Saturday, December 6, 2008

வீக் எண்ட் புதிர்கள் - 06.12.08
1) பதிவர்கள் குறித்த கேள்விகள்....


a) இவர் பெயரை திருப்பிப் போட்டால் என்னா? நேராய்ச் சொன்னால் சுத்தமான நெடில்.

b) இவர் பெயரின் கடைசி எழுத்தில் ஒரு நல்ல படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது!

c) நல்லது... கர்ணனாக சிவாஜி நடித்ததும்!

-இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓரெழுத்து எடுத்து இந்தப் பதிவரைக் கண்டுபிடியுங்க பாஸ்!

d) முதல் + கடைசி எழுத்து.. ம்ம்ம்... ஏதாவது சாப்பிடணுமே..

நடு எழுத்து எழுத உதவும்! கண்ணிலும் எழுதலாம்.


e) முதல் + கடைசி எழுத்து = வடஇந்திய யார்?
இரண்டாவது + கடைசி எழுத்து = வெற்றி
மூன்றாவது + கடைசி எழுத்து = தீவிரவாதிகளிடமும் இருந்தது, நம்ம படைவீரர்களிடமும் இருந்தது!


f) முதல்+ கடைசி எழுத்து = கொஞ்சம் நீட்டிச் சொன்னால் ஆங்கிலநிலா.

இரண்டாவது + கடைசி எழுத்து = லிங்குசாமிக்கும், பி.டி.உஷாவுக்கும் பிடிக்கும்!

இதற்கு முன்னவருக்கும், இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.


பதிவர்கள் குறித்த மேலுள்ள ஆறு கேள்விக்கும் பொதுவான ஒரு க்ளூ... முதல் கேள்வி, இரண்டெழுத்துப் பதிவர், இரண்டாவது கேள்வி மூன்றெழுத்துப் பதிவர்.. மூன்றாவது – நான்கெழுத்து........ இப்படியே தொடருங்கள்..

என்ன ஈஸீயாய்டுச்சா இப்போ?


2) (அ) உங்களுக்குச் சொந்தமானது, உங்களை விட அடுத்தவர்களே அதிகம் பயன்படுத்துவது எது?

(ஆ) யாருக்காக உபயோகப் படுத்தப் படுகிறதோ, அவர்கள் வாங்கமுடியாது. அது என்ன?


3) எட்டுமணிக்கு பார்ட்டிக்கு விருந்தினர்கள் வந்தாயிற்று. 9 மணியளவில் இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சென்றுவிட்டார்கள். பார்ட்டி தொடர... 10 மணியளவில் மீதி இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விடைபெற்றுப் போய்விட்டார்கள். மீதமிருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 11 மணிக்கு போய்விட்டார்கள்.. இப்போது எட்டுபேர் பார்ட்டியைத் தொடர்கிறார்கள்...

8 மணிக்கு இருந்த மொத்தவிருந்தினர் எத்தனைபேர்?


4) லாஜிக்கலாகச் சொல்லுங்கள்.. ரோடுகளில் மேன்ஹோல் இருக்கிறதல்லவா? அதற்கு சதுரமூடி, வட்டவடிவ மூடி.. இரண்டில் எது பெஸ்ட்? ஏன்?

5) நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிளும் சேர்த்து 40 பைசா. அதே, நாலு ஆப்பிளும், மூன்று ஆரஞ்சும் சேர்த்து 37 பைசா என்றால் ஒரு ஆரஞ்சு எவ்வளவு பைசா?

6) ஒரு தெருவில் குறிப்பிட்ட அளவு எதிரெதிர் வரிசையிலான வீடுகள் உள்ளன. ஒரு பக்கம் 1,2,3,4 என்று ஆரம்பித்து எதிர்வரிசையில் அப்படியே எண்கள் தொடர்ந்து கீழ்வரிசையில் போடப்பட்டுள்ளன.(அதாவது 1ம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீடு கடைசி நம்பர்)

பத்தாம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீட்டு எண் 23 எனில்.. மொத்தம் எத்தனை வீடுகள் அந்த வீதியில்?


7) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி..

தாஜ்ஹோட்டலின் பாருக்கு சென்று ஒருத்தன் அவசரமாக தண்ணீர் கேட்கிறான். பார் அட்டெண்டர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, தனது துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றிப்பொட்டில் வைக்கிறான்.


