Monday, December 22, 2008

அபியும் நானும் - விமர்சனம்

ஒரு மகளைப்பெற்ற தந்தையான பிரகாஷ்ராஜ் வாக்கிங்போகும்போது அங்கே சந்திக்கும் பிரித்விராஜிடம் தான் மகளைப் பெற்று வளர்த்த கதையை – நிஜத்தை – பகிர்ந்துகொள்ளுகிறார். இதுதான் அபியும் நானும்.


இதுதானா என்றால் இதுதான். இடையில் எந்த ஒரு திடுக்கிடும் திருப்பங்களோ, அதிர்ச்சிகளோ ஒன்றுமே இல்லை. ஏன் க்ளைமாக்ஸ்கூட இல்லை. இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு நல்ல பதிவு என்று சொல்லலாம். ஒரு மகள்-தந்தையின் பாசப்பிணைப்பை பதிவு செய்திருக்கிறார் ராதாமோகன்.

மகள் த்ரிஷா – ரொம்ப ப்ராக்டிகல்லான மகள். அப்பா ப்ரகாஷ்ராஜ்தான் பாசம் பாசம் என்று கொட்டுகிறார். அதை முதலில் வரும் வெந்நீர் கொட்டிவிடுகிற சீனிலேயே சொல்லிவிடுகிறார்கள்.

மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது, இவர்தான் அழுகிறார். மகள் சிரித்தபடி (அப்போது அவள் கைகாட்டுவது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. ச்சோ.. ச்ச்வீட்ட்ட்!) டாட்டா காட்டி பள்ளி செல்கிறார்.

பெரியவளானதும் சைக்கிள் வாங்கிக் கொடுத்து, சரியாக ஓட்டுவாளோ என்று பயந்தபடி ஜீப்பில் பின்தொடரும்போது, மகள் நிறுத்தி “I KNOW WHAT I AM DOING” என்று திட்டி அனுப்பிவிடுகிறார். அது பிரகாஷ்ராஜூக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இப்படி படத்தில் அங்கங்கே “I KNOW WHAT I AM DOING” சீன்கள்.
அங்கங்கே பிரகாஷ்ராஜூக்கு அதிர்ச்சி தரப்படுவதாய் சொல்லப்படும் இவை எதுவுமே நமக்கு அதிர்ச்சியைத் தரவில்லை என்பதே படத்தின் குறை.

விஜி இல்லாமல், ராதாமோகனும் அங்கங்கே நகைச்சுவையை தெறித்திருக்கிறார். மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க பிரகாஷ்ராஜும், ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்ளும் காட்சி, மகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை வீடு, அறை ஏன் கொசுவலை கூட பிங்க் நிறத்தில் வைத்திருப்பது என்று படத்தில் டைரக்டர் அங்கங்கே தெரிகிறார்.

ஐஸ்வர்யாவிற்கு அம்மா கேரக்டர். நிறைவாய் செய்திருக்கிறார். எதிர்பார்த்தது போலவே திருமணமாகிப் போகும் சீனில் அழுகிறார்.

முஸ்தபாவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர். ஒரு பிச்சைக்காரனான அவரை தன் சின்னவயதில் த்ரிஷா பார்த்து, வீட்டோடு வைத்துக் கொண்டு, அவரை பிரகாஷ்ராஜின் திருமணநாளின் போது பெரியதொரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று (முஸ்தபா ஹோட்டலை பிரமிப்பாய் பார்க்கும்போது பின்னணி இசை அருமை!) எல்லாருமாய் சாப்பிடும்போது, த்ரிஷாவைப் (3 வயது) பார்த்து முஸ்தபா ‘இது என் அம்மா சார்’ என்று சொல்லும் காட்சியில் மட்டும் கண் கலங்கினேன். சபாஷ் முஸ்தபா!

மனோபாலாவின் (எனக்கு மனோபாலாவின் பாடி லேங்குவேஜை பார்க்கும்போது எழுத்தாளர் சுஜாதா நினைவுக்கு வந்தார்) கேரக்டரை வைத்து ஏதாவது செய்வார்கள் என்று நினைத்தால் கடைசிவரை ஒன்றுமே செய்யாமால் விட்டுவிட்டார்கள். இப்படி படத்தில் எதிர்பார்த்த எதுவும் நடக்காது. இயல்பாக வாழ்க்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது. சினிமாத்தனம் என்று எந்த திருப்பமும் இல்லை! வேண்டுமானால் அந்த ஏர்போர்ட் சீனில் தன் மகளில் காதலனாக யாரையோ எதிர்பார்த்திருக்க, ஒரு டர்பன் கட்டிய சிங் வந்து பிரகாஷ்ராஜிடம் ஹலோ சொல்வதை வேண்டுமானால் ஆச்சர்யப்படுத்தும் சீன் என்று சொல்லலாம்!

