Thursday, July 31, 2008

நீங்க லேட்டா ஆஃபீசுக்குப் போறீங்களா?

இந்தப் பதிவு அவ்வளவு மொக்கையா இருக்காது-ங்கற உறுதிமொழியோட ஆரம்பிக்கறேன். (எல்லாம் நேத்திக்கு வாங்கின அடிதான். வடிவேலு சொல்றா மாதிரி.. என்னா அடி!)

----------------------

எங்க ஆஃபீஸ் நுழைவாயில்ல தாமதமா வர்றவங்க கையெழுத்துப் போட்டுட்டு போக, ஒரு லெட்ஜர் வைக்கலாம்ன்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி முடிவாச்சு. அதுக்கப்புறம் அது என்னாச்சு, வைக்கிறாங்களா... ஒண்ணுமே நான் அவ்வளவா கண்டுக்கல. இவ்ளோ நாள் அந்த லெட்ஜரை பாக்கவும் இல்ல.

ஏன்னா நான் எப்பவுமே, முன்னாடியே போய்ப் பழக்கம்ன்னு பீலா விடல. ஒண்ணு, அந்த லெட்ஜரை வைக்கறதுக்கு முன்னாடி போயிடுவேன். இல்லீன்னா, டைமுக்கு வர்றவங்க, லேட்டா வர்றவங்க எல்லாரும் வந்தபிறகு அந்த லெட்ஜரை எடுத்து வெச்சுடுவாங்களே, அப்புறம்தான் போவேன்! (2வதுதான் அதிகம்!) அப்படியே, அந்த லெட்ஜர் இருக்கும்போது போனாலும், ஏதோ கொஞ்சம் மரியாத இருக்கறதால உள்ள போய் பைக்கை நிறுத்தின உடனே யாராவது வந்து பஞ்ச்சிங் கார்டை வாங்கிட்டு போய் பஞ்ச் பண்ணீட்டு வர்றதால, கேட் பக்கம் இருக்கற அந்த நோட்டை பாக்கற வாய்ப்பே வர்ல.

எதுக்கு இவ்ளோ பெரிய விளக்கம்ன்னா, நேத்து அந்த லெட்ஜரைப் பார்த்தேன் என்னால சிரிப்பை அடக்க முடியல.

எல்லா பக்கத்திலும் பத்தி பிரிக்கப்பட்டு - பேர், செக்‌ஷன், தாமதமானதுக்கு காரணம், கையெழுத்துன்னு இருக்கும். மேல `I AM A LATE COMER’ ன்னு பெரிய ஸ்கெட்சுல எழுதியிருப்பாங்க. நேத்து முதல்ல லேட்டா வந்த ஆள் என்ன எழுதியிருந்தார்ன்னா.. பாருங்களேன்...

I AM A LATE COMER (இது HEADING)

1-YES (இவரு LATE COMERன்னு ஒத்துகிட்டாராம்!)
2 – '' '' (இதுக்கெல்லாமாடா டிட்டோ போடுவீங்க?)
3 - Late
4 - BUS LATE
5 - Bike repair
6 – Bus Repair (???)
7 – Bus (இதுதான் எழுதீருந்தாரு., மேல எழுதினத காப்பி பண்ணீருக்காரு, அதுல இருந்த ரிப்பேர்ங்கறது புரியல போலிருக்கு).
8 – Reason (லேட்டா வந்தா REASON எழுதுங்கன்னு சொன்னீங்களே-ம்பாரு!)
9. தாமதமாகிவிட்டது
10. NOT TOMORROW (நாளைக்கு கரெக்ட் டைமுக்கு வர்றேங்கறாரா?)

அப்புறம் நிறைய கிறுக்கல்தான் இருந்தது, என்னன்னே புரிஞ்சுக்க முடியாம.

அந்த முதல் காரணத்துக்கு டிட்டோ போட்டிருந்தத பாத்ததும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.


