Saturday, December 13, 2008

வார இறுதி புதிர்கள் – 13.12.2008 (EXCLUSIVE PHOTOவுடன்!)

1.. காலீல நியூஸ் பேப்பர் படிக்கச் சொல்லோ, அதுல கீற மொத்த பேஜூல, ஒரு நாலு பேஜூ மிஸ்ஸாகுதுன்னு கண்டுக்கற நீ. மிஸ்ஸாகிப் பூட்ட 4 பேஜுல ஒரு பேஜோட நெம்பரு 21, அதே மாரி கடேசி பேஜூ நெம்பரு 28ன்னாக்கா, மிஸ்ஸான மத்த மூணு பேஜ் நெம்பர் இன்னாபா?

என்னாது? சாய்ஸா? அடிங்....


2. க்ரிக்கெட் மேட்ச் முடிஞ்சு, மூணு பேர் பேசிட்டிருக்காங்க. அவங்க சொன்னது கீழே..

கங்குலி: “சச்சின் சிக்ஸர் அடிக்கவில்லை”
ட்ராவிட்: “நான் சிக்ஸர் அடிக்கவில்லை”
சச்சின்: “நான்தான் சிக்ஸர் அடித்தேன்”


மேற்கண்டதில் குறைந்தது ஒன்று உண்மை. குறைந்தது ஒன்று பொய்.

யாருப்பா சிக்ஸர் அடிச்சது?


3. 12=10, 32=26ன்னா, 22= எவ்வளவு?

அ) 16
ஆ)18
இ)20
ஈ)19


4. ஒருத்தனிடம் 4 ஆடு, 2 கழுதை, 3 கோழி, 6 பசு உள்ளது. அவன் ஆட்டையும் கழுதை என்றே அழைப்பது வழக்கம். அப்படியானால் அவனிடம் எத்தனை கழுதைகள் உள்ளன?

5. ரொம்பப் பழசுதான். ஆனாலும் கொஞ்சநேரம் உங்க மூளையை ரி-ஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்காகக் கேட்கறேன்.

ஆற்றின் கரையில் ஓர் ஆள். ஒரு புலி. ஓர் ஆடு. எல்லாரும் அக்கரைக்குப் போகவேண்டும். அங்கிருக்கும் பரிசலில் ஒரு சமயத்தில் பரிசல்காரன் உட்பட இரண்டுபேர்தான் (புல்கட்டையும் ஆள்கணக்கில் சேர்க்கவும்) போக முடியும். நான்கு தடவைக்குமேல் போக முடியாது. எனில் எப்படி எல்லாவற்றையும் அக்கறையாக அக்கரைக்கு கொண்டு செல்வான் அந்த புத்திசாலி பரிசல்காரன்?

தேவையில்லாத குறிப்பு: ஆட்டையும் புலியையும் தனியே விட முடியாது. ஆட்டையும், புல் கட்டையும் தனியே விட முடியாது.


6. போற போக்குல பேசற மாதிரி சில வாசகங்களைச் சொல்றேன். அத வெச்சு இந்தப் பதிவர்களைக் கண்டுபிடிங்க. க்ளூ: பதிவர்கள் பேராவும் இருக்கலாம். அங்க வலைப்பூ பேராவும் இருக்கலாம்!

a) நல்ல வேளை, இவர் பேர்ல ஆட்டோ இல்ல.

b) இப்படி ***** இல்லாம பேசலாமா?

c)மொதல்ல ஐஸ்வர்யாராய்க்கு அபிஷேக்பச்சன். மீரா ஜாஸ்மினுக்கு மாண்டலின் ராஜேஷா? இப்போ சங்கீதாவுக்கு பாடகர் க்ரிஷ்..

d) இந்த மாதிரி கேள்விகேட்கறதெல்லாம் என்னோட ** ****தான்.

e) உருப்படியா ஏதாவது வேலைக்குப் போகாம சும்மா ******* கணக்கா சுத்திகிட்டிருக்க?

f) என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். சரியான *****!


