Thursday, December 11, 2008

STOP THIS NONSENSE!

அங்கீகாரம் என்பதற்குத்தான் எல்லாருமே ஏங்குகிறோம். கணவன் தன் சமையலை பாராட்ட மாட்டானா என்று அவன் முகம் பார்க்கும் மனைவிகளாலும், டீச்சர் கடகடவென்று டிக் அடித்துக் கொண்டே புரட்டுவார் என்று தெரிந்தும் அழகழகான கையெழுத்தில் ஹோம் வொர்க்கைச் செய்து, அவர் கையெழுத்துப்போடும் போது, நிமிர்ந்து பார்த்து தன் எழுத்தை மெச்ச மாட்டாரா என்று ஏங்கும் மாணவ, மாணவிகளாலும், முதலாளி சொன்ன வேலையைச் செய்துவிட்டு, அவரது முதுகு தட்டலுக்குக் காத்திருக்கும் தொழிலாளிகளாலும், கடைக்கண் பார்வையால் ‘உன் விசுவாசத்தை மெச்சினேன்’ என்றொரு வார்த்தை கிடைக்காதா என்று ஏங்கும் தொண்டர்களாலும் நிறைந்ததுதான் இவ்வுலகம்.

ஆனால், அங்கீகாரம் என்ற பெயரில் உங்களைத் தவறாக ஏற்றிவிட்டுக் கொண்டே இருக்கும் நண்பர்களால் என்ன பயன்? அவர்கள் மறைமுகமாக நம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒரு பெண். அவரது அயராத உழைப்பில் இருபது வருடங்களுக்கு மேல் நின்று நிலைத்து, ஏற்றுமதியில் பேர் வாங்கிய நிறுவனங்களில் ஒன்று இது.

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். முதன் முதலாக ஒரு வெளிநாட்டு BUYERக்காக ஆயத்த ஆடைகள் தயாரித்து, அது தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்தது. மனம் தளர்ந்து, ‘என்னுடைய உற்பத்தியில் நீங்கள் சொல்லுமளவு குறைகள் ஏதுமில்லை’ என்று வாதாடினார் எங்கள் மேடம். இன்ஸ்பெக்‌ஷன் செண்டரில் வைத்து நடந்த இந்த வாக்குவாதங்களின் போது, அந்த BUYERன் இந்திய ஏஜண்ட் எங்கள் மேடத்தை தனியாக அழைத்தார்.

“லுக்... நீங்கள் வாதாட வேண்டியது இங்கே அல்ல. உங்க ஊழியர்கள்கிட்டதான். உங்க GOODSஐ நீங்களே CHECK பண்ணிக்கலாம். இதை ஓக்கே செய்ய எங்களுக்கு அஞ்சு நிமிஷம்தான் ஆகும். ஆனா ஒரு வளரப்போற நிறுவனமான உங்களுக்கு அது நல்லதில்ல. இதுதான் ஓக்கேன்னா, இதுக்கு மேல முயற்சிக்க முடியாம உங்க நிறுவனமும், நீங்களும் நின்றுவிட வாய்ப்புண்டு” என்று அறிவுறுத்தினார்.

‘அன்றைக்கு ‘உங்க உற்பத்தி ஏ-ஒன்’ என்று சமாதானப்படுத்தி, சமரசம் செய்து கொண்டு அனுப்பப் பட்டிருந்தால் இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்’ என்று எங்கள் மேடம் அடிக்கடி சொல்வதுண்டு.

அந்தத் தரக்கட்டுப்பாட்டில் ஓகே ஆகவில்லை என்றால் RECHECK செய்யப்பட்டு, அது ஓக்கே ஆகிப் போய்விட வாய்ப்புண்டு. ஆனால் தவறான அங்கீகாரமும், வெற்றுப் பாராட்டுக்களும் என்னப் போன்ற ஒருவனுக்கு முன்னேற்றத்தைத் தரவே தராது.

எதுக்குய்யா இப்போ இந்தக் கதையெல்லாம் என்று கேட்பவர்களுக்கு..

பாரிஸ் திவா என்றொருத்தர் தமிழில் சிறந்த முதல் மூன்று இடங்களைப் பிடித்த வலைப்பூக்கள் என்று லக்கிலுக், பரிசல்காரன், அதிஷா மூன்று பேரையும் வெளியிட்டிருக்கிறார். என்ன கொடுமை இது?

