Thursday, September 16, 2010

அவியல் 16.09.2010


ந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பான அன்று க்ரேசி கிரி அழைத்துக் கேட்டான்: ‘ஏண்ணா.. இந்தப் படத்துக்குப் போஸ்டர் ஒட்டறதையும் விழாவா எடுத்து அதையும் ஒளிபரப்புவாங்களா?’

நான் சொன்னேன்: ‘அதையும் அதற்குப் பிறகுபோஸ்டர் ஒட்டும் விழா உருவான விதத்தையும் ஒளிபரப்புவார்கள்.

ஆனால் ட்ரெய்லர் மிரட்டுகிறது. நிச்சயமாக ஹாலிவுட் படங்களில் கண்ட அளவுக்கு க்ராஃபிக்ஸ் கலக்கல்.

விழாவில் வைரமுத்து சொன்ன ரஜினி-அபிதாப்-ஒபாமா-போப்பாண்டவர் கதை கேட்டீர்கள்தானே? கேட்டிருப்பீர்கள்.. அதனால் இங்கு வேறு ஒரு கதை சொல்கிறேன். எழுத்தாளர் சொக்கன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது:

ஒரு பணக்காரன், ஒரு கவிஞனிடம்என்னைப் புகழ்ந்து பாடுஎன்றானாம். கவிஞன்சும்மா பாடச் சொன்னால் எப்படி?’ என்று கேட்க பணக்காரனும்சரி என் சொத்தில் 20 சதவிகிதம் உனக்கு.. இப்போது பாடுஎன்றானாம். கவிஞன் மறுத்துச் சொன்னானாம். ‘இப்படிக் கிள்ளிக் குடுக்கும் உன்னை வள்ளல் என்றெப்படிப் பாட?’

பணக்காரன் விடவில்லை: ‘சரி.. என் சொத்தில் பாதி உனக்கு.. எங்கே பாடுஇப்போது கவிஞன்இப்போது நீயும் நானும் சரி நிகர் சமானமாகிவிட்டோம். எதற்குப் பாட வேண்டும்?’ என்றானாம் இறுமாப்போடு. பணக்காரன் உடனே.. ‘சரி என் சொத்து முழுவதையும் தருகிறேன்.. என்னைப் புகழ்ந்து பாடுஎன்றான்.

கவிஞன் சொன்னானாம்:

அப்படியானால் இப்போது நீயல்லவா என்னைப் பாடவேண்டும்?”

** ** ** ** ** **

மஹா RX100 வைத்திருக்கும் நண்பரை ஞாயிறன்று சந்தித்தேன். பளபளவென்றிருந்தது வண்டி. ‘போனவாரம்தான் 28000 ரூவா செலவு பண்ணினேன்என்றார் மிக சந்தோஷமாய். நானெல்லாம் டூ வீலர் கற்றுக் கொண்டது யமஹாவில்தான். வாங்கினால் இதைத்தான் வாங்க வேண்டும் என்று நினைத்தது ஒரு காலம்.

யமஹாவின் சைலன்சரிடமிருந்து வரும் சத்தத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றைக்கும் (லோயர் எண்ட் டூவீலர்களில் சொல்கிறேன்.. புல்லட் போன்றவை அடுத்தபட்சம்) இருசக்கர வாகனம் வைத்திருப்போரில் யமஹா RX100 சொந்தக்காரர்களைப் போல பெருமைப் பட்டுக் கொள்பவர்கள் யாருமில்லை. அதனை பார்த்துப் பார்த்து பராமரிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.

** ** ** ** ** ** **

ற்பல வருடங்களுக்கு முன்... உடுமலையில் இருந்து திண்டுக்கல் சென்று கொண்டிருந்தேன். டிக்கெட் எடுத்தது போக, பாக்கெட்டில் கொஞ்சம்தான் காசு இருந்தது. அது கோவையிலிருந்து மதுரை செல்லும் பேருந்து. ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நிற்கிறது. பக்கத்தில் ஒரு டீக் கடையில் ஏசுதாஸின் குரல். கேட்டதுமே இறங்கி நின்றுவிட்டேன்.

‘பிறக்கும்போதும் பேரில்லை..
இறக்கும்போதும் பேரில்லை..
இடையில்தானே குழப்பங்கள்..
வாழ்க்கையோடு வழக்குகள்..

சோகமென்ன தோழனே..
சூழ்ச்சி வெல்வாய் வீரனே..
எதிர்த்து நின்று போரிடு..
இன்று ஓய்வெடு...’