ஒரு நிமிடம் கழித்து, தண்ணீர் கேட்டு வந்த கஸ்டமர் சிரித்தபடி நன்றிகூறி வெளியேறுகிறான்.

என்ன மேட்டர்?


8) இது லாஜிக்கல்...


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கொன்று என்று சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. (ஜூஸெல்லாம் போடலைப்பா!) கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

9) க்ரிக்கெட் க்விஸ்... 1946ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியா டூர் ரத்தானது. ஏற்கனவே முடிவான இந்தத் தொடர் ரத்தானதற்கு காரணம்..

அ) போருக்குப்பின் உடனே பயணம் சாத்தியமில்லை என மே.இ. பயணக்குழுவினர் மறுத்துவிட்டதால்.

ஆ) மே.இ.போர்ட், இந்தியாவின் செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்டில் திருப்திப் படாததால்.

இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால்.

ஈ) மேற்கிந்திய வேகப்பந்து வீரர்களைப் பற்றி கேள்விப்பட்டு, இந்திய வீரர்கள் விளையாட மறுத்ததால்.

10) இது இளையராஜாவின் பிரபலமான ஒரு பாட்டின் இரண்டாவது சரணம்..

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

கலைபலவும் பயிலவரும்
அறிவுவளம் பெருமைதரும்

என் நினைவும் கனவும் இசையே
இசை இருந்தால் மரணமேது

என் மனதில் தேன் பாய...

பல்லவிக்குப் போக இன்னும் ஒரு வரிதான் பாக்கி. அதைச் சொன்னால் பாடல் ஈஸீயாகத் தெரிந்துவிடும்.

கண்டுபிடுங்க பார்க்கலாம்!

***********************

யோசிச்சு பதில் சொல்லுங்கப்பா. கமெண்ட் மாடரேஷன் போட்டுடறேன். ஓக்கேவா?

78 comments:

Natty said...

ஹைய்யா, மீ த முதலாவது...

Natty said...

3) Manholes, which interconnect underground sewerage pipes, and serve as a point of entry for cleaning the pipes, are located at every major sewer pipe junction, and are capped with round manhole covers. The reason for the circular construction of these covers is, quite simply, that covers of any other shape would fall through the manholes by virtue of their varying diameters. Circular manhole covers do not vary in width, or in diameter, as is the case with these other shapes, thus remaining in place despite the street traffic running roughshod over them.

Manufacturers craft the manhole covers together with the smaller sized lip, upon which they rest, at the same time to ensure a tightly sealed fit. Additionally, the manufacture of circular manhole covers is easier and more accurate than the manufacture of covers of any other shape. Lastly, round manhole covers, once removed, require less lifting and less manpower, as their shape allows them to be rolled.


இது ஒன்னுதான் கூகில் வழியா பதில் கிடைச்சுது...

மன்னிக்கவும் கே.கே.. நான் மென்பொருள் துறை ;))

Natty said...

7. விக்கலுக்காக தண்ணி?

Natty said...

தமிழில் கூகிள் தேடுதலுக்கு நன்றி


http://search.w3tamil.com/


10)
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
னாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு

பரிசல்காரன் said...

@ Natty

7 வதுக்கான உங்கள் பதில் சரி!

7வதுக்கான பதிலை யோசிச்சு சொன்னீங்களா? அதுக்கும் கூகுளாண்டவரை நாடிப் போனீங்களா?

4வது கேள்விதான் மேன்ஹோல் சம்பந்தமான கேள்வி. நீங்க ‘3'ன்னு போட்டு அதைச் சொல்லியிருக்கீங்க! கூகுளிலிருந்து நீங்க அனுப்பின பதில்லகூட ஒரு முக்கியமான பாய்ண்ட் மிஸ் ஆகுது. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்!

Anonymous said...

1.b. வெண்பூ
e. கோவி.கண்ணன்
2.ஆ. சவப்பெட்டி
8. அது எனக்கு
10. அமுதே, தமிழே அழகிய மொழியே

Natty said...

6) 26?1 14
2 15
3 16
4 17
5 18
6 19
7 20
8 21
9 22
10 23
11 24
12 25
13 26

பரிசல்காரன் said...

@ Natty

இளையராஜாவின் பாடலையும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.. கூகுளுக்கு நன்றியுடன்.

அப்பறம், அந்த மேன்ஹோல் விடைல அந்த முக்கிய பாய்ண்ட் இருக்கு. நாந்தான் கவனிக்கல.

