன்னு பாம்பாட்டி மாதிரி.. வேற பக்கங்களில் நடிகைகள் ன்னு பயமுறுத்தினீங்களா முழுசும் படிச்சிட்டேன்.. நீளமாவே தெரியல சுவாரசியம்..

துளசி கோபால் said...

கதை...அருமை.

ஆனால் இதுக்கு பெங்குவின் ஏன்?

கூலான கொலைன்னு சொல்லவா?

☼ வெயிலான் said...

எழுத்தாளர் கே.பி.கே எழுதுன கதைய இங்க பதிஞ்சிருக்கீங்க. அவர்ட்ட அனுமதி கேட்டுட்டீங்களா பரிசல்?

நாடோடி இலக்கியன் said...

நல்ல நடை.
(என்னோட பதிவுலேயும் இதே இமேஜ்தான் போட்டிருக்கிறேன்,வாட் எ கோஇன்சிடன்ட்.)

வெண்பூ said...

கலக்கல் கதை பரிசல்.. நடையும் வித்தியாசமாய் இருந்தது.. கதையின் சூழல் அதிஷாவிடம் இருந்து தோன்றியது என்று சொல்லாதீர்கள், எங்களுக்கே தெரியும்.. :))))

வெண்பூ said...

//
வெயிலான் said...
எழுத்தாளர் கே.பி.கே எழுதுன கதைய இங்க பதிஞ்சிருக்கீங்க. அவர்ட்ட அனுமதி கேட்டுட்டீங்களா பரிசல்?
//

என்ன கொடுமை சார் இது??? :)))

Nilofer Anbarasu said...

கதை ரொம்ப அழகா போய்க்கிட்டு இருந்தது.....முடிவுதான் அவ்வளவு இம்ப்ரசிவ்வா இல்ல.

Nilofer Anbarasu said...

கேரக்டர் பெயர்களை சற்று மாற்றி இருக்கலாம். அமுதன் என்றவுடன் வேட்டையாடு விளையாடுவும் மிருதுளா என்றவுடம் love birds நக்மாவும்தான் உடனே நியாபகம் வருகிறார்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல மறுபக்கம்.. கொஞ்சம் இப்படித்தான் போகும்னு எதிர்பார்த்தாலும்.. முடித்திருந்த விதம் அருமை.... மிகவும் பரிச்சியமான நடை... ஆனால் நல்ல கதை ஓட்டம்... வாழ்த்துக்கள்.

rapp said...

ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இது அறிவுஜீவிங்களோட பின்னவீனத்துவ கதையா:):):)

rapp said...

இதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருங்க:):):)'அமுதன்'னு இருக்கு, அதீதன்னு தான இருக்கணும்:):):)

rapp said...

me the 50:):):)

rapp said...

//ஒரு மழையிரவில் அவள் வந்து என் வீட்டில் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஈர உடையுடன் இருந்தபோதும், காமம் வரவில்லை. ‘உனக்கு ஒண்ணுமே தோணலியாடா’ என்று தலைகோதிவிட்டு அவள் வெளியேறியது நேற்று போல நினைவிலிருக்கிறது//

விக்னேஷ் மட்டும்தான் இப்டி இருப்பார் போலன்னா, மிருதுளாவும் அப்டியா:):):)ஏங்க அந்த பொண்ணும் நட்போட பழகுச்சா:):):) இதப் படிச்சா அப்டித் தெரியல:):):)

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் , இப்போதான் பின்னூட்டம் எல்லாம் படிக்கிறேன். இது போட்டிக்கான கதையா? மன்னிச்சுக்கங்க, நான் பாட்டுக்கு, நீங்க அதிஷா சாரைத்தான் வழக்கம்போல ஜாலியா கிண்டலடிக்கிறீங்களோன்னு நெனச்சிட்டேன்:):):)

Athisha said...

\\ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் , இப்போதான் பின்னூட்டம் எல்லாம் படிக்கிறேன். இது போட்டிக்கான கதையா? மன்னிச்சுக்கங்க, நான் பாட்டுக்கு, நீங்க அதிஷா சாரைத்தான் வழக்கம்போல ஜாலியா கிண்டலடிக்கிறீங்களோன்னு நெனச்சிட்டேன்:):):) \\

என்ன பாத்து அதிஷா சார்னு சொன்னா ராப் மேடம்

உங்கள போடி கூறு கெட்ட குப்பாயினு திட்ட மனசுல வரல

நீங்க ரொம்மம்மம்மம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்லவங்க ஹிஹி

பரிசல்காரன் said...

