Sunday, November 30, 2008

வீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்

1) சில குறிப்புகள்ல சில பதிவர்களைச் சொல்லிவிட முடியும்.. ‘சகா’-ன்னா கார்க்கி, குறுந்தொகைன்னா நர்சிம், அண்ணே-ன்னா அப்துல்லா.. இப்படி... அது மாதிரி சில குறிப்புகள் சொல்றேன். யாரிந்தப் பதிவர்கள்ன்னு சொல்லுங்க.

அ) ‘அடடே.. வாட் எ கோ இன்சிடென்ஸ்’

அதிஷா

ஆ) மீ த.. (அடுத்த வார்த்தையைச் சொல்லவே வேண்டாம்)

ராப் – வெட்டியாபீசர்

இ) என்னுடைய கார் அந்த இடத்தை அடைந்தபோது...

டோண்டூ


2) இரண்டு இரட்டைப் படை எண்கள். அவற்றைக் கூட்டினால் வரும் விடையை விட, மூன்று மடங்கு அவற்றைப் பெருக்கினால் வரும். அவை எவை?

4 & 12 (ஆறு, ஆறும் சரிதான். வெவ்வேறு எண்கள் என்று நான் குறிப்பிடாததால்!)


3) GTTTT – இது என்ன?

ஒரிஜினாலிடி


4) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவன் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா?

விதவை என்றாலே, அந்த ஒருவன் இறந்தவனாகிறான். ஆகவே நோ சான்ஸ்.
5) இந்த வார யோசிக்க வைக்கற கேள்வி. மாடி அறையில் மூன்று குண்டு பல்புகளைக் கொண்ட விளக்குகள் உள்ளன. அதற்கான மூன்று சுவிட்ச்கள் கீழ் அறையில். கீழிருந்து பார்த்தால் மேலே விளக்கெரிவது தெரியாது. நீங்கள் ஒரே ஒரு தடவை மேலே சென்று வரலாம். எந்தெந்த சுவிட்ச் எந்தெந்த பல்புக்கானது என்று சரியாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்?


கரெக்டா சொல்லியிருந்தாங்க. ஒரு சுவிட்சை கொஞ்ச நேரம் போட்டிருந்து, அணைத்து விட்டு இன்னொரு சுவிட்சை போட்டுவிட்டு மேலே செல்ல வேண்டும். எரியும் பல்புக்கானது இப்போது போட்ட சுவிட்ச். மற்ற இரண்டு பல்புகளைத் தொட்டுப் பார்த்து கொஞ்சம் சூடாக இருப்பது முதலில் போட்ட சுவிட்ச். மூன்றாவது, தெரிந்துவிடுமே..


6) இதுவும் யோசிக்க வைக்கும்.

மூன்று வீடுகள் கொண்ட காம்பவுண்டிற்கு ஆப்பிள்காரி ஒருத்தி செல்கிறாள். தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதி + அரை ஆப்பிளை முதல் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறாள். இப்போது அவள் கூடை காலி! அப்படியானால் அவள் கொண்டுவந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு குறிப்பும், நிபந்தனையும்:

ஆப்பிளை நறுக்கக்கூடாது.

பாதி என்றால் பத்தில் பாதி ஐந்து. நாலில் பாதி இரண்டு.. இப்படி.

அரை என்பது ஒன்றை அறுத்தால் வரும் பாதி = அரை!

மறுபடி சொல்கிறேன்.. ஆப்பிளை நறுக்கக்கூடாது!

ஏழு ஆப்பிள். முதல் வீட்டிற்கு மூன்றரை + அரை = 4 ஆப்பிள். மீதமிருப்பது மூன்று. அதில் பாதி ஒன்றரை + அரை = 2. மீதமிருப்பது ஒன்று. அதில் பாதி, அரை + அரை = ஒன்று. ஓக்கே?

