Friday, July 11, 2008

அவியல் – ஜூலை 11


தனது பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறாள் மீரா. ”நானும் பெரியவளாகி இந்த மாதிரியெல்லாம் எழுதுவேன்” என்கிறாள்.. விதி யாரை விட்டது!

-----------------------

சென்ற ஆகஸ்ட் 15 அன்று நடந்த சம்பவமொன்றை நண்பர் சௌந்தர் சொன்னார்.


இவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஐந்து-ஆறு வயதுள்ள ஒரு சிறுவனுடன் வந்த பெண்ணொருத்தி பிச்சை கேட்டிருக்கிறாள். இவர் காசு கொடுத்ததும், அவள் அடுத்த ஆளிடம் போய்விட்டாள். ஆனால் அந்தச் சிறுவன் இவரை தொட்டு பாக்கெட்டை நோக்கிக் காட்டி எதையோ கேட்டிருக்கிறான். இவர் `இவனுக்கும் போடணுமா’ என்று சலித்தவாறே ஒரு ரூபாயை கொடுத்திருக்கிறார். அவன் வாங்கவில்லை. “என்னடா இவன்” என்று சலித்தவாறே நின்றிருக்கிறார். அவன் விடாமல், இவரை தொட்டுத் தொட்டு பாக்கெட்டை சுட்டிக் காட்டி ஏதோ கேட்டிருக்கிறான். இவர் கோபம் வந்தவராய் அவனது அம்மாவிடம் முறையிட்டிருக்கிறார். பக்கத்து ஆளிடம் கையேந்திக் கொண்டிருந்த அவளும் அந்தச் சிறுவனை இழுத்துப் போக முயன்றிருக்கிறார். அவன் நகராமல் அடம் பிடித்தவனாய் நிற்க இவர் வெறுப்புடன், இன்னும் ஒரு ரூபாய் சேர்த்து இரண்டு ரூபாயாகக் கொடுத்திருக்கிறார். அதையும் வாங்காமல் அவன் மறுபடி இவரது பாக்கெட்டைக் காட்டியிருக்கிறான்.இவருக்கு அப்போதுதான் புரிந்திருக்கிறது. அந்தச் சிறுவன் கேட்டது, அவரது பாக்கெட்டில் குத்தியிருந்த தேசியக் கொடியை!


இந்த இடத்தில் எனக்கு தமிழ்நெஞ்சன் (தீவின் தாகம் தொகுப்பில்) எழுதிய ஹைக்கூ நினைவிற்கு வருகிறது...கொடி தந்தீர்
குண்டூசி கொடுத்தீர்
சட்டை?


---------------------


சில பதிவுகளை எழுதிவிட்டு என்ன வகைப்படுத்துவது என்று எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. நேற்று எழுதிய `வார்த்தை விளையாட்டு’ பதிவை அனுபவம் என்றிடுவதா, வகைப்படுத்தாதவை என்று விட்டுவிடலாமா என்றெல்லாம் ஒரே குழப்பமாகிவிட்டது. இப்படி வகைப்படுத்துவதன் சாதக, பாதகங்கள் குறித்து யாரேனும் சொன்னால் தேவலாம்..


---------------------மீரா, மேகாவின் பள்ளி டைரியின் முதல் பக்கத்தில் PERSONAL MEMORANDA என்றொரு பக்கம் இரண்டு பிரதிகள் கொடுத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விஷயங்களைக் கேட்டிருக்கும் அந்தப் பக்கத்தை ஒரு பிரதி பள்ளிக்கும், ஒன்று டைரியிலேவும் இருக்கும். பள்ளியில் எதிலும் அவர்களது ஜாதியை நான் குறிப்பிடுவதில்லை. (குறைந்தபட்சம் `ஜாதி’யை ஒழிக்க நம்மாலான முயற்சி என்று சொன்னால் `கப்ஸாவப் பாரு' என்பீர்கள். எழுதியும் ஒரு ***ம் கிடைக்காது என்பதும் ஒரு காரணம்!) இதிலும் குறிப்பிடவில்லை. பாக்கி எல்லாம் ஃபில் பண்ணி விட்டேன். தினமும் கையெழுத்து வாங்குவார்களே, அதுபோல நேற்று கையெழுத்திடும்போதுதான் பார்த்தேன். இன்னொரு காலமும் (Column) பூர்த்தி செய்யாமல் கொடுத்திருக்க வேண்டும் நான். அது.. Monthly Income? என்றொரு கேள்வி...


