Thursday, September 9, 2010

யாமினி - PART 4

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

** ** ** ** ** ** ** ** **

பகுதி - 4

“ஸா
ரி யாமினி.. உன்னைக் கொல்லச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.. அதை இன்றே இப்பொழுதே நிறைவேற்றியாக வேண்டும் நான்” என்றான் பீரோ மறைவிலிருந்து வெளிப்பட்டவன்.

“நீ.. நீ.. நீ யார்?” வறண்ட குரலில் கேட்டாள் யாமினி.

“ம்ஹ்ம்.. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்..? சரி இருந்தாலும் சொல்கிறேன்.. வசந்த் ஆதிமூலத்தின் பாலின மாற்று அறுவை சிகிட்சையை நம்புகிறாயா நீ?”

“நம்பாமல் என்ன? அவர் எத்தனை பெரிய விஞ்ஞானி என்பது உனக்குத் தெரியுமா?”

“ஹஹ்ஹஹ்ஹா... அதுமட்டுமா.. அவர் எவ்வளவு பெரிய தேசத்துரோகி என்பதும் எனக்கு தெரியும்”

“தே.... தேசத்துரோகியா?”

“தேசத்துரோகிதான். நடக்கவே நடக்காத சாத்தியமே இல்லாத ஒன்றைச் சொல்லி அரசாங்கத்தை ஏமாற்றி, வெளிநாட்டு விஞ்ஞானிகளை இந்தியாவுக்கு வரச்சொன்னது எதற்கு என்று நினைக்கிறாய்?”

“எதற்கு?”

“நம் நாட்டு விஞ்ஞான ரகசியங்களை பரிமாறிக்கொள்ள.. விஞ்ஞானிகள் என்ற பெயரில் வந்திருக்கும் அயல்நாட்டு தேசவிரோத சக்திகள் மூலம் அவருக்கு கிடைத்திருக்கும் பணம் பலகோடி..”

“அதற்கும் என்னைக் கொல்வதற்கும் என்ன சம்பந்தம்?”

“முட்டாள் பெண்ணே.. நாளை நீ ஆணாக மாறவேண்டாமா? உன்னைக் கொன்று உன் நிறத்தில் உன் உயரத்தில் இருக்கும் எங்களில் ஒருவனை நீ என அறிமுகப்படுத்துவோம். அதை வைத்து அரசாங்கத்தை கொஞ்ச நாள் எங்கள் விஞ்ஞானிகள் குழு ஏமாற்றும். அதற்குள் எங்கள் ரகசிய பரிமாற்றங்களும் முடிந்துவிடும். அதன்பிறகு அவனையும் கொன்றுவிட்டு நாங்கள் ஆளுக்கொரு தேசத்துக்குப் பறந்து சென்றுவிடுவோம்”

“அ... அதற்கெதற்கு என்னைக் கொல்ல வேண்டும்? யார் கொல்லச் சொன்னது”

“கொல்லாமல்? அப்புறம் நீ இந்த ஆராய்ச்சி பொய் என்று உளறிவிட்டால்? உன்னைக் கொல்லச் சொல்லது உங்கள் பாஸ் வசந்த் ஆதிமூலமேதான்.. இந்த எஸ் எம் எஸ்ஸைப் பார்..” என்று வசந்த் ஆதிமூலம் அனுப்பிய
குறுஞ்செய்தியைக் காண்பித்தான்.

“ஏதோ RED RUM ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார்...” குரலில் தெரிந்த நடுக்கம் இப்போது அவள் உடலிலும் தெரிந்தது.

“அதைத் திருப்பிப் படி.. “

யாமினி அந்த வார்த்தைகளைத் திருப்பி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அவன் கைகளில் பீடா போன்ற ஏதோ ஒரு வஸ்து முளைத்தது.