7) ஒரு நூறுகிலோ சர்க்கரை மூட்டை இருக்கிறது. உடன் ஒரு மூன்று கிலோ படியும், ஐந்து கிலோ படியும் மட்டுமே இருக்கிறது. இது இரண்டையும் பயன்படுத்தி நாலு கிலோ சர்க்கரை எடுக்க வேண்டும். இந்த இரண்டு கலன்கள், அந்த மூட்டை தவிர வேறெங்கும் சர்க்கரையைக் கொட்டக் கூடாது. எப்படி அளப்பீர்கள்?

8) 1942ல் அமெரிக்க நைட் கிளப்பான தி கோகனட் குரோவ்-வில் நடந்த ஒரு தீ விபத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர். ஒரு சின்ன குறையால்தான் இந்த அளவுக்கு உயிரிழப்பு என்று கண்டுபிடிக்கப் பட்டு, அதற்குப் பிறகு கட்டப்படும் பொதுக் கட்டடங்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டது. அது என்ன தெரியுமா?

9) ஒரு புயலும், மழையும் கொண்ட இரவில் ஒருத்தன் அவசர அவசரமாக தன் மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தான். திடீரென பாதி வழியில் கார் பழுதடைந்தது. மனைவியைத் தனியே விட்டுப் போக பயந்து, காரின் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு அருகில் மெக்கானிக்கைத் தேடிச் செல்கிறான் கணவன்.

திரும்பி வரும்போது, கதவு திறக்கப்படவில்லை. ஆனால் இவன் திறந்து பார்க்கையில், உள்ளே மனைவி இறந்து கிடக்கிறாள். காருக்குள் ஒரே ரத்தம். பின் சீட்டில் இன்னொருத்தனும் இருக்கிறான்!

எப்படி சாத்தியம்?

10) இந்த வக்கியத்திலுள்ள மூன்று தவறுகளைக் கண்டுபீடியுங்கள்.


******************************************

பின்குறிப்பு:
1) வீக் எண்ட் புதிர்கள் முழுதும் எந்தச் சொந்தச் சரக்கல்ல. பதிவர்கள் சம்பந்தமானது மட்டுமே நான் கேட்பது. மற்றவையெல்லாம் படித்த, கேட்ட சமாச்சாரங்கள்தான்.

2) நெருங்கிய நண்பர்களின் வாரிசுகள் சிலருக்காக சில பழைய ஈஸியான கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. கண்டுக்காதீங்கப்பா...!

50 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மொதல்ல பார்த்தது நாந்தான்

Cable சங்கர் said...

//a) நல்ல வேளை, இவர் பேர்ல ஆட்டோ இல்ல.

b) இப்படி ***** இல்லாம பேசலாமா?

c)மொதல்ல ஐஸ்வர்யாராய்க்கு அபிஷேக்பச்சன். மீரா ஜாஸ்மினுக்கு மாண்டலின் ராஜேஷா? இப்போ சங்கீதாவுக்கு பாடகர் க்ரிஷ்..

d) இந்த மாதிரி கேள்விகேட்கறதெல்லாம் என்னோட ** ****தான்.

e) உருப்படியா ஏதாவது வேலைக்குப் போகாம சும்மா ******* கணக்கா சுத்திகிட்டிருக்க?

f) என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். சரியான *****!

1. கேபிள் சங்கர்

2. வெட்டிப்பயல்

3. வால்பையன்.

மிச்ச கேள்விக்கெல்லாம் ரொம்ப சுலுவா இருப்பதால் மற்றவர்கள் பார்வைக்கு..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

1. 22, 23, 24
2. சச்சினு
3. 19
4. அவன் எப்படி கூப்பிட்டாலும் கழுதை 2தான்
5. முதல் ஆடு
அப்புறம் புல் போயி ஆடு ரிடர்ன்.
அடுத்து புலி.
அடுத்து ஆடு
6. அப்புறம் சொல்றேன்.
7. முதல்ல மூனு எடுத்து எடுத்து 5ல் போடுங்க
பிற்கு மூனு எடுத்து 5ல போடுங்க.
மூனுல ஒன்னு மிஞ்சும்.