7) 1975 இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்ரிக்காவுக்குமான ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் அதற்கு முன் நிகழ்ந்திராத ஒரு சாதனை நிகழ்ந்தது. அது..

அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

ஆ) உலகக் கோப்பையில் முதல் ஹாட்-ரிக் எடுக்கப்பட்டது.

இ) உலகக் கோப்பையில் முதல் செஞ்சுரி எடுக்கப்பட்டது.

ஈ) மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டமானது அடுத்தநாளும் தொடர்ந்தது.

விடை: அ) பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணி வென்றது.

(காப்பிஅடித்து பதில் சொன்ன வெண்பூவுக்கு, ஒரு நாளைக்கு பிரியாணி கட் பண்ணுங்க சிஸ்டர்..)


8) இவர் பதிவர். இவரது பெயரின் கடைசி இரண்டெழுத்து வழக்கா... காசா? நல்லவர்.... சோ..இவருக்கு நிறைய நண்பர்கள்!

துக்ளக் மகேஷ்.


9) இவரும் பதிவர். அழகானவர். பெயரின் 2 மற்றும் மூன்றாவது எழுத்துக்களைச் சேர்த்தழைத்தால் மரியாதைக் குறைவாக எண்ணக்கூடும். அத்வானிக்கு இவரை ரொம்பப் பிடிக்குமோ?

இதற்குதான் யாரும் பதில் சொல்லவில்லை.

அழகானவர் – சுந்தர்

2வது, 3 வது எழுத்துகள் = யோவ்

அத்வானிக்குப் பிடிக்குமா = ராம்.

ஜ்யோவ்ராம் சுந்தர்!

10) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி. அதாவது ஒரு இண்டர்வ்யூவுல இந்தக் கேள்வியைக் கேட்டு நீங்க என்ன பதில் சொன்னா, உங்களுடைய அறிவு மெச்சப்படுமோ, அப்படி பதிலைச் சொல்லணும்.

ஒரு மழைநாளின் இரவு. நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒரு பஸ் ஸ்டாப்பில் மூன்றுபேரைக் காண்கிறீர்கள்.

a) வயதான மூதாட்டி
b) ஒருமுறை உங்கள் உயிரையே காப்பாற்றிய நண்பர்
c) நீங்கள் வெகுநாள் ப்ராக்கெட் போட்டுக் கொண்டிருக்கும், ஓரளவு உங்களுக்கு சிக்னல் கிடைத்துவிட்ட உங்கள் கேர்ள்ப்ரெண்ட்.

உங்கள் காரில் ஒருவரை மட்டுமே ஏற்றிக்கொள்ள முடியும்.

என்ன செய்வீர்கள்?

இதுக்கு கரெக்டா போட்டுத் தாக்கிருக்காங்கப்பா நம்ம ஆளுக. நண்பன்கிட்ட கார்சாவியைக் குடுத்து, பாட்டியை கூட்டீட்டு போகச் சொல்லி, கேர்ள்ஃப்ரெண்ட் கூட......
.
.
.
.
.
.
.
.
.
...பேசிகிட்டிருக்கலாம்.


நெக்ஸ்ட் வீக் கமெண்ட் மாடரேஷன் போட்டு, இன்னும் சுவாரஸ்யமான கேள்விகளால தாக்கீடுவோம்!

15 comments:

ARV Loshan said...

இப்போ தான் இரண்டு பதிவுகளையும் பார்த்தேன்.. செமையான சுவார்சயமான கேள்விகள்.. பதில்கள் எல்லாமே தெரியும்.. (ஹீ ஹீ ஹீ) ஆனா லேட் ஆயிட்டேனே.. ;)

Cable சங்கர் said...

மிக குறைந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி.. மற்றவர்களுக்கு வழி விட்ட எனக்கு ஏதாவது ஸ்பெஷல் பரிசு கொடுக்கும்படியாய் கேட்டு கொள்கிறேன்.

வெண்பூ said...

