Tuesday, December 9, 2008

அவியல் 09.12.08 – பாவம் ஷகீலா!

அந்தக் கவிஞர் தனது நண்பர்களோடு சிற்றுண்டிக்கு செல்கிறார். தோசை கொண்டுவரச் சொல்கிறார்கிறார்கள். பணியாளர் தோசையுடன் வரத் தாமதமாகிறது. தூரத்தே அவன் வரும்போது நண்பர்கள் கவிஞரிடம் “அவனுக்கு சட்’டென்று ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்” என்று சவால் விடுகிறார்கள். பக்கத்தில் அவன் வந்ததும் ‘பட்’டென வெண்பா சொல்கிறார் கவிஞர்....

“ஏண்டா இதற்குப்போய் இவ்வளவு நேரமா
போண்டா எடுத்துவா போ”

யாரந்தக் கவிஞர்...? கடைசியில் பார்ப்போம்.

**********************
நான் எந்த மெயில் அனுப்பினாலும் முடிவில் அளவில்லா அன்போடு.. கிருஷ்ணா’ என்று முடிப்பது வழக்கம். சில மெய்ல்த்ரெட் நடப்பில் இருக்கும்போது, இந்த அளவில்லா அன்போடு-வை நம்ம ஃப்ரெண்ட்ஸ் போட்டு, தாளிக்கும் தாளிப்பைப் பாருங்கள்...


அளவில்லா அட்டெண்டன்ஸோடு, அளவில்லா மப்போடு, மனமில்லா குசும்போடு, காலி வயிறோடு, அளவிலா ஆர்வத்தோடு, அளவில்லா அலுப்போடு, அளவில்லா அளவோடு அளவில்லா பியரோடு, அளவில்லா ஏழரையோடு, அளவில்லா துயரத்தோடு, அளவில்லா எதிர்பார்ப்புகளோடு அளவில்லா எச்சரிக்கையோடு, ஆப்புவைக்கும் அன்போடு., அளவான அளவோடு....

நம்ம ஃப்ரெண்ட்ஸ் கலக்கறாங்கப்பா!

***************************

ட்வெண்டி-20 படம் பார்த்தேன். மலையாளம்.

பெங்களூரில் ஒரு கொலை. அதைச் செய்தவனைக் கைது செய்கிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி சுரேஷ்கோபி. அவனை ஜாமீனில் எடுக்கிறார் அவனது திறமையான வழக்கறிஞர் மம்முட்டி. ஜாமீனில் வெளிவந்த அவனைக் கொல்கிறார் தாதா மோகன்லால். மோகன்லாலை யாரென்று தெரியாமல், வாதாடி நிரபராதி என்று வெளியே கொண்டுவருகிறார் மம்முட்டி. பிறகு அவரை போலீஸ் சுரேஷ்கோபியிடம் மாட்டிவிடுகிறார். அவர் தப்பிக்கும்போது உதவுகிறார் மம்முட்டி. மூன்றுபேரும் க்ளைமாக்ஸில் வில்லன்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

குழப்பமாய் இருக்கிறதா? படம் ஒன்றும் குழப்பவில்லை. இதை தெளிவாக காரணகாரியங்களோடும், காமெடியோடும் நகர்த்தி வெற்றிப் படமாக்கியிருக்கிறார்கள்!

சுரேஷ்கோபி, மம்முட்டி, மோகன்லால் என்று ஒவ்வொருவரின் என்ட்ரிக்கும் வித்தியாசமாக யோசித்து எல்லோருடைய ரசிகர்களின் திருப்திக்கும் உழைத்திருக்கும் இயக்குனர் சபாஷ் போடப்பட வேண்டியவர்.

மலையாள திரைப்பட சம்மேளனமான ‘அம்மா’விற்காக தயாரிக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தின் வசூலை வைத்து நலிந்த திரைப்படக் கலைஞர்களுக்கு உதவப் போகிறார்கள் என்பதால், அங்கே இருக்கும் எல்லா ஆர்டிஸ்டும் நடித்திருக்கிறார்கள். மறைந்த ஸ்ரீவித்யாகூட ஒரு சீனில் மம்முட்டியின் அம்மாவாக – ஃபோட்டோவில் – வந்துபோகிறார். என் ஒரே ஒரு குறை மலையாள சினிமாவை அகிலமெங்கும் பரப்புவதில் சிறிதளவேனும் பங்கிருக்கிற ஷகீலாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான். டைட்டில் போடும்போது, பல நடிகர்களின் ஸ்க்ரோலிங் காட்டுகிறார்கள்.. அதில்கூட அவருக்கு இடமில்லை! பாவம்!!! (இவர் மெலிந்த கலைஞர் இல்லை, படத்தில் நடிக்காமல் இருப்பதால் நலிந்த கலைஞராக ஆகிவிட்டாரோ என்னமோ!)

