அந்தப் பிரபலம் தனது நண்பரை பிரபல இயக்குனர்கள், எழுத்தாளர்களெல்லாம் கலந்து கொள்ளும் ஒரு விழாவுக்கு அழைக்கிறார். நண்பருக்கு வர முடியாத சூழல். மறுக்கிறார். பிரபலம் வற்புறுத்துகிறார்.
நண்பர் தயக்கமாய் “வாழ்க்கைல இந்த சான்ஸ் கிடைக்காதுதான்..” என்றதும் சட்டெனச் சொல்கிறார் பிரபலம்
“இந்த சான்ஸ்னால வாழ்க்கையே கிடைக்கலாம் இல்லியா?”
யார் அந்தப் பிரபலம்? அது என்ன விழா?
----------------------
பென்சனர் கணனி, பன்மலர், ஜெயமாலா, கவிதா மண்டலம், இன்றைய கல்வி, செய்திமடல், தமிழாலயம், கவிதை உறவு, உதவிக்கரம், ஆட்டோக்காரர், தில்லை சுடர், குடிமக்கள் முரசு, வானமே எல்லை, தொழில் நுட்பத் தோட்டக்கலை, தமிழ்ப்பணி, இமயகீதம், தமிழ் மூவேந்தர் முரசு, கண்ணியம், இலக்கியப்பீடம், கனிமொழி, தமிழ்நானூறு, வளரும் தமிழ் உலகம், அமுதம், ஆளுமைச் சிற்பி, இளந்தமிழன், முகம்
இதெல்லாம் என்ன?
ஆனந்தவிகடன், குமுதம் மாதிரியான வார, மாத, மாதமிருமுறை இதழ்கள்!
எந்த நூலகத்திற்குப் போனாலும் இவற்றைப் பார்க்கலாம். இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா இவற்றை? (வேலன் அண்ணாச்சி – இந்தக் கேள்வி உங்களுக்கு இல்லை!)படித்தால் பிரபல பத்திரிகைகளை விட நல்முத்துக்கள் இதில் சிக்குவதுண்டு!
******************************
விகடன் அலுவலகத்தில் வலைப்பூ படிக்கிறார்கள் என்பது எல்லாரும் அறிந்ததே. வால்பையன் அதை உறுதிப்படுத்தி இருந்தார். மானாட மயிலாட டீமிலும் BLOG படிக்கிறார்களோ? ஏன் கேக்கறேன்னா... நான் ஒருமுறை அவியலில் இவ்வளவு சூப்பராக செட் போடும் கலைஞர்களை அறிமுகப்படுத்தினால் என்ன என்று எழுதியிருந்தேன். அது MM 1, அல்லது MM 2 என்று நினைக்கிறேன். ஞாயிறு ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் செட்டில் படம் வரைந்திருந்த ஓவியக் கலைஞர் சின்னத்தம்பியை அறிமுகப்படுத்தினார்கள்!
ரொம்ப ஓவரா சிந்திக்கறேனோ?
**************************
பெண்கள் ரோஜாப்பூவை தலையில் வைக்கும்போது தலைகீழாக வைத்திருந்தால் எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. என்னமோ, ‘உன் தலைல வந்து ஒக்கார வேண்டியதாப் போச்சே’ என்று அந்தப் பூ தலைகுனிந்திருப்பதாய் எனக்குத் தோன்றும். ஒரு சிலரே பூவை மேல் நோக்கிய வண்ணம் வைக்கிறார்கள். ஏன் இப்படி?
***************************
சிம்பு ஒரு நல்ல திறமைசாலிதான். ஆனால் டான்ஸ் ஆடச் சொன்னால் ஜிம்னாஸ்டிக் செய்வதுதான் ஏனென்று தெரியவில்லை. போதாத குறைக்கு அவரது அப்பாவின் காமெடி பேட்டிகளும் சேர்த்து அவரை காணாமல் போக்கிவிடுமோ என்று தோன்றுகிறது. எப்போ பார்த்தாலும் ‘இன்னிக்கும் நான் ஹீரோவா நடிச்சா கைதட்டி ரசிக்க கூட்டம் கூட்டமா வருவானுக சார்’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு பேட்டி தருகிறார். போதாக் குறைக்கு ‘ரஜினி, கமலை எல்லாம் ஏத்துக்கறீங்க? நான் அவங்களை விட வயசுல சின்னவன் சார்’ என்கிறார்.
இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!
********************************************
ஒருத்தன் ஆஃபீஸுக்கு லீவு லெட்டர் எழுதினானாம்.. ‘நாளை நான் விஷம் குடித்து சாக இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு....’
ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?
இன்னொரு ஜோக்..
மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”
அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.
அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.
”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”
**********************************
முதல் பத்தியில் சொன்ன அந்தப் பிரபலம் நர்சிம். (இதையே எம்ஜியார், கவிஞர் வாலின்னு எதுனா போடலாம்!) அந்த விழா சாரு நிவேதிதாவின் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா. மதன், இயக்குனர்கள் அமீர், சசிகுமார் என்று பலர் கலந்து கொள்ளும் அந்த விழா முடிந்து ‘தேநீர் விருந்து' நடக்குதாம்... நம்ம நர்சிம்மின் ஏற்பாட்டில்!!மேலதிக விபரங்களுக்கு சாருவின் இந்தப் பதிவைப் பாருங்கள்.
நர்சிம்.... எனக்கு ஒரு செட்டு பார்சல்! (புக்ஸ்ங்க!)
**************************************
ஏற்கனவே என்னுடைய ஃபாலோயர் லிஸ்டில் ஸ்வாமி ஓம்கார் என்றொரு பதிவர் இருக்கிறார். போய்ப் பார்த்தால் வயது 108, இருப்பிடம் ‘ஈஸ்வரனின் மனதில் புருவ மத்தியில்’ என்று அவரது ப்ரொஃபைலில் போடப்பட்டிருந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். (பதிவுகள் நல்ல தரம்!) இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஃபாலோயர்.. பார்த்தால் சாணியடி சித்தராம். வயது 84. மூலிகைப்பண்ணை வைத்து நடத்தி வருகிறாராம். இருப்பது தென்பொதிகையாம்.
ம்ம்..நடத்துங்க..நடத்துங்க...
--------------------------
2008 எனக்கு ஒரு முக்கியமான வருடம். வலைப்பூ ஆரம்பித்தது, பல சொல்லிக் கொள்ளும்படியான நண்பர்களைப் பெற்றது என்று மறக்க முடியாத வருடம். என்னை உயிப்பாய் வைத்திருக்கும் எழுத்துக்கும், என் இனிய உங்களுக்கும் என்றென்றும் நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!
(இந்தப் புத்தாண்டில் எந்தச் சபதமும் ஏற்க மாட்டோம் என்ற சபதம் ஏற்போம்! ஓக்கே?)
---------------------------------------------------
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
-கல்யாண்ஜி
அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து
-கல்யாண்ஜி
எத்தனையோ எழுதிவிட்டேன்
ஒரு முறையும் எழுத முடியவில்லை
உன் பெயரை.
எழுதப்போவது
உன் பெயரையென்று தெரிந்ததும்
தலை நிமிர்ந்து கொள்கிறது
என் பேனா..
எப்படி எழுத?
(கடைசி கவிதையை எழுதினது தபூ சங்கர் அல்ல.. பேரைச் சொன்னா திட்டுவீங்களோன்னு பயமா இருக்கு.... ஹி..ஹி..!)
57 comments:
ஆஹா
//“வாழ்க்கைல இந்த சான்ஸ் கிடைக்காதுதான்..” என்றதும் சட்டெனச் சொல்கிறார் பிரபலம்
“இந்த சான்ஸ்னால வாழ்க்கையே கிடைக்கலாம் இல்லியா?”//
ஐயோ பாவம்...
குஷி மும்தாஜ் மாதிரி படிக்கவும்
அவியல்லே ஒரு ஸ்பெஷல் தான்
இதுல்ல ஸ்பெஷல் அவியலா
பேஷ் பேஷ்
//இதெல்லாம் என்ன?//
படிப்போம்
//இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!//
அப்படியே இருந்தாலும், அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டுமே
//”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”//
அங்கு அறைய முடியுமா....
\\ரொம்ப ஓவரா சிந்திக்கறேனோ?\\
நல்லது தானே ...