திமிறத் திமிற, அவளது வாயினுள் பீடாவை நுழைத்தான் அவன். மூக்கினை அழுத்தப் பிடித்துக் கொண்டதில் வேறு வழியில்லாமல் அதை முழுங்கினாள்.
சொற்ப நிமிடங்களில் மேலோகம் சென்றவளின் உடலை கொண்டு வந்திருந்த பெரிய சூட்கேஸினுள் அடக்கி, ஃப்ளாட்டைப் பூட்டிவிட்டு லிஃப்டிலிறங்கி தன் காரை நோக்கி நடந்தான்.

போகும் வழியிலேயே தன் செல்லில் வசந்த் ஆதிமூலத்தை அழைத்தான்.

“சார்... முடிஞ்சது..”

“குட். சத்தமில்லாம பாடியை டிஸ்போஸ் பண்ணீடு..”

“அந்த ஜெய்...”

“அவனை கூலிப்படைகிட்ட சொல்லி ஆக்ஸிடெண்ட்ல போட்டுத் தள்ளச் சொல்லியாச்சு... இந்நேரம் அவன் பைக் ஏதாவது லாரிக்கடில சிக்கி அவன் சட்னியாகிருப்பான். இவளுக்கு அவனைத் தவிர வேற யாரும் இல்லைங்கறது நமக்கு வசதியாப் போச்சு“

சொன்ன வசந்த் ஆதிமூலம் தொடர்ந்தான்: “சரி.. நீ, நான், அந்த 15 பேர் தவிர நம்ம டீம்ல இருக்கற யாருக்கும் நம்ம விஷயம் எதுவும் தெரியாது. நாளைக்கு நம்ம பதினேழு பேர் மட்டும் கிளம்பி நம்ம கெஸ்ட் ஹவுஸ் போய் சில திட்டங்கள் தீட்டணும். அதுனால நைட்டுக்குள்ள அவ பாடியை டிஸ்போஸ் பண்ணிட்டு காலைல ஒம்பது மணிக்கு என்னை வந்து பாரு”

“சரி சார்” சொன்னவன் அந்த சூட்கேஸை சிரமப்பட்டுத் தூக்கி டிக்கிக்குள் சொருகினான். சொருகும்போது சூட்கேஸ் சரியாக மூடப்படாத்தைக் கவனித்தான். திறந்து, இறந்து போன யாமினியின் கைகளை மடக்கும் போதுதான் உற்று கவனித்தான். போட்டிருந்த்து ஸ்லீவ்லெஸ் ஆகையால் அவள் புஜத்தில் இருந்த டாட்டூவில் எழுத்துகள் தெரிய... ஒவ்வொன்றாய் படித்தான்..

Y - A - M - I - N - I

************ ******* ******* ********** ********** ************
“என்னாச்சு குணா?” என்றான் அஷோக்ராஜா.

“தெரியல சார்.. ஏதோ குழந்தைதான் ஃபோனை எடுக்குது. ஒண்ணும் பேச மாட்டீங்குது. சிரிப்பு சத்தம்தான் கேட்குது..”

“சரி.. இனி நேரமில்லை நமக்கு.. நீங்க ஒண்ணு பண்ணுங்க.. க்ரீன் பார்க் ரெஸ்டாரண்ட் போய் கிருஷ்ணாவைப் பாருங்க. நான் லேப்டாப்பை ஆன் பண்ணி அவரோட ப்ளாக்ல ஃபோன் நம்பர் கிடைக்குதான்னு பார்க்கறேன்.. பார்த்துட்டு பின்னாடியே வர்றேன்.. இப்ப நமக்கு நேரமில்ல. நீங்க சீக்கிரம் கிளம்புங்க.”

“ஓகே அஷோக்.. “ என்று கிளம்பிய குணாவை இடைமறித்தான் அஷோக் ராஜா.

“எதுக்கும் சேஃப்டிக்கு இதை வெச்சுக்கோங்க”என்று அவன் கொடுத்தது... சைலன்சர் பொருத்தப்பட்ட 0.32 ரக பிஸ்டல்.

