Friday, November 21, 2008

லஞ்சப்பேய்!

“நீயெல்லாம் நல்லாயிருப்பியா? வெளங்குவியா? இந்தப் பச்சப் புள்ளைக்கு குடுத்ததையெல்லாம் தூக்கீட்டுப் போறீயே நீ பொம்பளையே இல்ல.. பேயி!” – பிள்ளை பெற்ற பச்சை உடம்புக்காரியின் கூக்குரலை “போம்மா.. இவ பெரிய சாமி.. சாபம் கொடுக்கறாளாம்..” என்று அலட்சியப்படுத்தி அவளுக்கருகில் வைக்கப்பட்டிருக்கும் ஹார்லிக்ஸ், ப்ரெட் பாக்கெட்களை கையில் எடுத்தபடி நகர்கிறாள் மருத்துவமனை ஊழியரான அந்த பெண்.

இடம்: கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை.

“இங்கெ இப்படித்தானுங்க. ஏதோ ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரின்னா செலவில்லைன்னுதானுங்க வர்றோம். ஆனா இங்கேயும் பொம்பளைப்புள்ள பொறந்தா 300, பையன்னா 500ன்னு குடுத்தே ஆகணும். குடுக்கறவரைக்கும் நல்லா இருந்தாலும் வீட்டுக்குப் போக விடமாட்டாங்க. குடுக்க முடியாதவங்ககிட்ட இதோ, இந்த மாதிரி அவங்களை பாக்க வர்றவங்க குழந்தைக்கு கொடுக்கற பழங்கள், ரொட்டீ-ன்னு எது இருந்தாலும் தூக்கீட்டுப் போவாங்க” என்கிறார்கள்.

மருத்துவர்களும் அதே வகைதான் என்கிறார்கள். ஏதாவது ஆபரேஷன் என்றால் ‘அந்த வசதி இல்லை. என் க்ளினிக்குக்கு வா. பதினைந்து, இருபது ஆயிரங்களில் முடிக்க வேண்டியதை ஐந்தாயிரத்தில் முடித்துத் தருகிறேன்’ என்று மார்க்கெட்டிங் பண்ணும் டாக்டர்களும் இருக்கிறார்கள்.

பிரசவ வார்டின் செவிலி முதல் சுடுகாட்டு வெட்டியான் வரை வகைதொகையில்லாமல் எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது இந்த லஞ்சப் பேய்.
இதை ஒழிக்கவே முடியாதா?

“கண்டிப்பா முடியாதுங்க. வேணும்னா கம்மி பண்ணலாம். அது உங்க பேச்சுத்திறமையும், பழக்கவழக்கத்தையும் பொறுத்தது. எங்க ஆஃபீஸீக்காக நான் பல அரசு நிறுவனங்களுக்கும் போறேன். மத்தவங்களை விட கம்மியா லஞ்சம் கொடுக்கறேன். அதுக்கு நான் கொடுக்கற விலை என்னோட தன்மானம். என் வயசு, அனுபவம் எல்லாத்தையும் விட்டுட்டு கண்டவன் முன்னாடி கைகட்டி, அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டீட்டு வர்றேன். அங்கெல்லாம் என்னோட மானம், மரியாதையை லஞ்சமா கொடுக்கற மாதிரிதான். கஷ்டமா இருந்தாலும் வேற வழியில்லை. அதிகமா குடுக்கற சந்தர்ப்பம் வந்தா நான் வேலை செய்யற நிறுவனம் எனக்கே அதுல பங்கு இருக்கோ’ன்னு சந்தேகப்படும்” என்கிறார் கார்த்திகேயன். ஒரு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி.

மேலும் இவர் சொல்லும் இன்னொரு காரணம் யோசிக்க வைக்கிறது.

“தன்னோட பெற்றோரை வெச்சு காப்பாத்தணும்கற எண்ணம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை. ரிட்டயர்டானப்பறமோ அல்லது தன்னால வேலைக்கு போக முடியாம வீட்ல இருக்கற வயசு வந்தாலோ தன்னை, தன் மனைவியை தானேதான் பார்த்துக்கணும். அப்போ குறைஞ்சது 75 வயசு வரைக்கும் இருப்போம்னு ஒவ்வொருத்தனும் கணக்குப் போட்டு, வேலைக்குப் போக முடியாத கடைசி கால 20 வருஷத்துக்கும் சேர்த்து வேலைக்குப் போகும்போதே சமாதிக்கணும்ன்னா லஞ்சம் வாங்கறதைத் தவிர வேற வழியே இல்லை. அதுவும் இப்போதைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்குப் போட்டு, 20 வருஷத்துக்கப்பறம் என்னமாதிரி இருக்கும்-ங்கற பயத்துல கன்னாபின்னான்னு லஞ்சம் வாங்கி சேர்த்து வெச்சுக்கறாங்க” என்கிறார்.

இந்தியனில் சுஜாதா எழுதியிருப்பாரே... ‘மத்த பக்கமெல்லாம் செய்யற வேலையை மீறறதுக்குத்தான் லஞ்சம். இங்கே வேலை செய்யறதுக்கே லஞ்சம்’. அது உண்மைதான்.

