Wednesday, September 1, 2010

பார்க்கவே முடியாத படங்கள் மூன்று...

நானொரு ஞாபகமறதிக்காரன். வாரத்தில் ஆறுநாளைக்காவது வீட்டை விட்டு வந்தபிறகு வண்டி சாவி, ஹெல்மெட், நோட், பேனா என்று எதற்காவது மீண்டும் போய் எடுத்துவருவேன். (வாரத்தில் மற்றொரு நாள் விடுமுறை என்றறிக)

தன்மாத்ரா (ஒரிஜினல்) டிவிடி வாங்கி நானும் மனைவியும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கம்பெனி குவார்டர்ஸில் இருந்த சமயம். திடீரென்று ஃபேக்டரியின் ஃபயர் சைரன் ஒலிக்க என்னமோ ஏதோ என்று ஓடி ஃபேகடரிக்குள் போய்விட்டேன். (அது தவறுதலாக ஒரு தொழிலாளி சுவிட்சை அழுத்தியதால் வந்தது) அப்படியே கொஞ்சநேரம் அங்கிருந்த சக அலுவலக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் உமாவிடமிருந்து ஃபோன்.. “சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என்று.

போனால் அழுகையின் விளிம்பில் இருந்தது கண்கள். என்னைப் பார்த்ததும் அழுதே விட்டார்! தன்மாத்ரா பார்த்ததன் விளைவு!

இந்தப் படத்தில் அல்சைமர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் மோகன்லால் தவறுதலாக ஃபைலை ஃப்ரிட்ஜூக்குள் வைப்பார். அப்புறம் காய்கறி வாங்கி ஆஃபீஸூக்கு வருவார்.. இப்படி பல காட்சிகள். அதைப் பார்த்ததும் உமாவுக்கு என் ஞாபகம் வந்துவிட்டதாம்!

அந்தளவுக்கெல்லாம் இல்லைப்பா நான் என்று நினைத்துக் கொண்டாலும் படம் பார்க்கும்போது பீதியாகவே இருந்தது. ‘என்ன படம் எடுக்கறானுக’ என்றும் தோன்றியது. மோகன்லால் நடிக்கிறாரா இல்லை நிஜமாகவே அப்படி ஆகிவிட்டிருந்தாரா என்று தோன்றவைத்த படம் தன்மாத்ரா.

இன்னொரு முறை பார்ப்பீர்களா என்று கேட்டால் மாட்டவே மாட்டேன் என்று சொல்லும் முதல் படம் தன்மாத்ரா.

*************************************

இன்னொரு படம் மகாநதி.

‘எங்கேயோ தெக்குதிசை காணாத தூரம்தான்..’ என்று கமல் குரல் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஓர் உருண்டை வயிற்றிலிருந்து கிளம்பி தொண்டையை அடைத்துக் கொள்ளும். வலிக்க வலிக்க ஏமாற்றப்படும்போதெல்லாம் ‘போதும்டா.. நான் பாவம்டா’ என்று கண்களாலேயே நடிப்பார் கமல். மகளை விபசார விடுதியில் பார்க்கும்போதும், அப்போது அவள் சொல்கிற வசனமும்.. கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

இப்பொழுதும் இந்தப் படம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் அந்தச் சேனலுக்கு தப்பித்தவறிக்கூட ரிமோட் பட்டன் தாவிவிடாமல் பார்த்துத் தாண்டிச் செல்வேன்.

யதார்த்தமான படம்தான். ஆனாலும் வலிக்கிறதே.. என்ன செய்ய?

**************************

அப்பறம் மூன்றாம் பிறை...


செமயான படம்தான். ஆனா திரும்பத் திரும்ப பார்த்து என்னாச்சுன்னா ஆரம்பத்துலேர்ந்தே அந்த க்ளைமாக்ஸ்தான் மனசுல போட்டு அழுத்தமா உட்கார்ந்துடுச்சு. கமல் இவ்ளோ பண்ணியும் கடசில குரங்கு சேட்டையெல்லாம் பண்ணி அநாதையான பார்வை பார்த்துட்டு நிக்கத்தான் போறாரு.. இவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறதால இந்தப் படம் பார்க்கறதில்ல..