ஒரு அலுவலகத்துல இருந்த லேட் ரிஜிஸ்டரை பாத்துட்டிருந்த மேலதிகாரி, லேட்டா வந்த எல்லாரையும் அழைத்து “எப்போ ட்ரீட் வைக்கப்போறீங்க?”ன்னு கேட்டாராம். எல்லாரும் எதுக்குன்னு தெரியாம முழிக்க, அந்த லேட் ரிஜிஸ்டரைக் காட்டினாரு. அதுல முதல் ஆள் `என் மனைவிக்கு அதிகாலை ஆண்மகன் பிறந்தான். மருத்துவமனையிலிருந்து வர தாமதமாகிவிட்டது’ ன்னு எழுதியிருந்தாரு. லேட்டா வந்த எல்லாருமே அதுக்கு டிட்டோ போட்டிருந்தாங்களாம்!


அலுவலகத்துக்கு லேட்டா வர்றதுக்கு நம்ம சோம்போறித்தனம்தான் முதல் காரணம்ன்னு சொல்லுவேன்! எழுந்து கொள்வது நேரமாய் எழுந்தாலும், வேறு வேறு வேலைகளால் நேரத்திற்கு அலுவலகம் செல்வதில்லை நாம். இன்னொன்று நம்மள யாரு கேட்கப்போறாங்க என்ற எண்ணம்தான்.


எங்கள் அலுவலகத்தில் எப்போதாவது இந்த தாமத வருகை குறித்த மீட்டிங் போடும்போதெல்லாம், ஒரு கதை சொல்வதுண்டு. (அங்கயுமா? பாவம் அவங்க!)

ஒரு இந்திய ராணுவ சிறையில் மூணு பேர் இருந்தாங்க. ஒரு நிருபர் கேட்கறாரு. ”என்ன தப்பு செஞ்சீங்க?”ன்னு.

முதல் ஆள் சொல்றான். ‘நான் தினமும் தாமதமா வர்றதால எனக்கு பனிஷ்மெண்ட்’ன்னு.

ரெண்டாவது ஆள்: ‘நான் ஒரு நாள் குறிப்பிட்ட டைமுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். ஏதோ உளவு பாக்க வந்ததா சந்தேகப்பட்டு உள்ள போட்டுட்டாங்க’

மூணாவது ஆள் அழுதுட்டிருக்காரு. ஏன்னு கேட்டதுக்கு சொன்னாரு: “நான் 9 மணின்னா, டாண்ணு 9 மணிக்கு வந்துடுவேன். எப்பவுமே க்ரெக்டா வர்றானே, இவன் இந்தியனா இருக்க முடியாது’ன்னு சந்தேகப்பட்டு அரஸ்ட் பண்ணீட்டாங்க”

இப்படித்தான் ஒரு மீட்டிங்-ன்னு அவசரமா என்னை கூப்ட்டாங்க. நான் அப்ப வெளில இருந்தேன். வந்து மீட்டிங் ஆரம்பிச்சு, எம்.டி. பேசீட்டிருக்கும்போது, பக்கத்துல இருந்த ஒரு சீனியர் கேட்டாரு.. “ஏன் கிருஷ்ணா, ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருக்கலாம்ல. எம்.டி. ”கிருஷ்ணகுமார் எங்க.. கிருஷ்ணகுமார் எங்க”ன்னு பத்து தடவை கேட்டுட்டாரு. ஏன் `லேட்’ன்னு பேர் வாங்குறீங்க?”

நான் சொன்னேன். ”பைக்ல அங்கிருந்து வரவேண்டாமா? விடுங்க. கிருஷ்ணகுமார் லேட்-ன்னு தானே சொல்றாங்க? ரொம்ப ஃபாஸ்ட்டா வந்திருந்தா `லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க”

59 comments:

சரவணகுமரன் said...

//கிருஷ்ணகுமார் லேட்-ன்னு தானே சொல்றாங்க? ரொம்ப ஃபாஸ்ட்டா வந்திருந்தா `லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க

நல்ல பஞ்ச் டயலாக்...

விஜய் ஆனந்த் said...

