Wednesday, November 5, 2008

எமக்காக வந்தான் இவன்

அவர் தன்னைப்பற்றி சொல்கையில் இப்படிச் சொல்கிறார்.

“அதிரடிச் சிரிப்புக்காரன். டம்ளரில் பிடிக்குமளவு அழுகிறவன். தோன்றும் நல்ல விஷயங்களை அலட்சியப்படுத்துகிறான். கற்பனை செய்யவே முடியாதபடி அல்பமாக ஏதாவது தோன்றும்போது உரத்தகுரலில் அறிவித்துவிடுவான். அன்பர்களுக்கு பயங்கரவாதி. வெறுத்தொதுங்கிப் போனவர்களைத் தொடர்கிறான் கூப்பிய கைகளோடு. எதற்காக வந்தான் இவன்”

தன்னைப்பற்றி அவர் சொன்ன மேற்பேராவில் எதுவும் பொய்யில்லை. அவர் அப்படித்தான்.

அவர் – ரமேஷ்வைத்யா.

ஸோமாவனதேவதா என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளை மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன். அதில் என் ஃபேவரைட் ‘அறிதல் அறிவித்தல்’ நான் அவரை விட அதிக இடங்களில் இந்தக் கவிதை குறித்துப் பேசியிருக்கிறேன். நேற்றுகூட லண்டன் சென்றிருந்த என் நண்பன் செந்தில் இதுவரை என்னை அழைத்துப் பேசவேயில்லை நீ என்று மெயிலியபோது ‘இவையெதுவும் இல்லாமலும் ஒரு மனசு அறியாதா தன்னைப் போல் இன்னொன்றை’ என்று பதிலினேன்.

அந்த ஸோமாவனதேவதா செத்தாச்சு’ என்பார் ரமேஷ்வைத்யா. இல்லை என்பது என் கணிப்பு அல்லது விருப்பம்.

இவரது கவிதைத் தொகுப்பு ‘உயரங்களின் ரசிகன்’ என் மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்று.

குடைபற்றி எழுதும்போது

மழை பெய்தால்
ஆண்கள்
கறுப்புக்கொடி காட்டுகிறார்கள்..
பெண்கள்
பூங்கொத்து நீட்டுகிறார்கள்!

என்கிறார்.

காதலிகளை

எல்லா பாஷையிலும்
காதலிக்கிறார்கள்

கடைசியில்

மௌனபாஷையில்
மறுதலிக்கிறார்கள்

என்று புதிர்மனுஷிகள் என்கிறார்.

இவரை உயிரோடு வாழவைப்பது எது?

துக்கங்களைப் போட்டுப்
புதைக்கின்ற கல்லறைபோல்
துணிந்த ஒரு மூளை


பக்கத்து மனுஷருக்குப்
புன்னகைப்பூ பூக்கின்ற
தாவரமாய் உதடு

பல்வேறு ஒலிகளில்
மெல்லிசை அடையாளம்
காண்பதற்குக் கற்ற காது

கண்ணீர், காமம்,
கயமை இவைதவிர்த்து
கருணையும் வழியும் கண்கள்

பட்சிக்கோ பாம்புக்கோ
தீங்கிழைத் திருந்தாலும்
நஷ்ட ஈடாகும் சதை

பட்ட செடி, பூமலரும்
உத்தரவாதம் தந்தால்
பந்தலாகும் எலும்பு

குடித்தவன், குழந்தையை
அடிப்பதைப் பார்க்கையில்
கொதித்துத் தோல்சுடும் ரத்தம்

இவையெதுவும் இல்லாத

என்னையும் உயிரோடு
வைப்பது, இதற்கேங்கும் மனசு!


இன்றைக்கு இவருக்குப் பிறந்தநாள்!


அதிகாலை சேவலை எழுப்பி என்ற பாடலையும் எழுதிப் பிரபலமான இவர்...

இன்றுபோலில்லாமல்..

கவிதைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருந்த

அன்றுபோல் இன்றும், இனியும் வாழ வாழ்த்துவோம்!

27 comments:

Rangs said...

Nice song that had been..Happy Birthday to Him

சென்ஷி said...

Happy BirthDay Ramesh

முரளிகண்ணன் said...

Many more happy returns of the day

Kumky said...

இன்றுபோலில்லாமல்..

கவிதைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருந்த

அன்றுபோல் இன்றும், இனியும் வாழ வாழ்த்துவோம்..

நச்..அண்டு பரிசல் டச்.

வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

நல்ல அறிமுகம் அல்லது நினைவூட்டல் பரிசல்...

Kumky said...

கற்பனை செய்யவே முடியாதபடி அல்பமாக ஏதாவது தோன்றும்போது உரத்தகுரலில் அறிவித்துவிடுவான். அன்பர்களுக்கு பயங்கரவாதி. வெறுத்தொதுங்கிப் போனவர்களைத் தொடர்கிறான் கூப்பிய கைகளோடு...

தண்ணிலை விளக்கம் மிக அருமை.

பாபு said...

//குடித்தவன், குழந்தையை
அடிப்பதைப் பார்க்கையில்
கொதித்துத் தோல்சுடும் ரத்தம்//

சிறந்த வரிகள்

அவருக்கு வாழ்த்துக்களும்,உங்கள் ரசனைக்கு பாராட்டுகளும்

வெண்பூ said...

அவரைத் தெரியும் என்றாலும் அவர் கவிஞர் என்பது தெரியாது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பரிசல்..

ரமேஷ் வைத்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Thamira said...

ரமேஷ் வைத்யாவுக்கான என் இனிய வாழ்த்துகளை இங்கே பதிந்துகொள்கிறேன். பதிவு அருமை பரிசல், வாழ்த்துகள்.. நன்றி.!

☼ வெயிலான் said...

இனிய இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரரே!

இருவரும் சகோதரர் என்று தான் அழைத்துக் கொள்ள வேண்டும் என எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் :)

rapp said...

Happy BirthDay Ramesh

வால்பையன் said...

இன்று அவருக்கு பிறந்த நாளா?
எப்படி தெரியும் உங்களுக்கு
சரியான ஆள் தான் போங்க
அவரை கேட்டால் நான் நேற்று தான் பிறந்தேன் என்கிறார்.

அண்ணனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

narsim said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைத்யா....

பரிசலாரே.. அருமை!!

நர்சிம்

Vijay said...

இது வீணை வித்வான் ரமேஷ்
வைத்யாவாவின் உறவினரா?

பிறந்த நால் வாழ்த்துக்கள்!!!

லக்கிலுக் said...

தோழர் ரமேஷ் வைத்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ரமேஷ் வைத்யா said...

ஐந்து வயதில் பிறந்தநாள் கொண்டாடியது நினைவிருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு நண்பர் ஞாநி, தன் இல்லத்தில் நண்பர்கள் இருபது முப்பது பேருக்கு பீராட்டி என் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அப்புறம் பரிசல்.
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல விருப்பம். வெட்கமாக இருப்பதே நிஜம்.
நன்றி துப்பறிவாளர் பரிசலாரே.

தூய பேரன்போடு வாழ்த்திய

ரங்ஸ், இடைக்குத்து சென்ஷி, கூர்த்த பார்வை முரளிகண்ணன், அன்பு கும்க்கி, கலாய்ப்பு கார்க்கி, பிரியத்துக்குரிய பாபு, சந்தமாக வெண்பூ (பையன் சமத்தாக க்ரெய்ஷ் போகிறானா?), வயதில் குறைந்த அண்ணன் தாமிரா, சகோ.வெயிலான், மீ த ராப்பக்கா, வால்குட்டி, நெகிழ்ச்சி நர்ஸிம், நேசத்துக்குரிய விஜய் (வீணை வித்வான் பெயர் ராஜேஷ் வைத்யா), உடன்பிறப்பு லக்கியார்...

கண்ணாடி முன் நின்று வணக்கம் சொல்லிப் பழக்கமில்லாததால் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லை.

ரமேஷ் வைத்யா

ரமேஷ் வைத்யா said...

ஐந்து வயதில் பிறந்தநாள் கொண்டாடியது நினைவிருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு நண்பர் ஞாநி, தன் இல்லத்தில் நண்பர்கள் இருபது முப்பது பேருக்கு பீராட்டி என் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அப்புறம் பரிசல்.
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொல்ல விருப்பம். வெட்கமாக இருப்பதே நிஜம்.
நன்றி துப்பறிவாளர் பரிசலாரே.

