Saturday, December 6, 2008

வீக் எண்ட் புதிர்களின் விடைகள் - அதிரடி ரிலீஸ்!

1) பதிவர்கள் குறித்த கேள்விகள்....


a) இவர் பெயரை திருப்பிப் போட்டால் என்னா? நேராய்ச் சொன்னால் சுத்தமான நெடில்.


தூயா

(யாது = என்ன என்பதால் என்னா’ என்று நெடிலில் கொடுத்தேன். சுத்தமான = தூய)

b) இவர் பெயரின் கடைசி எழுத்தில் ஒரு நல்ல படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது!

வெண்பூ (ஆட்டைக்கு வரவே இல்லை இவர்!)

c) நல்லது... கர்ணனாக சிவாஜி நடித்ததும்!

-இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓரெழுத்து எடுத்து இந்தப் பதிவரைக் கண்டுபிடியுங்க பாஸ்!

நர்சிம்.

d) முதல் + கடைசி எழுத்து.. ம்ம்ம்... ஏதாவது சாப்பிடணுமே..

நடு எழுத்து எழுத உதவும்! கண்ணிலும் எழுதலாம்.

பழமைபேசி

e) முதல் + கடைசி எழுத்து = வடஇந்திய யார்?
இரண்டாவது + கடைசி எழுத்து = வெற்றி
மூன்றாவது + கடைசி எழுத்து = தீவிரவாதிகளிடமும் இருந்தது, நம்ம படைவீரர்களிடமும் இருந்தது!

கோவி கண்ணன்

f) முதல்+ கடைசி எழுத்து = கொஞ்சம் நீட்டிச் சொன்னால் ஆங்கிலநிலா.

இரண்டாவது + கடைசி எழுத்து = லிங்குசாமிக்கும், பி.டி.உஷாவுக்கும் பிடிக்கும்!

இதற்கு முன்னவருக்கும், இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.


முரளிகண்ணன்

பதிவர்கள் குறித்த மேலுள்ள ஆறு கேள்விக்கும் பொதுவான ஒரு க்ளூ... முதல் கேள்வி, இரண்டெழுத்துப் பதிவர், இரண்டாவது கேள்வி மூன்றெழுத்துப் பதிவர்.. மூன்றாவது – நான்கெழுத்து........ இப்படியே தொடருங்கள்..

என்ன ஈஸீயாய்டுச்சா இப்போ?


2) (அ) உங்களுக்குச் சொந்தமானது, உங்களை விட அடுத்தவர்களே அதிகம் பயன்படுத்துவது எது?

பெயர்.

(ஆ) யாருக்காக உபயோகப் படுத்தப் படுகிறதோ, அவர்கள் வாங்கமுடியாது. அது என்ன?

சவப்பெட்டி

3) எட்டுமணிக்கு பார்ட்டிக்கு விருந்தினர்கள் வந்தாயிற்று. 9 மணியளவில் இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சென்றுவிட்டார்கள். பார்ட்டி தொடர... 10 மணியளவில் மீதி இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விடைபெற்றுப் போய்விட்டார்கள். மீதமிருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 11 மணிக்கு போய்விட்டார்கள்.. இப்போது எட்டுபேர் பார்ட்டியைத் தொடர்கிறார்கள்...

8 மணிக்கு இருந்த மொத்தவிருந்தினர் எத்தனைபேர்?

27 பேர்.

4) லாஜிக்கலாகச் சொல்லுங்கள்.. ரோடுகளில் மேன்ஹோல் இருக்கிறதல்லவா? அதற்கு சதுரமூடி, வட்டவடிவ மூடி.. இரண்டில் எது பெஸ்ட்? ஏன்?

வட்டவடிவமூடி. பல காரணங்கள்... உருட்டிக் கொண்டு போகலாம் (வேலை செய்யும்போது) அதனால் ஆட்கள் கம்மிதான் தேவை. சதுரமென்றால் மூலைவெட்டில் உள்ளேவிழ வாய்ப்புண்டு.

நர்சிம் சொன்ன ‘விளிம்பு தட்டாது’ புதிய சிந்தனை! சபாஷ்.

5) நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிளும் சேர்த்து 40 பைசா. அதே, நாலு ஆப்பிளும், மூன்று ஆரஞ்சும் சேர்த்து 37 பைசா என்றால் ஒரு ஆரஞ்சு எவ்வளவு பைசா?

7 பைசா.

##இந்தக் கேள்விக்கு 7 பைசா என்று மட்டும் விடை எழுதுபவர்களுக்குத்தான் மார்க் குடுப்பார்களாம். ஆரஞ்சு எத்தனை என்று மட்டும் தானே கேள்வி. ஆரஞ்சு 7, ஆப்பிள் 4 என்றால் நோ மார்க்! இங்கே அல்ல. ஐ.ஏ.எஸ்-ஸில்!

## அதேபோல அனுஜன்யா, தாரணிப்ரியா எந்த ஊர்ல இந்தவிலை என்று கேட்டிருக்கிறார்கள். பைசாவில் கேட்டதும் உங்கள் பர்ஃபெக்‌ஷனை சோதிக்க. ஒருத்தர் 7 ரூபா, 4 ரூபா என்று மாட்டிக்கொண்டுவிட்டார்.

