Tuesday, September 21, 2010

1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....

டந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டதால் இந்த அவரச உலகில் இது கொஞ்சம் பழைய செய்திதான்.

சென்ற பதிமூன்றாம் தேதி. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் காலையில், பள்ளியிலிருந்து வெளியே வந்த பதினோராம் வகுப்பு மாணவன் சுரேஷ் என்பவர், வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

உடனே கூடிய கிராம மக்கள் – வெளியே நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து, பள்ளித் தாளாளரின் இன்னோவா கார் ஆகியவற்றைக் கொளுத்தியும் வெறி அடங்காமல் பள்ளி கட்டடம் முழுவதையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். சான்றிதழ்கள், கம்ப்யூட்டர்கள் உட்பட அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
கூட்டத்தினரின் மற்றொரு பகுதியினர், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பள்ளித் தாளாளரின் வீடு நோக்கிப் புறப்பட்டனர். வழியில் வந்து கொண்டிருந்த மற்றொரு பள்ளிப் பேருந்தை நிறுத்தி, மாணவர்களை இறக்கி அதையும் கொளுத்தினர். தாளாளரின் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த பேருந்தையும் கொளுத்தி, அவரது வீட்டையும் அடித்து நொறுக்கினர்.

இந்த உக்கிரத்துக்கு என்ன காரணம்?

சுரேஷ், பள்ளிக்குச் செல்லும்போது விபத்து நடக்கவில்லை. பள்ளிக்குச் சென்றிருக்கிறார். நோட்டு வாங்க 2500 ரூபாய் செலுத்த கடைசி நாள் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அப்பா பணம் கொண்டு வருவார்’ என்றிருக்கிறார் சுரேஷ். ஒத்துக் கொள்ளாத ஆசிரியர்கள் அவரை வகுப்பறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, திரும்ப வரும்போதுதான் நுழைவாயிலில் விபத்து நடந்து இறந்திருக்கிறார்.

அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை?

அந்த மக்களின் கோபம், அந்த ஒரு நாள் கோபமல்ல. வெகுநாள் ஆத்திரம் அடக்கி வைத்திருந்து அடக்கி வைத்திருந்து அன்றைக்கு வெளிப்பட்டு விட்டது.

அரசு நிர்ணயித்த கட்டணம் எந்தப் பள்ளியில் வாங்குகிறார்கள்? ம்ஹூம். அதை எதிர்த்து மனு தாக்கல் செய்து, தடை வேறு வாங்கிவிட்டார்கள்.

இதேபோல..

திருப்பூரில் ஒரு பள்ளியில் ஈட்டி எறிதலில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது நடந்து வந்த மற்றொரு மாணவனின் தலையில் ஈட்டி பாய்ந்தது.

கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவன் பெயர் கோகுல். கராத்தே சாம்பியன். சர்வதேச அளவில் விளையாடுபவன். இதுவரை 144 பதக்கங்களைக் குவித்துள்ளான். முதல்கட்டமாக 1.75 லட்சம் வரை செலவானதில் 75 ஆயிரம் மட்டுமே பள்ளி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டதாக தினசரி சொல்கிறது.

75ஆயிரமும் பள்ளி நிர்வாகமா கொடுத்தது?

“இருநூறு ரூபாயாவது கொடுங்கம்மா என் கூடப் படிக்கறவங்க 500, ஆயிரம்னு கொண்டுவரப்போறாங்களாம்” – இது என் மகள் அம்மாவிடம் சொன்னது.

ஆம். அது என் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த சம்பவம்தான். 6ம்வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களிடம் வசூல் நடத்தி, அதையும் சேர்த்து மருத்துவமனைக்குச் செலுத்தியிருக்கிறார்கள். தவறேதும் இல்லை. ஆனால் நிர்வாகம் கொடுத்தது எவ்வளவு, மாணவர்களிடம் வசூலித்தது எவ்வளவு என்று எங்காவது கணக்கு காண்பிக்கக் கூடாதா? கேட்டால்தான் சொல்வீர்களா? தேர்வுக் கட்டணம், பேருந்துக் கட்டணத்திலெல்லாம் நயா பைசா பாக்கி என்றாலும் டைரியில் எழுதி அனுப்புகிறீர்களே ஐயா?