// “நான் 9 மணின்னா, டாண்ணு 9 மணிக்கு வந்துடுவேன். எப்பவுமே க்ரெக்டா வர்றானே, இவன் இந்தியனா இருக்க முடியாது’ன்னு சந்தேகப்பட்டு அரஸ்ட் பண்ணீட்டாங்க”//
ஹிஹிஹிஹி...நானும் இந்தியந்தாங்கோ!!!!

rapp said...

இன்னைக்கு எல்லாமே சூப்பர் :):):) குறிப்பா பிரசவ ஜோக் கலக்கல். இதையே பல வேறு காரணங்களோட ஜோக்கா படிச்சிருக்கேன். இந்த காரணம் சூப்பர்

rapp said...

//`லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க

//

ஆனா சிலப் பேர் அந்நிய மொழிய எப்பாடுபட்டாவது பேசியே தீரனும்னு வெறிகொண்டு, லேட்டா வர்ற பலபேரை இறைவனடி சேர்த்திருக்காங்க.

Anonymous said...

க்ருஷ்ணா! இதே மாதிரி தான் நிறைய எதிர்பார்க்கிறோம்.

நேத்து எழுதுன மாதிரி அறுவையெல்லாம் நாங்க எதிர்பார்க்கவே இல்லை.

'லேட்' கடி ஜோக்கை கேட்டுட்டு சீனியர் கடிச்சு ஏதும் வைக்கலியே?

ச.பிரேம்குமார் said...

மிகவும் ரசித்தேன். நன்றி :)

Anonymous said...

கிருஷ்ணா,

எங்கிட்ட பேசும் போது 9.45 அதுக்குப் பிறகு இந்தப் பதிவப் போட்டுட்டு நீங்க லேட்டாத்தான் போயிருக்கனும்.

நீங்க உண்மையான காரணத்த எழுதினீங்களா?

இல்லன்னா என்ன எழுதுனீங்க?

ஜோக்கெல்லாம் சூப்பர்.

Thamira said...

நேத்து ஆனாலும் அநியாய‌ம்ங்க‌.. (நானும் என் ப‌ங்குக்கு வெறுப்பேத்த‌ வேண்டாமா?)‍- எப்புடி ந‌ம்ப‌ ஐடியா.. நேத்திக்குள்ள‌துக்கும்/ இன்னிக்கும் சேத்து ப‌தில் போட்டாச்சு

Selva Kumar said...

//நான் சொன்னேன். ”பைக்ல அங்கிருந்து வரவேண்டாமா? விடுங்க. கிருஷ்ணகுமார் லேட்-ன்னு தானே சொல்றாங்க? ரொம்ப ஃபாஸ்ட்டா வந்திருந்தா `லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க”//

:))

Selva Kumar said...

//எங்கிட்ட பேசும் போது 9.45 அதுக்குப் பிறகு இந்தப் பதிவப் போட்டுட்டு நீங்க லேட்டாத்தான் போயிருக்கனும்.

நீங்க உண்மையான காரணத்த எழுதினீங்களா?
//

நல்ல கேள்வி .. பதில் ப்ளீஸ்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//லேட்டா வந்த எல்லாருமே அதுக்கு டிட்டோ போட்டிருந்தாங்களாம்!//

பதில் எழுதவே சோம்பேரிபடுறாங்கனா எப்படி வேலைய பார்ப்பாங்க... ஏதோ நல்லா இருந்தா சரி...

//நீங்க உண்மையான காரணத்த எழுதினீங்களா?//

டிட்டோ போட்டுடேனு சொல்லிடாதிங்க... :)

கயல்விழி said...

நல்ல பதிவு. அப்படியே லேட்டா போனாலும் சிக்கலில் மாட்டாமல் இருப்பது எப்படியென்ற ஆலோசனை வழங்கினால் நல்லா இருக்கும்
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படியோ இந்த பதிவும் ஒரு குறிப்பேட்டிலிருந்து எடுத்த பதிவு தான்..குறிப்பேட்டிலிருந்து எழுதறதெல்லாம் ஓகே ஆகிடுது...

நேத்து பலத்த அடியா அடப்பாவமே... :)) இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா..

Anonymous said...