”அதெல்லாம் எதுக்குடா உங்களுக்கு.. குழந்தைகளுக்கு கல்வியோட முக்கியத்துவத்தைவிட காசோட முக்கியத்துவத்தை ஏண்டா சொல்லித்தர்றீங்க?” என்று கேட்க வக்கில்லாமல் நானும் எழுதியிருக்கிறேன். ச்சே!


------------------ரஜினி அளவுக்கு கமல் ஏன் குழந்தைகளை கவரவில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம். ஒருத்தர் சொன்னார்..“ஆமா.. பின்ன..? ஒவ்வொரு படத்துல ஒவ்வொரு மாதிரி வர்றாரு. இப்ப என்னடான்னா ஒரே படத்துல வேற வேற மாதிரி வந்திருக்காரு. கமல் யாரு’ன்னு தெரிஞ்சுக்கவே அவங்கனால முடியறதில்ல. அது கூட காரணமாயிருக்கலாம்”


உண்மையோ?


-------------------------


`நாந்தான் பலசாலி. நாந்தான் உன்னை அரணாக நின்று காக்கிறேன்’ – பல் சொன்னது நாக்கிடம்.

நாக்கு அமைதி காத்தது.எதிரே ஒரு இளம் பெண்வர.. “சூப்பர் ஃபிகர்” என்றது நாக்கு.


அவள் விட்ட அறையில் கழன்றது இரு பற்கள்!


நீதி: நேரம் பார்த்து தாக்கு!(ஐய்ய்யா! நங்களும் மெசேஜ் சொல்லீட்டமே!)


----------------------------------


எங்கே இந்தக் கவிஞர்கள் வரிசையில் இன்றைய கவிதையை சேர்க்கலாமா என்று தெரியவில்லை. ஏனென்றால் எங்கே இவரென்று எனக்குத் தெரியும்.


1994-ல் வெளியான “தொலைந்தவன்” என்ற தலைப்பில் வெளியான இந்தக்கவிதையை எழுதியவர் அனந்த்பாலா.கண்டிப்பாய் இருக்கிறது
ஆனால்காணவில்லை.
மகனுக்கு அப்பன்.
மனைவிக்கு புருஷன்
அதிகாரிக்கு அடிமை
நண்பனுக்கு நடமாடும் வங்கி.
இப்படியாகத்தான் அது..
கண்ணில் படுவதேயில்லை
நீங்கள் கண்டதுண்டா
நிஜமான என்னை?இவர் எங்கேயிருக்கிறார் என்று தெரியுமென்று சொன்னேனல்லவா.. ஒரு க்ளு..என் தாயார் பெயர்: அனந்தலட்சுமி
தந்தை பெயர்: பாலசுப்ரமணியன்


(எல்லாம் ஒரு விளம்பரம்தான்...!)

32 comments:

நந்து f/o நிலா said...

வாவ் க்ருஷ்ணா, போட்டோ செம்ம சூப்பர்ப். அசந்துட்டேன்.முதல்ல எல்லா போட்டோவையும் ஃப்ளிக்கர்ல அப்லோட் பண்ணுங்க .

VIKNESHWARAN ADAKKALAM said...

//சில பதிவுகளை எழுதிவிட்டு என்ன வகைப்படுத்துவது என்று எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. //

எனக்கும் தான், சரித்திரம் சார்ந்த பதிவுகளை எப்படி வகைப்படுதுறதுனு தெரியாம எதையவது கிலிக்கி போட்டு விடுவேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல புகைப்படம்.. முகபாவம் அழகு.

anujanya said...

சூப்பர் அவியல் இன்று. First things first.

மீரா எழுதப்போவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. குடும்பத்தில் ஒருவராவது நன்றாக எழுதுவார் என்பது சராசரி விதிகளின் கூறு.

நல்ல ஹைக்கூ. ஆனால் சட்டை தந்தால் முதல் வேலையாக கொடியும் குண்டூசியும் குப்பைக்குப் போய்விடும். அரசாங்கம் இந்த விஷயத்தில் மிக கெட்டி.

வகை? 'மொக்கை' என்பதே நாட்டாம தீர்ப்பாகும்.

ஜாதியில் 'பூ, மான்' என்று ஏதாவது எழுதிக் கொடுங்கள். (உதைக்க வந்தாலும் உங்களிடம்தான் வருவார்கள்).

குழந்தைகள் புத்திசாலிகள். கமலும். Opposite poles attract each other. (இரு ரசிகர் படைக்கும் கோபம் வரும் இதைப் படித்தால்).

நாக்குக்கே பன்ச் டயலாகா? பார்த்து, பேரரசு கூப்பிடப் போகிறார்.

