ஒரு முதலாளிக்கு விசுவாசமா, அவரோட அன்புக்கு பாத்திரமா அவர் உங்கமேல வெச்சிருக்கற நம்பிக்கையைக் காப்பாத்தி நடந்துக்கணும். அந்த விஷயத்துல அதிஷா என்னை ரொம்பக் கவர்ந்துட்டாரு.
நேற்று ஒரு லட்சம் ஹிட்ஸ்சை தொட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! முதலில் என்னை அழைத்துச் சொன்னதுக்கு என் நன்றிகள்!
*********************
அந்தப் பதிவர் அழைத்தார்..
“அண்ணே.. நீங்க மக்கள் டிவில புதிய கோணங்கிகள் நிகழ்ச்சியைப் பத்தி எழுதியிருந்தீங்க இல்லையா? அந்த நிகழ்ச்சியை நடத்துற பிரகதீஸ்வரன் என் நண்பர்தான். பக்கத்துல இருக்காரு. பேசுங்க”
எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. பேசினேன்.
நன்றி அந்த நண்பருக்கு!
***************************
“தம்பி.. என் ஃபோன் நம்பர் இதுதான். நோட் பண்ணிக்கோ”
“அண்ணா. சந்தோஷம்ணா. ஃபோன் ரெடியாய்டுச்சா?”
”இல்லடா.. அதுதான் ஜீன்ஸ் பேண்ட்ல ஜீஸஸ், கண்ணாடி போட்ட கண்ணபரமாத்மான்னு சொல்வேனே.. உன்னால அறிமுகமான அந்தப் பதிவர்கிட்ட பேசிட்டிருந்தேன். என்னை லைன்ல வெச்சுட்டே இன்னொரு ஃபோன்ல ‘இன்னும் அரைமணி நேரத்துல நான் சொல்ற அட்ரஸுக்கு ஃபோனும், சிம்கார்டும் போகணும்’னு ஆர்டர் போட்டாரு. 29வது நிமிஷம் என் கைல ஃபோன். என்ன மாதிரி ஆளுகடா இவங்கள்லாம்? எவ்ளோ பெரிய பதவி, பொறுப்பு. ஆனா எப்படி இவ்ளோ அன்பைக் கொட்டி நம்மளை கொலை பண்றாங்க?”
அது எனக்கும் தெரியல. அவருக்கு என் நன்றி!
************************
“பரிசல்... என்ன ஆச்சு. என் பதிவுகள் பக்கமே காணோமே..”
“இல்ல ***, வேலை கொஞ்சம் அதிகமாய்டுச்சு. அதான்”
“நல்லால்லயோன்னு நெனைச்சேன். கொஞ்ச நாளாவே நம்ம செட் ஆளுகல்லாம் காணோம்..”
அவரிடம் யார் யார் எப்படி எப்படி இருக்கிறார்கள் என்று விவரித்தேன்.
“எல்லாருமே பிஸியா இருக்காங்கபோல. சரி..சரி. நான்கூட என்னமோ ஏதோன்னு பயந்துபோய்ட்டேன்”
வந்தா வா, வராட்டி போ- என்று இல்லாமல் நட்போடு அழைத்துக் கேட்ட அவருக்கு என் நன்றிகள்.
********************
“கிருஷ்ணா.. நல்லாயிருக்கியா”
“ஆங்... நல்லாயிருக்கேண்ணே. என்ன அதிசயம் ஃபோன் பண்றீங்க?”
“இன்னைக்கு நீ எழுதினது நல்லாயிருந்தது. அதான் கூப்ட்டு சொல்லலாம்ன்னு ஃபோன் பண்ணினேன்”
“நன்றிண்ணே”
இவருக்கும் நன்றி. ஃபோன் செய்ததற்கு மட்டுமல்ல, வேறொன்றுக்கும். முகநக இல்லாமல், நெஞ்சத்தக நட்பு வைத்திருப்பதற்கு!