நிச்சயமாக எனக்கோ, மேலே குறிப்பிட்டுள்ள என் நண்பர்கள் லக்கிலுக், அதிஷாவிற்கோ இந்த நம்பர் கேமில் எள்ளளவும் உடன்பாடில்லை. நாங்கள்தான் சிறந்ததென்றால் சிறந்ததை அவர் என்னவென்று வகைப்படுத்துவார்?

இதுபற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டபோதே கோவம் வந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதே சரி என்று பேசாமல் இருந்தேன். ஆனால், இப்படி முடிவுகள் வெளியிட்டு எங்கள் நண்பர்கள், எங்களைப் படிக்கிறவர்கள் முன் எங்களை தலைகுனிந்து நிற்கச் செய்கிறார் அவர். இன்னும் எழுத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பிற்கு முட்டுக்கட்டையாகவே இது போன்ற பிதற்றலான கருத்துக் கணிப்புகளும், பாராட்டுகளும் இருக்கின்றன.

எங்கள் எழுத்தின் தரம் என்ன என்பது எழுதி முடித்துப் படிக்கும்போதே எங்களுக்குத் தெரியும். மரண மொக்கை எது, நன்றாக எழுதப்பட்டது எது என்பதை அறிந்தேதான் இருக்கிறேன். உதாரணத்திற்கு நேற்று எழுதப்பட்ட ஒண்டிக்கட்டை உலகம் புத்தக விமர்சனம் கொஞ்சமும் சரியில்லை என்பதை உணர்கிறேன். வேலைப்பளு, வேறு சில டென்ஷன்களால் எழுதித் தொலைத்து பதிவேற்றம் வேறு ஆயிற்று. (இந்த லட்சணத்தில் அது 200வது பதிவு!)

இப்படிப்பட்ட நிலையில் சும்மா ஒரு பத்து, பதினைந்து பேரைப் போட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தி, முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என்று வெளியிட்டு சிறப்பாய் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களின் சாபத்தையும், கோபத்தையும் எங்கள் பக்கம் திருப்பி விட்டிருக்கும் இவரது இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இனியும் இவர் இதுபோன்ற வேலைகளைத் தொடரவேண்டாமெனக் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்.

39 comments:

Ramesh said...
This comment has been removed by the author.
Ramesh said...

I feel the pain!

Just with 93 votes, it is illogical to make conclusions.

Ramesh said...

----

Is your Madam, Lalitha wife of ex Bank of India GM?

Cable சங்கர் said...

ஃபரியா..வுடு.. ஃப்ரியாவுடு ..ஃப்ரியாவுடு மாமே..

ILA (a) இளா said...

பரிசல்,
அவர் குடுப்பது அவர் இஷ்டம், விருதுகள் வாங்கிக்கிறது உங்க இஷ்டம். இதை பெரிசுபண்ணாதீங்க. காரணம் பின்னாடி சொல்றேன்

கார்க்கிபவா said...

பரிசலா இப்படி டென்ஷன் ஆகறது????????? அவர்தான் மங்களூர் மேட்டர்லயும் விளையாடியவர். ஆனா சிவாவே மறுபடியும் போய் பல பின்னூட்டம் போட்டார். வெறுத்து போய் வந்துட்டேன்.இல்லைன்னா உங்களுக்கு இன்னும் சில ஓட்டு போட்டு பரிசல் தி பெஸ்ட்னு மொத பரிச தட்டி இருக்கலாம். :)))))

ஹலோ திருப்பூரா?

சகா பரிசல் இருக்காரா?

என்னது அவர்தானா?

ஹே வொய் க்ரையிங்?

வாட் ஹேப்பன்?

டோன்ட் வொரி

பி ஹேப்பி

கூல் டவுன்..

Mahesh said...

நீங்க அடிக்கடி மேடத்தைப் பத்தி பேசறதால, அவங்களை நேரில் சந்திக்கணும்கறா ஆர்வம் அதிகமாகுது.

இது மாதிரி விஷயத்தை எதிர்த்து ஜம்னு பதிவு போடறீங்க பாருங்க... அதுக்கெ உங்களை தனியா பாராட்டணும். இனிமேலாவது இதுமாதிரியான அரைவேக்காடு கணிப்புகள் நிற்கட்டும்.

சென்ஷி said...

Why Tension.. Relax Mamu :-)

கோவி.கண்ணன் said...