வேற கேள்விகளுக்காவது கூகுளைப் பயனபடுத்தான பதில் சொல்லுங்க.


இந்த லொள்ளுக்குத்தான் வாராவாரம் பதிவர் சம்பந்தமா கேள்வி கேட்கறேன். உங்க சொந்த மூளையைத்தான் பயன்படுத்தியாகணும்!!

Natty said...

கே. கே...


// சொந்த மூளையைத்தான் பயன்படுத்தியாகணும்! //


இதை கன்னா பின்னா என்று கண்டிக்கிறேன்... கூகிள் உபயோகப்படுத்துவது ஒரு கலை.... நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்? :)

பரிசல்காரன் said...

@ நட்டு

(6)

என்னங்க இது? தெளிவாச் சொல்லலையோ நான்? 1 வது வீட்டுக்கு எதிர்ல கடைசி நம்பர்னு சொல்லிருக்கேனே. எதிர்வரிசைல வரணும். விடை தப்பு.

பரிசல்காரன் said...

@ Natty (ஸாரி.. போனதுல தமிழ்ல தப்பா அடிச்சுட்டேன்))

//நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்? :)//

:-)))))


@ சின்ன அம்மணி

1 b, e சரி, 2 ஆ சரி, 10 சரி!

8 - என்ன சொல்ல வர்றீங்கன்னு தெளிவாச் சொல்லுங்க. அப்பதான் சரி!!!

Sridhar Narayanan said...

1 b) வெண்பூ
c) நர்சிம்
f) முர----ன்?

2 அ) நமது பெயர்

3 8 மணி - 27; 9 - 18; 10 - 12; 11 - 8;

4 வட்டம். நிறைய காரணம் விக்கிபீடியாவில் இருக்கு. அதில் முக்கியமானது வட்ட மூடி வட்டத்திற்குள்ளே விழ வாய்ப்பில்லை. சதுர மூடி உள்ளே விழ வாய்ப்பிருக்கிறது.

5. ஆரஞ்சு - 4 பைசா; ஆப்பிள் - 8 பைசா; (ரூபான்னு சொல்லியிருக்கலாமோ? அப்படியும் விலைவாசி இடிக்குதே)

6 32

7 தண்ணீர் கேட்டவனுக்கு விக்கல். துப்பாக்கியை காட்டியதும் விக்கல் போய்விட்டது.

8 கூடையோடு ஒருவருக்கு ஆப்பிளை கொடுத்து விட்டாகிவிட்டது

9 ஆ

10 அமுதே தமிழே

11 அவ்வளவுதானா? :)

Nilofer Anbarasu said...

7. விக்கல்

Nilofer Anbarasu said...

7. விக்கல்

Nilofer Anbarasu said...

என்ன இது புதுசா Comment Moderation?

சந்தனமுல்லை said...

7. அவனுக்கு விக்கல்! lol.

மேன்ஹோல் - மைக்ரோசாப்டில் கேட்ட கேள்வி. எனக்கு மைக்ரோ சாப்டில் வேலை வேணாம்! :-)

சந்தனமுல்லை said...

8. ஒருத்தருக்கு கூடையோட கொடுத்தாச்சு. இது நான் ஆறாவது படிக்கும்போது ஹிண்டு யங் வர்ல்ட்-டில் வந்தது.

சந்தனமுல்லை said...

2. அ. நம் பெயர்.
ஆ. சவப் பெட்டி (ஆனா அதுக்கூட இப்போ ஆர்டர் பண்ணிக்கற மாதிரி இருக்குப் போல!!)

Jenbond said...

2) Name

3) 144 members

6) 32 Houses

7) Orange 7 rupees
Apple 4 rupees

where u got this type of questions. nice one please keep it up parisal.

Regards
Jenbond

மோகன் கந்தசாமி said...

3) 27
6) 32

பரிசல்காரன் said...

@ ஸ்ரீதர் நாராயணன்

1 B, C சரி.. F கரெக்ட். முழுசா கண்டுபிடிங்களேன். இதைக் கண்டுபிடிச்சா Eயும் ஈஸி

2 (அ) சரி.. ஆ?

3 சரி..

4. சரி..

5) ஆரஞ்சு 4 பைசா. ஆப்பிள் 8 பைசான்னு சொல்லியிருக்கீங்க.

// நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிளும் சேர்த்து 40 பைசா. அதே, நாலு ஆப்பிளும், மூன்று ஆரஞ்சும் சேர்த்து 37 பைசா // இது புதிர்.

சரியா வர்லீங்களே.... நாலு ஆப்பிள், மூணு ஆரஞ்சுல இடிக்குது பாருங்க...

6) சரி

7) சரி

8) சரி

9) தப்பு

10) சரி

மேக்ஸிமம் சொல்லீட்டீங்க. விட்டுப் போன விடைகளையும் சொல்லி, முதல் எல்லா விடை சொன்னவர்ங்கற பட்டம் பெறுங்களேன்...

நன்றிங்க..

பரிசல்காரன் said...

@ நிலோஃபர் அன்பரசு

விடைகள் வெளிவந்தால் சுவாரஸ்யம் குறையுதுன்னு சொன்னதால கமெண்ட் மாடரேஷன். நீங்க சொன்ன 7வதுக்கான விடை சரி! மற்றதையும் முயலுங்கள்...

பரிசல்காரன் said...

@ சந்தனமுல்லை

7, 8, 2 எல்லாம் சரி.

சில கேள்விகள் சிலருக்கு புதிதாக இருக்கலாம். அதுக்காகத்தான் மிக்ஸ் பண்ணி குடுக்கறேன். நீங்க ஏற்கனவே தெரிஞ்சதுக்கு தெரியுமே, தெரியுமேன்னு சொல்லீட்டீங்க.. ஓக்கே.. மத்ததுக்கு முயலுங்களேன். உங்களால கண்டுபிடிக்கமுடியும் ஈஸியா!!!

Natty said...

6. 32?

1 32
2 31
3 30
4 29
5 28
6 27
7 26
8 25
9 24
10 23
11 22
12 21
13 20
14 19
15 18
16 17


:)

முரளிகண்ணன் said...

1b venpu
1c narsim
1e kovi kannan
1f muralikannan

2a our name
2b wrath for our death

7 hicups (vikkal)

பரிசல்காரன் said...

@ krish_007 -
JENBOND (யாருங்க நீங்க.. என் மெய்ல் ஐ.டி. மாதிரி இருக்கு!! )


பாராட்டுக்கு நன்றி.

2 அ சரி.

3வது கேள்விக்கு விடை 144 எல்லாம் இல்லை. ரொம்ப யோசிக்கறீங்க!

6 - சரி

7 - ஆரஞ்சு ஆப்பிள் - விடை சரி. ஆனா வேணும்னே நான் பைசாவுல கேட்டிருக்கேன். நீங்க **Rupees, ** Rupeesன்னு சொல்லியிருக்கீங்க. இப்படிச் சொன்னா இண்டர்வ்யூல மார்க வராது! Concentrate!!

Again thanks for your comment!!

பரிசல்காரன் said...

@ மோகன் கந்தசாமி

6 -சரி

3 - அதுவும் சரி!!

பதிவர் கேள்விகளுக்கு ட்ரை பண்ணுங்க மோகன்.

பரிசல்காரன் said...

@ NaTTY

சரி.. அதுக்காக SUMஐ இங்கயே போட்டுக் காட்டறீங்களே.. விடை மட்டும் சொல்லுங்க பாஸ்!

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

1) எல்லாம் சரி. a, d ஏன் விட்டீங்க?

2 a - சரி.. b நீங்க எழுதின வார்த்தைக்கு அர்த்தம் சரியா தெரியல. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? இன்னும் சரியா ஒரு பதில் இருக்கு.

7 சரி!

தாரணி பிரியா said...

2 ) அ) என்னோட செல்போன் (அ) என்னோட‌ பெய‌ர்

ஆ) ச‌வ‌ப்பெட்டி


4) மேன்ஹோல் மூடியிருந்தால் நலம் ஒ.கே. எனக்கு தெரிஞ்சவரை வட்டம்தான் ஒ.கே. நகத்தி வெக்க ஈசியா இருக்கும். சதுரம்னா தூக்கி வெக்கணுமின்னு நினைக்கிறேன். சரியா?


8)கடைசி ஆப்பிளை கூடையில வெச்சே குடுத்துட்டாங்க‌

10)அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே


மத்த கேள்விகளுக்கும் எல்லாம் ரொம்பவே யோசிக்க வேண்டியிருப்பதால் கொஞ்சம் டைம் வேணுங்க.