\\பெண்கள் ரோஜாப்பூவை தலையில் வைக்கும்போது தலைகீழாக வைத்திருந்தால் எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. என்னமோ, ‘உன் தலைல வந்து ஒக்கார வேண்டியதாப் போச்சே’ என்று அந்தப் பூ தலைகுனிந்திருப்பதாய் எனக்குத் தோன்றும். ஒரு சிலரே பூவை மேல் நோக்கிய வண்ணம் வைக்கிறார்கள். ஏன் இப்படி?\\
Male நோக்குகிறான் என்பதாலோ ...
\\(இந்தப் புத்தாண்டில் எந்தச் சபதமும் ஏற்க மாட்டோம் என்ற சபதம் ஏற்போம்! ஓக்கே?)\\
அடடா நம்மாளு ...
//‘இன்னிக்கும் நான் ஹீரோவா நடிச்சா கைதட்டி ரசிக்க கூட்டம் கூட்டமா வருவானுக சார்’ //
லக்கி கூட ராஜேந்தரை பற்றி அப்படித்தான் சொன்னார்.
உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !
- கோவி அண்ட் பேமிலி :)
ஸ்பெஷல் அவியல் நல்லா இருந்தது!
இருந்தாலும் தலைப்புல வடமொழி எழுத்துக்கள் அவசியமா?
சிறப்பு அவியல்னு போடலாமே!
//பிரபலம்ன்ற வார்த்தைக்கு கை இருந்தா உங்கள அடிக்கும் பரிசல்..
நல்ல சுவை.. அந்த அலுவலக விடுமுறைக்கான காரணம் கலக்கல் தல..//
‘இன்னிக்கும் நான் ஹீரோவா நடிச்சா கைதட்டி ரசிக்க கூட்டம் கூட்டமா வருவானுக சார்’
இதை கூட ஒத்துக்கலாம் ஆனால் தன் மகன் சிம்பு நல்லவன் என்று நம்புவதை (அனந்த விகடன்) தான் ஒத்துகொள்ள முடியவில்லை.
வழக்கம் போல சுவையோ சுவை...
அந்த கடேசி கவிதை உங்களோடதேதானா? :)
அப்பறம்.... நம்ம பணிமனைக்கு நீங்க வந்து பல மாதங்கள் ஆச்சுன்னு நினைவு படுத்துகிறேன் !! :(((((
//(இந்தப் புத்தாண்டில் எந்தச் சபதமும் ஏற்க மாட்டோம் என்ற சபதம் ஏற்போம்! ஓக்கே?/
இதுல இருந்து நீங்க நம்ம கடைப் பக்கம் நேத்து வரலைன்னு தெரியுது..
அவியல் ..திருப்தி
அவியல் சுவையாக இருக்கு.
நீங்க வச்ச அவியல்ல கடைசி கரண்டி ரொம்ப நல்லா இருந்துச்சு. (நீங்க சொல்லாமலேயே சமையல்கார் பேரு தெரியுதே)
புத்தாண்டு வாழ்த்துகள்
@ நாமக்கல் சிபி
கோயமுத்தூர் வந்து தங்கீட்டுப் போய்ட்டு ஒரு ஃபோன் கூட என்கூடப் பேசாம போய்ட்டீங்க.. நான் உங்க கூட டூ!
அந்த பிரபலம் யாருன்னு சொன்னிங்க ஆனாக்க அந்த நண்பர் யாருன்னு சொல்லலியே!. weak end புதிர் மாதிரி year end புதிர் போடலாமே
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
//இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!//
அப்படியே இருந்தாலும், அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டுமே
...repeat!
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
அருமையான அவியல்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வழக்கம் போல எல்லாமோ கலக்கல்.. கிளைமாக்ஸ் மொக்கைக்கவிதை உட்பட.. (புத்தாண்டு சபத ஜோக்தான் அரதப்பழசுங்கிறேன் நான்).. வாழ்த்துகள் பரிசல்.!
ஸாரி எல்லாமோ இல்லை, எல்லாமே.!
அவியல் சூப்பர் பரிசலாரே....!
