Monday, December 15, 2008

அவியல் - 15.12.08

மக்கள் தொலைக்காட்சியின் ‘புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சி தவறாமல் நான் பார்க்க நினைக்கும் ஒரு நிகழ்ச்சி. நாட்டு நடப்பை, வெகு ஜாலியான இரு நண்பர்களின் பேச்சில் எள்ளலும், எகத்தாளமுமாக பேசி ‘சரிதான்ல இவங்க சொல்றது’ என்று நினைக்க வைப்பதில் இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வார நிகழ்ச்சியில் பத்திரிகைகள் குறித்தும், பத்திரிகை தர்மம் குறித்தும் பேசினார்கள். அதில் கேட்ட இரண்டு நகைச்சுவைகள்..

பக்கிரிசாமி என்பவர் மரணமடைந்து விட்டார். ஒரு பத்திரிகையில் தவறாக குருசாமி காலமானார் என்று எழுதிவிட்டார்கள். குருசாமி கடுங்கோபத்தோடு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று நியாயம் கேட்கிறார். ‘மன்னிச்சுக்கோங்க.. நாளைக்கே மறுப்பு போட்டுடறோம். தப்பாப் போட்டதுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கறோம்’ என்கிறார்கள்.

அடுத்த நாள் மறுப்பு வெளிவருகிறது.. இப்படி..

“காலமானவர் பக்கிரிசாமி. குருசாமி என்று தவறாக அச்சாகி விட்டது. குருசாமி உயிருடன்தான் உள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”

இன்னொன்று..

ஒரு பத்திரிகையை இரு ஆசாமிகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..

கவுண்டமணி:

‘சேலத்தில் நகைக்கடை உடைத்து துணிகர கொள்ளை.. மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு’

பேப்பரைத் திருப்பி, “கோவையில் ஒடும் ரயிலில் லேப்டாப் திருடிய மர்ம ஆசாமியின் அடையாளங்கள் சிக்கின”

அடுத்த பக்கத்தைத் திருப்பி.. “மும்பையில் கைவரியை காட்டிய மர்ம ஆசாமியைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்தது”

செந்தில் குறுக்கிட்டு கேட்கறாரு.. “அது எப்படிண்ணே.. மர்ம ஆசாமிங்கற ஒரு ஆளு, ஒரே நாள்ல கோவை, மும்பை, சேலம்ன்னு போய் கைவரிசையைக் காட்டறான்?”

**********************
மலேசிய மந்திரி ஒருத்தரது பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் தான் தனது கனவுத் திட்டம் என்று சொல்லியிருந்தார். மலேசியா அரசுத் துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறார்களாம்.

'இங்கயும் இப்படி மாறினா நல்லாயிருக்கும்ல?; என்று இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

"கஷ்டம். ஏன்னா லஞ்சம் நோட்டாத்தானே குடுக்க முடியும். அது பேப்பர்தானே? அப்புறம் எப்படி பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் சத்தியமாகும்?" என்று கேட்டார் ஒருவர்.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்! (நம்ம இல்ல, லஞ்சம் குடுக்க/வாங்கறவங்க!)

*********************************

சமீபத்தில் ஆக்ஸிடெண்டலாக ஒரு இன்சிடெண்டைப் பார்க்கநேர்ந்தது. அந்த இன்சிடெண்ட் ஒரு ஆக்ஸிடெண்ட்! சிறிய விபத்துதான். ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் தனது பைக்கால், மொபட்டில் வந்துகொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்கவர் மீது மோதிவிட்டார். இருவருமே சிதறி விழுந்துவிட்டனர். உடனேயே கூடிய கூட்டத்தில் அந்த இளைஞனுக்கு ஆதரவாய் சிலர் அந்தப் பெரியவரை அடிக்காத குறையாக திட்ட ஆரம்பிக்க, அந்தப் பெரியவருக்கு ஆதரவாய்ப் பேசிய சிலரோ, இளைஞனை அடித்தே விட்டனர்!

என் கேள்வி இதுதான். அந்த இளைஞன் மீது தவறில்லை என்று நினைத்தவர்கள் அந்த இளைஞனை உடனே தூக்கி முதலுதவி செய்ய, அந்தப் பெரியவருக்கு
ஆதரவாய் வந்த சிலர் அவரை எழுப்பி தேவையான உதவிகள் செய்ய என்று இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

மனிதம் குறைந்துவிட்டதற்கு இது போன்ற சம்பவங்கள்தான் சாட்சியாய் நிற்கின்றன!