படமாவது பார்க்கலாம்.. ஆனா அந்த க்ளைமாக்ஸ் வந்தா என் வீட்டு ரிமோட் பட்டன் தானா வேலை செஞ்சுடும்.

பாலு மகேந்திரா சாரைப் பார்த்தா, ஏன் சார்.. தொலையுது.. சேர்ந்துட்டுதான் போகட்டுமேன்னு கேட்கணும்னு நினைப்பேன்.. ஒரு ஜெர்கினு, ஒரு வாட்சு, எதைப் பார்த்தாவது அவளுக்கு ஞாபகம் வந்து தொலைக்கற மாதிரி மாத்திருக்கலாம்ல?


அப்படியா ஒருத்தி பழசை மறந்துட்டுப் போவா.. அதும் சரிதான்.. அவளுக்காவது நோய், நிறைய பேர் நல்லா இருந்தே மறக்கறாங்களேன்னு தேத்திக்குவேன்.

அதுவும் ஓடி வரும்போது கம்பத்துல முட்டிகிட்டு விழுவாரு பாருங்க கமல்...

கொடுமை!!


*****************

55 comments:

MSK / Saravana said...

me the first..

MSK / Saravana said...

அட.. ஆமாம்.. நான்தான் பர்ஸ்ட்..

MSK / Saravana said...

எனக்கும் இந்த மாதிரி சில படங்கள் இருக்கு..

க ரா said...

இன்னும் பெரியே லிஸ்ட்டே இருக்குங்க இந்த மாதிரி :)

ghi said...

வணக்கம் அண்ணே,
நீங்கள் சொல்வதில் முதல் படத்தைத் தவிர மற்ற இரண்டையும் பார்த்துவிட்டேன்... அதுவும் சிறுவயதில் மகாநதி படம் பார்க்கும்போது என் அப்பா ஏன் அழுதார் என்று பின்னாளில்தான் எனக்கு புரிந்தது...

அந்த பாடல் வரியை படிக்கும்போதே படத்தினால் ஏற்பட்ட வழியை உணர முடிகிறது...

நான் புதிதாக எழுத வந்தவன்.
உங்கள் வழிகாட்டுதலை பணிவுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

பாரதசாரி said...

//நானொரு ஞாபகமறதிக்காரன். வாரத்தில் ஆறுநாளைக்காவது வீட்டை விட்டு வந்தபிறகு வண்டி சாவி, ஹெல்மெட், நோட், பேனா என்று எதற்காவது மீண்டும் போய் எடுத்துவருவேன். (வாரத்தில் மற்றொரு நாள் விடுமுறை என்றறிக)
//
நான் அந்த விடுபட்ட ஒரு நாள் எல்லாத்தையும் மறக்காம எடுத்துகிட்டு வண்டியில ஏறினதும் தான் அன்னைக்கு லீவுன்னு நியாபகம் வரும் ;-)

பாரதசாரி said...

அற்புதம். எனக்கு மகாநதி அப்படித்தான் இருக்கும், மனச புழிஞ்சா மாதிரி இருக்கும்,ரோட்டுல வித்த காட்டுரவங்கல பார்க்கும்போதெல்லாம் மகாநதியை மறக்க தோணும். சலங்கை ஒலி யை மிஞ்சியது அது!

சுசி said...

தன்மாத்ரா பாக்கலை இன்னும்.

மத்த ரெண்டும் அதே நிலை தான் எனக்கும்.

வித்தியாசமா இருக்கு. தலைப்பு பாத்ததும் என்னவா இருக்கும்னு யோசிச்சேன். ஆனா இத எதிர்பார்க்கலை.

moe said...

It was a Tuesday morning and we were late to the class. To not waste our attendance we bunked and went for mahanadhi. Kannerai maraika mudiyavillai, even during college days.

a said...

நல்லவேள சைரன் சத்தம் கேட்டு எல்லாரும் வெளிய ஓடி வரும்போது நீங்க உள்ள போயி வேல செய்யாம இருந்தீங்களே... அதுவரைக்கும் சாந்தோசப்பட்டுக்க்கலாம்...