இந்த லேட்டா வர்ரவங்க தொல்லை தாங்க முடியறதில்லை. வேலைக்கு மட்டும் இல்லை. நண்பர்கள் சாப்பிடக்கூப்பிட்டிருந்தாங்க டின்னருக்கு. ஒரு கோஷ்டி ஆடி அசைஞ்சு 8 மணிக்கு மேல வர்றாங்க. நம்ம அவங்க வர்ற வரைக்கும் பசி பொறுத்துட்டு இருக்கணும். என்ன பண்ணறது.

வெண்பூ said...

//ரொம்ப ஃபாஸ்ட்டா வந்திருந்தா `லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க”//

கலக்கலான‌ பரிசல் டச்....

அண்ணன் பேக் டூ ஃபார்ம்..அடிச்சி ஆடுங்க பரிசல்.

கோவி.கண்ணன் said...

பின்னூட்டம் போடுவதற்கு தாமதம் ஆகிவிட்டது !
:)

மீத லேட் !

anujanya said...

நானும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட். இப்பிடி அடிச்சு ஆடுங்க கே.கே. சச்சின் பூஜ்யதுக்குப்பின் சதம் அடிச்ச மாதிரி இருக்கு. தொடரட்டும்.

அனுஜன்யா

சென்ஷி said...

அப்ப உண்மையிலேயே போன பதிவு மோசமா இருந்ததா.. அது தெரியாமத்தான் அங்க நான் கும்மி அடிச்சுட்டு இருந்தேனா... என்ன் கொடும சார் இது :)

Anonymous said...

ஹும்....எங்களுக்கெல்லாம் நீக்குப்போக்கான வேலை நேரம் (flexi hours)....எப்போ வேணா வரலாம் எப்போ வேணா போகலாம்....வேலை முடிஞ்சா செரி.....(அப்பாடா...வைத்தெரிச்சலை கொட்டிக்கிட்டாச்சு...)

ஆனா உங்களுக்கு கவலையே இல்ல..."மொக்கை பதிவு போட்டு அடி வாங்கிட்டு வர நேரமாயிடுச்சுன்னு" காரணம் எழுதிட்டு போய்ட்டே இருக்கலாம் :)

Thamira said...

பரிசல் இம்மா நேரம் பதில் சொல்லாததை பாக்கச்சொல்லோ மீட்டிங்கில் மாட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. அவர் அதிலிருந்து தப்பிக்க எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.
(என் கடையில் இன்று நல்ல கூட்டம். அதான் பரிசலையும் கூப்பிடலாமேனு வந்தேன். அப்படியே சென்ஷி, அனுஜன், கோவி, அம்மிணி, வெயிலான் மற்றும் அனைவரையும் கூப்பிட்டுக்கிறேன்)

பரிசல்காரன் said...

உனங்க பிரார்த்தனை பலிச்சிடுச்சு தாமிரா!

இதோ... வந்துட்டேன்!

பரிசல்காரன் said...

@ சரவணகுமரன்

நன்றி சரவணா!

@ விஜய் ஆனந்த்

நாங்க எல்லாருமே இந்தியர்கள்தான். இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?

@ rapp

உண்மைதான் தங்கச்சீக்கா!

@ வெயிலான்

ஓ! அதுதான் நேத்து பூரா எனக்கு நீங்க ஃபோன் பண்ணவே இல்லையா?

//'லேட்' கடி ஜோக்கை கேட்டுட்டு சீனியர் கடிச்சு ஏதும் வைக்கலியே?//

சீனியர்ன்னா, போஸ்ட்ல. பெர்ஃபாமன்ஸ்ல நாம் சீனியர்ல!

பரிசல்காரன் said...

நன்றி பிரேம்குமார்!

@ வடகரை வேலன்

//எங்கிட்ட பேசும் போது 9.45 அதுக்குப் பிறகு இந்தப் பதிவப் போட்டுட்டு நீங்க லேட்டாத்தான் போயிருக்கனும்.

நீங்க உண்மையான காரணத்த எழுதினீங்களா?