***********************
சென்றவாரத்தில் நண்பர் பழமைபேசி மாங்கா மடையன்’ என்பதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் இதுபற்றி நான் கேள்விப்பட்டது...

தேங்கா மடையன், மாங்கா மடையும் இரண்டுமே புழக்கத்தில் இருந்ததாம். (தேங்கா மடையன் இப்போது இருக்கிறதா?) அதாவது அடிக்கடி முட்டாள்தனமாக செயல்படுபவன் தேங்கா மடையன். எப்போதாவது முட்டாள்தனமாக செயல்படுபவன் மாங்கா மடையன். காரணம் எப்போதும் காய்க்கும் தேங்காய். சீஸனில் மட்டும் காய்க்கும் மாங்காய். அதனால்!

*************************

சென்னை வந்திருந்தபோது நண்பர்களுடனான கலை இரவில் - பாடல்கள், காப்பி அடிப்பது குறித்த பேச்சின்போது வெளிவந்த தகவல்கள்....

‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ – இந்தப் பாடல்தான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ வின் இன்ஸ்பியரேஷன். பாடிப்பாருங்கள்.

‘தந்தனத்தோம் என்று சொல்லியே.. வில்லினில் பாட..’ – இதுதான் ‘சிங்கமொன்று புறப்பட்டதே.. சபதம் செய்து’. இன்ஸ்பியரேஷனெல்லாம் இல்லை. டைரக்ட் காப்பி!

‘கொக்கரக்கோ கோழி..கொக்கரிக்கும் தோழி’ (கலைஞன்) இதுதான் ‘தோஸ்த்துபடா தோஸ்த்து’ (சரோஜா) என்றான் சகா கார்க்கி.

ஜித்தன் படத்தில் ‘அ முதல் அஃகு தானடா’ பாடலின் சரணம்...

‘ஒத்தரூபா பொட்டுக்காரி
ஒத்துழைக்க கெட்டிக்காரி
தளதளன்னு குலுங்கிவரும்
தாகம்தீர்க்கும் தண்ணிலாரி..’ முழுச்சரணமும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலின் சரணமாகிய
‘படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் சுருட்டிக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்..’ சரணத்தோடு ஒத்துப் போகும்!

இந்தப் பட்டியல் முடியாது.

சபாஷூன்னேன்!

****************************
முன்பெல்லாம் வெறும் படம் மட்டும் போட்டு, கலக்கலாக ஒரே வரியில், டயலாக்கில் குபுக் கென்று சிரிக்கவைக்கிற நகைச்சுவைகள் நிறைய வரும். சிம்பு, சரண் எல்லாரும் இதில் எக்ஸ்பர்ட்! இப்போதெல்லாம் இந்த டைப்பில் வருவது அரிதாகிவிட்டது.

விகடனில் சிம்புவின் ஒரு ஜோக்.. (2000ல் வந்தது)

நகராட்சி வண்டி நிற்கிறது. அதிகாரிகள் அந்த மோசமான ரோட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். ‘ரோடா இது’ என்பது போல ஒரு முகபாவம் அவர்களிடத்தில். பக்கத்தில் ஒரு கிராமத்துப் பெரியவர், அந்த அதிகாரிகளிடம்...

‘ஆமாங்க.. கடைசியா தேர்தல் சமத்துல போட்ட ரோடுதான். ஜவஹர்லால் நேரு பிரசாரம் பண்ணவர்றார்னு அவசர அவசரமா போட்டாங்க’

படத்திலிருப்பவர்களில் முகத்தைப் பார்த்தால் அப்படிச் சிரிப்பு வரும்!

இதைவிட இன்னொன்று.. 1943ல் (ஜூலை 11 இதழில்) வந்தது..

ஒரு பேஷண்ட் வாயை அகலமாகத் திறந்திருப்பார். பல்டாக்டர் சொல்வார்..