நேற்று கோவை நீதிமன்றத்தில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. ஒருவருக்கு ரூ.20000 அபராதமும், நான்காண்டு சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

நண்பர் கருணாகரனிடம் (கும்க்கி) பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “மத்த கேஸ்லயெல்லாம் வழக்கு பதிவானப்பறம் அதை நிரூபிக்கணும், ஆதாரம் வேணும் இப்படிப் பல சிக்கல் இருக்கு. ஆனா லஞ்சம் வாங்கின வழக்கு, சம்பவம் ஆதாரபூர்வமா நிரூபிக்கப்பட்ட பின்னாலதான் பதிவே ஆகுது. அதுல ஒருத்தன் மாட்டினான்னா அவ்ளோதான்”

இவ்வளவு வீரியமான விஷயமாக இருந்தும், லஞ்சம் வாங்குவதிலோ, கொடுப்பதிலோ சளைக்காமல் இருக்கும் அதிகாரிகளும், மக்களும் மாற வழியே இல்லை.

இல்லை. பேசாமல் அதையும் சட்டமாக்கிவிட்டுப் போங்கள் என்று சொல்வோர் சட்டமாக்கினாலும், ‘சட்டப்படி இந்த வேலைக்கு 500 ரூவா ஆகும், நீங்க பார்த்து செய்ங்க’ என்று கேட்கத் தொடங்குவார்கள்.

திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த மாதிரி லஞ்ச அத்துமீறல்களை எதிர்த்து தனி மனிதனாகப் போராடி வருகிறார். ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கியவரிலிருந்து, ஐம்பதாயிரம், லட்சம் என்று கேட்பவர்கள் வரை எந்தத் துறையாய் இருந்தாலும் இவரிடம் சொன்னால் மறைவாக வீடியோ எடுத்து அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து சந்தி சிரிக்க வைத்துவிடுகிறார்.

திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கருகே இருக்கும் கோயிலில் வைத்து ஒரு பெண் போலீஸ் லஞ்சம் வாங்குவதை இவர் வீடியோ எடுத்துவிட்டு, அந்த பெண்போலீஸ் அருகே போய் ‘நாளைக்கு கோர்ட்ல பார்க்கலாம்’ என்று சொல்ல அவர் முகம் வெளிறி அந்தக் காசை தூக்கிப் போட்டு கர்ப்பகிரகத்துக்குள் சென்று ஒளிந்துகொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.

அதே போல வேறு சில போலீஸ் அதிகாரிகள் ‘இதெல்லாம் எதுக்கு? நாம சமாதானமாகலாம்’ என்று இவர் வீட்டுக்கு வந்து சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்து சமாதானம் பேச, பேசி முடிந்த பிறகு ‘எல்லாம் சரியா பதிவாகிருக்கா பார்த்துக்கோங்க’ என்று அவர்களுக்கு டி.வி-யில் போட்டுக் காட்டி ஓட வைத்திருக்கிறார். (இவரைச் சந்தித்து பேச ஆவலாயிருக்கிறேன். விரைவில் பேசி எழுதுகிறேன்)

குழந்தையிலிருந்தே இது ஆரம்பமாகிவிடுகிறது என்கிறார்கள் இதை உளவியல் ரீதியாகப் பார்ப்பவர்கள். விழுந்த இடத்தை அடித்து, குழந்தை அழுகையை நிறுத்தி அதற்குப் பழி வாங்கும் எண்ணத்தை விதைக்கும் பெற்றோர்கள், ஒண்ணைக் குடுத்து ஒண்ணை வாங்கிக்கோ’ என்ற ரீதியாக லஞ்சத்தையும் பழக்கி விடுகிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.

எது எப்படியோ, என்ன விலை கொடுத்தாவது இதை ஒழிக்க முடிந்தால் அதைக் கொடுக்க நாமெல்லாம் தயாராக இருக்கிறோம் என்பதே உண்மை!
பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்குறிப்பு:-

தமிழ்மண மகுடத்துக்கு ஓட்டுப் போடச் சொன்னேன். எப்படின்னு சொல்லாம விட்டுட்டேன். எல்லாரும் போட்டு கவுத்துட்டாங்க. சொல்லாமலே இருந்திருக்கலாம்ன்னு நெனைக்கறேன்.. :-)

பதிவோட தலைப்புல ‘க்ளிக்'கினா தம்ப்ஸ் அப்' சிம்பல் வரும்ல அதுல க்ளிக்குங்க. அதை விட்டுட்டு தம்ஸ் டவுன்ல க்ளிக்கிடாதீங்க.

ஓக்கே? ஸ்டார்ட் மீஜிக்....

62 comments:

Cable சங்கர் said...

பரிசல்..லஞ்சத்தை ஒழிக்க நம்மால் முடியும், நமக்கென்ன என்று எல்லோருமே இருப்பதால் தான் லஞ்சம் வாங்குவது ஞாயப்படுத்தபடுகிறது. நான் இது வரை என்னால் முடிந்த வரை லஞ்சம் கொடுக்காமல் தான் இருந்து வருகிறேன் அதற்கு சான்று என்னுடய் பதிவு http://cablesankar.blogspot.com/2008/11/other-side-of-police-man.html.

யாருமே எதுவும் செய்யவில்லை என்று சொல்வதை விட கொடுக்க மாட்டேன் என்று நாலு பேர் முன்னாடி சொல்லி பாருங்கள்.. உங்களை பார்த்து மற்றவர்களும் சொல்ல ஆரம்பிப்பார்கள். நம்ம ஆட்களுக்கெல்லாம் கும்பல்ல தான் வீரம் வரும்..

பரிசல்காரன் said...

@ கேபிள் சங்கர்

எனக்கும் இந்த எண்ணம் இருக்கிறது.