5அ மூடையல் போடுங்க ஒன்ன 5ல போடுங்க இப்ப 5ல இருப்பது ஒன்னு. மூணு எடுத்து 5க்கில்ல போட்டா 5க்குல்ல 4நாலு
8. ஆபத்துக்கு சிறப்பு வழி
9. பிரசவம்?
10. வா..
க்..
பீ..

Natty said...

me the firstu :))

பரிசல்காரன் said...

@ SUREஷ்

1. தப்பு
2.தப்பு
3.தப்பு
4.சரி
5.சரி
6. சரி, அப்புறமா சொல்லுங்க
7. ரொம்ப கொழப்பறீங்க. மகா ஈஸியா இன்னொரு வழி இருக்கு. சொல்லுங்க பார்ப்போம்!
8.இல்ல
9.அபாரம்! முதல்லயே கண்டுபிடிச்சீங்க! சூப்பர்யா! ஒத்துக்கர்றேன்.. நீங்க புத்திசாலிதான்!

10. இல்ல. ரெண்டாவதா நீங்க சொன்னது தப்பில்ல. இன்னொன்ணு இருக்கு!

பரிசல்காரன் said...

@ கேபிள்சங்கர்

நீங்க சொன்னதுல 1 மட்டும் சரி, 2ம், மூணும் எந்த கேள்விக்குன்னு தெரியல. தப்பா இருக்கு.

பரிசல்காரன் said...

@ ஆட்காட்டி

நீங்க என்ன கேக்கறீங்க?

ச.பிரேம்குமார் said...

1. 21,22,27,28

2. சிக்ஸர் அடித்தது ட்ராவிட்

3. ஆ) 18

4. 6 கழுதைகள்

6. அ) கேபிள் சங்கர்
இ) சென்ஷி

9. ஆண் குழந்தை பிறந்ததில் அந்தப் பெண் இறந்துவிட்டார்

10. "வக்கி" ."பீடியுங்கள்"... அப்புறம் இதில் இரண்டு தவறுகள் தான் உள்ளது. மூன்று என்று சொல்வதும் தவறு

பரிசல்காரன் said...

@ பிரேம் குமார்

1. தப்பு
2. தப்பு
3. சரி
4. தப்பு
6. அ, இ - சரி
9 & 10 - சூப்பர்ங்க. சரி!

Ŝ₤Ω..™ said...

இரண்டே இரண்டு தான் கண்டுபிடிச்சேன் பரிசல்.. :-(

9. அந்த பெண் காருக்குள்ளேயே பிரசவித்திருந்தாள்.. பின் சீட்டில் இருந்த ஒருவன் அவள் குழந்தை.
10.
(i) வக்கியத்தி = வாக்கியத்தி
(ii)கண்டுபீடியுங்கள் = கண்டுபிடியுங்கள்
(iii)மூன்று தவறு என்பது தவறு.. இரண்டு தவறு தான் சரி.

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கு லேசா தலை சுத்துது... நான் அப்புறம் வரேன்....

VIKNESHWARAN ADAKKALAM said...

அட... பரிசல் வட் யூ டூ மேன்...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

ஓ.... இட்ஸ் அ மிராக்கல்....

narsim said...

1. 22,25,26

2. டிராவிட் சிக்ஸர் அடித்தவர். கங்குலி சொல்வது உண்மை என்றால் சச்சின் பொய்.. சச்சின் உண்மை என்றால் கங்குலியும் உண்மை.. ஆக.. டிராவிட் சிக்ஸ் அடித்தவர்..

3.18 (,2,4,6...)

