Monday, December 1, 2008

அவியல் 01.12.08 – ஸாரி லக்கிலுக்!
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தலைப்பு சூடான இடுகையில் இடம்பெற கொடுக்கப்பட்டதேயன்றி வேறொரு மண்ணாங்கட்டியும் இல்லை.

**********************

வாரணம் ஆயிரம் பார்த்தேன் நேற்று. எனக்குப் படம் பிடித்திருந்தது. பாடல்களின் பிக்சரைசேஷனில் தற்போதைய இயக்குனர்களில் கௌதம் மேனன் ‘த பெஸ்ட்’ என்று அடித்துச் சொல்லலாம்.

லக்கிலுக்கின் விமர்சனத்தில் ஷமீரா ரெட்டி சரியில்லை என்று எழுதியிருந்ததற்கு ‘ஆமாம்’ போட்டிருந்தேன். அது ஸ்டில்களைப் பார்த்து. ஆனால், Sorry Lucky... படத்தில் பார்த்தபோது பிடித்திருந்தது. மாநிறம், கோதுமை மாதிரி வழு வழு உடல்.. நல்ல உயரம். ஒரு மார்க்கமான பார்வை. செழித்த உதடுகள். என் ஃபேவரைட் ஃபிகர் திவ்யா ஸ்பந்தனா-வுடன் போட்டி போடும் அளவுக்கு இருந்தார் என்றால் மிகையில்லை!

படத்தில் சரோஜாதேவி ஸ்டைலில் வரும் சிம்ரனும் என்னைக் கவர்ந்தார். (படிக்கற சரோஜதேவி அல்ல.. பார்க்கிற சரோஜாதேவி)

அப்புறம் பாடல்களில், சி.டி.வந்தபோது கேட்கையில் என்னைக் கவராத ‘அஞ்சலை’ பாடல் (இது கௌதம் மேனன் படப் பாடலாவே இல்லை என்றிருந்தேன்) அரங்கில் பலத்த கைதட்டலைப் பெற்று முன்னிலையில் இருந்தது. சூர்யாவின் ஆட்டமும் அபாரமாக இருந்தது.

ஈஷா யோகா சார்பாக ஆண்டு தோறும் நடக்கும் மகாசிவராத்திரி விழாவிற்குச் செல்வதுண்டு. அப்போது சத்குரு ஜக்கி வாசுதேவின் உரையின் போது பலர் TRANCE-க்கு செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவர்கள் தங்களை மறந்து இடும் கூக்குரல், ஆட்டம் ஆகியவற்றை இந்தப் பாடலின் போது தியேட்டரில் கண்டேன். விசாரித்தபோது, பலர் அதில் குடித்திருந்தனர். ஆனால் ஒருவர் குடிக்காமலே தன்னை மறந்து கத்திக் கொண்டும், அழுதுகொண்டும் இருந்தார். ‘காதல் தோல்விபோல’ என்று பேசிக்கொண்டனர்.

படம் முடிந்து வரும்போது ஒரு விஷயத்திற்காக மிகவும் வருந்தினேன்.. கௌதமும், ஹாரிசும் பிரிந்ததற்கு.

************************

மும்பையில் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை மீடியாக்கள் ஒளிபரப்பியது குறித்து எதிர்க்குரல்கள் நிறைய வருகிறது. ‘அப்படி ஒளிபரப்பியது தவறு, உள்ளே உள்ள தீவிரவாதிகளுக்கு செய்தி போய்க்கொண்டே இருக்காதா’ என்று பலர் வாதிடுகிறார்கள்.

அது உண்மையானால், மீடியாவைக் கேள்வி கேட்க எவருமே இல்லையா? அப்படி அவர்கள் ஒளிபரப்பியதை, அரசு தடுக்காதது ஏன்?

இதுகுறித்து தெரிந்தவர்கள் யாராவது விளக்கம் கேட்டு எழுதினால் பரவாயில்லை.

*********************

மும்பை பயங்கரத்தின்போது ஆங்கில சேனல்களில் வந்த எஸ்.எம்.எஸ்-களில் என்னைக் கவர்ந்த இரண்டு..

# எங்கே அந்தப் பால்தாக்கரே? வந்து மும்பை மக்களைக் காப்பாற்றட்டுமே.. மும்பைக்கர் அல்லாத கமாண்டோக்களை அனுப்பிவிடலாமா? (இந்த SMS-தான் இப்போது பல விவாதங்களை ஆரம்பித்திருக்கிறது!)