*********** ************* *************** .

றந்து வைத்துவிட்ட ஃபோனை எடுக்கும் நேரம் நேராக க்ரீன்பார்க்குக்கே சென்று விடலாம் என்று முடிவெடுத்து, பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

க்ரீன்பார்க்கை அடைந்தபோது மணி ஆறைத் தொட்டிருந்தது. அங்கங்கே சிறு சிறு குடில்களாக பிரிந்திருக்க, ஒரு குடிலில் சென்று அமர்ந்த பத்து நிமிடங்களில் அவர் வந்தார்.

“கிருஷ்ணகுமார்?”

“மை நேம் ஈஸ் குணா... ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்”

“வணக்கம் சார்.. எஸ். ஐ. அஷோக்ராஜா கூப்டிருந்தார்..”

“அவர் பின்னாடி வர்றார்... அதுக்கு முன்னாடி சில கேள்விகள்.. டெல்லில நடந்த யாமினி கொலை பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஐயோ.. அது சும்மா கற்பனைல எழுதினது. ஒரு விஞ்ஞானக் குழுவைச் சேர்ந்தவங்களும், வெளிநாட்டுக்காரர்களுமா மொத்தம் பதினேழு பேரும் சாலை விபத்துல இறந்தாங்கள்லியா? அப்ப நியூஸ் சேனல்ஸ்ல அவங்ககிட்ட வேலை பார்த்த யாமினிங்கறவளையும் காணோம்னு நியூஸ் போட்டாங்கள்ல? அதையும், சமீபத்துல இங்க இறந்தவனோட கைல யாமினின்னு டாட்டு குத்தியிருந்த்தையும் வெச்சு சும்மா எழுதினேன்..”

“பதினேழு பேரும் இறக்கல பரிசல்.. ஒருத்தன் தப்பிச்சுட்டான் அப்ப..”

“எ.. என்ன சொல்றீங்க?”

“ஆமாம்.. அவங்களால கொல்லப்பட்ட ஜெய்யோட ஒரே அண்ணன் நான்.. ஆக்ஸிடெண்ட்ல ஜெய் இறக்கறதுக்கு முன்னாடி யாமினியைப் பத்தியும் அவ வேலை செய்யற இடத்துல ஏதோ ரகசியமா நடக்கறதா அவன் சந்தேகப்படறதாவும் சொன்னான். அதுனால அடுத்தநாள் அங்க நான் யாருக்கும் தெரியாம போனப்ப அவங்கதான் யாமினியைக் கொன்னதுன்னு தெரிஞ்சுது. உடனேயே அவங்க வெளில போறதுக்குள்ள அவங்க போற வேன்ல சில சில்மிஷங்களைச் செஞ்சு அவங்களை பரலோகத்துக்கு அனுப்ப நினைச்சேன்.. அதுல ஒருத்தன் மட்டும் தப்பிச்சுட்டான்”

“யார் அது?”

“அடுத்தநாள் யாமினியா நடிக்கறதுக்காக அவள மாதிரியே டாட்டூவெல்லாம் குத்திட்டிருந்த ஒருத்தன்”

“அப்படீன்னா...”

“ஆமா.. அவன்தான் அங்க இங்க சுத்தி திருப்பூர்ல வந்து இருந்தான். போட்டுத் தள்ளீட்டேன். நான் குடுத்தது அகோனைட் விஷம். எந்த போஸ்ட் மார்ட்ட்த்துலயும் எந்த ரிப்போர்ட்லயும் கண்டுபிடிக்க முடியாத விஷம். சந்தேகம் வர்றதுக்காக நானே அவங்க உடம்பிலேர்ந்து கொஞ்சம் ப்ளட் எடுத்து அங்கங்க தெளிச்சுடுவேன்..”

“அப்ப அந்த டாக்டர்.. காலேஜ் பையன்..”

“ரெண்டுமே என் கைங்கர்யம்தான். அந்த டாக்டர் டெல்லில இருந்தவர். ஜெய்யோட கேஸ் அட்டெண்ட் பண்ணினப்ப யாரோ அவருக்கு லம்ப்பா பணம் கொடுக்க, கொஞ்சம் முயற்சி பண்ணி பிழைக்க வைக்கறதுக்கு பதிலா அவனை சாகடிச்சவர்”

“காலேஜ் பையன்..?”