கூல் கூல் !

பாரிஸ்.திவா பரிசு கொடுத்தால் என்னிடம் கொடுங்க :)

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் கோவமா பரிசல் ஓட்டாதிங்க :P

குடுகுடுப்பை said...

அவரு கடைக்கு கூட்டம் கூட்ட அப்படி பண்றார் அவ்வளவுதான்.ஆனாலும் இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும்

Athisha said...

பின்னூட்ட டுபுரித்தனம்...

anujanya said...

உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் அனுஜன்யா, வெண்பூ, நர்சிம், சென்ஷீ இந்த வலைபூக்களைத் இருட்டடிப்பு செய்து, உண்மையிலேயே இது வரை கேள்விப்படாத 'லக்கி லுக், பரிசல்காரன், அதிஷா' என்ற பதிவர்கள் முதல் மூன்று இடம் என்று வந்தபோதே நாங்கள் முடிவுக்கு வந்துவிட்டோம் - இதெல்லாம் சும்மா ஐ வாஸ் சார். கண்டுக்காதீங்க :)))))))

Kumky said...

இதற்கெல்லாம் பதிவு போட்டு பதில் சொல்லனுமா..?
திவா பற்றி யாருக்கும் தெரியாதா..?
:-((

Nilofer Anbarasu said...

கருத்துக்கணிப்பு நடத்தினாலே பிரச்சனை தாம்பா..... :)

Sundar சுந்தர் said...

//இதுதான் ஓக்கேன்னா, இதுக்கு மேல முயற்சிக்க முடியாம உங்க நிறுவனமும், நீங்களும் நின்றுவிட வாய்ப்புண்டு//
ரொம்ப சரி!
//எங்கள் எழுத்தின் தரம் என்ன என்பது எழுதி முடித்துப் படிக்கும்போதே எங்களுக்குத் தெரியும். மரண மொக்கை எது, நன்றாக எழுதப்பட்டது எது என்பதை அறிந்தேதான் இருக்கிறேன். //

அப்ப சரி. என்னடா இவ்வளவு மொக்கையா இருக்கு. ஏன் தான் இதை போல பதிவு போடறார் சில சமயம் தோணும்போது. நாம திட்ட வேண்டாம். அவரே திட்டிக்குவார் என்று தான் குறை சொல்லி பின்னூட்டம் எதுவும் நான் போடறதில்லை நீங்க இட்டு போட்டு நிரப்பிக்கீங்க :)

பரிசல்காரன் said...

//Ramesh said...

----

Is your Madam, Lalitha wife of ex Bank of India GM?//

No sir.

Nilofer Anbarasu said...

இந்த கருத்தை உங்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருபவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும். நான் உங்களுடைய பதிவுகளை கிட்டத்தட்ட ஆரம்பத்தில் இருந்தே படித்து வருகிறேன். ஆனால் எல்லா பதிவுகளுக்கும் பின்னோட்டம் போட்டதில்லை, நீங்கள் போட்ட பதிவை படித்துவிட்டு ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றினால் மட்டுமே பின்னூட்டம் போட்டிருக்கிறேன். பதிவை படித்துவிட்டு கருத்தே (ஆதரவாகவோ/எதிராகவோ) சொல்லாமல் சும்மா உங்களை பாராட்டி பல பின்னூட்டங்களை நான் தொடர்ந்து உங்கள் பதிவில் பார்த்து வருகிறேன். சுமாரான (சுவாரசியம் குறைவான) பதிவைக் கூட பலமாக பாராட்டி பல பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். இது மாதிரி செய்வதால், பின்னர் அவர்களே நிஜமாக பாராட்டினால் கூட அந்த வார்த்தைகளில் உள்ள வீரியம் குறைந்து விடும் என்பது என் கருத்து. எதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன்... யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க.

பரிசல்காரன் said...

@ Nilofer Anbarasu//


Ya. A valid Point.

Most of my close friends 'll call and scold me, or point out if I wrote something very mokkaily.(!)

and If some frnds didn't comment me, I came to know, 'Oh.. ITs not up to the mark'

// எதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன்... யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க.//

No Problem! I understand you as well as others will.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குப் பாரிஸ் திவாவைப் பற்றித் தெரியாது. ஆனாலும், பிரபலமான பதிவர்கள்தானே லக்கி லுக், நீங்கள் அதிஷா மூவரும். அந்த அளவில் அது சரியாகவே வந்திருக்கிறதென்று நினைக்கிறேன்.