# வி.ஐ.பி-க்களுக்குக் கொடுத்துள்ள Z பிரிவு பாதுகாப்பை நீக்கி, இனி சாமானிய மக்களுக்குக் கொடுங்கள். நாட்டில் அவன் நிலைமைதான் படுமோசமாய் இருக்கிறது!

*****************************

NDTV-யின் பர்காதத் – என்னைக் கவர்ந்த ஒரு ரிப்போர்ட்டர். இந்த சம்பவங்களின்போது, வீட்டுக்கே போகாமல் குரல் கம்ம பேசிக்கொண்டே இருந்தார்.

பர்காதத் நேற்றிரவு முமப் பயங்கரம் குறித்து ஒரு கருத்துரையாடல் (TALK SHOW) நடத்தினார். டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் எடிட்டர், நெஸ் வாடியா (பாம்பே டையிங்), எம்.என். சிங் (முன்னாள் போலிஸ் கமிஷன்ர்) ஆகியோருடன் சிமி கேர்வால் (டி.வி. நடிகை), மற்றும் VTV-யின் வீடியோ ஜாக்கி/காம்பியரர் ஆகியோர் கலந்து கொண்டு ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தினர்.

நான், நம் டி.வி. நடிக, நடிகையர், காம்பியரர் குறித்து நினைத்துப் பார்த்தேன்..


ஜோடி நெ.1, காமெடி டைம்களில் பிஸியாக இருக்கிறார்கள்.


வாழ்க.. வாழ்க!!

*************************

கலைஞர் டி.வி-யின் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியில் காதல் படத்தில் நடித்த சுகுமார் சிறப்பு விருந்தினராக கால்மேல் கால் போட்டு உட்கார, ஜட்ஜாக இருக்கும் டெல்லி கணேஷ் அவரிடம் ‘இவரைப் பத்தி என்ன நெனைக்கறீங்க..’ என்று கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்..

கடுப்பாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரை நாகேஷூக்கு இணையான நடிகர் டெல்லிகணேஷ்.

அதேபோல, ஒரு பாடல் பாடியவர்கள் சூப்பர் சிங்கர் ப்ரோக்ராம்களுக்கு நடுவர்களாகவும், ஒரு ஆட்டத்தில் ஃபேமஸானவர்கள் டான்ஸ் போட்டிகளுக்கு நடுவர்களாகவும் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போதும் எரிச்சலாகத்தான் இருக்கும். இதுபற்றி ஒரு தனிப்பதிவு எழுதி, வெளியிடவைத்திருந்தேன். அன்றைக்குப் பார்த்து ஒரு ஃபோன்கால் வந்தது.. ஒரு வலைப்பதிவு நண்பரிடமிருந்து..

“கிருஷ்ணா.. ******* அவரோட ப்ளாக்ல சிறுகதைப் போட்டி வைக்கிறாராம். நடுவரா *********ஐயும், உங்களையும் இருக்கச் சொல்றாங்க. சம்மதமா?”

அதற்குப் பிறகும் அந்தப் பதிவை வெளியிட நான் என்ன கேனையனா?.

*****************************

ஒரு பிரபலத்திடமிருந்து எனக்கு தினமும் வரும் SMS மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும். இன்னைக்கு என்ன அனுப்புவார் என்று. சமீபத்தில் அவர் அனுப்பியதில் எனக்கு மிகப் பிடித்த இரண்டு..

“CLEVERNESS IS WHEN YOU BELIEVE ONLY HALF OF WHAT YOU HEAR. BUT BRILLIANCE IS WHEN YOU KNOW WHICH HALF TO BELIEVE” – WARNER

சட்டக்கல்லூரி, மும்பை தீவிரவாதம் எல்லாவற்றிலும் மேலே கண்ட Brilliance மிகமுக்கியம்.

இன்னொன்று..

‘தீவிரவாதியை மன்னிப்பது எங்கள் கையில் இல்லை. அதை கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவனைக் கடவுளைச் சந்திக்க ஏற்பாடு செய்வது எங்கள் கடமை’ – இந்திய இராணுவம்

********************

இந்தவாரக் கவிதை..