ம்ம்ம்... பரிசல்.. நல்ல கேள்விகள்.. தவறவிட்டது ஜ்யோவ்ராம் சுந்தர் பதில்தான்.. நல்ல கேள்வி (போன தடவை யெஸ்.பாலபாரதி கேள்வி மாதிரி).. நல்லா இருக்கு.. வாராவாராம் தொடரவும்.

//
(காப்பிஅடித்து பதில் சொன்ன வெண்பூவுக்கு, ஒரு நாளைக்கு பிரியாணி கட் பண்ணுங்க சிஸ்டர்..)
//

ஹி..ஹி.. நானே இப்போல்லாம் எப்போதாவ‌து ஒரு த‌ட‌வைதான் சாப்புடுறேன். அது பொறுக்க‌லயா உம‌க்கு.. :)))

Kumky said...
This comment has been removed by the author.
Kumky said...

அடடா....வாரதுக்குள்ர பதிலும் வந்துவிட்டதா.......டூ லேட்.(நா..எ..சொ)

நட்புடன் ஜமால் said...

விடைகள் எல்லாம் இருக்கட்டும்.

பரிசலாருமா இப்படி

\\இதுக்கு கரெக்டா போட்டுத் தாக்கிருக்காங்கப்பா நம்ம ஆளுக. நண்பன்கிட்ட கார்சாவியைக் குடுத்து, பாட்டியை கூட்டீட்டு போகச் சொல்லி, கேர்ள்ஃப்ரெண்ட் கூட......\\

நட்புடன் ஜமால் said...

ஆனாலும் நல்ல பதில்ங்க கடைசியா சொன்னது

ஹி ஹி ஹி...

விஜய் ஆனந்த் said...

//
வெண்பூ said...
ம்ம்ம்... பரிசல்.. நல்ல கேள்விகள்.. தவறவிட்டது ஜ்யோவ்ராம் சுந்தர் பதில்தான்.. நல்ல கேள்வி //

ஹலோ டேமேஜர் சார்...என்ன நா போட வேண்டிய கமெண்ட்ட நீங்க போட்ருக்கீங்க???

// ஹி..ஹி.. நானே இப்போல்லாம் எப்போதாவ‌து ஒரு த‌ட‌வைதான் சாப்புடுறேன்.//

எப்போதாவ‌துன்னா?? ஒரு நாளைக்கு ஒரு தடவ மட்டுந்தானா???

பரிசல்காரன் said...

நன்றி லோஷன்

சங்கர்

வெண்பூ

கும்க்கி,

விஜய் ஆனந்த்


@ அதிரை ஜமால்

//பரிசலாருமா இப்படி
//

எனக்கு அந்த சிச்சுவேஷன் இன்னும் வர்ல நண்பா. வந்தாத்தானே தெரியும் நானும் அப்படியா-ன்னு!

Karthik said...

Mudal muraiyaga unga padhiulaguku varen.. arumaiya irukunga!!!

புதுகை.அப்துல்லா said...

எனக்கு கடைசி பதில் மட்டும்தான் கரெட்டா தெரிஞ்சுச்சு :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னை அழகனென்று ஒத்துக் கொண்ட ஒரே பதிவர் நீங்கதான் (மத்தவங்களுக்குப் பொறாமை!). :)

rapp said...

நான் மீ த பர்ஸ்ட் போட முடியாத அன்னைக்கு, என்னயப் பத்தி குவிஸ் வெச்சுட்டீங்களே:):):)

rapp said...

//ஹி..ஹி.. நானே இப்போல்லாம் எப்போதாவ‌து ஒரு த‌ட‌வைதான் சாப்புடுறேன். அது பொறுக்க‌லயா உம‌க்கு..//

எப்டி சம்மந்தி? ஆறு வேளைக்கு பதில் மூணு வேளைதான் பிரியாணியில் உக்காந்து சாப்டுறீங்களா?:):):)

rapp said...

me the 15th