4.6 கழுதைகள்(ஆட்டை"யும்")

5. முதலில் ஆளையும் புலியையும் அனுப்பி, ஆள் மீண்டும் வரவேண்டும்
அடுத்து ஆளை காவலுக்கு விட்டு, புல்லுக்கட்டும்,பரிசல் காரரும்
அடுத்து பரிசல்காரரும் ஆளும் ..
கடைசியாக பரிசல்காரரும் ஆடும்

6. a)கேபிள் சங்கர்
e)வெட்டிப்பயல்
f) வால்பையன்

7. சிம்பிள் : 5 கிலோவில் அள்ளி அதை 3 கிலோவில் கொட்டி விட வேண்டும் .. மிச்சம் இருப்பது 2 கிலோ.. இரண்டு முறை.. 4 கிலோ ஓவர்

8. அவசர வழி??

9 கதவுதானே பூட்டி இருந்தது.. கண்ணாடி ஜன்னல் உடைக்கப்பட்டிருக்கலாம்..

10 முதல் தவறு : வக்கிய, இரண்டாவது: கண்டுபீடியுங்க..

மூன்றாவது : இரண்டு தவறை மூன்று என சொன்னது

கார்க்கிபவா said...

1) 21,22,7,8

2) சச்சின்.(ஆனா எனக்கு ஒரு சந்தேகம் இருகு.பதில்ல பார்த்துட்டு சொல்றேன்)

3) 18

4) ஹிஹிஹி 2 தான். அவர் எப்படி அழைத்தாலும் கழுதை 2 தானே..

5) சத்தியமா பதில் தெரியும். நேரமில்லாததால் அப்புறம் சொல்றேன்.

7) முத்லில் மூன்று கிலோ சரிக்கரை எடுத்து ஐந்து கிலோ படியில் போடவும். பின் மீண்டும் 3 கிலோ எடுக்கவும். அதை ஐந்து கிலோ படியில் போட்டால் மீதம் 1 கிலோ இந்தப் படியில் இருக்கும். இப்போது ஐந்து கிலோ படியில் இருகும் சர்கரையை மூட்டையில் கொட்டி விடவும். 3 கிலோ படியில் இருக்கும் சரிகரையை ஐந்து கிலோ படியில் போடவும். கடடைசியாக 3 கிலோ படியில் எடுத்து ஐந்து கிலோ படியில் போட்டால் ,ஐந்து கிலோ படியில் 4 கிலோ சர்க்கரை தான் இருக்கும்..

8) இது புதிர் கிடையாது. பொது அறிவு. என் பதில், பெண்கள் அதிக சூடேற்றும் அளவுக்கு ஆடக் கூடாது.

9)

10)''இந்த வக்கியத்திலுள்ள மூன்று தவறுகளைக் கண்டுபீடியுங்கள்''

வாக்கியம், கண்டுபீடியுங்கள், மூன்று(த் வரனும்)


இத போடுங்க. மீதிக்கு யோசிச்சு அனுப்பறேன்

Jenbond said...

1) 7 21
8 22

3) 18

5) PARISAL + AADU return parisal
only

PARISAL + TIGER return with AAdu
PARISAL + PULLU return parisal
only

atlast PARISAL + AADU

7) First fill 3kg pour the 5kg kane

again fill the 3 kg & pour the
5 kg remaing 1 kg will be 3kg
kane.

Next pour all the sugar in the
100 kg sack.

next pour 1 kg in the 5 kg
atlast put 3kg sugar in 5kg
kane now u got the 4 kg sugar

10)Vakkiyam - Nedil mistake

thavarukalaik-wrong
congunction "k"

kandupidiyunkal-kuril mistake


Sorry for the language i used. i don't know how to answer in tamil. can u help me.

Jenbond said...

Sorry my name is k. jegan

நாடோடி இலக்கியன் said...