‘வாயை அளவா திறங்க போதும். நான் வெளில நின்னுதான் பல் பிடுங்கப் போறேன்’

*******************

அந்தக் கவிஞர், வைரமுத்து!

இனி இந்த வாரக் கவிதை

தமிழர்
கடவுள்
முருகன்
கும்பிட
நீண்ட
வரிசை
ஜனவரி 1.

-நெல்லை கண்ணன்

40 comments:

Cable சங்கர் said...

//ஒரு பேஷண்ட் வாயை அகலமாகத் திறந்திருப்பார். பல்டாக்டர் சொல்வார்..

‘வாயை அளவா திறங்க போதும். நான் வெளில நின்னுதான் பல் பிடுங்கப் போறேன்’//

ha..haa..haaa..haaaa..

கோவி.கண்ணன் said...

மீ த செகண்டு.

கடைசி கவிதை நன்றி !

Anonymous said...

கலக்கல் அவியல்.

டுவெண்டி20 நீங்களும் பாத்துட்டீங்களா?
நான் நாளை விமர்சனம் எழுதலாமென்றிருந்தேன். எனக்குப் பிடிச்சிருந்தத்து

Kumky said...

:-((
me the 4th.

Kumky said...

வீராசாமிய மாற்றி தொலை தொடர சொல்லீட்டாங்களா?
நெட் அடிக்கடி படுத்துக்கிது.

Kumky said...

அந்த அளவில்லா...வை கவனிச்சீங்களா...எல்லாம் பாசக்கார புள்ளைங்களா இருக்கும் போல...

Kumky said...

வீக் எண்ட்-விட அவியலுக்குத்தான் மவுசு அதிகம்....உண்மைதானுங்களே?

சென்ஷி said...

டிவெண்டி - 20 படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஷகீலாவை கண்டு கொள்ளாமல் விடப்பட்டதை நினைக்கும்போது மனம் கொந்தளிக்கின்றது. தமிழர்களுக்கு மலையாள தேசத்தில் நிகழும் கொடுமையின் உச்சக்கட்டம் இது... :)))


பரிசலின் தலைமையில் இதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொல்கின்றேன்..

அவியல் சுவை!

சென்ஷி said...

//அளவில்லா அட்டெண்டன்ஸோடு, அளவில்லா மப்போடு, மனமில்லா குசும்போடு, காலி வயிறோடு, அளவிலா ஆர்வத்தோடு, அளவில்லா அலுப்போடு, அளவில்லா அளவோடு அளவில்லா பியரோடு, அளவில்லா ஏழரையோடு, அளவில்லா துயரத்தோடு, அளவில்லா எதிர்பார்ப்புகளோடு அளவில்லா எச்சரிக்கையோடு, ஆப்புவைக்கும் அன்போடு., அளவான அளவோடு....

நம்ம ஃப்ரெண்ட்ஸ் கலக்கறாங்கப்பா!///


ரிப்பீட்டே...

உண்மையில் நானும் இந்த வரிகளை மிகவும் ரசித்ததுண்டு :))

narsim said...

அவியல் சுவை அமுதம்.. மாலியின் ஜோக்குகள் தொகுப்பு மிக அருமையாக இருக்கும் இன்றும் பார்த்தவுடன் சிரிப்பு வரும்..

கடைசி கவிதை நச்

உங்களுக்கு அந்த அனானி பின்னூட்டம் வரலயா??

சென்ஷி said...

மீ த 10த் :))

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

VIKNESHWARAN ADAKKALAM said...

அரைகுறை அன்போடு,
விக்கி....

வால்பையன் said...

ஷகிலா மலையாள உலகின் மறுக்க முடியாத மாபெரும் கலைஞர், அவரை நிராகரித்தது வருத்தம் தரும் செய்தி.
அண்ணன் லக்கிலுக் தலைமையில் இதற்க்காக எதாவது போராட்டம் நடத்தினால் கலந்து கொள்ள நான் தயார்.

