Tuesday, November 4, 2008

சூப்பர் ஸ்டாருக்கு நன்றி! (பெண்ணால் முடியும் தம்பி - Part 2)

முந்தைய பதிவைப் (பெண்ணால் முடியும் தம்பி) படித்தீர்கள்தானே... இது அதன் தொடர்ச்சி...


இந்தியாவின் ஒரு மாநிலத்தின் பெருமைகளை பிற மாநிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். என்ன செய்து கிழித்தாய் என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற சிந்தனையிலேயே பெங்களூர் வருகிறார் பீனா. ஆம். இப்போது இருப்பது பெங்களூர். என்றாலும் பலவருடங்களாக தமிழகத்தில் இருந்ததன் மூலம் தமிழ்நாட்டின் மீதும், தென்னிந்தியாவின் மீதும் தனிப் பற்று உருவாகியிருந்தது அவருக்குள்.

கெல்வினுடன் தன் மனதிலிருக்கும் திட்டத்தைச் சொல்கிறார்.

1) இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு நகரை அமைக்கும் திட்டம்.

2) 1330 ஏழைகளைப் பணக்காரர் ஆக்குவோம் என்ற இலக்கு.

தனது மாமியாரின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கிறார். ஷெர்லிக்ஸ் ஃபவுண்டேஷன்! (Shirlyx Foundation)

என்னென்ன செய்கிறார்கள் அந்த அறக்கட்டளையில்?

# கிராமப்புற நலிந்த பள்ளிக்கூடங்களில் சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்து கற்றுக் கொடுத்தல்.

# இலவச தையல் பயிற்சி

# இலவச கணிணிப் பயிற்சி

# இலவச கைவினைப் பொருட்கள் பயிற்சி

# பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு ஏஜன்ஸி நிறுவனம்.

# மழைநீர் தொட்டிகள் என்ற பெயரில் அமைக்கப்பட்டு உபயோகமற்ற முறையில் இருக்கும் தொட்டிகளை, சீர்படுத்திக் கொடுப்பது.

# ஏழை மாணவர்களுக்கு உபயோகப்படுத்த ஒரு சிறந்த நூலகம் ஏற்படுத்துவது. ( தற்போது சென்னையில் ஆரம்பிக்க திட்டம். பிறகு இடம் கிடைக்கும் ஊர்களில் விரிவுபடுத்தப்படும்)

# கிராமப்புறங்களில் பெரிய அளவிலான மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தி, அதில் நீரைச் சேகரித்து தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவது.

# உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

# முடிந்த இடங்களில் சித்த மருத்துவமனை கட்டி நடத்துவது.

இவையன்றி பெங்களூரில் ஷெர்லிக்ஸ் கிச்சன் எம்போரியம் என்ற பெயரில் கிச்சனுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் விற்கும் ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் வரும் பணம் அனைத்தும் ஷெர்லிக்ஸ் ஃபவுண்டேஷனுக்குத்தான்.

பீனாவின் இந்த முயற்சிக்கு அவரது கணவர் கெல்வின் முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியபோது, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் எங்கள் இலக்கு. இதில் எந்த கிராம்த்தில், நகரில் நாங்கள் வந்து, செயல்பட வேண்டுமோ அங்கே வரத்தயார். கணிணிப் பயிற்சி, தையல் பயிற்சிக்கு குறைந்தது 15 முதல் 20 பேர் இருந்தால் நாங்கள் வந்து மையம் துவங்கி கற்றுத்தரத் தயார். இப்போதைக்கு சென்னை, கோவை அருகே அவிநாசி, திருவனந்தபுரம், பெங்களூரில் அலுவலகங்கள் ஆரம்பித்தாயிற்று” என்கிறார்.

இதை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி, பீனா முடிவெடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார். இரண்டொரு நாளில் இதுகுறித்து இன்னும் விரிவாக தெரிவிப்பதாகக் கூறினார்.

இவர்களது வெப் முகவரி: www.shirlyx.org (இதில் அவர்களது முகவரியும், தொலைபேசி எண்ணும் உள்ளது)

தொடர்புக்கு:

bina@shirlyx.org
kelvin@airtel.blackberry.com

18 comments:

வால்பையன் said...