R. Gopi said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இளகிய மனது பரிசல். மகாநதிக்கு சாரு கணையாழில ஒரு விமர்சனம் எழுதி இருந்தார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

மோகன்லால் படம் பாக்கல மத்த படம் பார்த்துருக்கேன் ..கமல் படங்கள் மீண்டும் விரும்பிபார்க்காததற்க்கு இதுபோன்ற அழுத்தமான கதைகள் ...எப்பவும் ஒரு டைம் தான் ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தன்மாத்திர மிகவும் அருமையான படம்.. படத்திலுள்ளவர்கள் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் எனலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கமலின் மூன்றாம் பிறையும், மகாநதியும் இன்னும் முழுமையாக பார்த்ததில்லை...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

நீங்கள் சொல்வதில் முதல் படத்தைத் தவிர மற்ற இரண்டையும் பார்த்துவிட்டேன்...
எனக்கும் இதே போன்ற உணர்வு எழுந்திருக்கிறது..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

Prathap Kumar S. said...

இந்த வகையில் என்னை பாதித்த ஒருபடம் வறுமையின் நிறம் சிவப்பு.

தன்மாத்ரா படம் பற்றி எழுதியதற்கு நன்றி. இதைப்பற்றி நானும் எழுதவேண்டும் என்று நினைத்தப்டம்.

பிரபல பதிவர் said...

ரெண்டு பெக்க போட்டு படம் பாருங்க பரிசல்...

மிக சமீபத்தில் மதராஸபட்டினம் க்ளைமாக்ஸ் நெகிழ வைத்தது......

முத்தரசன் said...

மூணுமே பார்த்து அனுபவித்த படங்கள்தான்...

அப்டியே நீலத்தாமரை படத்தையும் பார்த்துருங்க
கேபிள்ஜி இந்த படத்தை பற்றி ஒரு பதிவு கூட போட்ருக்காரு....

கார்க்கிபவா said...

அதானே பார்த்தேன்.. எங்காளு படம் எதுவும் இப்ப ரிலீஸ் ஆகலையே!! :)

Ŝ₤Ω..™ said...

:'(

'பரிவை' சே.குமார் said...

அற்புதம். எனக்கு மகாநதி அப்படித்தான் இருக்கும்

நர்சிம் said...

பநப.

என் நண்பன் ஒருமுறை கைலி, கையில் எண்ணெய் பாட்டில் சகிதம் காலேஜ் போகும் பஸ்ஸைப் பார்த்ததும் ஏறிவிட்டான்..
..

Ravichandran Somu said...

மகாநதி படத்தை திரும்ப பார்க்கவே கூடாது என்று எண்ணி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இரண்டாவது தடவை பார்த்தேன்.

ஆண்டனி said...
This comment has been removed by the author.
ஆண்டனி said...

சில படங்களை பார்க்கும் பொது நம்மை அறியாமலே கண்ணீர் வந்துவிடும். நான் என்னதான் மனசுக்குள்ள, இது சினிமா இதுக்கு போய் அழுகுறிய்யேனு நெனச்சாலும் அழுகை வந்துவிடும். அப்படி என்னை மீறி கண்ணீர் வந்த படம் " துலாபாரம்".
தன்மாத்ராவப் பத்தி சொல்லனும்னா, துக்க வீட்ல மோகன்லாலின் நடிப்பு கிளாஸ் அப்புறம் மீரா வாசுதேவனுக்கு பதில் வேற யாரவது நடிச்சு இருந்தா மோகன்லால் இறந்த அதே சமயத்தில் அவரது மகனிடம் இருந்து போன் வரும் காட்சியில் நம்மை ஒப்பாரி வைக்க வைத்திருக்க முடியும்.

vinu said...

பாலு மகேந்திரா சாரைப் பார்த்தா,

" ஏன் சார்.. தொலையுது.. செமயான படம்தான். ஆனா திரும்பத் திரும்ப பார்த்து என்னாச்சுன்னா ஆரம்பத்துலேர்ந்தே அந்த க்ளைமாக்ஸ்தான் மனசுல போட்டு அழுத்தமா உட்கார்ந்துடுச்சு

so atleast first time thaan neenga hero heroineai searthu vaikkalai..........


ippavavathu konjam manasu vachu searthu vaikka koodathaannu "

naan keappeann

யுவகிருஷ்ணா said...