ஆனால் உங்க உடம்பையும், என் உடம்பையும் பார்த்துச் சொல்லுங்கள்.. நான் இப்படி வீராப்பாய்ச் சொன்னால் எனக்கு என்ன கிடைக்கும் என்று...

:-)

Cable சங்கர் said...

//ஆனால் உங்க உடம்பையும், என் உடம்பையும் பார்த்துச் சொல்லுங்கள்.. நான் இப்படி வீராப்பாய்ச் சொன்னால் எனக்கு என்ன கிடைக்கும் என்று..//

ஹா..ஹா.. நல்ல நகைச்சுவை.. சீரியஸாய் சொன்னால் நம்முடய் உடம்பு முக்கியம் அல்ல பரிசல்.. நம்மை எப்படி முன்னிறுத்துகிறோம். எவ்வளவு கான்பிடண்டாய் அவர்கள் ஏற்படுத்தும் பிரச்சனையை எதிர்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.. உதாரணமாய் என்.ஓ.சி வாங்குவதற்கு ஆர்.டி.ஓ. ஆபிஸில் பணம் கட்டிவிட்டு அந்த ரசீதை நீங்கள் வைத்திருந்தாலே போதும் சட்டப்படி அவர்க்ள் உங்களின் பணம் கட்டிய ரசீதுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் நமக்கு பொறுமையில்லை. புரோக்கர்களை ஊக்க படுத்துகிறோம்.

கார்க்கிபவா said...

தனிமனிதனால் ஏற்படுத்தக்கூடிய செய்கைகள் அவ்வபோது சிறு கவனம் பெறக்கூடுமேத் தவிர அது ஒரு தீர்வுக்கு அழைத்து செல்லாது என நினைக்கிறேன். இது நம்மால் ஆக கூடிய காரியமல்ல. செய்ய் வேண்டியவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. பொறுப்பான பதிவு.

பின்னூட்டத்திற்கு தொடர்பில்லாத பி.கு:

நம்ம மக்கள் சரியாத்தான் போடறாங்க சகா.. உங்க பதிவு கொஞ்ச நேரம் அந்த வரிசையில் இருந்தது. என் பதிவுக்கும் உங்கள மாதிரியே ஒரு விளமப்ரம் கொடுத்தேன். 12 வாக்குகள் விழுந்தும் மகுட வரிசையில் வரவில்லை. ஏதோ கோளாறு

Kumky said...

இப்போதைக்கு ஓட்டு போட்டுட்டு அப்பீட்...

கேபிள் உருவத்தை பார்த்து லஞ்சம் கேட்கவும் யாருக்காவது தோணுமா..?
சரியாக பிடித்தீர்கள்.

Kumky said...

லஞ்சத்தை பற்றி என்னிடம் ஒரு காப்செப்ட் உள்ளது.....

ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே..

கார்க்கிபவா said...

சகா லேபிள்ல pribe னு போட்டிருக்கு. அது bribe தானே!!!

Kumky said...

அ அப்ஜெக்ட் யுவர் ஆனர்..

லஞ்சம் என்ற வார்த்தை (லஞ்ச ஒழிப்பு துறை தவிர) எங்குமே புழக்கத்தில் இல்லை என்பதை தெறிவித்துக்கொள்கிறேன்...

Kumky said...

ஆபிஸ்ல என்ன நடக்குது என்று தனக்கே உரிய(?)பாணியில் பதிவு போட்டுள்ள கார் கீ க்கு ஒரு ஓ.....

Kumky said...

அங்க வந்தா கும்மி சத்தம் காதை தாங்க முடியல சகா..

Kumky said...

ஓட்டு செல்லுபடியாகளையே...ஏன்?

SurveySan said...

//பதிவோட தலைப்புல ‘க்ளிக்'கினா தம்ப்ஸ் அப்' சிம்பல் வரும்ல அதுல க்ளிக்குங்க//

done.

Ramesh said...

Nice post! I never took lanjam in my job, in my job of 13 years, but could not control others, nor allow someone to accept it in my name.

In last 2 years, I faced many hardships bcoz of this, with many transfers.

I should admit that position gives power + clout itself is a lanjam, where even in vegetable/cloth shop you get better deals.

Once thing you can write in detail is, junior officers who are entrusted to investigate, will never go against seniors.

Kumky said...

போட்டுட்டேன் ஓட்ட...
நன்றி சொன்னப்புறம் :சன்னலை மூடு: அப்படின்னு மெரட்றாய்ங்க ...அது எந்த சன்னல்?

பாலகுமார் said...

//“தன்னோட பெற்றோரை வெச்சு காப்பாத்தணும்கற எண்ணம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை. ரிட்டயர்டானப்பறமோ அல்லது தன்னால வேலைக்கு போக முடியாம வீட்ல இருக்கற வயசு வந்தாலோ தன்னை, தன் மனைவியை தானேதான் பார்த்துக்கணும்.//

லஞ்சம் வாங்கி, அந்த பணத்துல வளர்த்தா பிள்ளைங்களுக்கு பாசம் எப்படி வரும்... ?

DHANS said...

அட போங்க லஞ்சம் குடுக்க மாட்டேன் என்று சொன்னா பெற்றோரில் இருந்து எல்லோரும் நம்மள கேனையன் என்று சொல்றங்க.. அந்த பெயரோடவே இவ்ளோ நாள் இருந்துட்டேன். பார்ப்போம் இது எப்ப மாறுதுன்னு

Mahesh said...

