பழைய (குப்)பையை கிளறியபோது கையில் சிக்கிய சில முத்துகள்... -
*************************************
18.9.92
அன்புமிக்க திரு. K.B. கிருஷ்ணகுமார்,
வணக்கம். தங்கள் விரிவான, வித்தியாசமான கடிதம் கண்டேன். தங்கள் உணர்ச்சிபூர்வமான பாராட்டுகளுக்கு என் இதய நன்றி.
உங்கள் கடிதம் உங்கள் ரசனையை உணர்த்திற்று. என் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தது.
கதை எழுதத் தேவையான தெளிவான நடை உங்களிடம் தெரிகிறதே.. முயற்சிக்கலாமே..?
என் வாழ்த்துகள் – உங்கள் எல்லா நல்ல முயற்சிகளுக்கும்.
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
**********************************************
11.08.1993
இனிய கிருஷ்ணகுமார்
சில கடிதங்களைக் கண்டவுடன், ‘இது உடனே பதில் எழுதிப் போட வேண்டிய சமாசாரம் அல்ல. ஆர அமர உட்கார்ந்து யோசித்து ஒவ்வொரு வார்த்தையாக பதில் எழுத வேண்டும். எனவே இப்போது பதில் எழுத வேண்டாம்’ என நினைத்து நினைத்து பல கடிதங்களை DUEவில் போட்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று உங்களுடையது. எனவே இப்போது பதில் ஸாரி, கேட்க மறந்துவிட்டோம் பாருங்கள்!
நலமா? நாங்கள் நலம்.
தங்களுடைய பழைய கடிதங்கள் சிலதுகூட எங்களிடம் கைவசம் உள்ளது. அதில் நீங்கள் வரைந்து அனுப்பியிருந்த சில Strikes நன்றாக இருக்கிறது. அதுபோல் புதுமையாக நீங்களே யோசித்து வரைந்து பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே? இது ஒரு சிறிய ஆலோசனைதான்!
சில பல இதழ்களில் –உங்கள் ஜூனியர்-உங்கள் கதைகள் – ரசித்தோம், நன்றாயிருந்தது.
அடிக்கடி தங்கள் நலன் குறித்தும் எங்கள் நாவல் குறித்தும் கடிதம் எழுதுங்கள்.
அப்புறம்?
அப்புறமே!
With Love
சுபா
*********************************************
06.09.93
சென்னை-64
அன்புள்ள கிருஷ்ணகுமார்-----
கடிதம் கிடைத்தது. இந்த இதழ் உல்லாச ஊஞ்சலில் பிரசுரமான பரிசுக்கதை ‘முள்ளுக்கும் மலர் சூடு’ நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன்.
இதுதான்-
பஸ் – பயணி – கண்டக்டர் – சில்லறை போன்ற நாம் அனுதினமும் சந்திக்கிற, சாதாரணம் என்று நாம் ஒதுக்கி விடுகிற விஷயங்களை – சற்று நிதானமாய் கவனித்து அதனுடன் சிறிதளவு கற்பனை கலக்கும்போது கதை கிடைத்துவிடுகிறது.
அருமையான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். பலே!
எனது படைப்புகளை ஒன்றுவிடாமல் படித்து ’87 விகடன் சம்பவத்திலிருந்து ‘மல்லிகாவின் ப்ரெய்ன் ட்யூமர்’ வரை மானசீகமாய் உடன் வந்திருக்கிறீர்களே...
நிழலாய்த் தொடர்ந்து வந்த உங்கள் நட்பை மதிக்கிறேன். வரவேற்கிறேன்.
இத்தனை எழுத்து வசீகரம் கொண்ட நீங்கள் ஏன் விமர்சனக் கடிதங்களோடு நின்றுவிடுகிறீர்கள்?
வாருங்களேன்..
கதை உலகில் கைகோர்த்து நடக்கலாம். புதியவர்களுக்காக பத்திரிகையுலகம் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது. மற்ற விஷயங்களை சற்றே ஒதுக்கிவிட்டு, கதைக் களத்தில் புது வாளேந்தி வாருங்கள்.
விரைவில்,
முன்னணிப் பத்திரிகைகளில் எல்லாம் உங்கள் (என்னுடையதும் கூட) படைப்புகள் வெளிவர வாழ்த்துகள்.
அன்புடன்
படுதலம் சுகுமாரன்
*************************************
15.12.93
அன்புமிக்க திரு.கிருஷ்ணகுமார்
வணக்கம்.
உங்கள் ஒவ்வொரு கடிதமும் உடனே பதில் எழுதத் தூண்டுவதென்னவோ உண்மைதான். ஆனால் படவா நிமிடங்கள் என்னை மிரட்டி விடுகின்றன.
உங்கள் நுணுக்கமான விமரிசனங்கள் தங்கள் ரசனையையும், திறமையையும் வெளிப்படுத்தத் தவறுவதில்லை.