மொத்தத்தில் படம் நல்லாயில்லையா?

அப்படியெல்லாம் இல்லை. நிச்சயமாய் நல்ல படம். குடும்பத்தோடு பார்க்கலாம். ஆனால் ராதாமோகன், பிரகாஷ்ராஜ் என்ற கூட்டணிக்கு என்னைப் போன்ற ஆட்களிடமிருக்கும் எதிர்பார்ப்பை முழுமை செய்ததா?

படத்தில் முஸ்தபாவின் காதலியாக வரும் ஒரு கேரக்டர் சாரி எடுக்கும்போது, துணிக்கடையில் தூரத்தில் நின்றிருக்கும் முஸ்தபாவிடம் ‘நல்லாயிருக்கா’ என்று சைகையில் கேட்பார். அப்போது முஸ்தபா இரண்டாவது சாரிக்கு காட்டும் சைகைதான் முந்தைய கேள்விக்கு பதில்!

26 comments:

Cable Sankar said...

படம் அவ்வளவா பிடிக்கலையோ..?

Cable Sankar said...

அது சரி தியேட்டர்ல கூட்டம் இருந்திச்சா..?

குசும்பன் said...

//இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு நல்ல பதிவு என்று சொல்லலாம். //

அதர் ஆப்சனில் பின்னூட்டம் போட அனுமதி இருக்கா அதில்!!!

குசும்பன் said...

//தரப்படுவதாய் சொல்லப்படும் இவை எதுவுமே நமக்கு அதிர்ச்சியைத் தரவில்லை என்பதே படத்தின் குறை.//

படம் பாக்கும் பொழுது உங்களுக்கு அதிர்ச்சி வேண்டும் அவ்வளோ தானே அடுத்தமுறை எந்த தியேட்டரில் படம் பார்க்க போறீங்க என்று சொல்லிடுங்க சீட்டில் ஒரு 240w கரண்ட அப்ப அப்ப கொடுக்க சொல்றேன் அதிர்ச்சி கிடைக்கும்!

குசும்பன் said...

//ஒரு கேரக்டர் சாரி எடுக்கும்போது, துணிக்கடையில் தூரத்தில் நின்றிருக்கும் முஸ்தபாவிடம் ‘நல்லாயிருக்கா’ என்று சைகையில் கேட்பார். அப்போது முஸ்தபா இரண்டாவது சாரிக்கு காட்டும் சைகைதான் முந்தைய கேள்விக்கு பதில்!//

சாரி!!!

VIKNESHWARAN said...

ஐயய்யோ என்னது விமர்சனம் இவ்வளோ குழப்பமா இருக்கே...

விஜய் said...
This comment has been removed by the author.
விஜய் said...

”அப்படிப் போடு போடு”ன்னு குத்தாட்டம் இருக்கும் படங்களை விடுத்து இந்த மாதிரி படங்களில் த்ரிஷா நடித்தால் நல்லது.

Anonymous said...

//அப்போது முஸ்தபா இரண்டாவது சாரிக்கு காட்டும் சைகைதான் முந்தைய கேள்விக்கு பதில்!//

அப்ப படம் பாத்து தெரிஞ்சுக்க சொல்றீங்களா!!!

கார்க்கி said...

இதுவும் அப்பிட்டா?

கார்க்கி said...

/விஜய் said...
”அப்படிப் போடு போடு”ன்னு குத்தாட்டம் இருக்கும் படங்களை விடுத்து இந்த மாதிரி படங்களில் த்ரிஷா நடித்தால் நல்ல//

எனக்கு ஒன்னு புரியலங்க.. நமக்கு எது லாபமோ அதத்தான் வாழ்க்கையில செய்றோம்.. இதியே அவங்க செஞ்சா அட்வைஸ் பண்றோம்.. இது மாதிரி படத்துலயும் நடிக்கனும்னு சொன்னா ஓக்கே.. அதுக்காக இதுல மட்டும்தான் நடிக்கனும்ன்னா... உங்களுக்கு புடிக்கலைன்னா பார்க்காதீங்க..

தாமிரா said...