நல்ல பதிவு கிருஷ்ணா... ஆனா இது பொது மக்கள் "குடுக்க மாட்டேன்"னு சொல்றதுனால தீருமான்னு சரியா சொல்லத் தெரியல. என்னதான் "பே கமிஷன்"கள் வெச்சு சம்பள வித்தியாசங்கள சரிபண்ணி வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியக் குறைக்க முயற்சி செஞ்சாலும், பண வீக்கமும் தனியார் துறை (குறிப்பா ஐ.டி, தொலை தொடர்பு, கோர் செக்டார்) சம்பள விகிதம் தாறுமாறா இருக்கறதால இதுக்கு ஒரு பன்முனை அணுகல் (multi-pronged approach)தான் தேவை.

லஞ்சம் வாங்கி மாட்டினா லஞ்சம் குடுத்து வெளிய வர முடியுது. இவ்வளவுதானெ பண்ண முடியும்னு, இன்னும் துணிஞ்சு வாங்கறாங்க. உடுமலைல ஒரு முனிசிபல் ஆபீஸ் க்ளார்க் என் கிட்ட சொன்னது "சார்.. கேக்கறத குடுங்க... இல்ல புகார் பன்றதுன்னா பண்ணுங்க.. நான் ஏற்கெனவே ரெண்டு வாட்டி மாட்டி எது எது யார் யாருன்னு எல்லாம் தெரியும்... முடிஞ்சதப் பண்ணிக்குங்க.." இப்பிடி துளிர்த்த கட்டைகள் கிட்ட எந்தப் பருப்பும் வேகாது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"எது எப்படியோ, என்ன விலை கொடுத்தாவது இதை ஒழிக்க முடிந்தால் அதைக் கொடுக்க நாமெல்லாம் தயாராக இருக்கிறோம் என்பதே உண்மை!"
நல்ல பஞ்ச்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\தமிழ்மண மகுடத்துக்கு ஓட்டுப் போடச் சொன்னேன். எப்படின்னு சொல்லாம விட்டுட்டேன். எல்லாரும் போட்டு கவுத்துட்டாங்க. சொல்லாமலே இருந்திருக்கலாம்ன்னு நெனைக்கறேன்.. :-)//
:))

புருனோ Bruno said...

பரிசல்

லஞ்சத்தை ஒழிக்க முதலில் திருந்த வேண்டியது மக்கள்

யாராவது லஞ்சம் கேட்டால்,

1. பளாரென்று ஒரு அறை விட வேண்டும்.

மற்றதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்

--

2. கண்டிப்பாக எழுத்து மூலம் புகார் தெரிவிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் தொலைபேசியிலாவது. உங்கள் பெயரை தெரிவிப்பதும் தெரிவிக்காததும் உங்கள் இஷ்டம், ஆனால் புகார் செய்யுங்கள்

”நான் புகார் தெரிவித்தால் என்ன நடக்கும்” என்று கேட்கிறீர்களா....

ஒரு கல்லை உடைக்க 10 அடி தேவையென்றால், முதல் அடி கண்டிப்பாக வீண் போலத்தான் தெரியும்.

ஆனால் நீங்கள் அந்த அடி அடித்தால் மேலும் 9 பேர் அடித்தவுடனே அந்த கல் உடையும்.

இல்லையென்றால் இன்னமும் 10 பேர் அடிக்க வேண்டும்

---

//யாருமே எதுவும் செய்யவில்லை என்று சொல்வதை விட கொடுக்க மாட்டேன் என்று நாலு பேர் முன்னாடி சொல்லி பாருங்கள்.. உங்களை பார்த்து மற்றவர்களும் சொல்ல ஆரம்பிப்பார்கள். நம்ம ஆட்களுக்கெல்லாம் கும்பல்ல தான் வீரம் வரும்..//

அப்படியே வழி மொழிகிறேன்

புருனோ Bruno said...

//குடுக்க முடியாதவங்ககிட்ட இதோ, இந்த மாதிரி அவங்களை பாக்க வர்றவங்க குழந்தைக்கு கொடுக்கற பழங்கள், ரொட்டீ-ன்னு எது இருந்தாலும் தூக்கீட்டுப் போவாங்க” என்கிறார்கள்.//

இது எனக்கு இவ்வளவு நாளாக தெரியாது. அதிர்ச்சி அளிக்கும் விஷயம்

--

//குடுக்கறவரைக்கும் நல்லா இருந்தாலும் வீட்டுக்குப் போக விடமாட்டாங்க.//

இது முற்றிலும் பொய் !! அரசு மருத்துவமனையிலிருந்து வெளியில் நீங்கள் தாராளமாக செல்லலாம். அங்கு யாரும் உங்களை கைது செய்து வைப்பதில்லை

புருனோ Bruno said...

//மருத்துவர்களும் அதே வகைதான் என்கிறார்கள். ஏதாவது ஆபரேஷன் என்றால் ‘அந்த வசதி இல்லை. என் க்ளினிக்குக்கு வா. பதினைந்து, இருபது ஆயிரங்களில் முடிக்க வேண்டியதை ஐந்தாயிரத்தில் முடித்துத் தருகிறேன்’ என்று மார்க்கெட்டிங் பண்ணும் டாக்டர்களும் இருக்கிறார்கள்.//

இப்படி சிலர் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். :(

புருனோ Bruno said...