நாகரிகம்

கடன் வைத்துக் கொள்வதில்லை – இந்தக்
கன்னிப் பெண்கள்
தினந்தோறும்
காதல்பையன்கள் அனுப்பும் பூக்களை
சேர்த்துவைத்திருந்து
மொத்தமாகத் திருப்பித் தந்துவிடுகிறார்கள்


மாலையாகவோ மலர்வளையமாகவோ

-ரமேஷ் வைத்யா

69 comments:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட் !

cable sankar said...

//“கிருஷ்ணா.. ******* அவரோட ப்ளாக்ல சிறுகதைப் போட்டி வைக்கிறாராம். நடுவரா *********ஐயும், உங்களையும் இருக்கச் சொல்றாங்க. சம்மதமா?”//

யாருங்க அவரு..? போட்டி வைக்கிறவ்ரு..?

cable sankar said...

//Sorry Lucky... படத்தில் பார்த்தபோது பிடித்திருந்தது. மாநிறம், கோதுமை மாதிரி வழு வழு உடல்.. நல்ல உயரம். ஒரு மார்க்கமான பார்வை. செழித்த உதடுகள்.//

என் பக்கம வ்ந்து பாருங்க..

சமீரா ரெட்டி தலைமை ரசிகர் நற்பணி? மன்றம்

cable sankar said...

அது சரி.. வா.ஆயிரத்துக்கு கூட்டம் இருந்துச்சா..? உங்க ஊருல..?

SUREஷ் said...

படிக்கற சரோஜதேவி அல்ல.. பார்க்கிற சரோஜாதேவி)kusumbu

SUREஷ் said...

ஜோடி நெ.1, காமெடி டைம்களில் பிஸியாக இருக்கிறார்கள்.therinjathathan seyya mudiyum

அனுஜன்யா said...

'வாரணம் ஆயிரம்' லேட் பிக்கப் ஆன படமா? இங்கெல்லாம் சமிரா பெரிய ஹிட். ஹாரிஸ்-கௌதம் பிரிவுக்குக் காரணம் என்ன? It is (was?) a good combination.

//அதற்குப் பிறகும் அந்தப் பதிவை வெளியிட நான் என்ன கேனையனா?.// பரிசல் டச்.

ரமேஷ் வைத்யா கவிதை :))

அவியல் இந்த முறையும் அதே ருசி. மணம்.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

நன்றி கோவி-ஜி.

கருத்து சொல்லாம போனா எப்படி?

@ கேபிள் சங்கர்

அப்பறமா சொல்றேன்.

வாரணம் ஆயிரம் ஓடாது-ங்கறாங்க. ஆனா இங்கெ ஹவுஸ் ஃபுல்லாத்தான் இருந்துச்சு தல..

@ sureஷ்

குசும்புதான். ஆமா.. நீங்கம் மட்டும் பேரை இப்படி மிக்ஸ் பண்ணிவெச்சு குறும்பு பண்றீங்கள்ல..

SUREஷ் said...

மாலையாகவோ மலர்வளையமாகவோ


............................

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

சார்.. மும்பை விஷயத்துல மீடியா பண்ணினது சரியா-ன்னு உங்க பக்கம் விசாரிச்சு எழுதுங்களேன்..

குசும்பன் said...

//நல்ல உயரம். ஒரு மார்க்கமான பார்வை. செழித்த உதடுகள். //

என்னங்க ஏதோ யூரியா,பொட்டாஸ் போட்டு வளர்த்ததுபோல் சொல்றீங்க:)

**************************
(படிக்கற சரோஜதேவி அல்ல.. பார்க்கிற சரோஜாதேவி)//

ஆஹா அப்ப அந்த புக்கு கடைகாரன் நான் சின்னபிள்ளைன்னு ஏமாத்திடான் போல ஒன்லி படிக்கிற சரோஜா தேவியைதான் கொடுத்தான், பார்க்கிற சரோஜா தேவின்னா என்ன? புக் முழுவது படமா இருக்குமா?:)))

பரிசல்காரன் said...

// SUREஷ் said...

ஜோடி நெ.1, காமெடி டைம்களில் பிஸியாக இருக்கிறார்கள்.therinjathathan seyya mudiyum//

இல்லை சுரேsh (இது எப்படி இருக்கு?).. நம் காம்பியரர்களில் பலருக்கு பொது அறிவு உண்டு. ஆனால் யாரும் அதை வெளிக் கொணரும் வண்ணம் நிகழ்ச்சிகள் அமைப்பதில்லை.

