Friday, September 17, 2010

யூகமும் உண்மையும்

ரு நல்ல விஷயம் பேசினால் ஆதரிக்க எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று என்னை பிரமிக்க வைத்தது நேற்றைய என் கடைசி பத்திக்கான உங்கள் ஆதரவு.

உண்மை, யூகம் இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்வது பற்றி பேசினோம் நேற்று. (அடக்கடவுளே.. ஏதோ ப்ரொஃபசர் பேசற மாதிரியே இருக்கு... ம்ஹும்.. இது சரிப்பட்டு வராது நமக்கு!)

அந்த சம்பவம்:


சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான். செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர். உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.

இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.

யூகம்.

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.

யூகம். மீட்டிங்கிற்குதான் அழைக்கப்பட்டான். அங்கே அஷோக் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் இருவரும் சந்திக்கலாம், சந்திக்காமலும் போகலாம்.

3) மீட்டிங் நேரம் பத்து மணி.

உண்மை. சொல்லப்பட்டுவிட்டது. மீட்டிங் ஆரம்பித்த நேரம் பத்து மணி என்று சொல்லியிருந்தால் இதே வரி யூகமாக மாறியிருக்கும்! யோசியுங்கள்!

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.

யூகம். எவரோ என்றுதான் சொல்லியிருக்கிறேன். (எவரோ பின்னூட்டத்தில் சொன்னது போல ஆடு மாடு அல்ல. அவற்றை எவரோ என்று விளிக்க முடியாது) ஒருவன் என்பது ஒருத்தியாகவும் இருக்கலாம் என்பதே இந்த வரியை யூகம் என ஆக்குகிறது.

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

யூகம். பொதுமக்கள் உதவியுடன் தான். அவர்களே சேர்த்திருக்க வேண்டியதில்லை.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.

யூகம். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. பேசியது மருத்துவமனையின் நர்சாகக் கூட இருக்கலாம்.

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.

உண்மை. மருத்துவர் தெரிவித்தது என்பதே வரி. ‘சேகருக்கு கவலை கொள்ளும் படி ஏதுமில்லை’ என்று நான் கொடுத்திருந்தால் இதே வரி யூகமாக மாறியிருக்கும்! வித்தியாசம் புரிகிறதா?

சரி..

இந்த உண்மையையும் யூகத்தையும் பிரித்தறிவதில் என்ன சுவாரஸ்யம் அல்லது என்ன சவால்?

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது, நீங்கள் அந்த நிறுவனத்தில் வேறு ஒரு பிரிவுக்கு சென்று ஆய்வு நடத்த நேரிடும்போது இந்த உண்மை / யூகம் பிரித்தறியும் திறன் சரியாக வேலை செய்ய வேண்டும். காரணம் நீங்கள் ஆய்வு நடத்தும் பிரிவின் பொறுப்பாளர் உங்களுக்குத் தெரிந்தவராக இருப்பார். அவரைப் பற்றித் தெரியும் என்றாலும் எந்த முன் முடிவுகளுக்கும் வராமல் உண்மையைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்பதே சவால்.

இந்தப் பத்தியைப் படியுங்கள்.

ரஜினியும் கமலும் திரை நட்சத்திரங்கள். கமலுடன் ரஜினி நாயகன் படத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு, கமலிடம் ஒன்றுமே சொல்லாமல் வந்துவிட்டார். அடுத்த நாள் அதிகாலை கமல் வீட்டிற்குப் போன ரஜினியை ஸ்ருதி வரவேற்றார். ஆளுயர மாலையோடு போன ரஜினி, கமலுக்கு அதை அணிவித்து ‘என்னால நேத்து பேசவே முடியல கமல். ரொம்ப அருமையா பண்ணிருக்கீங்க’ என்று பாராட்டினார். கமல் ரஜினியின் பாராட்டும் குணம் கண்டு வியந்து நின்றார்.


இப்போது இந்தப் பத்தியில் உண்மை / யூகம் கண்டு பிடிப்பதன் சவாலை முயன்று பாருங்கள்.

(கமலும் ரஜினியும் நண்பர்கள். ஸ்ருதி கமலின் மகள்.... இப்படியாக... )

ஆனால் இவற்றில் அறுதியான பதில் உங்களுக்குத் தெரியவரும்போது அதைத்தான் நீங்கள் எழுத வேண்டும்!!!



ரொம்பவும் போரடிக்கிறேன் இல்லையா?

சரி ரிலாக்ஸுக்காக இரண்டு கேள்விகள்.

1) ஒரு ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஓடும்போது இரண்டாவதாக வருபவரை முந்திவிட்டீர்கள் என்றால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?


2) விடை சொல்லியாச்சா? குட். இப்போது அதே ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வருபவரை முந்தினால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?