எனக்கு ஒரு சந்தேகம்

இந்த லஞ்ச ஊழியர்களுக்கு எதிராக கம்யூணிஸ்ட்கள் ஏன் எதுவும் செய்வதில்லை..

யாராவது விளக்க முடியுமா :)

--

சில இடங்களில் இப்படி பட்ட ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுத்தால், நடவடிக்கையை கைவிடுமாறு கம்யூணிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்களை அரசு அதிகாரிகளிடம் சொல்வது / மிரட்டுவது ஏன்

rapp said...

உங்க நண்பர் கார்த்திகேயன் சொன்ன ரெண்டாவது காரணம் சரி, ஆனா இதுக்கு இன்னும் கூட பல காரணங்கள் இருக்கு:(:(:(

rapp said...

//யாராவது லஞ்சம் கேட்டால்,

1. பளாரென்று ஒரு அறை விட வேண்டும்.

மற்றதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்

//

பின்னர் நாம எங்கருந்து பாக்கறது? மத்தவங்கதான் பாத்துக்கணும்:):):) அரசு ஊழியர்களை அடிச்சிட்டு ஒருத்தங்க நிம்மதியா வாழ இதென்ன ஷங்கர் சார் படமா:):):)

வால்பையன் said...

நல்ல பதிவு
லஞ்சம் வாங்குபவர் இதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவலைப்படுவதில்லை.

இந்தியன்,ரமணா மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

பரிசல்காரன் said...

////குடுக்கறவரைக்கும் நல்லா இருந்தாலும் வீட்டுக்குப் போக விடமாட்டாங்க.//

இது முற்றிலும் பொய் !! அரசு மருத்துவமனையிலிருந்து வெளியில் நீங்கள் தாராளமாக செல்லலாம். அங்கு யாரும் உங்களை கைது செய்து வைப்பதில்லை//

டாக்டர் சார்..

நீஙக்ளோ, நானோ போடா மயிறுன்னு எழுந்து வீட்டுக்குப் போவோம். படிக்காத பாமரர்களை என்னென்னவோ சொல்லி காசு வரும் வரை இழுத்தடிக்கிறார்கள் என்பது உண்மை.

நையாண்டி நைனா said...

/*புருனோ Bruno said...
//குடுக்க முடியாதவங்ககிட்ட இதோ, இந்த மாதிரி அவங்களை பாக்க வர்றவங்க குழந்தைக்கு கொடுக்கற பழங்கள், ரொட்டீ-ன்னு எது இருந்தாலும் தூக்கீட்டுப் போவாங்க” என்கிறார்கள்.//

இது எனக்கு இவ்வளவு நாளாக தெரியாது. அதிர்ச்சி அளிக்கும் விஷயம். */

நீங்கள் இதை தேடி எங்கும் போக வேண்டாம்....
நம்ம திருநெல்வேலி- ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை - இலவசமாக பிரசவம் செய்து குடும்ப கட்டுப்பாடு செய்து விடும் வார்டுக்கு சென்றால் காணலாம்.
இதை உங்களுக்கு தகவல் தரும் நோக்குடனேயே செய்திருக்கிறேன்.

ambi said...

//‘சட்டப்படி இந்த வேலைக்கு 500 ரூவா ஆகும், நீங்க பார்த்து செய்ங்க’ என்று கேட்கத் தொடங்குவார்கள்.
//

கரக்ட்டா சொன்னீங்க பரிசல். பல தடவை இந்த லஞ்சம் ஒழிஞ்சா இந்தியா எவ்ளோ முன்னேற்றம் அடைஞ்சு இருக்கும்?னு நினைச்சு பாத்ருக்கேன்.

தருமி said...

இந்த விசயத்தை நக்சலைட்டுகள் கையிலெடுக்கணும் அப்டின்றது என் பல கனவுகளில் ஒன்று.

கனவுதானே ...

narsim said...

இவைகள் இல்லாமல் இந்தியா இல்லை என்பதில் லஞ்சம் முதல் இடத்தில் இருக்கிறது!!

//என்ன விலை கொடுத்தாவது இதை ஒழிக்க முடிந்தால் அதைக் கொடுக்க நாமெல்லாம் தயாராக இருக்கிறோம் என்பதே உண்மை!
//

நல்ல கு(கரு)த்து!!

Joe said...

இந்தியன்,ரமணா மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

cinema paarthu dhaan endha prachanaiyaiyum sari seyya vendum endru ninaikkum jenmangal irundhaal verenna nadakkum?

Kumky said...

ஏன் ஒருத்தர் ஒரு வகையில் தன் என்னத்தை வெளிப்படுத்தினால் அதையே ரிப்பீட்டுகிறீர்கள்..?

லஞ்ச ஒழிப்பு என்பது மேலிருந்து கீழ் வர வேண்டுமே ஒழிய..கீழிருந்து மேல் என்பது போல எதிபார்க்ககூடாது.

நமது அதிகாரம் செல்லுபடியாகக் கூடிய அல்லது நம்மை அவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலையில் உள்ளவர்களிடத்தில் மட்டுமே நமது வீரத்தை காண்பிக்க தயாராகிரோம்.

அரசியல் மற்றும் இன்னபிற மேலதிக வட்டங்களில் லஞ்சமே இல்லையா..?

பல ஆண்டுகளாக கேள்வி மேல் கேள்வி கேட்டும் பலன் என்ன?

சம்பந்தப்பட்ட ஆயிரமாயிரம் கோடிகள் சென்ற இடம்தான் என்ன..?