*****************************
”பரிசல்.. ஸாரி. இந்த நேரத்துக்குக் கூப்பிடறதுக்கு. நான் ஜெர்மன்லேர்ந்து **”
“பரவால்ல சொல்லுங்க”
“*******************************************
**************************************************
*********************************************
**************************************
***************************************”
“ஐயையோ... நான் ரெண்டு மூணு நாளா பதிவுகள் பக்கமே போகல”
“இது இப்போதான். ஒரு மணிநேரம்கூட இருக்காது”
“சரி.. இப்பவே பார்க்கறேன். முடிஞ்சா கூப்ப்ட்டு சொல்றேன்”
“ரொம்ப தேங்க்ஸ் பரிசல்”
பதிவுகளைப் படித்துவிட்டு போகாமல், நண்பருக்கு ஒன்று எனும்போது அதற்கு ஆறுதலாய் இருக்கவும், உணர்ச்சிமயமான நேரத்தில் அவர் தவறேதும் செய்து பின்னாளில் வருந்தாமலிருக்க வேண்டுமே என்ற உந்துதலாலும் உடனே என்னை அழைத்து பகிர்ந்து கொண்ட அவருக்கு என் நன்றிகள்.
************************
சம்பந்தமில்லாத ரெண்டு விஷயம்.....
அபியும் நானும் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டிருந்தேன். நேத்து ரிலீஸ். ஆனா போக முடியல. காரணம் சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி எல்லாம் முக்கியமான தியேட்டரை ஆக்ரமிச்சுடுச்சு. அபியும் நானும் தூரத்துல ஒரு தியேட்டர்ல போட்டிருக்காங்க. இன்னைக்கு நிச்சயமா போகணும்.
(ஒரு சின்ன சந்தேகம்... பெண் குழந்தைகள் இருக்கறங்க தவறவிடாம பாக்க வேண்டிய படம்னு சொல்றாங்க. அப்ப நான் ரெண்டு தடவை படம் பார்க்கணுமா?)
************************
இந்தியா- இங்கிலாந்து மேட்ச் நடக்குது. டிராவிட் இப்போ, கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவுட். 328 பால்ல 136 ரன். இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தார்னா இங்கிலாந்து கேப்டன் “ஒண்ணு விளையாடச் சொல்லுங்க. இல்லீன்னா அவுட் ஆகச் சொல்லுங்க”ன்னு அம்பயர்கிட்ட அழுதிருப்பாரு போல. டிராவிட்டுக்குப் பதிலா இப்போ லட்சுமணன் இறங்கியிருக்காரு. டிராவிட், சேவக், காம்பிர் டிரஸ்ஸிங் ரூம்ல கேரம் போர்டு விளையாடறாங்களாம். ஒரு கை குறையுது, சீக்கிரம் வாங்க’ன்னு சேவக் கைகாமிச்சாராம். இதோ, டெண்டுலகர் உள்ள போறாரு. 11 ரன் அடிச்சுட்டு.
லட்சுமணன் 18 பால்ல முடிஞ்சா என்னை ரன் எடுக்க வைங்கடான்னு நின்னுட்டிருக்காரு. இதுக்கு டிராவிட்டே பரவால்ல-ன்னு இங்கிலாந்து கேப்டன் சொல்றாராம். பார்க்கலாம்!
*******************
29 comments:
நன்றிகளுக்கு நன்றிகள்... உங்க நல்ல உள்ளத்துக்கு இன்னுமொரு அத்தாட்சி இந்தப் பதிவு...
கிரிக்கெட்... ரவிசாஸ்திரிய விடவா இவுங்கள்லாம் !!
//328 பால்ல 136 ரன்.//
கட்டை மன்னன் கவாஸ்கரை பீட் பண்ணீட்டாரா இல்லியா, யாராச்சும் சொல்லுங்கப்பா
நிஜமாவே உங்களுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே. ஆணிதானே
//சின்ன அம்மிணி said...
நிஜமாவே உங்களுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே. ஆணிதானே//
உங்களுக்கும் நன்றிகள்!