“அவன் பாவம். பீடா வாங்கி அதுல கொஞ்சம் அகோனைட் கலந்து இந்த டாட்டூ ஆசாமியைக் கொல்ல ப்ளான் பண்ணிருந்தேன். அன்னைக்கு பீடா வாங்கி, கைல இருந்த அகோனைட்டை யாரும் பார்க்காதப்ப கலந்துட்டு என் பர்ஸை எடுக்கும்போது பணம் கீழ விழுந்து பறந்துடுச்சு. அதை எடுக்கற ரெண்டு செகண்ட்ல கடைக்காரன் அகோனைட் கலந்த பீடாவை அந்தப் பையனுக்குக் குடுத்துட்டான்..”

“நீங்க காப்பாத்திருக்கலாமே?”

“சான்ஸே இல்லை.. அகோனைட் சாப்ட்டா அதிக பட்சம் ரெண்டு நிமிஷத்துக்குள்ள உயிர் பரலோகத்துக்கு பார்சலாய்டும்...” சொன்ன குணா

“அதுசரி.. உங்களுக்கு இந்த ரெண்டு கேஸுக்கும் முடிச்சிருக்குன்னு சொன்னது யாரு?”

“யாருமில்லை சார்.. நான் சும்மா கற்பனை பண்ணி எழுதினதுதான்..” இப்போது என் குரலில் பயம் அப்பட்டமாக எனக்கே தெரிந்தது.

“என்னை நம்பச் சொல்றியா? இதை எழுதின உன்னையும் நோண்டி நோண்டி விசாரிச்சிட்டிருக்கற அஷோக்ராஜாவையும் தீர்த்துட்டு சத்தமில்லாம் வேற எங்கயாவது ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போய்டுவேன்” குணாவின் குரலில் அதுவரை வராத வில்லத்தனம் வந்திருந்தது.

“சா.. சார்... என்னதிது..” என்றேன் அவர் கையில் முளைத்த பிஸ்டலைப் பார்த்து வியர்த்தபடி “என்னை எதுக்குசார் கொல்றீங்க?”

“பின்ன? உன்னைக் கொன்னா இதுக்கு மேல எழுதவோ, நாளைக்கே கோர்ட்டுக்கு கேஸ் வந்தா உனக்கு இது எப்படித் தெரிஞ்சுதுன்னு சொல்லவோ இருக்க மாட்டியில்ல? அதுமில்லாம ப்ளாக் எல்லாம் எத்தனை பேர் படிக்கறாங்க? அதிகபட்சம் உன்னோடத ஐநூறு பேர் படிப்பாங்களா? ஹும்....”

“சத்தியமா இது கற்பனையா எழுதினதுதான் சார்... ப்ளீஸ் நம்புங்க..”

“அப்படீன்னா உன்னைக் கொல்றதைத் தவிர எனக்கு வேற வழியில்ல..” சொன்ன குணா, பிஸ்டலை என்னை நோக்கி நீட்டி ட்ரிக்கரைச் சுண்ட சீறிப்பாய்ந்த குண்டு இதயப் பகுதியில் இறங்க ரத்தம் தெறிக்க விழுந்தேன் நான்.


(இறுதிப் பகுதி நாளை... )

** ** ** **



.

17 comments:

MSK / Saravana said...

me the first..

a said...

//
“சத்தியமா இது கற்பனையா எழுதினதுதான் சார்... ப்ளீஸ் நம்புங்க..”
//
நம்மிட்டேன்......

அருவி said...

சில கதாபாத்திரங்கள் உரைநடை தமிழிலும் சில பாத்திரங்கள் பேச்சு தமிழிலும் பேசுகின்றனவே!

R. Gopi said...

present sir

பிரபல பதிவர் said...

good twist

ny said...

its not 500 but 800!

Ŝ₤Ω..™ said...