உள்ளூரிலுள்ள ஒரு ஆளும்கட்சி வட்டம் கூட வேண்டாம் கிளை செயலாளரை பார்த்து நம்மால் லஞ்சம் தொடர்பாக கேள்வி கேட்க இயலுமா..?

அரசு துறைகளிலுள்ள மேலதிகாரிகளையோ அல்லது பல தரப்பட்ட இரண்டாம் நிலை (அ)மூன்றாம் நிலை அதிகரிகளையோ கேள்வி கேட்கும் தைரியம் இங்கே யாருக்கும் இல்லை..

என்ன காரணம்..அரசியல் செல்வாக்கு...அடியாள் பலம்(உண்மை நம்புங்கள்)...தொழிற்சங்க பலம்...எல்லாவற்றிற்கும் மேல் அடுத்த முறை நமது வேளை இவனிடம் நடக்குமா என்ற நமது பயம்....இன்ன பிற.


ஆகக் கூடி அனவரும் பாய்வது கடை நிலை ஊழியர்கள் 5 மற்றும் 10க்கு பிச்சை எடுக்கும் போதுதான்...

இந்த மாதிரி சில்லறை தேத்திக்கொண்டு போய்த்தானே அவன் மாடி வீடு அல்லது அப்பார்ட்மெண்ட்ஸில் ஒரு போர்ஷனாவது வாங்க முடியும்...

இது நியாயம் என சொல்ல வரவில்லை....

யான போறத கண்டுகிற மாட்டாங்களாம்...பூனை போறத குத்தம் சொல்றாங்க ...என்பது மாதிரி இருக்கிறது..

சாரி பரிசல்...இன்னும் நிறைய விவாதிக்கலாம்..

நையாண்டி நைனா said...

என்னது?????
அலுவலகத்தில் கொடுப்பமே... அதுக்கு பேரு லஞ்சமா????
அப்படி கொடுக்கிறது .. தப்பு வேறையா????
ஐயையோ.... இதுநாள் வரைக்கும் தெரியாமே போச்சே...
இதை நான் விக்கி-லே கூட படிக்கலையே......
(இப்பவும் இப்படி சொல்லிக்கலாம், இப்ப இல்லைனா இன்னும் கொஞ்ச நாள் போன நம்ம அடுத்த தலை முறை சொல்வான்)

VIKNESHWARAN ADAKKALAM said...

:(

பரிசல்காரன் said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.. தொடர்ந்து விவாதியுங்கள். நல்ல கருத்தை பேசுபவர்களை தனியா ‘கவனிக்கறேன்!’

நையாண்டி நைனா said...

/*கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.. தொடர்ந்து விவாதியுங்கள். நல்ல கருத்தை பேசுபவர்களை தனியா ‘கவனிக்கறேன்!’*/

இங்கேயும்... லஞ்சமா????... ( வடிவேல் அதிர்ச்சியில் கூறும் பாணியில் படிக்கவும்...)

Itsdifferent said...

Can I make a request to this community?
Can we use this energy & team spirit to focus on improving the conditions of our public schools?
My suggestion is, lets adopt one or two schools to start with.
1. Visit those schools, understand the basic necessities like Black Board, chalk, water, toilets, stationary for teachers and students etc.,
2. Create time and money to fulfill the above.
3. Use this medium to collect money from the readers to these blogs all over the globe.
4. Create a team with folks on the ground in TN, to get the necessary work done at schools.
5. I know there are going to be challenges, but a small step is easy with trust in each other and will definitely pave ways for a long term success.
Have been wanting to write these for a long time, I thought the mood in the community is right for us to take this forward.
How do we take this forward?
Once we have a structure, we can do multiple things, most importantly how do we help Ordinary citizens to be successful in whatever they want to do improve their living conditions. Thats the way forward to lift people out of poverty. Govt or banks are not going to do that, we the fortunate ones have to help the unfornate ones with necessary to help to lift them out of their poverty to let them live a decent life.
I am sure, we have lots of energy around, lets see, if we can focus a small percentage of that energy to a cause.

நாமக்கல் சிபி said...

முதலில் லஞ்சம் கேட்பவர்களுக்கு ஒரு கையை வெட்ட வேண்டும்!

அதன் பிறகு லஞ்சம் கொடுக்க முன்வருபவர்களுக்கு இரண்டு கைகளையும் வெட்ட வேண்டும்!

நாமக்கல் சிபி said...

//இந்தியன்,ரமணா மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்//

படங்கள் வந்தா போதுமா! அதே மாதிரி ஆட்கள் நிஜமா வரணும்!

விலெகா said...

லஞ்சம் எங்கிருந்து வருகிறது என ஆராய்ந்தால் என் அனுபவபடி அது ஆரம்பிப்பது நம்மில் இருந்துதான்,ஒவ்வொரு தனிமனிதனும் நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தரமாட்டேன் என உறுதியுடன் இருந்தால் இதை குறைக்கலாம்,ஆனால் முழுவதுமாக நிருத்த முடியாது என்பது என் கருத்து.

KARTHIK said...

// திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த மாதிரி லஞ்ச அத்துமீறல்களை எதிர்த்து தனி மனிதனாகப் போராடி வருகிறார்.//

ஒரு பெண் SI யை இவர் தண்ணி காட்டியதா மறக்கவே முடியாது சென்னைக்கு ஒரு ட்ராபிக் திரு ராமசாமி மாதிரி இங்க இவரு.சில வருசமா இவர மறந்தே போனேன்.தினசரிகல்லியும் இவர் பேர பாக்க முடியறதில்லை.
நல்ல தில்லான மனுஷன்.