‘மனசுக்குள் நான் உன்னை...’ நாவலில் பன்னீர் செல்வம் சுத்தமானவன் என்பதைச் சொல்ல அத்தனை சம்பவங்களா என்று கேட்டிருக்கிறீர்கள். அழுத்தமாகப் பதிய வைக்க விரும்பும் விஷயங்களை இரண்டு வரிகளில் தாண்டக்கூடாது. நீங்கள் குறிப்பிட்ட சிறுகதையில் அவன் அப்பாவி என்பது கதைக்கு அவ்வளவு முக்கியமல்ல. மட்டுமல்லாமல் அது சிறுகதை. ஒரு காதலைச் சொல்லும்போதுகூட ராஜாவும் ரோஜாவும் காதலித்தார்கள் என்று மூன்றே வார்த்தைகளில் சொல்லலாம். முன்னூறு பக்கங்களில் முப்பது சம்பவங்களை அடுக்கியும் அதைச் சொல்லலாம். கதையின் அவசியத்தைப் பொறுத்து அமைக்கும் விதத்தைத் தீர்மானிக்க வேண்டும்.
பிறகு?
நிறையப் படியுங்கள்.
நிறைய கவனியுங்கள்.
கொஞ்சமாய்ப் பேசுங்கள்.
நிறைய எழுதுங்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்
என்றாலும் பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
*****************************************
07.04.94
அன்புமிக்க கிருஷ்ணகுமார்,
வணக்கம்.
உங்கள் கடிதங்களைப் பார்த்து வருகிறேன்.
பதில்தான் எழுத முடிவதில்லை.
விதைத்து மறுநாளே பூமியைக் கிளறி முளை விட்டிருக்கிறதா என்று பார்க்கிற அவசரமில்லாமல் நிதானமாக ஆனால் லட்சியத்தோடு செயல்பட்டு வாருங்கள். நாளைக்கு உங்கள் மரம் வளரும். பூக்கும். காய் தரும். கனி தரும். நிழல் தரும். சுகம் தரும்.
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்.
***********************************
01.09.2010
அன்புள்ள பரிசலுக்கு
நான் உங்கள் வாசகி. லண்டனில் இருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள் என்றால் எனக்காக ஒரு லேப்டாப்பை அங்கிருந்து வாங்கி வர இயலுமா? யாரேனும் வருகிறார்கள் என்றால் சொல்லவும். மேலதிக விபரங்கள் தருகிறேன்.
அன்புடன்
ஒரு வாசகி
டிஸ்கி: கடைசி கடிதம் தேதி பார்க்கவும். நேற்றைய தேதி. நிஜமாகவே உதவி தேவைப்படுகிறது. நீங்களோ உங்கள் நண்பர்களோ வருகிறீ/றார்கள் என்றால் என் மின்னஞ்சலுக்கு (kbkk007@gmail.com) தொடர்பு கொள்ளவும்.
.
32 comments:
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் .. ஹி ஹி..
ம், எவ்வளவு பெரிய மனிதர்கள் அனுப்பிய கடிதங்கள்? குப்பைன்னு சொல்லாதீங்களேன் ப்ளீஸ் ..
"பழைய (குப்)பையை கிளறியபோது கையில் சிக்கிய பொக்கிஷங்களில் சில" - இப்படி இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுதுங்க.
வருங்காலத்தில் இதே மாதிரி ஒரு பதிவு வேறு யாராவது பதிவரும் போடலாம்,
"அளவில்லா அன்போடு
-பரிசல் (எ) கிருஷ்ணா"
என்று கையொப்பமிட்ட கடிதங்களோடு.
வாழ்த்துக்கள் !!
//விரைவில்,
முன்னணிப் பத்திரிகைகளில் எல்லாம் உங்கள் (என்னுடையதும் கூட) படைப்புகள் வெளிவர வாழ்த்துகள்.
அன்புடன்
படுதலம் சுகுமாரன்//
படுதலம் சுகுமாரனின் வாழ்த்துகள் தற்பொழுது நிஜமாகிவருகிறது போல
விரைவில் பரிசல் கொத்திய பறவை என்ற தொடர் ஆவியில் வர வாழ்த்துகள்
அளவில்லா ப்ரியமுடன்
வசந்த்
ஏன் பேச்சை கேட்டு கடிதம் பிரசுரிக்கததற்க்கு நன்றி ,,
முத்துக்கள் பொருத்தமா இருக்கு பரிசல்.
பத்திரமா வச்சுக்கோங்க.
பகிர்தலுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
பகிர்தலுக்கு நன்றி பரிசல்.. மிக முக்கியமான பொக்கிசங்கள்...
நான் அனுப்பின ஈமெயில் எல்லாம் எங்க? அடுத்த பதிவுல போடுங்க.
ஆக, ஒரு இருபது ஆண்டு (15 வயதில் இருந்து) வாசிப்பு அனுபவம் இருக்கு. பெரிய விஷயம்தான்.
சுரா, கிரா, கு அழகிரிசாமி கடிதங்கள் புத்தகங்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள். இல்லன்னா பெங்களூர் வந்து தூக்கிக்குங்க.
