
சரியான போர் – ங்க. தமிழ் ‘போர்’ இல்ல. இங்க்லீஷ் Bore. இந்த மாதிரி போரடிக்கும்போதெல்லாம் மூளையைக் கசக்கினா கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகும்ல?
அதுனால இன்னைக்கே – சில புதிர்கள். கண்டுபிடிங்க பார்க்கலாம்.
1) நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?
(அப்படியே ஓர் உப கேள்வி: டினாமினேஷனுக்கு தமிழ் என்ன?)
2) ஒரு மொதலாளி தப்பு பண்ணின தன்னோட தொழிலாளிகள் மூணு பேருக்கு, அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி ஒரு வித்தியாசமான தண்டனை விதிச்சாரு. அவரோட கல்லாவுல எவ்ளோ பணமிருக்கோ, அதை விட மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு. கட்டிட்டு, ஒரு ரூவா அவன் திருப்பி எடுத்துக்கலாம்னு சொல்லீட்டார். அதன்படி முதல் ஆள் கல்லாவுல எவ்ளோ இருக்குன்னு பார்த்து, அதவிட மூணு மடங்கு வெச்சுட்டு, ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். அடுத்தவன் வந்து இருக்கறத எண்ணிப் பார்த்துட்டு, மூணு மடங்கு கட்டிட்டு ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணாமவனும் அஃதே செய்தான்.
கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?
3) ஒரு அரபுக்காரர் தன்னோட இரு மகன்களுமிடையே சொத்தைப் பிரிக்கறதுக்காக ஒரு போட்டி வைக்கிறார். ‘உங்க ஒட்டகங்களுக்கிடையே ஒரு போட்டி வைங்க. யாரோட ஒட்டகம் மிக மெதுவாய்ப் போகுதோ அவங்களுக்கு அதிக பங்கு’ –ன்னு சொல்லிடறாரு. இரண்டு மகன்களும் அவங்கவங்க ஒட்டகங்கள்ல ஏறி மெ-து-மெ-து-வாப் போறாங்க.
இது ரொம்ப நாளா நடந்துட்டே இருக்கறதால, வெறுத்துப் போயி அவங்க வழில ஒரு பெரியவரைப் பார்த்து ஐடியா கேட்கறாங்க. அவர் ஒரு ஐடியா சொல்றாரு. அடுத்த நிமிடம், இவங்களை ஏத்திகிட்ட ஒட்டகங்கள் வெகு ஸ்பீடா ஓடத் தொடங்குது.
அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?
4) உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.
ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.
இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?
5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?
6) ஒரு ஜெனரல் நாலேட்சு கொஸ்டீனு! நெறைய கடைகள்ல 99 ரூவா, 199 ரூவான்னு ஐட்டங்களுக்கு விலை போட்டிருக்காங்க. நூறு, இருநூறுன்னு போடாம இப்படிப் போடறது கஸ்டமர்களுக்கு விலை கம்மியாத் தெரியணும்னு சொல்லப்படுது. ஆனா உண்மையா இந்த மாதிரி விலை போட என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...
7) இது புதிரில்லை. ச்சும்மா...
கீழ உள்ளதுல என்ன கலர்ல எழுதிருக்குங்கறத விடுங்க.. எழுத்தை மட்டும் படிங்க... ஸ்பீடா...

வெரிகுட். இப்போ.. என்ன எழுதிருக்குங்கறத விடுங்க. என்ன கலர்ல எழுதிருக்குன்னு ஸ்பீடா சொல்லுங்க பார்ப்போம்...
***
கடைசியா வடகரை வேலன் அண்ணாச்சி எனக்கு அனுப்பின ஒரு எஸ்ஸெம்மெஸ்:-
I really appreciate your brain which is divided in 2 parts: Right & Left. In Right nothing is Left and in Left nothing is Right.
.