பரிசல்காரன் said...

@ குசும்பன்

//ஆஹா அப்ப அந்த புக்கு கடைகாரன் நான் சின்னபிள்ளைன்னு ஏமாத்திடான் போல ஒன்லி படிக்கிற சரோஜா தேவியைதான் கொடுத்தான், பார்க்கிற சரோஜா தேவின்னா என்ன? புக் முழுவது படமா இருக்குமா?:)))//

ஐயையோ.. வந்துட்டார்யா...


மணி 9.30. ஆஃபீசுக்கு டைமாச்சு. கெளம்பறேன்..

அத்திரி said...

அவியல் சமீரா, சரோஜா தேவின்னு!!!!!?? நல்லா சூடாவே இருந்திச்சு

அதிஷா said...

;-)))...

Mahesh said...

டாபிகலா எழுதறதுல கில்லாடியா இருக்கீங்க !!

Raj said...

//(படிக்கற சரோஜதேவி அல்ல.. பார்க்கிற சரோஜாதேவி)//

இன்னுமா...திருந்த மாட்டியளா..

//நான், நம் டி.வி. நடிக, நடிகையர், காம்பியரர் குறித்து நினைத்துப் பார்த்தேன்..//

ரொம்பத்தான் கனவு காண்றீங்க...கழுதைங்க என்னைக்காச்சும் குதிரையாகுமா

கொ.நூருல் அமீன் said...

"BUT BRILLIANCE IS WHEN YOU KNOW WHICH KALF TO BELIEVE" – WARNER"

எழுது பிளையை திருத்தவும் - 'half'.

பதிவு படிக்க நன்றாக இருந்தது =)

வெண்பூ said...

கலக்கல் அவியல்.. நல்ல டேஸ்டியா இருந்தது... ஒரே விசயத்த தவிர (மறுபடியும் சிறுகதைப் போட்டியா?.. வேணாம்டா தாங்க மாட்ட அப்படின்னு எனக்குள்ள இருந்து ஒருத்தன் என்னை திட்டிகிட்டே இருக்கான்..)

சுந்தரராஜன் said...

//நான், நம் டி.வி. நடிக, நடிகையர், காம்பியரர் குறித்து நினைத்துப் பார்த்தேன்..


ஜோடி நெ.1, காமெடி டைம்களில் பிஸியாக இருக்கிறார்கள்.//

தமிழிலும் சமூக சிந்தனையுடன் பல செய்தியாளர்கள் இருக்கின்றனர். உதாரணம்: பதிவர் பாலபாரதி. ஆனால் அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் இல்லை.

லக்கிலுக் said...

//ஒரு பிரபலத்திடமிருந்து எனக்கு தினமும் வரும் SMS மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும். இன்னைக்கு என்ன அனுப்புவார் என்று. சமீபத்தில் அவர் அனுப்பியதில் எனக்கு மிகப் பிடித்த இரண்டு..//

அந்த பிரபலத்திடம் எனக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பச் சொல்லவும். எங்களிடமும் கைப்பேசி இருக்கிறது :-)

ஆட்காட்டி1 said...

லோக்கல விடுங்க. பீபீசில சோனியாவ போட்டுட்டுத் தான் சிங்கையே காட்டினான். பாவம் மனுசன் முன்னுக்கு ஓடுறத சாவி குடுத்த பொம்மை மாதிரிப் படிச்சுது. அவர் அன்னிக்கு பட்டினி இருந்திருப்பாரா?

வித்யா said...

நானும் நேற்று அந்த talk ஷோ பார்த்தேன். கருத்துக்கள் எல்லாம் சூப்பர் என்றாலும், இன்னும் கொஞ்ச நாளைக்கு மீடியாக்கள் இந்த விஷயத்தை வைத்து காசு பார்த்து விடுவார்கள்:(

narsim said...

வருத்தம், நடப்பு எல்லாவற்றையும் லேசான நகைச்சுவை கலந்து அவியல் என்ற பெயருக்கு சரியான தீனியாக இருந்தது பதிவு.. அந்த நேரடி ஒளிபரப்பு மேட்டர் மிகுந்த கண்டனத்திற்கு உரியது..