PKP ரொம்பப் புடிக்குமா? சென்னை புத்தக விழாவில் இரண்டு வால்யும் சிறுகதைகள் வாங்கினேன். இன்னும் படித்து முடிக்கல. பூம்புகார் பதிப்பகத்தினர் அவர் எழுதிய அனைத்தையும் (கிட்டத்தட்ட) வெளியிட்டுள்ளனர்.
பகிர்தலுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
கடிதங்கள் உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்கின்றன. வாழ்த்துக்கள்.
நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டிய தருணம் வெகு தொலைவில் இல்லை...
சில பல பிரபலங்களின் நட்பு நம்மை எழுதத் தூண்டும், பட்டுக்கோட்டை பிராபகர் எனக்கும் ஆதர்ச எழுத்தாளர். சில கதைகளுக்கு நான் எழுதும் விமர்சனங்களுக்கு அடுத்த தொடரில் விடை கிடைக்கும். ஆனால் பதில் எழுதியதில்லை.
என்ன தல பெரிய ஆளுங்ககூட பழக்கம் வச்சுக்கிட்டு பிரபலமில்லாதவர்னு சொல்றீங்க...
பரிசலின் பொக்கிஷம்.
இவ்வளவு நாள் அடுத்தவனை விட்டு முதுகு சொரிய விட்டிருந்தீங்க, இப்ப அது போரட்டிச்சிபோய், தனக்கு தானே திட்டத்தின் கீழ் நீங்களே சொரிஞ்சிகிரிங்களோ.
அய்யாமாரே சுயசொரிதளுக்கும் ஒரு விவஸ்தையே இல்லையா.
உங்கள் படைப்புகள் அருமை ...
கணினி டிப்ஸ் மற்றும் பிளாக்கர் டிப்ஸ்
http://www.raghuvarman.co.cc/
உங்கள் படைப்புகள் அருமை ...
கணினி டிப்ஸ் மற்றும் பிளாக்கர் டிப்ஸ்
http://www.raghuvarman.co.cc/
இந்த பிரபலங்கள்லாம் யாரு?????????????
கடைசி வரைக்கும் நான் எழுதின கடிதத்தை காட்டவே இல்லையே
பரிசலின் பொக்கிஷங்கள்..
பொதுமக்கள் பார்வைக்கு!!
ஹா...
வாயைப் பிளந்தது பிளந்தபட நிற்கிறேன்...
உதவி ப்ளீஸ்!
நீங்கள் சுவாரசியமாக எழுதுகிறீர்கள் என்பதை விஐபிகளே ஒத்துக்கொண்டதை இந்தப்பதிவிலும் நிரூபித்திருக்கிறீர்கள், கடைசி கடிதம் வாயிலாக.!
அப்புறம், நம்புங்கள் அடுத்த வாரம் நான் போடலாம் என (96கள் வாக்கில் என் நண்பன் ஒருவனும், நானும் எழுதிக்கொண்ட மடல்களை) வைத்திருந்த ஐடியா இது.! வட போச்சே.!
நீங்க எனக்கு எழுதுன கடிதம் ஒண்ணு மெயில் பாக்ஸ்ல பத்திரமா வெச்சிருக்கேன்.
பாஸ் நீங்களுமா! முடியல!
ப நி ம க ச ப ம, க ரி ம க ம ப ப த நி ச ப ந..
பதிவு நிகல்காலத்திய மடிக் கணினி சம்பந்தமான பகிர்வாய் மண'ந்து-முடிந்தாலும், கட்டுரை'யின் ரிச்னெஸ் மனம் கவர்ந்தது . மற்ற படி பதிவு தன்-நிகரற்றது. சபாஷ் பரிசல் நன்றி..
sorry .. நி ச ப ம ந..
நிகரற்றது. சபாஷ் பரிசல்.. மகிழ்ச்சி.. நன்றி..
எல்லாத்துக்கும் கடிதம் எழுதுனிங்களே, சாருக்கு எழுதுனிங்களா, எழுதியிருந்தா தெரியும், டவுசர் எவ்ளோ தூரம் கிழியுதுன்னு!
எனக்கு கூட லேப்டாப் வேணும், கேட்க கூச்சப்பட்டு இவ்ளோ நாளா கேட்கல!
முடியும் என்ற பட்சத்தில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்! முக்கியமா வாங்குறது முன்னாடி என்கிட்ட பட்ஜெட் கன்ஃபார்ம் பண்ணிக்கனும்!
அபப்டியே எனக்கு ஒரு அமெரிக்க தோழி
வாழ்த்துக்கள் பரிசல்.....
அதான் இப்போ பிரபலம் ஆயிட்டீங்களே...
இனிமே, நீங்க எல்லாம் எனக்கு லெட்டர் எழுதினா, நானும் அதை என்னோட வலையில் இதே தலைப்பில் போட்டு கொள்ளலாம்.....
லண்டன்லே லேப்டாப் கிடைக்காதோ? அமெரிக்காவிலே இருந்து தமிழ்நாட்டுக்கு அப்போறோம் தமிழ்நாட்டிலே இருந்து லண்டனுக்கா? லாஜிக் புரியலே தலே!
Post a Comment