அந்த மாணவன் இன்னும் ஆறு மாசத்துக்கு ஒய்வெடுக்க வேண்டுமாம். இனி போட்டிகளில் பங்கேற்க இயலாதாம். ஈட்டி துளையிட்ட இடத்தில் எலும்பு வளர ஓராண்டாகும். அதன்பிறகே உயர் சிகிச்சை குறித்து முடிவு செய்ய இயலுமாம்.
ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட தேர்வான கராத்தே சாம்பியன் அவன். அவன் எதிர்காலத்துக்கு என்ன பதில்?

இதை அந்தப் பள்ளியில் சென்று கேட்டேனா? ம்ஹூம். இல்லையே. முடியவில்லையே.. எனக்கு என் குடும்பம், மகள் படிப்பு எல்லாம் முக்கியம். இதே மிடில்க்ளாஸ் மனநிலையில்தான் பெரும்பான்மையோர் இருக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் அன்றைக்கு இந்த மிடில்க்ளாஸ் மனநிலைக்காரர்களின் கொந்தளிப்பே அப்படிப்பட்ட சம்பவத்திற்குக் காரணம். ‘சாது மிரண்டால்..’’‘ கதைதான்.

இனியாவது சுதாரித்துக் கொள்வார்களா தனியார் பள்ளி நிர்வாகத்தினர்?

எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலாம்! பெற்றோரோ, பொதுமக்களோ பள்ளிகளுக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட, கூட தடை விதிக்க வேண்டுமென்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது.

எதனால் இந்த ஆர்பாட்டங்கள்.. கூட்டங்கள் என்று யோசித்து அதைக் களையாத வரை பொதுமக்கள் மனதில் இருக்கும் அக்னிக் குஞ்சு பெருந்தீயாய் மாறும் சூழலைத் தவிர்க்க முடியாது.





.

29 comments:

வினோ said...

உண்மை தான் பரிசல்.. காலங்காலமாய் நடந்துக் கொண்டு தானே இருக்கு... மாற்றம் வருவது கடினமே...

Anisha Yunus said...

உண்மையான துக்கம்ண்ணா. அதிலும் பிள்ளைகளுக்கு நம்மைத்தான் இப்படி கொள்ளையடிக்கிறார்கள் எனத் தெரியாது. ஏதோ அவர்களின் உரிமை அது. அதில் மேலோங்கி நின்று காட்ட வேண்டும் என்பது போல ஒரு மாய தோற்றத்தை உர்வாக்கிவிடுவர் ஆசிரியர்கள். அதற்கும் மேல் பெற்ரோராகிய நாம் ஏதாவ்து சொன்னால் பிள்ளைகள் நம்மேலேயே பாயும் அளவிற்கு கொண்டுவந்து விடுவார்கள். நம்மை இப்படி கோழையாக்கிக்யே அவர்கள் பணத்திமிங்கலங்கள் ஆகி விடுகின்றனர்.

R. Gopi said...

\\ அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை?\\

நிச்சயம் வலிக்கிறது பரிசல்.

தராசு said...

நம்மால பேச மட்டும்தான் முடியுது தலைவரே

Sen22 said...

//அந்த மாணவன் இன்னும் ஆறு மாசத்துக்கு ஒய்வெடுக்க வேண்டுமாம். இனி போட்டிகளில் பங்கேற்க இயலாதாம். ஈட்டி துளையிட்ட இடத்தில் எலும்பு வளர ஓராண்டாகும். அதன்பிறகே உயர் சிகிச்சை குறித்து முடிவு செய்ய இயலுமாம்.
ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட தேர்வான கராத்தே சாம்பியன் அவன். அவன் எதிர்காலத்துக்கு என்ன பதில்?//

நெஞ்சம் கணக்கிறது..:((

ராகவேந்திரன் said...