அந்த பிரபலத்தின் கலக்கல் ரகம்.. நம் மீது மரியாதை ஏற்படவேண்டும் என்று நினைக்கும் சிலருக்கு இந்த குறுஞ்செய்திகளை ஃபார்வட் செய்து கொண்டிருக்கிறேன்.. அந்த குறுஞ்செய்திகள் எனக்கும் வருவது எனது "லக்கி"யான நேரம்தான்

Anonymous said...

//எங்கே அந்தப் பால்தாக்கரே? வந்து மும்பை மக்களைக் காப்பாற்றட்டுமே//

மற்ற மாநிலங்களை சேந்த கமாண்டோஸ் வந்து மும்பை மக்களை காப்பாற்றினதை ராஜ் தாக்கரேவும், பால் தாக்கரேவும் ஞாபகம் வைக்கட்டும்.

SurveySan said...

யெஸ் ஃபார் சமீரா :)

புதுகைத் தென்றல் said...

பர்கா தத் மட்டுமல்ல

ஸ்ரீநிவாசன் ஜெயின் கூடத்தான் வீட்டுக்கு போகாமல் தாஜிர்கு மிக அருகிலேயே இருந்து தகவல் தந்ததெல்லாம் தெரியுமா? :)))

இப்படிக்கு ஸ்ரீநிவாசன் ஜெயின் ரசிகர் மன்றம் - ஹைதை.

:))))

நித்தி .. said...

மும்பை பயங்கரத்தின்போது ஆங்கில சேனல்களில் வந்த எஸ்.எம்.எஸ்-களில் என்னைக் கவர்ந்த இரண்டு..

# எங்கே அந்தப் பால்தாக்கரே? வந்து மும்பை மக்களைக் காப்பாற்றட்டுமே.. மும்பைக்கர் அல்லாத கமாண்டோக்களை அனுப்பிவிடலாமா? (இந்த SMS-தான் இப்போது பல விவாதங்களை ஆரம்பித்திருக்கிறது!)


# வி.ஐ.பி-க்களுக்குக் கொடுத்துள்ள Z பிரிவு பாதுகாப்பை நீக்கி, இனி சாமானிய மக்களுக்குக் கொடுங்கள். நாட்டில் அவன் நிலைமைதான் படுமோசமாய் இருக்கிறது!
"ithaivida inum oru msg from a spectator

TO terrorist : im alive now-what will you do me now?
To politician: im alive now-despite you
BY A Mumbaikar...

ithu thakuthal mudintha adutha naal
oruvar kayil pidithu iruntha vasaga palagai....burkka dutt sutti katiyathu..
evalavu unmai.....!!!

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Indian said...

//‘தீவிரவாதியை மன்னிப்பது எங்கள் கையில் இல்லை. அதை கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவனைக் கடவுளைச் சந்திக்க ஏற்பாடு செய்வது எங்கள் கடமை’ //

இதன் மூலம் Man on Fire என்ற படத்தில் டென்ஸில் வாஷிங்டன் பேசிய வசனம், "Forgiveness is between them and God. It's my job to arrange the meeting."

நாடோடி இலக்கியன் said...

வாரணம் ஆயிரம் எங்கே?
தமிழ்நாட்டிலா?ஸ்ரீசக்தியிலா?
நேற்று "பூ" சங்கீதாவில் பார்த்தேன்.முடிஞ்சா பார்த்துட்டு உங்க பார்வையிலே ஒரு விமர்சனம் எழுதுங்க பரிசல்.

பரிசல்காரன் said...

@ அத்திரி, அதிஷா
@ மகேஷ்

நன்றிங்கோவ்...


நன்றி Raj

//இன்னுமா...திருந்த மாட்டியளா..//

என்ன ஆகிப்போச்சுங்க இப்போ? ஏன் இவ்ளோ கோவம்?

@ நூருல் அமீன்

திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

பரிசல்காரன் said...

@ வெண்பூ

உங்களையெல்லாம் நம்பித்தான் வைக்கறாங்கப்பா.. ஏமாத்திடாங்க...

@ சுந்தர்ராஜன்

//தமிழிலும் சமூக சிந்தனையுடன் பல செய்தியாளர்கள் இருக்கின்றனர். உதாரணம்: பதிவர் பாலபாரதி. ஆனால் அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் இல்லை.//

உண்மையோ உண்மை.

பரிசல்காரன் said...