தூய பேரன்போடு வாழ்த்திய

ரங்ஸ், இடைக்குத்து சென்ஷி, கூர்த்த பார்வை முரளிகண்ணன், அன்பு கும்க்கி, கலாய்ப்பு கார்க்கி, பிரியத்துக்குரிய பாபு, சந்தமாக வெண்பூ (பையன் சமத்தாக க்ரெய்ஷ் போகிறானா?), வயதில் குறைந்த அண்ணன் தாமிரா, சகோ.வெயிலான், மீ த ராப்பக்கா, வால்குட்டி, நெகிழ்ச்சி நர்ஸிம், நேசத்துக்குரிய விஜய் (வீணை வித்வான் பெயர் ராஜேஷ் வைத்யா), உடன்பிறப்பு லக்கியார்...

கண்ணாடி முன் நின்று வணக்கம் சொல்லிப் பழக்கமில்லாததால் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லை.

ரமேஷ் வைத்யா

சந்தனமுல்லை said...

//மழை பெய்தால்
ஆண்கள்
கறுப்புக்கொடி காட்டுகிறார்கள்..
பெண்கள்
பூங்கொத்து நீட்டுகிறார்கள்!//

ஓ..இதை எழுதியவர் இவரென்றுத் தெரியாது. ஆனால், விகடனில் படித்து என்றும் என் நினைவில் நிற்கும் கவிதை இது! நன்றி ஃபார் த இன்போர்மேஷன்! :-)

லக்கிலுக் said...

//கண்ணாடி முன் நின்று வணக்கம் சொல்லிப் பழக்கமில்லாததால் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லை. //

ஐ லவ் யூ மாமூ! :-)

தயவுசெய்து ஒரு மொபைல் எண் வாங்கவும். தியேட்டரில் படம் பார்க்கும்போதும், டூவீலரில் பயணிக்கும்போதும், கேர்ள் பிரண்டோடு கடலை போடும்போடும் தாவூ தீருகிறது :-(

வால்பையன் said...

//தயவுசெய்து ஒரு மொபைல் எண் வாங்கவும். தியேட்டரில் படம் பார்க்கும்போதும், டூவீலரில் பயணிக்கும்போதும், கேர்ள் பிரண்டோடு கடலை போடும்போடும் தாவூ தீருகிறது :-( //

சேம் ப்ளட்

சின்னப் பையன் said...

ரமேஷ் வைத்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சின்னப் பையன் said...

ரமேஷ் அண்ணே - கிழஞ்செழியன்றது நீங்கதானா???? -- அப்புறம் 'அந்த' நம்பர்லே உங்களை பிடிக்கமுடியல.....வேறே # இருந்தா சொல்லுங்க.... நன்றி...

விலெகா said...

ரமேஷ் வைத்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நல்ல அறிமுகம் அல்லது நினைவூட்டல் பரிசல்...

இதை நான் வழிமொழிகிறேன்.

பரிசல்காரன் said...

ரத்தம் ஒரே நிறம்!

senthil said...

வணக்கம்...!கிருஷ்ணா

இப்போது தான் என்னுடைய மெயில் பார்த்தேன்..

பெருமிகு.ரமேஷ் வைத்தியா

அவர்களுக்கு...

இனி உங்களுடைய...


வாள் –

வாளயிருக்க வேண்டும்;

வாள் –

வாளயில்லாமல்

வாளயிருந்தால் – அது

வாளள்ள; வைக்கோல்! நீ

வாளகவே இரு; என்றும் –

வளையாது உனது கைக்கோல்!


உன்னை நீயே

வையாதே ;

தொட்டதற்கெல்லாம்

தொய்யதே !



எப்பொழுதும் எப்படியிருப்பாயோ –

அப்படி

ஆணவத்தோடு இரு;

ஆணவம்

ஆட்சித் தருவுக்கு எரு!

- கவிஞர் வாலி



ஆண்டொன்று போனால் வயது ஓன்று தான் போகும்...

வாழ்க்கை ஒன்றும் போகாது...!



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...!


பிரியமுடன்,
செந்தில்வேல்கிருஷ்ணசாமி.

Anonymous said...

//குடித்தவன், குழந்தையை
அடிப்பதைப் பார்க்கையில்
கொதித்துத் தோல்சுடும் ரத்தம்//

அழகான வரிகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ் வைத்யா

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணன்...