மற்றபடி அன்பரசு சொன்னதற்கு ஒரு ரிப்பீட்டே!

வால்பையன் said...

அவர் படித்ததில் பிடித்ததுன்னு சொல்லியிருக்கார், இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்.

நீங்க கூடத் தான் வலைச்சரத்தில் நீங்கள் விரும்பி படிக்கும் வலைகளை வரிசை படுத்தியுள்ளீர்கள், யாராவது வந்து நான் அவ்வளவு வொர்த் இல்லப்பான்னு சொன்னாங்களா என்ன?

சும்மா சீன் போடாதிங்க பாஸு!
எங்களுக்கும் சூது தெரியும்

Saminathan said...

// அதிஷா said...
பின்னூட்ட டுபுரித்தனம் //

அதிஷா, டுபுரித்தனம் என்றால் என்ன..? வரையறுக்க..

ரமேஷ் வைத்யா said...

அப்பாடி... இவ்ளோ கோபப்படுவீங்களா? கொஞ்சம் சூதானமாத்தேன் இருக்கணும் போல்ருக்கே..

narsim said...

200க்கு வாழ்த்துக்கள்...

Thamira said...

நேற்று கார்க்கி சொல்லித்தான் இப்பிடி ஒண்ணு நடந்தது எனக்குத்தெரியும். அதுல எம்பேரும் இருந்ததாமே.. எல்லாம் ஒரே நகைச்சுவையாக இருக்கிறது.. போங்கோ.!

narsim said...

//உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் அனுஜன்யா, வெண்பூ, நர்சிம், சென்ஷீ இந்த வலைபூக்களைத் இருட்டடிப்பு செய்து//

அனுஜன்யா.. அடுத்த வாரம் மும்பை வர்றேன் ஒரு மீட்டிங்.. அப்படியே "தாஜ்"ல உங்களுக்கு ட்ரீட் இருக்கு...டி..

☼ வெயிலான் said...

// அனுஜன்யா.. அடுத்த வாரம் மும்பை வர்றேன் ஒரு மீட்டிங்.. அப்படியே "தாஜ்"ல உங்களுக்கு ட்ரீட் இருக்கு...//

:)))))

anujanya said...

சூசன் பத்தி படிச்சப்புறமும், மும்பை வர்றது தெகிரயந்தான்! என்னிக்குன்னு கரீட்டா சொன்னா, கராச்சியிலிருந்து 'பரிசல்' வரவழைக்க அனுகூலமாக இருக்கும் :)

அக்னி பார்வை said...

நேற்று ராபின் சர்மா புத்தகம் படித்தபோது பார்த்த வாசகம்..

“Success is the Greatest Failure".

நீங்கள் தேர்வு செய்யபட்டிருப்பது, சரியானதே

rapp said...

//உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் அனுஜன்யா, வெண்பூ, நர்சிம், சென்ஷீ இந்த வலைபூக்களைத் இருட்டடிப்பு செய்து, உண்மையிலேயே இது வரை கேள்விப்படாத 'லக்கி லுக், பரிசல்காரன், அதிஷா' என்ற பதிவர்கள் முதல் மூன்று இடம் என்று வந்தபோதே நாங்கள் முடிவுக்கு வந்துவிட்டோம் - இதெல்லாம் சும்மா ஐ வாஸ் சார். கண்டுக்காதீங்க :)))))))//

இதுல ஏன் என் பேர் விடுபட்டிருக்கு? இந்த வலையுலக அரசியலை கன்னாபின்னாவெனக் கண்டித்து வெளியேறுகிறேன்:):):)

வண்ணான் said...

ILA said...

பரிசல்,
அவர் குடுப்பது அவர் இஷ்டம், விருதுகள் வாங்கிக்கிறது உங்க இஷ்டம். இதை பெரிசுபண்ணாதீங்க. காரணம் பின்னாடி சொல்றேன்
//

காரணத்தை நானே சொல்லிடுரேன்.. :)


தமிழ்மணமும் விருது கொடுக்க போறாங்களாம் :)

பரிசல்காரன் said...

என்னமோ சொல்லீட்டுப் போங்க என்று தன் கருமமே கண்ணாய் இருக்கும் த்மிழ் ஸ்டுடியோ.காமைப் பாராட்டுகிறேன்!