********************

நட்பில் ஆண்-ஆண் நட்பு, ஆண்-பெண் நட்பு, பெண்-பெண் நட்பு இந்த மூன்றில் எது மிக ஆழமானது? எப்படியும் இதில் ஆண்-பெண் நட்பு அடிபட்டுப் போகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பல ஆண்-பெண் நட்பு பிரிந்து போய்விடுகிறது. ஆணும் ஆணும் நட்பு சர்வசாதாரணமானதுதான். அடிக்கடி பேசிக் கொண்டேயிருப்போம்! ஆனால், நீங்கள் மணமானவராயிருந்தால் உங்கள் மனைவி அவரது நண்பிக்குப் பேசும்போது கவனித்துப் பாருங்கள், எப்போதாவது பேசினாலும் அளவுகடந்த அன்னியோன்னியம் அதில் ஆண்- ஆண் நட்பைவிட அதிகமாக இருக்கும்.

என் ஓட்டு பெண்-பெண் நட்புக்குத்தான்!

வேண்டுமென்றால் ஏ.சி.நீல்சனை வைத்து சர்வே எடுப்போமா? எந்த சர்வே எடுத்தாலும் ரொம்பவும் கூலாக முடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள். அவர்கள்தான் 'ஏ.சி' நீல்சன் ஆச்சே!

*********************

நான் சிறுகதை எழுதுவது எப்படி என்றொரு போஸ்ட் போட்டிருந்தேன். அதிலுள்ள சம்பவத்தை வைத்து, மிகச் சிறிய, அதே சமயம் சுவாரஸ்யமான முடிவில் கதை எழுதிய இவருக்கு என நன்றிகள்! ரொம்பப் பிடிச்சிருக்கு சாரே! நிச்சயம் சுஜாதா உங்களை.... பாராட்டியிருப்பாரு!

*********************

எனது மாமன் மகன் கிரேசிகிரியைப் பற்றி அடிக்கடி வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறேன். எந்தச் சூழலிலும் ஒரு சின்ன வார்த்தைப் பொறியில் கலகலக்க வைத்துவிடுவான்.

கடந்த வாரம் அவனது தந்தையார் காலமாகிவிட்டார். நல்ல மனிதர். நிறைந்த வயதில் மரணம். நேற்று பார்த்தபோது, கிரியின் அண்ணா தனது சில பூஜைச் சடங்குகளைச் செய்து கொண்டிருக்க, “அப்பாவுக்கு காரியங்களை நல்ல சிரத்தையாகச் செய்கிறாய்” என்று ஒரு பெரியவர் பாராட்டினார். உடனே சொன்னான் கிரி.. “பார்க்கறதுக்கு அப்பாதான் இல்ல”

எல்லாரும் சட்டென்று சிரிக்க, கிரியும் சிரித்துக் கொண்டிருந்தான்.. கண்ணில் நீருடன்.

***

31 comments:

கார்க்கிபவா said...

நல்லா சிரிச்சிட்டே படிச்சிட்டு இருந்தேன்.. கடைசி விஷயம் மனதை பாரமாக்கிவிட்டது.. இருந்தும் நல்லாயிருந்தது.. ஏ.சி.நீல்சன் மேட்டர்தான் எனக்கு ரொம்ப புடிச்சது.. அப்புறம் பெண்‍-பெண் நட்பு.. எனக்கு உடன்பாடில்லை.. பெண்கள் எப்போதும் வேறு ஒரு ஒரு பெண்ணை தன் நெருங்கிய வட்டத்துக்குள் வர விட மாட்டார்கள்.. ஆனால் ஆண்கள் சகலமும் ஷேர் செய்து கொள்வார்கள்..

anujanya said...

//குருசாமி உயிருடன்தான் உள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”// ஹா ஹா

//உங்கள் மனைவி அவரது நண்பிக்குப் பேசும்போது கவனித்துப் பாருங்கள், எப்போதாவது பேசினாலும் அளவுகடந்த அன்னியோன்னியம் அதில் ஆண்- ஆண் நட்பைவிட அதிகமாக இருக்கும்.

என் ஓட்டு பெண்-பெண் நட்புக்குத்தான்!// கூர்மையான அவதானிப்பு கே.கே. ஒத்துக்கொள்ள வேண்டும்.

சங்கர் அழகாக எழுதி இருக்கிறார். வாழ்த்துக்கள். 'மின்னல்' கூட நீங்கள் துவக்கி வைத்த சங்கிலியில் ஒரு கதை எழுதி இருக்கிறார்.