தமிழக கலாச்சாரத்தின் பாதிப்பால் அந்த பெண் ஒரு தொண்டு நிறுவனமாகவே மாறியது பாராட்டக்குறியது.

புதுகை.அப்துல்லா said...

ஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன?

narsim said...

பரிசலாரே..

மிக நல்ல விசயத்தை மிக மிக நல்ல விதமாக எழுதி உள்ளீர்கள்..

நல்ல பதிவு..

நர்சிம்

இறக்குவானை நிர்ஷன் said...

நல்லதொரு பணி.
நல்லதொரு பதிவு.

ambi said...

//பீனா முடிவெடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார். //

சூப்பர்.

நேத்து டிவி பேட்டில அவரு இதை பத்தி ஏதும் சொல்லலையே! :)))

Busy said...

பரிசலாரே..

மிக நல்ல விசயத்தை மிக மிக நல்ல விதமாக எழுதி உள்ளீர்கள்..

நல்ல பதிவு..

வெண்பூ said...

வாவ்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது பரிசல். ஒரு நிறுவனம் அமைத்து அதன் லாபம் முழுவதையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவது போற்றப்பட வேண்டிய ஒன்று.

தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

குசும்பன் said...

//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//

இம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்??? எதுக்கு ரஜினி???


(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க?:(()

குசும்பன் said...

//சூப்பர்.

நேத்து டிவி பேட்டில அவரு இதை பத்தி ஏதும் சொல்லலையே! :)))//

யாரும் துண்டு சீட்டில் எழுதி கேட்கவில்லையே?:)))))

Rangs said...

உங்களுக்கு எவ்ளோ முகங்கள் பரிசல் அண்ணா?

ரொம்ப மகிழ்ச்சியா இருக்குதுங்க.....

இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல வரலீங்க

அன்புடன்

ரங்கராஜ்

Raj said...

//புதுகை.அப்துல்லா said...
ஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன?//

//குசும்பன் said...
//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//

இம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்??? எதுக்கு ரஜினி???


(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க?:(()

//

அதானே....சரியா சொன்னீங்க!

M.G.ரவிக்குமார்™..., said...

பீனா ஏன் ரஜினி கிட்டே உதவி கேட்டாங்கன்னு சொல்லவே இல்லையே!
கலாச்சாரத்தை காப்பாதுறதுக்குன்னே தமிழ் சினிமால / நாட்ல ரொம்ப பேர் இருக்காங்களே! அவங்களை எல்லாம் விட்டுட்டு...............ம்ம்ம்ம்ம்ம்!
- M.G..ரவிக்குமார்-

விலெகா said...

நல்லாயிருக்கு ஆனா புரிதலில் கொஞ்சம் சிரமம் இருக்கு:--)))))))))))

விலெகா said...

ரஜினியிடம் கேட்டதற்காக நன்றி!!!

விலெகா said...

ரஜினியிடம் கேட்டதற்காக நன்றி!!!

கார்க்கிபவா said...

பதிவ பத்தி அப்புறம் பேசலாம்.. முதல்ல ஏன் இந்த ஸ்ட்ரைக்னு சொல்லுங்க.. இப்ப எல்லாம் ரெகுலரா பதிவு போடறதில்ல.. அதிஷா கூட ரொம்ப சேராதீங்க சகா.. காரணம் சொல்லுங்க..

உலக பரிசல் ரசிகர்கள் சார்பாக,
கார்க்கி.

சின்னப் பையன் said...

நல்ல செயல் செய்றாங்க.... பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி நண்பா....

வீணாபோனவன் said...

//புதுகை.அப்துல்லா சைட்...
ஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன?//

//குசும்பன் சைட்...
//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//

இம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்??? எதுக்கு ரஜினி???

(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க?:(() //

Raj said...
//அதானே....சரியா சொன்னீங்க!//


அதானே... வை ரஜினி? விளம்பரத்திற்காகவா?

-வீணாபோனவன்.