@ கிழஞ்செழியன்

நன்றிண்ணா.

@ சென்ஷி

பரவால்ல நண்பா. லூஸ்ல விடறேன். ஆனா என் பதிவை விட பின்னூட்டம் நல்லாருக்குன்னுட்டியே.. இதச் சொல்லதான் இத்தனை நாள் கழிச்சு வந்தியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பரிசல்காரன் said...

@ Loshan

சஞ்சிகைக்காக எழுதப்படதல்ல... ஆனால் சஞ்சிகையில் போட்டாலும் பொருந்தவேண்டும் என்பதால்...

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் என்பது உருவகம். அப்படி நெனைச்சுக்கோங்க. அறையில ஒரே ஒரு மெழுகுவர்த்தி எரிஞ்சுகிட்டிருக்கறப்ப, லேப்டாப்பை மடில வெச்சுட்டு படிச்சுப் பாருங்க..

@ முத்துலெட்சுமி

//நீளமாவே தெரியல சுவாரசியம்..//

நன்றிப்பா.

பரிசல்காரன் said...

@ துளசிகோபால்

நன்றி அம்மா.

@ வெயிலான்

இது புத்தம்புதிய கதை நண்பா. கே.பி.கே-ன்னு நீங்க என் பேரை எழுதினதை குழப்பிகிட்டு வெண்பூ கேள்வி கேட்டிருக்காரு பாருங்க...

நன்றி நாடோடி.

@ வெண்பூ

//வெண்பூ said...

//
வெயிலான் said...
எழுத்தாளர் கே.பி.கே எழுதுன கதைய இங்க பதிஞ்சிருக்கீங்க. அவர்ட்ட அனுமதி கேட்டுட்டீங்களா பரிசல்?
//

என்ன கொடுமை சார் இது??? :)))//

பார்ட்னர்.. அவரு என்னைத்தான் எழுத்தாளர்ங்கறாரு. இப்படியெல்லாம் கேள்விகேட்டு புரளியைக் கிளப்பீடாதீங்கப்பா...

கார்க்கிபவா said...

//இல்லாமலிருக்குமா சார்? இத்தனைக்கும் ரெண்டு மூணு வாரமாக எனது வலைப்பூவில் ஒரு கதை எழுதவேண்டும் என்று தோன்றியதிலிருந்து, சுஜாதா புத்தகங்களைத் தொடுவதே இல்லை. சாயல் வந்துவிடுமோ என்று.. அப்படியும்.....//

இதிலிருந்தே தெரியலையா சகா, சுஜாதா இருப்பது வெறும் உங்களிடம் இருக்கும் புத்தகத்தில் மட்டுமல்ல..


ரொம்ப நல்லா இருக்கு சகா.. நீங்க அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வபோது புனைவு எழுத விரும்புகிறேன். ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது போல தொடர்ந்த பத்தி எழுத்து புனைவு எழுத்தை பாதிக்கும் அபாயம் உண்டு. நர்சிம், வெண்பூக்கு பிரச்சனை வந்துவிடும் என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். :)))))

பரிசல்காரன் said...

// Nilofer Anbarasu said...

கேரக்டர் பெயர்களை சற்று மாற்றி இருக்கலாம். அமுதன் என்றவுடன் வேட்டையாடு விளையாடுவும் மிருதுளா என்றவுடம் love birds நக்மாவும்தான் உடனே நியாபகம் வருகிறார்கள்.//

அதுக்கு ஒண்ணும் பண்ணமுடியாது சார். இனிமே இந்தப் பெயர்களைக் கேட்டா என் கதையை ஞாபகம் வெச்சுக்கங்க.. :-)))))

நன்றி கிருத்திகா

@ ராப்

////ஒரு மழையிரவில் அவள் வந்து என் வீட்டில் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஈர உடையுடன் இருந்தபோதும், காமம் வரவில்லை. ‘உனக்கு ஒண்ணுமே தோணலியாடா’ என்று தலைகோதிவிட்டு அவள் வெளியேறியது நேற்று போல நினைவிலிருக்கிறது//

விக்னேஷ் மட்டும்தான் இப்டி இருப்பார் போலன்னா, மிருதுளாவும் அப்டியா:):):)ஏங்க அந்த பொண்ணும் நட்போட பழகுச்சா:):):) இதப் படிச்சா அப்டித் தெரியல:):):)//

என்னங்க.. ஒரு பொண்ணு பையன்கிட்ட ஃப்ரெண்ட்லியா இப்ப்டி நக்கலடிக்கக் கூடாதா? சீரியஸா என்கிட்ட என் கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் கேட்டிருக்காங்கப்பா...