அவியல் வழமை - மணம் மற்றும் சுவையில். காரம் கொஞ்சம் கூட இருக்கலாம். :))

அனுஜன்யா

Anonymous said...

//குருசாமி உயிருடன்தான் உள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்//

இதுக்கு அவரு பேசாமலே இருந்திருக்கலாம்.

//சமீபத்தில் ஆக்ஸிடெண்டலாக ஒரு இன்சிடெண்டைப் பார்க்கநேர்ந்தது. அந்த இன்சிடெண்ட் ஒரு ஆக்ஸிடெண்ட்!//

வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் ஞாபகம் வந்தது.

pudugaithendral said...

மலேசியா அரசுத் துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறார்களாம்.

'இங்கயும் இப்படி மாறினா நல்லாயிருக்கும்ல?; என்று இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தோம்.//

:))உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுங்கோ.

என் தம்பியிடம் அப்பாவுக்கு கணிணி வாங்கிக்கொடுக்கச் சொன்னேன்.

"வாங்கலாம் அக்கா! ஆனா அதை ஆன் செய்து பார்க்க நம்ம் ஊருல கரண்ட் எங்க இருக்குன்னான்"

:((

சும்மாவே நம்ம அரசு இயந்திரம் ஸ்லோ. இதுல கணிணிமயமாக்கினா ,"கரண்ட் இல்லிங்க! இருக்கறப்பவாங்கன்னு"
இன்னும் நிறைய தடவை அலையவிடுவாங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கஷ்டம். ஏன்னா லஞ்சம் நோட்டாத்தானே குடுக்க முடியும். அது பேப்பர்தானே? அப்புறம் எப்படி பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் சத்தியமாகும்?" என்று கேட்டார் ஒருவர்.//ஏண்ணே சிவாஜி படம் பார்த்தீங்கள்ள....

அதுக்கான வழியெல்லாம் சொல்லியிருக்காங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“பார்க்கறதுக்கு அப்பாதான் இல்ல”//அவரோட ட்ரெயினிங்குதானா உங்களுக்கு.......

narsim said...

//மனிதம் குறைந்துவிட்டதற்கு இது போன்ற சம்பவங்கள்தான் சாட்சியாய் நிற்கின்றன!
//

எதார்த்தமான வார்த்தைகளில் எதார்த்தத்தை சொல்லியிருக்கிறீர்கள்!!!

Cable சங்கர் said...

நன்றி பரிசல்..

ஆட்காட்டி said...

ஒரு முறை போட்டோவ மாத்தச் சொன்னன். இப்ப தூக்கச் சொல்லுறன்.
காலமும் நாடும் ரொம்பவே கெட்டுப் போச்சுது. சீக்கிரம்.

பரிசல்காரன் said...

நன்றி எனும்

பின்னூட்ட சோம்பேறித்தனம்!

சின்னப் பையன் said...

உள்ளேன் ஐயா!!!
ஏ தில் மாங்கே மோர்!!!

Mahesh said...

"மனிதம்" பற்றிய கருத்து... என்ன சொல்ல?

அப்பறம் இந்த "புதிய கோணங்கி" நம்ம அப்துல்லாவோட ரூம் மேட்டாமே? அப்பிடியா??

Thamira said...

ரசித்தேன் பரிசல்.!

இராம்/Raam said...

அவியல் போட ரொம்ப மெனக்கெடுறிங்க போலே... :) உண்மையிலே நல்லாயிருக்கு... :)

- இரவீ - said...

மிக அருமையான பதிவு, பாரமான முடிவு ...

ரவி said...

பின்னூட்டத்தில் "போஸ்ட் கமெண்ட்" க்ளிக் செய்யும்வரை பெயர் தெரியமாட்டேங்குது...

நான் ரீசண்டாக தான் பிக்ஸ் செய்தேன்..

நீங்களும் பிக்ஸ் செய்ய முயலவும்...!!!

பெருசு said...

பரிசலு
என்னங்க கம்பெனிலே வெடி நைட்டா,

காலைலே மூணூ மணிக்கு கமெண்டு
போட்டுட்டு இருக்கீங்களே.

Kumky said...

