Tuesday, December 23, 2008

அயோக்கியன்

இதை முதலிலேயே உங்களிடம் சொல்லியிருக்கிறேனா எனத் தெரியவில்லை.

அவர் பெயர் வெங்கடாசலம். எனது நண்பர். ஜனனி ஆர்ட்ஸ் என்ற பெயரில் உடுமலைப்பேட்டையில் கலைக்கூடம் நடத்தி வருகிறார். பல வருடங்களுக்கு முன் ஒரு சில சினிமாக்களுக்கு டைட்டில்ஸ் எழுதியிருக்கிறார். ஆர். பார்த்திபன், பொண்டாட்டி தேவை என்ற படம் இயக்கப் போவதாய் அறிவிப்பு வருகிறது. அதற்காக இவர் பல டிசைன்களில் படப்பெயரை எழுதிக் கொண்டு போகிறார்.

இவரது டிசைன்களைப் பார்த்த இயக்குனர் பார்த்திபன் அடக்க முடியாமல் சிரிக்கிறார். இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“நல்ல எழுதியிருக்கீங்க. ஆனா எல்லாத்துலயும் ஒரு தப்பு இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்று சொல்லி டிசைன்களைத் திருப்பித் தருகிறார்.

மீண்டும் பார்த்தும் வெங்கடாசலத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

பார்த்திபன் சொன்னார்: “ஆர்.பார்த்திபன் இயக்கும் பொண்டாட்டி தேவை” - ன்னு எழுதணும். “பார்த்திபனின் பொண்டாட்டி தேவை” -ன்னு எழுதியிருக்கீங்க. அர்த்தமே தப்பா வருது”

இவர் பதறி மன்னிப்பு கேட்க, பார்த்திபன் தொடர்ந்தார். “பரவால்ல. என் குருநாதரே இந்தத் தப்பைப் பண்ணியிருக்கார். சின்னவீடு படத்தோட ஃபர்ஸ்ட் போஸ்டர்கள்ல ’ஏ.வி.எம்மின் சின்ன வீடு’ன்னுதான் இருக்கும். அப்புறம்தான் ‘ஏ.வி.எம். அளிக்கும் சின்னவீடு’-ன்னு மாத்தினாங்க”

இது மாதிரி தெரியாமல் எத்தனையோ தவறு எழுத்தில் செய்துவருகிறோம். கலைஞர் கருணாநிதி சொல்லும் ஒரு விஷயம்... ‘முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்’ என்று எழுதாதீர்கள். ‘சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்’ என்று எழுதுங்கள் என்று. எவரும் கேட்பதாய்த் தெரியவில்லை. சட்டமன்றத்துக்கு முன்னாள், இந்நாளெல்லாம் இல்லை. உறுப்பினர்களுக்குத்தான் அதெல்லாம்!

எழுதும்போதும் பேசும்போதும் இப்படி நம்மை அறியாமலே செய்யும் தவறுகள் சில. தோசை சுட்டாச்சா, மாவு அரைச்சாச்சா - இப்படி. (அரிசி அரைச்சாச்சா, மாவு சுட்டாச்சா என்றுதானே இருக்க வேண்டும்? தோசையை சுட்டால் கருகும், மாவை மறுபடி அரைத்து என்ன ஆகப் போகிறது?)

*******************************

அகலிகை சாபம் பெற்ற கதை தெரியுமில்லையா?

கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது மோகம் கொண்ட இந்திரன், விடிவதற்கு முன்னமே சேவல் போலக் கூவ, விடிந்துவிட்டதாய் எண்ணி நீராட குளத்திற்குச் செல்கிறார் கௌதம முனிவர். அந்த நேரத்தில் கௌதம முனிவரின் வடிவம் தாங்கி பர்ணசாலைக்குள் புகுந்த இந்திரன் அகலிகையை ஆள்கிறான். சிறிதுநேரத்திலேயே இது தனது கணவன் கௌதமனல்ல என்று உணர்ந்தாலும் தன்னை மறந்து, தாகத்தால் தளர்ந்து இருக்கிறார் அகலிகை. (உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் ‘தக்கது அன்று' என்ன ஓராள் தாழ்ந்தனள் - என்கிறார் மிஸ்டர் கம்பர்!) வெளியே சென்ற கௌதமர் விடியவில்லை என்பதை உணர்ந்து திரும்பி வருகிறார். வரும்போது அறைகுறை ஆடையோடு அகலிகை எழ, இந்திரன் பூனையாக மாறி எஸ்கேப்பாகிறான். கௌதமர் அகலிகை கல்லாகவும், இந்திரன் உடல் முழுதும் ஆயிரம் பெண்குறி வரவும் சாபமிடுகிறார்.