வேலை நெம்ப நெம்ப அதிகமுங்க..
//328 பால்ல 136 ரன்//
That is why he is popularly called as 'The Wall'. A classic stroke player. I like his stroke very much.
நானும் உங்களைக் கூப்பிட்டேண்ணே!
// இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தார்னா இங்கிலாந்து கேப்டன் “ஒண்ணு விளையாடச் சொல்லுங்க. இல்லீன்னா அவுட் ஆகச் சொல்லுங்க”ன்னு அம்பயர்கிட்ட அழுதிருப்பாரு போல.//
அபியும் நானும் விமர்சனம் படித்தீர்களா?
இரண்டு வாட்டி பாத்தா ஒண்ணும் தப்பில்லை.. பரிசல்..
@ வெயிலான்
விமர்சனம் படிச்சா... பார்க்கும்போது கம்பேரிஸன் வரும்ன்னு படிக்கல!
நன்றி சொல்ல உனக்கு வார்தை இல்லை எனக்கு என்று ஒரே பாட்டு மயமா இருக்கு!:)
அண்ணே யாரையும் எனக்கு இன்ட்ரோ கொடுத்து அடுத்த ஒரு வாரத்துக்குள் என் அக்கவுண்டுக்கு ஒரு 1 லட்ச ரூபாய் டிராண்ஸ்பர் செய்யுறமாதிரி யாரும் பதிவர் இருந்தா என்னையும் அறிமுக படுத்தி வையுங்களேன் பிளீஸ், உங்களுக்கு தினம் போன் போட்டு நன்றி சொல்றேன்!
@ குசும்பன்
திஸ் கொரி ட்ரான்ஸ்ஃபர் டு அப்துல்லா, ஹூ ஈஸ் ஆன் த வே டு மீட் யூ!
என்ன நடக்குதுன்னே புரியமாட்டேங்குது...நல்ல தமிழ் சமூகமாக இந்த பதிவர் சமூகம் வளர்வது மட்டும் புரிகிறது... பதிவர் உலகத்துல நானும் எதோ பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நெனைக்கும் போது சந்தோசமா இருக்கு...என்ன மாறி புது பசங்களுக்காக “பதிவர் வரலாறு”ன்னுஒரு தொடர் யாராவது எழுதுங்கப்பா.....
அப்புறம் ஒரு சந்தேகம்.. தமிழ் பதிவுலகத்திலே என்ன போல உண்மையான மாணவர்கள் இருக்கீங்களா?? அதாவது மனதில் மட்டுமல்லாது வயதிலும் இளமையாக.. இருந்தால் சொல்லுங்காப்பா.. போரடிக்குது...
சின்னவன் அண்ணா,
நான் இருக்கேன்.
பி.காம். முதலாண்டு.
//கட்டை மன்னன் கவாஸ்கரை பீட் பண்ணீட்டாரா இல்லியா, யாராச்சும் சொல்லுங்கப்பா//
முடியவே முடியாது. ஒருநாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்க்ஸ்லில் துவக்க ஆட்டக்காரராக இறங்கி கடைசிவரை அவுட் ஆகாமல்( 60ஓவர்)
36 ரன் குவித்த சாதனை அவருடையது. அதற்கு முன்....
//வேலை நெம்ப நெம்ப அதிகமுங்க//
"நெம்ப" ல் நொம்பலத்திலும் ஆறுதலான, அருமையான் மேட்டர்கள்.. நல்ல பதிவு பரிசலாரே.. அந்த அதிஷா மேட்டர் புரியல.. எஜமான விசுவாசும்னா??
”சின்னவன் அண்ணா,
நான் இருக்கேன்.
பி.காம். முதலாண்டு.”
உங்களுடைய என் மகள் பதிவை நான் பார்த்துவிட்டேனாக்கும்....
உண்மைய சொல்லுங்க ... நீங்க என்னவிட சின்னவரா????
ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்ல ஒளுஞ்ச கதயா நீங்க குசும்பனுக்குப் போட்ட கமெண்ட குசும்பன் வீட்லதான் உங்காந்து படிக்கிறேன் :)
டிராவிட், சேவக், காம்பிர் டிரஸ்ஸிங் ரூம்ல கேரம் போர்டு விளையாடறாங்களாம். ஒரு கை குறையுது, சீக்கிரம் வாங்க’ன்னு சேவக் கைகாமிச்சாராம்.// ROTFL..
எனக்குதான் ஒருத்தனுமே போன் பண்ண மாட்றானுவோ..? இருங்கடி..
நர்சிம் :அந்த அதிஷா மேட்டர் புரியல.. எஜமான விசுவாசும்னா??///
எனக்கும் புர்ல..
எல்லோரையும் கண்டுபுடிச்சிட்டேன்.. அந்த ஜெர்மன் அண்ணன் சொன்ன தம்பி யாருன்னுதான் தெரியல.. நேரங்கெட்ட நேரத்துல தொல்லைப் பண்றதுக்குன்னே இருக்காக்ங்கப்பா.. எல்லாரும் நல்லது செஞ்ச போது இவரு மட்டும் தொல்லை கொடுக்கிறாரு..
**************************
// ரமேஷ் வைத்யா said...
சின்னவன் அண்ணா,
நான் இருக்கேன்.
பி.காம். முதலாண்டு.//
தல அவரு என்ன மாதிரி பள்ளி மாணவர்கள தேடுறாரு..
//அப்ப நான் ரெண்டு தடவை படம் பார்க்கணுமா?)//
நம்மள மாதிரி டபுள் யோகக்காரங்க எல்லாரும் அப்போ ரெண்டு தடவை பார்க்கணுமோ?!
என்ன மாதிரி ஆளுகடா இவங்கள்லாம் // அதான் இப்பல்லாம் சென்னையில் மழை ஊத்துதோ...?! எனிவே ஞானக்கடலுக்கு நம்பர் வாங்க வகை செய்தவருக்கு அடியேனுடைய நன்றிகளும் உரித்தாகுக....!
//அப்ப நான் ரெண்டு தடவை படம் பார்க்கணுமா?)
//
தப்பில்லை!!
ரொம்ப ரொம்ப நன்றி...
//அப்ப நான் ரெண்டு தடவை படம் பார்க்கணுமா?)//
))))))))))))))))0
:)) :))
வீக் எண்டு புதிர் ஏன் போடல.....என்ன ஆச்சு?
//“தம்பி.. என் ஃபோன் நம்பர் இதுதான். நோட் பண்ணிக்கோ”
“அண்ணா. சந்தோஷம்ணா. ஃபோன் ரெடியாய்டுச்சா?”//
கூடவே இந்த செய்தியை சிலரிடம் பகிர்ந்துகொள்ள சொல்லியிருக்கிறார்.
அண்ணன் போன் வாங்கிய சந்தோஷத்தில் மறந்துவிட்டீர்கள் போல
//ஒரு சின்ன சந்தேகம்... பெண் குழந்தைகள் இருக்கறங்க தவறவிடாம பாக்க வேண்டிய படம்னு சொல்றாங்க. அப்ப நான் ரெண்டு தடவை படம் பார்க்கணுமா?//
என்ன கொடுமை சரவணா இது!
:)
என் நண்பன் ஒருவனுக்கு நான்கு பெண் குழந்தைகள்!
//328 பால்ல 136 ரன். இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தார்னா இங்கிலாந்து கேப்டன் “ஒண்ணு விளையாடச் சொல்லுங்க. இல்லீன்னா அவுட் ஆகச் சொல்லுங்க”ன்னு அம்பயர்கிட்ட அழுதிருப்பாரு போல.//
பெரும்பாலான டெஸ்ட் மெச்சுகள் இப்படித் தான்!
கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் 50 பால்களில் 1 ரன் அடித்த கதையெல்லாம் உண்டு
Post a Comment