இல்லன்னா என்ன எழுதுனீங்க?//

பத்தவெச்சுட்டீங்களே!

எம்.டி. என்னை வேற ஒரு ஃபேக்டரில வரச் சொல்லீருந்தாரு. அங்கிருந்து அவங்க கூடயே மெய்ன் ஆஃபீஸ் போனதால `எஸ்கேப்பூ!!'

சின்னப் பையன் said...

ஹாஹா. இன்னிக்கு எல்லாமே சூப்பர்.

அந்த பதிவேட்டில் காரணங்கள், ஜோக்ஸ் எல்லாமே :-)))))

rapp said...

//அப்ப உண்மையிலேயே போன பதிவு மோசமா இருந்ததா.. அது தெரியாமத்தான் அங்க நான் கும்மி அடிச்சுட்டு இருந்தேனா... என்ன் கொடும சார் இது //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........................
அண்ணே, இப்படியெல்லாம் பார்த்தா நாம கும்மி அடிக்கற கொள்கை முடிவ எடுத்தோம். நம்ம கொள்கை முழக்கம், நம் கடன் கும்மி அடித்துக் கிடப்பதேங்கரதுதான?!?!?! ஆனாலும் எனக்கும் புரியல நேத்தைக்கும் செவ்வாய்க்கிழமையும் என்ன அம்புட்டு மோசம்னு? எனக்கும் நல்லாத்தான் இருந்துச்சு படிச்சப்ப.

பரிசல்காரன் said...

நன்றி தாமிரா & வழிப்போக்கன்!

@ விக்கி

கரெக்ட்!

@ கயல்விழி

ஆஹா.. இன்னொரு பதிவுக்கு யோசனை தந்ததுக்கு நன்றி கயல்!

@ முத்தக்கா

முதல் அடியில்ல. அதான் ஃபீலாயிடுச்சு! இருந்தாலும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. ச்சும்மா ஏத்திவிடாம, உண்மையா க்ரிடிசைஸ் பண்ற உங்களை மாதிரி நண்பர்கள் இருக்காங்கன்னு நெனைக்கறப்ப!

(ஆமா, நீங்களும் கயலும் சேர்ந்தே வர்றீங்களே அடிக்கடி??)

rapp said...

//
வெண்பூ said,
கலக்கலான‌ பரிசல் டச்....
//
பரிசல் டச் - கட்டுரை எழுதுக (என்னைக் காறிமுழியாமல்)
:):):)

பரிசல்காரன் said...

@ சின்ன அம்மணி

அது ரொம்பக் கொடுமையான் விஷயம். உங்களுக்கு விருந்துன்னா, என்னை மாதிரி ஆண்களுக்கு சினிமா தியேட்டர்ல இது நடக்கும்! டிக்கெட் எடுத்து வெச்சுட்டு.. ஃப்ரெண்ட்ஸ் வராம தவிக்கற கொடுமை இருக்கே!! ச்சே!

@ வெண்பூ

அண்ணனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
(வெண்பூ... ஆதர்ஷ் சிரிப்பூ சூப்பரப்பூ)

@ கோவி.கண்ணன்

லேட்டா வந்தா என்ன ஜி... 3ம் தேதி பதிவர் மாநாட்டுக்கான ஆயத்தங்கள்ல இருப்பீங்கன்னு நெனச்சேன்!

@ அனுஜன்யா

ரொம்ப மகிழ்ச்சிங்க. வழக்கமா சொல்றதுதான் உங்கள மாதிரியானவங்க அன்புக்கு நான் அடிமை!

@ சென்ஷி

குடுத்த காசுக்கு அதிகமா கூவுறாண்டா கொய்யால' அப்படீன்னு லிவிங்க்ஸ்டன் சொல்றதுதான் ஞாபகம் வந்த்து நேத்து உங்க கும்மியப் பார்த்து!

யார் கைவிட்டாலும், நான் கைவிடேன்ன்னு நிரூபிச்சுட்டீங்க சென்ஷி!

பரிசல்காரன் said...