@ஒத்துக் கொள்கிறேன் உங்கள் ஒரு சில கருத்துக்களுடன் இக்கட்டுரையில், பரிசல், ஆனால் சற்றே இந்த பிரச்சினையின் ஆழமான பிரச்சினையை உற்று நோக்குங்கள் அந்தந்த பருவத்தில் அதற்கு உரிய பள்ளி கட்டணத்தை செலுத்த தாமதமாக்கியதற்கு யார் காரண்ம், சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் தானே, தெரிந்து தானே வேண்டும் என்றே தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள், கல்விக் கட்டணம் பள்ளிக் கட்டணம் இவ்வளவு கறக்கிறோம் என்று முன்கூட்டியே அனைத்து தனியார் (வியாபார)கல்வி நிறுவனங்களிலும் கூறி விடுகிறார்கள் அல்லவா, அது மட்டுமின்றி தனியார் பள்ளி கல்லூரி தாளாளர்கள் அனைவருமே உரிய வழியில் கவனித்ததால் தான் இந்த கோவிந்தராஜன் கமிட்டிக்கு இடைக்கால தடையே விதித்துள்ளார்கள் எனவும் பேச்சு நிலவுகிறது , இப்படி எல்லாம் உள் குத்து ஒன்றுக்கொன்று நிலவுகையில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளி வர இயலாத நிலையில் கைதாகி உள்ளவர்களை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.

விக்னேஷ்வரி said...

சோகம் தான் மிச்சம்.

சிநேகிதன் அக்பர் said...

எல்லாத்துக்கும் சுயநலம்தான் காரணம். ( அவங்களோடது மட்டுமல்ல நம்ம சுயநலமும்)

ஹுஸைனம்மா said...

முதல் சம்பவத்தில் உண்மை நிலை சில நாட்களுக்குப் பின்தான் தெரிய வந்தது. மிகக் கொடுமை!! அப்பள்ளிக்கு எதிராக அரசால்/ பெற்றோரால் வேறு மேல் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை போல!!

2-வது: எல்லாருமே இப்படி அமைதியாக இருப்பதுதான் அவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.

கேட்டாலும், அந்த (ஈட்டி எறிந்த) மாணவனைக் கைகாட்டி விடுவார்கள்!! இதுபோன்ற ஆபத்து விளைவிக்கக்கூடிய (ஈட்டி எறிதல்) போன்ற விளையாட்டுக்களை அதற்கான சரியான பாதுகாப்பான இடத்தில் விளையாட வைக்காத வகையில் அந்தப் பள்ளிதான் குற்றவாளி என்றபோதிலும்.

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

உங்களோடு சேர்த்து நானும் ஆதங்கப்படுகிறேன்...!நம்மால் முடிந்தது அது மட்டுமே...!

சுசி said...

//அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை?//
கடவுளே..

இதுவும் ஒரு முடிவில்லா பிரச்சனை தான்.

Anonymous said...

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

selventhiran said...

பரிசல் உங்கள் பதிவின் இரண்டாவது பகுதியினைத் தங்கள் மகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கோ, தாளாளருக்கோ அனுப்பி வையுங்கள். பதில் சொல்வார்களா எனும் சந்தேகமோ, மகளுக்கு இடையூறு செய்வார்களா என்கிற பயமோ தேவையில்லை. Try and fail. Don't fail to to Try!

Unknown said...

:)

venkat said...

these are just few samples and there are much more un-noticed. Dont know howlong we would have to face this

Anonymous said...

5 important blogs for bloggers

http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

மின்அஞ்சல் செய்ய என்ற வார்த்தையை சேர்க்க‌

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-words-email-this-to-friends-near.html

Anonymous said...