என்னை விட எனக்கு அதிகம் பிடித்தவரான கமலின் மகாநதியை இதுவரை ஒருமுறை கூட முழுமையாக பார்த்ததில்லை. இத்தனைக்கும் இப்படம் பார்க்க தியேட்டருக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன்.

நம்ம ஹார்ட் எல்லாம் ரொம்ப சாஃப்ட் தலைவா :-(

Bruno said...

//
படமாவது பார்க்கலாம்.. ஆனா அந்த க்ளைமாக்ஸ் வந்தா என் வீட்டு ரிமோட் பட்டன் தானா வேலை செஞ்சுடும்.//

அந்த படத்தின் இறுதிக்காட்சியில் (கிளைமாகுசு !!) கண்ணே கலைமானே பாடல் வேறு வரிகளுடன், மேலும் சோகமாக வரும். கவனித்து பாருங்கள்

Unknown said...

மூன்றாம் பிறை- பார்த்து நீங்க சொன்ன மாதிரி பாலுமகேந்திராவின் மேல கோபம் வந்தது உண்மை... ஆனால் அந்த சீன்தான் கமலுக்கு ஜனாதிபதி அவார்ட் வாங்கி தந்தது....

மகாநதி-மகள் வயசுக்கு வந்துவிட்டதை அறிந்தபிறகு ஜெயில் கம்பியை கடித்தபடி ஒரு எக்ஸ்பிரஸ்சன் கொடுப்பாரே .... சான்சே இல்லை...

தன்மத்ரா - பார்க்க ஆவலாய் இருக்கிறது...

manasu said...

"அச்சன் உறங்காதவீடு" இந்த லிஸ்ட் தான். நல்லபடம் but பார்க்கிறது ரொம்ப கஷ்டம்.

கண்ணீர் பிடிக்க பக்கெட் வேணும்.

Balamurugan said...

மகாநதியும்,மூன்றாம் பிறையும் என்னோட ALL TIME FAVOURITE MOVIES.மகாநதியில் அந்த விபசார விடுதி சிறுமி கமலுக்கு கொடுக்கும் அன்பு முத்தமும்,மழை தூறூம் சாரலில் மூன்றாம் பிறை க்ளைமாக்ஸ் காட்சியும் என்றும் மறக்க முடியாதவை!

பாலா அறம்வளர்த்தான் said...

பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் - "என்னை விட்டுப்போனது ஒரு ஜீவன் . அப்பொழுது நான் அடைந்த வலியின் ஒரு துளியைத்தான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள்".

BTW, அது ஒரு கனாக் காலம் பார்த்தீர்களா? (தனுஷ் - ப்ரியாமணி) கடைசி காட்சில் நாயகனை போலீஸ் ஜீப்பில் கொண்டு போகும்போது நாயகி பின்னாலே ஓடி வருவாள் "சீனு... சீனு.." என்று கத்திக் கொண்டே. மூன்றாம் பிறையில் நாயகனின் பெயர் சீனு. இந்த படத்தில் இருவரையும் சேர்த்தும் விடுவார்.

சி.பி.செந்தில்குமார் said...

your contribution says your heart is so soft.congrats.

arul said...

Baghban(Hindi) film is one of such movies.

Unknown said...

//அவளுக்காவது நோய், நிறைய பேர் நல்லா இருந்தே மறக்கறாங்களேன்னு தேத்திக்குவேன்.//
சத்தியமான உண்மை...
மூன்றாம் பிறைக்கு அவருக்கு அவார்டு கிடைச்சது...
நிஜத்தில நாம பண்ணினா "திரு-வோடு" தான் கிடைக்கும்

அண்ணாமலை..!! said...

எனக்கும் இந்த லிஸ்ட்-ல நிறைய படம் இருக்குப் பரிசல்.
பாலாவோட படங்களெல்லாம் இந்த வகையில தான் எனக்கு!
:(

senthil velayuthan said...