//இது போட்டிக்கான கதையா//

என்னாச்சு ராப் இன்னைக்கு? எல்லாத்தையும் தப்புத்தப்பா புரிஞ்சுக்கறீங்க...

நான் மேலே ஒரு பின்னூட்டத்துல விஜய் ஆனந்துக்கு இல்லைனு பதில் சொல்லீட்டேனே...

பரிசல்காரன் said...

நன்றி கார்க்கி. நானும் அதுதான் உத்தேசித்திருக்கிறேன்.

மாசத்துக்கு ஒண்ணு வெச்சுக்கலாமா?

rapp said...

//என்னங்க.. ஒரு பொண்ணு பையன்கிட்ட ஃப்ரெண்ட்லியா இப்ப்டி நக்கலடிக்கக் கூடாதா? சீரியஸா என்கிட்ட என் கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் கேட்டிருக்காங்கப்பா//

அது தனி ரூம்ல மழயிரவிலா:):):)

//எல்லாத்தையும் தப்புத்தப்பா புரிஞ்சுக்கறீங்க//

ஹா ஹா ஹா, ஓகே ஓகே :):):)

முரளிகண்ணன் said...

பரிசலாரே,

இப்போதான் முழுசும் படிச்சேன். முதல் பத்திய படிச்சுட்டு ஏண்டா எஸ்கேப் ஆனேன்னு இருக்கு. அருமையான வேகம்.

இந்த கதையின் கரு மேன்ஷனில் நான் இருந்த போது ஒரு உதவி இயக்குனர் கூறிய கதையை ஒத்திருக்கிறது.

அப்பொழுது நாங்கள், இதை குறும்படமாக எடுக்கும் படி கூறினோம். அவர் மறுத்துவிட்டார்.

அவரது கதையில் தான் காதலிக்கும் பெண்கள் ஆபத்து/விபத்தில் சிக்கி இறப்பது ஏன் என்று டிடெக்டிவ்விடம் செல்வது போல கதையமைப்பு இருக்கும். ஒரு காதலி இறந்தவுடன் மற்றொன்று, பின் அதற்கடுத்து ஒன்று என இருந்தால் ஆடியன்ஸ் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மூன்றாம் தர இந்திப் படத்துக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கும் என் வாதிட்டோம்.

உங்கள் கதையை அருமையான மாண்டேஜ் ஷாட் உதவியுடன் குறும்படமாக எடுத்தால் சூப்பராக இருக்கும்

rapp said...

//உங்கள போடி கூறு கெட்ட குப்பாயினு திட்ட மனசுல வரல
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏங்க சார்னு கூப்டா புடிக்காதா:):):) நான் சீரியஸா கூப்டரதில்ல :):):) எல்லாரையும் அண்ணேன்னு கூப்டா கோவம் வருது, அதான் சார்னு சொல்றது(சரோஜா படத்துல வர்ற மாதிரி).

விஜய் ஆனந்த் said...

// பரிசல்காரன் said...

என்னாச்சு ராப் இன்னைக்கு? எல்லாத்தையும் தப்புத்தப்பா புரிஞ்சுக்கறீங்க...

நான் மேலே ஒரு பின்னூட்டத்துல விஜய் ஆனந்துக்கு இல்லைனு பதில் சொல்லீட்டேனே... //

ஹலோ, நீங்களும் ஆப்பீசர் மாதிரி ஆயிட்டீங்களா??? போட்டியில கலந்துக்குறீங்களான்னு எங்க கேட்டேன்?? போட்டிக்கதை போல அருமையா இருக்குன்னுதான சொன்னேன்...

:-)))...

rapp said...

//நீங்களும் ஆப்பீசர் மாதிரி ஆயிட்டீங்களா???//

ஓல்ட் பாதர் நக்கலா:):):)

வெண்பூ said...

//
வெண்பூக்கு பிரச்சனை வந்துவிடும் என்றெல்லாம் கவலைப்படாதீர்கள்
//

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிட்டு இருக்குது... :)))))

வெண்பூ said...

//
பரிசல்காரன் said...

சீரியஸா என்கிட்ட என் கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் கேட்டிருக்காங்கப்பா...
//

இந்த விசயம் உங்க வீட்ல தெரியுமா? :))))

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

எனக்காக லீவு போட்டுட்டு வந்து கதையைப் படிச்சதுக்கு நன்றி.