1)7,8,21,22

2)சச்சின்

3)18

4)2 கழுதைகள்(அவன் எப்படி அழைத்தால் நமக்கென்ன)

5)பரிசல்காரன்,முதலில் ஆட்டை ஏற்றி அக்கரையில் விட்டுவிட்டு,திரும்ப வந்து புலியை ஏற்றி அக்கரையில் விட்டுவிட்டு,அங்கிருக்கும் ஆட்டை மறுபடியும் இக்கரைக்கு ஏற்றிவந்து விட்டுவிட்டு புல்லுக்கட்டை அக்கரைக்கு ஏற்றி செல்வான்,மறுபடியும் இக்கரைக்கு வந்து ஆட்டை ஏற்றிக்கொள்வான்,:)

6)a).கேபிள் சங்கர்
e)வெட்டிபயல்

7)முதலில் 5 லிட்டர் படியில் அளந்து 3 லிட்டரில் கொட்டினால் மீதம் 2 கிலோ இருக்கும்,மூன்று லிட்டரில் உள்ள சர்க்கரையை மூட்டையில் கொட்டிவிட்டு அதே பிராசஸை மறுபடி செய்தால் மற்றொரு 2 கிலோ (2+2) :)) 4 கிலோ சர்க்கரை ரெடி
இன்னொரு முறை:
3 லிட்டரை இருமுறை நிரப்பி 5 லிட்டரில் கொட்டினால் மீதம் 1 லிட்டர் மிஞ்சும்,அப்புறம் 3 லிட்டர் படியை ஒருமுறை நிரப்பிகொண்டால் 4 கிலோவாச்சு.

8) அவசர வழி

9)கண்ணாடியை உடைத்தா?(இது தப்புதான்,வேற ஒன்னும் தோணல)

10)வாக்கியம்,தவறுகளை + கண்டிபியுங்கள் இடையே க் வராது,கண்டுபிடியுங்கள்
(ரொம்ப சின்ன புள்ளத்தனமாவுள்ள இருக்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

கார்க்கிபவா said...

9) உள்ள இருக்கிறவங்க கார் கதவ திறக்க முடியும் தானே? (இத போன பின்னூட்டத்தில் இணைச்சு போட்டுடுங்க

நாடோடி இலக்கியன் said...

//இந்த வக்கியத்திலுள்ள மூன்று தவறுகளைக் கண்டுபீடியுங்கள்//
"தவறுகளைக் கண்டுபீடியுங்கள்"இதில் க் வரும் பட்சத்தில் அந்த வாக்கியத்தில் இரண்டு தவறுகள்தான் மூன்று என்று சொல்லியிருப்பதே ஒரு பிழை,சரியா?
இதையே 10 ஆவது கேள்விக்கு விடையாக பாவிக்கவும்.

(ரொம்ப ஆர்வ கோளாறு)

anujanya said...

1. 7,8 & 22

2. There are only two combinations possible.
a) Two Lies and One Truth
In this case, Dravid has to be liar (as both Ganguly & Sachin cannot speak lies), which means
he hit a six. In addition to Dravid, If Ganguly lied & Sachin spoke truth, then Sachin also hit a six.
Else, Only Dravid hit a six.
b) Two Truths and One Lie
In this case, Dravid has to speak truth (again both Ganguly & Sachin cannot speak truth). So
Dravid did not hit a six. If Ganguly lied & Sachin spoke truth, then Sachin hit the six. Else Sachin
also did not hit a six.
In a nut shell, either it is Dravid only, or Dravid+Sachin or Neith Dravid nor Sachin
என்ன மண்ணாட காயுதா? கேக்கும் பொது எப்படி இருந்தது? :)))

3. 19?

4. 2

5. First Parisal+goat; Leave goat on the other shore; come back and Take Tiger; Leave Tiger on the
other shore & bring back goat; Now leave the goat on this side, take grass, leave the grass with the
tiger on the other shore, come back, take the goat and cross the river.