கும்மாங்குத்து பாடல்களும், டமால் டுமீல்களும் இல்லையென்றாலே உடனே வேறெதுவையும் எதிர்பார்க்காமல் பாராட்டிவிடுவது நல்லது பரிசல். அப்போதுதான் இன்னும் நல்ல படங்கள் வரக்கூடும்.. Fine எதிர்பார்ப்புகளையெல்லாம் இதைப்போல நிறைய படங்கள் வரும்போது சொல்லிக்கொள்ளலாம். இல்லையெனில் இந்த பேரரசு மற்றும் xxx போன்றோரின் கொட்டங்கள் (கேமராவைப்பார்த்து பருப்பை எடுத்துவிடுவேன், சீவி விடுவேன், பிடுங்கி விடுவேன் என்று வசனம் பேசுவதை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்) அடங்காமல் போகும் வாய்ப்புள்ளது.

அதிஷா said...

தோழர் பரிசல் படம் பார்த்து செம காண்டாகிட்டீங்க போலருக்கே...

ஓவர் எதிர்பார்ப்பு உடம்புக்காகாது..

அதிஷா said...

யோவ் கூறு கெட்ட குப்பா படம் நல்லாருக்கா நல்லாலையா?

தாமிரா said...

xxx என்றதும் யாராவது விஜய் என எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் JKR, விஜய், அஜித், விஷால், சிம்பு, பழனி பரத்.. என பலரையும்தான் குறிப்பிடுகிறேன் என்று கொள்ளவும். (ஹிஹி.. இதில் இன்னொரு நுண்ணரசியலும் ஒளிந்திருக்கிறது)

கார்க்கி said...

/தாமிரா said...
xxx என்றதும் யாராவது விஜய் என எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் JKR, விஜய், அஜித், விஷால், சிம்பு, பழனி பரத்.. என பலரையும்தான் குறிப்பிடுகிறேன் என்று கொள்ளவும். (ஹிஹி.. இதில் இன்னொரு நுண்ணரசியலும் ஒளிந்திருக்கிற//

உங்க நுண்ணரசியல் எல்லாம் ஒன்னும் வேகாது.. இதில் தல ஜே.கே.ஆர் பேர சேர்த்ததுக்கு இருக்கு உங்களுக்கு...

ச்சின்னப் பையன் said...

வாழ்க்கையிலே 2.5 மணி நேரத்த மிச்சம் பிடிங்கன்னுட்டீங்க.... நன்றி...

Mahesh said...

தாமிரா சொல்ற மாதிரி இது மாதிரி படங்களுக்கு வரவேற்பு குடுக்கணும்... மத்த run-of-the-mill படங்களுக்கு இது எவ்வளவோ மேல்.

ப்ரகாஷ்ராஜ் அப்பா ரோலுக்குன்னெ ஆணி அடிச்சு வெச்சுருவாங்க போல இருக்கு... அதே போல ப்ருத்விராஜ் இனிமே வந்து "டாய்... வாங்கடா"ன்னு சத்தம் போட்டா யாரும் ரசிக்க மாட்டங்கன்னு நிகைக்கிறேன்... ரொம்ப சாஃப்ட் ரோலாவே பண்ராரு.

வால்பையன் said...

ராதாமோகனுக்கு இவ்வளவு விளபரம் தேவையில்லை,

ஏமாற்றமாட்டார் என தெரிந்தது தானே!

வால்பையன் said...

20

கும்க்கி said...

தாமிரா said...
xxx என்றதும் யாராவது விஜய் என எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் JKR, விஜய், அஜித், விஷால், சிம்பு, பழனி பரத்.. என பலரையும்தான் குறிப்பிடுகிறேன் என்று கொள்ளவும். (ஹிஹி.. இதில் இன்னொரு நுண்ணரசியலும் ஒளிந்திருக்கிறது)

சாரிங்க...சரிங்க.

நான் அப்படித்தான் முதலில் எடுத்துக்கொண்டேன்.

கும்க்கி said...

எல்லாருமாய் சாப்பிடும்போது, த்ரிஷாவைப் (3 வயது) பார்த்து முஸ்தபா ‘இது என் அம்மா சார்’ என்று சொல்லும் காட்சியில் மட்டும் கண் கலங்கினேன். சபாஷ் முஸ்தபா!

படிக்கும்போதே கண்கலங்குது பரிசல்.

கும்க்கி said...

ஒய்....மாடுரேஸன் அகய்ன்?

கும்க்கி said...

எனி கும்மி ப்ராப்ளம்?

அனுஜன்யா said...

கே.கே. - 'வெள்ளித் திரை' என்ற படம் கொஞ்ச நாட்கள் முன் வந்தது. பிரகாஷ் ராஜ்/பிரிதிவி ராஜ் கூட்டணியில். அந்த அளவு மோசமில்லையே?

அனுஜன்யா

செல்வேந்திரன் said...

பரிசல், ராதாமோகன் டெம்ப்ளேட்டில் சிக்கிக்கொள்கிறாரோ?