@ லக்கிலுக்

//அந்த பிரபலத்திடம் எனக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பச் சொல்லவும். எங்களிடமும் கைப்பேசி இருக்கிறது :-)//

கழகத் தோழர் நீங்க.. நமக்கு நாமே திட்டத்துக்கு உங்களுக்குச் சொல்லித்தரணுமா?

@ ஆட்காட்டி1

ஹி..ஹி.. சரியாச் சொன்னீங்க..

@ வித்யா

அதுசரிதான்...

@ நர்சிம்

பாஸ்., சீக்ரெட்டை ஒடைச்சுட்டீங்களே..

Busy said...

Nalla Avaiyal:)...........

பரிசல்காரன் said...

@ சின்ன அம்மணி

நன்றி.

@ சர்வேசன்

சேம்.. சேம்.. (No 'H')

@ புதுகை தென்றல்

என்னக்கா... நீங்க அவரு ஃப்ரெண்டா...?

@ நித்தி

உண்மைதான். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

பரிசல்காரன் said...

@ இந்தியன்

//
இதன் மூலம் Man on Fire என்ற படத்தில் டென்ஸில் வாஷிங்டன் பேசிய வசனம், "Forgiveness is between them and God. It's my job to arrange the meeting."//

வாவ்.. அப்படியா.. புதிய செய்தி இதெனக்கு. நன்றி நண்பரே..

பரிசல்காரன் said...

//Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.//


அண்ணா, தம்பி, தலைவா...


கொஞ்ச நாள் எங்க பதிவுகளைப் படிச்சு உருப்படியான பின்னூட்டங்களைப் போடுங்க. அப்பறமா இணைப்பு குடுக்கறேன். டீல் ஓக்கே?

பரிசல்காரன் said...

நன்றி பிஸி...

@ நாடோடி இலக்கியன்

ஹையோ.. நீங்க திருப்பூரா? என்னங்க இது.. சொல்லவே இல்ல? ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க. சந்திக்கலாம்.

படம் தமிழ்நாடு-ல பார்த்தோம்.

திருப்பூர்ல பதிவர்கள் அதிகமாய்ட்டாங்கப்பா.. சீக்கிரமா ஒரு மீட்டிங்கைப் போடணும்..

தமிழன்-கறுப்பி... said...

இப்போதைக்கு நான் தான் இதை படிச்சுட்டிருக்கேன், பின்னூட்டமும் போட்டிருக்கேன்...

தமிழன்-கறுப்பி... said...

அவியல் சரியான கலவையோடு...

புதுகைத் தென்றல் said...

என்னக்கா... நீங்க அவரு ஃப்ரெண்டா...?//

:) அவரு என் ப்ரண்ட்.


வாசு மட்டுமல்ல, பிராண்ய் ராய், விக்ரம் எல்லோரும் தான்

ஸ்ரீமதி said...

அவியல் நல்லா டேஸ்ட்டா இருக்கு :))

தாமிரா said...

மாநிறம், கோதுமை மாதிரி வழு வழு உடல்.. நல்ல உயரம். ஒரு மார்க்கமான பார்வை. செழித்த உதடுகள்.// யோவ்.. என்ன கிளுகிளுப்பு வேண்டிகிடக்குது..

இந்த வாரம் அனைத்தும் அருமை பரிசல்..

அதுவும் ரமேஷின் கவிதை பிரமாதம்.

//மறுபடியும் சிறுகதைப் போட்டியா?.. வேணாம்டா தாங்க மாட்ட // ROTFL..

T.V.Radhakrishnan said...

:-))))))))))

பரிசல்காரன் said...

@ தமிழன்

நன்றி....

@ புதுகைத் தென்றல்

சொல்லவேல்லக்கா...

@ ஸ்ரீமதி

நன்றி.. (டெம்ப்லேட் மாத்தி தரேன்-னியே.. என்னாச்சும்மா?)

@ தாமிரா

//யோவ்.. என்ன கிளுகிளுப்பு வேண்டிகிடக்குது..//

வாலிப வயசு..!

பரிசல்காரன் said...

நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா..

கும்க்கி said...

N D T V எல்லாம் பொறுமையா பாக்க முடியலீங்களே..
ஒவ்வொரு செகண்டையும் நியூஸாக மாற்றி அதை ஒரு பதைபதைப்புடன் பார்க்கும்படி செய்வது அவர்களுக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம்...

ஒரு த்ரில்லர் படத்தை பார்ப்பது போல உள்ளதை தவிர...இது ஆரோக்கியமானதா என யோசிக்கவேண்டும்.