5 important blogs for bloggers

http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

மின்அஞ்சல் செய்ய என்ற வார்த்தையை சேர்க்க‌

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-words-email-this-to-friends-near.html

குகன் said...

ஆரம்ப வரியே 'நச்' என்று இருந்தது.

மறந்த செய்தியை உங்கள் பதிவு ஞாபகப்படுத்தியுள்ளது.

vinthaimanithan said...

எல்லாம் தரமான் ஆங்கிலக்கல்வி என்ற மாயையும் அதை வைத்துக் கல்லா கட்டி 'கல்வித்தந்தை'களாக வலம்வரும் கொள்ளைக்காரர்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் மதிப்பும்தான் காரணம்.

எந்த சாராய வியாபாரியையாவது இந்த சமூகம் பெரிய அளவில் மதிப்புக் கொடுத்து நடத்துமா?

சமூகத்தில் சில தொழில்கள் - எவ்வளவு வருமானம் கொடுத்தாலும் சரி - அவற்றை சமூகத்தின் பொதுப் புத்தி கேவலமானதாகவே பார்க்கிறது... ஆனால் இப்படிப்பட்ட கல்வி வியாபாரிகள் மட்டும் 'கல்வித்தந்தை'யாம்!!!

தோழர் தியாகு நடத்தும் தாய்த்தமிழ்ப்பள்ளி போன்ற தரமான பள்ளிகளை கூட்டுமுயற்சியிலாவது துவங்கலாம் சமூகத்தின்மீதான அக்கறையும், எதிர்காலச் சந்ததியினரின் நலன் பற்றிய தொலைநோக்கும் கொண்டவர்கள்.

தியாகு ஒன்றும் பெரிய கோடீஸ்வரர் இல்லை! அவரால் முடியும்போது நம்மில் பலர் சேர்ந்தால் ஏன் முடியாது?

வெறுமனே பேசி ஆதங்கப்பட்டு பெருமூச்சுடனும், இயலாமையுடனும் கலைவதை விட ஒரு விருட்சத்தை உள்ளடக்கி இருக்கும் விதையை ஊன்றலாமே?

நண்பர்கள் யோசிக்கவும்!

vinthaimanithan said...

இது ஃபாலோ அப்பிற்காக :)

Thamira said...

என்ன கமெண்ட் போடுவதென்றே தெரியவில்லை.

செல்வாவின் யோசனையை துணிந்து செயல்படுத்தலாம். பாருங்களேன், இந்தச் சின்ன காரியத்தைச் செய்யக்கூட சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு 'துணிவு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.

subathra.K7 said...

Kumbakonam school fire accident is still burning in uor hearts.
such accidents and incidents are coninuing.

subathra.K7 said...

Kumbakonam school fire accident is still burning in our hearts.
such accidents and incidents are coninuing.

subathra.K7 said...

Kumbakonam shool fire is still burning in our hearts. Such accidents are still coninuing.

K.Veeramani said...

மனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(!), பதில் கூறுங்கள்...

K.Veeramani said...

மனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(!), பதில் கூறுங்கள்...

K.Veeramani said...

மனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(!), பதில் கூறுங்கள்...

K.Veeramani said...

மனசு கனக்கிறது..இயலாமையை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லையே...கல்வியை வியாபாரமாக்கிவிட்ட கல்வித்தந்தைகளே(!), பதில் கூறுங்கள்...

சுரேகா.. said...

பள்ளிக்கூடத்தில் படிங்க படிக்காம போங்க! பாழாப்போங்க!
அதை தனியார் பாத்துக்கும்!

நாங்கதான் டாஸ்மாக் நடத்திக்கிட்டிருக்கோமே!
இதான் அரசாங்கத்தின் கடமை!

பள்ளிகளை அரசுடைமையாக்கினாத்தான் உருப்படும்..!
டாஸ்மாக்கை? ....விட்ருவோம்! :)