@ ராப்

சீரியஸாய்ட்டீங்களோ..? உங்க பாய்ண்டை உமாகிட்ட பேசிகிட்டிருக்கும்போது, அருள் சொல்றது சரிதான்’ன்னாங்க...

நமக்கு பத்தலைங்க.. :-))))

@ வெண்பூ

:-)

Thamira said...

என்னடா ரொம்ப பெருசாருக்கேன்னு யோசிச்சுகிட்டே ஆரம்பிச்சேன். சுவாரசியமான வேகமான நடைக்கு சைஸ் ஒரு தடையல்லன்னு விளக்கிய இன்னொரு பதிவு. அருமையான நடை. இந்த நடையில் மிக ரேராகத்தான் சில எழுத்தாளர்கள் எழுதிவருகிறார்கள். இருப்பினும் கதை எங்கோ படித்தமாதிரிதான் இருக்கிறது. ஸ்வரம் ஏழுங்கிற மாதிரி கதைகளும் இத்தனைதான் அப்பிடின்னு சுஜாதா சொன்னாமாதிரி ஞாபகம். நடையில்தான் வித்தியாசம் காண்பிக்கமுடியும். அந்தவகையில் கிளாஸ்.! வாழ்த்துகள்.

Thamira said...

//என்னங்க.. ஒரு பொண்ணு பையன்கிட்ட ஃப்ரெண்ட்லியா இப்ப்டி நக்கலடிக்கக் கூடாதா? சீரியஸா என்கிட்ட என் கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் கேட்டிருக்காங்கப்பா//

அது தனி ரூம்ல மழயிரவிலா:):):)// இப்பிடி ஒரு சம்பவம் ஒலகத்துல யாருக்குமே நடந்திருக்காது.. ஹிஹி..

பரிசல்காரன் said...

நன்றி தாமிரா..

//
அது தனி ரூம்ல மழயிரவிலா:):):)// இப்பிடி ஒரு சம்பவம் ஒலகத்துல யாருக்குமே நடந்திருக்காது.. ஹிஹி..//

அதானே.. ஏற்கனவே மண்ணைத் தொடச்சுவிட்டுட்டு இருக்கேன். நீங்க வேற வந்து தள்ளிவிடறீங்களே..

Anonymous said...

கே கே கலக்கல்.எங்க போயிருந்தீங்க இவ்வள்வு நாளும். அப்பப்ப இது மாதிரி ஒன்னு எழுதி என்ன மாதிரி ஆளுகளையும் கவனிங்க சார்.

பரிசல்காரன் said...

நன்றி வேலண்ணா..

இனி, இணையத்திலும் மாதம் ஒன்று எழுதத் திட்டம்.

Mahesh said...

க்ருஷ்ணா... சூப்பர்... அடிக்கடி இலாட்டாலும் ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையாவது இப்பிடி ஒண்ணு எழுதுங்க....

புதுக்கவிதை மாதிரி இது புதுக்கதை பாணியா? கொஞ்சம் அங்கங்க பின்நவீனத்துவக் கிருமி கடிச்சாப்ல இருக்கே?:))

ambi said...

Better Late than Never.

கேரக்டர்களை அறிமுகப்படுத்திய விதத்தை ரசித்தேன்.

ஒரு சின்ன நெருடல், இவ்ளோ க்ளோஸ் பிரண்ட் இப்படி இப்படி அமுதன் சொன்னான்னு முகத்துக்கு நேர்ல கேப்பாங்க தானே?

ஒரு வேளை இந்த பெண்களே இப்படி தான் எஜமான்ன்னு சொல்றீங்களோ? :))

பரிசல்காரன் said...

நன்றி மகேஷ் & அம்பி

@ அம்பி

ஆமா.. அதுனாலதான் ‘பெண்கள்..பெண்கள்’ன்னு ஒரு இடத்துல எழுதியிருக்கேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான நடை..பாராட்டுகள்

பரிசல்காரன் said...

@ T V ராதாகிருஷ்ணன்

கதையின் நடையா.. மிருதுளாவின் நடையா?

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுருள் கத்தியை எடுத்துக்கிட்டு அனாவசியமாக என்னை திருப்பூருக்கு வரவழைக்காதீர்கள்

Kavi said...

Nice story.

விக்னேஷ்வரி said...

அருமை.

Unknown said...

நல்ல உணர்வுபூர்வமான கதை .................. கிளைமாக்ஸ் பின்னிடிங்க

dewmystics said...

Lovely. :))