நிஜமான நீங்கள் பரிசலில் பவனி வருவது எல்லாருக்கும் தெரியும். நல்ல கவிதை.

மொத்தத்தில் நல்ல பதிவு.

அனுஜன்யா

☼ வெயிலான் said...

எங்கே இருக்கிறார் இந்த அனந்த்பாலா? நாங்கள் இப்போது தான் பார்க்கிறோம்.

எங்களுக்கு எப்பவுமே பரிசல் தான்!

Vijay said...

//கொடி தந்தீர்
குண்டூசி கொடுத்தீர்
சட்டை?//

பறக்கற கொடிய அவுத்து குடுத்துற வேண்டியதுதான்.

ambi said...

//கொடி தந்தீர்
குண்டூசி கொடுத்தீர்
சட்டை?
//

கேள்வி குத்தீட்டியாய் குத்துகிறது

Anonymous said...

நீர் எழுதிய கவிதைகளிலேயே குடை பிடிக்கும் கவிதைதான் சூப்பர்.

rapp said...

மீராவுக்கு ஏனிந்த விபரீத ஆசை :):):) சரி பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள், இல்லை இந்த ஞாயிறுதான் கொண்டாடுவீர்களா(பள்ளி நாட்கள்ல நேரம் இருக்கான்னு)
கமல் பன்ச் சூப்பர்
நீங்க கவலையே படாம வகைப்படுத்துங்க, ஏன்னா நிறையப் பேரு உங்க ப்ளாக் பேர பார்த்து கண்டிப்பா வரத்தான் போறாங்க, ஏன்னா என்ன மாதிரி ஆட்கள் எல்லாம் லேபில் போட்டாலும் முக்காவாசி பாக்கறதில்லை, நீங்க எழுதினா நல்லா இருக்கும்னுதான் வர்றோம்:):):) சரி, புதுசா யாரும் வரமாட்டாங்கல்ல, அந்த குழப்பம் வர்ற அன்னைக்கு நெறைய புதுப் பதிவர்கள் ப்ளாகுக்கு போய் பின்னூட்டம் போட்டிருங்க, (அதுக்கு உன்ன மாதிரி வெட்டியா இருக்கணும்னு சொல்றீங்களா, ஞாயமான பேச்சு)
இன்னைக்கு நீங்கதான் கவிஞரா, வாழ்த்துக்கள்

rapp said...

//கேள்வி குத்தீட்டியாய் குத்துகிறது//
அம்பி அண்ணனையே பீல் பண்ண வெச்சுட்டீங்களே:(

//`ஜாதி’யை ஒழிக்க நம்மாலான முயற்சி என்று சொன்னால் `கப்ஸாவப் பாரு' என்பீர்கள். எழுதியும் ஒரு ***ம் கிடைக்காது என்பதும் ஒரு காரணம்//
ஹா ஹா ஹா, ஆனா ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா, நான் காலேஜ்(அது ஒரு சீன் காலேஜ் வேற) படிச்ச பீரியட்ல(MSc 2001-2006 சமீபத்தில் நடந்ததுன்னு சொல்லத்தான்) என் கூட படிச்சவங்க, என் சீனியர்ஸ், சில யங் லெக்சரர்கள், இப்படி எல்லாருமே ஒருத்தருக்கொருத்தர் ஜாதிய பத்தி கேட்டுப்பாங்க. என்கிட்டே எங்க காலேஜ்ல இந்தக் கேள்விய கேக்காதவங்களே இல்லைங்கலாம், ஆனா அதை எதுக்கு கேக்கிறாங்கன்னே இன்னிவரைக்கும் எனக்குப் புரிஞ்சதில்லை. எங்க வீட்ல, பள்ளியிலெல்லாம் ஒருத்தரோட ஜாதி, மதம் பத்தி அவங்ககிட்ட அனாவசியமா விசாரிக்கறத ஒரு பெரிய கெட்ட பழக்கமா சொல்லிகொடுத்தாங்க. எனக்கு இதை நினைச்சா பல சமயம் குழப்பம்தான் மிஞ்சும்

Sathiya said...

படம் உண்மையிலேயே ரொம்ப அருமைங்க. அந்த சந்தோஷம், சிரிப்பு...சூப்பர்!
//கொடி தந்தீர்
குண்டூசி கொடுத்தீர்
சட்டை?//
குண்டூசியை வைத்து நெஞ்சில் குத்தியது போல் இருக்கு!