தன்மாத்திர மிகவும் அருமையான படம்.. படத்திலுள்ளவர்கள் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் எனலாம்.

Thamiz Priyan said...
This comment has been removed by the author.
Thamiz Priyan said...

க க போ...

\\\ ஆண்டனி said...

மீரா வாசுதேவனுக்கு பதில் வேற யாரவது நடிச்சு இருந்தா மோகன்லால் இறந்த அதே சமயத்தில் அவரது மகனிடம் இருந்து போன் வரும் காட்சியில் நம்மை ஒப்பாரி வைக்க வைத்திருக்க முடியும்\\\\

பாசிடிவா சொல்றீங்களா நெகடிவா சொல்றீங்களான்னு தெரியல.. அவத பாத்திரத்தில் மீரா வாசுதேவனைத் தவிர வேற யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை.

அறிவிலி said...

உங்களோட இந்த இடுகையை படிக்கும்போது திரும்பவும் மகாநதி, மூன்றாம் பிறை ஞாபகம் வந்து டக்குன்னு கண்ணுல தண்ணி வந்துருச்சு.

(இனிமே உங்க பதிவ படிக்கறதுக்கும் யோசிக்கணும் போல இருக்கே)

Mamathi said...

தலைப்பு பாத்ததும் என்னவா இருக்கும்னு யோசிச்சேன். ஆனா இத எதிர்பார்க்கலை.Very Nice...!

Ibrahim A , said...

மூன்றாம் பிறை படம் பார்த்தபோது எனக்கும் பாலு மகேந்திராவின் மேல் அந்த தவிப்பான கோபம் வந்தது.
இன்னொரு "பார்க்க முடியாத படமாக" பருத்திவீரனை சொல்லலாம் "உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்டா,நீ எனக்கு வேணும்டா"
என்று கூறி,காதலை தவிர ஒன்றுமறியாத அப்பாவியான முத்தழகு சாகும் தருவாய்.

காலப் பறவை said...

அருமை...........

பிரதீபா said...

//மூன்றாம் பிறை.....அதுவும் ஓடி வரும்போது கம்பத்துல முட்டிகிட்டு விழுவாரு பாருங்க கமல்...

கொடுமை!!//

அதுக்கு அழுவுற அழுகாச்சிய கட்டுப்படுத்த நான் படற பாடு இருக்கே ...

vanila said...

நான் பார்க்கவே விரும்பாத மூன்று படங்கள்.. "சுறா", "வில்லு" & "குருவி"

Thamira said...

அதும் சரிதான்.. அவளுக்காவது நோய், நிறைய பேர் நல்லா இருந்தே மறக்கறாங்களேன்னு தேத்திக்குவேன்.//

சரியாச் சொன்னீங்க.!

அப்புறம் என்னிடமும் சிலபடங்கள் இதுமாதிரி இருக்கின்றன. எப்பிடியெல்லாம் ஆர்டிகிளுக்கு ஐடியா பிடிக்கிறீங்கையா.. கிரியேடிவான ஆளுதான்யா நீங்க.

Thamira said...

அப்படியே வனிலாவின் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்டு.!

vanila said...
This comment has been removed by the author.
vanila said...
This comment has been removed by the author.
vanila said...

பிரச்சனையில மாட்டி விட்டுடாதீங்க ஆதி.. .. நான் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு இருக்க முடியாது.. நான் சொன்னது மூணும் இங்கிலிபீஸ் படங்கள்.. Victor(y) அப்படீங்கற ஒரு Hollywood நடிகர் நடிச்ச (????) படங்கள்.. "Shark", "Bow" & "Sparrow".

R.Gopi said...

இதுவாவது மிக நல்ல ஆனால் பார்க்க முடியாத படங்கள்....

இதை விட நிறைய மொக்கையான மரண கொடூர படங்கள், பார்க்க முடியாமல் இருக்கே தலைவா..... அது எல்லாம் எந்த லிஸ்ட்?

உதாரணத்திற்கு கரடியின் வீராச்சாமி டைப்....

R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...
This comment has been removed by the author.
Kiruthigan said...

ஆகா..!!!

Abhi said...

உண்மையா ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க. அருமை!