பரிசல்காரன் said...

//
“Success is the Greatest Failure".

நீங்கள் தேர்வு செய்யபட்டிருப்பது, சரியானதே//

ரெண்டையும் சேர்த்துப் படிச்சா, வேற அர்த்தம் வருதே பாஸூ!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

விருது கொடுப்பவர் பாரிஸ் திவா...தனிப்பட்ட முறையிலே விருது.வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிட்டுப்போங்க.
தினகரன் கருத்து கணிப்பு,அழகிரி ஞாபகம்தான் வருது.

Anonymous said...

//Nilofer Anbarasu said...

இந்த கருத்தை உங்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருபவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும். நான் உங்களுடைய பதிவுகளை கிட்டத்தட்ட ஆரம்பத்தில் இருந்தே படித்து வருகிறேன். ஆனால் எல்லா பதிவுகளுக்கும் பின்னோட்டம் போட்டதில்லை, நீங்கள் போட்ட பதிவை படித்துவிட்டு ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றினால் மட்டுமே பின்னூட்டம் போட்டிருக்கிறேன். பதிவை படித்துவிட்டு கருத்தே (ஆதரவாகவோ/எதிராகவோ) சொல்லாமல் சும்மா உங்களை பாராட்டி பல பின்னூட்டங்களை நான் தொடர்ந்து உங்கள் பதிவில் பார்த்து வருகிறேன். சுமாரான (சுவாரசியம் குறைவான) பதிவைக் கூட பலமாக பாராட்டி பல பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். இது மாதிரி செய்வதால், பின்னர் அவர்களே நிஜமாக பாராட்டினால் கூட அந்த வார்த்தைகளில் உள்ள வீரியம் குறைந்து விடும்//

பரிசல் என் கருத்தும் இதேதான். விமர்சனத்தையும், ஜால்ராவையும் பிரித்தறியத்தெரியும் உனக்கு. அதனால் வேண்டாம் வீன் கவலை.

மேலும் அவர் சொன்னத வச்சுகிட்டு நாந்தான் மொதோ இல்ல ரெண்டாவதுன்னு கிரீடம் வச்ச மாதிரி அலப்பற பண்ணுர ஆள் இல்லை நீ. அவருக்குப் பிடிச்சத அவரு சொல்றாரு. அவரு என்ன அடிப்படையிலன்னு எனக்குத் தெரியல.

வெற்றிகளை உன் தலைக்கும் தோல்விகளை உன் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதே.

கணினி தேசம் said...

//ஹலோ திருப்பூரா?

சகா பரிசல் இருக்காரா?

என்னது அவர்தானா?

ஹே வொய் க்ரையிங்?

வாட் ஹேப்பன்?

டோன்ட் வொரி

பி ஹேப்பி

கூல் டவுன்..//

Repeattaeee...!!

சென்ஷி said...

//அனுஜன்யா said...
உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் அனுஜன்யா, வெண்பூ, நர்சிம், சென்ஷீ இந்த வலைபூக்களைத் இருட்டடிப்பு செய்து, உண்மையிலேயே இது வரை கேள்விப்படாத 'லக்கி லுக், பரிசல்காரன், அதிஷா' என்ற பதிவர்கள் முதல் மூன்று இடம் என்று வந்தபோதே நாங்கள் முடிவுக்கு வந்துவிட்டோம் - இதெல்லாம் சும்மா ஐ வாஸ் சார். கண்டுக்காதீங்க :)))))))
//

ஆஹா.. இந்த விஷயம் எனக்குத் தெரியாம போச்சே.. :)))

வீணாபோனவன் said...

பரிசல் said:
//என்னமோ சொல்லீட்டுப் போங்க என்று தன் கருமமே கண்ணாய் இருக்கும் த்மிழ் ஸ்டுடியோ.காமைப் பாராட்டுகிறேன்!//

மிகவும் சிரித்தேன்...சும்மா கண்ணுல படுற எல்லா சைட்லயும் copy & paste பண்ணிட்டு போய்க்கின்னேருக்காரு தமிழ் ஸ்டுடியோ.காம்... :-)

-வீணாபோனவன்.

selventhiran said...

இப்பின்னூட்டத்தின் மூலம் அடியேன் தங்களது பழைய பதிவுகளை அகழ்வாராய்ச்சி (ஸ்பெல்லிங் கரெக்டா?!) செய்து கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.