அவியலில் இன்னும் கொஞ்சம் காரம் சேர்க்கவும்

rapp said...

me the 15th:):):)

////அளவில்லா அட்டெண்டன்ஸோடு, அளவில்லா மப்போடு, மனமில்லா குசும்போடு, காலி வயிறோடு, அளவிலா ஆர்வத்தோடு, அளவில்லா அலுப்போடு, அளவில்லா அளவோடு அளவில்லா பியரோடு, அளவில்லா ஏழரையோடு, அளவில்லா துயரத்தோடு, அளவில்லா எதிர்பார்ப்புகளோடு அளவில்லா எச்சரிக்கையோடு, ஆப்புவைக்கும் அன்போடு., அளவான அளவோடு....
//

super:):):)

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

அவியல் கலக்கல்.
ஆனாலும் வழக்கம்போல் இல்லையோன்னும் தோணுது.உங்களின் அவியலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாயிடுச்சு,அதலால் கூட இருக்கலாம்.அடுத்த அவியலில் இன்னும் கொஞ்சம் காரம் சேர்க்கவும்.இது எனது அன்பான வேண்டுகோள்.

பரிசல் ரசிகர் மன்றம்,
வீரபாண்டி கிளை,
திருப்பூர்.

ரமேஷ் வைத்யா said...

'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்'
'மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி'

Unknown said...

அண்ணா சூப்பர் :))

//நான் எந்த மெயில் அனுப்பினாலும் முடிவில் அளவில்லா அன்போடு.. கிருஷ்ணா’ என்று முடிப்பது வழக்கம்.//

எனக்கு மெயில் அனுப்பும் போதும் இத பார்த்து சிரிச்சேன்.. பட் நீங்க ஏதாவது நினைச்சிப்பீங்களோன்னு ஒன்னும் சொல்லல.. :))

Unknown said...

me the 20:)

ரமேஷ் வைத்யா said...

இந்த அவியலுக்குத் தொட்டுக்கக் கொஞ்சம் ஊறுகா குடுங்கப்பா! சூப்பர்.

கணினி தேசம் said...

//‘வாயை அளவா திறங்க போதும். நான் வெளில நின்னுதான் பல் பிடுங்கப் போறேன்’ //

நெசமாவே விழுந்து..விழுந்து சிரிக்க வெச்சுது!!!

நன்றி.

Athisha said...

ஷகீலாவை இருட்டடிப்பு செய்த மலையாள திரைப்பட உலகை கண்டித்து டுவெண்டி டுவெண்டி படத்தை நீங்கள் புறக்கணித்திருக்க வேண்டாமா?

சென்ஷி said...

/அதிஷா said...
ஷகீலாவை இருட்டடிப்பு செய்த மலையாள திரைப்பட உலகை கண்டித்து டுவெண்டி டுவெண்டி படத்தை நீங்கள் புறக்கணித்திருக்க வேண்டாமா?
//

அட.. நீங்க வேற அதிஷா.. ஷகிலா இருப்பாங்கன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்பி போனதுக்கு இப்படி ஆகிப்போச்சுன்னுதான் பரிசலே புலம்பிக்கிட்டு இருக்காரு :((

நீங்க வேற நொந்த மனசுல நொய்க்கஞ்சி காய்ச்சறீங்களே!

சென்ஷி said...

ஹைய்யா மீ த 25த் :)

பரிசல்காரன் said...

@ Cable Sankar

ஹி..ஹி..ஹி..

@ கோவி.கண்ணன்

நன்றி ஜி.

@ வேலன்

எழுதுங்க அண்ணாச்சி. நானும் இந்தப் படத்த வெச்சு, ஒரு காமெடி ரெடி பண்ணலாம்னு இருக்கேன்.

நன்றி கும்க்கி. ரொம்ப பிஸியா? கூப்பிடும்போதெல்லாம் பிஸின்னு வருது. கால்வெய்ட்டிங் ஆக்டிவா இல்லையா உங்க ஃபோன்ல?

பரிசல்காரன் said...

@ சென்ஷி

குத்துங்க எசமான், குத்துங்க.

@ நர்சிம்

//உங்களுக்கு அந்த அனானி பின்னூட்டம் வரலயா??//

நான் அனானி ஆப்ஷனைக் க்ளோஸ் பண்ணீட்டேனே... வாட்ஸ் த மேட்டர் பாஸ்???

Mahesh said...

உங்க சிக்னச்சர் படுற பாடு இருக்கே... ஒரே டமாசு போங்க...

அப்பறம் அந்த கடேசி ஜோக்குக... போனமுறை புத்தகக் கண்காட்சில விகடன் பிரசுரத்தோட மதன் ஜோக்ஸ், ராஜு ஜோக்ஸை ஞாபகப் படுத்தின.