நல்லா சிரிச்சிட்டே படிச்சிட்டு இருந்தேன்.. கடைசி விஷயம் மனதை பாரமாக்கிவிட்டது.. இருந்தும் நல்லாயிருந்தது.. ஏ.சி.நீல்சன் மேட்டர்தான் எனக்கு ரொம்ப புடிச்சது.. அப்புறம் பெண்‍-பெண் நட்பு.. எனக்கு உடன்பாடில்லை.. பெண்கள் எப்போதும் வேறு ஒரு ஒரு பெண்ணை தன் நெருங்கிய வட்டத்துக்குள் வர விட மாட்டார்கள்.. ஆனால் ஆண்கள் சகலமும் ஷேர் செய்து கொள்வார்கள்..

நானும் அப்படியே.......

அத்திரி said...

படித்து முடித்தவுடன் மனம் கனமானது. கடைசியில்.

தமிழ் உதயன் said...

திரு. பரிசில்காரன் அவர்களுக்கு,

முதலில் என்னை மன்னிக்கவும், ஏன் என்றல்.. எனக்கும் ஏன் நண்பனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு விவாதத்தில் இங்கு தமிழ்மணத்தில் எழுதப்படும் வெகுஜன விசயங்களில் நூறு சதவிதம் உண்மை மட்டும் தான் என்று வாதம் செய்தான். அது இல்லை கொஞ்சம்மேனும் கற்பனை உண்டு என்று நான் சொன்னேன். அதை நிருபிக்க அன்று நீங்கள் எழுதிய பதிவு வசமாக சிக்கயது... நீங்கள் எனக்கு பதில் அனுப்பிய பின்னுட்டத்தில் 25 சதவிதம் கற்பனை என்று சொன்னதற்கு நன்றி.

மற்றபடி என்னை மீண்டும் மன்னிக்க கேட்டு கொள்கிறேன்.

என்னிடம் அந்த புத்தகம் இல்லை ஆனால் சுஜாதா எழுதிய 60 புதினங்களும் மற்ற ஒரு 100 வேறு எழுத்தாளர்கள் புத்தகங்களும் உள்ளது. வேண்டுமானால் வாருங்களேன்
ஒரு மாலை நேர தேநீர் விருந்துக்கு? நானும் திருப்பூர்தான் பேசலாம்.

நன்றி

தமிழ் உதயன்.

ARV Loshan said...

யதார்த்த சம்பவங்களிலேயே எத்தனை திருப்பங்கள்...

நானும் கார்க்கி போலவே உங்களோடு இந்த நட்பு விஷயத்தில் முரண்படுகிறேன்..

ஆண்-ஆண் நட்பு தான் எதையும் தாங்கக் கூடியது.. (வேற வழி.. ;))

பெண்-பெண் நட்பில் உண்மை,இயல்பு இருப்பதில்லை..

நீல்சன் கடி ரசித்தேன்..

கடைசி கிரி விஷயம், கொஞ்சம் கலங்க வைத்து விட்டது..

நம்ம அலுவலகத்திலையும் paperless வேலை செய்யப்போய் எல்லாரும் நாள் கணக்கில் நெட்டில் விழுந்து கிடக்கிறோம்.. ;)

பரிசல்காரன் said...

// தமிழ் உதயன் said...

திரு. பரிசில்காரன் அவர்களுக்கு,

முதலில் என்னை மன்னிக்கவும், ஏன் என்றல்.. எனக்கும் ஏன் நண்பனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு விவாதத்தில் இங்கு தமிழ்மணத்தில் எழுதப்படும் வெகுஜன விசயங்களில் நூறு சதவிதம் உண்மை மட்டும் தான் என்று வாதம் செய்தான். அது இல்லை கொஞ்சம்மேனும் கற்பனை உண்டு என்று நான் சொன்னேன். அதை நிருபிக்க அன்று நீங்கள் எழுதிய பதிவு வசமாக சிக்கயது... நீங்கள் எனக்கு பதில் அனுப்பிய பின்னுட்டத்தில் 25 சதவிதம் கற்பனை என்று சொன்னதற்கு நன்றி.

மற்றபடி என்னை மீண்டும் மன்னிக்க கேட்டு கொள்கிறேன்.

என்னிடம் அந்த புத்தகம் இல்லை ஆனால் சுஜாதா எழுதிய 60 புதினங்களும் மற்ற ஒரு 100 வேறு எழுத்தாளர்கள் புத்தகங்களும் உள்ளது. வேண்டுமானால் வாருங்களேன்
ஒரு மாலை நேர தேநீர் விருந்துக்கு? நானும் திருப்பூர்தான் பேசலாம்.

நன்றி

தமிழ் உதயன்./

மன்னிப்பு... எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை!