வரிகளை நினைவிலிருந்துதான் எழுதுகிறேன். என்னவோ செய்தது அந்தப் பாடல். என் கண்முன்னே நான் போக வேண்டிய பேருந்து போவதைக் கண்டும் என்னால் நகர முடியவில்லை. அங்கேயே நின்று முழுப்பாடலையும் கேட்கிறேன். முடிந்தபிறகும் அந்தப் பாடலுக்காக பேருந்தை விட்டதைப் பெருமையாக அந்த டீக்கடைக்காரரிடம் சொல்லி ‘இன்னொரு வாட்டி போடுங்க அந்தப் பாட்டை’ என்று கேட்கிறேன். அவரும் சம்மதித்து போடுகிறார்..


‘என்ன தேசமோ.. இது என்ன தேசமோ..’

இதேபோலத்தான். உடுமலையிலிருந்து பேருந்து ஏறுகிறேன். கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும் நான். பேருந்து ஏறிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பாடல் ஒலிபரப்பாகிறது. இளையராஜா என்பது தெளிவாகத் தெரிகிறது. என்ன படம் என்று தெரியவில்லை. கேட்டேன். சந்திரலேகா என்றார்கள். முதல் பாட்டு முடிந்து இரண்டாம் பாட்டு ஆரம்பிக்கிறது. ‘அரும்பும் தளிரே.. தளிர்தூங்கிடும்..’ அருண்மொழி குரல். பாடல் பாதிதான் முடிந்திருக்கும். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது.

ஆனால் நான் இறங்கவில்லை. அந்தப் பாடல் முழுவதையும் கேட்க ஆவலாயிருந்தேன். அதனால் அந்த நிறுத்தத்தில் இறங்காமல், மறுபடி டிக்கெட் வாங்கி தேவையில்லாமல் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி இறங்கினேன்.

அதேபோல பலவித மனக்கவலைகளோடு பயணம் செய்துகொண்டிருந்த என்னை ’புன்னைவனத்துக் குயிலே..’ பாடல் ஆற்றியிருக்கிறது. இவையெல்லாம் சிற்சில உதாரணங்கள்தான். இப்படி எத்தனையெத்தனையோ...

இதெல்லாம் நினைவுக்கு வரக்காரணம் -

பின்னணி இசைக்கான தேசிய விருது பழசிராஜா படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பிரிவு இந்த வருடம்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் விருது ராஜாவுக்குதான்.

நேற்று இல்லை நாளை இல்லை... எப்பவும் நீ ராஜா!

** ** ** ** ** ** ** ** ** ** * ** **

நிஜம், யூகம் - இரண்டுக்கும் வேறுபாடு தெரியவேண்டியது மிக அவசியம்.

கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள்:

சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான். செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர். உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.

இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.

3) மீட்டிங் நேரம் பத்து மணி.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.

** ** ** ** ** ** ** ** **.

32 comments:

MSK / Saravana said...

me the first.. :)

Thuvarakan said...

1 & 6 jookam

Truth said...

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - இரண்டும் இல்லை. இது false stmt.

3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - நிஜம்.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - இரண்டும் இல்லை. false stmt

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்.

பாஸா ஃபெயிலா நானு? ஆல்ரெடி இன்னைக்கு ஹி ஹி

சுசி said...

போங்க பரிசல். மறுபடி மறுபடி படிச்சா எல்லாமே உண்மையாத்தான் தெரியுது.

அவியல் :))))

சுசி said...

//நேற்று இல்லை நாளை இல்லை... எப்பவும் நீ ராஜா!//

அப்படியே வழி மொழிகிறேன்.

பெயரில்லா பெரிய பெருமாள் said...

வணக்கம்.
இதோ என் பதில்கள். சரிதானா என்று பார்த்து சொல்லவும். ஆமா..இதுக்கு பரிசு ஏதாவது இருக்கா? இருந்தா எவ்ளோ தப்போ அவ்வளவு கழித்து கொண்டு தரவும்.

அப்புறம்...நான் அனுப்பிய மின்னஞ்சல்-க்கு பதிலே இல்லை. :(

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.
யூகம்
2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.
யூகம்
3) மீட்டிங் நேரம் பத்து மணி.
உண்மை
4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.
உண்மை
5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
உண்மை
6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.
யூகம்
7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.
உண்மை

ராஜா ராஜா தான் சார். மனசுக்கு இனிய பாடல்கள். பாடல்களில் ஒரு ஜீவன் இருக்கும். கனமான நேரங்களில் அவர் பாடல்கள் தான் மனசை லேசாக்குகின்றன.

Unknown said...

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.
யூகம்
2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.
உண்மை
3) மீட்டிங் நேரம் பத்து மணி.
உண்மை
4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.
யூகம்
5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
யூகம்
6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.
உண்மை
7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.
யூகம்

Unknown said...