.

23 comments:

Personal said...
This comment has been removed by the author.
Unknown said...

1. இரண்டாமிடம்
2. கடைசியில் வருபவரை முந்த முடியாது :) ஏனென்றால், அவருக்கு பின்னால் முந்துவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

சுசி said...

ஆவ்வ்வ்.. நீங்க ரொம்ப கேள்வி கேக்கறிங்க..

இருந்தாலும் நிறைய யோசிக்க வைக்கிறிங்க :))

R. Gopi said...

பிரபல பதிவர் ஒருவர் ஒரு முறை சினிமாவிற்குப் போனார். டிக்கெட் கொடுப்பவர் அவரைப் பார்த்து வரிசையில் கடைசி ஆளா நில்லுங்க என்றார். கொஞ்ச நேரத்தில் திரும்பி கவுண்டருக்கே வந்த பதிவர் கடைசி ஆளா வேற ஒருத்தர் நிக்கிறார் என்றார். டிக்கெட் கொடுப்பவர் தலையில் அடித்துக் கொண்டு நீங்க போய் கடைசி ஆளா நில்லுங்க என்றார். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பவும் கவுண்டருக்கே வந்தார் பதிவர். இப்ப என்ன என்பதுபோல் டிக்கெட் கொடுத்தவர் பார்த்தார். எனக்குப் பின்னாடி இன்னொருத்தர் வந்து கடைசி ஆளா நிக்கிறார், இப்ப என்ன செய்யட்டும் என்றார். டிக்கெட் கொடுப்பவர் தலையில் அடித்துக்கொண்டார்.

என்னடா பதிவுக்குப் பின்னூட்டம் போடாம இவன் பாட்டுக்கு வேற ஒரு கதை சொல்றானேன்னு பாக்குறீங்களா? தொட்டில் பழக்கம் பாஸ். தென்னை மரம் பற்றிப் படித்துவிட்டுப் பரிட்சைக்குப் போவோம். அங்கே பசுமாடு பற்றிக் கட்டுரை வரையச் சொன்னால் தென்னை மரம் பற்றி எழுதிவிட்டு, இப்படிப்பட்ட தென்னை மரத்தின் கீழ் பசுமாடு கட்டப்பட்டிருந்தது என்று எழுதிப் பேப்பர் திருத்துபவருக்கு டரியல் கொடுப்போம்:)

நண்பன் said...
This comment has been removed by the author.
செல்ல நாய்க்குட்டி மனசு said...

முதல் கேள்விக்கு ஒரு கேள்வி. இரண்டாவதுனா முதல்ல இருந்து இரண்டாவதா? கடோசியில்(!) இருந்து இரண்டாவதா?

சிவராம்குமார் said...

பதில் 1. இரண்டாவது இடம்...

பதில் 2. அவரே கடைசியில வரார் அவரை யாருப்பா முந்த முடியும்...

பழம் எனக்குதான்! நான்தான் செல்ல பிள்ளை ;-)

நண்பன் said...

1) ஒரு ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஓடும்போது இரண்டாவதாக வருபவரை முந்திவிட்டீர்கள் என்றால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

இரண்டாம் இடம்..


2) விடை சொல்லியாச்சா? குட். இப்போது அதே ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வருபவரை முந்தினால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

அதான் கடைசி ஆள முந்தி ரெண்டாவது ஆளை முந்தி ரெண்டாவது எடத்துக்கு வந்துட்டோம்ல.. :-)

அலைகள் பாலா said...

நிறைய பேர் எனக்கு முன்னாடியே வந்து சொல்லிட்டாங்க. அவ்வ்வ்வ்

அனு said...

3,7 கேள்விகளுக்கு யூகம்-னு பதில் சொல்ல, ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கும் போதே நினைச்சேன்.. அது உண்மையா தான் இருக்கும்னு.. ஹிஹி.. (கீழ விழுந்தாலும் மீசையில நோ மண்!!)

இன்னைக்கு எனக்கு தெரிஞ்ச கேள்வி கேட்டிருக்கீங்க.. ஸோ, மீ வெரி ஹேப்பி!!

1. இரண்டாவது இடம்
2. முந்த முடியாது.. அவரைத் தான் நாம் அல்ரெடி முந்தி இருப்போமே..

(விடைகளை Official-ஆ announce பண்றதுக்கு முன்னாடி Advanceஆவே சொல்லிக்கறேன்.. ஆத்தா, நான் பாஸாயிட்டேன்ன்ன்!!!!)

கார்க்கிபவா said...

ம்க்கும்

Unknown said...

இரண்டு கேள்விகளுக்குமே ஒரே பதில்தான்...
முந்தினாலும் பிந்தினாலும் எல்லோருமே ஓட்டப பந்தய மைதானத்தில்தான் இருப்பார்கள்.....
கரக்டா....? அப்ப பரிசு எனக்குத்தான்....