//இன்னொரு காலமும் (Column) பூர்த்தி செய்யாமல் கொடுத்திருக்க வேண்டும் நான். அது.. Monthly Income? என்றொரு கேள்வி...//
இதெல்லாம் கூட கேக்கறாங்களா? மடீல கணம் இருக்கானு செக் பண்றாங்க போல....பின்னால கறக்கரதுக்கு;)

//ரஜினி அளவுக்கு கமல் ஏன் குழந்தைகளை கவரவில்லை என்று பேசிக்கொண்டிருந்தோம்.//
ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அந்த 'சூப்பர்' என்ற பெயரே குழைந்தைகளை கவரும், சூப்பர் மேன் மாதிரி. அதே போல், அவர் படத்தில் எல்லாம் நல்லது ஜெயிக்கும், தீமை தோற்கும். அது மட்டும் இல்லாமல் பெரியவர்கள் நம்பி குழந்தைகளை அழைத்து கொண்டு போவது ரஜினி படம் தான். கமல் படத்தை பெரியவர்களாலேயே அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது, குழந்தைகள் எம்மாத்திரம்?

பரிசல்காரன் said...

நன்றி நந்து!

போட்டுடறேன்..
(சண்டே வர்றிங்கதானே)

@ விக்கி

யாருமே தீர்வு சொல்லல..

@ கயலக்கா

நன்றிங்க்கா... என் குழந்தைக்கு என்னோட அழகு கொஞ்சமாவது இருக்கும்ல... (ஹி..ஹி..)

Iyappan Krishnan said...

நந்து f/o நிலா said...

வாவ் க்ருஷ்ணா, போட்டோ செம்ம சூப்பர்ப். அசந்துட்டேன்.முதல்ல எல்லா போட்டோவையும் ஃப்ளிக்கர்ல அப்லோட் பண்ணுங்க .//

மறுக்காச் சொல்லேய்

அழகான புகைப்பதியம். மூலத்தை மடலில் அனுப்புங்க. எனக்கு

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா..

விரிவான விமர்சனத்துக்கு நன்றீ!

//குடும்பத்தில் ஒருவராவது நன்றாக எழுதுவார் என்பது சராசரி விதிகளின் கூறு. //

எனக்கேவா>>>

//வகை? 'மொக்கை' என்பதே நாட்டாம தீர்ப்பாகும்//

நாம போட்டுக்கறத கேக்கல.. தமிழ்மணத்துல சில வகைகள் குடுக்கறங்களே.. அததுல என்னான்னு போடன்னு கேட்டேன்..


//மொத்தத்தில் நல்ல பதிவு. //

நன்றி

பரிசல்காரன் said...

@ வெயிலான்

எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் நானுங்கள் நண்பனே

@ vijay

//பறக்கற கொடிய அவுத்து குடுத்துற வேண்டியதுதான்.//

அதுனாலதான் நாடு அம்மணமா திரியுது! (இத ரொம்ப கோவமா சொல்லிக்கறேன்!!)

பரிசல்காரன் said...

நன்றி அம்பி!

@ வேலன்

சூப்பர் அண்ணா!

@ rapp

//பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள், //

கலையில் கேக், மாலையில் கோவில், இடையின் அவரவர் வேலை!

//ஏன்னா நிறையப் பேரு உங்க ப்ளாக் பேர பார்த்து கண்டிப்பா வரத்தான் போறாங்க, ஏன்னா என்ன மாதிரி ஆட்கள் எல்லாம் லேபில் போட்டாலும் முக்காவாசி பாக்கறதில்லை, நீங்க எழுதினா நல்லா இருக்கும்னுதான் வர்றோம்:):):)//

இதுல ஒரு உள்குத்தும் இல்லையே?

//எங்க வீட்ல, பள்ளியிலெல்லாம் ஒருத்தரோட ஜாதி, மதம் பத்தி அவங்ககிட்ட அனாவசியமா விசாரிக்கறத ஒரு பெரிய கெட்ட பழக்கமா சொல்லிகொடுத்தாங்க. எனக்கு இதை நினைச்சா பல சமயம் குழப்பம்தான் மிஞ்சும்//

எப்படி? கோவமல்லவா வந்திருக்க வேண்டும்?

பரிசல்காரன் said...

@ sathiya

/மடீல கணம் இருக்கானு செக் பண்றாங்க போல....பின்னால கறக்கரதுக்கு//

அதுக்கேதான்!

சத்யா.. நான் ரெண்டு பேரையும் ரசிக்கற ரஜினி ரசிகன். என்னை இப்படி மாட்டி வுடறீங்களே?