அட...ஆறாவதும் யூகம் தான்.

R. Gopi said...

\\இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:\\

போகிற போக்கில் ஒரு பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். இந்த டவுட்டே வரக்கூடாது என்பதால்தான் எல்லா முதலீட்டுப் பரிந்துரைகளிலும் உண்மை எது (fact ), யூகம் எது (opinion ), பரிந்துரை (recommendation ) எது என்று தெளிவாகச் சொல்லவேண்டும் என்று சொல்வார்கள். இல்லை என்றால் படிப்பவர்களுக்குக் குழப்பம் ஏற்படும். தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதனால் தவறான் முதலீடு செய்ய நேரும் அபாயம் உள்ளது.

1 இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்
2 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
3 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
4 ஒருவர் அல்லது பலராகக் கூட இருக்கலாம்
5 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
6 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்
7 நிஜம்

பரிசல்காரன் said...

இன்னும் யாருமே முழுமையா சரியாச் சொல்லல.

நாளைக்கு பதிவுல இதுக்கு பதில் போட்டுடுவேன்...

பரிசல்காரன் said...

கோபி, தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயம் அது!!

அப்பறம் இன்னொரு மேட்டர்.. யூகம், உண்மை ரெண்டுல எதுன்னு ஒரு கொஸ்டினர் வர்றப்ப மூணாவதா ஒண்ணை எழுதறதும் எக்ஸாமினரால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. :-)

தராசு said...

தல, செம ஃபார்ம்ல இருக்கீங்க.

ஒவ்வொரு பதிவிலும் ஒரு போட்டியா???? கலக்கல்.

சிவராம்குமார் said...

நானும் ராஜாவோட பாட்டுகளை எந்த கடையிலே போட்டாலும் நின்னு கேட்டிருக்கேன்... ஆனா பஸ்ஸை மிஸ் பண்ணியது கிடையாது... ;-)

vaanmugil said...

சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.
யூகம்

சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.
யூகம்

மீட்டிங் நேரம் பத்து மணி.
உண்மை

சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.
யூகம்

பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
யூகம்

சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.
உண்மை

கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.
யூகம்


பய புள்ள பொய் சொல்லி இருக்கான் போல!

vinu said...
This comment has been removed by the author.
vinu said...
This comment has been removed by the author.
vinu said...

6)சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.


:இது மட்டுமே யூகம் ஏனையவை எல்லாம் உண்மை

Jackiesekar said...

உண்மைதான் பரிசல்..

எங்கள் ஊரில் யமஹா இருந்தால்தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடித்த மாப்பிள்ளைகள் அதிகம்..

அது ஒரு பாலத்தில் சீர்வரிசை வண்டி என்றே அழைக்கபட்டது..பிறகு வந்த ஹீரோஹோன்டா அந்த பெயரை தட்டி சென்றது..

நண்பன் said...

3 & 7 - உண்மை, மற்றவை யூகம்...

சரியா?? தவறா??

Rajalakshmi Pakkirisamy said...

) சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - யூகம்.

3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - யூகம்.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்.

கார்க்கிபவா said...

//சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.//
யூகம். எங்கேயும் நண்பர்கள் என சொல்லப்படவில்லை

//2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.//
யூகம். மீட்டிங்கிற்கு செல்கிறான். அது அஷோக்குடனா என்பது சொல்லப்படவில்லை.

//3) மீட்டிங் நேரம் பத்து மணி.//
உண்மை.

//4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.//
யூகம்.

//5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.//
யூகம். பொதுமக்களின் உதவியோடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் சேர்த்ததாக சொல்லவில்லை

//6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.//
யூகம். சேகருக்கு ஃபோன் செய்தார். யாரோ சொன்னார்கள். ஆனால் யார் சொன்னது என்பது சொல்லப்படவில்லை

//7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.//
உண்மை

Anonymous said...

1 )சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான். - யூகம்

3) மீட்டிங் நேரம் பத்து மணி. - நிஜம்

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - யூகம்

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்

senthil velayuthan said...
This comment has been removed by the author.
senthil velayuthan said...

1. சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம் ( going for meeting in his office only so may be friend or may not be)

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - இரண்டும் இல்லை.யூகம் .(going for meeting in ashoks office only so may be or may not be )

3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம் (yaro oruvan , sometimes may be some animals not clearly watched by anyone.)

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். -யூகம் .(with the help of, so this is also maybe or may not be)if the statement is his friend admitted him in hospital then true)

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - its true( when ashok calling sekar friend phone he informed).