Anonymous said...

பரிசல்,

பதிவு சுவராஸ்யமா இருக்கு. பின்னூட்டம் இட்டவங்களும் வீரமா இருக்காங்க. ஆனா யாரும் பிராக்டிக்கலா பார்க்கல.

நான் திருவனந்தபுரத்துக்கு அனுப்பின கவர்ன்மெண்ட் ஸ்டேசனரி பொருட்கள் வாளையார் செக் போஸ்டுல பிடிச்சு வச்சுகிட்டாங்க. என்னுடைய TIN copy, CST Copy, govt order copy, invoice பக்காவா லாரி நம்பர் எல்லாம் போட்டு தெளிவா இருக்கு. எத்தனி பெட்டி ஒவ்வொன்னுலயும் எத்தனி ஐட்டம் எல்லாம் சரியா குறிப்பிடப்பட்டிருக்கு.
இருந்தாலும் பிடிச்சு வச்சுகிட்டாங்க. 10 ஆயிரம் குடுத்தால் விடுவேன்ன்னு சொல்றாங்க. 12 மணி நேரம் (காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை) போராடிப் பார்த்துட்டு வெறுத்துப் போய் சமரசம் செய்து 5000 ரூபாய் கொடுத்து அனுப்பினேன். அனுப்பியிருக்கா விட்டால் எனக்கு 30,000 ரூபாய் அபராதம் வந்திருக்கும். டெண்டெர் கேன்சலாகி இருக்கும்.
இது சரியா த்வறா. கடவுளே இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்கிறார்கள். இவர்களி கை காலை முடமாக்குன்கள் என்றுதான் வேண்டமுடிகிறது. கையறு நிலைதான்.

Unknown said...

கடை வீதியில் தாயின் கை பிரிந்த குழந்தையின் தேடலுடன் அலையும் எனக்கு இந்த பக்கங்கள் பரிச்சயமான முகம் கண்ணில் பட்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. உங்களின் பல படைப்புகள் என் எண்ணங்களை எழுத்துருவாக்கியது போல் தோன்றுகிறது. - வாழ்த்துக்களுடன் கவிதாயினி!

புருனோ Bruno said...

//
டாக்டர் சார்..

நீஙக்ளோ, நானோ போடா மயிறுன்னு எழுந்து வீட்டுக்குப் போவோம். படிக்காத பாமரர்களை என்னென்னவோ சொல்லி காசு வரும் வரை இழுத்தடிக்கிறார்கள் என்பது உண்மை.//

இல்லை தல

எனக்கு தெரிந்து அதிக நாள் உள்ளே இருப்பதற்குதான் காசு அளிப்பவர்களே தவிர வெளியே வருவதற்கு அல்ல. அந்த தகவல் தவறென்றே நினைக்கிறேன். சரி பார்க்கவும் :)

--

காசு தராவிட்டால் அடுத்த நாளே டிஸ்சார்ஜ் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாமே தவிர டிஸ்சார்ஜ் செய்வதற்கு லஞ்சம் என்பது கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்.

அப்படி எங்காவது நடந்திருக்கிறது என்றால் விபரம் தெரிவிக்கவும்

புருனோ Bruno said...

//நம்ம திருநெல்வேலி- ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை - இலவசமாக பிரசவம் செய்து குடும்ப கட்டுப்பாடு செய்து விடும் வார்டுக்கு சென்றால் காணலாம்.//

ஹைகிரவுண்ட் மருத்துவமனையில்

1. பிரசவ வார்டு என்பது ஒரு வார்டு
2. சுகப்பிரசவம் ஆன பின் இருக்கும் வார்டு வேறு
3. அறுவை சிகிச்சை ஆன பிறகு நோயாளி இருக்கும் வார்டு வேறு
4. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பிணியாளர்கள் இருக்கும் வார்டு வேறு

அனைத்து வார்டுகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறதா

ஆட்காட்டி said...

அப்ப அவங்கள் எல்லாம் எப்படி பிழைக்கிறது? அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதை வாழ வழி செய்தால், லஞ்சம் தன் வழியில் அழிந்திரும்.

நட்புடன் ஜமால் said...

//இந்தியனில் சுஜாதா எழுதியிருப்பாரே... ‘மத்த பக்கமெல்லாம் செய்யற வேலையை மீறறதுக்குத்தான் லஞ்சம். இங்கே வேலை செய்யறதுக்கே லஞ்சம்’. அது உண்மைதான்.//

மிகப்பெரிய உண்மை.

நட்புடன் ஜமால் said...

// Ramesh said...
Nice post! I never took lanjam in my job, in my job of 13 years, but could not control others, nor allow someone to accept it in my name.

In last 2 years, I faced many hardships bcoz of this, with many transfers.

I should admit that position gives power + clout itself is a lanjam, where even in vegetable/cloth shop you get better deals.

Once thing you can write in detail is, junior officers who are entrusted to investigate, will never go against seniors.//

அண்ணன் இரமேஷ்க்கு ஒரு பெரிய ஓ போடுங்க.
இது சந்தோஷ ஓ! (நக்கலல்ல)

நட்புடன் ஜமால் said...