7. 1. Fill 3 and pour that into 5
2. Fill 3 again and pour 2 padis into 5 (because 5 can accommodate only 2 more now)
3. Now 3 will have balance 1 padi. Now empty 5 and pour the 1 padi into 5.
4. Now fill 3 again and pour the 3 padis into 5, which already has 1 padi. total now 1+3=4

10. There are 2 spelling mistakes (வக்கியம்-வாக்கியம் & கண்டுபீடியுங்கள்-கண்டுபிடியுங்கள்) and one factual mistake i.e. there only 2 mistakes, which is wrongly mentioned as three mistakes.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

1. சரி!
2. ஸ்ப்பாஆஆஆஆ! சரிங்க. ஒத்துக்கறேன். நீங்க வல்லவருதான்!

3. தப்பு சார்

4. சரிங்க சார்.

5. கரெக்டுங்க சார்

6. எங்க பதிலைக் காணோம்?

7. தல சுத்துது. இன்னும் குறைவான ஸ்டெப்ல பதில் இருக்கு.

8, 9.... - நீங்க சொல்லுவீங்க, சொல்லணும்னு எதிர்பார்த்தேன். குறிப்பா அந்த 9வது கேள்விக்கு. இப்படி சாய்ஸ்ல விட்டுட்டீங்க?

10. மிகச்சரி!

பரிசல்காரன் said...

@ நாடோடி இலக்கியன்

1. சரி
2. தப்பு
3. சரி
5. சரி
6. a, e ரெண்டும் சரி. ஆனா e, நானே எதிர்பார்க்கல. இன்னொருத்தரை நெனைச்சுதான் கேட்டேன்!

7. சரி
8. தப்பு.
9. நீங்களே சொல்ல்லீட்டீங்க தப்புன்னு.
10. இதுக்கு நீங்க மொதல்ல சொன்னது தப்பு. ரெண்டாவது சொல்லிருக்கறது சரி!

பரிசல்காரன் said...

@ ஜெகன் @ krish_oo7

தமிழ்ல எப்படி அடிக்கணும்னு எனக்கு ஒரு மெயில் அனுப்பினா சொல்றென். (mail id: kbkk007@gmail.com)இல்லீன்னா என் ப்ளாக் ஃப்ரெண்ட் பேஜ்ல, ரைட் சைடுல லிங்க் இருக்கும் பாருங்க.

1,3,5,7, - சரி.

10 -தப்பு. அதிலுள்ல ’க்’ தப்பல்ல!

பரிசல்காரன் said...

@ கார்க்கி

1. சரி
2. தப்பு.
3. சரி, 4, சரி
5. நம்பறேன்
6. ஏன்?
7. சரி. இன்னொரு ஈஸி வழி?
8. ங்கொய்யால..
9 - கார் கதவு திறக்கப்படவில்லைன்னுட்டேன். உள்ளிருந்தோ, வெளிலிருந்தோ.. திறக்கபடவே இல்லை.

10. முன்றுத்தவறுகள்-ன்னு வராது. த் அங்க வராதுப்பா. வேற ஒரு மிஸ்டேக் இருக்கு.

கணினி தேசம் said...

ஏதோ..என்னால முடிஞ்ச பதில்கள்... :-)

1. Pages 7,8,21,22
2. சச்சின்
3. ஆ)18
4. 2 கழுதை

5. ங்கே.. ? நிதானமா steps எழுத சோம்பேறித்தனம் !!
6 a. "Cable" Sankar
b.
c. காத்திருந்த காதலன் (மங்களூர் சிவா)
d.
e. வெட்டிப்பயல்
f. குசும்பன்

7.
Step 1 : ஐந்து கிலோ படியை நிரப்பனும்
Step 2 : அதிலிருந்து மூன்று கிலோ படியை நிரப்பினால், மீதம் இரண்டு கிலோ இருக்கும்.
Step 3 : மூன்று கிலோ படியிலிருப்பதை மூட்டையில் கொட்டனும்.
Step 4 : ஐந்து கிலோ படியில் உள்ள இரண்டு கிலோவை மூன்று கிலோ படியில் கொட்டனும்.
Step 5 : மீண்டும் ஐந்து கிலோ படியை முழுக்க நிரப்பனும்.
Step 6 : அதிலிருந்து ஒரு கிலோ மூன்று-கிலோ படியில் கொட்டனும். மீதம் நான்கு கிலோ கிடைக்கும்.