மோகன் கந்தசாமி said...

1) f) முரளி கண்ணன்

anujanya said...

b. வெண்பூ
c. நர்சிம்
e.கோவி கண்ணன்
f. முரளி கண்ணன்

அனுஜன்யா

மோகன் கந்தசாமி said...

1) b) வெண்பூ

மோகன் கந்தசாமி said...

1) c) நரசிம்

மோகன் கந்தசாமி said...

1) d) பழமைபேசி

Thamiz Priyan said...

1. a)தூயா
b)வெண்பூ
C)நர்சிம்
d)பழமை பேசி
e)முரளி கண்ணன்
f)கோவி கண்ணன்

2. அ) பெயர்
ஆ)கபன்(இறந்தபின் போடும்) துணியா?

3) 27

4) எங்களுக்கு சதுர மூடி தான் பெஸ்ட்..லாஜிக்கெல்லாம் தெரியல்ல... திறக்க ஏதுவா அதுதான் இருக்கு. இன்னொன்னு கீழே மேன் ஹோலுக்கு கட்டடம் சதுர வடிவில் கட்டுவது சுலபம். வட்டமாக கட்டுவது கஷ்டம்.

5)ஒரு ஆரஞ்சு = 7 பைசா
ஒரு ஆப்பிள் = 4 பைசா

6)32 வீடுகள்

7)

8) கடைசி பழத்தை எடுத்தவர் கூடையுடன் எடுத்துச் சென்றுவிட்டார்.

9)இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால்.

10) அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா

anujanya said...

3. 27

4. வட்டம் தான் சரி. சதுரமாக வைத்தால், மூலைவெட்டாக (diagnol) வைத்தால், பள்ளத்துக்குள் விழுந்துவிடும்.

5. ஒரு ஆரஞ்சின் விலை 7 பைசா. (எந்தக் காலத்தில் சுவாமி? )

அனுஜன்யா

anujanya said...

6. 32

7. விக்கல் வந்தது அவருக்கு. அதிர்ச்சியில் துப்பாக்கி காட்டியதும் போயிற்று.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ தாரணிப்ரியா


2 (அ) வுக்கு செல்ஃபோன்னு சொல்லி காலங்கார்த்தால இப்படி சிரிக்கவெச்சதுக்கு நன்றி! (சரியான விடையையும் சொல்லிருக்கீங்க!)

ஆ-வும் சரி

மேன்ஹோல் கேள்வி விடை சரி, காரணம் இன்னொண்ணும் இருக்கு.

8, 10 சரி..

ஒண்ணும் அவசரமில்ல, நாளை காலை வரை டைம் இருக்கு!

முரளிகண்ணன் said...

1d பழமைபேசி

2 ஆ பிண மலர்மாலை (இன்னொன்னும் இருக்கு அது அடல்ஸ் ஒன்லி]

8 அது கூடையை கொண்டுவந்தவருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது

பரிசல்காரன் said...

@ மோகன் கந்தசாமி

1- b,c, f சரி.

GREAT!!! You got the answer for 'd'!!!

What about 'a'?

@ அனுஜன்யா

எல்லாம் சரி.. எலலார் மாதிரி a, dஐ விட்டுட்டீங்களே..

பரிசல்காரன் said...

@ தமிழ்பிரியன்

கைகுடுய்யா! பதிவர் கேள்வி எல்லாத்துக்கும் சரியா விடை சொன்னவர் நீங்கதான். a யாரும் சொல்லமாட்டாங்கன்னு நெனைச்சேன். கலக்கீட்டீங்க!

2 அ சரி, ஆ - இன்னொன்ணு இருக்கு.

4 தப்பு.

7 என்னாச்சு தலைவா? இது ஈஸீதானே உங்களுக்கு?

9 - கரெக்ட்! அடிச்சு விட்டீங்களா? இது மட்டும் odd ஆ இருக்குன்னு?

மேக்ஸிமம் விடைகளைச் சொல்லீட்டீங்களே..

மோகன் கந்தசாமி said...

1) e) கோவிகண்ணன்

Thamiz Priyan said...

கூகுளாண்டவருக்கு நன்றி!
7) அவனுக்கு விக்கல் ஏற்ப்பட்டிருந்தது. தண்ணீர் கேட்டவன் விக்கலை தவிர்க்கவே கேட்டான். பார் அட்டெண்டர் தூப்பாக்கியைக் காட்டி மிரட்டியதும் விக்கல் நின்று விட்டது. நன்றி கூறி விட்டு திரும்பிச் சென்றான்.