இதைப் படிக்கும்போது, ஒன்று தோன்றியது.

'ஏன்யா, கௌதமா.. பர்ணசாலையை விட்டு வெளியே பார்க்கும்போதே, விடியலைன்னு தெரியாதா? என்னாத்துக்கு அவ்ளோ தூரம் போவ? அப்பாலிக்கா வந்து சாபம் வுடுவ? சரி.. நீ முக்காலமும் உணர்ந்த முனிவர்தானே... இது சேவல் இல்ல, என்னமோ டகால்ட்டி நடக்குது-ன்னு தெரிஞ்சுக்க வேணாமா.. அகலிகை பண்ணினது தப்புன்னா ஒரு முனிவரா நீ பண்ணினதும் தப்புதான்'

இப்படி இதைப்பத்தி தம்பி கிரேசி கிரிகூட விவாதிச்சிகிட்டிருக்கறப்ப, அவன் புதுமைப்பித்தன் ஒரு சிறுகதைல இதைக் கேட்டிருக்காருன்னான். உடனே தேடிப்பிடிச்சு நேஷனல் புக் டிரஸ்ட்ல வெளிவந்த அவரோட சிறுகதைத் தொகுப்பை வாங்கி அந்தச் சிறுகதையைப் படிச்சேன். சாபவிமோசனம். அவர் சீதைக்கும், அகலிகைக்கும் இது சம்பந்தமா விவாதம் பண்ணிக்கற மாதிரி (நீ என்னாத்துக்கு தீக்குளிச்சு நிருப்பிக்கற? உள்ளத்தூய்மைதான் முக்கியம். அத ராமன் நம்பலீன்னா அப்பறம் என்ன புருஷன்-னு சீதையை அகலிகை கேட்கறா) எழுதிருக்காரு. ரொம்ப வளவள நடை.

*****************************
அந்தக் கல்யாண வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார் அந்தக் கவிஞர். எங்கிருந்தோ அந்தப் பிரபல இயக்குனரை அழைத்து வந்து கவிஞர் முன் நிறுத்திய ஒரு நண்பர், இயக்குனரிடம் “இவர்தான் அந்தக் கவிதையை எழுதினவர்” என்கிறார். கவிஞர் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையைப் பற்றிக் குலுக்கி “அயோக்கியா..!” என்கிறார் இயக்குனர். சுற்றி இருந்தவர்க்கெல்லாம் அதிர்ச்சி, வியப்பு. கவிஞரும், இயக்குனரும், நண்பரும் சிரித்துக் கொண்டிருக்கிறனர்.

அந்த இயக்குனர் சசி. ('சொல்லாமலே' உங்களுக்குத் தெரியும் இவர் 'பூ' பட இயக்குனர் என்று!)

அவர் அயோக்கியா என்று விளிக்கக் காரணம் அப்போது நடந்த தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் கவிஞர் பாடிய ஒரு கவிதை.

கவிதை

ஊரெல்லாம் மழை பொழிய
வயிற்றிலோர் தீ எரிய
கைக்குழந்தை சுமையோடு
கார்க்கதவைச் சுரண்டுகிறாள்.

உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான்
அயோக்கியன்.

கவிஞர்..

ரமேஷ்வைத்யா.

*******************************

31 comments:

அதிரை ஜமால் said...

யாரது ...

அதிரை ஜமால் said...

\\கவிதை எழுதுகிறான்
அயோக்கியன்.\\

அட அப்படியா ...

chinnappaiyan said...

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

ச்சின்னப் பையன் said...

சூப்பர்...

Mahesh said...

இது ஒரு இடைக்கால அவியலா? :)

சலம் மேட்டர் சூப்பர்... சலம் சிவசக்தி காலனியில் கொஞ்ச நாள் இருந்தபோது பழக்கம்... பிறகு நான் உடுமலையிலிருந்து வெளியேறியது தொடர்பு இல்லை...

அகலிகை சாபம் - என்ன சொல்லவறீங்கன்னு புரியல.. மன்னிக்கவும்... முனிவருக்கு தெரிஞ்சிருக்கணும்னு சொல்றீங்களா இல்ல அந்த புத்தகம் அவ்வளவு ஈர்ப்பு இல்லையா?