6) ஒரு தெருவில் குறிப்பிட்ட அளவு எதிரெதிர் வரிசையிலான வீடுகள் உள்ளன. ஒரு பக்கம் 1,2,3,4 என்று ஆரம்பித்து எதிர்வரிசையில் அப்படியே எண்கள் தொடர்ந்து கீழ்வரிசையில் போடப்பட்டுள்ளன.(அதாவது 1ம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீடு கடைசி நம்பர்)

பத்தாம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீட்டு எண் 23 எனில்.. மொத்தம் எத்தனை வீடுகள் அந்த வீதியில்?

32.

7) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி..

தாஜ்ஹோட்டலின் பாருக்கு சென்று ஒருத்தன் அவசரமாக தண்ணீர் கேட்கிறான். பார் அட்டெண்டர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, தனது துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றிப்பொட்டில் வைக்கிறான்.


ஒரு நிமிடம் கழித்து, தண்ணீர் கேட்டு வந்த கஸ்டமர் சிரித்தபடி நன்றிகூறி வெளியேறுகிறான்.

என்ன மேட்டர்?

விக்கல்.

8) இது லாஜிக்கல்...


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கொன்று என்று சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. (ஜூஸெல்லாம் போடலைப்பா!) கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

கடைசி ஆளுக்கு கூடையோடு கொடுக்கப்பட்டது!

9) க்ரிக்கெட் க்விஸ்... 1946ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியா டூர் ரத்தானது. ஏற்கனவே முடிவான இந்தத் தொடர் ரத்தானதற்கு காரணம்..

அ) போருக்குப்பின் உடனே பயணம் சாத்தியமில்லை என மே.இ. பயணக்குழுவினர் மறுத்துவிட்டதால்.

ஆ) மே.இ.போர்ட், இந்தியாவின் செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்டில் திருப்திப் படாததால்.

இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால்.

ஈ) மேற்கிந்திய வேகப்பந்து வீரர்களைப் பற்றி கேள்விப்பட்டு, இந்திய வீரர்கள் விளையாட மறுத்ததால்.

நம்புங்கள்! இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால். - இதுதான் சரியான பதில்!

(தாரணி.. நெக்ஸ்ட் டைம் டென்னிஸ் ஓக்கே?)

10) இது இளையராஜாவின் பிரபலமான ஒரு பாட்டின் இரண்டாவது சரணம்..

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

கலைபலவும் பயிலவரும்
அறிவுவளம் பெருமைதரும்

என் நினைவும் கனவும் இசையே
இசை இருந்தால் மரணமேது

என் மனதில் தேன் பாய...

பல்லவிக்குப் போக இன்னும் ஒரு வரிதான் பாக்கி. அதைச் சொன்னால் பாடல் ஈஸீயாகத் தெரிந்துவிடும்.

கண்டுபிடுங்க பார்க்கலாம்!

...தமிழே நாளும் நீ பாடு...


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே...


கலந்து கொண்டு கலக்கிய எல்லாருக்கும் நன்றி!!!

9 comments:

இராம்/Raam said...

பதில் போட்டாச்சா? குட் குட் குட்... :)
எல்லாமே தெரிஞ்ச கேள்வியா இருக்கேன்னு தான் அமைதியா இருந்தேன்... :))

நட்புடன் ஜமால் said...

பதில் வந்தாட்ச்சி...

Mahesh said...

நான் பதில் சொன்னா 100/100 எனக்கே கெடச்சுரும்னுதான் பதில் சொல்லாமயே இருந்தேன்....
மத்தபடி தெரியாதுன்னெல்லாம் நெனச்சுராதீங்க... :)

Kumky said...

உண்மையிலேயே எனக்கு பதில் இப்போதாங்க தெரியும்...
(நம்ம சோம்பேரித்தனத்தைத்தான் நாடே அறியுமே.

பழமைபேசி said...

ஓ! நம்ம பேர்க்குப் பொறகால இவ்வளவு அர்த்தங்கோ இருக்குதுங்ளா? தெரிய வெச்சதுக்கு நொம்ப நன்றிங்கோ!!

அத்திரி said...

ஏன் இவ்வளவு சீக்கிரமா விடைய சொன்னீங்க. இந்த வாரமாவது ஒரு கேள்விக்காவது பதில்)))))) சொல்லனுமினு இருந்தேன். இப்படி கெடுத்திட்டியளே?????!!!!

சிவக்குமரன் said...

indha paatukku link thara mudiyuma?

anujanya said...

கே.கே.

புதிர்கள் சுவாரஸ்யமாகவும் இருந்தன. தொடருங்கள்.

அனுஜன்யா

rapp said...

//பதில் போட்டாச்சா? குட் குட் குட்... :)
எல்லாமே தெரிஞ்ச கேள்வியா இருக்கேன்னு தான் அமைதியா இருந்தேன்... :))

//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன் :):):)