@ மகேஷ்

நான் பதிவெழுதறது ஆஃபீஸ்ல யாருக்குமே அவ்வளவா தெரியாது. அப்புரம் எப்படி அந்தக் காரணத்தை சொல்ல? (அடிதான் விழும்!)

@ ச்சின்னப்பையன்

நன்றி தலைவா!

@ rapp

உங்க ஆதரவு இருக்கறப்ப எனக்கென்ன கவலை!

இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல! (இதுக்கு நன்றியா `ஜே.கே.ஆர் என்னும் சிங்கம்'ன்னு ஒரு பதிவு எழுதவா?)

பரிசல்காரன் said...

ரொம்ப நேரமா பாக்கறேன்

ONLINE - 10 ன்னே இருக்கு. மாறவே இல்ல. அந்த பத்து பேருக்கு நன்றி.

ஒருவேளை எத்தனை தடவை படிச்சும் புரியவே இல்லையோ என்னமோ?

rapp said...

// (இதுக்கு நன்றியா `ஜே.கே.ஆர் என்னும் சிங்கம்'ன்னு ஒரு பதிவு எழுதவா?)//

இன்னைக்குத் தமிழ்மணமே எங்க தல ஜே.கே.ரித்தீஷின் தயவால்தான சுறுசுறுன்னு இயங்கிக்கிட்டுருக்கு :):):)
(உண்மைய ஒத்துக்கணும், என்னை காறித்துப்பக்கூடாது)

rapp said...

//ரொம்ப நேரமா பாக்கறேன்

ONLINE - 10 ன்னே இருக்கு. மாறவே இல்ல. அந்த பத்து பேருக்கு நன்றி.

ஒருவேளை எத்தனை தடவை படிச்சும் புரியவே இல்லையோ என்னமோ?

//

அவ்வ்வ்வ்வ்..............எங்க எல்லாரையும் இங்கருந்து மூட்டயக் கட்ட சொல்றீங்களா?????????? இதுதான் தமிழர் பண்பாடா????????
(இந்தக் கலைக்குப் பேர் என்னன்னா, பத்தவைக்கும் கலை, இதனை செயல்படுத்தும்போது, பல சமயங்களில், இதெல்லாம் ஒரு பொழப்பா? , அப்படி இப்படின்னு பலர் நம்ம முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்துவார்கள், சிலர் அனாவசியமா எச்சில் சுரப்பிகளுக்கு வேல கொடுத்து தங்களோட நாக்கை வறட்சியாக்கிப்பாங்க, ஆனா நாம கொண்ட கொள்கையே உயிர் மூச்சின்னு நம்ம சேவைய தொடர்ந்துக்கிட்டே இருக்கணும்)

rapp said...

இன்னும் கும்மியடிக்க யாரையும் காணும். வியாழக்கிழமைலக் கூடவா வேலை செய்யறாங்க?

பரிசல்காரன் said...

@ rapp

//வியாழக்கிழமைலக் கூடவா வேலை செய்யறாங்க?//

அடக்கடவுளே!

வியாழக்கிழமை வேலை செய்யறது அவ்வளவு குத்தமா?

நாங்க, ஞாயித்துக் கிழமையெல்லாம் வேலை செஞ்சுட்டு இருக்கோம்!

வெண்பூ said...

//வியாழக்கிழமை வேலை செய்யறது அவ்வளவு குத்தமா?

நாங்க, ஞாயித்துக் கிழமையெல்லாம் வேலை செஞ்சுட்டு இருக்கோம்!//

அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கு மின்வெட்டை எதிர்த்து திருப்பூர் முழுசும் ஸ்ட்ரைக்காமே... நீங்க மட்டும் எங்க வேலை செஞ்சிட்டு இருக்கீங்க???? :)

VIKNESHWARAN ADAKKALAM said...

வர வர பரிசல் என் வீட்டு பக்கம் வர மாட்டுது... என் எழுத்து கசந்துவிட்டதா?

rapp said...

//அடக்கடவுளே!

