ஒரு முதலாளிக்கு விசுவாசமா, அவரோட அன்புக்கு பாத்திரமா அவர் உங்கமேல வெச்சிருக்கற நம்பிக்கையைக் காப்பாத்தி நடந்துக்கணும். அந்த விஷயத்துல அதிஷா என்னை ரொம்பக் கவர்ந்துட்டாரு.
நேற்று ஒரு லட்சம் ஹிட்ஸ்சை தொட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! முதலில் என்னை அழைத்துச் சொன்னதுக்கு என் நன்றிகள்!
*********************
அந்தப் பதிவர் அழைத்தார்..
“அண்ணே.. நீங்க மக்கள் டிவில புதிய கோணங்கிகள் நிகழ்ச்சியைப் பத்தி எழுதியிருந்தீங்க இல்லையா? அந்த நிகழ்ச்சியை நடத்துற பிரகதீஸ்வரன் என் நண்பர்தான். பக்கத்துல இருக்காரு. பேசுங்க”
எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. பேசினேன்.
நன்றி அந்த நண்பருக்கு!
***************************
“தம்பி.. என் ஃபோன் நம்பர் இதுதான். நோட் பண்ணிக்கோ”
“அண்ணா. சந்தோஷம்ணா. ஃபோன் ரெடியாய்டுச்சா?”
”இல்லடா.. அதுதான் ஜீன்ஸ் பேண்ட்ல ஜீஸஸ், கண்ணாடி போட்ட கண்ணபரமாத்மான்னு சொல்வேனே.. உன்னால அறிமுகமான அந்தப் பதிவர்கிட்ட பேசிட்டிருந்தேன். என்னை லைன்ல வெச்சுட்டே இன்னொரு ஃபோன்ல ‘இன்னும் அரைமணி நேரத்துல நான் சொல்ற அட்ரஸுக்கு ஃபோனும், சிம்கார்டும் போகணும்’னு ஆர்டர் போட்டாரு. 29வது நிமிஷம் என் கைல ஃபோன். என்ன மாதிரி ஆளுகடா இவங்கள்லாம்? எவ்ளோ பெரிய பதவி, பொறுப்பு. ஆனா எப்படி இவ்ளோ அன்பைக் கொட்டி நம்மளை கொலை பண்றாங்க?”
அது எனக்கும் தெரியல. அவருக்கு என் நன்றி!
************************
“பரிசல்... என்ன ஆச்சு. என் பதிவுகள் பக்கமே காணோமே..”
“இல்ல ***, வேலை கொஞ்சம் அதிகமாய்டுச்சு. அதான்”
“நல்லால்லயோன்னு நெனைச்சேன். கொஞ்ச நாளாவே நம்ம செட் ஆளுகல்லாம் காணோம்..”
அவரிடம் யார் யார் எப்படி எப்படி இருக்கிறார்கள் என்று விவரித்தேன்.
“எல்லாருமே பிஸியா இருக்காங்கபோல. சரி..சரி. நான்கூட என்னமோ ஏதோன்னு பயந்துபோய்ட்டேன்”
வந்தா வா, வராட்டி போ- என்று இல்லாமல் நட்போடு அழைத்துக் கேட்ட அவருக்கு என் நன்றிகள்.
********************
“கிருஷ்ணா.. நல்லாயிருக்கியா”
“ஆங்... நல்லாயிருக்கேண்ணே. என்ன அதிசயம் ஃபோன் பண்றீங்க?”
“இன்னைக்கு நீ எழுதினது நல்லாயிருந்தது. அதான் கூப்ட்டு சொல்லலாம்ன்னு ஃபோன் பண்ணினேன்”
“நன்றிண்ணே”
இவருக்கும் நன்றி. ஃபோன் செய்ததற்கு மட்டுமல்ல, வேறொன்றுக்கும். முகநக இல்லாமல், நெஞ்சத்தக நட்பு வைத்திருப்பதற்கு!
*****************************
”பரிசல்.. ஸாரி. இந்த நேரத்துக்குக் கூப்பிடறதுக்கு. நான் ஜெர்மன்லேர்ந்து **”
“பரவால்ல சொல்லுங்க”
“*******************************************
**************************************************
*********************************************
**************************************
***************************************”
“ஐயையோ... நான் ரெண்டு மூணு நாளா பதிவுகள் பக்கமே போகல”
“இது இப்போதான். ஒரு மணிநேரம்கூட இருக்காது”
“சரி.. இப்பவே பார்க்கறேன். முடிஞ்சா கூப்ப்ட்டு சொல்றேன்”
“ரொம்ப தேங்க்ஸ் பரிசல்”
பதிவுகளைப் படித்துவிட்டு போகாமல், நண்பருக்கு ஒன்று எனும்போது அதற்கு ஆறுதலாய் இருக்கவும், உணர்ச்சிமயமான நேரத்தில் அவர் தவறேதும் செய்து பின்னாளில் வருந்தாமலிருக்க வேண்டுமே என்ற உந்துதலாலும் உடனே என்னை அழைத்து பகிர்ந்து கொண்ட அவருக்கு என் நன்றிகள்.
************************
சம்பந்தமில்லாத ரெண்டு விஷயம்.....
அபியும் நானும் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டிருந்தேன். நேத்து ரிலீஸ். ஆனா போக முடியல. காரணம் சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி எல்லாம் முக்கியமான தியேட்டரை ஆக்ரமிச்சுடுச்சு. அபியும் நானும் தூரத்துல ஒரு தியேட்டர்ல போட்டிருக்காங்க. இன்னைக்கு நிச்சயமா போகணும்.
(ஒரு சின்ன சந்தேகம்... பெண் குழந்தைகள் இருக்கறங்க தவறவிடாம பாக்க வேண்டிய படம்னு சொல்றாங்க. அப்ப நான் ரெண்டு தடவை படம் பார்க்கணுமா?)
************************
இந்தியா- இங்கிலாந்து மேட்ச் நடக்குது. டிராவிட் இப்போ, கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவுட். 328 பால்ல 136 ரன். இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தார்னா இங்கிலாந்து கேப்டன் “ஒண்ணு விளையாடச் சொல்லுங்க. இல்லீன்னா அவுட் ஆகச் சொல்லுங்க”ன்னு அம்பயர்கிட்ட அழுதிருப்பாரு போல. டிராவிட்டுக்குப் பதிலா இப்போ லட்சுமணன் இறங்கியிருக்காரு. டிராவிட், சேவக், காம்பிர் டிரஸ்ஸிங் ரூம்ல கேரம் போர்டு விளையாடறாங்களாம். ஒரு கை குறையுது, சீக்கிரம் வாங்க’ன்னு சேவக் கைகாமிச்சாராம். இதோ, டெண்டுலகர் உள்ள போறாரு. 11 ரன் அடிச்சுட்டு.
லட்சுமணன் 18 பால்ல முடிஞ்சா என்னை ரன் எடுக்க வைங்கடான்னு நின்னுட்டிருக்காரு. இதுக்கு டிராவிட்டே பரவால்ல-ன்னு இங்கிலாந்து கேப்டன் சொல்றாராம். பார்க்கலாம்!
*******************