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. -யூகம்.(some time docter may tell this statement for his friend who is also suposed to be travell with sekar and met with same accident with monor injuries.

i think all my answers correct .....

lets wait upto tomorrow and see

senthil velayuthan said...

siriya correction
6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்

சிநேகிதன் அக்பர் said...

இளையராஜாவுக்கு தேசிய விருது ரொம்பவே லேட்.

அவியல் நல்லாயிருக்கு.

Ŝ₤Ω..™ said...

அண்ணே.. இன்னைக்கு தினகரன் பேப்பர்ல கால் பக்கத்துக்கு செய்தி.. எந்திரன் படத்துக்கு “யு” சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளதாம்..

யமஹா RX100 வண்டியை ஏண்ணே ஞாபகப் படுத்தினீங்க?? மலரும் நினைவுகளால் நான் அழுதுடுவேன்..

ராஜா ராஜா தான்ண்ணே.. இன்னைக்கு அவருக்காகவே ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. பார்த்துட்டு சொல்லிங்களேன்.. http://www.sensiblesen.com/2010/09/blog-post_16.html

Ŝ₤Ω..™ said...

வர வர உங்க கலக்கல் அதிகமாயிட்டே போகுது.. இது உண்மை..

வெகு விரைவிலேயே நீங்க எங்கயோ போகப்போறீங்க.. இது யூகம்..

ஹிஹி.. ஏதோ என் குட்டி மூளைக்கு இது தான் கண்டுபிடிக்க முடிஞ்சது..

Thamira said...

அடுத்தமுறை நான் உம்மை பார்க்கும் போது உம்ம மண்டையில் ஒரு கட்டையால் பலமா ஒண்ணு போடப்போறேங்கிறது உண்மை.

அதனால உமது மண்டையில் கொம்பு முளைக்கும் என்பது யூகம்.

(சஸ்பென்ஸ் வைப்பதற்காக)

அனு said...

1. யூகம். நண்பர்கள் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை

2. யூகம். மீட்டிங்-கிற்கு அழைக்கப் பட்டிருந்தான்..ஆனால் மீட்டிங்-கில் கலந்துக் கொள்ளவோ (அ) அஷோக்கை சந்திக்கவோ சேகர் கிளம்பியதாக குறிப்பு இல்லை..

3. யூகம். பத்து மணிக்கு அழைக்கப்பட்டிருந்தான்.. ஆனால் மீட்டிங் பத்து மணிக்கா என்று தெரியவில்லை.. (பத்தரைக்கும் இருக்கலாம்)

4. யூகம்.. குறுக்கே வந்தது ஒருத்தியாகவும் இருக்கலாம்.. :)

5. யூகம். மருத்துவமனைக்கு வழி சொல்லுவது கூட உதவி தான்.. (மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது சேகர் தானா-ன்னே டவுட் வருது.. ஹிஹி)

6. யூகம்.. இது எல்லோருமே சொல்லிட்டாங்க!! ஸோ, மீ நோ ரிப்பீட்டு..

7. யூகம்.. மருத்துவர் சேகரின் நண்பரிடம் சொல்லப்பட்டதா, இல்ல மருத்துவர், சேகரின் நண்பரிடம் சொன்னாரான்னு தெளிவா இல்லை.. comma இல்லாததால வந்த குழப்பம் :) ("நண்பன்/நண்பர்", "கவலைப்பட/கவலை கொள்ளும்படி" இதுல எதாவது உள்குத்து இருக்கா??)

ஸ்ஸ்ஸ்.. யப்பா.. எல்லாத்தையும் யூகம்னு சொல்லியாச்சு.. இப்போ தான் திருப்தியா இருக்கு :) :)

வாழ்வே மாயம்..
இதில் எல்லாம் யூகம்!!!

பெசொவி said...
This comment has been removed by the author.
பெசொவி said...

எல்லாமே யூகங்கள்தான்! கொடுக்கப் பட்டுள்ள வரிகளை வைத்து நாம் யூகிக்கிறோம்!

முதல் யூகத்தின் காரணம், இந்த வரிகள்:
சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு &
சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.


இரண்டாம் யூகத்தின் காரணம் இந்த வரிகள் :
சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான்.


மூன்றுக்கு காரணம் இதோ:

பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான்.

நான்கு இங்கிருந்து யூகிக்கப் படுகிறது:

செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர்.

ஐந்தாம் யூகத்தின் அடிப்படை வரிகள் :
உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

ஆறாம் யூகம் இங்கே இப்படி இருப்பதால்:

சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.


ஏழாம் யூகம் இப்படி ஒரு வரி வருவதால் :

சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார்.

(இதற்கு மேல் விளக்க வேண்டுமானால், ஒரு ஸ்பெஷல் பதிவே போடலாம்!)