Thamira said...

அனு, சிவராம்குமார் கமெண்டுகளின் கடைசிப்பகுதிகளை ரசிக்க முடிந்தது, எத்தனை முறை கேட்டிருந்தாலும். :-))

Thamira said...

சும்மா மொக்ஸ் போட்டுக்கொண்டிருக்காமல் ஒழுங்கா ஏதாவது கதை எழுதவும். :-)

மணிகண்டன் said...

இருங்க. உங்களை பத்தி புனைவு எழுதி அதுல எது யூகம் எது உண்மைன்னு கேக்கறேன் - அப்பதான் சரியாகும்.

சிநேகிதன் அக்பர் said...

1. முதலிடம். உண்மை

2.யூகம். கடைசியில் உள்ளவருக்கு முந்தி என்றால் எந்த இடம் என்று உறுதியாக சொல்லமுடியாது. ஐந்தோ, ஆறோ.. அது யூகமாக மட்டுமே சொல்ல முடியும்.

ILA (a) இளா said...

1) ஒரு ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஓடும்போது இரண்டாவதாக வருபவரை முந்திவிட்டீர்கள் என்றால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

இரண்டாவதுதான், சுலபம்தானே.

2) விடை சொல்லியாச்சா? குட். இப்போது அதே ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வருபவரை முந்தினால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

லூஸுத்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்றதா இல்லே. சரி, உங்க கேள்வி பிரிட்டிஷ்னே வெச்சுக்கலாமா? அவரே கடைசி, அவரை எப்படி முந்தலாம்னு குப்புறக்கா படுத்து யோசிச்ச போது கிடைச்ச பதில் இது. கடைசியா வந்தவரை முந்த முடியாது பிந்தலாம், வேணுமின்னா பிந்தலாம். அதாங்க அவரு நம்ம முந்தினா நாம் கடேசி

venkat said...

There must be totally three men running, thus 2nd place is the answer for both questions.

பிரபல பதிவர் said...

பரிசலு... சீரியஸா சொல்றேன்.... இது ஜஸ்ட் ஆரம்ப ஸ்டேஜ்தான்... ஒண்ணும் பெரிசா பாதிப்பாகல... தொடர்ந்து பதிவெழுதினால் இப்படித்தான்.... ஒரு பதினஞ்சு நாள் பதிவு பின்னூட்டம் இதெல்லாம் மறந்துட்டு ஃபேமிலியோட ஒரு குட்டி டூர் போய்ட்டு வந்த பிறகு எழுத துவங்குங்க.... எல்லாம் ச‌ரியாயிடும்.... எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்துருங்க‌ ச‌மீபத்து ஆக்சிடெண்ட்ல‌ ம‌ண்டைல‌ உங்க‌ளுக்கு தெரியாம‌லே அடிப‌ட்டிருக்க‌லாம்.....

புள்ள‌ குட்டிய‌ நாம‌ ஆரோக்கிய‌மா இருந்தாத்தான் பாத்துக்க‌முடியிம் பாஸ்.....

venkat said...

Lost sleep last night as i found a fool in me after posting my comment thankyou, now i know who Iam.

venkat said...

1st line kamal and rajini film artists -fact/ 2nd line they might have met or not-guess/ 3rd line rajini must have informed already about his visit as he is carriying a large garland and kamal might also been there to recieve rajini -guess/ 4th line rajini could'nt speak proved by 2nd line -fact/ finally kamal already knew about rajini so no surprise

vinu said...

Thanks mr. illaaa


ILA(@)இளா said...
1) ஒரு ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஓடும்போது இரண்டாவதாக வருபவரை முந்திவிட்டீர்கள் என்றால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

இரண்டாவதுதான், சுலபம்தானே.

2) விடை சொல்லியாச்சா? குட். இப்போது அதே ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வருபவரை முந்தினால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

லூஸுத்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்றதா இல்லே. சரி, உங்க கேள்வி பிரிட்டிஷ்னே வெச்சுக்கலாமா? அவரே கடைசி, அவரை எப்படி முந்தலாம்னு குப்புறக்கா படுத்து யோசிச்ச போது கிடைச்ச பதில் இது. கடைசியா வந்தவரை முந்த முடியாது பிந்தலாம், வேணுமின்னா பிந்தலாம். அதாங்க அவரு நம்ம முந்தினா நாம் கடேசி

ripeeettu

vinu said...

இப்போ நான் பன்னுனது தழுவலா, காப்பியா, சுடுவதா, வினவா, பின்நவீனத்துவமா, தாக்கத்தின் மீதான செயலா, "ILA(@)இளா said... "

எதுவானால் என்ன நன்றி "இளா"