Wednesday, July 16, 2008

ஊசி போன சம்பவங்கள்

ஹலோ, லதானந்த் அங்கிள்… தலைப்பைப் பார்த்துட்டு அப்பநாய்க்கன்பாளையம் அரங்கமுத்துசாமியோட சகவாச தோஷத்துல “ஐயையோ.. சந்திப் பிழை”-ன்னு திட்டாதீரும்!
இது “ஊசிப்போன சம்பவங்களி”ல்லை! ஊசி போன சம்பவங்கள்தான்!

------------------------------------


அந்தக் குழந்தை, யார் தூக்கினாலும் அழுது கொண்டேயிருந்தது. தூக்கும் போது அழுவதும், பின் கொஞ்ச நேரத்தில் அழுகையை நிறுத்துவதுமாக இருந்தது. மறுபடி இறக்கி வைக்கும்போதும் அழுதது. பெற்றோருக்கு ஒரே குழப்பமாகி, அருகிலிருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர்.

ஒரு சில பரிசோதனைகள் செய்தும் டாக்டருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

அவர் அந்தக் குழந்தையை எடுக்கிறார்.

குழந்தை வீறிட்டு அழுகிறது.

”இதுக்கு முன்னாடி இந்த மாதிரி அழுதிருக்கா?”

“இல்ல டாக்டர். இன்னைக்குதான். அவனுக்கு பர்த்டேன்னு புது ட்ரெஸ் போட்டதிலேர்ந்து இப்படித்தான்”

டாக்டருக்கு மூளைக்குள் ஃப்ளாஷ் அடிக்கிறது.

“இந்த டிரஸ்சைக் கழட்டுங்க”

கழட்டி சோதிக்கிறார். அந்தக் குழந்தை அணிந்திருந்த சட்டையின் underarm (அக்குள்) பகுதியில் ஒரு சின்னஞ்சிறிய உடைந்த ஊசி!

ஒவ்வொரு முறை அவனைத் தூக்கும்போதெல்லாம் அவன் அழுத காரணம் புரிகிறது பெற்றோருக்கு!

-----------------------------------------

அந்தச் சிறுமிக்கு இடது கன்னத்தின் கீழ்ப்பகுதியிலெல்லாம் ரத்தச் சிவப்பாய் சிவந்திருக்கிறது. அவளது பெற்றொருக்கு அதிர்ச்சி! மருத்துவரை நாடுகிறர்கள்.

பலவிதமான கேள்விகளுக்குப் பிறகு அவளது பெற்ரோரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் டாக்டர்.

எதேச்சையாக திரும்பிப் பார்க்கிறார். அந்தச் சிறுமி அணிந்திருந்த ஆடையின் காலர் பகுதியின் இடது நுனியை வாயில் இழுத்துக் கடித்தவாறு இருக்கிறாள்.

உடனே அந்த சட்டையைக் கழற்றி, பரிசோதிக்கிறார்.

காலரில், உள்ளே ஓரிடத்தில் உடைந்த, கூர்மையான ஊசி! அவள் காலரைக் கடிக்கும் போதெல்லாம் உராய்ந்து, உராய்ந்து ரத்தச் சிவப்பு நிறம் வந்துவிட்டிருக்கிறது!

---------------------------------------------





திருப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளெல்லாம் பலவிதமான தரக்கட்டுப்பாட்டு முறைகளைத் தாண்டிச் செல்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றில் ஒன்று “NEEDLE DETECTION”. அதாவது துணியைத் தைக்கும்போது பயன்படுத்தும் ஊசியோ, அல்லது ஊசி போன்ற கூர்மையான பொருட்களோ ஆடைகளில் எங்கேனும் உள்ளதா என்று Needle Detector Machine-ல் சோதனை செய்தபிறகே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வார்கள்.
அவ்வாறு செய்யாமல் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளால், வெளிநாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள்தான் நீங்கள் மேலே படித்தது! இரண்டு, மூன்றாண்டுகளுக்கு முன், Needle Detection-ன் முக்கியத்துவத்தை உணர்த்த எங்களுக்கு ஸ்லைடு போட்டு காண்பித்து, ஆதாரத்துடன், பேப்பர் செய்தியுடன் இதைக் காண்பித்தார்கள்!


