ஒளிமயமான ‘கரண்ட் கட்’!
“ரமா.. எதிர் வீட்டுக்கு வினோத்தோட பாட்டி, தாத்தா வந்திருந்தாங்களே... போய்ட்டாங்களா?” - அலுவலகம் விட்டு வந்த கண்ணன் பேச்சோடு பேச்சாகக் கேட்டான்.
“ம்ம்.. இன்னிக்குத்தான் கெளம்புறாங்களாம்!” ரமாவின் பதிலில் எரிச்சல் கலந்திருந்ததைக் கவனித்தான்.
“ஏன்.. ஒரு மாதிரி பேசற? காலியில் கூட அவங்க அம்மாகிட்ட நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்த?”
“பேசினேன். அந்தம்மா சரியான லூசு. கரண்டை இப்படி கட் பண்றாங்களே’ன்னு கடுப்பா சொல்லிட்டு இருக்கேன்.. கரண்ட் கட் டை ஒரு மணி நேரத்துக்கு பதிலா ரெண்டு மணிநேரமா மாத்தினா தேவலாம்’னு சொல்றாங்க..”
“ஏன்னு காரணம் கேட்டியா?”
“அதுக்குள்ள வினோத் அம்மா வந்து அவங்களைக் கூட்டீட்டு போய்ட்டாங்க” ரமா சொல்லி முடிப்பதற்கும் வினோத்தின் பாட்டி அவர்கள் வீட்டில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
“வாங்கம்மா” என்றான் கண்ணன்.
“நைட் ஒம்பது மணி டிரெயினுக்கு ஊருக்குக் கெளம்பறோம் தம்பி. அதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்”
“ஏம்மா.. வழக்கமா அஞ்சு மணி டிரெயினுக்குத் தானே போவீங்க? இந்த தடவை ஏன் இருட்டுல கிளம்பறீங்க?”
“இல்ல தம்பி. நாங்கதேன் ஒம்பது மணி டிரெயினுக்கு புக் பண்ணச் சொன்னோம். ஏன்னா..” என்று அவர் நிறுத்த, கேள்வியுடன் பார்த்தான் கண்ணன்.
“முன்னெல்லாம் நாங்க ஊர்ல இருந்து வந்தாலும் பேரன், பேத்திக எங்களோட சரியா பேசாதுக. ஸ்கூல் விட்டு வந்ததுமே ஃப்ளாட் குழந்தைக கூட விளையாடப் போயிடும்க. இருட்டினதும் டி.வி., இல்லைன்னா ஹோம் வொர்க்னு உக்காந்திடும்க.
ஆனா, இந்த முறை ‘ஏழு டு எட்டு கரண்ட் கட்’ங்கறதால என் பக்கத்துல வந்து உட்கார்ந்து “கதை சொல்லு பாட்டீ’ன்னு கேட்டுச்சுங்க. தினமுமே ஆசை தீரக் கதை சொன்னேன். ராத்திரியும் ரெண்டும் என் கழுத்தைக் கட்டிகிட்டுத்தேன் தூங்கிச்சுங்க.
இன்னிக்கு ஒரு நாள்தான இருக்கோம்? பேரப்பிள்ளைங்களோட இருந்துட்டு கெளம்பலாம்னு நைட் டிரெயினுக்கு புக் பண்ணினோம்”
அவர் சொல்லவும், பட்டென்று கரண்ட் போகவும் சரியாக இருந்தது. ‘பிள்ளைக தேடும்’ என்று கிளம்பியவரின் முகத்தில் சூரியப் பிரகாசம்! ரமா முகத்தில் அபார்ட்மெண்ட் இருள் முழுக்கவும்!
டிஸ்கி. 1: இந்தக் கதைக்கு நான் வைத்திருந்த தலைப்பு: இருட்டுக்கும் நிறம் உண்டு.
டிஸ்கி.2: என் மனைவி பெயர் உமாகௌரி.
37 comments:
1st nanu
இது ஒரு சாதா - ரண கதை. திட்டாதீங்கப்பா!!!
காலத்திற்கு ஏற்ற கதை...
அப்போ..கண்ணன் நீங்க இல்லையா..?
கரண்ட் கட் ஆவதால் குடும்பத்துடன் உண்மையாக அதிக நேரம் செலவிட முடிகிறது என்று நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் அதை கதையாக சொல்லி விட்டேர்கள்.
எப்படியும் 1st வரலாம்னு பார்த்தா முடியலையே.
\\அவர் சொல்லவும், பட்டென்று கரண்ட் போகவும் சரியாக இருந்தது. ‘பிள்ளைக தேடும்’ என்று கிளம்பியவரின் முகத்தில் சூரியப் பிரகாசம்!\\
இது டாப்பு
\\ரமா முகத்தில் அபார்ட்மெண்ட் இருள் முழுக்கவும்!\\
இது டூப்பு
சாதாரணமோ வேதாரண்யமோ, தொடர்ந்து பத்திரிகைகளில் வருவது உங்களுக்கு மகிழ்ச்சிதானே... வாழ்த்துகள், கலக்குங்க பரிசல்!