8. "Revolving Door" should always have a normal door next to it. சரிதானே?
9. சன்னலை மூடாம போய்ட்டானோ? ஹி.ஹி.
10.
a. "வக்கியத்திலுள்ள"
b. "கண்டுபீடியுங்கள்"
c. தவறுகள் மூன்றல்ல.. இரண்டு தான் என்பது.


நன்றி !

பரிசல்காரன் said...

@ நர்சிம்

1. தப்பு
2. என்ன பாஸ் இது? தப்புபாஸ். அதெப்படி கங்குலி, சச்சின் ரெண்டும் உண்மையாகும்?

3. சரி
4. தப்பு
5. கொழப்புறீங்க. ஆளு, பரிசல்காரன் ரெண்டுமே ஒருத்தர்தான். நீங்க சொன்னது விளங்கல எனக்கு!
6. மூணும் சரி. ஆனா eக்கு இன்னொரு பதில் இருக்கு
7. சரி. இன்னொரு வழி?
8. தப்பு
9. தப்பு. கண்ணாடியோ, கதவோ எதுவும் திறக்க, உடைபடவில்லை.
10. சரி

பரிசல்காரன் said...

@ (Ŝ₤Ω..™)

9, 10 - ரெண்டுமே மிகச் சரி!

பரிசல்காரன் said...

@ கணிணிதேசம்

1. சரி.
2. சரியா தவறா?
3. , 4, சரி
6. a,e, சரி. c,f தப்பு
7. சரி
8. அல்ல.
9. தப்பு
10. சரி

Mahesh said...

இப்பத்திக்கி இத மட்டும் சொல்லிகிடறேன்... 10வது கேள்விலயே தப்பு. 2 தப்புதான் இருக்கு. 3 தப்புங்கறது தப்பு.

இப்பொ புரியலீன்னா... பாருங்க...... !!@!#
@#$#@$#@
@#$
#@$

Kodees said...

1) 7,8,21,22
2)சச்சின்
3)18
4)2

5) choice - (டைப் செய்ய சோம்பல்)

6) choice - (தெரியாது)

7) 3 to 5
again 3 to 5
இப்போ 3 ல் 1
1 to 5
3 to 5

8)உள்ளே இழுத்துத் திறக்கும்படியான கதவு
9) கர்ப்பம், குழந்தை
10)வக்கியம், பீடியுங்கள், மூன்று தவறு என்றது

gayathri said...

ellarum answer Commentsla podunga pa ennaku onumey puriyala

Jenbond said...

நன்றி மாமா (கல்யாணமான பெண்கள் "aunty" னா ஆண்கள் "uncle" தானே அதை தமிழ்படுத்தியுள்ளேன் because basically நான் ஒரு தமிழன் அதுமட்டும் இல்லாமல் வயதில் தங்களைவிட இளயவன் & புதியவன்).

ஜெகன் @ jenbond(நானே வச்சுகிட்டது)
Jegan.krish@gmail.com

Thamira said...

கேள்விகளெல்லாம் ரொம்ப சுவாரசியம். அதுவும் சிக்ஸர் கேள்வி. பதிலெல்லாம் எங்கிட்ட கேட்கக்கூடாது. ஆமா இன்னொரு முக்கியமான விஷயம். தொப்பையில்லாதவர்கள் தங்கள் புகைப்படங்களை வலையில் இடக்கூடாது என சங்கத்தில் முடிவுசெய்திருப்பது உங்களுக்குத்தெரியாதா? விரைவில் உங்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதைத்தவிர்க்க உடனே தலைவர் வெண்பூவுக்கு விளக்கக்கடிதம் அனுப்பவும்.