கும்க்கி said...

தமில் டி வி நிகழ்ச்சிகள் பார்ப்பதை கொஞ்ச காலம் அறவே தவிர்க்குமாறு வாசகர் வட்ட சார்பாக கேட்டுக்கொல்லப்படுகிறது.
(அந்த நேரங்களில் சமையலுக்கு உதவலாமே...சீரியஸாத்தான்)

கும்க்கி said...

வர்ணணைகள் நல்லாருக்கு....
(தொடர் பதிவிற்க்கு வாய்ப்புண்டா..)

ஸ்ரீமதி said...

சொல்லுங்க அண்ணா மாத்திடலாம் :))

Anonymous said...

பரிசல் அவியல் நல்லா இருக்கு.

நானும் நேத்து வா ஆ பார்த்தேன். எனக்குப் பிடிச்சிருந்தது. ரீ ரிக்கர்டிங்தான் சொதப்பீட்டார். குறிப்பா கடைசி 15 நிமிடம்.

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே, அவியல் மிக அருமை.

உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புற பிரபலம் யாருன்னு நான் யூகிச்சத மின்னஞ்சல் செய்யிறேன், சரியான்னு சொல்லுங்க.

மீடியாக்கள் செஞ்சது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அப்படி செஞ்சுருக்க கூடாது. இதுல ராத்திரி பகலா வீட்டுக்குக் கூட போகாம குரல் கம்ம பேசுனாருன்னு சிலர பாராட்டிக்கிட்டு இருக்கீங்க. நாம செஞ்சது நம்ம நாட்டோடா பலகீனத்த உலகத்துக்கோ படம் போட்டு காட்டுனது தான். அந்த இடத்துல ஒரு மீடியாவையும் அனுமதிச்சுருக்கக் கூடாது. இதுல நேரடி ஒளிபரப்பு எல்லாம் ரொம்ப அநியாயம். இதை கண்டிச்சு பதிவுகள் எழுதப்பட வேண்டும்.

கிரி said...

//ஜோசப் பால்ராஜ் said...
அந்த இடத்துல ஒரு மீடியாவையும் அனுமதிச்சுருக்கக் கூடாது. இதுல நேரடி ஒளிபரப்பு எல்லாம் ரொம்ப அநியாயம்//

வழிமொழிகிறேன்.

வெண்பூ said...

எல்லாரும் ஹெட்லைன்ஸ் டுடே பாருங்க.. தன்னை சந்திக்க மறுத்த மேஜர் சந்தீப்பின் (தாஜ் ஹோட்டல் பயங்கரத்தில் நாட்டுக்காக உயிரிழந்தவர்) அப்பாவை கேவலமாக பேசியுள்ளார் கேரளா சி.எம் அச்சுதானந்தன் ‍ "அவர் ஒரு மேஜராக இல்லையென்றால் ஒரு நாய் கூட அவர் வீட்டுக்கு போயிருக்காது என்று"...

அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்ல.. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்.. இது போன்ற அரசியல்வாதிகளால்....

செல்வேந்திரன் said...

ஷமீரா ரெட்டியின் ராம்நகர் ரசிக நற்பணி மன்றம் தங்களை பாராட்டுகிறது.

T.V.Radhakrishnan said...

அவியல் இந்த முறையும் ருசி

பரிசல்காரன் said...

// கும்க்கி said...

தமில் டி வி நிகழ்ச்சிகள் பார்ப்பதை கொஞ்ச காலம் அறவே தவிர்க்குமாறு வாசகர் வட்ட சார்பாக கேட்டுக்கொல்லப்படுகிறது.
(அந்த நேரங்களில் சமையலுக்கு உதவலாமே...சீரியஸாத்தான்)//

அப்பவுமா?

@ ஸ்ரீமதி

எப்படி? சொல்லுப்பா. ஏற்கனவே ஒருத்தர்கிட்ட டெம்ளேட்டை மாத்தித் தரச் சொல்லி பலகாலமா இழுத்தடிக்கறார். என் மெயில் ஐடிக்கு kbkk007@gmail.com மெயிலுங்க. கண்டிப்பா மாத்தணும்.

பரிசல்காரன் said...

# வேலன்

ஆமாமா..

@ ஜோசப் பால்ராஜ்

உஙக் கோணமும் உண்மைதான் ஜோசப். புரிஞ்சுகிட்டேன்.