// சோலைஅழகுபுரம் - பாலா said...
//“தன்னோட பெற்றோரை வெச்சு காப்பாத்தணும்கற எண்ணம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை. ரிட்டயர்டானப்பறமோ அல்லது தன்னால வேலைக்கு போக முடியாம வீட்ல இருக்கற வயசு வந்தாலோ தன்னை, தன் மனைவியை தானேதான் பார்த்துக்கணும்.//

லஞ்சம் வாங்கி, அந்த பணத்துல வளர்த்தா பிள்ளைங்களுக்கு பாசம் எப்படி வரும்... ?//


அழகா சொன்னீங்க .

Kumky said...

கார்த்திக் said...
// திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த மாதிரி லஞ்ச அத்துமீறல்களை எதிர்த்து தனி மனிதனாகப் போராடி வருகிறார்.//

ஒரு பெண் SI யை இவர் தண்ணி காட்டியதா மறக்கவே முடியாது சென்னைக்கு ஒரு ட்ராபிக் திரு ராமசாமி மாதிரி இங்க இவரு.சில வருசமா இவர மறந்தே போனேன்.தினசரிகல்லியும் இவர் பேர பாக்க முடியறதில்லை.
நல்ல தில்லான மனுஷன்.

நீங்களும்...உங்க தோஸ்த்தும் கூடத்தான் காமிராவோட யாரையாச்சும் பிடிக்கணும்னு அலையரீங்க......பாவம் எந்த பறவையும் லஞ்சம் வாங்குறதில்லையாமே...?

KARTHIK said...

// நீங்களும்...உங்க தோஸ்த்தும் கூடத்தான் காமிராவோட யாரையாச்சும் பிடிக்கணும்னு அலையரீங்க......பாவம் எந்த பறவையும் லஞ்சம் வாங்குறதில்லையாமே...

முடியல.....

நவன் said...

உணர்ச்சி வசத்தில் எழுதிய பதிவு? லஞ்சத்தை ஒழிக்க மிக சுலபமான வழி, நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்பதை நடமுறைபடுத்துவதே. பரிசல்: நன்றாகத யோசித்து சொல்லுங்கள். உங்களால் முடியுமா? உங்கள் உயிர்னும் மேலான ஒருவர் உயிருக்கு போராடுகிறார் என்றால், உங்கள் நிலை என்ன?

தேவன் மாயம் said...

கையூட்டு பற்றி எழுதும் போது
ஆஸ்பத்திரிதான் முதலில் தெர்யுதா!
தினம் தினம் பணம் புழங்கும்
ஓட்டுனர் உரிம அலுவலகம்,
போக்குவரத்து காவலர்,
பயங்கர கொள்ளை அடிக்கும்
மாநில சுங்கச்சாவடி, அரசியல்
வாதிகள் இவர்களையும்
பற்றி எழுதுங்க நண்பர்களே!
தேவா.
thevanmayam.blogspot.com

தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com

பரிசல்காரன் said...

// thevanmayam said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com//


ஐயா... தமிழ்ல எழுதுங்க...

##%#(%*#&%)_*%&%&^&(^^$^%^&^$#

இப்படி இருக்கு உங்க பதிவுல. என்ன கருத்தைச் சொல்ல!!!

பரிசல்காரன் said...

// navan said...

உணர்ச்சி வசத்தில் எழுதிய பதிவு? லஞ்சத்தை ஒழிக்க மிக சுலபமான வழி, நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்பதை நடமுறைபடுத்துவதே. பரிசல்: நன்றாகத யோசித்து சொல்லுங்கள். உங்களால் முடியுமா? உங்கள் உயிர்னும் மேலான ஒருவர் உயிருக்கு போராடுகிறார் என்றால், உங்கள் நிலை என்ன?//

இதை என்னத்துக்கு யோசிக்கணும்? குடுக்க முடியாதுடா நாயே-ன்னு சொல்ல த்ராணி இல்லாமத்தானே இப்படி பதிவெழுதி அரிப்பைச் சொறிஞ்சுக்கறேன்.

Kumky said...

வர வர பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்லாமலிருக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது....
பாதிப்பு என்னவென்றால்....பதிவை விட பின்னூட்டம் நீளமாகக்கூடய ஆபத்தும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகிறது....

வெண்பூ said...

சரி.. சரி.. யாருக்கு லஞ்சம் குடுத்தா இந்த பிரச்சினைய ஒழிக்க முடியும்னு சொல்லுங்க.. பரிசல் தலைமைல கலெக்ட் பண்ணி குடுத்து முடிச்சிடுவோம்...

sundar said...

I am a revenue inspector...
I always think about stopping corruption....
For this..WE (Public,Officials,Law Makers) shud have right attitude.

Whenever I come across a wrong doer in my service, first thing he does is HE is trying to lure me with money.

There is no provision in law to complain against a person who is trying to bribe me...

If any body has any idea, please let me know...

Further, the governing system of our country should be changed...

Like all other issues, these public welfare related issues are put at rest....

LET US FIGHT

Anonymous said...

when you meet that person in tiruppur, ask him to upload those videos in youtube.. :)

நம்ம இந்தியாவோட மானம் பொகும் என்றாலும், லஞ்சம் குறையும் என்பதால் இது சிறந்த ஐடியாவாதான் தெரியுது..

ஏன்னா.. youtubeஐ யாரும் மிரட்ட முடியாது

MUTHUKRISHNAN said...

I remember what Mrs Indira Gandhi said " Corruption is an international phenomenon " Even Kautilya acknowledged this that the king's servants are like fish in the water, when it drinks water no one knows. It is upon individual's morality both the giver and the taker.