//அதுமில்லாம ப்ளாக் எல்லாம் எத்தனை பேர் படிக்கறாங்க? அதிகபட்சம் உன்னோடத ஐநூறு பேர் படிப்பாங்களா? ஹும்....//

என்னண்ணே இப்படி சொல்லிபுட்ட நீ..
குறைந்தபட்சம்ன்னு சொல்லுண்ணே..
தன்னடக்கம் இருக்கலாம், அதுக்குன்னு இவ்வளவு ஆகாது...

Unknown said...

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் ....... பரிசல்காரனை கொள்ளாமல் கதையை கொண்டு போங்க....
நாளைக்கு என்ன ட்விஸ்ட் வெச்சிருக்கீங்க.. எனக்கு மட்டும் போன் பண்ணி சொல்லிடுங்க.

கார்க்கிபவா said...

வாசகர்களுக்கு கதை சொல்லணும்கிறதுக்காக யாமினிகிட்ட அவர் நடந்தத சொல்றது ரொம்ப செயற்கையா இருக்கு.. அதே போல க்ரீன் பார்க் குடிலில், ஒரு பொது இடத்தில் ஒருவன் தப்பிப்பது என்பது எளிதான காரியம்தான். அபப்டியிருக்க கொலைகாரன் வாக்குமூலம் தருவதும் ஒட்டவில்லை.


ப்ச்..


டிஸ்கி: ங்கொய்யால..பேனா சரியா பிடிக்கல, சட்டை சரியில்லைன்னா சொல்றீங்க?

taaru said...

// ஐநூறு பேர் படிப்பாங்களா?//
இதில இருந்து என்ன தெரியுது... போலீஸ் / பாரன்சிக் டிபார்ட்மென்ட்ல நெறையா வேலை பாக்குராங்க... வெட்டியா இல்லைன்னு [பின்ன யாரெல்லாம் ப்ளாக் படிக்கிறா??!!! :):):)]

//சீறிப்பாய்ந்த குண்டு ///
அது ஏதோ ஹோட்டல் தானே சொன்னேங்க... பேசாம உங்களுக்கு ஒரு பீடா ரெடி பண்ணி இருக்கலாம்.. இப்போ பாருங்க அவருக்கு செலவு ஐம்பது ரூபா....
//RED RUM// அகோனைட்//
புதிய விஷயங்கள்... நன்று....

இந்த டுவிஸ்ட்டு போன பாகங்களுக்கு சவால் விடுற மாதிரி இல்லையோ?....

அருண் said...

இந்த பகுதியிலேயே எல்லா ட்விஸ்டும் சொல்லிட்டிங்க,அடுத்தது என்ன?

பொன்கார்த்திக் said...

supero super:))

சுசி said...

அடுத்த பகுதியில் இது கனவுன்னு சொன்னா நிஜமாவே உங்களுக்கு ரெட் ரம் ரெடி பண்ணப்படும்.. :))

யாமினி பாவம் :(

அண்ணாமலை..!! said...

இன்னும் கொஞ்ச நேரம் யாமினியை விட்டுவைப்பீர்கள் என எதிர்பார்த்தேன்.
:)
ஒருவேளை முடிவில் அவள் பிழைத்துவரவும் கூடும்!

vinu said...

அடப்பாவிகலாஆஆஆஅ அதுக்குள்ளே 14commentsss வேற வேலையே இல்லையா என்னை மாத்ரியேஏஏஏஏ

vinu said...

தலை படம் பின்னுது கலக்கல், எதையுமே சிந்திக்க வேடாம சும்மா ஜெட் வேகத்துல பறக்கிற மாதிரி இருக்கு, நிஜமாளுமே என்னை எதுவுமே யோசிக்க விடாமல் நல்ல போகுது, plese dont kill mr.பரிசல் எங்களுக்கு இன்னும் கதையின் முடிவை சொல்லலை அதானால தயவு செஞ்சு அவரை காபாதுன்ங்க

vinu said...

அப்புறம் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நாளைல இருந்து mr.குணா உங்க follower ஒவ்வொருவரையா கொள்ளுவார, அப்பட நாட்டுல கொஞ்சம் பயலாவது blog எல்லுதுறது குறையும், கொயாள கொள்ளுரான்கப்பா dailyum போஸ்ட் போட்டு