@ கிரி

நன்றி நண்பா..

@ வெண்பூ

ம்ம்ம்.. அழக்கூடாது. இன்னும் நிறைய கூத்து பண்ணுவானுக இத வெச்சுட்டு.. அப்ப அழ கண்ணீர் மிச்சம் வைங்க!

@ செல்வேந்திரன்

அடாடா.. சொல்லவேல்ல?

@ ராதாகிருஷ்ணன்

ஐயா.. அப்போ, மொதல்ல படிக்காமதான் சிரிச்சுட்டுப் போனீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கிழஞ்செழியன் said...

பரிசல்,
இனிமேல் 'எழுது பிளை' இல்லமால் எலுதவூம்.
நூருல் அமீன் சார்பகா

கிழஞ்செழியன் said...

ஆயிரம் இருந்தாலும் ரமேஷ் வைத்யா எழுதியது பிடித்திருந்தால் தவறாமல் பாராட்டி விடுகிறார் என் குட்டி அண்ணன் தாமிரா. உயர்ந்த உள்ளம்.

rapp said...

முத்துலெட்சுமி கயல்விழி அவர்களோட வாரணம் ஆயிரம் விமர்சனத்துக்கு அதீஷா சார் போட்டிருந்த பின்னூட்டத்தை இங்கே வழிமொழிகிறேன்:):):)

மும்பையில் மீடியாக்காரர்கள் எப்டி வேணும்னாலும் பேசிட்டு அவங்க வேலையப் பாத்துக்கிட்டு போகலாம். அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ அதை கண்டுக்கப் போறதில்லை. ஆனா இங்க நிலைமை அப்டி இல்லை. குஷ்பூ அவர்களுக்கு என்னாச்சு, எப்டி அவங்க சொன்னது திரிச்சு விடப்பட்டதுன்னு எல்லாருமே பாத்தோமே:(:(:( பிளஸ் இங்கு, டிவி சேனல்களில் இருந்து, படக் கம்பெனிகள் வரை எல்லாமே அரசியல்வாதிகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்கும்போது என்ன செய்வார்கள்?

பரிசல்காரன் said...

@ கிழஞ்செழியன்


இரவு 12 மணிக்கு கமெண்டா? அண்ணா.. ஆஃபீஸ்லயா இருக்கீங்க. ரெண்டு நாள்ல நாலஞ்சு தடவை கூப்ட்டுட்டேன். காபி சாப்பிடவும், தம்மடிக்கவும் அடிக்கடி வெளில போறீங்க.

@ ராப்

கரெக்ட்ப்பா!

மங்களூர் சிவா said...

அவியல் மிக அருமை

மங்களூர் சிவா said...

//
என் ஃபேவரைட் ஃபிகர் திவ்யா ஸ்பந்தனா-வுடன் போட்டி போடும்
//

என்ன கேவலமான டேஸ்ட்பா உன்து! அதெல்லாம் ஒரு பிகரு ஹும் :((((

ILA said...

//என் ஃபேவரைட் ஃபிகர் திவ்யா ஸ்பந்தனா-வுடன் போட்டி போடும்//
இதுயாருய்யா இது, bengali sweet மாதிரி பேரு? கேள்விப்பட்டதே இல்லியே..

cheena (சீனா) said...

அவியல் நல்லாவே இருக்கு - கலந்து கட்டி அததனையும் போட்டு இருக்கீங்க

நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள்

BALA said...

The poem is also nice.

LOSHAN said...

அருமை நண்பரே,,
உங்கள் கருத்துப் பகிர்வுகள் என் மன அலைவரிசைகளிலேயே அமைந்திருப்பது மகிழ்ச்சி..
குறிப்பாக வாரணமாயிரம்.

ஆரம்பத்தில் பிடிக்காத சமீராவை படம் பார்த்த பின் பிடித்து..வாரணமாயிரம் பற்றியே இன்று நான் பதிவிடப் போகிறேன்.. :)

NDTV தொலைகாட்சி அராஜகம் எனக்கும் உடன்பாடில்லை தான்.. இலங்கையில் நாங்கள் இருப்பதால் நல்லாவே இது தெரியும்.

அந்தப் பிரபலம் யாருன்னு சொல்ல மாடிங்களா?

இராணுவம் பற்றிய SMS அற்புதம்..