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

3,4,5,6,7 எல்லாமே சரி..

பைசாவில் கேள்வி கேட்டது - வேணும்னுதான். சிலர் விடை கரெக்டா சொல்லி **ரூபாங்கறாங்க. அது தப்புல்ல? ஐ.ஏ.எஸ்ன்னா சும்மாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முரளிகண்ணன் said...

6 32

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

இன்னொண்ணும் இருக்கே..

சரி.. அதென்ன அடல்ஸ் ஒன்லி. சொல்லுங்க. கமெண்டை பப்ளிஷ் பண்ணமாட்டேன். நான் மட்டும் பார்த்துகக்றேன்..

@ தமிழ்பிரியன் & மோகன் கந்தசாமி

சரியோ சரி!

முரளிகண்ணன் said...

3. 27

anujanya said...

10. அமுதே தமிழே அழகிய மொழியே (கோவில் புறா) (திருமதி உபயத்தில்)

9. ஈ?

8. கூடைகாரருக்கும் ஒரு ஆப்பிள்

அனுஜன்யா

anujanya said...

d. பழமைபேசி

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

5. 7 paisa

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

திருமதிக்கு சபாஷ்!!

9 தப்பு

8 சரி!

1 d சபாஷ் !!!

@ முரளிகண்ணன்

5 -சரி!

கார்க்கிபவா said...

ப‌திவ‌ர்க‌ள்"

1) யோசிச்சு சொல்றேன்

2) வெண்பூ

3) நர்சிம்

4) பழமைபேசி

5) கோவிகண்ணன்

6) முரளிகண்ணன்

பரிசல்காரன் said...

@ கார்க்கி

சூப்பர் சகா. a ஐயும் சரியா சொல்லுங்க..

Ŝ₤Ω..™ said...

1.b) வெண்பூ
2.அ) எனது பெயர்
2.ஆ) Death certificate
4. வட்ட மூடி தான் பெஸ்ட்.. காரணம், சதுர ஒரு கோணத்தில் மூடி உள்ளே விழ வாய்ப்புள்ளது.. ஆனால், வட்ட மூடி உள்ளே விழாது..
6. மொத்தம் 32 வீடுகள்
7. வந்தவனுக்கு விக்கல்.. அதனால் தான் தண்ணீர் கேட்டு தாஜ் ஹோட்டல் பாருக்கு சென்றான்.. துப்பாக்கியை காட்டி பயம் உண்டுபண்ணியதால் விக்கல் அடங்கிற்று..
8. முதல் 5 பேருக்கு ஒரு ஒரு ஆப்பிள் குடுத்தவுடன் கடைசி நபர் கூடையுடன் ஒரு ஆப்பிளை வைத்துக்கொண்டார்..

சந்தனமுல்லை said...

பதிவர்கள் குறித்த கேள்விகளுக்கு நம்ம பதிவர்கள் சூப்பரா அசத்திடுவாங்க. அதனால, மி தி எஸ்!(ரெண்டு க்ளூ தெரிஞ்சா மூணாவது தெரிய மாட்டேங்குது அதான் மேட்டர்! :-)) அப்புறம் லேட்டரல் திங்கிங் எனக்கு பிடிக்கும் சோ அதிலயே கான்செண்ட்ரேட் பண்றேன்.ஓக்கே! தெரிஞ்சதை தெரியும்ன்னு சொல்லலாம் இல்லையா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

7வது விக்கல்.

மத்த கேள்விக்கெல்லாம் பதிலை யோசிக்கலை. தெரியலை என்பதை நாங்கள் இப்படித்தான் சொல்லுவோம்:)

narsim said...

1.
a)தூயா
b)வெண்பூ
c)நர்சிம்
d)பழமைபேசி
e)கோவி கண்ணண்
f)முரளி கண்ணன்

2.அ) நம் பெயர்/ நம்ம‌ மொபைல் நம்பர்னும் சொல்லலாம்
ஆ) மலர்வளையம்.. / டெத் சர்டிபிகேட்/ லைஃப் இன்சூரன்ஸ்

3.27

4.வட்டமூடி:விளிம்பு தட்டாது..??