வியாழக்கிழமை வேலை செய்யறது அவ்வளவு குத்தமா?
//
உங்களை யாருங்க கூப்டா, நான் எங்க கும்மி சங்கத்தை சேர்ந்தவங்களை கூப்பிடறேன். நீங்கதான் தினமும் ஒரு பதிவ போட்டு உங்கக் கடமைய முடிச்சிட்டீங்கல்லே?!?!?!


//நாங்க, ஞாயித்துக் கிழமையெல்லாம் வேலை செஞ்சுட்டு இருக்கோம்//

என்ன வேலை - சிறு குறிப்பு வரைக

பரிசல்காரன் said...

@ வெண்பூ

ஸ்ட்ரைக்கா? அது நிட்டிங் எனப்படும் துணியை நெய்பவர்கள் மட்டும்ன்னு நெனைக்கறேன்!

@ விக்கி

இல்ல நண்பா. ரெண்டு மூணு நாளா மைண்ட் சரியில்ல! டைமுல் இல்ல.

எப்பங்க போட்டீங்க? இப்போதான் பாக்கறேன். ஒரே ஸ்ரேயாக்குட்டி படமா இருக்கு? (அன்னை பத்தின பதிவுக்காவது தெரசா போட்டிருக்கலாம். அதுக்கும் ஸ்ரேயாவா? - ஆனா செம.. ச்சே.. விடுங்க.)

அன்னைக்கு ஒரு கடிதம் அசத்தலான சப்ஜெக்ட் போலிருக்கு. இரவு படிச்சுட்டு பின்னூட்டறேன்!

@ வெட்டியாபீசர்

கும்மி சங்க மெம்பர்ங்களை அவங்க வீட்டுக்குப் போய் கூப்ட்டாதானே வருவாங்க?

சங்கத்து மெய்ன் மெம்பர் நாந்தான். அதுனால என் வீட்டுக்கு நானே கூப்ட முடியுமா?

Vetrivel said...

நன்றாக உள்ளது

விவேக் காமெடி மாதிரி

வேடிக்கைய இருந்தாலும்

உள்ள விசயம் இருக்குப்பா...!

வாழ்த்துக்கள்.

வெற்றிவேல்.ச‌

Anonymous said...

//ரொம்ப நேரமா பாக்கறேன்

ONLINE - 10 ன்னே இருக்கு. மாறவே இல்ல. அந்த பத்து பேருக்கு நன்றி.

ஒருவேளை எத்தனை தடவை படிச்சும் புரியவே இல்லையோ என்னமோ?//

tamilish.com la ungal pathivu 20+ oottugal vaangi ajith ponnu postukku keela irukku...
http://www.tamilish.com/published/today/category/all
athaan 10 users online

btw. nalla suvayaana pathivu. valthukkal.

Saminathan said...

அந்த லெட்ஜரப் பார்த்தா....( நற நற நற ) சும்மா அப்டின்னு பல்ல கடிக்கறதவிட வேற ஒண்ணும் பண்ண முடியாதுங்கறத தெரிஞ்சுகறதுக்கு இவ்ளோ நாள் ஆச்சு...!!!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//ஹாஹா. இன்னிக்கு எல்லாமே சூப்பர்.

அந்த பதிவேட்டில் காரணங்கள், ஜோக்ஸ் எல்லாமே :-)))))//
நானும் சின்னபையன் அவர்கள் சொன்னதையே திருப்பி சொல்றேன் !

புதுகை.அப்துல்லா said...

அண்ணே எந்த நேரத்தில லேட்டைப் பற்றி பதுவு போட்டீங்களோ? பாருங்க நானே இதுக்கு லேட்டா வர்றேன்.

இத...இத..இதத் தான் தலை உங்ககிட்ட நாங்க இரசித்து சிரிக்கிறது.

பரிசல்காரன் said...

@ வெற்றிவேல்

முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றியோ நன்றி!

@ Sowmyan

அட! ஆச்சரியமாயும் ,சந்தோஷமாயும் இருக்கு நண்பரே! தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! இப்போதான் போய்ப் பார்த்தேன்! 23 ஓட்டு வாங்கி 2வதா இருக்கு!