பரிசல்காரன் said...

@ விக்கி

ஒனக்கு இருக்குடி ஒரு நாள் பூசை!

@ வால்பையன்

லொள்ளுய்யா உமக்கு!

நன்றி ராப்.

@ நாடோடி

கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.!!!

@ ஸ்ரீமதி

சிரிச்சியா? என்னப்பா இது? அவ்வ்வ்வ்வ்வ்! (நானென்ன நெனைக்கப்போறேன்? இது எதையும் தாங்கும் இதயம்!)

@ கிழஞ்செழியன்

இன்னும் ரெண்டு மூணு சொன்னீங்களேண்ணா?

// அதிஷா said...

ஷகீலாவை இருட்டடிப்பு செய்த மலையாள திரைப்பட உலகை கண்டித்து டுவெண்டி டுவெண்டி படத்தை நீங்கள் புறக்கணித்திருக்க வேண்டாமா//

ஷகீலாதான் இருட்டடிப்பு செய்வாங்க. (லைட்டை ஆஃப் பண்ணி) அவங்களை யாரும் இருட்டடிப்பு செய்ய முடியாது)

(ஆமா, தம்பி அதிஷா.. என்ன உருப்படியா எழுதினாலும் படிச்சுட்டு மட்டும்போறது, ஷகீலான்ன உடனே பின்னூட்டம் போடறது? கூ.கெ.கு!)

Mahesh said...

20-20 படம் நல்ல இருக்கும் போல இருக்கே...

அளவான ஆர்வத்தோடு.. மகேஷ்.

பரிசல்காரன் said...

@ மகேஷ்

நன்றி!

(கடேசில இருக்கறது சோக்கில்லீங்ண்ணா.. கவித..கவித..)

Mahesh said...

அப்பிடியா.... அட இது தெரியாம நான் சிரிச்சுப்புட்டனே :)

கார்க்கிபவா said...

அவியலலில்
அனைத்துமே
அருமை
அண்ணே!!!

அளவில்லா
அன்போடு
அருமை சகா கார்க்கி


இது கவிதையாகுமா??????????

வால்பையன் said...

//அவியலலில்
அனைத்துமே
அருமை
அண்ணே!!!

அளவில்லா
அன்போடு
அருமை சகா கார்க்கி


இது கவிதையாகுமா?????????? //


அ-வில் ஆரம்பித்திருப்பதால் அகவிதை ஆகும் வாய்புண்டு
பரவாயில்லையா?

அத்திரி said...

//தேங்கா மடையன், மாங்கா மடையும் இரண்டுமே புழக்கத்தில் இருந்ததாம். //

நல்ல அருமையான ஆராய்ச்சி.

எல்லா பாட்டுமே காப்பிதானா?" அடங்கொய்யாலே

பரிசல்காரன் said...

நன்றி கார்க்கி, வால் & அத்திரி!!!

கிரி said...

//வாயை அளவா திறங்க போதும். நான் வெளில நின்னுதான் பல் பிடுங்கப் போறேன்’//

ஹா ஹா ஹா

கே கே நீங்க பல் மருத்துவரிடம் சென்று இருக்கிறீர்களா? ஹி ஹி ஹி

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஏண்டா சிரிக்கிறாய் இவ்வளவு நேரமாய்
அவியலை ருசித்தது போதும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதை நல்லா இருக்குங்க..

..கும்மி மெயிலில் எல்லாம் என் பேரும் போட்டு வருது :( ,,, மெயில்ல பேரில்லாதவங்களுக்கு இது நல்ல காமெடிதான்.. :))

சிவக்குமரன் said...

/////அளவில்லா அட்டெண்டன்ஸோடு, அளவில்லா மப்போடு, மனமில்லா குசும்போடு, காலி வயிறோடு, அளவிலா ஆர்வத்தோடு, அளவில்லா அலுப்போடு, அளவில்லா அளவோடு அளவில்லா பியரோடு, அளவில்லா ஏழரையோடு, அளவில்லா துயரத்தோடு, அளவில்லா எதிர்பார்ப்புகளோடு அளவில்லா எச்சரிக்கையோடு, ஆப்புவைக்கும் அன்போடு., அளவான அளவோடு....////


கலக்கல் பரிசல்!!!