/பென்சனர் கணனி, பன்மலர், ஜெயமாலா, கவிதா மண்டலம், இன்றைய கல்வி, செய்திமடல், தமிழாலயம், கவிதை உறவு, உதவிக்கரம், ஆட்டோக்காரர், தில்லை சுடர், குடிமக்கள் முரசு, வானமே எல்லை, தொழில் நுட்பத் தோட்டக்கலை, தமிழ்ப்பணி, இமயகீதம், தமிழ் மூவேந்தர் முரசு, கண்ணியம், இலக்கியப்பீடம், கனிமொழி, தமிழ்நானூறு, வளரும் தமிழ் உலகம், அமுதம், ஆளுமைச் சிற்பி, இளந்தமிழன், முகம்/
அண்ணே...இம்ம்புட்டு புக் படிக்கிறியலா நீங்க????
/எந்த நூலகத்திற்குப் போனாலும் இவற்றைப் பார்க்கலாம்./
அண்ணே...எங்க ஊர் நூலகத்தில் கூடவா????
/ரொம்ப ஓவரா சிந்திக்கறேனோ?/
ரொம்ப இல்லைண்ணே....ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப..:)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)
/பெண்கள் ரோஜாப்பூவை தலையில் வைக்கும்போது தலைகீழாக வைத்திருந்தால் எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. என்னமோ, ‘உன் தலைல வந்து ஒக்கார வேண்டியதாப் போச்சே’ என்று அந்தப் பூ தலைகுனிந்திருப்பதாய் எனக்குத் தோன்றும். ஒரு சிலரே பூவை மேல் நோக்கிய வண்ணம் வைக்கிறார்கள். ஏன் இப்படி?/
சாணியடி சித்தர் மேல சத்தியமா எனக்கு தெரியாது அண்ணே......:)
/இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!/
பேசாம நீங்க அவருக்கு நண்பரா ஆகிடுங்களேன்...:)
/ஒருத்தன் ஆஃபீஸுக்கு லீவு லெட்டர் எழுதினானாம்.. ‘நாளை நான் விஷம் குடித்து சாக இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு....’
ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?
இன்னொரு ஜோக்..
மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”
அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.
அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.
”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”/
ரொம்ப பழைய ஜோக்...:)
/ஏற்கனவே என்னுடைய ஃபாலோயர் லிஸ்டில் ஸ்வாமி ஓம்கார் என்றொரு பதிவர் இருக்கிறார். போய்ப் பார்த்தால் வயது 108, இருப்பிடம் ‘ஈஸ்வரனின் மனதில் புருவ மத்தியில்’ என்று அவரது ப்ரொஃபைலில் போடப்பட்டிருந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். (பதிவுகள் நல்ல தரம்!) இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஃபாலோயர்.. பார்த்தால் சாணியடி சித்தராம். வயது 84. மூலிகைப்பண்ணை வைத்து நடத்தி வருகிறாராம். இருப்பது தென்பொதிகையாம்.
ம்ம்..நடத்துங்க..நடத்துங்க.../
ம்ம்...உங்க எழுத்துக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க போல....கலக்குறீங்க...:)
கடைசி கவிதை நச்சுன்னு இருக்கு...::)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிசலாரே...!
புத்தாண்டு வாழ்த்துகள். பரிசல்
யோவ் மப்புல என்ன வாழ்க்கை கிடைக்கும் ? குச்சுட்டு உச்சா உட்டுட்டு பூடுவாய்ங்க...அடுத்த நாள் ஹூ ஆர் யூ ன்னு கேப்பாய்ங்க :))
கலக்கலான அவியல் 2008...
மருதமலையில் நீங்கள் வாங்கி கொடுத்த பொரிக்கு நன்றி...
2009ல் எங்கேயாவது உங்களை சந்தித்து பானி பூரி வாங்கிக்கொடுக்கிறேன்...
அப்புறம்...சொல்ல மறந்துட்டேன்...
வரவர உங்கள் பதிவுகள் காமெடி, செண்டிமெண்ட், பைட், நட்பு, காதல் எல்லாம் சேர்ந்து குமுதம் இதழ், பேரரசு படம் அந்த மாதிரி இருக்கு...
//செந்தழல் ரவி said...
யோவ் மப்புல என்ன வாழ்க்கை கிடைக்கும் ? குச்சுட்டு உச்சா உட்டுட்டு பூடுவாய்ங்க...அடுத்த நாள் ஹூ ஆர் யூ ன்னு கேப்பாய்ங்க :))//
ஒண்ணியுமே பிரியல தல...