கமல்படம் யருக்கும் புரியல-ன்னு நான் சொல்லலியே.. புரிஞ்சா நல்லாயிருக்கும்ன்னுதானே சொல்றேன்..

Thamira said...

புகைப்படமும் மீராவும் அவ்வளவு அழகு! //நன்றிங்க்கா... என் குழந்தைக்கு என்னோட அழகு கொஞ்சமாவது இருக்கும்ல// - இது கொஞ்சம் ஓவர் !, ஒருவேளை தங்கமணியின் ஜாடையாக இருக்கலாம்.

சென்ஷி said...

கவிதை நச்சுன்னு இருக்குங்கண்ணே...
இப்போதைக்கு விடாம அடிச்சு ஆடுற ஒரே ஆளு இன்னிய டேட்டுக்கு நீங்க மட்டும்தான்.. பட்டைய கெளப்புங்க... :))

அப்புறம் நீங்க என்னை கலாய்ச்ச அந்த எல்லா பின்னூட்டத்தயும் திரட்டி கண்டிப்பா ஒரு பதிவு போடணும். நான் ரொம்ப ரசிச்ச கமெண்ட்ஸ் அது.
அப்பவாச்சும் நம்மள நாலு பேரு கண்டுக்கறாங்களான்னு தேட வேண்டியிருக்குது :))

rapp said...

//கோவமல்லவா வந்திருக்க வேண்டும்?//
கோவம் வந்தா சரியா கலாய்க்க முடியாதே, ரெண்டாவது எய்தவர் எங்கோ இருக்க அம்பை நுங்கெடுப்பானேன் :):):)

கயல்விழி said...

குடையுடன் இருக்கும் படம் ரொம்ப அழகாக இருக்கிறது.

மற்றபடி உங்கள் அவியல் வழக்கம் போலவே informative.

கோவி.கண்ணன் said...

மேலே உள்ள நிழல்படத்தைப் பார்க்கும் போது,

நெஞ்சில் ஜில் ஜில் ஜில்....கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஞாபகம் வருது. கலக்கலான நிழல்படம் !

பரிசல்காரன் said...

@ thaamira

Thanks!!

@ சென்ஷி

//இப்போதைக்கு விடாம அடிச்சு ஆடுற ஒரே ஆளு இன்னிய டேட்டுக்கு நீங்க மட்டும்தான்.. பட்டைய கெளப்புங்க..//

தூக்கத்த கெடுத்துட்டீயளே புள்ள!!


//அப்புறம் நீங்க என்னை கலாய்ச்ச அந்த எல்லா பின்னூட்டத்தயும் திரட்டி கண்டிப்பா ஒரு பதிவு போடணும். நான் ரொம்ப ரசிச்ச கமெண்ட்ஸ் அது.//

ஆஹா.. நாளைக்கு பதிவுக்கு மேட்டர் கெடச்சுடுச்சுடா மாப்ளோய்!

பரிசல்காரன் said...

@ கோவி கண்ணன்!

என்ன லேட்டு?

படத்தை மட்டும் பாத்து ஒரு கமெண்டீட்டு தப்பிச்சுட்டீங்க!!

ம்ம்ம்..வெச்சுக்கறேன்!

சின்னப் பையன் said...

பரிசல் -> புகைப்படம், கவிதை எல்லாமே சூப்பர்.

ஆமா. உங்களோட அந்த ரெண்டு பல்லும் மறுபடி மொளச்சிடுச்சா???? அவ்வ்வ்வ்....

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பையன்

ஓ...! இதுதான் நேரம்பாத்து தாக்கறதா?

Unknown said...

அவியல் அருமை. நானும் ஜாதிப் பேரை பூர்த்தி செய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்....

Boston Bala said...

கலக்கல் தொகுப்பு. பதிவுக்கு நன்றி :)

பரிசல்காரன் said...

@ தஞ்சாவூரான்

மிக்க நன்றீ!

@ Bostan Bala

தலைவா.. வாங்க வாங்க..!

மிக்க மகிழ்ச்சி!

பாபு said...

ரொம்ப அழகா வந்திருக்கு போட்டோ , அந்த சிரிப்பு அனைவருக்கும் தொற்றட்டும்

தமிழன்-கறுப்பி... said...

படம் நிறைய அழகு...!
மீரா ஒரு தேவதை போல...! அவளை நான் தேவதைகள்
சார்பாக வாழ்த்தியதில் ஆச்சரியமொன்றுமில்லையே..:)

தமிழன்-கறுப்பி... said...

உங்க கவிதையும் சூப்பரு..!