ஏன்னா, மன்னிக்கற அளவு நான் பெரிய மனுஷனில்ல என்பதால்!

எனக்கு ஒரு மெயிலிடுங்களேன். (kbkk007@gmail.com) சந்திப்போம். புத்தகங்களை, ஆட்டோவில் போட்டு கடத்திக் கொண்டுவரச் சம்மதம்!

Busy said...

படித்து முடித்தவுடன் மனம் கனமானது. கடைசியில்.

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏ.சி.நில்சன் கருத்துக்கணிப்பா? நெறைய செலவாகுமே:):):)

rapp said...

me the 25TH:):):)

சங்கணேசன் said...

//
// தமிழ் உதயன் said...

திரு. பரிசில்காரன் அவர்களுக்கு,

முதலில் என்னை மன்னிக்கவும், ஏன் என்றல்.. எனக்கும் ஏன் நண்பனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு விவாதத்தில் இங்கு தமிழ்மணத்தில் எழுதப்படும் வெகுஜன விசயங்களில் நூறு சதவிதம் உண்மை மட்டும் தான் என்று வாதம் செய்தான். அது இல்லை கொஞ்சம்மேனும் கற்பனை உண்டு என்று நான் சொன்னேன். அதை நிருபிக்க அன்று நீங்கள் எழுதிய பதிவு வசமாக சிக்கயது... நீங்கள் எனக்கு பதில் அனுப்பிய பின்னுட்டத்தில் 25 சதவிதம் கற்பனை என்று சொன்னதற்கு நன்றி.

மற்றபடி என்னை மீண்டும் மன்னிக்க கேட்டு கொள்கிறேன்.

என்னிடம் அந்த புத்தகம் இல்லை ஆனால் சுஜாதா எழுதிய 60 புதினங்களும் மற்ற ஒரு 100 வேறு எழுத்தாளர்கள் புத்தகங்களும் உள்ளது. வேண்டுமானால் வாருங்களேன்
ஒரு மாலை நேர தேநீர் விருந்துக்கு? நானும் திருப்பூர்தான் பேசலாம்.

நன்றி

தமிழ் உதயன்./

மன்னிப்பு... எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை!

ஏன்னா, மன்னிக்கற அளவு நான் பெரிய மனுஷனில்ல என்பதால்!

எனக்கு ஒரு மெயிலிடுங்களேன். (kbkk007@gmail.com) சந்திப்போம். புத்தகங்களை, ஆட்டோவில் போட்டு கடத்திக் கொண்டுவரச் சம்மதம்!
//

எனக்குத் தெரியாம எவ்வளவு மேட்டர் போயிட்டிருக்கு பாத்தியா...வச்சுக்கிறேன்.. நீங்க சந்திக்கிறதாயிருந்தா அது என்முன்னாடிதான் ஓகேயா???.ஓகே.

வம்புடன்
சங்கணேசன்

தமிழ் உதயன் said...
This comment has been removed by the author.

பரிசில்கரரே,

வணக்கம், நம்முடைய சந்திப்பு நடக்கும் முன்னால் நிறைய பேருக்கு சொல்லி அதுகுறித்து அவர்களின் கருத்து கேட்க வேண்டும் போல உள்ளது. எப்படியாகினும் நாம் சந்தித்தே தீருவோம்... நான் இன்று இரவு பெங்களுரு சென்று சண்டே காலையில் வருகிறேன்.. நீங்களும் முடிந்தால் entprca@yahoo.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்.

நன்றி
தமிழ் உதயன்

Poornima Saravana kumar said...

நன்றாக சிரித்து மகிழ்ந்தேன். நன்றி..

A N A N T H E N said...

தலைப்பை "அறிவியல்"ன்னு தவறா படிச்சிட்டேனுங்க

பெசொவி said...

//“அப்பாவுக்கு காரியங்களை நல்ல சிரத்தையாகச் செய்கிறாய்” என்று ஒரு பெரியவர் பாராட்டினார். உடனே சொன்னான் கிரி.. “பார்க்கறதுக்கு அப்பாதான் இல்ல”

எல்லாரும் சட்டென்று சிரிக்க, கிரியும் சிரித்துக் கொண்டிருந்தான்.. கண்ணில் நீருடன்.//
நெகிழ வைத்த நகைச்சுவை. (லேட்டாப் போடறேன்னு நினைக்காதீங்க, இன்னிக்குதான் உங்க பதிவுகளை படிக்கிறேன்)