5.ஆரஞ்சு : 7 பைசா, ஆப்பிள் 4 பைசா

6. 32( சிம்பிளா 10 வரைக்கும் போட்டு எதிர்திசைல 23ல இருந்து 1 வரைக்கும் போட்டா 32ல முடியும்)

7. விக்கல்??

8. 6வது நபர் கூடையோடு எடுத்துக் கொண்டார்

9. ஈ

10. சிறு பொன்மனி??

Anonymous said...

1.b - எண்பூ
1.c -நர்சிம்
1.e - கோவி கண்ணன்
1.f. - முரளிக் கண்ணன்.

2 . ஆ - சவப்பெட்டி
3. 216/72/24/8
4. சதுரமெனில் அதன் மூலை விட்டம் ஒரு பக்க அளவைவிட அதிக. வட்ட மூடியின் விட்டம் துளையின் விட்டத்தை விட பெடரிதா இருக்கும். அதனால் உள்ளே விழாது.
5. 33
6. வந்தவனுக்கு விக்கல்.
7 கடைசி ஆள் கூடையுடன் எடுத்துக் கொண்டான்.
8 நமக்கு கிரிக்கெட் அறிவு கம்மி
9 அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே.

Thamira said...

எல்லோர் பதிலுக்கும் பதில் சொல்லிட்டிருக்கீங்க.. என் பதிலுக்கு இன்னும் பதில் வரலை பாருங்கள்.. அப்புறம் நான் கலந்துக்கலையோன்னு யாராச்சும் நெனச்சுக்கப்போறாங்க..

Thamira said...

தமிழ்பிரியன், மண்டை கீறிடும் போல இருக்குது. பதில்களை கொஞ்சம் மெயில் பண்ணிவிடவும்.

பரிசல்காரன் said...

@ தாமிரா..

பதிலே சொல்லாம இப்படி மாட்டிவிடறீங்களே..

@ வேலன் அண்ணாச்சி

1. எல்லாம் சரி. (ஒண்ணு ஸ்பெல்லிங் மிஸ்டேக்!) a சொல்லுங்க.

2. (அ) சொல்லுங்க. ஆ சரி.

3. தப்பு. 4 சரி. 5க்கு விடை சொல்லல. ஆனா 6க்கானவிடையை 5-ன்னு சொல்லிட்டீங்க. தப்பு. அப்படியேதான் 7,8,9,10க்கு மாத்தி மாத்தி நம்பர் போட்டிருக்கீங்க. கம்ப்யூட்டர் திருத்தறமாதிரி இருந்தா எல்லாமே தப்பு போட்டுடும் அண்ணாச்சி!

பரிசல்காரன் said...

@ நர்சிம்

1. எல்லாமே சரி. சூப்பர்

2. அ சரி. (ஃபோன் நம்பர் வராது பாஸு. திருப்பிக் குடுத்தாச்சுன்னா 3 மாசத்துல இன்னொருத்தனுக்கு தாரை வார்த்துடுவாங்க!)

ஆ-இன்னும் ஒரு மிகச்சரியான விடை இருக்கு பாஸ்.

3.சரி.

4. சரி. இன்னொரு விளக்கம் உங்களுக்கு ஃபோனில் சொல்லிவிட்டேன்.

5. சரி!

6. சரி.

7. கரெக்ட்.

8. சரி.

9. தப்பு

10. தப்பு தலைவா.. இதச் சொல்லவேண்டாமா நீங்க?

பரிசல்காரன் said...

ஜ்யோவ்ராம் சுந்தர்

7 சரி. மத்ததும் சரி. (தெரியலைங்கற COMMON விடை அல்லவா!)

@ சந்தனமுல்லை.

தெரிஞ்சதை தெரியும்னு சொல்லுங்க.தப்பே இல்லை. ஆனா விடையும் சொல்லுங்க!!! :-))))

பரிசல்காரன் said...

@ Ŝ₤Ω..™

பேரை ட்ரேட் மார்க் வேற பண்ணிவெச்சிருக்கீங்களா? அவ்வ்வ்வ்வ்..

1. B சரி. மத்ததையும் முயற்சியுங்கள்.

2. அ சரி. ஆ. இன்னும் சரியா சொல்லலாமே.

4,6,7,8, சரி! வேற...?

பரிசல்காரன் said...

மேக்ஸிமம் எல்லாத்துக்கும் எல்லாரும் பதில் சொல்லீட்டாங்கப்பா..