//கவிதை எழுதுகிறான் அயோக்கியன்//

வாக்குமூலம் !!

SUREஷ் said...

//பர்ணசாலையை விட்டு வெளியே பார்க்கும்போதே, விடியலைன்னு தெரியாதா? என்னாத்துக்கு அவ்ளோ தூரம் போவ? அப்பாலிக்கா வந்து சாபம் வுடுவ?//


தமிழ் ஓவியாகிட்ட பேசுனீங்களா

Sridhar Narayanan said...

//முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்’ என்று எழுதாதீர்கள். ‘சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்’ என்று எழுதுங்கள் என்று. எவரும் கேட்பதாய்த் தெரியவில்லை. சட்டமன்றத்துக்கு முன்னாள், இந்நாளெல்லாம் இல்லை. உறுப்பினர்களுக்குத்தான் அதெல்லாம்!//

ஆட்சி முடிந்தவுடன் சட்டமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மீண்டும் உருவாகிறது. 13-ம் சட்டமன்றம், 14-ம் சட்டமன்றம் என்றெல்லாம் செய்திகளில் சொல்லப்படுவதை கேட்டதில்லையா? அப்ப சட்டமன்றத்திற்கும் முன்னாள் / இந்நாள் உண்டுதானே. :-)

cheena (சீனா) said...

சிந்திக்க வேண்டும் - ஆனாலும் பழக்கத்தில் இருக்கும் சொற்றொடர்களை எளிதில் மாற்ற முடியாது. ஆங்கிலத்தில் கூட சொல்வார்கள் "Staff concerned " " concerned staff" - ethu sari ?

mmmmm - அயோக்கியன் கவிதை அருமை -

Cable Sankar said...

//'ஏன்யா, கௌதமா.. பர்ணசாலையை விட்டு வெளியே பார்க்கும்போதே, விடியலைன்னு தெரியாதா? என்னாத்துக்கு அவ்ளோ தூரம் போவ? அப்பாலிக்கா வந்து சாபம் வுடுவ? சரி.. நீ முக்காலமும் உணர்ந்த முனிவர்தானே... இது சேவல் இல்ல, என்னமோ டகால்ட்டி நடக்குது-ன்னு தெரிஞ்சுக்க வேணாமா.. அகலிகை பண்ணினது தப்புன்னா ஒரு முனிவரா நீ பண்ணினதும் தப்புதான்'//

புராணக் கதைகள் எல்லாம் கருத்து கந்தசாமி கதைகள் அதனால் லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது.

அது சரி என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம்..?

ஆளவந்தான் said...

//
உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான்
அயோக்கியன்.
//
பதிவு எழுதுகிறான்
அயோக்கியன்னு-ல இருக்கனும்..

thevanmayam said...

///உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான்
அயோக்கியன்.///

நம்ம எல்லொருமே அயொக்கியர்கள்தானா???
தேவா...

ஆளவந்தான் said...

//
///உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான்
அயோக்கியன்.///

நம்ம எல்லொருமே அயொக்கியர்கள்தானா???
தேவா...
//
உண்மை சில சமயம் இப்படி கசக்கவும் செய்யும்

Nilofer Anbarasu said...

//எழுதும்போதும் பேசும்போதும் இப்படி நம்மை அறியாமலே செய்யும் தவறுகள் சில. தோசை சுட்டாச்சா, மாவு அரைச்சாச்சா //

இப்படித்த்தான், முடி வெட்டிக்க போகும்போது யாரவது எங்க போறன்னு கெட்ட, முடி வெட்ட போறேன்னு சொல்லுவோம்.

Naadodi said...

Nalla padhivu!

RAMASUBRAMANIA SHARMA said...

"NALLA PATHIVU"....

RAMASUBRAMANIA SHARMA said...

YES PL...

சின்ன அம்மிணி said...

நக்கீரரே, இப்படி பொருட்குற்றம் கண்டுபிடித்தால் எப்படி :)

அதிஷா said...

முதல் மேட்டர் ரிப்பீட்டு
அது ஏற்கனவே எழுதின மேட்டர்தான்..

மற்ற இரண்டு மேட்டரும் புதுசு...

தாமிரா said...

முதல் பகுதியை ரசித்தேன். ரமேஷின் கவிதை தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரமேஷ் வைத்யா said...

அவைகள், இவைகள் என்று பிரயோகிப்பது கருணாநிதியின் வழக்கம். அவருடைய தமிழறிவு அவ்வளவுதான். அவை இவை என்பவையே பன்மைதான் என்பதே அவருக்குத் தெரியாது.

narsim said...