(ஒன்றும் புரியவில்லை என்று செப்பினோம் என்றறிக!)
மருதமலையில் நீங்கள் வாங்கி கொடுத்த பொரிக்கு நன்றி...
2009ல் எங்கேயாவது உங்களை சந்தித்து பானி பூரி வாங்கிக்கொடுக்கிறேன்...//
அப்படியெல்லாம் கடனை அடைத்து விட முடியுமா என்ன!
//வரவர உங்கள் பதிவுகள் காமெடி, செண்டிமெண்ட், பைட், நட்பு, காதல் எல்லாம் சேர்ந்து குமுதம் இதழ், பேரரசு படம் அந்த மாதிரி இருக்கு.//
இதுக்கு நேரடியாவே திட்டியிருக்கலாம். குமுதம் ஓக்கே. பேரரசுன்னுட்டீங்களே.... அவ்வ்வ்வ்..
“தி ரெய்சிங் சன், கடலார், , தாகூர் கல்விச் செய்தி, திரிகமுகம், தெலுங்கர் கீதம், அற்புத ஆலயமணி, எங்களுக்கு மகிழ்ச்சி, சிவ ஒளி, ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர், கவலைப்படாதே, நவசக்தி விஜயம், நல்வழி, நித்யானந்தம், ராமராஜ்யம், பாபாஜி சித்தர் ஆன்மிகம், கருதவேலி, ஞானவிஜயம், திராவிட ராணி, பண்ணாரி அம்மன் செய்திமலர், பாஞ்சஜன்யம், மலர்ந்த ஜீவிதம், மாத்ருவாணி, லேடிஸ் ஸ்பெஷல், வேதாந்த கேசரி, ஜங்கம இதழ், எங்கள் மக்கள் தலைவன்..”
பரிசல் இவைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
//இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை?//
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்?
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
திரு பரிசல்,
உங்கள் அவியலில் நானும் காய்கறியாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
//////////////////////////
ஏற்கனவே என்னுடைய ஃபாலோயர் லிஸ்டில் ஸ்வாமி ஓம்கார் என்றொரு பதிவர் இருக்கிறார். போய்ப் பார்த்தால் வயது 108, இருப்பிடம் ‘ஈஸ்வரனின் மனதில் புருவ மத்தியில்’ என்று அவரது ப்ரொஃபைலில் போடப்பட்டிருந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். (பதிவுகள் நல்ல தரம்!)/////////
கடைசி வரிகள் என்னை மேலும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக செய்தது.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(happy tamil new year- என பலர் என்னிடம் சொல்லுவதால், ஆங்கில புத்தாண்டை தமிழில் சொல்லுகிறேன்.- நீங்க எப்படி பரிசல் ??)
//இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!//
நல்ல கேள்வி
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
//எத்தனையோ எழுதிவிட்டேன்
ஒரு முறையும் எழுத முடியவில்லை
உன் பெயரை.//
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அவியல் சுவை.!
புத்தாண்டிலும்..அவியலோடு நிற்காமல்,பல "வலைப்பூ" விருந்து படைப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம் :-)))
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பரிசல்,
மசாலா இல்லாத அவியல் சூப்பர்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அளவில்லா அன்போடு ;)
நடராசன்
உங்க வலை நல்லாயிருக்கு..
ரசிப்பு தன்மை அதிகம் போலும்.
ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகம் எப்போதும் சந்தோஷமே என்பார் என் குரு ஒஷோ...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சூர்யா
butterflysurya.blogspot.com
It looks pretty... congrats.. you could add somemore information about interesting websites too..
//இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!//
இருந்தது, பின்னாளில் அது துரத்தப்பட்டது
//(கடைசி கவிதையை எழுதினது தபூ சங்கர் அல்ல.. பேரைச் சொன்னா திட்டுவீங்களோன்னு பயமா இருக்கு.//
கார்க்கி சரியா!!
சூப்பர் அவியல்...
அதுவும்
அந்தக் கடைசிக் கவிதை
சூப்பர்யா!
(அட...நெசமாத்தான் சொல்றேன் கவிஞரே..!)
Post a Comment