விடையை மதியம் ரிலீஸ் பண்ணிடலாமா???

☼ வெயிலான் said...

// விடையை மதியம் ரிலீஸ் பண்ணிடலாமா??? //

பண்ணிடலாம்.

- விடை தெரியாத விஞ்ஞானிகள் சங்கம்.

தாரணி பிரியா said...

1‍‍ c -நர்சிம்
d- பழமைபேசி

3‍ 27 பேர்


4) வட்ட மூடி எடுத்து மூடறதுக்கு ஈஸி. எப்படி வேண்டுமானாலும் போடலாம்

5) ஆப்பிள் ‍ 4 பைசா ஆரஞ்ச் ‍ 7 பைசா (எல்லாம் சரி எந்த ஊரில இந்த விலைங்க?)

6 32 வீடு

7 ‍ :(

9 :( எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. டென்னிஸ்ல கேள்வி கேளுங்க. :)

பரிசல்காரன் said...

விடைகளை ரிலீஸ் பண்ணியாச்சு. எஞ்ஜாய்!!!!

புருனோ Bruno said...

3) எட்டுமணிக்கு பார்ட்டிக்கு 27 விருந்தினர்கள் வந்தாயிற்று.

9 மணியளவில் (27) இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சென்றுவிட்டார்கள். பார்ட்டி தொடர...

10 மணியளவில் மீதி இருந்தவர்களில் (18) மூன்றில் ஒரு பகுதியினர் விடைபெற்றுப் போய்விட்டார்கள்.

மீதமிருப்பவர்களில் (12) மூன்றில் ஒரு பகுதியினர் 11 மணிக்கு போய்விட்டார்கள்..

இப்போது எட்டுபேர் பார்ட்டியைத் தொடர்கிறார்கள்...

8 மணிக்கு இருந்த மொத்தவிருந்தினர் எத்தனைபேர்? 27

புருனோ Bruno said...

2) (அ) உங்களுக்குச் சொந்தமானது, உங்களை விட அடுத்தவர்களே அதிகம் பயன்படுத்துவது எது?

(ஆ) யாருக்காக உபயோகப் படுத்தப் படுகிறதோ, அவர்கள் வாங்கமுடியாது. அது என்ன?


”பெயர்“

புருனோ Bruno said...

4) லாஜிக்கலாகச் சொல்லுங்கள்.. ரோடுகளில் மேன்ஹோல் இருக்கிறதல்லவா? அதற்கு சதுரமூடி, வட்டவடிவ மூடி.. இரண்டில் எது பெஸ்ட்? ஏன்?

வட்டவடிவம் தான்

1. சதுரமான மூடி diagnolளாக கீழி விழ வாய்ப்புள்ளது

2. வட்ட வடிவ மூடியை உருட்டி செல்லலாம்

புருனோ Bruno said...

5) நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிளும் சேர்த்து 40 பைசா. அதே, நாலு ஆப்பிளும், மூன்று ஆரஞ்சும் சேர்த்து 37 பைசா என்றால் ஒரு ஆரஞ்சு எவ்வளவு பைசா?

4o + 3a = 40
4a + 3o = 37
--
12o + 9a = 120
12o + 16a = 148
--
7a = 28
a=4
o=7
ஆப்பிள் - 4 காசு
ஆரஞ்சு - 7 காசு

புருனோ Bruno said...

1-32
2-21
3-30
4-29
5-28
6-27
7-26
8-25
9-24
10-23
11-22
12-21
13-20
14-19
15-18
16-17

புருனோ Bruno said...

//
என்ன மேட்டர்?//

விக்கல் !!

புருனோ Bruno said...

//3வது கேள்விக்கு விடை 144 எல்லாம் இல்லை. ரொம்ப யோசிக்கறீங்க!//

மூன்றில் ஒருவர் போய்விட்டார் என்று தான் புதிர்
மூன்றில் ஒருவர் இருப்பதாக கூற வில்லை

Sanjai Gandhi said...

அடிக்கடி இலவசக் கொத்தனார் வலைப்பூ பக்கம் போறிங்களோ? :)

பரிசல்காரன் said...

மிக்க நன்றீ டாக்டர் சார். அதுவும் 144 எப்படி வந்தது என்றெல்லாம் கணக்குப் போட்டது, க்ரேட்!!!

@ பொடியன்

ஹி..ஹி... அதெல்லாம் இல்லப்பா