@ ஈரவெங்காயம்

என்ன 2 நாளா ஃபோனைக் காணோம்? (எங்க தொலைச்சீங்கன்னு கேக்கக்கூடாது. ஃபோன் பண்ணக் காணோம்ன்னு கேட்டேன்!)

பரிசல்காரன் said...

@ அருப்புக்கோட்டையார்

திருப்பிச்சொன்னாலும்
நீங்க சொல்றது ஸ்பெஷல்தானே!

@ புதுகை அண்ணாச்சி

நேற்றைய ***** தெளியாததால லேட்டா வந்திருப்பீங்க! (ச்சும்மா ட்டமாஷ்!)

புதுகை.அப்துல்லா said...

ஹி..ஹி...ஹி...உண்மைண்ணே.

பரிசல்காரன் said...

சீரியஸா எடுத்துக்காம,
ஜாலியா எடுத்துகிட்டதுக்கும்,

உண்மைய ஒத்துக்கிட்டதுக்கும்
நன்றி!

(ப்ரதியுபகாரமா, நேர்ல பாக்கறப்ப சைட் டிஷ் செலவ நான் ஏத்துக்கறேன்!)

மங்களூர் சிவா said...

கலக்கல்!
:)

ஜோசப் பால்ராஜ் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
நான் அலுவலகத்துக்கு தாமதமா போறதபத்தி எழுதுவும் சொல்லமுடியாது. ஏன்னா எனக்கு வேலை நேரம் 8 5.30 ஆனா நான் ஒரு நாள் கூட 9மணிக்கு முன்னாடி அலுவலகத்துக்குள்ள போனதில்ல. ( இரவு நேரங்கள்ல அமெரிக்க தலைமை அலுவலகத்துடன் வெப் மீட்டிங்கில் நான் தினமும் கலந்துகொள்வதால் எனக்கு 1 மணி நேரம் சலுகை உண்டு ஆனாலும் மீட்டிங் இல்லாத நாட்களிலும் 9 மணிக்குத்தான் வேலைக்கு செல்கிறேன்)

நல்ல நேரத்தில் இந்த பதிவை எழுதியுள்ளீர்கள். இதையே வரும் ஞாயிறு நடக்க இருக்கும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு வருகை தர உள்ள அனைவருக்கும் செய்தியாக் சொல்லிக்கொள்கிறோம். அனைவரும் நேரத்துடன் சந்திப்புக்கு வந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பரிசல்காரன் said...

நன்றி சிவா!

பரிசல்காரன் said...

@ ஜோசப் பால்ராஜ்

நன்றி. நானும் உங்க சார்பா எல்லா சிங்கை பதிவர்களுக்கும் நேரங்காலமா போய் பதிவை சிறப்பாக்கீட்டு வாங்கன்னு சொல்லிக்கறேன்!

மங்களூர் சிவா கமெண்ட் போடறதுக்கு முன்னாடியே, நான் நன்றி சொல்லீட்டனா? ஆஹா... எப்படி!

ராஜ நடராஜன் said...

பரிசல்காரன்!நீங்க குசேலன் படம் பார்த்து வறுவல் செஞ்சிட்டு ஆஃபிசுக்கு லேட்டாப் போனீங்களோன்னு நினைச்சேன்.

பரிசல்காரன் said...

நன்றி நடராஜன்.

குசேலன் இங்க வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ்!

கிரி said...

ஹி ஹி ஹி ஹி ஹய்யோ ஹய்யோ

பரிசல்காரன் said...

@ கிரி

என்னா சிரிப்பு?

ஆங்... என்னா சிரிப்புங்கறேன்!

Anonymous said...

kathai,

kavithai,

camedi,

kalakal....

u r one of the all in all azhagu raja...

chinnapiyan said...

மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

Rajan said...

கிருஷ்ணகுமார் லேட்-ன்னு தானே சொல்றாங்க? ரொம்ப ஃபாஸ்ட்டா வந்திருந்தா `லேட் கிருஷ்ணகுமார்’ன்னு சொல்லீருப்பாங்க”

Rajan said...

கமெண்டுக்கு " போடலாமா?