கார்க்கிபவா said...

/இந்த வக்கியத்திலுள்ள மூன்று தவறுகளைக் கண்டுபீடியுங்கள்//

இரண்டு தவறுகள் மட்டுமே.. மூன்று என்று சொன்னது மூன்றாவது தவறு. சரியா?

அப்புறம் திருப்பூரில் பத்து ஆண்டுகளுக்கு முன்னே ஸ்கார்ப்பியோ வந்து விட்டதா? (புகைப்படத்தில் இருப்பது ஸ்கார்ப்பியோதானே)

கார்க்கிபவா said...

முதலில் 5 கிலோ படியில் எடுத்து 3 கிலோ படியில் போட்டால் 5 கிலோ படியில் மீதம் 2 கிலோ இருக்கும். இப்போ 3 கிலோ படியிலிருப்பதை மூட்டயில் கொட்டி விட்டு 5 கிலோ படியில் இருப்பதை 3 கிலோ படியில் போடவேண்டும். மீண்டும் 5 கிலோ படியில் எடுத்து மூன்று கிலோ படியில் போட்டால், ஒரு கிலோ தான் அது புடிக்கும்(ஏர்கனவே 2 கிலோ இருப்பதால்). 5 கிலோ படியில் மீதன் 4 கிலோ.. (இன்னோரு ஈஸி வழி என்றால் தோராயாம எடுத்துப் போட்டுக்கொங்க)

Ŝ₤Ω..™ said...

1. மிஸ்ஸான பக்கங்கள் - 7,8,21,22
4. இரண்டு கழுதைகளே
6. a)கேபிள் சங்கர்
6. e)ஊர் சுத்தி

பரிசல்காரன் said...

@ கார்க்கி

//அப்புறம் திருப்பூரில் பத்து ஆண்டுகளுக்கு முன்னே ஸ்கார்ப்பியோ வந்து விட்டதா? (புகைப்படத்தில் இருப்பது ஸ்கார்ப்பியோதானே) //

அல்ல. LAND CRUISER.

பரிசல்காரன் said...

கமெண்ட் மாரரேஷனை எடுத்தாச்சு. பார்த்துக்கங்க!

வால்பையன் said...

1.


7
8
21
22

வால்பையன் said...

2.
சிக்ஸர் அடித்தது சச்சின்

வால்பையன் said...

3.

18

வால்பையன் said...

4.
2 தான், அவன் கூப்பிடுவதால் ஆடு, கழுதை ஆகிறுமா என்ன?

வால்பையன் said...

5.
பழசு தான் விடை எல்லாத்துக்கும் தெரியுமென்பதால் நான் அப்பிட்டுகிறேன்

வால்பையன் said...

6,

யாருன்னு தெரியல

வால்பையன் said...

முதலில் மூன்று படியில் சக்கரை எடுத்து ஐந்து படியில் போட வேண்டும்.
மீண்டும் ஒரு முறை மூன்று படியில் எடுத்து ஐந்து படியை நிறப்பினால், மூன்று படியில் ஒரு படி சர்க்கரை கிடைக்கும்.

மூன்று படி ஏற்கனவே இருப்பதால்

1+3=4

வால்பையன் said...

8.

தெரியாது

வால்பையன் said...

9. தெரியாது

வால்பையன் said...

10.

இரண்டு தவறு தான்.
மூன்று என்று குறிப்பிட்டு இருப்பதே மூன்ராவது தவறு.

வால்பையன் said...

இவையனைத்தும் பின்னூட்டங்கள் அதையும் பார்க்காமல் நானே முன் மூளையை! கசக்கி கண்டுபிடித்த விடைகள்

நம்புங்கப்பா

வால்பையன் said...

50