வாழ்த்துக்கள்:):):) நான் நேத்தே படிச்சிட்டேன்:):):) ரமா என்று பேர் பார்த்தவுடன் என்னடாது தாமிரா சார் எழுதினதோன்னு நெனச்சுட்டேன் :):):)
super:):):)
நன்றி எல்லாருக்கும்
@ ராப்
தாமிராவோட ரெண்டு கேரக்டர் இருக்கு இதில. கண்ணன், ரமா.
அப்புறம் வினோத், அதிஷாவோட நிஜப்பேரு!
எதிர் வீட்டுல கதைய படிச்சிடுவாங்கனு உமாவை ரமாவாக்கி கிருஷ்ணரை கண்ணனாக்கி இருக்கிறீர்கள்.
ரசித்தேன் :)
தலைப்புக்கு அர்த்தம் புரியவில்லை. ப்ளீஸ் விளக்கவும்..
congrats parisal
Great My friend Veyilaan!
@ ராம்சுரேஷ்
//தலைப்புக்கு அர்த்தம் புரியவில்லை. ப்ளீஸ் விளக்கவும்..//
எந்தத் தலைப்புக்கு?
அவள் விகடனில் இவன்?
ஒளிமயமான கரண்ட் கட்?
இருட்டுக்கும் நிறம் உண்டு?
எதுக்கு விளக்கம் வேணும்?
கதை'யல்ல' உண்மைதான்
கேபிள் TV. வருமுன்னர் மாலைப்பொழுது எவ்வளவு மெதுவாக ரம்மியமாகச் செல்லும்.
இப்போதெல்லாம் தூங்கும் நேரத்தை கடன் வாங்கி TV பார்க்கிறோம்.
ஹ்ம்ம்.....
அவள் விகடனில் இவன்? - இதற்கு அர்த்தம் என்னவென்று விளக்கினால் போதும்
ஹை அது உங்க கதையா அண்ணா?? நான் படிச்சேனே.. :))
அவள் விகடன் புக்ல அண்ணாவோட கதை.. அது தான் இந்த தலைப்புக்கு அர்த்தம்ன்னு நினைக்கிறேன்.. :))
நான் தான் 20 :):)
:-)))...
கலக்குங்க!!!
அழகான கதை.. எதிர்பார்த்த முடிவுடன் :))
//ராம்சுரேஷ் said...
அவள் விகடனில் இவன்? - இதற்கு அர்த்தம் என்னவென்று விளக்கினால் போதும்//
அவள் விகடன்ல, நான் -ங்கறத, இவன்னு சொல்லிருக்கேன். அவ்ளோதான்.
ஸ்ஸ்ப்ப்பாஆஆஆஆஅ!
கே.கே.
வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
அவள்(விகடன்) அவன்(கே கே) அது(கதை) நல்லா இருந்தது.
நல்லா இருக்கு !
உலகம் அப்படித்தான் ஆகிப்போச்சு!
:(
அட இதிலே கூட ஒரு பாஸிடிவான விஷயம் .....ம்ம்ம்ம் நல்லாவே இருந்தது கதை.
அன்புடன் அருணா
நன்றி எல்லார்க்கும்.
நன்றி அனுஜன்யா-ஜி!
@ அண்ணாச்சி
மிக ரசித்தேன்.
பாஸிட்டிவ் திங்கிங்
கதையப்பத்தி ஒன்னும் சொல்றதுக்கில்ல. ஆனா பின்னூட்டங்கள பாத்தா நீங்க "STOP THIS NONSENSE! " பதிவில் சொன்னது உண்மையாகிவுடும் போல இருக்கு.
குடும்பத்துடன் சிரிக்கும் நேரத்தை சீரியல் நாடகங்கள் எடுத்துக்கொண்டது.
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பதற்கு கரண்ட்கட்டே ஒரு உதாரணம்.தொடரட்டும் உறவுகள்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்த்துகள் பரிசல்.! தேவையே இல்லாமல் மனைவி பேரை டிஸ்கியில் தந்துள்ளீர்கள். கதை அவள்விகடனில் வெளியாகியுள்ளது, விகடனுக்கு நன்றி என்று ஒற்றை வரி டிஸ்கி தந்திருக்கலாம். தலைப்பில் மறைபொருளாக அது இருந்தாலும் முறை என்று ஒன்று இருக்கிறது.
என் பதிவுகளில் கண்ணன் என்ற கேரக்டர் எனது நண்பனாகவும் ரமாவின் உடன்பிறவா சகோதரனாக வருகிறது. நிஜத்தில் அந்தப்பெயர் எனக்குச்சொந்தமானது என்பதால் அதிலும் தவறில்லாமல் போய்விட்டது.. மகிழ்ச்சியே.!
வாழ்த்துக்கள் பரிசல்..
வாழ்த்துக்கள்!!!, மிக அருமை.
அருமை
அருமை
Am readings ur blogs for the past two days only..inspiring a lot
Post a Comment