அதாவது ஊசி, (ஆயத்த ஆடைகளில்) போன சம்பவம்! என்ன சரிதானே?

24 comments:

Ramya Ramani said...

ஆஹா இப்படி கூட இருக்குமா..குழந்தைகள் போடும் ஷூ-ல பூச்சி எதுவும் இல்லியானு பாத்து போடனும்னு சொல்வாங்க..இதையும் இப்போ சேக்கனும் போல

லதானந்த் said...

உண்மையைச் சொல்கிறேன். எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு நெம்ப நல்லாத் தெரிஞ்சுகிட்டிருக்கீங்க. இதுக்காகவே இன்னொரு தடவை உங்களைக் குளிப்பாட்டணும் சாரி களிப்பாட்டணும்.

உங்களைச் சந்திக்க அ.அ.மு.சாமி ஆர்வமாயிருக்கார்.

அன்ன பூர்ணா ரோஸ்ட் என்னாச்சு?

ஊசிய வேறெங்காச்சும் வெச்சுத் தெச்சுப்போடாம பாத்துக்குங்க. படாத எடத்தில பட்ரப் போவுது

பரிசல்காரன் said...

நன்றி ரம்யாரமணி!

@ லதானந்த் அங்கிள்

//உண்மையைச் சொல்கிறேன். எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு நெம்ப நல்லாத் தெரிஞ்சுகிட்டிருக்கீங்க.//


ஆஹா!!!! வ.வா.பி.ரி!


//இதுக்காகவே இன்னொரு தடவை உங்களைக் குளிப்பாட்டணும் சாரி களிப்பாட்டணும்.//

ஏற்கனவே `குளிச்சதே' ஏகப்பட்ட வேலை செஞ்சுட்ட்டிருக்கு!!


//உங்களைச் சந்திக்க அ.அ.மு.சாமி ஆர்வமாயிருக்கார்.//

எனக்கும் மிக ஆவலே!

//அன்ன பூர்ணா ரோஸ்ட் என்னாச்சு?//

மைண்ட்ல இருக்கு. வார்த்தையா வந்து கோர்வையா உக்காரமாட்டீங்குது!

//ஊசிய வேறெங்காச்சும் வெச்சுத் தெச்சுப்போடாம பாத்துக்குங்க. படாத எடத்தில பட்ரப் போவுது//

கடசீல உங்க `டச்'-ல முடிச்சுட்டீங்களே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..

சில சமயம் ஆடைகளின் மேலே பக்கத்தில் வரும் எம்ப்ராய்டரிக்காக பின்னால்வைத்துத்தைக்கும் துணி கூட குழந்தைகளுக்கு உராய்ந்து புண் ஆகிடுது.. இப்பல்லாம் ட்ரெஸ் செலக்ட் செய்யும் போது என்னல்லாமோ பார்க்கவேண்டி இருக்கு..
அப்பறம் ஷூ விசயம்.. ரம்யாரமணி சொல்றமாதிரி .. நான் என் 3 வயசுபையன்கிட்ட சொல்லி இருக்கேன் நாலு தட்டு கவுத்து தட்டிட்டுதான் போடனும் ஷூவைன்னு..இப்படியான கதைகள் படிச்சு பயங்கர பயம்..:(

மோகன் கந்தசாமி said...

/////எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு////
இதை பத்தி ஏதாவது பதிவு வந்திருக்கிறதா? இருந்தால் சுட்டி கிடைக்குமா பரிசில், லதானந்த்!

Anonymous said...

எல்லாஞ்சரி! இயந்திரத்தின் விலை எம்புட்டுனு சொல்லல?

ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பற்றிய தனி துறைப் பதிவு ஒன்றை ஆரம்பிக்கலாம் என நான் நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் அதை எழுதினால் தான் பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

எப்படி வசதி?

பரிசல்காரன் said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...

பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..

சில சமயம் ஆடைகளின் மேலே பக்கத்தில் வரும் எம்ப்ராய்டரிக்காக பின்னால்வைத்துத்தைக்கும் துணி கூட குழந்தைகளுக்கு உராய்ந்து புண் ஆகிடுது.. இப்பல்லாம் ட்ரெஸ் செலக்ட் செய்யும் போது என்னல்லாமோ பார்க்கவேண்டி இருக்கு.. //

உண்மைக்கா!

பரிசல்காரன் said...

//மோகன் கந்தசாமி said...
/////எங்கே ஒற்று வரணும். எங்க வரக் கூடாதுன்னு////
இதை பத்தி ஏதாவது பதிவு வந்திருக்கிறதா? இருந்தால் சுட்டி கிடைக்குமா பரிசில், லதானந்த்!//

அது தெரிஞ்சா நாங்க ஏன் இப்படி இருக்கோம்?

rapp said...

இதை படிக்கும்போது எனக்கு நாங்க காலேஜில் செய்த ஒரு கேணத்தனமான விஷயம் ஞாபகம் வருது. எப்பவுமே எங்க டிபார்ட்மென்டில் பெண்களுக்குள் ஒரு மேனியா, என்னன்னா, புது உடை போட்டாலும், அது புதுசுன்னு ஒத்துக்க மாட்டோம், ஏன்னா நாங்க எல்லாம் புது உடைகளுக்கு வாரம் ஒரு முறை காசு செலவு பண்ற சாதாரணப் பெண்கள் இல்லை இல்லைங்களா:):):) ஆனா எவ்வளவு சீன் போட்டாலும் இந்த ஊசி முதலியவைதான் எல்லாருக்கும் காட்டி கொடுத்திடும்:):):)

பரிசல்காரன் said...

//வெயிலான் said...

எல்லாஞ்சரி! இயந்திரத்தின் விலை எம்புட்டுனு சொல்லல?

ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பற்றிய தனி துறைப் பதிவு ஒன்றை ஆரம்பிக்கலாம் என நான் நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் அதை எழுதினால் தான் பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

எப்படி வசதி?//

நல்ல யோசனை! இது பற்றி நேரில் ஒரு பாரில் விவாதித்து முடிவு செய்யலாம்.. இரண்டுபேருமே சேர்த்து இந்தச் செயலை ஆரம்பிக்கலாம்!

rapp said...

//ஏங்க இவ்ளோ சீரியஸா எழுதி பயப்படுத்தறீங்க?
//
இனிமே நானெல்லாம் எப்படி பின்னூட்டம் போடணும்னும் பதிவிலயே சொல்லிடறீங்களா:):):)

பரிசல்காரன் said...

//rapp said...

இதை படிக்கும்போது எனக்கு நாங்க காலேஜில் செய்த ஒரு கேணத்தனமான விஷயம் ஞாபகம் வருது//

அதானே.. உங்களுக்கு எதுவும் ஞாபகத்து வரலீன்னாதான் அதிசயம்!

பரிசல்காரன் said...

////ஏங்க இவ்ளோ சீரியஸா எழுதி பயப்படுத்தறீங்க?
//
இனிமே நானெல்லாம் எப்படி பின்னூட்டம் போடணும்னும் பதிவிலயே சொல்லிடறீங்களா:):):)//

இது எங்கியோ சொன்னது.. இங்க வந்திருக்கு!!

இடம் மாறு தோற்றப் பிழையா?

Anonymous said...

// இரண்டுபேருமே சேர்த்து இந்தச் செயலை ஆரம்பிக்கலாம்! //

நான் 'ஆயத்த'மாய் இருக்கிறேன்.

வெண்பூ said...

//நேரில் ஒரு பாரில் விவாதித்து முடிவு செய்யலாம்//

நீங்கள் இருவரும் பாரில் சிறந்த நண்பர்கள் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

வெண்பூ said...