பார்த்திபன் மேட்டர் கலக்கல் தலைவா..

சில நேரங்களில் வார்த்தைகள் அப்படித்தான்... விளையாடிவிடும்..

PoornimaSaran said...

சூப்பர்:))

ஆட்காட்டி said...

;

ஆளவந்தான் said...

//
ம். கலைஞர் கருணாநிதி சொல்லும் ஒரு விஷயம்... ‘முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்’ என்று எழுதாதீர்கள். ‘சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்’ என்று எழுதுங்கள் என்று. எவரும் கேட்பதாய்த் தெரியவில்லை.
//

கலைஞர் இந்த மாதிரி சில சமயம் உளறி கொட்டுவதுண்டு..

”சட்டமன்ற உறுப்பினர்” என்பது ஒரெ சொல். இரண்டு சொற்கள் அல்ல..

அதே போல தான் “அமெரிக்க அதிபர்” என்பதும்.


இதே போல தான் “சித்தி” தொடரின் வெற்றி விழாவின் போது. ”சித்தி” வினாயகரின், சித்தியும், ராதிகாவின் சித்தியும் ஒன்று என்று பொருள்பட பேசினார்.

என்னத்த சொல்றது, சில சமயம், ”பெரியவுங்க சொன்னா பெருமாள் சொல்ற மாதிரி”-னு தெரியாம.. இப்டி தான் சின்ன புள்ள தனமா வெளியில சொல்லிடுறேன்.

அனுஜன்யா said...

சலம் மேட்டர் படித்த ஞாபகம் இருக்கிறது. (நாங்க உங்க ஆதி காலத்து வாசகர்கள்!).

//தமிழ் ஓவியாகிட்ட பேசுனீங்களா// ஹா ஹா. சுரேஷுக்கு ரொம்பவே குசும்பு

ரமேஷ் வைத்தியாவை உங்களுக்கு மிகப் பிடிப்பதன் காரணம் புரிகிறது. ரமேஷ், இது நியாயமா?

அனுஜன்யா

A N A N T H E N said...

//தோசை சுட்டாச்சா, மாவு அரைச்சாச்சா - இப்படி.//
‘ஆகு பெயர்’ என்ற இலக்கண விதிமுறை இதைத் தற்காப்பதாக நான் உணர்கிறேன், இல்லையா???
தோசையாக சுட்டாச்சா?
மாவாக அரைச்சாச்சா
தமிழறிவு எனக்கு அரைகுறைதான், தெரியாமல் உளறி இருந்தால் லூசுல விடுங்க... தனியா பேசி தீத்துக்கலாம்...

//உதவுகிறான் உத்தமன் மறுக்கிறான் மத்திமன் கவிதை எழுதுகிறான் அயோக்கியன்.//

கவிஞரின் கவிதையை மீண்டும் மீண்டும் படித்தேன், அருமை. சுருக்கமாக இருந்தது. கவர்ந்தது.
ரெண்டாவது வாட்டி படிச்சப்போ... கொஞ்சம் வில்லங்கமா யோசிக்கத் தோனுச்சு
கவிதை எழுதும் கவிஞனானவன், ஒன்று மறுத்திருக்க வேண்டும், அல்லது உதவி இருக்க வேண்டும்... அதன் பிறகே கவிதை எழுதி இருப்பான். அப்படியானால், அயோக்கியன் என்பவன் உத்தமனிலும் மத்திமனிலும் கலந்து இருப்பவனா???
சரி... சரி... புரியுது, லூசுல விடுங்க...!

வால்பையன் said...

அயோக்கியன்
பெயர் காரணம் சூப்பர்!ஏன் என்னாச்சு?

எதுக்குனு புரியுதா?

செல்வேந்திரன் said...

முன்பெல்லாம் யாராவது சினிமாக்காரர்களைச் சந்தித்தால், அந்தக் கதைகளை என்னிடம்தான் சொல்வார். இப்போது அவரது அன்புத்தம்பி பட்டியலில் இருந்து விடுபட்டுவிட்டேன் போல் இருக்கிறது. ரமேஷ் அண்ணா 'ஐ மிஸ் யூ' :(

கார்க்கி said...

என்ன ஆச்சு சகா?ஆளையேக் காணொம்?

Syam said...

:-)

கதிர் said...

\\கவிதை எழுதுகிறான்
அயோக்கியன்.\\

Super

:-)