ஆமா பரிசல்.. எல்லோரும் ஜொள்ளு விட்ட...ச்சீ..பின்னூட்டம் போட்ட‌ அணுப்பாவை பொண்ணில்லையாமே... யாரோ ஒரு பழம் பதிவராமே? நீங்க அவர பாத்திருக்கீங்களா? பேசியிருக்கீங்களா? இந்த‌ கேள்விக்கும் நீங்க‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பு ச‌ம்ப‌ந்த‌மா போட்ட‌ இடுகைக்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லைன்னு ஒரு டிஸ்கி குடுக்குறேன்.

லதானந்த் said...

Happy to mention me as "Vashishtar".

Ask that friend to read articles on "santhip pizai" in my blog.

பரிசல்காரன் said...

@ வெயிலான்

//நான் 'ஆயத்த'மாய் இருக்கிறேன்.//

அட! ரசித்‘தேன்’ நண்பரே!


@ வெண்பூ

//நேரில் ஒரு பாரில் விவாதித்து முடிவு செய்யலாம்//

நீங்கள் இருவரும் பாரில் சிறந்த நண்பர்கள் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

அட! இதையும் ரசித்‘தேன்’!

வார்த்தை விளையாட்டுக்கு நல்லா ஹெல்ப் பண்றீங்க!

//இந்த‌ கேள்விக்கும் நீங்க‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பு ச‌ம்ப‌ந்த‌மா போட்ட‌ இடுகைக்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லைன்னு ஒரு டிஸ்கி குடுக்குறேன்.//

எல்லாம் ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்ட்தாங்க!

பரிசல்காரன் said...

லதானந்த் said...

Happy to mention me as "Vashishtar".

சூப்பர் அங்கிள்! உங்களால அத கண்டு கொள்ள முடியும்ன்னுதான் அப்படிப் போட்டேன்!

அங்கிளா.. கொக்கா?

VIKNESHWARAN ADAKKALAM said...

//இதை பத்தி ஏதாவது பதிவு வந்திருக்கிறதா? இருந்தால் சுட்டி கிடைக்குமா பரிசில், லதானந்த்!//

லதானந்த் அங்கிள் பதிவுள பாருங்க... இதை பற்றி எழுதி இருக்காரு

VIKNESHWARAN ADAKKALAM said...

//பகீர்ன்னு இருக்கே இந்த நிகழ்வுகள்..//

ஏங்க பரிசல் ஏதாவது பாம் வச்சிட்டாரா

பரிசல்காரன் said...

@ விக்னேஸ்வரன்

//ஏங்க பரிசல் ஏதாவது பாம் வச்சிட்டாரா//

ஏன்யா நம்மளை இந்த வம்புல இழுக்கறீங்க? பாவம்யா நானு!

சின்னப் பையன் said...

சீரியஸான பதிவுக்கு சீரியஸ் கேள்விகள்:
1. விலை என்னன்னு நீங்க இன்னும் சொல்லவேயில்லை.
2. இயந்திரம் ரொம்ப சின்னதா இருக்கே - எல்லா துணியையும் எப்படி ஸ்கேன் பண்ணுவீங்க?
3. அதுக்கு எவ்ளோ நேரமாகும்?

பரிசல்காரன் said...

// ச்சின்னப் பையன் said...
சீரியஸான பதிவுக்கு சீரியஸ் கேள்விகள்:

1. விலை என்னன்னு நீங்க இன்னும் சொல்லவேயில்லை.
2. இயந்திரம் ரொம்ப சின்னதா இருக்கே - எல்லா துணியையும் எப்படி ஸ்கேன் பண்ணுவீங்க?
3. அதுக்கு எவ்ளோ நேரமாகும்?//

சீரியஸான பதில்,,
பத்தாவது பின்னூட்டத்தினிறுதியிலுள்ளது
விரைவில் நிகழ்கையில் கிட்டும்!